வைம்மின் நும்மனத்து என்று யான்உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்ம னோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளு மவனும் நான்முக
னும்ச டைமுடி அண்ணலும்
செம்மை யால்அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.
பொ-ரை : ‘உங்களுடைய மனத்தின்கண் வைம்மின் என்று யான் உரைக்கின்ற மாயவனுடைய சிறப்பினை எம்மைப்போன்றவர்கள் சொல்லுவது என்? அது கிடக்க, தேவர்களை ஆளுகின்ற இந்திரனும் பிரமனும் சிவனும் அன்போடு அம்மாயவனுடைய திருவடித்தாமரைகளைத் தியானித்து ஏத்தித் திரிவார்கள்,’ என்கிறார்.
வி-கு : ‘வைம்மின்’ என்பதிலுள்ள ஐகாரம், ஒரு மாத்திரையாய் ஒலித்துக் குற்றெழுத்தாய் நின்றது. எம்மனோர் – உளப்பாட்டுத் தன்மைப்பன்மை. ‘செம்மை’ என்பது, ஈண்டு அன்பினைக் குறித்தது. ‘சிந்தித்து ஏத்தித் திரிவர்’ என்றதனால், மனம் வாக்குக் காயங்களைக் கூறியபடி.
ஈடு : நான்காம் பாட்டு. 2செருக்கு மிக்கவர்களான பிரமன் உருத்திரன் முதலாயினார்கட்கும் தடையின்றிக்கே புக்குப் பற்றும்படியாக இருக்கிற சீலகுணத்தைப் பேசுகிறார்.நும் மனத்தே வைம்மின் என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை – உம்முடைய மனத்திலே வையுங்கோள் என்று நான் சொல்லுகின்ற ஆச்சரியமான அழகு குணம் செயல்களையுடையனானவனுடைய சீலத்தன்மையை. அன்றியே, 1‘மாயவன் சீர்மை’ என்றதனால், ‘அதிகாரி புருஷர்களான பிரமன் சிவன் முதலாயினார்கள் எல்லாம் வந்து பற்றும்படியாக அன்றோ அவனுடைய பெருமை’ என்று, பற்றுவதற்கு உறுப்பாக அவனுடைய பரத்துவத்தைச் சொல்லிற்றாகவுமாம். எம் அனோர்கள் உரைப்பது என் – எம் போல்வார் சொல்ல வேண்டுவது என்? ‘நாங்கள் சொன்னவாறே பத்திரபாரவஸ்யத்தாலே சொன்னோம்,’ என்பார்கள். அது நிற்க – அது கிடக்க.
நாள்தொறும் வானவர்தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடியண்ணலும் செம்மையால் அவன் பாதபங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவர் – அதிகாரி புருஷர்களான பிரமன் சிவன் முதலாயினார்கள் எல்லாம் வேறு ஒரு பயனையும் கருதாதவரைப் போல வந்து பற்றும்படியன்றோ அவனுடைய சீலத்தன்மை இருப்பது? அன்றியே, ‘அதிகாரி புருஷர்களான பிரமன் சிவன் முதலாயினார்கள் எல்லாம் வந்து பற்றும்படி அன்றோ அவன் பெருமை?’ என்று பற்றுவதற்கு உறுப்பாக அவனுடைய பரத்துவத்தைச் சொல்லிற்றாகிறது.
நாள்தொறும் வானவர்தம்மை ஆளுமவனும் – தேவர்களைச் 2சனியும் புதனும் மெய்க்காட்டுக்கொண்டு அவர்கள் மிகுதி குறைகள் ஆராய்ந்து செல்லுகின்ற இந்திரனும். நான்முகனும் – பதினான்கு உலகங்களையும் படைத்தவனான பிரமனும். சடை முடி அண்ணலும் – தவவேடம் கிடக்கவும் ஈசுவரனாகச் செருக்குக் கொண்டவனான உருத்திரனும். அவன் பாத பங்கயம் நாள்தொறும் சிந்தித்து ஏத்தித் திரிவர் – வேறொரு பயனையும் கருதாதவர்களைப் போலே அவன் திருவடிகளை நினைந்து, அந்நினைவுவழிந்து புறப்பட்ட சொல் என்று தெரியும்படி ஏத்தி, அத்தாலே தரித்துக் கால்நடை தந்தாராய்ச் சஞ்சரியாநிற்பர்கள், 3‘பாடித்திரிவனே’ என்னுமாறு போலே. வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச்செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின், ‘செம்மையால் திரிவர்’ என்கிறது; ‘வேறொரு பயனை விரும்புகிற விருப்பமும் உள்ளே கிடக்கச்செய்தே அது இன்றித் தன்னையே பற்றினாரைப் போலே இருக்க, புகுவது புறப்படுவதாய்த் திரியும்படி அன்றோ அவன்படி இருக்கிறது?’ என்றபடி. செம்மை – செவ்வை; அதாவது, வேறொரு பயனையும் கருதாமை.
துர் அபிமானம் உடைய பிரமாதிகள் ஏத்தும் அவனை
மாயவன் சீர்மை –
நான் சொல்ல வேண்டுமா -பக்தி பாரவச்யத்தல் ஆழ்வார்கள் என்று கொண்டு
பிரயோஜனாந்த பரர்கள் பிரம ருத்ராதிகள் கூட சொல்லி
-அநந்ய பிரயோஜனர் போலே வந்து ஏத்தி
சீல வர்த்தையை –
ஆச்சர்யமான சௌந்த்ர்யாதிகள் –
ஆஸ்ரித உறுப்பான பரத்வம்
இரண்டு அர்த்தமும் காட்டி –
சீலம் பரத்வம் இரண்டையும் காட்டி –
நாள் தோறும்
மேலும்கீழும் அந்வயம்
கை காட்டி -செய்பவர்கள் -physical presence -மெய்க்காட்டு கொள்ளுதல்
வானவர் தம்மை ஆளுமவன் -சனியும் புதனும் -attendance -எடுக்கும் ருத்ரன்
வேண்டுவதை ஆராய்ந்து -ஆளுதல்
நான்முகன்
சடை முடி அண்ணல் சாதக வேஷம் இருக்கச் செய்தே -ஸ்வாமியாக கர்வித்து இருக்கும் –
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து –
நெஞ்சில் பிரயோஜனம் கிடக்க செய்தே அநந்ய பிரயோஜனர் போலே -செம்மையால் –
மீண்டும் படைக்கும் தொழில் பெற வேஷம்
பாவ தோஷம் கிடக்க செய்தேயும் –
அவர்களுக்கும் அனுக்ரகம் செய்பவன் –
சிந்தித்து -திரியும்படி -அவன் படி இருக்கும் –
ஏத்தி அத்தாலே தரித்து சஞ்சரியா நிற்ப்பார்கள்
பாடி திரிவனே பாடி ஆகாரம் தாரகம் திரிய
அது போலே இவர்களும்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply