மூவர் ஆகிய மூர்த்தி யைமுதல்
மூவர்க் கும்முதல் வன்தன்னைச்
சாவம் உள்ளன நீக்கு வானைத்
தடங்க டற்கிடந் தான்தன்னைத்
தேவ தேவனைத் தென்னி லங்கை
எரிஎ ழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்க யத்தடங்
கண்ண னைப்பர வுமினோ.
பொ-ரை : ‘மூவராகிய மூர்த்தியை, தலைவர்களான அம்மூவர்க்கும் காரணமானவனை, அவர்களிடத்திலிருக்கின்ற சாபங்களை நீக்குகிறவனை, அகன்ற திருப்பாற்கடலில் சயனித்திருப்பவனை, நித்தியசூரிகளுக்குத் தலைவனை, தெற்கே உள்ள இலங்கையானது நெருப்புப் பற்றி எரியும்படியாக அழித்த வில்லையுடையவனை, பாவங்களைப் போக்குகின்றவனை, தாமரை போன்ற விசாலமான அழகையுடைய கண்களையுடையவனைத் துதி செய்ம்மின்,’ என்கிறார்.வி-கு : ‘முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும், முதலாவான் மூரிநீர் வண்ணன்’ என்பது பொய்கையார் திருவாக்கு. ‘மூவுருவாகிய தலை பிரி ஒருவனை’ என்பது பரிபாடல் (13 : 37) ‘மூன்று கவடாய் முளைத்தெழுந்த மூலமோ?’ என்றார் கம்பநாட்டாழ்வார். (கம்ப. ஆரண். கவந்.) ‘மேவரு ஞானா னந்த வெள்ளமாய் விதித்தோ னாதி, மூவரு மாகி அந்த மூவர்க்கும் முதல்வ னாகி’ என்றார் வில்லிபுத்தூராழ்வார்.
ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘உலக காரணனாதல் தாமரைக் கண்ணனாதல் முதலிய குணங்களைச் சொல்லி, ‘பற்றுங்கோள்’ என்னாநின்றீர்; அவை பரத்துவத்துக்கே உரியவையான இலக்கணங்களாம்; ஆன பின்பு, எங்களாலே அவனை அடையப் போமோ?’ என்ன, ‘அப்படிப்பட்டவன்தானே உங்களோடு ஒரே இனத்தவனாய்ச் சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்தான்? அங்கே பற்றுமின்,’ என்கிறார்.
மூவராகிய மூர்த்தியை – மேல் பாசுரத்தில் சொல்லப்பட்ட சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சொல்லுகைக்காக இப்பாசுரத்திலும் ‘மூவராகிய மூர்த்தியை’ என்கிறார். முதல் மூவர்க்கும் முதல்வன்தன்னை – உலகத்திற்குக் காரணனாய் இருந்துள்ள தன்னோடு கூடின மூவர்க்கும் காரணனாய் உள்ளவனை. ‘பிரமனுக்கும் சிவனுக்கும் காரணன் ஆகிறான், தனக்குக் காரணன் ஆகையாவது என்?’ என்னில், தான் இவர்களுக்குக் காரணனாய் இருப்பது போன்று தனக்கு அவ்வருகு வேறொரு காரணம் இன்றியே இருத்தலைத் தெரிவித்தபடி. ‘ஆத்மேஸ்வரம் – தனக்குத் தானே தலைவன்’ என்பது உபநிடத வாக்கியம். 2இதனால், ‘மேற்கூறிய சாமாநாதிகரண்யம் சொரூபத்தால் அன்று; காரிய காரணம் பற்றி வந்தது,’ என்பதனைத் தெரிவித்தபடி. அன்றியே, இந்திரனையும் கூட்டி, ‘உலகிற்கு முதல்வராய் இருக்கிற பிரமன் ருத்ரன் இந்திரன் இவர்களுக்கும் காரணனாயுள்ளவனை’ என்னுதல். சர்வம் உள்ளன நீக்குவானை – 3‘வேதங்கள் கொள்ளை கொள்ளப்
பட்டது என்ன, தமப்பனாகிய பிரமனிடத்திற்செய்த பிரமஹத்தி என்ன, அசுரர்களால் உண்டான துன்பங்கள் என்ன’ என்பன போன்று சொல்லுகின்றவற்றைப் போக்கும் தன்மையனாய் உள்ளவனை. போக்குகிற அவன் பாரிப்புக்கு இவை மிக அற்பமாய் இருக்கிறபடியைத் தெரிவிப்பார் ‘உள்ளன’ என்கிறார்.
தடம் கடல் கிடந்தான்தன்னை – ‘இன்னம் இவர்கட்கு ஆபத்து வந்த போது நம்மைத் தேடித் திரிய ஒண்ணாது’ என்று ஏற்கவே கடலில் இடங்கொண்டவனை. தேவதேவனை – பிரமன் முதலியோர்கட்குப் புகலிடமாய்க்கொண்டு ஆயிற்றுக் கண்வளர்ந்தருளுகிறது. அன்றியே, ‘நித்தியசூரிகளால் ஏத்தப்படுகின்றவனை’ என்னலுமாம். தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியை-நெருப்பானது இராவணபயத்தாலே புகமாட்டாத ஊரிலே தான் நினைத்தபடி பரவும்படி செய்ய வல்ல வில்வலியையுடையவனை, இதனால், பிரமன் முதலியோர் கூப்பீடு கேட்டு எழுந்திருந்து செய்த தொழிலைத் தெரிவித்தபடி. இனி, ‘தேவதேவனை’ என்பதனை, எரி எழச் செற்ற வில்லிக்கு விசேஷணம் ஆக்கலுமாம்; அப்பொழுது, மனிதத்தன்மையில் பரத்துவம் சொல்லுகிறார் என்பது போதரும். பாவநாசனை – கையும் வில்லுமாய் இருக்கிறபடியைக் காண எல்லாருடைய பாவங்களும் போம். என்றது, 1‘இரகு நந்தன! நீதான் எல்லா உலகத்தாருடைய பாவங்களையும் போக்குகிறவன்,’ என்கிறபடியே, அந்நிலையிலே மக்கள் எல்லாருடைய பாவங்களையும் போக்கும் தன்மையன் ஆனவனை என்றபடி. பங்கயம் தடம் கண்ணனை – பாவத்தை வளர்ப்பவன் ஆனாலும், விடவொண்ணாதபடியான கண்ணழகையுடையவனை. பரவுமினோ -‘தாமரைக் கண்ணரே! தேவரீருக்கு வெற்றி!’ என்று முறைகெடப் புகழுங்கோள்.
மேற்பாசுரத்தில் பரத்துவத்தை அருளிச்செய்தவர், இப்பாசுரத்தில்
அவதாரத்தை அருளிச்செய்வதன் நோக்கத்தை அருளிச்செய்கிறார், ‘உலக
காரணனாதல்’ என்று தொடங்கி. ‘தென்னிலங்கை எரியெழச் செற்ற
வில்லியை’ என்றதனை நோக்கிச் ‘சக்கரவர்த்தி திருமகனாய்’ என்கிறார்.
2. ‘இதனால்’ என்றது, ‘முதல்வன்’ என்றதனைக் குறித்தது. ஆக, ‘முதல்’
என்றதற்கு இரண்டு பொருள்: ஒன்று, காரணன்; மற்றொன்று, தலைவன்.
முதல்வன் – காரணன்.
வெந்தார் என்பும் சுடுநீறும் மெய்யிற் பூசிக் கையகத்தோர்
சந்தார் தலைகொண் டுலகேழும் திரியும் பெரியோன் தான்சென்று
‘எந்தாய் சாபம் தீர்’ என்ன இலங்கு அமுதுநீர் திருமார்பில்
தந்தான் சந்தார் பொழில்சூழ்ந்த சாளக் கிராமம் அடைநெஞ்சே!’
என்றார், திருமங்கை மன்னன்.
உயர்ந்தவன் சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்து
சௌலப்யம் சொல்லி கொண்டே அர்ச்சை அருளுகிறார்
ஜகத் காரணன் புண்டரீகாட்ஷன் மேன்மை உடையவன் பற்ற முடியுமா
தானே தாழ வந்து சஜாதீயனாக சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்தானே –
மூவராகிய மூர்த்தி கீழே சொன்ன அர்த்தம் பின்னாட்ட –
தடம் கடல் கிடந்த தேவ தேவன்
இலங்கை அழித்து -பாப நாசன் –
பிரஸ்துதமான சாமாநாதி கரண்யம் நிரூபிக்கிறார்
ஸ்வரூபேனே அன்று -இவனே அவர்கள் எனபது இல்லை
கார்ய காரண நிபந்தனம் -படைத்து நடத்துகிறான் –
காரண பூதன் –முதல்வன் தன்னோடு கூடின மூவருக்கும்
தான் இவர்களுக்கும் காரணம் – -தனக்கும் தானே காரண பூதன் –
பதிம்விச்வச்ய ஆத்மேஸ்வரம் -தனக்கு தானே ஈஸ்வரன் உபநிஷத் வாக்யம் –
சாபம் நீக்குவான் –
இந்த்ராதிகள் என்னலுமாம்
வேத அபஹார -தைத்ய பீடா -குரு பாதகம் -ருத்ரனுக்கு -தகப்பனார் குரு -பெரிய பாதகம்
ஆபத்விமோசன -சிவன் முதலில் ருத்ரன் பெயர் அசுத்தி ரைத்ரமான கார்யம் மசான வாஸம் -கங்கை தீர்தம்தரித்து சஹா சிவன் ஆனான்
மங்களகரமாக ஆனான் அப்பொழுது தான் -தஸ்ய பாதோதிகத்தால் சிவன் ஆனான் –
பாபங்கள் உள்ளன நீக்குவான்-போக்குகிற அவன் பாரிப்பிக்கு அல்ப மானவை
பாபம் -பிராயச்சிதத்தால் விநாச்யம் அடைய வழி
சாபம் அனுபவிக்க விநாச்யம் –
பாப நாசன் சாபம் நீக்குவான் இரண்டையும் இங்கே அருளுகிறார் ஆழ்வார் –
தேடித் திரிய ஒண்ணாது என்று கடலிலே சயனித்து கொண்டு –
ஏற்கனவே முன்பே
தேவ தேவன் -பிரமாதிகள் பார்க்க -அவதார மூல கந்தம்
தடம் கடல் சேர்ந்த பிரான்
கூப்பீடு கேட்டு எழுந்து அருள
பாட்டு கேட்கும் இடம் -கூப்பீடு கேட்கும் இடம் -எல்லாம் வகுத்த இடம் ஆசார்யனே
குதித்த இடம் வளைத்த இடம் –
தென் இலங்கை -எரி எழ -அக்நி ராவண பயத்தால் பிரவேசிக்க கூடாத இடத்தில் –
அதே ஊரில் நினைத்தபடி வியாபாரிக்க பண்ண வல்ல வில்லை உடையவன்
தேவதேவனை -தென் இலங்கை மனுஷ்யதே பரதவன் –
பிரமாதிகள் வந்து ஸ்தோத்ரம் செய்தார்களே
நித்ய சூரிகள் -தேவ ஆஸ்ரியிக்கும் தேவன் என்னவுமாம்
கையும் வில்லுமாய் இருக்கும் நிலை பாபம் தீருமே
பாவனா சர்வ லோகாகா
பங்கய தடம் கண்ணனை
பாபம் வர்தகனாக இருந்தாலும் விட ஒண்ணாத அழகன்
பரம்பினோ ஜிதந்தே புண்டரீகாட்ஷா -என்றால் போலே
அக்ரமமாக புகழும் என்கிறார் –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply