திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-4-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

யாவையும் எவரும் தானாய்
அவர்அவர் சமயந் தோறும்
தோய்வுஇலன்; புலன்ஐந் துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவிசேர் உயிரின் உள்ளால்
ஆதும்ஓர் பற்றுஇ லாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.

    பொ-ரை : ‘அறிவில்பொருள்களும் அறிவுடைப்பொருள்களும் தானேயாய், அவர் அவர்களுடைய அவஸ்தைகளில் பற்று இல்லாதவனாய், ஐம்பெரும்புலன்களாலும் அறியப்படாதவனாய், ஞான உருவினனாய் இருப்பான் இறைவன்; உடலோடு கூடியிருக்கிற உயிரினுடைய சொரூபத்தில், சரீரத்தினுடைய தோன்றுதல் வளர்தல் குறைதல் முதலிய தன்மை வேறுபாடு ஒன்றிலும் பற்றில்லாத பாவனையானது ஆத்துமாவின் பக்கல் கூடுமாகில், சரீரத்தினுடைய வளர்தல் குறைதல் முதலிய தன்மைகளும், ஆத்துமாவினுடைய இன்ப துன்பங்களும் சாரமாட்டா என்னுமிதுவும், அவ்விறைவனையும் கூடலாம்,’ என்றவாறு.

    வி-கு : ‘அவர் அவர் சமயந்தோறும்’ என்ற இடத்து ‘அவையவை சமயந்தோறும்’ என்பதனையும் சேர்த்துக்கொள்க. சமயம்-அவஸ்தை; விகாரம். ஆவி-உடல்; ஆகுபெயர். ஆதும்-யாதும் என்றதன் மரூஉ. ‘உடம்பினுள் இருக்கின்ற உயிர் அவ்வுடலின்

விகாரங்களை அடைவது இல்லை என்பதனை நாம் நன்கு அறிவோமாயின், அவ்வுடல் அவ்வுயிர் இரண்டினுள்ளும் இருக்கின்ற இறைவன் அவ்விரண்டின் விகாரங்களையும் அடைவதில்லை என்பதையும் நாம் நன்கு தெளியலாம்,’ என்பது பின்னிரண்டு அடிகளின் கருத்து.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1‘அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களுக்கு உள்ளுயிராய் நிறைந்து நின்றாலும், அவற்றின் குற்றங்களால் தீண்டப்படாதவன்’ என்கிறார்.

    யாவையும் எவரும் தானாய் – அறிவுடைப்பொருள் அறிவில் பொருள் முழுதும் ‘தான்’ என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும் படி சரீரமாகத் தான் ஆத்துமாவாய். அவர் அவர் சமயந்தோறும் – அவர் அவர்களுடைய அவஸ்தைகளில்; மக்களுடைய பன்மையை நோக்கி ‘அவரவர்’ என்கிறார். மேற்பாசுரத்தில் ‘யாவையும் எவரும்’ என்று ஒருசேர எடுக்கையாலே அதனைத் தொடர்ந்து பின்னே கூறுகின்ற இப்பாசுரத்திலும் ‘அவையவை’ என்று அசித்தும் தன்னடையே வந்து சேரும். ‘ஆயின், அதுதன்னைக் கூறாது ஒழிந்தது என்னை?’ எனின், முதன்மை இன்மையாலும் அதிகார பலத்தால் தன்னடையே வரும் என்னும் கருத்தாலும் கூறாதொழிந்தார். ஆக, சரீரத்தினுடைய 2பரிணாமம் முதலியவைகளையும், ஆத்துமாவினுடைய இன்பதுன்பங்களையும் நினைக்கிறது. தோய்விலன் – அறிவுடைப்பொருள் அறிவில்பொருள்கள் ‘தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படி அவற்றோடே கலந்து நிற்பினும், அவற்றினுடைய தோஷங்கள் தன் பக்கல் தட்டாதபடி நிற்பான். ‘ஆத்துமாவிற்கு, சரீரத்திற்கு உண்டாகும் பரிணாமம் முதலியவைகள் இல்லையேயாயின், அந்தச் சரீரத்தின் சேர்க்கையாலே இன்பதுன்பங்கள் உண்டாகின்றனவே! அப்படியே, இச்சேதந அசேதநங்களெங்கும் புக்குப் பரந்துநின்றால், அவற்றினுடைய தோஷம் இறைவனைப் பற்றாதோ?’ எனின், அவற்றால் தீண்டப்படாதவனாக இருப்பான். ‘ஆயின், எல்லாம் செய்யினும் இவ்வாத்துமாவிற்கு இன்ப துன்பங்கள் இல்லாமலே இருக்க, இச்சரீரத்தினுடைய சேர்க்கையால் அன்றே ஆத்துமாவிற்கு இன்ப துன்பங்கள் உண்டாகின்றன? அப்படி இறைவனுக்

கும் கூடாதோ?’ என்னில், கூடாது; அதற்கு அடி – உட்புகுதற்கு உளதாய காரண விசேடம். என்றது, ஆத்துமா கர்மமடியாகப் பிரவேசிக்கின்றது; இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக்கூடத்திலே சிறையனும் கிடந்தான்; அரசகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போகரூபமாயிருந்தது. 1‘ஆத்துமாவும் இறைவனும் ஒரு சரீரத்தைப் பற்றித் தங்கியிருக்கின்றார்கள்; அவர்களுள் ஆத்துமாவானது கர்ம பலத்தை அனுபவிக்கின்றது; இறைவன் கர்ம பலத்தை அனுபவியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்பது மறை மொழி.

    புலன் ஐந்துக்கும் சொல்லப்படான் – ஐம்புலன்களுக்கும் விஷயமாகச் சொல்லப்படான். அன்றிக்கே, ‘நினைத்தேயன்றோ சொல்லுவது? அங்ஙனம் சொல்லுதற்கு முன்பில் நினைவினை ஆகுபெயரால் கூறியதாகக் கொண்டு அந்நினைவினால் நினைக்கப்படான்,’ என்னுதல். ‘பின்னை, அவன்தான் இருக்கும்படி என்?’ என்னில், உணர்வின் மூர்த்தி – ஞானத்தையே வடிவாகவுடையவனாயிருப்பான்.

    ‘எல்லாம் செய்தாலும் இவற்றோடு உண்டான சேர்க்கை மெய்யாயிருக்க, இவற்றினுடைய தோஷம் தன்பக்கல் தட்டாதபடியிருப்பான் என்னும் இது கூடுமோ?’ என்னில், ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்றிலாத பாவனை அதனைக்கூடில் அவனையும் கூடலாம் – உடலில் சேர்ந்திருக்கின்ற உயிரினிடத்து அந்தச் சரீரத்திற்கு உண்டான பால்யம் யௌவனம் முதலியவைகள் ஒன்றினாலும் ஒரு சம்பந்தமும் இல்லையாம்படியாகச் சொல்லுகிற சொல்லானது அந்த ஆத்துமாவிற்குக் கூடாநின்ற பின்பு, அப்பொருள் அவனையுங்கூடத் தட்டு இல்லை.

    அன்றிக்கே, பின்னிரண்டு அடிகட்கு, 2‘அவன் பக்கல் பத்தி உண்டாகில் அவனைக் கிட்டலாம்’ என்றும், ‘புறம்பே உள்ளவேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும் விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்’ என்றும், ‘மரண காலத்தில் நம்பிக்கை உண்டாகில் அவனைக் கூடலாம்’ என்றும் வேறு வேறு வகையாகவும் பொருள் அருளிச்செய்வர். இவ்வுரை விகற்பங்களை எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிரண்டு அடிகளில் எங்கும் பரந்து நிறைந்திருத்தலை அருளிச்செய்தாராதலின், இனி வியாபிக்கப்படுகின்ற பொருள்களினுடைய தோஷங்கள் எங்கும் பரந்து நிறைந்திருக்கிற இறைவனுக்குத் தட்டமாட்டா என்னுமிடம் அவசியம் சொல்ல வேண்டும்; ஆன பின்னர், 1இத்தையே சொல்லிற்றாக அமையும்,’ என்று அருளிச்செய்வர். 

பின் இரண்டு அடிகட்கு வேறு வகையாகக் கூறப்படும் மூன்று விதமான
பொருள்களை அருளிச்செய்கிறார். ‘அவன் பக்கல் பத்தியுண்டாகில் அவனைக்
கிட்டலாம்’ என்றது, முதல் யோஜனை; பத்தி பரமாக அருளிச்செய்தது;
‘ஆத்துமாவோடு சேர்ந்திருக்கிற பரமாத்துமாவின் பக்கலிலே பத்தியானது
உண்டானால், அந்தப் பரமாத்துமாவையும் கூடலாம்,’ என்பது

இதற்குப் பொருள்; இங்கு, ஆவி – உயிர்; உயிர் – பரமாத்துமா. பாவனை –
பத்தி. ‘புறம்பேயுள்ள வேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும்
விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்,’ என்றது, இரண்டாவது
யோஜனை; இது, பிரபத்தி பரமாக அருளிச்செய்தது; இங்கு
யாதுமோர்பற்றிலாத பாவனையாவது, வேறு உபாயங்கள் ஒன்றிலும் ஒரு
சிறிதும் பற்று இன்றி இருக்கும் பாவனையாம்; ‘களைவாய் துன்பம் களையா
தொழிவாய் களைகண் மற்றிலேன்’ என்றிருப்பது. ‘மரண காலத்தில் நம்பிக்கை
உண்டாகில் அவனைக் கூடலாம்’ என்றது, மூன்றாவது யோஜனை; இது,
அந்திம ஸ்மிருதி பரமாக அருளிச்செய்தது; இங்கு, யாதுமோர் பற்றிலாத
பாவனையாவது, வேறுபட்ட பொருள்கள் ஒன்றிலும் ஒரு சங்கமில்லாத
அந்திம ஸ்மிருதியாகும்; ‘உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனால்
யாதொன்று பாவிக்கப்பட்டது? அஃது அதுவாய்த் தோன்றும்,’ என்பது எல்லா
ஆகமங்கட்கும் துணிபாகலின், வீடெய்துவார்க்கு அக்காலத்துப்
பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே
பாவித்தல் வேண்டும்: அதனான், அதனை முன்னே பயிறலாய இதனின் மிக்க
உபாயமில்லை என்பது அறிக,’ என்று பரிமேலழகருரை இங்கு ஒப்பு
நோக்கலாகும்.

(திருக்குறள்,  358.)

1. ‘இத்தையே சொல்லிற்றாக அமையும்’ என்றது, ‘சரீரத்துக்கு உண்டாகும்
பால்யம், யௌவனம் முதலானவைகள் ஆத்துமாவைச் சாரமாட்டாத
தன்மையைப் போன்று, உடல் உயிர் என்னும் இவ்விரண்டின் தோஷங்களும்
இறைவனைச் சாரமாட்டா என்னும் இதனையே சொல்லிற்றாக அமையும்,’
என்றபடி. ஆக, ‘ஆதுமோர் பற்றிலாத’ என்பதற்கு, ‘அநுசந்தான பரமான
போது சரீரத்திற்குண்டாகின்ற பால்யம் முதலிய தோஷங்கள் ஒன்றிலும் ஒரு
சம்பந்தமில்லாத’ என்றும், பத்தி பரமான போது ‘பிரயோஜநாந்தரங்களில்
பற்றில்லாத’ என்றும், பிரபத்தி பரமானபோது ‘உபாயாந்தரங்களில்
பற்றில்லாத’ என்றும், அந்திம ஸ்மிருதி பரமான போது ‘வேறுபட்ட
விஷயங்களில் சங்கமில்லாத’ என்றும் நான்கு வகையாகப் பொருள்
அருளிச்செய்யப்பட்டமை காணலாம்.

அந்தராத்மா வியாபித்து இருந்தும்
தத் கத தோஷம் இன்றி இருக்கிறான் –
வேதாந்த விஷயம்-தானாய் -அந்தராத்மா
தான் சொல்லுக்குள் அடங்கும்படி பிரகாரியாய் இவனும் இருக்கிறான்
பிரகாரம் மற்று எல்லாம் -விசேஷணம் -அடை மொழி –
அவரவர் -தன்மையை பற்றி -அவையவை தன்னடையே வரும் சொல்லாவிடிலும்
சமயம் -நிலைகள் எல்லாம் -சேர்ந்து இருக்கிறான் –
எடாது ஒழிவான் -அப்ராதான்யம் என்பதால் -சொல்லாமலே வரும்
பிரகரணத்தில் சேர்த்து சேர்த்து அருளி இருக்கிறார் –
சமயம் விவஸ்தை நிலை
பரிமாணாதிகள் -அச்சிதுக்கு ஸ்வரூபம் மாறுமே –
சுக துக்கம் சேதனர் -அணு ஸ்வரூபம் என்றும் -ஸ்வா பாவம் மாறுபாடு உண்டே
சேர்ந்தே உள்ளவன் -தோய்விலன் -தோஷம் தட்டாமல் இருக்கும்
செதனருக்கு பரிமாணாம் இல்லை -சுகித்வம் துக்கித்வம் உண்டே
ஆவி சேர் உயிர் -சரீரம் சேர்ந்த ஜீவாத்மா
பற்று இல்லாத பாவனை -ஆத்மாவை வெட்டவோநனைகவோ முடியாதே
-மூப்போ தட்டாதே -சரீரம் தோஷம் வாராது
சுகித்வம் துக்கித்வம் மட்டும் உண்டே அனுபவிக்க ஆத்மா
மாறுபாடுகள் ஒட்டாது –
ஆத்மாவின் சுக துக்கங்கள் எம்பெருமானை தட்டாது -தோய்விலன் என்கிறார் –
ஆதுமோர் பற்றிலாத பாவனை ஜீவாத்மாவுக்கு கூடுமானால் அவனையும் கூடலாமே
முதல் அர்த்தம் -ஸ்பரசியாதோ -ஒட்டாது
தனிப் பட சுக துக்கம் ஆத்மாவுக்கு இல்லை ப-அசித் உடன் சேர்ந்து கிட்டுமே
இவனுக்கும் கூடாதோ -என்னில் -அதுக்கடி ப்ரேவேச ஹேது வாசி
ஜீவாத்மா கர்மம் அடியாகபுகுந்து -அதனால் சுக துக்கம் -சரீரம் பாபம் புண்யம் அனுபவிக்க
உபகரணம் -காரணத்தால் வந்த விளைவு
எம்பெருமான் கருணை -இச்சையால் புகுந்து -அனுக்ரகம் அடியால் பிரவேசம் –
சிறைக்கூடம் சிறை யன் -போலே அன்றி ராஜகுமாரன் போக ரூபமாய் வேடிக்கை பார்க்கிறான் -முண்டோபக உபநிஷத் பிரமாணம்
பறவைகள் இரண்டு -தோய்விலன் அர்த்தம் -அவரவர் சமயம் தோறும் -தோய்விலன்
புலன் ஐந்துக்கும் -உணர முடியாது
நினைவாலும் அறிய முடியாது
இருக்கும்படி தான் என்
உணர்வில் மூர்த்தி பிரகாசமே ஸ்வரூபம் மூர்த்தி எனபது
ஆவி சேர் உயிர் உண்டு -ஆதுமோர் பற்றிலாத பாவனை
அவனையும் கூட தட்டில்லை –

கையில் ஓட்டுவது நாக்கில் ஒட்டவில்லையே –
அவயவங்களில் வாசி உண்டே
அவன் பக்கலில் பக்தி உண்டானால் கிட்டலாம் அடுத்த அர்த்தம்
ஆவி சேர் உயிர் -ஜீவாத்மா உள்ளே பரமாத்மா இடம் வேறு எதிலும் பற்றி இன்றி பக்தி
வேறு உபயம் விட்டு அவனையே
அந்திம ஸ்மரதி உண்டானால் -பக்தி யோக நிஷ்டர்
எம்பெருமானார் நிர்வாகம்
இந்த இரண்டு அர்த்தங்கள் –உபாயாந்தரங்கள் -அந்திம ஸ்ம்ருதி இரண்டு அர்த்தம்
கீழே வ்யாப்தி சொல்லி -வ்யாப்த வஸ்துகதமான தோஷங்கள் தட்டாது
என்னும் இடம் அவசியம் சொல்ல வேண்டும் என்பதால் முதல் அர்த்தமே கொள்ளுதல் தகும் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply