குறைவுஇல் தடம்கடல் கோள்அரவு ஏறித்தன்
கோலச்செந் தாமரைக்கண்
உறைபவன் போலஓர் யோகுபுணர்ந்த ஒளிமணி
வண்ணன் கண்ணன்
கறைஅணி மூக்குடைப் புள்ளைக் கடாவி
அசுரரைக் காய்ந்தஅம்மான்
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
யான்ஒரு முட்டுஇலனே.
பொ-ரை : ‘குறைவு இல்லாத பெரிய பாற்கடலிலே வலிமை பொருந்திய ஆதிசேடன்மேல் ஏறி, தனது அழகிய செந்தாமரை மலர் போன்ற கண்களாலே உறங்குகிறவனைப் போன்று ஒப்பற்ற யோகத்தைக் கூடிய, ஒளியையுடைய நீலமணி போன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரான், கறை தோய்ந்த மூக்கையுடைய கருடப் பறவையைச் செலுத்தி அசுரரைக் கொன்ற அம்மான், அவனுடைய நிறைந்த புகழை ஏத்தியும் பாடியும் ஆடியும் செல்கின்ற நான் ஒரு தடையினை உடையேன் அல்லேன்,’ என்கிறார்.
வி-கு : ‘ஏறிப் புணர்ந்த வண்ணன்’ என்றும், ‘கடாவிக் காய்ந்த அம்மான்’ என்றும் கூட்டுக. ‘பொருள் சேர் புகழ்’ ஆதலின், ‘நிறைபுகழ்’ என்கிறார்.ஈடு : இரண்டாம் பாட்டு. 1முதற்பாசுரத்தில் திருவவதாரங்களைச் சொன்னார்; இப்பாசுரத்தில், ‘திருவவதாரத்துக்கு மூலமாகத் திருப்பாற்கடலிலே கண்வளர்ந்து, அங்குநின்றும் ஸ்ரீ வசுதேவ குமாரனாய் வந்து திருவவதாரம் செய்து, அடியார்களுடைய பகைவர்களை அழியச்செய்த கிருஷ்ணனுடைய புகழைப் பேசப்பெற்ற எனக்கு ஒரு தட்டு இல்லை,’ என்கிறார்.
தடம் கடல் – குறைவு இல்லாமல் கண்வளர்ந்தருளுவதற்கு இடமுடைத்தான கடல். ‘தடம் கடல்’ என்றவர், ‘குறைவு இல் தடம் கடல்’ என்கிறார்; ஈண்டுக் குறைவு இல்லாமையாவது, 2‘திருமேனி நீ திண்டப் பெற்று, மாலும் கருங்கடலே என் நோற்றாய்’ என்னுமாறு போன்று, அவனுடைய பரிசத்தால் குறைவு அற்று இருக்கை. 3யசோதைப்பிராட்டி ஸ்ரீ கிருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உவக்குமாறு போன்று, சர்வேசுவரனைத் தனக்குள்ளே இட்டுக்கொண்டு அத்தாலே உவந்து குறைவு அற்று இருக்கை. இதனால், ‘நானே அன்று; என்னிலும் குறைவு அற்றார் உளர்’ என்றபடி. கோள் அரவு ஏறி – திருமேனியினுடைய பரிசத்தால் தனக்குமேல் ஒன்று இல்லாததான ஒளியை உடையனான திருவனந்தாழ்வான் மேலே ஏறி. கோள் – ஒளி. அன்றிக்கே, ‘‘கோள்’ என்று மிடுக்காய், சர்வேசுவரனும் சர்வேசுவரியும் கூடித் துகையாநின்றால் பொறுக்கைக்கு ஈடான, தரிக்கும் ஆற்றலையுடைய திருவனந்தாழ்வான்’ என்னலுமாம். 5‘சிறந்த ஞானத்துக்கும் ஆற்றலுக்கும் இருப்பிடமான ஆதிசேடன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். மென்மை நாற்றம் குளிர்த்தி இவற்றை இயற்கையாக உடையவன் ஆதலின், ‘அரவு’ என்கிறார்.தன் கோலம் செந்தாமரைக்கண் உறைபவன் போல – 1வெறும்புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய், எல்லாச் செல்வங்கட்கும் அறிகுறியாய், பெரிய பிராட்டியாருடைய கலவியால் வந்த ஆனந்தத்திற்கு அறிகுறியாய், அப்போது அலர்ந்த செவ்வித்தாமரையை உவமை சொல்லலாம்படி அழகியதாய்ச் சிவந்து இருந்துள்ள திருக்கண்கள். கண் உறைகை – கண் வளர்ந்தருளுகை. என்றது, கண்ணுறங்குதல் என்று பேராய், உலகத்தைக் காக்கும் சிந்தனையோடு கூடியவனாய் இருத்தல். ஓர் யோகு புணர்ந்த – ‘எல்லா ஆத்துமாக்களும் நம்மைக் கிட்டிக் கரைமரம் சேர்தற்கு உரிய விரகு யாதோ?’ என்று இவற்றைக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தல்; அன்றிக்கே, இப்படிக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தவாறே அந்நினைவு பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே 2‘வாசுதேவனாகிய தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்; ‘அவ்வாறு சிந்தித்தலைக் கூறுகிறார்’ என்னலுமாம். இப்படித் தன்னைத் தானே நினைத்தவாறே காத்தற்கு உரிய உபாயம் தோன்றுமே? தோன்றினவாறே கண்ணனாய் அவதரித்தான் என்கிறார் மேல்:
ஒளி மணி வண்ணன் கண்ணன் – ஒளியையுடைய நீலமணி போலே இருக்கிற வடிவையுடைய கிருஷ்ணன். ‘காக்கப்படும் பொருள்களைத் தன் வடிவழகாலே கரைமரம் சேர்க்கைக்காகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்’ என்றபடி. 3‘ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோ’ என்றார் பட்டர்பிரானும். கறை அணி புள்ளைக் கடாவி – பகைவர்களைக் கொன்று, கறை கழுவக் காலம் இல்லாது இருத்தலின் கறை ஏறி அதுவே ஆபரணமாக இருக்கும் மூக்கையுடைய புள்ளைச் செலுத்தி. அன்றிக்கே, ‘கறை அணி புள்’ என்பதற்குத் தாயான விந்தை, ‘புத்திரன் முகம் காணவேண்டும்’ என்னும் ஆசையின் மிகுதியாலே முட்டையாய்இருக்கிற பருவத்தில் ஒரு காரியத்தைச் செய்தாளாய், அத்தால் ஓர் அடையாளம் பிறந்து, அவ்வடையாளம், எம்பெருமானுக்கு இருக்கும் ஸ்ரீ வத்ஸத்தைப் போன்று ஆபரணமாய் இருத்தலின், அதனை ஆபரணமாக உடைய புள் என்னலுமாம். திருமேனியினுடைய பரிசத்தால் திமிர்ந்து செல்லாது நிற்றலின், தேர் முதலிய பொருள்களை நடத்துமாறு போன்று வடிம்பிட்டுத் தாக்கி நடத்த வேண்டி இருத்தலின், ‘கடாவி’ என்கிறார். 1‘தேவரீருடைய திருவடிகள் தாக்குவதால் தன்மேல் உண்டாகின்ற தழும்புகளின் அழகையுடைய பெரிய திருவடி’ என்னக் கடவதன்றோ?
அசுரரைக் காய்ந்த – இப்படிப் பெரிய திருவடியை நடத்தா நின்றுகொண்டு அசுரக்கூட்டங்களை அழிப்பித்த. ‘அடியாருடைய இன்பத்துக்குக் காரணமாக இருக்கும் கருவியே அடியார்களுடைய விரோதிகளை அழிப்பதற்கும் கருவி’ என்கை. அம்மான் – இப்படிச் சிறியதைப் பெரியது நலியாதபடி நோக்கும் 2நிருபாதிக சேஷி. நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – ‘இத்தகைய பாதுகாத்தலால் குறைவற்ற புகழைப் பிரீதியின் மிகுதியினாலே ஏத்தியும் பாடியும் பத்தி பாரவஸ்யத்தாலே இருந்த இடத்தில் இராமல் ஆடியும் வாழ்கின்ற நான், பகவானுடைய இன்பத்துக்கு ஒரு தடையை உடையேன் அல்லேன்,’ என்கிறார். முட்டு – விலக்கு.
திருவவதாரங்கள் முதலில் சொல்லி
கந்தமான -மூலமான வ்யூஹ மூர்த்தி -ஏஷ நாராயண ஸ்ரீ மான் ச்லோஹம் –
விட்டு மதுராபுரீம் -வந்த -வேர் போன்ற -திருபாற்கடலில் கண் வளர்ந்து
வாசுதேவ குமாரான கண்ணன் -அவனை பாடி ஒரு குறை இல்லை என்கிறார் இதில் –
குறைவிலாத திருபார்க்கடல் -யோக நித்தரை -ஒளி மணிவண்ணன்
கறை அணி மூக்கு -புள்ளூர்ந்து -த்வம்சம் செய்து கறை படிந்த
நிறை புகழ் ஏத்தியும் பாடியுமாடியும் –
யான் குறை இல்லை -திருப்பாற்கடல் குறை இன்றி
ஆளும் கரும் கடலே -திரு மேனி தீண்டப் பெற்ற பாக்கியம் பெற்றதால்
யசோதை பிராட்டி மடியில் வைத்து ஹர்ஷித்தல் போலே
தொல்லை இன்பத்து இறுதி கண்டது போலே
விகாசம் -தாளும் முடிகளும் -இடமுடைத்தான
நிரவதிகதேஜஸ் -கோள் -மிடிக்கு என்றுமாம்
சர்வேஸ்வரனும் பிராட்டியும் கூடித் துகையா நின்றாள் பொறுத்துக் கொள்ளும் மிடுக்கு
பிரக்ருத விஞ்ஞானம் பலம் கொண்ட அரவு -ஏகதாம -ஒரே இருப்பிடம் ஆளவந்தார்
மென்மை குளிர்ச்சி நாற்றம் இயற்கையாக உடையவன்
வெறும் புறத்தி;ல் ஆலத்தி -செவ்வித் தாமரை உவமை சொல்லும்படி செம்தாமரைக் கண்
சர்வேஸ்வர ஸூ சகம்
பெரிய பிராட்டி செர்த்தியால் ஹர்ஷிது சிவந்த திருக்கண் கள்
கண் வளர்ந்து அருளுகை பேராய் யோகு புணர்ந்த
ரஷன உபாய சிந்தனை பண்ணி அனுசந்தானம் -நாக்கு உலர –
தன்னைத் த் தானே -ஆத்மாநாம் வாசுதேவாக்யம் சிந்தையே -அனுசந்தித்து –
கற்ப்பூர –
சாயைப் போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே
குளிர்ச்சியாக பாட வல்லார்
பாதுகை தலைமேல் வைத்து அர்த்தம் எம்பார் -எம்பெருமானார் அருளிச் செய்தார்
பாட வல்லார் நிழல் போன்ற அணுக்கர்கள் ஆவார் –
தன்னை அனுசந்ததால் ரஷன உபாயம் தோற்றும்
கரைக்கு போய் சேர கலங்கரை விளக்கம் –
கரையில் மரம் விளக்கு முதலில்
அப்புறம் கட்டடம் –
கரை மரம் சேர்க்க கிருஷ்ணன்
ஆள் கொள்ள ஆயர் கோன்
ஒளி -நீல மணி வண்ணன்
கிருஷ்ணன்
கறை அணி -பிரதிபஷ நிரசனம் -ஆபரணமாக கொண்ட மூக்கு
விநதை -தாயார் விசனம் -புத்திர முகம் காண முட்டை வெட்டி -அடையாளம் பிறந்து
எம்பெருமான் ஸ்ரீ வத்சம் போலே ஆபரணமாக கொண்ட
புள்ளைக் கடாவி -ரதாதிகளை நடத்துவதை போலே
நிமிர்ந்து வடிப்பிட்டு -திருமேனி ஸ்பரசத்தாலே மயங்கி இருக்க -இவன் கடாவி
அசுரரை காய்ந்த அம்மான் –
காலால் உதைத்து நடத்தி -ஆளவந்தார் ஸ்லோகம் –
திருவடி அடையாளம் -அங்க சோபினா –
பெரிய திருவடியை நடத்திக் கொண்டு ஆசுர வர்க்கத்தை -கடாவி
போக உபகரணம் -கர்ட ஆழ்வான் -விரோதி நிரசன்னா பரிக்க்ரகம்
சிரியத்தை பெரியது நலிவாமல் -majarity -minority நலிவாமல் –
அசுரர் த்ர்வர்களை நலியாமல் –
ஆடியும் பாடியும் –
முட்டு இலேன்
பிரதிகதி தடை இல்லை விலங்கு இல்லை
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply