முட்டுஇல்பல் போகத்து ஒருதனி நாயகன்
மூவுல குக்குஉரிய
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக்
கனியைக் கரும்புதன்னை
மட்டுஅவிழ் தண்அம் துழாய்முடி யானை
வணங்கி அவன்திறத்துப்
பட்டபின் னைஇறை யாகிலும் யான்என்
மனத்துப் பரிவுஇலனே.
பொ-ரை : ‘தடை இல்லாத பல போகங்களையும் மூன்று உலகங்கட்குமுரிய ஒப்பற்ற முதன்மையையுமுடைய இறைவனை, வெல்லக்கட்டியை, தேனை, அமுதை, நல்ல பாலினை, பழத்தினை, கரும்பினை, தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையைத் தரித்த முடியையுடையவனை வணங்கி, அவனிடத்தில் அடிமைப்பட்ட பின்னர் யான் என் மனத்தின்கண் சிறிதும் துன்பமுடையேன் அல்லேன்’ என்கிறார்.
வி-கு : மட்டு – தேன். இறை – சிறிது. ‘மூவுலகுக்கு உரிய ஒரு தனி நாயகன்’ என மாறுக. ‘மூவுலகுக்கு உரிய கட்டியை’ எனக் கட்டிக்கு அடைமொழி ஆக்கலுமாம்.
ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘சர்வேசுவரனுடைய இனிமையைச் சொல்லுவதால் உண்டாகும் பிரீதியின் நிர்ப்பந்தத்தாலே அவனுக்கு அடிமை செய்கையிலே இழிந்த எனக்குச் சிற்றின்ப விஷயங்களின் ஆசையால் வரும் மனத்தின் துக்கம் இல்லை,’ என்கிறார்.
முட்டு இல் பல் போகத்து மூவுலகுக்கு உரிய ஒரு தனி நாயகன் – சில நாள் சென்றவாறே 2முட்டுப்படுதல் இன்றி, எல்லை இல்லாத இன்பங்களை உடையவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாத தனி நாயகன். என்றது, 3‘எந்த நாதனால் மூன்று உலகமும் நல்ல நாதனை உடையன ஆகுமோ, அந்த இராமபிரான் தகுந்த நாதன்,’ என்கிறபடியே, 4தன்னை நாயகன் என்றால், பின்னர் இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கை. பிரமன் சிவன் முதலானோர்கட்கும் முதன்மை சொல்லுவார்கள் ஆதலின், அவர்களை வேறுபடுத்துவதற்காக ‘ஒரு தனி நாயகன்’அன்றிக்கே, 2‘மூவுலகுக்கு உரிய கட்டியைத் தேனை அமுதை நன்பாலைக் கனியைக் கரும்புதன்னை’ என்று கூட்டலுமாம். இதனால், இனிமையும் எல்லார்க்கும் பொதுவாய் இருக்கையைத் தெரிவித்தபடி. 3‘அந்தப் பரம்பொருள் சுவை உருவம்’ என்கிறபடியே, உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறச் சுவையின் கனமாய் இருத்தலின்’ ‘கட்டியை’ என்கிறார். ‘தேனை’ என்கிறார், கட்டியின் வன்மை தவிர்ந்திருத்தலின். சாவாமல் காப்பதுமாய் வேறுபட்ட சிறப்பையுடைய இனிய பொருளுமாய் இருத்தலின், ‘அமுதை’ என்கிறார். ஞானிகள் அல்லாதார்க்கும் இனியனாய் இருத்தலின், ‘பாலை’ என்கிறார். கண்ட போதே நுகரலாம்படி பக்குவமான பலமாய் இருத்தலின், ‘கனியை’ என்கிறார். கைதொட்டுச் சுவைப்பிக்க வேண்டும் குற்றம் இன்றி இருத்தலின், ‘கரும்புதன்னை’ என்கிறார். மேற்கூறியவை எல்லாம் உவமையாகத் தக்கன அல்ல ஆதலின், அவ்வப்பொருள்களையே சொல்லுகிறார். ‘சர்வரஸ:’ என்பது மறை மொழி. ஆக, இவருடைய அறுசுவை இருக்கிறபடி.மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை – தேன் பெருக்கு எடுக்கின்ற திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை உடையவனை. இதனால் அடைப்படுகின்ற இறைவனுடைய சொரூபத்தைத் தெரிவித்தபடி. வணங்கி அவன் திறத்துப்பட்ட பின்றை – 1காலயவனவன் சராசந்தன் முதலியவர்களைப்போன்று படைவீட்டை அடைமதிட்படுத்தி வந்து கிட்டுதல் அன்றி, முறையிலே அவன் பக்கலில் சேர்ந்த பின்பு. இதனால் ‘வணங்கிக் கொண்டு அவன் திருவடிகளிலே கிட்டுதல் அடியவனுக்குச் சொரூபம்’ என்பதனைத் தெரிவித்தபடி. இறை ஆகிலும் – மிகச் சிறிதாயினும். யான் மற்றைப் பொருள்களிலே விருப்பம் இல்லாத யான். என் மனத்துப் பரிவு இலன் – 2‘இந்த ஆத்துமாவானது ஆனந்த உருவமான பரம்பொருளை அடைந்து ஆனந்தத்தை உடையதாகின்றது,’ என்கிறபடியே, ‘பரமபதத்திற்குச் சென்றால் பூர்ண அனுபவம் பண்ணலாவது, இங்கே இருந்து குறைய அனுபவியாநின்றேன்’ என்னுமதனாலே வரும் மனத்தின் துக்கம் உண்டோ எனக்கு?’ என்கிறார்.
காலயவனன் : இவன், யவன தேசத்து அரசன்; சராசந்தன்: இவன்,
மகததேசத்து அரசன்; இவர்கள் யாதவர்மேற்படை எடுத்தற்காக வந்து,
மதுரையை முற்றுகையிட்டனர்; இவர்களுடைய துன்பத்தினின்றும்
யாதவர்களை நீக்குவித்தற்காகவே மேலைச்சமுத்திரத்தில் துவாரகை என்ற
நகரை உண்டாக்கினான் கண்ணபிரான்.
‘மறியா எழுந்திரை மாநீர் மதுரையில் மன்னவரைக்
குறியா தவன்படை வந்தஅந் நாள்செழுங் கோகனகப்
பொறியா டரவணைத் தென்னரங் கா!ஒரு பூதரும்அங்கு
அறியா வகைத்துவ ராபதிக் கேஎங்ஙன் ஆக்கினையே?’
ப்ரீதி பலாத்காரத்தால் –
அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
சூத்திர விஷய ஈடுபாடு அற்று இருந்தேன்
ரச பதார்த்தங்கள் அனைத்தையும் சொல்லி
வணங்கி ஈடுபட்ட பின்னர் பரிவிலேன் -குறை இல்லை
முட்டு இல் பல் போகத்துக்கு ஒரு தனி நாயகன் –
முட்டுக்கட்டை இல்லை -அசந்க்யேமான
அத்வீதீயமான -இரண்டாம் விரலுக்கு அநாமி கா -சமஸ்க்ருதம் -மோதிர விரல் –
அங்குஷ்டம் கட்டை விரல்
பெயர் இல்லாத விரல் என்று அர்த்தம் அநாமிகா –
பகவான் எண்ணி சமமான ஒருவர் இல்லை –
பிரமாதிகளுக்கும் -அதிபதி பதினான்கு லோகங்கள்
இவன் ஒரு தனி நாயகன் -ஒப்பு பாலுண்ணி -மகா வருஷம் போலே
கள்ளிச் செடி =மகா வருஷம் -நாயகன் அல்லாதவருக்கும் நாயகன்
மூ உலகுக்கு உரிய தனி ஒரு நாயகன் கூட்டி –
முட்டில் பல் போகம் ஐஸ்வர்ய கைவல்ய வ்யவர்த்தி –
மூவருக்கும் உரிய நாயன் -த்ரைலோக்ய நாதன் பெருமாளை தசரதன்
சர்வ லோக சரண்யாய விபீஷண ஆழ்வான் -என்னோபாதி உங்களால் சொல்ல முடியாது
அன்றிக்கே
மூவுலகுக்கு உரிய கட்டி
மூவுலக்குக்கு உரிய தேன்
என்றும் கொண்டு
கட்டி -ரச கணம் உள்ளும் புறமும்
தேனை -காடினயம் தவிர்ந்து நக்கி உண்ணலாம்
அமுதை -சாவா மல் காத்து
நன் பாலை -அனைவருக்கும் கிட்டும்படி -நன்மை எங்கும் கொண்டு –
நன் கட்டி நல தேனை -அர்த்தம் கொண்டு
கனியை கண்ட போதே நுகரும்படி
கரும்பு தன்னை கை தொட்டு உண்ணா வேண்டாதபடி
ரசங்கள் -சர்வ ரச வேதாந்தம்
தன்னை -திருஷ்டாந்தம் சொல்லி முடியாமல்
இவருடைய ஷட் ரசம் இருந்தபடி –
மது செவ்வி திருத் துழாய் சூடியவனை
வணங்கி -சேஷ பூதனுக்கு ஸ்வரூபம்
காளயவன ஜராசந்தன் -போல்வார் படை எடுத்து வர –
துவாராகை போனார் பெருமாள் –
முறையிலே அவன் பக்கல் அன்வயித்த பின்பு
ஆனந்தீ பவதி -முக்தர் போலே இங்கேயே குறை இன்றி
குறை யற -அனுபவிக்க -துக்கம் இன்றி –
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply