வார்புனல் அம்தண் அருவி
வடதிரு வேங்கடத்து எந்தை
பேர்பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர்என் றேபிறர் கூற
ஊர்பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்கநின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படு வாரே.
பொ-ரை : ‘ஒழுகுகின்ற தண்ணீரையுடைய அழகிய குளிர்ந்த அருவிகள் நிறைந்த வடதிருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எந்தையினுடைய பல திருப்பெயர்களைச் சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்று பிறர் கூறும்படி பல ஊர்களிலே புகுந்தும்புகாமலும் உலக மக்கள் சிரிக்கும்படியாக நின்று ஆடி அன்பு பெருகி நடனம் செய்கின்றவர்கள் தேவர்களாலே தொழப்படுவார்கள்,’ என்கிறார்.
வி-கு : ‘புக்கும் புகாதும் எந்தையின் பெயர்களைச் சொல்லிப் பிதற்றி நின்று ஆடிப் பெருகிக் குனிப்பவர் அமரர் தொழப்படுவார்,’ என்றும், ‘பித்தர் என்றே பிறர் கூற உலோகர் சிரிக்க நின்று ஆடிக் குனிப்பவர்’ என்றும் கூட்டுக. ‘வடக்கின்கணுள்ள திருவேங்கடம்’ என்க. அமரர் – ‘அமரர்களால்’ என மூன்றனுருபு விரிக்க.
ஈடு : எட்டாம் பாட்டு. 1‘திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுவாரைக் கொண்டாடுகைக்கு நாம் யார்? நித்தியசூரிகள் அன்றோ அவர்களைக் கொண்டாடுவார்கள்?’ என்கிறார்.
வார் புனல் அம் தண் அருவி வடக்குத் திருவேங்கடத்து எந்தை – ஒழுகாநின்றுள்ள புனலையுடைத்தாய், காட்சிக்கு இனியதாய், சிரமத்தை நீக்குவதாயுள்ள அருவிகளையுடைத்தான வடக்குத் திருமலையில் வந்து நின்றான் என் ஸ்வாமி. பேர் பல சொல்லிப் பிதற்றி – அவனுடைய திருநாமம் பலவற்றையும் அடைவுகெடச் சொல்லி. 2சொரூப ரூப குணங்களுக்கு வாசகமாயும், விபூதிக்கு வாசகமாயுமுள்ள பெயர்கள் பலவாதலின், ‘பேர் பல’ என்கிறார். என்றது, 3தாம் ‘ஒழிவில் காலத்’திலும், ‘புகழும் நல் ஒருவனி’லுமாகச் சொன்னவற்றைச் சொல்லுகிறார் என்றபடி. பித்தர் என்றே பிறர்கூற – பகவானுடைய குணங்களைக் கேட்டால் விகாரமில்லாதவர்களாய் இருக்குமவர்கள், ‘‘பொருவில் சீர்ப் பூமி என்கோ!’ என்னா, ‘கண்ணனைக் கூவுமாறே’ என்பது; ‘குன்றங்கள் அனைத்தும் என்கோ!’ என்னா, ‘பயங்கயக் கண்ணனையே, என்பது; ‘ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறுஅறியமாட்டேன் யாவையும் எவரும் தானே’ என்பதாகாநின்றார்; இவர் பித்தரோ?’ என்று தம்மைப் பிறர் சொல்லுமாறு போன்று ‘இவர்கள் பித்தரோ?’ என்று சொல்லும்படி.
1‘அத்தா அரியே என்று உன்னை அழைக்கப் பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை’ என்றும், 2‘பேயரே எனக்கு யாவரும்; யானும் ஓர் பேயனே எவர்க்கும்’ என்றும் சொல்லுகிறபடியே, அவர்கள் செயல் இவர்கட்கு அடைவு கேடாய்த் தோன்றுமாறு போன்று, இவர்கள் செயலும் அவர்கட்கு அடைவு கேடாய்த் தோன்றுமே அன்றோ? வைஷ்ணவர்கள் அங்கீகாரம் பெறுமதிலும் வைஷ்ணவர்கள் அல்லாதார் ‘இவன் நமக்கு உடல் அல்லன்’ என்று கைவிடுகைதான் உத்தேஸ்யமாதலின், ‘பிறர் கூற’ என்கிறார். இராவணன் 3‘இராக்கதர் குலத்தில் தள்ளுண்ட உன்னை’ என்றதனை உத்தேஸ்யமாக நினைத்திருந்தான் அன்றோ ஸ்ரீ விபீஷணாழ்வான்? 4மிளகாழ்வான் வார்த்தை: இராஜா அகரம் வைக்கிறானாய் அங்கே செல்ல, ‘உமக்குப் பங்கு இல்லை’ என்ன, ‘அது என்? வேதபரீக்ஷை வேணுமாகில் அத்தைச்செய்வது, சாஸ்திரப் பரீட்சை வேணுமாகில் அத்தைப் பரீக்ஷிப்பது,’ என்ன, ‘உமக்கு அவையெல்லாம் போதும்; அதற்கு உம்மைச்சொல்லவொண்ணாது,’ என்ன, ‘ஆனால், எனக்குக் குறை என்?’ என்ன, நீர் வைஷ்ணவர் அன்றோ? ஆகையாலேகாண்,’ என்ன, புடைவையை முடிந்து ஏறிட்டுக் கூத்தாடினான் ஆயிற்றுத் தன்னை அவர்கள் கைவிட்டதற்கு; ஆதலால், வைஷ்ணவர் அல்லாதாரான மற்றையோரால் ‘இவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’ என்று தள்ளப்படுவதே வேண்டுவது.
1ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி ஆர்வம் பெருகக் குனிப்பார் – மனிதர்கள் உள்ள இடத்தோடு இல்லாத இடத்தோடு வாசியற எங்கும் புக்கு, இவ்வாசியறியாத உலகத்தார், ‘இவன் செய்யும்படி என்?’ என்று சிரிக்க, அதுவே தாளமாக நின்று ஆடி, அன்பானது மேன்மேல் எனக் கரை புரண்டு குனிக்குமவர்கள். அமரர் தொழப்படுவாரே – நித்திய சூரிகளாலே கொண்டாடப் பெறுவர். ‘பகவானுடைய சந்நிதியிலே இருந்து 2’அஹமந்நம் அஹமந்நம்’ என்கிறபடியிலே இருந்து களித்தாடுவது பாடுவதான நித்தியசூரிகள் இவர்களைக் கொண்டாடுவார்கள்,’ என்கிறார்.
ஒழிவில் காலம்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவரீசன்’ ‘ஈசன் வானவர்க்கு’
என்பன, ஸ்வரூப வாசகம்; ‘காரெழில் அண்ணல்’ ‘கருமாணிக்கம்’ என்பன,
ரூப வாசகம்; ‘திருவேங்கடத்து அந்தமில் புகழ்’ என்றது, குணவாசகம்;
‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவராதி என்கோ’
என்றது, ஸ்வரூப வாசகம்; ‘பங்கயக் கண்ணன்’ என்றது, ரூப வாசகம்; ‘புகழும்
நல் ஒருவன்’ என்றது, குணவாசகம்.
‘மாணிக் கனகம் புரைமேனி மாலுக்கு வார்சடையோன்
பாணிக் கனகம் பலியொழித் தானுக்குப் பச்சைத்துழாய்
ஆணிக் கனக முடியலங் காரனுக்கு அண்டமெல்லாம்
பேணிக் கனகனுக் குப்பித்த ரானவர் பித்தரன்றே.’
என்றார் திவ்வியகவியும்
தேடு கின்றனை ஐம்பொறி களுக்கிரை; தேடியுங் கிடையாமல்
வாடு கின்றனை; வீடுசென் றென்றினி மருவுவை மடநெஞ்சே!
ஆடு கின்றிலை; அழுகிலை; தொழுகிலை; அரங்கனைக் கரங்கூப்பிப்
பாடு கின்றிலை; நினைகிலை பதின்மர்தம் பாடலின் படியாயே.’
என்பது திவ்வியகவியின் செய்யுள்.
திருவேம்கடமுடையான் நீர்மையில் ஈடுப்பட்டு இருப்பாரை கொண்டாட நாம் யார்
நித்யர் சூரிகள் தான் தகுதியானவர்கள் –
எந்தை பேரை சொல்லி -பித்தர் என்று பிறர் கூற
மிளகு ஆழ்வான் -ஐ திகம்
உலோகர் சிரிக்க நின்றாடி
அத்தையே ஆலம்பனமாக கொண்டு நாட்டியம் ஆடி
ஆர்வம் பெற குத்திப்பார்
அயர்வர்வரும் அமரர்களில் சிறந்தவர்
அருவி -உருகா நின்ற புனல்
தர்சநீயமான அருவி
ஸ்ரமகரமாய் குளிர்ந்து
வடக்கு திருமலையில் வந்து நின்றான் என் ஸ்வாமி
அவன் பேர் அக்ரமமாக சொலி பிதற்றி –
பகவன் நாமாவை எப்படியும் சொல்லலாம்
புகழில் நல் ஒருவன் என்கோ சொன்னது போலே
ஸ்வரூப ரூப குண விபூதி அனைத்தையும் பல -சப்தங்கள் அடைய பேசி
பித்தர் -அவிக்ரதராய் இருப்பவர் இடிச்ச புளி போல்
சம்பந்தமாக -ஆகா நின்றார்
இவர் பிராந்தரோ என்று தம்மை பிறர் சொல்லும்படி
பித்தர் என்று பிறரைக் கூற
இரண்டும்
அத்தா அரியே உன்னை அழைக்க பித்தா என்று பேசுகின்றார் என்னை
முத்தே மணி மாணிக்கமே -உன்னை எங்கனம் நான் மறப்பேனோ திருமங்கை ஆழ்வார்
பிறர் பித்தரே என்று கூறும் படி
பேயரே எனக்கு யாவரும் -யானும் ஒரு பேயரே பிறர்க்கும் –
அவர்கள் செயல் இவர்களுக்கு அடைவு கெட தோற்றுமா போலே –
சம்சாரிகள் -ஆழ்வார்கள்
பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே –
பித்தர் சொல்வதே உத்தேச்யம்
வைஷ்ணவர் அங்கீகாரம் பெறுவதிலும்
அவைஷ்ணவர் கை விடுதல் பிரதானம்
அந்ய சேஷத்வம் கழிவது பிரதானம்
ராவணன் கோடரிகாம்பு கை விட்டது விபீஷணன் குல திக் பாம்சனம்
கைவல்யார்தரை அசத்துக்கள் கை விடும்படியும் சத்துக்கள் கை கொள்ளும்படி சக்ர லாஞ்சனம் கொள்வது
மிளகு ஆழ்வான்
உலோகர் சிரிக்க நின்றாடி
அகரம் அக்ரகாரம் ராஜா வைக்க -வேத அத்யயனம்
சொல்லி தர்ம ரஷணம் –
மானம் தவம் தங்காது வானம் பொழியாவிடில் வள்ளுவர்
தேவர்கள் ஆகாரம் ஆகுதி கொடுத்தால் நமக்கு
வேதம் ஓதிய வேதியருக்கு ஒரு மழை -நீதி வழுவாத மன்னவருக்கு ஒரு மழை
அங்கே செல்ல-உமக்கு பங்கு இல்லை என்ன
வேத பரிஷை சாஸ்திர பரிஷை செய்வது
மிளகு சிறியதாக இருந்தாலும் -காரம் போலே கீர்த்தி உடையவர்
தொண்டனூர் நம்பி
மிளகூர் இன்றும் உண்டு -அங்கு அவதரித் படியால்
உமக்கு போதும் அவை எல்லாம் -அதுக்கு சொல்ல ஒண்ணாது
நீ வைஷ்ணவன் அன்றோ -அதனால் காண் –
சைவ வைஷ்ணவ –
பிரசித் த வித்வான் –
கருணாகாச்சார்யர்
ஆசார்ய சம்பந்தம் உண்டானதும் -சரமதேகம்
சபிண்டீ கரணம் கூடாதே
திரு நாராயண பலி –
சந்நியாசி நான்காவது நாள் நாராயண பலி
கன்யா ஸ்திரீகள் -சபண்டீ கரணம் இல்லை –
பித்ரு லோகம் போவதாக செய்வது தப்பு
பூர்வர் -சிஷ்டாசார்யம் என்பதால் செய்கிறோம்
ஸ்வரூப ஸித்திக்கு செய்கிறோம்
மோஷம் போன ஆத்மாவை பித்ரு லோகம் அனுஷ்டானம்
சாஸ்திர அனுஷ்டானம் கொண்ட பிராமணர்களுக்கு மட்டும் அக்ரகாரம்
ஸ்ரீ வைஷ்ணவர் சம்ஸ்காரம் விட்டு இட்டு இருப்பார்கள்
ஒழுங்காக செய்ய வில்லை கர்ம செய வில்லை
வேதம் மதிக்காமல் என்ற அர்த்தம்
கர்மங்களை விட்டவர் என்பதால் ஸ்ரீ வைஷ்ணவர்
அக்ரகாரம் கிடைக்க ஜீவன உபாயம் என்ற அர்த்தம் –
கூத்தாட ஆரம்பித்தாராம்
பித்தர் என்று பிறர் கூற –
வைஷ்ணவத்வம் உண்டே சொன்னதால் சந்தோஷம் பட்டாராம் –
பிராதி கூலியா வர்ஜனம் இ றே வேண்டியது -விட்டே தீர வேண்டும்
ஆநு கூல்யச்ய சங்கல்பம் போதும் –
கை விட்டதை கொண்டாடி ஆட வேண்டும்
ஊர் பலபுக்கும் புகாதும் -இல்லாத இடத்தோடு வாசி அற எங்கும் புக்கும்
இவ்வாசி அறியாதவர் சிரிக்க
உலோகர் லௌ கிகர் சிரிக்க
அதுவே தாளமாக குதிக்குமவர்கள்
நித்யர் கொண்டடப்படுவார்
அஹம் அன்னம் களி த்து ஆடி
பாம்பின் கால் பாம்பு அறியுமே
(
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply