வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப் பிரான்எனக் கேஉளன்;
சாய்கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீகண்டு கொள்என்று வீடும் தரும்நின்று நின்றே.
பொ-ரை : ‘வாயால் மனிதர்களைப் பாட வந்த புலவன் யான் அல்லேன்; ஆராயப்பட்ட குணங்களைக் கொண்ட வள்ளலாகிய ஆழிப்பிரான் எனக்கே இருக்கின்றான்; ஒளியையுடைய இவ்வுலகத்தில் இன்பத்தையும் கொடுத்து, பரமபதத்தையும் நீ கண்டு கொள்வாய் என்று கைங்கரிய சுகத்தையும் முறையாகக் கொடுப்பான்,’ என்கிறார்.
வி-கு : கவியேன் – கவியைப் பாடுகிறவன்; புலவன். ‘ஆய் சீர் கொண்ட’ என் மாறுக. ‘சாய்’ என்பது, ‘சாயை’ என்பதன் திரிவு; சாயை – ஒளி. ‘வீடு’ என்பது, ஈண்டு ஆகுபெயராய்க் கைங்கரியத்தைக் காட்டிற்று. ‘நின்று நின்று தரும்,’ என மாறுக.
ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘பெருவள்ளல் ஆனவன் என் கவிக்குத் தன்னை விஷயமாக்கி வைத்த பின்பு, மற்றையோரைத் துதித்தற்கு அதிகாரி அல்லேன்,’ என்கிறார்.
வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் – 2வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர். அவன் தன்னைஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு புல்லரைக் கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன்; 1‘நான் பிறரைக் கவி பாடினால் என்னைப் படைத்ததனால் ஆய பயனை அவன் பெற்றானாம்படி என்? படைப்பிற்குப் பயன் பகவானை அடைதலேயோ?’ எனின், 2தன்னை உத்தேசித்தே அன்றோ படைப்பு? 3‘புத்திரனே! அழகாலே துவக்க வல்ல ஸ்ரீ ராமபிரானிடத்தில் மிக்க பற்றுதலையுடைய நீ, காட்டில் வசிக்கும்பொருட்டே உண்டுபண்ணப்பட்டாய்;உடன் பிறந்தவனான ஸ்ரீ ராமபிரான் சீதையோடு போகும்போது குறிக்கோள் இல்லாமல் இராதே,’ என்றாள் தேவி சுமித்திரை. ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் எனக்கே உளன் – ‘நீர் ‘அவனைக் கவி பாடக் கடவேன்’ என்று இருந்தாலும், 1‘அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வாக்குகள் பேச முடியாமல் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே, ‘வேதங்களும் பேச முடியாமல் மீளும்படியான பரமன் அன்றோ அவன்? அவனைக் கவி பாடப் போமோ?’ என்ன, ‘அவன், 2‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே, தன்னை எனக்கு ஆக்கிவைத்தான்; எனக்குக் கவி பாடக் குறை என்?’ என்கிறார்.
ஆய் கொண்ட சீர் – ஆராயப்பட்ட சீர். என்றது, குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாக இருக்கிற கல்யாண குணங்கள். வள்ளல் – பரம உதாரன். ஆழிப்பிரான் – 3இக்குணங்களைக் காத்து ஊட்ட வல்ல கருவியை உடையவன். எனக்கே உளன் – என் கவிக்கே தன்னை விஷயம் ஆக்கினான். ஆழிப்பிரான் – 4தானும் தன் ஆயுதமுமாய் இருக்கிற இருப்பை நான் கவி பாடலாம்படி எனக்கு விஷயம் ஆக்கினான். 5‘வலக் கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை, மலக்கு நா உடையேற்கு மாறு உளதோ இம்மண்ணின் மிசையே’ என்பர் பின்னும்.
சாய்கொண்ட இம்மையும் சாதித்து – ஒளியையுடைத்தான இவ்வுலக சுகத்தையும் தந்து. சாய் – ஒளி. கொள். கொள்கை – உடைத்தாகை. மோக்ஷசுகத்திலும் நன்றாம்படி இவ்வுலகத்திலே தன் அனுபவமே வாழ்க்கையாம்படி செய்து தந்தான் ஆதலின், ‘சாய் கொண்ட இம்மை’ என்கிறார். இவ்வுலக இன்பங்களோடு மேலுள்ளவற்றோடு வாசியற அவனே சாதனமாக இவர் பெறுபவராதலின் ‘இம்மையும் சாதித்து’ என்கிறார். வானவர் நாட்டையும் – அடையக்கூடிய தேசம் நித்தியசூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்; ஆதலின், ‘வானவர் நாடு’ என்கிறார். இதனால், ஸ்ரீ வைகுண்டநாதன் பரமபதத்தில் குடியிருப்பாரைப் போன்று இருக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி. 1‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள்’ என்னுமதுவும் தன் பக்கலிலேயாய் இருக்கிறது. நீ கண்டுகொள் என்று – 2‘தேவரீர், பொக்கிஷத்தையும் பசுக்கொட்டிலையும் நகரத்தையும் பலத்தையும் பார்த்தருள வேண்டும்; தேவரீருடைய ஒளியால் எல்லாம் பத்துமடங்கு அதிகமாக என்னால் செய்யப்பட்டது,’ என்கிறபடியே, ஸ்ரீ பண்டாரத்தை வளர்த்து வைத்து, பெருமாள் மீண்டும் எழுந்தருளின போதே ஸ்ரீ பரதாழ்வான் காட்டிக் கொடுத்தாற்போலே வானவர் நாட்டை நீ கண்டுகொள்’ என்கிறார்.
‘‘வானவர் நாடு’ என்று வைத்து, ‘நீ கண்டுகொள்’ என்று இவனுக்கு முன்பே உள்ளது ஒன்றனைக் காட்டிக்கொடுத்தாற்போன்று சொல்லக் கூடுமோ?’ எனின், முன்பே அங்கு உளரான நித்தியசூரிகளோடு இன்று புக்க இவனோடு வாசி அற்று இருக்கின்றான் ஆதலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார். ‘அதற்கு அடி என்?’ என்னில், ‘அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றைக் காற்கடைக் கொள்ளும் பசுவின் தன்மையைப் போன்ற வாத்சல்யத்தின் மிகுதியே காரணம்’ என்க. 3‘ஏ வீரனே! நீ சிறிது வருத்தமுற்று இருந்தால் சீதையால்தான்எனக்கு என்ன பயன்?’ என்றார் பெருமாள். என்று – இப்படி அன்போடே சொல்லி. வீடும் தரும் – 1கைங்கரிய சுகத்தைத் தரும். ‘முக்தி: மோக்ஷோ மஹாநந்தா:’ என்பது நிகண்டு.
நின்று நின்றே – 2‘இப்படி முழுக்கக் கொடுத்தாலும் ‘இவனுக்கு நாம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்று 3திரௌபதியானவள் நீண்ட தூரத்தில் வசிக்கின்ற என்னை நினைத்துக் ‘கோவிந்தா!’ என்று அழுதாள் என்பது யாது ஒன்று உண்டோ, அது வட்டியின்மேல் வட்டி ஏறின கடன் போலே என்னுடைய மனத்தினின்றும் நீங்கவில்லை,’ என்கிறபடியே, திருவுள்ளத்திலே மிறுக்குப்பட்டிருக்கும்,’ என்று நம் ஆசாரியர்கள் நிர்வஹிப்பார்கள். அன்றியே, ‘சொன்னவற்றை அடைவு அடைவே தரும்’ என்று கூறுவாறும் உளர். என்றது, ‘முதலில், இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பித்துப் பின்பு ஒரு தேச விசேஷத்தைக் காட்டிக் கொடுத்துப் பின்பு கைங்கரிய சுகத்தைக் கொடுக்கும்,’ என்றபடியாம். அன்றியே, ‘இவ்வுலகத்தில் தன் அனுபவத்தின் நிறைவையும், பேறாகிய பரமபதத்தையும், அங்கே கைங்கரிய சுகத்தையும் தருமிடத்தில், பொறுக்கப் பொறுக்கத் தரும்’ என்னலுமாம்.
பாடுவது வாயைக்கொண்டேயாய் இருக்க, ‘வாய்கொண்டு’ என்று
விசேடித்ததற்கு ரசோக்தியாக பாவம் அருளிச்செய்கிறார், ‘வாய் வந்தபடி’
என்று தொடங்கி. இது சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக வாயினைப்
படைத்தபடியே’ என்பது நேர்ப்பொருள்; சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக
வாயினைப் பெற்று என்பது வேறும் ஒரு பொருள். இறைவனைத்
துதிப்பதற்காகவே ‘நா’ படைக்கப்பட்டது என்பதனை.
‘மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்துஆ ரணம்முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே?
நாராய ணாஎன்னா நாஎன்ன நாவே?’
(சிலப். ஆய்ச். குர.)
என்பதனான் உணரலாகும்.
ஸ்ரீராமா. அயோத். 40 : 5. இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா
அருளிச்செய்த பொருள் பின் வருமாறு: ‘ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய
– ‘ஐயரையும் ஆச்சியையும் அநுவர்த்தித்துப் பெருமாள் காடேற
எழுந்தருளா நின்றார்; நானும் அவரை அநுவர்த்தித்துப் போகிறேன்,’
என்று இளைய பெருமாள் அறிவிக்க, ‘உமக்கு முடி வேணும் என்று
அபேக்ஷை உண்டாகில், முடி சூடுகைக்கு யோக்கியனாயிருப்பான் ஒருவன்
வேணும்’ என்றதற்கு ஈடாக நோன்பு நோலேனோ? அவரை
அநுவர்த்திக்கைக்காக அன்றோ நான் உம்மைப் பெற்றது? ஸூஹ்ருஜ்ஜநே
ராமே – ஸ்வநுரக்த: – உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு
நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று
உண்டோ? அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை
செய்யுமவரிறே. அன்றிக்கே, ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே – ‘கருமுகை
மாலையை வெயிலிலே இட்டாற்போலே, பெருமாள்தம் சௌகுமார்யம்
பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலே போகாநின்றார்; என்
புகுகிறதோ!’ என்று வயிறு எரிந்திருக்கின்ற ஸூஹ்ருஜ்ஜநங்களுக்கு
நல்லீரிறே. ‘ஸூஹ்ருஜ்ஜனம்’ என்றது, திருத்தாயார் தொடக்கமான படை
வீட்டில் உள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித்
தாரீர்’ என்றுமாம். ராமே – நடக்கை மிகையாம்படி, வெறுமனே
இருந்தாலும் ஆகர்ஷ்கமான வடிவழகையுடையவர், ராமே ப்ரமாதம்
மாகார்ஷீ: – ‘பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த்த:’ (ஸ்ரீராமா. பாலா. 18 : 27.)
என்று, அவதார காலமே தொடங்கி அந்வயத்தில் தரித்து வியதிரேகத்தில்
தரியாதவர்க்கு இன்றாக ஒரு பிரமாதம் புகுருகைக்கு ஒரு சங்கை
இல்லையிறே; சம்பாவிதமானது ஒன்றைச் சொல்லுகிறாளாக வேணுமே.
பிராதரி கச்சதி – அவர் உம்முடைய முன்னே நடப்பர் கிடீர்; அவ்வழகிலே
கண்வைத்து, நீர் அதிகரித்ததற்குச் சோர்வு பிறவாதபடி குறிக்கொள்ளும்.
அக்ரத: ப்ரயயௌ – (ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) நடைச் சக்ரவத்துப்
பிடிக்கலாம்படி. ‘ஆடல் பாடல்’ இத்யாதி.’ இப்பாசுரம், பெரியாழ்வார்
திருமொழி, 3. 6 : 4.
நான் அல்லேன்
இல்லை சொல்லக் கூடாது
இதர ஸ்தோத்ரம் சோழ வல்லவர் இவரே
வாய் எதருக்கு வந்ததோ அதன் படி
நா வாயில் உண்டே -எம்பெருமானுக்கு ஸ்தோத்ரம் செய்ய
வாய் படைத்த பயம் செய்பவர் –
வன வாசத்துக்கு ஸ்ருஷ்டிக்கப் பட்ட இளைய பெருமாள் -சுமத்ரை வார்த்தை –
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்துஆ ரணம்முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே?
நாராய ணாஎன்னா நாஎன்ன நாவே?’
(சிலப். ஆய்ச். குர.)
என்பதனான் உணரலாகும்
நோன்பு நோற்கும் போதே -பிரார்திக்கும்போழுதே பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய
ஒழிவில் காலம் -பத்தாம் பாசுரம் இதே வியாக்யானம் –
வைத்த நாள் –
சூஹூர்ஜனே -பந்துக்கள் இடம் ப்ரீதி உடையவன் -நீ -என்கிறாள் அங்கே
நீர் தான் பரிவீர் -உபதேச நிரபேஷமாக செய்வீரே
இங்கு இருந்து அடிமை ருசி சொல்ல வேண்டாமே
செவி கண்ணாகா செய்வீரே
கவனமாக –
ஆதி செஷன் கட்செவி ஒரே கார்யம் செய்யும் அவதாரம் –
கருமுகை மாலையை வெய்யில் இட்டால் போலே பெருமாள் காடேற போக
பித்ரு அனுவர்தனம் -பந்துக்கள் துக்கிக்க
அத்தை போக்க நீரே வல்லீர் –
திருத்தாயார் தொடக்கமான -அனைவருக்காக்கா பெருமாளை நோக்கித் தர
ராமே -ராமயிதீதி ராம-நடக்கையே மிகை வெறுமனே அழகு
பிரமாதம் -ஆபத்தை -உண்டாக்காதே -உண்டாகும்படி நடக்காதே சொல்ல வேணுமா
அன்வயத்தில் தரித்து -பால்யா பிரவர்த்தி
தொட்டில் பருவம் பிடித்து -வ்யதி ரேகத்தில் தரியாமல் –
தொட்டில் -சமாப்தி காலம் வரை -துர்வாச சாபம் -நியமனம் மீறி உள்ளே விட –
நடைக்கு குடை பிடிக்கும் படி
நடைக்கு சக்கரவர்த்தி
கானகம் படி உலாவி -உலாவி -ஆடல் பாடல் வெட்கி தேவ பெண்கள் –
நடை அழகில் கண் வையாதே என்றாள் –
இளைய பெருமாளைப் போலே கைங்கர்யம் செய்வேன்
யான் பிறரை கவி பாடினால் ஸ்ருஷ்டி வ்யவர்த்தி ஆகுமே –
தனக்கு பிரயோஜனம் செய்ய ஸ்ருஷ்டி -பட்டர் ஸ்லோகம் –
அவனுடைய ஸ்வரூப ஸ்ததிக்கு
கவி பாட வேதமே போகாதே
மனசாலே அடைய முடியாமல் திரும்ப
அவன் பக்தாநாம் எனக்காக்கி தன்னை பிரகாசிக்கப் பண்ண
சீர்களை பக்தர்கள் பாட -ஆய் கொண்ட -சீர் பிரான் எனக்கே உளன்
ஹேய பிரத்யநீக கல்யாண குணங்கள் –
ஆய்ந்து எடுக்கப் பட்ட
வள்ளல் -சீரை ஔ தார்யதுக்கு
ஆழிப் பிரான் –
எனக்கு உளன் -எனக்கே உளன் –
தன்னை விஷயமாக்கினான்
மலக்கு நாவுடை
பிரார்த்திக்கும் பொழுதும் கூராழி வெண் சங்கேந்தி –
கவி பாடவும் சேர்த்தி உடன் விஷயம் ஆக்கி
வீடும் தரும் –
சாயக் கொண்ட இம்மையும் –
ஒளி உடைதான இஹ லோக சுகம்
இங்கே இருந்து கொடுக்கும் அனுபவம் அதை விட உயர்ந்த அனுபவம்
என்பதை காட்டுகிறார் -திருப்த பிரபன்னர் இல்லையே –
மோஷ சுகத்திலும் நன்றாம் படி -இங்கே பண்ணித் தந்தான் –
அச்சுவை பெறிலும் வேண்டேன்
திருவாசிரியம் இரண்டாம் பாசுரம் -அமுத வெள்ளத் தான் சிறப்பு விட்டு
நல்வீடு பெறினும் -கொள்வது நம் ஆழ்வார் ஆசைப்பட்டார்
பெரிய திருவந்தாதி -நின் புகளில் வைக்கும் தம் சிந்தை அதிலும் மற்றும் இனிதோ
நீ கொடுக்கும் வைகுந்தம் என்று கொடுக்கும் வான்
திருவிருத்தம் -விண்ணுளா ரிலும் சீரியர்
இங்கே இருந்து விஷயாந்தரங்கள் விட்டு பற்றுவதால்
இந்த லோகத்தில் இருந்து கொண்டு உண்ணும் சோறு என்று அவனை அனுபவிக்கும் சுகம் –
ஸு அனுபவமே யாத்ரையாக பண்ணிக் கொடுத்து
சாதித்து -அவன் தான் சாதகம்
ஐ ஹிக சுகத்துக்கும் பர லோக சுகத்துக்கும் இவனே சாதனம் என்கிறார் –
வானவர் நாடு –
இது அவன் நாடு இல்லையா –
தானும் குடி வந்தது போலே இட்ட வழக்காய் இருப்பான்
குடி இருப்பார் போலே ஆக்கிக் கொண்டு –
பிராப்தி தேசம் நித்ய சூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்
பிரம்பின்-சிறகின் -மடியின் கீழும் இருக்கும் தத்வம் –
ரஷிக்கும் படியான ராஜ்யத்தில் உள்ள ரிஷிகள் -வயம் ரஷ்யா
பகுத் விஷய -இவனே சொல்லிக் கொள்கிறான்
அந்த நாட்டையும் நீ கண்டு கொள் -என்கிறான் –
சொல்லி வானவர் நாட்டையும் தரும் –
பரத ஆழ்வான் காட்டிக் கொடுத்தால் போலே
பாதுகை வைத்து ஆண்டு –
வந்தபின்பு கஜானா கூட்டிக் கொண்டு பொய் –
தச பங்கு ஐஸ்வர்யம் ஆக்கிக் காட்டினான் –
அது போலே வானவர் நாட்டை பெருக்கி வைத்து இருக்கிறேன் காட்டிக் கொடுத்தான் –
பாரும் -முன்பு அங்கு உளனான நித்யர் உடன் வாசி அற -எம்பெருமான் அனுக்ரஹம்
அந்நீன்ற கன்று வாத்சல்யம் –
ஸ்ரீ ராமா. யுத். 41 : 4. இது, விபீஷணாழ்வானைப் பார்த்து ஸ்ரீ ராமபிரான்
கூறியது.
‘இந்நிலை விரைவின் எய்தாது இத்துணை தாழ்த்தி யாயின்
நன்னுதற் சீதை யால்என்? ஞாலத்தாற் பயன்என்? நம்பி!
உன்னையான் தொடர்வல்; என்னைத் தொடரும்இவ் வுலக மென்றால்
பின்னைஎன் இதனை நோக்கி விளையாடிப் பிழைப்பச் செய்தாழ்?’
என்றார் கம்பநாட்டாழ்வார்.
சுக்ரீவன் கிரீடம் பறித்து
வாத்சல்யம் -காட்டிய இடம் –
இன்று வந்த முக்தாத்மாவை நித்யர் விட உயர்வாக கருதுவதை
அனுஷ்டித்து காட்டிய பெருமாள் –
வீடும் தரும் -கைங்கர்ய சுகம் -மோஷம் மகா ஆனந்தம் -நிகண்டு –
நின்று நின்றே தரும் –
கொடுக்கும் பொழுதும் -இவன் செய்ததுக்கு ஈடாகா ஒன்றும் கொடுக்க முடியவில்லையே –
ரினம் பிரவிர்தம் போலே திரு உள்ளம் குறையாக
அடைவு அடைவே தருவான் தமிழன்
ஐகிக சுகம் -தேச விஷயம் காட்டி -கைங்கர்யம் –
அதவா –
சாத்மிக்க சாத்மிக்க தரும்
சாத்மிக போக பரதத்வம் நின்று நின்று –
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply