திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நின்றுநின்று பலநாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்ச்
சென்றுசென் றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவிஆயி னேற்கு
என்றும்என் றும்இனி மற்றொரு வர்கவி ஏற்குமே?

பொ-ரை : ‘காலமுள்ள வரையிலும் இடைவிடாதே நின்று இன்ப துன்பங்களை அனுபவிக்கின்ற இச்சரீரத்தை நீங்கிச் சென்று, பல காலம் கழிந்த பின்னராயினும் நம்மைக் கண்டு பிறப்பினைஇவர்கள் நீக்க வேண்டும் என்று நினைத்துப் படைக்குந்தோறும் பொருந்தி உலகத்தைப் படைத்தவனுடைய கவியான எனக்குக் காலம் உள்ள வரையிலும் மற்று ஒருவரைக் கவி பாடுகை தகுமோ?’ என்கிறார்.

வி-கு : ‘சென்று சென்றாகிலும் கண்டு, நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய், சன்மம் கழிப்பான் எண்ணி, ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு’ எனக் கூட்டுக. கண்டு நீங்கிப் போய்ச் சன்மம் கழித்தல், சேதனர் தொழில். எண்ணுதல், இறைவன் தொழில். ‘எண்ணிப் படைத்தான்’ என்க.

ஈடு : பத்தாம் பாட்டு. 1‘சர்வேசுவரன் கவியான எனக்குப் பிறரைத் துதிக்கும் உறுப்பு ஏற்றது அன்று,’ என்கிறார்.

பல நாள் நின்று நின்று – பல காலம் 2இடைவிடாதே. உய்க்கும் – செலுத்தும். என்றது, ‘இவ்வாத்துமாவுக்கு விரோதமாக நடத்தும்’ என்றபடி. இவ்வுடல் – 3கூற்றம் கண்டாற் போன்று அச்சத்திற்குக் காரணமாய் இருக்கிறபடி. 4இவ்வுடல்’ என்றதனால் இப்பொழுது இருக்கிற சரீரத்தையும், இதனைப் போன்ற முன்புள்ள சரீரங்களையும் நினைக்கின்றார். ‘முன்புள்ள சரீரங்களையும் ‘இவ்வுடல்’ என்றதனால் சொல்லும்படி என்?’ என்னில், முன்புள்ள சரீரங்களும் இவ்வுடல் போலே இடையீடு இன்றி ஒரே அனுபவம் உள்ளவனவாகத் தோன்றுகிறதாயிற்று இவர்க்கு.

நீங்கிப் போய் – விட்டுப் போய். சென்று சென்றாகிலும் – ஒன்று அல்லா ஒரு பிறவியிலேயாகிலும். கண்டு – நம்மை இவன் கண்டு. சன்மம் கழிப்பான் எண்ணி – பிறவியின் சம்பந்தம் அறும்படி செய்ய வேண்டும் என்று நினைத்து. அன்றிக்கே, ‘சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி’ என்பதற்கு, ‘நெடுங்காலம் கூடவாகிலும் நம்மை அறிந்து இவை பிறவிகளிற் புகாதபடி பண்ணவேண்டும் என்று சிந்தித்து’ என்று பொருள் கூறலுமாம். இப்பொருளுக்கு, ‘சென்றுசென்றாகிலும்’ என்பதனைஒரு சொல் நீர்மையதாகக் கொள்க. ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் – 1‘சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா’ என்கிறபடியே, ஒருகால் படைத்துப் பலியாவிட்டால் சோம்பிக் கைவாங்காதே ஒருப்பட்டு ஒருப்பட்டு உலகங்களைப் படைத்தவனுடைய; கிருஷிகன் ஒருகால் பயிர் செய்து, பதர்த்தால் பின்பும் பயிர்தன்னையே செய்யுமாறு போன்று, இவனும் ‘ஒருநாள் அல்லா ஒரு நாளாலும் ஆம்’ என்றே அன்றோ படைப்பது?

‘இறைவனைக் கிருஷிகனாகவும், உலகத்தை வயலாகவும் கூறலாமோ?’ எனின், 2‘பத்தி உழவன் பழம்புனமே’ அன்றோ இது? 3ஒரு நாள் அல்லா ஒரு நாளாகிலும் நம்மை அறிந்து, பல நாளும் இடைவிடாதே இவ்வாத்துமாவுக்கு விரோதமாக நடத்துகிற இச்சரீரத்தை விட்டுப்போய், இனி இவ்வாத்துமாக்கள் பிறவாதபடி பண்ண வேண்டும் என்று நினைத்து ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் ஆயிற்று. உலகம் படைத்தான் கவி ஆயினே்ற்கு – 4அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷிபலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு. என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?

‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில், பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவுதானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ? ஒரு நாளிலேயே பலிக்குமதுஎன்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் 1‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும், 2‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப்பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம். 3‘வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல். அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்

கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு
வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப்
பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும்
புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று
தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு
வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது,
பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே,
‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று தொடங்கிக் ‘கவி பாடுகை
போருமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.

எம்பெருமானுக்கு என்றே கவி
உடல் நீங்கி தன்னிடம் அடைய
படைக்கிறான் -விழுந்தாலும் மீண்டும் படைக்கிறான் –
நின்று நின்று -அநாதி காலம்
பாதகம் செய்யும்படி இவ்வுடல் -கூற்றம் கண்டது போலே பயம் –
வர்த்தமான சரீரம் முன்புள்ளவைகள் -போகியாய் தொடருமே இவருக்கு
இதை நீக்கி -விட்டு போய்
சன்மம் சம்பந்தம் அடியுடன் போக்க உலகம் படைக்கிறான்
அவனும் கூட வந்தான்
ஒன்றி ஒன்றி -பொருந்தி இருந்து
ஒரு கால் -சோம்பிக் கை வாங்காதே ஒருப்பட்டு மீண்டும்
பக்தி உழவன் இவன்
சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா’- பெரிய திருவந். 18.என்கிறபடியே
‘பத்தி உழவன் பழம்புனமே’ -2. நான்முகன் திருவந். 23.
அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷிபலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு. என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே

காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?
‘கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு
வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப்
பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும்
புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று
தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.
அவன் சொவ்ஹார்தம் அன்றோ இப்படி பலித்தது
சென்று சென்றாகிலும் அவன் சங்கல்பம் -சர்வ முக்தி பிரசங்கம் வாராமல்

வேறு சிலர் கவி பாடேன்
அன்வயம் கொள்ளேன்
படைத்தான் கவி -என்றவாறே –
வேத சாம்யம் -வேதம் தமிழ் செய்த மாறன்
நாயனார் ஆழ்வார் திருவாக்கே வேதம்
அபௌ ருஷேயம் வேதம்
இது ஆழ்வார் அருளி –
படைத்தான் கவி என்றவாறே
பூர்வ கல்ப விஷயம் போலே ஸ்ருஷ்டிக்கிறான் எதா பூர்வம்
திருவாய்மொழியும் எதா பூர்வ கல்பனம்
வெளிப்படுத்த கருவி வியாசர் வேதம் வெளிப்படுதியதியது போலே
நினைவில் வைத்து வெளி இட்டான்
உயர்வு நலம் சப்தம் உண்டாக்க வில்லை
இருக்கும் சப்தம் தானே வெளி இட்டார்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading