ஆவியே! ஆரமு தே;என்னை ஆளுடைத்
தூவிஅம் புள்ளுடை யாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்
கூவியும் காணப் பெறேன்உன கோலமே.
பொ-ரை : ‘எனது உயிரே! சுவை நிறைந்த அமிர்தமே! என்னை அடிமை கொண்டுள்ள சிறகையுடைய அழகிய கருடப் பறவையை உடையவனே! சுடர் பொருந்திய சக்கரத்தை உடையவனே! பாவியேனுடைய மனமானது புலம்பும்படி பல தடவை கூவியும் உன் கோலத்தைக் கண்டு அனுபவிக்கப் பெறுகின்றிலேன்,’ என்கிறார்.
வி-கு : ‘புலம்பக் கூவியும் காணப்பெறேன்,’ எனக் கூட்டுக. ‘ஆளுடை’ என்பது உடையானுக்கு அடைமொழி: புள்ளுக்கு அடைமொழியாக்கலுமாம்.
ஈடு : ஏழாம் பாட்டு. கரணங்களை ஒழியத் தம்முடைய இழவு சொல்லுகிறார். மக்களினுடைய இழவும் பசியும் சொன்னார் மேல்; 1இனி, தம் இழவும் பசியும் சொல்லுகிறார். இப்பாசுரத்தில், ‘நான் மஹாபாபி ஆகையாலே, நெஞ்சின் விடாயும் தீரப்பெற்றிலேன்; என் விடாயும் தீரப்பெற்றிலேன்,’ என்கிறார்.
ஆவியே – ‘காதல் கரை புரண்டு ஓடினும் அடையத்தக்கவன் ஆகிறான் இறைவன் ஆனால், வருந்துணையும் 2பாடு ஆற்ற வேண்டாவோ?’ என்ன, ‘பிராணனை விட்டிருக்கப் போமோ?’ என்கிறார் ‘ஆவியே!’ என்று. 3‘ஆவி ஆவியும் நீ’ என்கிறபடியே, இறைவன் அன்றோ ஆவி? ஆர் அமுதே – ஆர்ந்த அமுது; நிறைந்த அமுதம்; உள்ளுந்தோறும் தித்திக்கும் அமுது. 4அமுதிலும் ஆற்ற இனிய அமுதே அன்றோ? தேவசாதியினுடைய அமுதைக்காட்டிலும் வேறுபாடு தோன்ற ‘ஆர் அமுது’ என்கிறார். இவற்றால், 5தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருக்க, விட்டிருக்கப் போமோ?’ என்கிறார் என்றபடி.
என்னை ஆள் உடைத் தூவி அம் புள் உடையாய் – பெரிய திருவடி திருத்தோளில் இருக்கும் இருப்பைக்காட்டி என்னை எழுதிக்கொண்டவனே! அன்றிக்கே, ‘என்னை ஆளுடை’ என்பதனைப் 6பெரிய திருவடிக்கு அடையாக்கலுமாம். ‘ஆயின், திருவடியை ‘என்னை ஆளுடையவன்’ என்று கூறல் என் கருதி?’எனின், ‘இறைவனோடு சேர்க்குமவர்களுக்குத் தாம் அடிமை என்றே அன்றோ இவர் இருப்பது? இதனால், 1‘மற்றை அமுதத்தைக் கொண்டு வருமவனேகாணும், இவ்வமுதத்தையும் கொண்டு வருவான்,’ என்கிறார் என்பதும், ‘தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருப்பது ஒன்றைக் கொண்டு வந்து தருவார் உண்டாயிருக்க, ஆறி இருக்க விரகு உண்டோ?’ என்கிறார் என்பதும் பெறுதும். சுடர் நேமியாய் – அழகுக்கும் விரோதிகளை அழிப்பதற்கும் தானேயாக இருக்கும் கருவியை உடையவன்; இதனால், ‘வரும் வழியில் எவையாகிலும் தடைகள் உளவாகிலும் கைம்மேலே தீர்த்துக்கொண்டு வருகைக்குக் கருவி உண்டு,’ என்பதனைத் தெரிவித்தபடி.
பாவியேன் கூவியும் காணப் பெறேன் – 2‘ஆரே துயர் உழந்தார்?’ என்கிறபடியே, பகவத்விஷயத்தை ஆசைப்பட்டாரில் இழந்தார் இல்லைகண்டீர்; ஆதலால், கூவியும் காணப் பெறாத தாம் தம்மைப் ‘பாவியேன்’ என்கிறார். பாவியேன் நெஞ்சம் – 3‘நந்தன் பெற்றனன்; நல்வினை இல்லா நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே!’ என்கிறபடியே, ‘தமப்பனான சம்பந்தம் ஒத்திருக்க, புண்ணியம் செய்யாத என்னைக் கைப்பிடிக்கையால் அன்றோ ஸ்ரீ வசுதேவர் இழந்தது?’ என்று தேவகி கூறியதுபோன்று, எனக்குக் கரணமாய் இருப்பதனால் அன்றோ இது இழக்கவேண்டிற்று?’ என்பார், ‘பாவியேன் நெஞ்சம் புலம்ப’ என்கிறார். 1‘என்னுடைய தீவினைகள்தாம் காரணம்’ என்றாள் பிராட்டி. புலம்ப – நெஞ்சானது காணப்பெறாத இழவோடே கூப்பிட. ‘ஆயின், காணப்பெறாதது அண்மையில் இன்மையாலோ?’ எனின், அன்று; 2‘கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான்,’ என்னுமாறு போன்று, 3நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை அன்றோ நெஞ்சு காணப்பெறாமல் கூப்பிடுகிறது? பலகாலும் – 4ஒருகால் கூப்பிட்டார்க்கும் இழக்க வேண்டாத விஷயத்திலே பல கால் கூப்பிட்டும். கூவியும் காணப் பெறேன் – ‘ஒன்றில் விருப்பம் பெற்றேன் அல்லேன்; சொரூபம் பெற்றேன் அல்லேன்,’ என்பார், ‘கூவியும்’ என்கிறார்.
5‘இராக்கதர்களைக் கொன்று என்னை அழைத்துச் செல்வாராயின், அது அவருக்குத் தக்க செய்யலாம்,’ என்று இருக்கப் பெற்றேன் அல்லேன்; 6மடல் ஊர்ந்தார் பெற்ற பேற்றைப் பெற்றேன் அல்லேன். என் சொரூபத்தையும் அழித்தேன், அவன் சொரூபத்தையும் அழித்தேன். அவன் நீர்மையையும் அழித்தேன், என் அடிமைத் தன்மையையும் அழித்தேன். அவன் ஈசுவரத்துவத்தையும் அழித்தேன், என்னுடைய ஈசிதவ்யத்துவமும் போயிற்று. இனி, கொள்ள இருக்கிறார் யார், கொடுக்க இருக்கிறார் யார்? உன கோலமே – இரண்டு தலையையும் அழித்துப் பெற வேண்டும் விஷயத்தினுடைய சிறப்புச் சொல்லுகிறது. பிரிவு காலத்தில் கண்ணுறங்குதல், சூது சதுரங்கங்களோடே போது போக்குதல் செய்யலாம் விஷயமாகப் பெற்றேனோ? 1உண்டோ கண்கள் துஞ்சுதல்?’ என்றும், 2‘என் நினைந்து போக்குவர் இப்போது?’ என்றும் வருகின்றபடியே, கண்ணும் உறங்காதே போது போக்கவும் அரிதாய் அன்றோ இருப்பது?
இனி தமது இழவை சொல்கிறார்
ஆவியே பிராணனே அவன்
ஸ்வரூபம் வரும் வரை காத்து இருக்க முடியாதே
கனியை அடித்து பழுக்க வைக்க முடியாதே
ஆரமுதே ஆர்ந்த அமுதம்
உள்ளும் தோறும் தித்திக்கும் அமுதம்
அது ஒரு தடவை
இது சதா சேவ்யம்
அமுதிலும் ஆற்ற இனிய அமுதம் இவன்
அமுத கலசம் கொண்டு வரும் கருட ஆழ்வான்
அந்த அமிர்தம் கொண்டு வரும் அவனே காணும் இவனே கொண்டு வருவான்
பெரிய திருவடி தோளில் இருப்பை காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
அதவா -கருடனுக்கு விசேஷம்
புள் என்னை ஆளுடை -சேர்த்து வைப்பவரே சேஷி
தாரகமாய் போக்யமாய் இருப்பவரை கொண்டு வர இருக்க ஆறி இருக்க
சுடர் நேமியாய் அழகுக்கும் விரோதி நிரசனதுக்கும் தானே
கை மேலே தீர்த்து கொள்ள பரிகரம் உண்டே
பாவியேன் புலம்ப பல காலம் –
யாரே துன்புற்றார்
நெஞ்சம் -இழந்து
எனக்கு கரணமாகவே இது இழந்தது
நந்தன் பெற்றனன் -வாசுதேவன் இழக்க
பேராது நெஞ்சில் இருந்தாலும் –
பலகாலும் கூவியும் –
ஒரு காலும் கூப்பிட்டாலும் இழக்க முடியாத
கஜேந்த்திரன் தரௌபதி
அபிமதம் பெற்றேன் இல்லேன்
ஸ்வரூபத்தை உணர்ந்து ஆறி இருக்க வேண்டும்
வரதமாகவும் சுகமாகவும்
ஆற்றாமை மிக்கு கூக்குரல் இட்டு ஸ்வரூபம் கேட்டு அவனும் -வாராமல்
அபிமதம் ஸ்வரூபம் இரண்டும் இழந்து –
மடல் எடுப்பார் போலே செய்து பதறி ஸ்வரூபம் அழித்து
அவன் ஸ்வரூபம்
அவன் நீர்மை
அவன் சேஷித்வம்
அழை த்து
இனி கொள்ள கொடுக்க இருப்பார் யார்
சொத்து –
கோலமே -இரண்டு தலையும் அழிந்தாகிலும் பெற வேண்டிய விஷய வை லஷண்யம்
உண்டோ கண்கள் துஞ்சுதல்
நொடிப்பொழுதும் விட முடியாமல்
என் நினைந்து போக்குவார் பெரிய திருவந்தாதி
கார் கலந்த -மேனி -சீ ர் கலந்த சொல் -ஸ்ரீ ராமாயணம்
கை கந்த ஆழியான் சீர் கலந்த சொல் -ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ மகா பாரதம்
பார் கலந்த வல் விடறான் சீர் கலந்த சொலு -ஸ்ரீ விஷ்ணு புராணம்
பாம்பணையான் சீர் கலந்த சொல்-திருவாய் மொழி
இவை கொண்டே போது போக்க
கோலமே –
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply