திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-6-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பரவி வானவர் ஏத்த நின்ற
பரம னைப்பரஞ் சோதியைக்
குரவை கோத்த குழக னைமணி
வண்ண னைக்குடக் கூத்தனை
அரவம் ஏறிஅ லைக டல்அம
ருந்து யில்கொண்ட அண்ணலை
இரவும் நண்பக லும்வி டாதுஎன்றும்
ஏத்து தல்மனம் வைம்மினோ.

    பொ-ரை : ‘நித்தியசூரிகள் துதித்து ஏத்தும்படி நின்ற மேலானவனை, மேலான ஒளியுருவனை, குரவைக்கூத்தை ஆடிய இளமைப் பருவமுடையவனை, நீலமணி போன்ற வடிவையுடையவனை, குடக்கூத்து ஆடியவனை, அலைகளையுடைய திருப்பாற்கடலிலே ஆதிசேஷன்மேலே ஏறிப் பொருந்திய யோகநித்திரையை மேற் கொண்ட அண்ணலை, நல்ல இரவும் நல்ல பகலும் என்றும் விடாமல் துதித்தலை மனத்தில் வைம்மின்,’ என்கிறார்.

    வி-கு : பரவுதல் – துதிக்கும் முறையில் நின்று துதியாமை; ‘பரவசப்பட்டுத் துதித்தல்’ என்றபடி. குழகு – இளமை; குழகையுடையவன் குழகன்; ‘குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர்’ என்பது வில்லி பாரதம். ‘இடவல குடவல’ என்ற பரிபாடற்பகுதியும், ‘ஆய்ச்சியரோடு குரவை கோத்தலால் அவர்க்கு இடமும் வலமும் ஆயினோய்! கூத்தாடுதற்கு எடுத்த குடத்தினையும் பகைவரைக் கொல்லுதற்கு எடுத்த அலப்படையினையுமுடையோய்!’ என்ற அதனுரையும் இப்பாசுரத்தின் இரண்டாமடியோடு ஒப்பு நோக்கத் தக்கன.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘மேற்பாசுரத்திற்கூறிய இராமாவதாரம் பரத்துவம் என்னும்படியான கிருஷ்ணாவதாரத்திலே பற்றுங்கோள்,’ என்கிறார்.பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை – முறைகேடாக நித்திய சூரிகள் ஏத்த, அத்தாலே 1சமாதிக தரித்திரனாய் நின்றவனை. அன்றியே, ‘நித்தியசூரிகள் ஏத்தினாலும் அளவிட முடியாதபடி அவ்வருகாய் நின்றவனை’ என்றுமாம். பரஞ்சோதியை – அவர்கள் ஏத்த, அதனாலே ஒளியை உடையவனாயிருக்கிறவனை; என்றது, 2‘பரமபதத்திலே இருக்கின்ற நித்தியசூரிகளும் துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்,’ என்கிறபடியே, அவர்கள் ஏத்துமது தன் பேறாக நினைத்து, அது தன் வடிவிலே தோன்ற இருக்கின்றமையைத் தெரிவித்தபடி. 3‘பரஞ்சோதி என்னும் சொல்லின் பொருளான பரம்பொருள்’ என்பது உபநிடத வாக்கியம். ‘ஆயின், இவர்கள் ஏத்துதல் எதற்காக?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தைப் பண்ணுகை அடியார்களாயுள்ள இவர்களுக்குச் சொரூபம்: ஆதலின், ஏத்துகிறார்கள். குரவை கோத்த குழகனை – நித்தியசூரிகளோடு செய்யும் செயல்களை ஆயர் பெண்களோடு கலக்கும் இடத்தில், வாசி அறக் கலக்க வல்லவனை. குழகன் – பவ்யன். மணி வண்ணனை – அவர்களை வசீகரிக்கைக்கும் மருந்திடும் பரிகரத்தை உடையவனை; ‘நீல மணி போலே சிரமத்தைப் போக்குவதாய் உள்ள விக்கிரஹத்தை உடையவன்’ என்றபடி. குடக்கூத்தனை – திருக்குரவைக்கூத்தில் சேராதவர்களும் இழக்க ஒண்ணாதபடி மன்றிலே தன்னுடைய வடிவழகினை 4முற்றூட்டாக அநுபவிப்பிக்குமவனை.

5அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை – குடக்கூத்து ஆடின சிரமம் ஆறும்படிக்கு ஈடாகப்போய்த் திருப்பாற்கடலிலே சாய்ந்தருளினபடி. தன் சந்நிதானத்தாலே (அண்மை) கிளர்த்தியையுடைத்தாய் இருத்தலின், ‘அலைகடல்’என்றும், நாய்ச்சிமாராலும் உணர்த்த ஒண்ணாதிருத்தலின் ‘அமருந்துயில்’ என்றும், பாம்பினைப் படுக்கையாக உடைமையால் வந்த முதன்மையாகிய உறைப்பை உடையவனாதலின் ‘அண்ணலை’ என்றும் அருளிச்செய்கிறார். இரவும் நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ – 1‘காலம் நடையாடாத தேசத்தில் அனுபவத்தை அன்றோ காலம் நடையாடும் தேசத்திலே நான் உங்களை அனுபவிக்கச் சொல்லுகிறது?’ என்கிறார். ஏத்துகைக்கு ஈடான காலம் ஆகையாலே ‘நல் இரவும் நன்பகலும்’ என்கிறார். 2‘துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே ஆதல் வேண்டும் என்பார், ‘என்றும் ஏத்துதல்’ என்கிறார். ‘நீங்கள் அங்கே நெஞ்சை வைக்குமித்தனையே வேண்டுவது; விஷயம் தன்னடையே கொண்டு முழுகும்,’ என்பார், ‘மனம் வைம்மினோ’ என்கிறார்; ‘நீங்கள் ஏத்த என்று ஒருப்படுமித்தனையே வேண்டுவது; பின்னை உங்களுக்கு உபதேசிப்பார் வேண்டா,’ என்றபடி.

3‘நித்தியசூரிகள் ஏத்தும் விஷயத்தை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? அறப் பெரியவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? நீங்கள் ஏத்துகிற இது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்கிறவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? உங்களுடைய விலக்காமையே பற்றாசாக வந்து கலக்குமவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? 4யாதாயினும் நேர்ந்து அணுக வேண்டும் வடிவழகையுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது? சேஷசயனத்தையுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது? உங்களுடைய சேர்க்கையாலே செருக்கியிருக்கிறவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது? ஒரு கால நியதி உண்டாய் இருக்கின்றீர்களோ? ஏத்துகைக்குச் சாதனம் இல்லாதவர்களாய்த்தான் இருக்கின்றீர்களோ? 1அதில் ஒரு அருமை உண்டாய்த்தான் இருக்கின்றீர்களோ? ஆனபின்னர், விஷயங்களிலே ஓடித்திரிந்த மனத்தினை மீட்டு இவ்விஷயத்திலே வைக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.

சமாதிக தரித்திரன் – ஒத்தாரும் மிக்காரும் இலையாய மாமாயன். ‘பரமன்’
என்பதற்கு இரண்டு பொருள்: ஒன்று, ‘ஏத்துவதனாலே பரமன்’ என்பது;
மற்றொன்று, ‘ஏத்தினாலும் அதற்கும் அப்பாற்பட்டவன்’ என்பது.

பாசுரம் முழுதினையும் திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார், ‘நித்திய
சூரிகள்’என்று தொடங்கி. ‘பரவி வானவர் ஏத்த நின்ற’ என்றதனை
நோக்கி, ‘நித்தியசூரிகள்’ என்று தொடங்கும் முதல் வாக்கியம் எழுகின்றது;
‘பரமனை’ என்றதனை நோக்கி, ‘அறப்பெரியவனை’ என்ற இரண்டாம்
வாக்கியத்தை அருளிச்செய்கிறார்; ‘பரஞ்சோதியை’ என்றதனை நோக்கி,
‘நீங்கள் ஏத்துகிற’ என்று தொடங்கும் வாக்கியத்தை அருளிச்செய்கிறார்.
இங்ஙனமே ஏனையவற்றையும் பகுத்துக்காண்க.

4. ‘யாதாயினும் நேர்ந்து அணுக வேண்டும்’ என்றது, ‘யாதாகிலும் ஒன்றைச்
செய்தாயினும் கிட்ட வேண்டும்’ என்றபடி. ‘யாதானும் ஒன்று அறியில்’
என்னும் பாசுரத்தை அடியாகக் கொண்டு எழுந்தது இது. (பெரிய
திருவந். 33.)

ராமாவதாரம் பரத்வம் என்னும்படி கிருஷ்ண அவதாரம் எளிமை எல்லை
பத்துடை அடியவர்க்கு எளியவன் -அனுபவிக்கிறார் –
பரவி வானவர் ஏத்த நின்ற பரமன் பங்கய தடம் கண்ணனை
குரவை கோத்த குழகன் குடக் கூத்தன் –
இரவிலும் பகலிலும் விடாதுஎன்றும் ஏத்த
பரவி ஏத்த க்ரமம் இன்றி
சம அதிக தரித்திரன் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
பரிச்செதிக்க ஒண்ணாத நித்யர் ஏத்தினாலும் -அயர்வற மரர்கள் அதிபதி
யானைக்கு தொட்டு கொள் தொட்டு கொள் என்னலாம் படி -பரமன்-
மேம்பட்டவன் இல்லாதவன் -பர ம
பரம் ஜோதி ஏத்த ஏத்த உஜ்ஜ்வலம் பெற்று –
ஏத்துமதும் தன் பேறாக -வடிவிலே தோற்றும்படியாக இருப்பவன் –
சேஷிக்கு அதிசயம் விளைக்கை சேஷ பூதனுக்கு ஸ்வரூபம்

முன்பு இல்லாத பெருமை கிட்டுமா ஏத்தினால் –
இவன் ஸ்தோத்ரம் பண்ணாத குறை தீர்ந்தால் வருமே
ஜீவாத்மா அனைவரும் பிள்ளைகள் தானே –
வஸ்து கொடுத்து சந்தோஷம் இல்லை -பாவத்தால் -உண்டே
குரவைகொத்த குழகன் இடைப் பெண்கள் உடன் நித்யர் போன்ற பரிமாற்றம்
வாசி யற -குழகன் பவ்யன் –
குழை தல் உடையவன் குழகன் -குழை அடிக்கிறவன் -உசத்தியாக மேல் இடத்தில் வைத்து –
பெயர் சொல் குழைவு உடையவன்
மணி வண்ணன் வசீகரிக்க மருந்து மணி வண்ணன் திருமேனி அழகாய் காட்டி சொக்கு பொடி
நீல மணி போலே ஸ்ரமகரமான
குடக்கூத்தன் -குரவை கோத்ததை இழந்தாரும் -மன்றிலே தன் அழகை முற்றூட்டாக கொடுத்து
மன்றம் -சேர்ந்த இடம் -நடுவில் -மன்று –
பூர்ண அனுபவம் செய்ய
அனுபவிக்குபவன்
அரவம் ஏறி –ஸ்ரமம் தீர திருப்பாற்கடலில் சாய்ந்து அருளி
அலை கடல் -ஸ சந்நிதானத்தாலே ஆனந்த சப்தம்
அமரும் துயில் நாய்ச்சிமாரும் உணர்த்த ஒண்ணாத
அன்னலை -ஈஸ்வரன் -அனந்தசாயித்வம் –
இரவு நன் பகலும் விடாது –
காலம் நடையாடாத தேச அனுபவம் இங்கேயே
சதா பஸ்யந்தி சூரயா
ஏ த்துகைக்கு காலம் நன் -நல் இரா நல் பகல்
மனம் வைமினோ
நெஞ்சை வைப்பதே வேண்டுவது
விஷயம் தன்னடையே வந்து புகுரும்
ஏத்த ஒருப்படுத்த ஒன்றே வேண்டுவது –

பரவி வானவர் ஏத்த நின்றவன் இடம் மனம் வைக்க சொல்கிறேன்
பரமன் இடம் வைக்க சொல்கிறேன்
பரம் ஜோதி -தன் பேறு வடிவிலே இருக்கும்படி
விலக்காமையே பற்றாசாக கலக்குமவன்
மணி வண்ணன் இடம் வைக்க சொல்கிறேன்
உங்களோட்டை கலவியாலே செருக்கி இருக்கிறவனை
சர்வ ஸ்வாமியை அன்றோ
நம்பியை -எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ -போலே இங்கு
வியாக்யானம்
சம்பந்தம் உபகாரன் இல்லை என்று மறப்பதோ
பரிகரம் -மனசு கொடுத்தான்
சூன்யம் இல்லை
வைத்தாலே போகுமே

விஷயங்களில் ஓடும் மனசை திருப்பி இங்கே வைக்க பாரும் கோள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply