திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பரிவுஇன்றி வாணனைக் காத்தும்என்று அன்று
படையொடும் வந்துஎதிர்ந்த
திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும்
அங்கியும் போர்தொலையப்
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
ஆயனைப் பொன்சக்கரத்து
அரியினை அச்சுத னைப்பற்றி யான்இறை
யேனும் இடர்இலனே.

பொ-ரை : அநிருத்தனைச் சிறை வைத்த அக்காலத்தில் ‘வாணாசுரனைத் துன்பம் இன்றிப் பாதுகாப்போம்’ என்று கூறிப் படையோடும் எதிர்த்து வந்த சிவபெருமானும் அவனுடைய மகனான சுப்பிரமணியனும் அதற்கு மேலே நெருப்பும் போரிலே அழியும்படியாக, பொருகின்ற சிறகுகளையுடைய கருடப்பறவையை ஏறிச் செலுத்திய மாயனை, ஆயனை, அழகிய சக்கரத்தையுடைய அரியினை, அடியார்களை நழுவவிடாதவனைப் பற்றி யான் சிறிதேனும் துன்பம் இல்லாதவன் ஆனேன்.

வி-கு : காத்தும் – ஒருமையின்கண் வந்த உயர்வுப்பன்மை. ‘தொலையக் கடாவிய மாயனை’ எனக்கூட்டுக. இலன் – குறிப்பு வினைமுற்று.

ஈடு : நான்காம் பாட்டு. 1‘வேறு தேவர்களைப் பற்றினார்க்கு அவர்கள் தஞ்சம் அல்லர் என்னுமிடத்தையும், தன்னைப் பற்றினவர்களைத் தான் விட்டுக்கொடான் என்னுமிடத்தையும் காட்டின இவனைப்பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.

‘பரிவு இன்றி வாணனைக் காத்தும்’ என்றது, 2அநிருத்தாழ்வான் நிமித்தமாகக் கிருஷ்ணன் படை எடுத்துப் புறப்பட்ட அளவில், வாணன் சிவபிரான் பக்கலிலே சென்று, ‘கிருஷ்ணன் நமக்கு எதிரியாக வருகிறான்,’ என்று சொன்னவாறே, ‘தலையில் வைத்த பூ வாடாமல் வருத்தம் அற வாணனைக் காக்கக் கடவோம்’ என்று சொன்னான் ஆயிற்று, வீட்டிற்குள்ளே இருந்து தம்தம் வீரத்தைப் பேசுவோரைப் போலே; 3இச்சக்கரவர்த்தி திருமகன் ‘என்னை அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்குவிரதம்’ என்கிறானோ? அன்று – அநிருத்தாழ்வானைச் சிறையில் வைத்த அன்று. படையொடும் வந்து எதிர்ந்த – 1‘தனக்கு வெற்றி நிச்சயம்’ என்று அது காண்கைக்குச் சேனையைத் திரட்டிக்கொண்டு வந்த. ‘முண்டன் நீறன்’ என்ற திருப்பாசுரம் இங்கு அநுசந்திக்கத் தகும். இனி, ‘படை’ என்பதற்கு, ‘ஆயுதம்’ என்று பொருள் கூறலுமாம். ‘சூலத்தைத் தரித்த சிவன், கிருஷ்ணனால் போரில் எழுப்பப்படுகின்ற பல வகையான சப்தங்களைக் கேட்டு மயக்கத்தை அடைந்தான்,’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம்.

‘தன் வறுமையை முன்னிட்டு அஞ்சலியைக் கொண்டுவந்து கிட்டுதற்குத் தக்க பரம்பொருளை இப்படி ஆயுதத்தோடு எதிர் இடுகைக்குக் காரணம் என்?’ என்ன, ‘திரிபுரம் செற்றமை’ என்கிறார் மேல்: திரிபுரம் செற்றவனும் – முப்புரங்களை எரித்த செயலாலே உண்டான செருக்கினை உடையவன் ஆகையாலே. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், 2கடல் கடைகிறகாலத்தில் எட்டு வடிவு கொண்டு நின்று கடைந்தது போன்று, 1முப்புரங்களை எரித்த சமயத்திலே வில்லுக்கு மிடுக்காயும், நாணிக்குத் திண்மையாயும், அம்புக்குக் கூர்மையாயும், சிவனுக்கு உள்ளுயிராயும் இருந்து எதிரிகளைத் தலை சாயும்படி செய்து முப்புரத்தை அழித்துக் கொடுத்தான்; அச்செயலை அறியாமல் அறிவில்லாதவர்கள் அதனை அவன் தலையில் வைத்துக் கவி பாட, அதனைத் தானும் கேட்டு ‘உண்மையே அன்றோ’ என்று மயங்கி, ‘அது செய்த நமக்கு இவனை வெல்லத் தட்டு என்?’ என்று வந்து எதிர் இட்டான் ஆயிற்று என்றபடி.

மகனும் – தந்தையான சிவன் வளர்ந்த பின்பு செய்தவற்றைப் 2பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்து இளமறியாய்ப் பெருமிடுக்கனாய்த் தேவசேனாபதியான சுப்பிரமணியனும். பின்னும் அங்கி யும் – அவனுக்குமேல் நாற்பத்தொன்பது அக்கினிகளும். போர் தொலைய – போரிலே மாள. இதனால், ‘சிவபிரான் தன்னை அடைக்கலமாகப் பற்றினாரை ஆபத்து வந்தவாறே காட்டிக் கொடுத்து ஓடுவான்,’ என்பதனையும், ‘சர்வேசுவரன் தன்னைப் பற்றினாரை எல்லா அளவிலும் பாதுகாப்பான்,’ என்பதனையும் தெரிவித்தபடி.

பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை – பகைவர்கள் மேலே பொருகிற சிறகுகளையுடைய பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்ல ஆச்சரியத்தையுடையவனை. இங்கு ஆச்சரியமாவது, வாணனுடைய கரத்தைக் கழித்து, அவனை 1இறையிலி செய்து, நாட்டுக்குத் தானே நின்று இறையான ஆச்சரியம். – 2‘வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ அன்றோ? ஆயனை – 3அவன் தோற்றதும் தன் தரம் குலையாதே நிற்கிற நிலையிலே; இவன் வென்றதும் தன்னைத் தாழவிட்ட இடத்திலே. பொன் சக்கரத்து அரியினை – அனுகூலர்க்கு விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும் காண முடியாதவனை. 4‘ஓ கிருஷ்ணனே! ஓ கிருஷ்ணனே! நீண்ட திருக்கைகளையுடையவனே! புருஷோத்தமனாயும் எல்லாரையும் நியமிக்கின்றவனாயும் பிறப்பு இறப்பு இல்லாதவனாயும் எல்லார்க்கும் மேலானவனாயும் இருக்கும் தன்மையை அறிவேன்,’ என்கிறபடியே, தோள்வலி கண்ட பின்பு ஆயிற்றுச் சர்வேசுவரன் என்று அறிந்தது. அச்சுதனை – அடியார்களை நழுவ விடாதவனை.

சிவபிரான், தன்னை அடைந்த வாணனைக் கைகழிய விட்டு ஓடினான் அன்றோ? 5சடையான் ஓட அடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவன்’ அன்றோ இவன்? தலைமையாவது, வாணனைக் கைம்முதல் அறுத்துத் தலை அழியாமல் வைத்த தலைமை. ஆக, இதனால், அநிருத்தாழ்வானுக்காக மார்விலே அம்பு ஏற்கையாலே ‘அடியார்கட்குத் தஞ்சம்’ என்று நம்புதற்குத் தட்டு இல்லை என்று தெரிவித்தபடி. பற்றி யான் இறையேனும் இடர் இலனே – இவனைப் பற்றின எனக்குச் சிறிது துக்கமும் இல்லை. ‘‘பேரன்’ என்று இருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலு நாள் சிறையில் இருக்க வேண்டிற்று; ‘அடியேன்’ என்று பற்றின எனக்கு அதுவும் வேண்டிற்று இல்லை,’ என்பார், ‘இறையேனும் இடர் இலன்’ என்கிறார்.

மோடி யோட அங்கி வெப்பும் மங்கி யோட ஐங்கரன்
முடுகி யோட முருகன் ஓட முக்கண் ஈசன் மக்களைத்
தேடி யோட வாணன் ஆயி ரம்பு யங்கள் குருதிநீர்
சிந்தி யோட நேமி தொட்ட திருவ ரங்க ராசரே!’

என்றார் திவ்ய கவியும்.

சிவன் திரிபுரங்களைச் செற்றது, சர்வேசுவரன் அந்தராத்துமாவாக
இருக்கையால் அன்றோ? அங்ஙனமிருக்க, அது செருக்குக் கொள்ளுதற்குக்
காரணமாயவாறு யாங்ஙனம்?’ என, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘கடல் கடைகிற காலத்தில்’ என்று தொடங்கி. கடல் கடைகிற காலத்தில்
எட்டு வடிவு கொண்டு நின்றதனை,

‘ஓருரு வெற்பைத் தரித்தது; தானவர் உம்பருள்ளாய்
ஈருகு நின்று கடைந்தது; வேலை யிதனிடையோர்
பேருரு இன்னமு தோடே பிறந்தது: பெண்மை கொண்டுஓர்
நாருரு நின்றது; அரங்கா! இதுஎன்ன நற்றவமே!’

(திருவரங்கத்து மாலை, 25) என்ற செய்யுளால் உணரலாகும்.

ஆவாய் அதன்கன்றாய் அந்தரியா மிப்பொருளாய்
ஏவாய் நிலைநின்ற எம்பெருமான் – காவானேல்
போரும் பொருமோ? புராந்தகன்என் றேபேரும்
சீரும் பெறுமோ சிவன்?’

என்றார் திவ்விய கவி.

தேவதாந்தரர் பற்றினாரை -தஞ்சம் இல்லை
வாணாசுர வ்ருத்தாந்தம் –
எம்பெருமான் ஒருவனே ரஷகன் –
பரிவின்றி வாணனை காக்கும் என்று சொல்லிய ருத்ரன் -மகன் -அனைவரும் –
விநாயகர் பிரஸ்தானம் ஆழ்வார்கள் பாசுரங்களில் இல்லை –
கரி முகன் –
திருத்தொண்டர் -வாதாபி இருந்து பிள்ளையார் அப்புறம் வந்து சேர்ந்தார் –
பின்னும் அக்நியும் –
புள்ளைக்கடாவிய மாயனை அச்சுதனை
அநிருத்த ஆழ்வானை கத்து
நீ தலையில் வாய்த்த பூ வாடாமல் காப்பேன் என்று –
கிரகத்துக்கு உள்ளே தனது பெருமை பேசிய -வாய் பேச்சு –
ஏதத் வ்ரதம் மம என்கிறானோ –
சக்கரவர்த்தி திருமகன் சொல்லி செய்யவும் வல்லவன் –
சிறை வைத்த அன்று
படை எடுத்து வந்த அன்று –
நாணி வாணனுக்கு இரங்கிய
முண்டன் நீறன் -மக்கள் -வெப்பு மோடி -காளி -அங்கி ஓடிடக் கண்டு –
பாரவஸ்யம் -மயங்கி விழுந்தான் ருத்ரன் -ஆயுதத்துடன் மோகித படி
அஞ்சலி கொண்டு வெல்லாமல் ஆயுதம் கொண்டு எதிரிட்டு
திரிபுர தகனம் செய்தோம் என்ற போலி கர்வத்துடன்
அதுவும் இவன் சகாயத்தால் செய்தோம் என்ற நினைவு இன்றி –
கடல் கடையும் பொழுது எட்டு வடிவம் கொண்டது போலே திரிபுர
வில்லு க்கு மிடுக்கு -நாணுக்கு பலம் -தான் பூட்டிய நாண் தனது கழுத்தை அறுக்காமல்
இருக்கவும் இவன் வேண்டுமே –
அஞ்ஞர் இவன் தலையில் வைத்து கவி பாட -இவனும் தானே செய்தோம் பிரமித்து

ஆபத்து என்றதும் தான் ஓடும் -என்று காட்டி
சர்வேஸ்வரன் எல்லா அளவிலும் ரஷிக்கும்
மகனும் -பிதா செய்ததை பருவம் வருவதருக்கு முன்பே தேவ சேனாபதியாய் –
சுப்ரமண் யனும் ஓடி 49 அக்னி தேவதையும் ஓட
பொறு சிறை புள் -கடாவிய மாயன் –
இறக்கையால் முடிக்கும் கருட ஆழ்வான்
வாணனை முடித்த -கரம் கழித்த ஆய மாலை
இவன் வென்றது தன்னை தாழ விட்ட எடுத்தில்
பொன் சக்கரத்து -கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹவ் -கொண்டாடி
அச்சுதன் நழுவ விடாதவன்
சடையான் ஓட –
தலைவன் -வாணனை கை முதல் அழித்து தலை காத்த தலைவன்
அநிருத்த ஆழ்வான் மேல் விட்ட அம்புகளை தான் ஏற்று கொண்டு
இவன் பற்றின எனக்கு அல்ப துக்கமும் இல்லை
சிறையில் பேரன் என்பதால்
அடியேன் என்றதால் எனக்கு அதுவும் இல்லை
தாசத்வம் இருந்தால் இறையாகிலும் இடர் இல்லை

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading