திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-5-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

அமரர் தொழப்படு வானை
அனைத்துஉல குக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்துஅவன் தன்னோடுஒன் றாக
அமரத் துணியவல் லார்கள்
ஒழியஅல் லாதவர் எல்லாம்
அமர நினைந்துஎழுந்து ஆடி
அலற்றுவ தேகரு மம்மே.

    பொ-ரை : அமரர்களாலே தொழப்படுகின்றவனை, எல்லா உலகத்தார்க்கும் உபகாரகனை, நிலையாக மனத்தினால் யோகத்

தைச் செய்து அவ்விறைவனோடு சமமாக அமரத் துணிய வல்லவர்களான கேவலர்களை ஒழிய, மற்றையோர் எல்லாம் அமர வேண்டும் என்று நினைந்து எழுந்து ஆடிப் பாடுவதே செய்யத் தக்க காரியமாம்.

    வி-கு : பிரானை மனத்தினுள் யோகு புணர்ந்து அவனோடு சமமாக அமரத் துணிய வல்லவர் – கேவலர். ஒன்றாக – சமமாக. ‘அல்லாதவர் எல்லாம் நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமம்.’ என முடிக்க. அலற்றுவது – தொழிற்பெயர்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘கைவல்ய புருஷார்த்தத்தை எடுத்து, 1’சீலம் முதலான குணங்களோடு கூடின இறைவனைப் பற்றாமல் மின்மினிபோலே இருக்கிற ஆத்தும அனுபவமாத்திரத்திலே நிற்பதே!’ என்று அவர்கள் செயலுக்கு இரங்கி, அவர்களை ஒழிந்தாரை எல்லாம் பகவானுக்கு வேறுபட்ட இலாபங்களைப் ‘புருஷார்த்தம்’ என்று இராமல், பகவானுடைய குணங்களை அநுசந்தித்து உரையும் செயலும் வேறுபட்டவராய் ஆடுவது பாடுவது ஆகுங்கோள்; இதுவே செய்யத்தக்க காரியம்,’ என்கிறார்.

    அமரர் தொழப்படுவானை – பிரமன் உருத்திரன் முதலியோர்கட்கும் அவ்வருகான நித்தியசூரிகளாலே தொழப்படுகிறவனை. அனைத்து உலகுக்கும் பிரானை – எல்லா உலகங்கட்கும் இறைவனை. அமர மனத்தினுள் யோகு புணர்ந்து – நெஞ்சிலே ஊன்றியிருக்கும் படி யோகாப்பியாசத்தைக் கனக்கப்பண்ணி. அவன்தன்னோடு ஒன்றாக அமரத் துணிய வல்லார்கள் ஒழிய – இறுதிக்காலத்தில் வந்தவாறே, அவனோடே இவ்வாத்துமவஸ்து சமானம் என்று புத்தி பண்ண வல்ல தாழ்ந்தவர்களை ஒழிய. ‘ஒன்றாக’ என்பதற்குச் ‘சமானமாக’ என்பது பொருள். ‘‘ஒன்றாக’ என்பது, சமானம் என்னும் பொருளைக் காட்டுமோ?’ என்னில், 2‘எல்லாப் பொருள்களிலும் இருக்கிற என்னை எவன் ஒருவன் ஒன்றாக இருக்கும் தன்மையை அடைந்தவனாய்ப் பூஜிக்கின்றானோ, அவன் எப்பொழுதும் என்னிடத்திலே இருக்கிறான்,’ என்று ஒன்றாயிருக்குந்தன்மையைச் சொல்லி, பின்னர் அதுதன்னை

மீண்டும் எடுத்துச் சொல்லும் இடத்தில் 1‘மதுசூதநா! எந்த யோகமானது சமமாக உள்ள தன்மை என்று உன்னால் சொல்லப்பட்டதோ, அது செய்ய முடியாததாய் இருக்கிறது,’ என்று ‘சமமாக உள்ள தன்மை’ என்று சொல்லப்பட்டதன்றோ? ஆக, இறுதிக்காலத்தில் இவ்வாத்துமா அவனோடு ஒத்த சுத்தியை உடைத்தாக நினைக்க வல்ல துணிவுள்ள கேவலரை ஒழிய’ என்றபடி.

    இனி, 2இவ்விடத்தில், ‘விலக்ஷண அதிகாரிகளைச் சொல்லிற்றாக்கி, 3‘அல்லாதவரெல்லாம்’ என்கிற இடம், பத்தி செய்ய அதிகாரம் இல்லாதவர்களெல்லாம் அவனை அநுசந்தித்துப் பாடுவது ஆடுவது ஆகுங்கோள் என்பதனைக் கூறுகின்றது என்று பொருள் கூறினாலோ?’ என்னில், அங்ஙனம் கூற ஒண்ணாது; மேலே ‘ஓதி உணர்ந்தவர் முன்னா’ என்றதனால், பகவானுடைய குணங்களைக் கேட்டால் வேறுபடாது இருப்பவர்களாயின், அவர்கள் பிறவி தொழில் முதலியவற்றால் எத்தனையேனும் நன்மையுடையராகில் அவர்கள் மக்கள் அல்லர் என்றும் சொல்லி, பிறவி தொழில் முதலியவற்றால் தண்ணியரேயாகிலும் பகவானுடைய குணங்களை அநுசந்தானாம் பண்ணி வேறுபாட்டினையடையும் தன்மையராகில் அவர்கள் ‘முழுதுணர் நீர்மையினார்’ என்றும் சொல்லி இவர்களைக் கொண்டாடியும் 4அவர்களை ‘என் சவிப்பார்மனிசரே’ என்று நிந்தித்தும் வருகிற இடம் ஆகையாலே, இங்கு, ‘சர்வேசுவரனை அடைந்து அற்பப் பிரயோஜனங்களைக்கொண்டு அகலப்போகிறவர்கள் மக்கள் ஆகார்,’ என்றதே பொருள் ஆக வேண்டும். அல்லாதவர் எல்லாம் – கேவலம் ஆத்தும அநுசந்தானத்தைப் பண்ணி, சீலம் முதலான குணங்களோடு கூடின இறைவனிடத்திலே நெஞ்சு போகாதபடி நெஞ்சை இறுகப் பிடிக்க வல்ல தாழ்ந்தவர்கள் நீங்க மற்று உள்ளார் எல்லாம். அமர நினைந்து எழுந்து அலற்றுவதே கருமம் – வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்களாய் இறைவனை நெஞ்சிலே பொருந்த அனுசந்தித்து, அவ்வனுசந்தானத்தாலே வந்து மகிழ்ச்சி கொண்டு கிளர, அக்கிளர்த்தியோடே ஆடி அடைவு கெட ஏத்தும் இதுவே செய்யத்தக்க காரியம்.

பஜனை கோஷ்டி இன்றும் உண்டே
உலோகர் சிரிக்க நின்றாடி
கைவக்ய புருஷார்தரை நிந்தித்து
பகவத் குண அனுபவம்
ஆடுவதும் பாடுவதும் கர்த்தவ்யம்
பன்னீராயிரப்படி மட்டும் வேற மாதிரி வியாக்யானம்
பிள்ளான் ஆறாயிரப்படி -கைவல்யம் சூத்ரர் –
அமரர் குனிய வல்லார்கள் கைவல்யார்த்தி
அமர நினைந்து பொருந்தி இருந்து
மனத்தில் த்யானம் செய்து –
ஆத்மா பிரகாசிக்க பார்த்து
அவன் தன்னோடு ஒன்றாக பகவா னைபோலே
பரி சுத்தன் -அபக்த பாப்மா -ஞான ஆனந்த ஸ்வரூபன்
இருந்தும் சேஷி சேஷ பூதன்
விபு அணு வாசி உண்டே
அதை மறந்து ஒன்றாக நினைந்து அதிலே முழுகி
அமரர் தொழப் படுபவன் அனைத்து உலகுக்கும் பிரான்
அலற்றுவது தான் கருமம் –
பிரம ருத்ராதிகளுக்கும் அவ்வருகு ஆணையர்ந்த நித்யர் தொழும்
நெஞ்சிலே ஊன்றி இருக்கும் படி
அவன் தன்னோடும் ஒன்றாக
சரம தசையிலே அவனோடு சாமான்யம் என்று புத்தி
ஒன்றாக -சமானமாக அர்த்தம் காட்டுமோ
ஒன்றி போனான் சொல்லாமே
சர்வ பூத ஹித் மாம் எகா பஜதி ஏகத்வம் ஆசித -சமாந்த்வம் காட்டி
அர்ஜுனன் எகா அஹம் -சாம்யேன மது சூதனா -ஏ கத்வமும் சாமாயமும் ஓன்று காட்டுமே
யோகத்தின் சரம தசையில் அவனோடு ஒத்து இருப்பதாக -சாகாசம்
வி லஷண அதிகாரிகள் சொல்ல
அமரகுனிய வல்லார்கள் -பன்னீராயிரப்படி
த்யானி க்கும் உயர்ந்த அதிகாரிகள் -பக்தி யோக நிஷ்டர்கள்
சக்தி உள்ளவர்கள்
அல்லாதவர்கள் எல்லாம் அலற்றுவதே கருமம்
பிரகரணதுக்கு சேராதே
கேட்டார் அவிக்ரதி ஆகாமல் இருந்தால் அவஸ்துகள் என்றே முன்பே அருளி
அனுஷ்டானம் இருந்தாலும் –
ஜன்ம வருத்தங்களால் தண்ணியரே ஆகிலும் -கூத்தடினால் உணர்ந்தவர் என்றும் சொல்லி
அவர்களை நிந்தித்தும் இவர்களை கொண்டாடியும் சொல்லும் பிரகரணம்

கைவல்யார்த்தி என்ற அர்த்தம் கொள்ளுவதே பொருத்தம் –

போதம் ஞானம் கொண்டே -அருளி -ஏதம் இல் பன்னீராயிரம்
மா முனிகள் சாதித்து
மற்ற வ்யாக்யானங்கள் இன்னருளால் சொல்லி
இதற்க்கு சொல்ல வில்லை -பிரேம பரவசராய் இதுவே கர்த்தவ்யம் –
கேவலரை நிந்தித்து -பகவன் இடம் நெஞ்சு போகாமல்
நெஞ்சை இருக்க பிடிக்க வல்ல ஹேயர்
சீலாதி குணங்களில் ஈடுபடாமல்
அனுஷ்டித்து -ஹர்ஷம் -கூடி ஆடி இருப்பதே கர்த்தவ்யம்
அவர்களை ஒழிய
அவர்கள் கர்மம் ஒழிய
இரண்டு அர்த்தங்களும் காட்டி
ரசத்துக்கு சேர்ந்த அர்த்தம் கொள்ள வேண்டும் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply