நீர்மைஇல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார்மல்கு சேனை அவித்த
பரஞ்சுட ரைநினைந்து ஆடி
நீர்மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்துநை யாதே
ஊன்மல்கி மோடு பருப்பார்
உத்தமர் கட்குஎன்செய் வாரே!
பொ-ரை : ‘நற்குணம் இல்லாத துரியோதனன் முதலிய நூற்றுவரும் அழிய, பாண்டவர்கட்குத் திருவருள் புரிந்து நின்று, பூமியில் நிறைந்த சேனையை அழித்த பரஞ்சோதியை நினைத்து ஆனந்தத்தால் கூத்தாடி நீர் நிறைந்த கண்களையுடையவர்களாகி மனம் கட்டுக் குலைந்து சரீரமும் நிலை குலையாமல் சதை மிகும்படியாக வயிற்றினை வளர்ப்பவர்கள், உத்தமர்களான பாகவதர்கட்கு என்ன காரியத்திற்கு உறுப்பாவர்?’ என்கிறார்.
வி-கு : ‘அருள் செய்து நின்று வீய அவித்த பரஞ்சுடர்’ என்றும், ‘நினைந்து ஆடிக் கண்ணினராகிக் குழைந்து நையாது பருப்பார்’ என்றும் கூட்டுக. ‘மல்கி’ என்பது, செய்வென் எச்சத் திரிபு. மல்கு கண் – வினைத்தொகை. ‘என் செய்வாரே’ என்றது, ‘ஒன்றுக்கும் பயன்படார்’ என்பதனைக் குறிக்க வந்தது.
ஈடு : ஏழாம் பாட்டு. 1‘அடியார்களிடத்தில் பக்ஷபாதம் உடைமையாகிற மஹாகுணத்தில் ஈடுபடாமல் சரீரத்தை வளர்க்கின்றவர்களாய்த் திரிகின்றவர்கள், வைஷ்ணவர்களுக்கு எதற்கு உறுப்பாகப் பிறந்தார்கள்?’ என்கிறார்.
நீர்மை இல் நூற்றுவர் வீய – ஒருபடியாலும் ஒரு நீர்மை இல்லாத துரியோதனன் முதலியோர் முடிந்துபோம்படிக்குத் தகுதியாக. என்றது, 2முற்படச் சஞ்சயனைப் போகவிட்டு, பின் தான் தூது சென்று, ‘இவர்களையும் அவர்களையும் சேர விடலாமோ?’ என்று பார்த்த இடத்து, அவர்கள் ஒருபடியாலும் இசையாமல், 3‘எங்கள் பந்துக்கள் ஜீவிக்கில் நாங்கள் ஜீவிப்பது இல்லை; அவர்கட்கு ஒரு குடியிருப்பும் கொடோம்; நாங்கள் பலர் ஆகையாலே பூமிப்பரப்பு அடங்கலும் எங்களுக்கே இடம் போருமித்தனை; அவர்களுக்குக் கிருஷ்ணனும் தருமமும் உண்டு; அதற்குப் பலமான சுவர்க்கத்தை அனுபவிக்கக்கடவர்கள்; நாங்கள் பூமியை ஆளுவோம்,’ என்று வன்சொற்களைச் சொல்ல, அவர்கள்
நெற்றியைக் கீறிப் பார்த்த இடத்தில் இரத்தம் பொசியாமையாலே, ‘அவர்களை அழியச் செய்வோம்,’ என்று பார்த்தான். 1பாண்டவர்களைப் பாதுகாத்தற்குக் காரணம், ‘நாங்கள் பந்துக்களையொழிய ஜீவிப்பது இல்லை’ என்றது. 2’நம்மால் இராச்சியமும் போகங்களும் சுகங்களும் யாருக்காக விரும்பப்படுகின்றனவோ’ என்றபடியே, 3‘நாட்டார் பொருள் தேடுவதும் இராச்சியங்கள் சம்பாதிக்கிறதும் எல்லாம் பந்துக்களும் தாங்களும் கூட ஜீவிக்கைக்கு அன்றோ? ஆன பின்னர், நாங்கள் பந்துக்களைக் கொன்று ஜீவிக்கப் பார்க்கிலோம் என்னும் நீர்மையாலேயாயிற்று; அவர்கள் இங்ஙன் அன்றிக்கே, ‘இவர்களுக்கு 4ஒரு கோல் குத்து நிலமும் கொடுப்பது இல்லை; அவர்கள் ஜீவிக்கில் நாங்கள் ஜீவியோம்,’ என்ன, ‘இவர்கள் அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் இருந்தார்கள்; இவர்களை அழியச் செய்யாவிடின் விபூதியும் அழியும்,’ என்று பார்த்து அதற்குத் தகுதியாக ஒருப்பட்டான்,’ என்றபடி.
ஐவர்க்கு அருள் செய்து – தான் அல்லது தஞ்சம் இல்லாத பாண்டவர்களுக்கு. 5‘பாண்டவர்கள் கண்ணனையே சரணமாக அடைந்தவர்கள்; கண்ணனையே துணையாக உடையவர்கள்; கண்ணனையே நாதனாக உடையவர்கள்; பூர்ணசந்திரன் நக்ஷத்திரங்களுக்குத் தலைவனாய் இருத்தலைப் போன்று, அந்தப் பாண்டவர்களுக்குக் கண்ணன் சிறந்த உபாயமாய் இருக்கிறான்,’ என்பது பாரதம். 6‘மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனாத்தனனுமான கிருஷ்ணன், தர்மபுத்திர
னுக்கு மந்திரியாயும் பாதுகாப்பவனாயும் சினேகிதனாயும் இருப்பதனால், அந்தத் தருமனுக்கு வெற்றி கொள்ள முடியாதது யாது உளது?’ என்கிறபடியே, அவர்கள் இழந்த பரிகரம் எல்லாம் தானேயாய் நின்றானாதலின், ‘நின்று’ என்கிறது. பார் மல்கு சேனை அவித்த – பூமி நெளியும்படிக்குத் தகுதியாக மிகைத்துவந்த அசுரகூட்டங்களை விளக்கை அவித்தாற்போன்று, பிணங்காணவொண்ணாதபடி முடித்துப் போகட்ட. பரஞ்சுடரை – 1‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்றார்களே? அதற்காக, சேநாதூளியும் முட்கோலும் சிறுவாய்க்கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் சிறு சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற நிலையைச் சொல்லுகிறது.
நினைந்து ஆடி – அவன் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்குங்குணத்தை அநுசந்தித்து, அவ்வநுசந்தானம் இருந்தவிடத்தே இருக்கவொட்டாமையால் ஆடி. நீர் மல்கு கண்ணினராய் – 2‘பகவானுடைய அனுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாய், மயிர்க்கூச்சோடு கூடின சரீரத்தையுடையனாய், எப்பொழுதும் பரமாத்துமாவின் குணங்களால் ஆவேசமடைந்தவனாய் இவ்விதமாய் எல்லா மக்களாலும் பார்க்கத் தக்கவனாய் இருப்பான் ஞானியானவன்,’ என்கிறபடியே, கண்ணநீரை இட்டு நிரூபிக்க வேண்டும்படியான கண்ணையுடையராய். நெஞ்சம் குழைந்து நையாதே – சரீரம் நிலை குலைதலேயன்றி மனமும் கட்டுக்குலைந்தவர்களாய் நைந்துபோகாமல். ஊன் மல்கி மோடு பருப்பார் – மாமிச அளமாம்படி சரீரத்தைப் பருக்கச்செய்து, கனத்த பிசல்களும் நெடிய வலிய சரீரங்களுமாய் இருக்குமவர்கள். உத்தமர்கட்கு என் செய்வாரே – பகவானுடைய குண அநுசந்தானத்தாலே மெலிகின சரீரத்தையுடையராய் இருந்துள்ள மஹா புருஷர்களுக்கு ஒருவருக்கொருவர் உணர்த்திக்
கொள்வதற்கு உசாத்துணை ஆவார்களோ? ‘பிறப்பிற்குப் பிரயோஜனம் வைஷ்ணவர்களுக்கு உறுப்பாமதுவே,’ என்கிறார்.
1ஈசுவரன், தன்னையும் தன் விபூதியையும் அடியார்களுக்கு உடைமையாக்கியன்றோ வைப்பது? 2ஆயிரத்தளியிலே இராஜா இருக்கச்செய்தே பெரிய நம்பியையும் ஆழ்வானையும் நலிந்தானாய், ஆழ்வான் மடியிலே சாய்ந்து கிடக்கச்செய்தே, பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார்; அவ்வளவிலே ‘ஒருவரும் இல்லாதாரைத் தகனம் பண்ணக்கடவோம்,’ என்று திரிகிறார் சிலர் அங்கே வந்து, ஆழ்வானைக் கண்டு, ‘ஒருவன் உண்டிறே’ என்று போகப் புக, ஒருவரையும் ஒரு குறை சொல்லியறியாதவன், ‘வாரிகோள் மாணிகள்! வைஷ்ணவனுமாய் ஒருவனும் இல்லாதான் ஒருவனைத் தேடிப் பிரதிபத்திபண்ண இருக்கின்றீர்களோ நீங்கள்? ஈசுவரனும் ஈசுவர விபூதியும் வைஷ்ணவனுக்குக் கிஞ்சிக்கரிக்க இருக்க, வைஷ்ணவனுமாய் அறவையுமாயிருப்பான் ஒருவனை நீங்கள் எங்கே தேடுவீர்கள்?’ என்றானாம்.
அடியார்களுக்கு உடைமை ஆக்கி வைக்கும் என்றதற்கு ஐதிஹ்யம்
காட்டுகிறார், ‘ஆயிரத்தளியிலே’ என்று தொடங்கி. ஆயிரத்தளி – பழையாறை
– நாதன்கோயில் – நந்திபுரவிண்ணகரம் என்னும் தலம். இங்கே சோழர்களும்,
பின்னர்ப் பல்லவர்களும், பின்னர்ச் சோழர்களும் சில காலம் இருந்து
அரசாண்டனர். இராஜா – கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த
சோழ அரசன்.
ஆஸ்ரித பஷா பாதம் ஈடுபட்டு
நையாமல் இருப்பவரை நிந்தித்து
ஊன் மல்கி -உடம்பையே நோக்கி
நீர்மையில் நூற்றுவர் -துரி யோதநாதிகள்
ஒருபடியலும் இசையாதே
எங்கள் பந்துக்கள் ஜீவிக நாம் ஜீவிக
மாட்டோம் ஐந்து நகரம் கிராமம் குடிசை கேட்டு
ஒரு குடியும் கொடோம் –
கிருஷ்ணன் உண்டே தர்மம் உண்டு அவர்களுக்கு
பூமியை நாங்கள் ஆள -ஸ்வர்க்கம் அவர்க்கள் பெற்று போகட்டும்
நெற்றியை கொத்தி பார்த்தால்பசை அற்றவாறே -ரத்தம் பொ சியாமல்
ராஜ்ஜியம் லோகம் சுகம் யாருக்காக அர்ஜுனன் சொன்னானே
நீர்மை அங்கு இல்லை இங்கு இருந்தது
ஆசுர பிரக்ருதிகள்
உளுத்து போகும்படிக்கு ஈடாக அழித்து
அருள் செய்து நின்று
நின்று தனி அர்த்தம் சாதிக்கிறார்
சுக்ருது ரஷிகிற வன் கிருஷ்ணன்
எல்லாம் தானாக நின்றான் -பரவி இருந்தான்
கொடுத்து
பரம் சுடர் -அருளி வந்த புகர்
சேனாதி தூளியும் -சிருவாய் கயிறு
தேருக்கு கீழே நாட்டிய திருவடிகள் சதங்கை
கையும் உழவு கோலும் –மாம் என்று தொட்டு காட்டுகிறார்
ஆஸ்ரித பஷ பாதம் -நினைந்து கண்ண நீர் சோர –
நெஞ்சம் குழைந்து -உடம்பு மட்டும் இன்றி
நையாமல்
சரீரம் பருக்க பண்ணி
உத்தமர் -என் செய்வார் –
உசாத் துணை ஆக மாட்டார்கள் –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -என்ன பிரயோஜனம்
உடம்பு எடுப்பதே இதற்க்கு தானே –
பாகவதர்களுக்கு உபயோகம் இன்றி
ஜென்மத்துக்கு பிரயோஜனம்
ஈஸ்வரன் தன்னையும் தன்னுடைய விபூதியும் ததீயருக்கு கொடுத்து அருளி
பெரிய நம்பி பரம பதம் கிட்டிய ஐதீகம் –
அநாதி சம்ஸ்காரம்
அநாதி இல்லையே வைஷ்ணவனுக்கு -கூரத் ஆழ்வான் அருளிய ஸ்ரீ ஸூக்தி
ஆயிரத்தடி -ராஜா இருக்க செய்தே –
ஒருவனையுமொரு குறை சொல்லி அறியாதவர் -கூரத் ஆழ்வான் –
பாவிகாள் -வைஷ்ணவனாய் ஒருவனாய் இல்லாதவனை தேடி கிடப்பானோ
ஈஸ்வரனும் ஈஸ்வரன் விபூதியையும் அவன் கிஞ்சித் கரித்து இருக்க
அநாதி யாயும் வைஷ்ணவனாயும் இருக்க முடியாதே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply