திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பத்தாந்திருவாய்மொழி – ‘சன்மம் பலபல’

முன்னுரை

    ஈடு : 1மேல் திருவாய்மொழியிலே பிறரைக் கவி பாடுகிறவர்களைப் பகவானிடத்தில் மீட்கப் பார்த்து, அவர்கள் மீளாது ஒழிய, ‘இவர்களைப் போலே ஆகாமல் யான் முதன்முன்னம் பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளை உடையவனாகப் பெற்றேன்,’ என்கிறார்; ‘பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளையுடையவனான அளவேயோ? பகவானைத் துதிப்பதற்குத் தக்க உறுப்புகளை உடையவனாகவும் பெற்றேன்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில். 2‘முடியானே’ என்ற திருவாய்மொழியில், தாம் அவனை அனுபவிக்கக்கோலி, அது பெறாமையாலே, தாமும் தம்முடைய உறுப்புகளும் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார்; தாம் பகவத் விஷயத்திலே கூப்பிடுகிறது போன்று, சமுசாரிகள் மனைவி மக்கள் முதலியவர்களைப் பற்றிக் கூப்பிடுகிறபடியை நினைத்து, அவர்கள் கேட்டினைக் கண்டவாறே தமக்கு ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் பிறந்த இழவுதானே பேறாய்த் தோன்றிற்று.

அதற்கு மேலே, ‘அடியார்களின்பொருட்டுக் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களைப் போன்று சமுசாரிகள் நடுவே அவர்களோடு ஒத்த வடிவைக்கொண்டு அவதரித்த 3திவ்விய அவதாரங்களையும் அவதாரங்களில் செய்த திவ்விய செயல்களையும் வடிவழகையும் ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியையும் திவ்விய ஆயுதங்கள்சேர்ந்த சேர்த்தியையும் அகடிதகடநாசாமர்த்தியத்தையும் ஆகிய இவற்றை எல்லாம் அனுபவிக்கப்பெற்றேன்; எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.

இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘சன்மம் பலபல செய்து’ என்றுதனை
நோக்கித் ‘திவ்விய அவதாரங்களை’ என்றும், ‘மாளப்படைபொருத’
என்றதனை நோக்கித் ‘திவ்விய செயல்களை’ என்றும். ‘எங்கும் அழகு
அமர்’ என்பது போன்றவைகளை நோக்கி ‘வடிவழகை’ என்றும், ‘மட்டவிழ்
தண்ணம் துழாயான்’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தி’
என்றும், ‘சங்கொடு சக்கரம் வில்’ என்பன போன்றவைகளைத் திருவுள்ளம்
பற்றித் ‘திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும், ‘துக்கம் இல்
ஞானம்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘அகடித கடநா
சாமர்த்தியத்தை’ என்றும் அருளிச்செய்கிறார்.

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்
சங்கொடு சக்கரம்வில்
ஒண்மை யுடைய உலக்கைஒள் வாள்தண்டு
கொண்டுபுள் ஊர்ந்துஉலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை
மாளப் படைபொருத
நன்மை உடையவன் சீர்பர வப்பெற்ற
நான்ஓர் குறைவுஇலனே.

பொ-ரை : ‘பல பல பிறவிகளை எடுத்துக் கண்களுக்குப் புலனாகி, சங்கம் சக்கரம் வில் ஒளி பொருந்திய உலக்கை ஒளி பொருந்திய வாள் தண்டு இவற்றைக் கையில் தரித்துக்கொண்டு, கருடப்பறவையினை வாகனமாகக் கொண்டு, வலிமை பொருந்திய அரக்கர்களும் அசுரர்களும் படைகளோடு இறக்கும்படி போர் செய்த நன்மையையுடைய சர்வேசுவரனுடைய நற்குணங்களைத் துதிக்கப்பெற்ற நான், ஒரு குறையும் இல்லாதவனேயாவேன்’ என்கிறார்.

வி-கு : ‘செய்து வெளிப்பட்டுக் கொண்டு பொருத நன்மையுடையவன்’ என்றும், ‘ஊர்ந்து பொருத நன்மையுடையவன்’ என்றும் கூட்டுக. ‘மாளப் பொருத’ என்க. இப்பாசுரத்தில் இறைவனுடைய ஐந்து ஆயுதங்களும் கூறப்பட்டிருத்தல் காணலாம். உலக்கை – பலராமனுக்குரிய படை. இச்செய்யுள் இனவெதுகையாய் அமைந்தது.

ஈடு : முதற்பாட்டில், 1இத்திருவாய்மொழியிற்சொல்லுகிற பொருளைச் சுருக்கமாக அருளிச்செய்கிறார்; ‘திவ்விய ஆயுதங்களோடே அவன் வந்து அவதரிக்கும்படியைச் சொல்லப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார். அன்றிக்கே, ‘அடியார்களைக் காத்தற்பொருட்டு பல அவதாரங்களைச் செய்து அவர்கள் விரோதியை அழிக்கின்ற எம்பெருமானுடை நற்குணங்களைப் புகழப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார். அன்றிக்கே, ‘கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் கூடப் பிறவாத பிறவிகளை ஏறிட்டுக் கொண்டு வந்து காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார். அன்றிக்கே, ‘சர்வேசுவரனாய் மேன்மை அடித்து இவற்றோடே தோய்வு இன்றி இருக்கை அன்றிக்கே இவை பட்ட இடரைத் தானும் ஒக்க வந்துபட்டுக் காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார் என்னுதல்.என்றது, ‘இனியது விஞ்சின இடங்களில் மிகவும் ஆழங்காற்படுகைக்கு உடலாமித்தனை அன்றோ?’ என்றபடி.

ஓர் அவதாரத்தைச் சொன்னால், 1‘எத்திரம்!’ என்று ஈடுபடுகின்றவர், பல அவதாரங்களைப் பொறுக்க மாட்டார் அன்றோ?அதனால், ‘பல’ என்கிறார். ‘கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பிறவிக்கு எல்லை காண்கின்றோம்; கர்மங்கட்குக் கட்டுப்படாதவன் பிறவிக்கு எல்லை காண்கின்றிலோம்,’ என்பார், ‘பலபல’ என்கிறார். தன்னுடைய பிறவிகளைத் தானே சொல்லப் புக்காலும் 2‘பஹூநி – பல’ என்னும்படி அன்றோ இருக்கிறது? ஆக, கர்மம் காரணமாக வரும் பிறவிகட்கு எல்லை உண்டு; திருவருள் காரணமாக வரும் பிறவிக்கு எல்லை இல்லை,’ என்றபடி. அன்றிக்கே, ‘தேவர்கள் முதலான பிறவி பேதங்களையும் 3அவாந்தர பேதங்களையும் கருதிப் ‘பலபல’ என்கிறார்,’ என்னலுமாம். தோன்றுகிற அளவேயன்றி, கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் செய்தால், 4‘பிறகு பன்னிரண்டாவது மாதமாகிய சித்திரை மாதத்தில் நவமி திதியில் ஸ்ரீராமனைப் பெற்றாள்’ என்கிறபடியே, பன்னிரண்டு மாதங்கள் கர்ப்பவாசம் செய்து வந்து அவதரித்தானாதலின், ‘செய்து’ என்கிறார். 5‘பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப்பாங்கினால்’ என்றார்கள் அன்றோ பெற்றவர்களும்?

அன்றிக்கே, 6‘உலகிற்கு எல்லாம் தமப்பனான சர்வேசுவரன், தனது ஒவ்வொரு பிறவியிலும் தன் புத்திரர்களைத் தான் தமப்பனாக உடையவனாய் இருக்கிறான்; அந்தச் சர்வேசுவரனுடைய அவதாரத்தின் பெருமையை அறிவில்லாதவர்கள் அறியார்கள்,’ என்கிறபடியே, ‘எல்லாப் பொருள்கட்கும் காரணனாய் இருக்கின்ற தான் தன்னுடைய காரியங்களிலே ஒரு பொருளுக்குத் தான் காரியமாக வந்து அவதரிக்கின்றான்,’ என்பார், ‘செய்து’ என்கிறார் என்னலுமாம்.

வெளிப்பட்டு – 7‘கண்களுக்குக் காணப்படுமவன் அலன்’ என்கிற தன்னைக் கண்களுக்கு விஷயமாக்கி. என்றது, ‘இச்சரீரத்தோடு சம்பந்தம் இல்லாத கண்களாலே எப்பொழுதும் காணக்கூடிய வடிவை ஊன் கண்களுக்கு விஷயமாக்கிக் கொண்டுவந்து காட்டுகை. 1‘என்றேனும், கட்கண்ணாற் காணாத அவ்வுருவை’ அன்றோ கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்?’ என்றபடி. 2‘எப்போதும் செல்லுகிற இடத்தில் நிதி கண்டு எடுப்பாரைப் போன்று, இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை இதர சாதிகளின் தன்மையை உடையதாக்கி வந்து அவதரிக்கின்றான்’ என்பார், ‘வெளிப்பட்டு’ என்கிறார். சங்கொடு சக்கரம் வில் ஒண்மையுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு – இதனால், 3அவதரிக்கும்போது திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.

4‘ஸ்ரீ சத்துருக்நாழ்வான், அப்போது தாய் மாமனான யுதா ஜித்தினுடைய வீட்டிற்குச் செல்லுகின்ற ஸ்ரீ பரதாழ்வானால் அழைத்துச் செல்லப்பட்டார்,’ என்கிறபடியே, இறைவனை விட்டுப் பிரியாத ஒற்றுமையைத் தெரிவிப்பார், ‘சங்கொடு’ என்கிறார். ‘நல்லாரைக் காத்தற்கும் பொல்லாரைப் போக்கற்கும் சங்கு ஒன்றே போதியதாக இருக்க, சக்கரத்தையும் கொண்டு வந்தான்’ என்பார், ‘சங்கொடு சக்கரம்’ என்கிறார். ஒரு கொத்துக்கு ஒருவரைக் கொண்டு வருதலோடு அமையாது, வில்லையும் கொண்டுவந்தானாதலின், ‘சக்கரம் வில்’ என்கிறார். கருதும் இடம் பொரும்படி ஞானத்தாலே மேம்பட்டிருப்பவர்களாதலின், ‘ஒண்மையுடைய உலக்கை’ என்கிறார். ஒண்மை – அறிவு.

5
கையில் திவ்விய ஆயுதங்களைக் கண்டால், ‘இவற்றைப் போருக்குக் காரணமாகத் தரித்துக்கொண்டிருக்கிறான்,’ என்றுஇருப்பர்கள் சமுசாரிகள்; அவ்வாறு அன்றி, நித்தியசூரிகள், ‘அழகிற்குக் காரணமாகத் தரித்துக்கொண்டிருக்கிறான்’ என்று இருப்பர்கள்; இவரும் அவர்களிலே ஒருவர் ஆகையாலே, அழகிற்குக் காரணமாகவே கொண்டு, ‘ஒள்வாள்’ என்கிறார். ஒண்மை – அழகு. 1‘ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலே ஆயிற்று வடிவும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது,’ என்றபடி. ஆக, இங்கு நின்றும் போவார்க்கு அடையத் தக்கவர்களான நித்தியசூரிகளோடே கூட வந்து அவதரிக்கிறான் என்பதனையும், அவ்வாறு அவதரிப்பதுவும் கண்டு அனுபவித்த பின்னர், 2‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவது என்றுகொலோ!’ என்று பிரார்த்திக்க வேண்டாதபடி அவர்களோடே கூடக் காட்சி கொடுக்கைக்காக என்பதனையும் தெரிவித்தபடி.

புள் ஊர்ந்து – இதுவும் ஒரு சேர்த்தி அழகு; 3பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போன்று அன்றோ இருப்பது? உலகில் – இவ்வழகுதான் ஒரு தேசவிசேஷத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்குமது அன்றோ? அங்ஙனம் இருக்கவும் அவ்வழகினை இங்கே அனுபவிக்கும்படி செய்தானாதலின், ‘உலகில்’ என்கிறார். வன்மையுடைய அரக்கர் அசுரரை – இவ்வழகைக் கண்டு நெஞ்சு நெகிழாதவர்களான இராக்கதர்களையும் அசுரர்களையும். 4தமக்கு நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகுகின்றதாதலின், இவ்விஷயத்தில் தம்முடைய மென்மை போன்று எல்லார்க்கும் இருக்குமோ என்பார்,-அரக்கர்களுக்கு நெஞ்சு நெகிழ்ச்சி இல்லாமை சித்தமாயிருக்க,
‘வன்மையுடைய’ என்று விசேடிப்பதற்குத் தாத்பர்யம் அருளிச்செய்கிறார்,
‘தமக்கு நினைதொறும்’ என்று தொடங்கி.

‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு நெடிந்துகும்!
வினைகொள்சீர் பாடிலும் வேம்எனது ஆருயிர்!
சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை என்னப்பா!
நினைகிலேன் நான்உனக்கு ஆட்செய்யும் நீர்மையே!’

என்பது இவருடைய ஸ்ரீசூக்தி,

‘வன்மையுடைய அரக்கர்’ என்கிறார். அவனைக் காணாத போது ‘ஈஸ்வரோகம் – ‘ஈசுவரன் ஆகின்றேன்’ என்று இருக்கலாம்; திவ்விய ஆயுதங்களோடே அழகிய வடிவழகைத் திருவடி திருத்தோளிலே கண்டால், ‘சரணம்’ என்னுதல், எழுத்து வாங்குதல் செய்கை அன்றியே எதிர் இடுவதே பையல்கள்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘அழகுக்கு இலக்காய் வாழமாட்டாது, அம்புக்கு இலக்காய் முடிந்து போவதே!’ என்கிறார் என்றபடி.

மாளப் படை பொருத – அவர்கள் முடிந்து போம்படி ஆயுதத்தாலே பொருத. அன்றிக்கே, ‘போர்க்களத்தே பொருத’ என்னலுமாம். நன்மை உடையவன் – 1போர்க்களத்தில் ஆரோத மடித்தல் ‘தன்னுடைய பிள்ளைகள்’ என்று அன்பு பாராட்டுதல் செய்யாதே, ‘அடியார்களுக்குப் பகைவர்கள் என்று அழியச்செய்த நன்மையுடையவன். அன்றிக்கே, நன்மையாவது – நினைவினாலே செய்யாமல், அவதரித்துப் போரைச் செய்து முடித்த நன்மை ஆகவுமாம். 2‘மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில், தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதோ!’ என்றார் அன்றோ இவர்தாம்? ‘அடியார்கட்குப் பகைவர் என்று அழித்தாலும், அது கொலை அன்றோ?’ எனின், யாகத்தில் செய்யப்படுகின்ற உயிர்க்கொலைகளில் கை கூசினான் ஆகில், பிராயஸ்சித்தம் பண்ண வேண்டும் என்னாநின்றதே அன்றோ? நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற நான் – அவனுடைய மங்களம் பொருந்திய நற்குணங்களை முறை கேடாகச் சொல்லப்பெற்ற நான். பரவுதல் – அடைவு கெடக் கூறுதல். ஓர் குறைவு இலன் – ஒரு குறையும் உடையேன் அல்லேன்.முதலிலே சமுசாரிகளைப் போன்று அறியாதொழிதல், அவதரித்துக் கண்ணுக்கு இலக்காய்ப் பாசுரமிட்டுப் பேச நிலமன்றிக்கே இருத்தல், சிசுபாலன் முதலியோர்களைப் போன்று ‘நம்மிலே ஒருவன்’ என்று தாழ்வாகப் பேசி முடிந்து போதல். ஸ்ரீ விஸ்வரூபத்தில் அருச்சுனனைப் போன்று நீச்சு நீராதல் இன்றிக்கே இறைவனைப் புகழ்ந்தவர் ஆதலின், ‘ஓர் குறைவிலன்’ என்கிறார். அன்றிக்கே, 2‘அவன் எல்லா விதமான கல்யாண குணங்களை பரமாத்துமாவோடு கூட அனுபவிக்கின்றான்,’ என்கிறபடியே, ‘பரமபதத்திலே அனுபவிக்கக் கூடிய குணங்களின் அனுபவத்தை இங்கே அனுபவிக்கப்பெற்ற எனக்குப் ‘பரமபதத்திற் போகப்பெற்றிலேன்’ என்ற குறை உண்டோ?’ என்கிறார் என்னுதல்.

இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற பொருளை’ என்றது, ‘பகவானைத்
துதி செய்தற்குத் தகுதியான உறுப்புகளையுடையராகப் பெறுகையாலே
உண்டான உவகையராதல் ஆகிற பொருளை’ என்றபடி. இப்பாசுரத்திற்கு
நான்கு வகையில் அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘சங்கொடு சக்கரம்
வில் ஒண்மையுடை உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு சன்மம் பலபல
செய்து வெளிப்பட்டவன் சீர் பறவப்பெற்ற நான் ஒரு குறைவிலன்,’ என்று
கொண்டுகூட்டி முதல் அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘அரக்கர் அசுரரை
மாளப்பொருத’ என்றதிலே நோக்காக இரண்டாவது அவதாரிகை
எழுதப்படுகிறது. ‘சன்மம் பலபல செய்து வெளிப்பட்ட நன்மையுடையவன்’
என்றதிலே நோக்காக மூன்றாவது அவதாரிகை அருளிச்செய்கிறார்;
‘நன்மையுடையவன்’ என்றதிலே நோக்காக நான்காவது அவதாரிகை
அருளிச்செய்கிறார்.

இதர ஸ்தோத்ரம் பன்னுவதருக்கு தகுதி அற்ற கரணங்கள்
பகவத் ஸ்தோத்ரம் செய்ய கரணங்கள்
முடியானே போட்டிப் போட்டிக் கொண்டு அனுபவிக்க கோலி
பெ ரு விடாய் பட்டு கூப்பிட்டார்
சம்சாரிகள் உலக விஷயத்தில் கூப்பிட்டதை -கண்டவாறே
தமது இழவு -பேறாக தோன்றிற்று
ஆஸ்ரித -சம்சாரிகள் ஒத்த சஜாதீயனாக அவதரித்து –
கர்மவச்யர் போலே படாதன பட்டு -செஷ்டிதன்கள் -வடிவு அழகு -ஆபரண
சேர்த்தி அழகு -திவ்ய ஆயுத அழகு

இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘சன்மம் பலபல செய்து’ என்றுதனை
நோக்கித் ‘திவ்விய அவதாரங்களை’ என்றும், ‘மாளப்படைபொருத’
என்றதனை நோக்கித் ‘திவ்விய செயல்களை’ என்றும். ‘எங்கும் அழகு
அமர்’ என்பது போன்றவைகளை நோக்கி ‘வடிவழகை’ என்றும், ‘மட்டவிழ்
தண்ணம் துழாயான்’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தி’
என்றும், ‘சங்கொடு சக்கரம் வில்’ என்பன போன்றவைகளைத் திருவுள்ளம்
பற்றித் ‘திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும், ‘துக்கம் இல்
ஞானம்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘அகடித கடநா
சாமர்த்தியத்தை’ என்றும் அருளிச்செய்கிறார்.
முதல் பாசுரம் நிதான பாசுரம் –

அநேக அவதாரங்கள் செய்து -அவதார அடி அறிந்துபரத்வதில் போக மாட்டாமல்
ஜன்ம கர்ம மே திவ்யம் தானும் நெஞ்சு உருகி
பிறந்தவாறும் வித்தராய்
ஞானி -பகவான் -ஞானாதிகர் மூவரும்
பிரபன்னர்கள் ஞானாதிக்யத்தால் -மூவரும் உண்டே ஸ்ரீ வசன பூஷணம்
பரவசம் அடைந்து -ஞான ஆதிக்யம் -இருந்ததால் ஆழம் கால் பட ஹேது

எத்திறம் மோகிக்கிறார் ஒன்றிலே
பல பல பொறுக்க மாட்டாரே
கர்ம வசய பிறவிக்கு எல்லை கண்டாலும் கிருபை அடியாக அவதாரம்
எல்லை இல்லையே
அனுக்ரகதுக்கு அவதி இல்லையே -பல பல என்கிறார் –
தானே சொல்லப் புக்கிலும் பஹு
தேவாதி யோநி -அவாந்தர பேதம் -மீன் ஆமை
வமான ஷத்ரிய மனுஷ்ய அவாந்தர
செய்து -ஆவிர்பாவம் அன்றிக்கே -ஏறி உட்காராமல்
பன்னிரண்டு மாதம் கற்ப வாசம் செய்து
பன்னிரண்டு திங்கள் வயிற்றில்
புத்ரர்களில் ஒருவனை பிதாவாக கொண்டு
அவன் சொன்னபடி கேட்டு
அடங்கி நின்று -செய்து
ஸு கார்யம் -பிள்ளையாக பிறந்து -செய்து
வெளிப்பட்டு -அடங்கி வைத்ததை காட்டி
உபநிஷத் கண்ணால் காண முடியாது
கண்ணுக்கு இலக்காக்கி
சகல மனுஷ –
நிதி கண்டு எடுப்பாரைப் போலே
எடுத்த பேராளன் நந்த கோபன் போலே
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் இதர சஜாதீயம் ஆக்கி
வந்து அவதரிக்கை

மாம்ச சஷுச்சால் காண முடியாதவிஷயத்தை கண்ணுக்கு இலக்காக்கி வெளிப்பட்டு
சங்கோடு சக்கரம் -பஞ்ச ஆயுதம்
பிரியாத -கச்சதா மாதுல குலம் போலே
ராஜா கருப்புடுத்தால் அந்தரங்கரும் கருப்புடுப்பார்
சங்கு சக்கர கதா தர அவதாரத்திலும்
அடியார் குழாம் களை உடன் கூட -பிரார்த்திக்க –
அதே போலே வந்து அவதரிக்கிறான்
ஒன்றே அமைந்து இருக்க –
ஒரு கொத்துக்கு ஒருவர் இன்றிக்கே அனைவரையும் –
ஒண்மை உடைய உலக்கை -அறிவு உடைய
கருது இடம் பொருதும் ஞானாதிகர்
அழகிய வாள்
வாளுக்குரிய அடையாகிய ‘ஒள்’ என்பதனை மற்றை ஆயுதங்கட்கும்
கூட்டி, அதனாற்போந்த பொருளை அருளிச்செய்கிறார், ‘கையில் திவ்விய
ஆயுதங்களை’ என்று தொடங்கி. ஆக, ‘ஞானாதிகருமாய் அழகியாருமாய்
இருப்பர்’ என்றபடி.
அழகுக்கு உடல்
சம்சாரிகள் ஆயுதமாகபார்க்
திவ்ய சூரி ஆழ்வார்
கற்பக மரம் பணைத்து -வடிவும் திவ்ய ஆயுதங்கள்
புள்ளூர்ந்து இதுவும் சேர்த்தி அழகு
மேரு மலையில்
தேச விசேஷத்தில் -அனுபவிக்கும் அழகு
வன்மை உடைய அரக்கர் -விரோதம்
நெஞ்சு நெகிழாமல்
தன்னுடைய நெஞ்சு போலே அனைவரும் என்று இருக்கிறார் –
நினை தோறும் நெஞ்சு உருகும்
‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு நெடிந்துகும்!
வினைகொள்சீர் பாடிலும் வேம்எனது ஆருயிர்!
சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை என்னப்பா!
நினைகிலேன் நான்உனக்கு ஆட்செய்யும் நீர்மையே!’
கானா விடில் ஈச்வரோஹம்
கண்டால் -எழுது வாங்குதல் செய்கை அன்றி எதிரிட்டே போகும் வன்மை
அழகுக்கு இலக்காய் வாழ மாட்டாமல் அன்புக்கு இலக்காய்
சங்கல்பத்தால் செய்யாமல் -அவதரித்து
தொழும்பு -சுடர் சோதி மறையாதே
செய்து அசுரர் மாளப்

அக்னி சந்தரன் -பசு ஹிம்சை -பிராய சித்தம்
குறை இலன் என்கிறார்
அறியாது இல்லை
பாசுரம் இட்டு நிலம் இன்றி
நம்மில் ஒருவன் சிசுபாலன் போலே வையாமல்
அர்ஜுனன் போலே விஸ்வரூபம் கண்டு முழுகுதல்
குறை இன்றி -பிரமத்துடன் கூட
சகா –
மித்ரென சக போஜனம் -அவனையும் சேர்ந்து உன்ன வில்லை
கூட அனுபவம் –
அவனை போலே அனுபவம்
தன்னுடைய குணங்கள் அனுபவித்து தானே ஆனந்தம் அடைவது போலே

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading