வருந்தாத அருந்தவத்த
மலர்கதிரின் சுடர்உடம்பாய்
வருந்தாத ஞானமாய்
வரம்புஇன்றி முழுதுஇயன்றாய்;
வருங்காலம் நிகழ்காலம்
கழிகால மாய்உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர்
எங்குஉலக்க ஓதுவனே?
பொ-ரை : வருந்தாமலே வந்த ( இயற்கையாகவுள்ள ) மிக மலர்ந்த பேரொளியுருவனாய் இயல்பிலேயமைந்த ஞானவுருவனாய் எல்லை இல்லாதபடி எல்லாப்பொருள்களிலும் நிறைந்திருக்கின்றாய்; மூன்று காலங்களுக்கும் உரியவனாகி, உலகங்களையெல்லாம் ஒரு படிப்படப் பாதுகாக்கின்றாய்; இத்தகைய உன்னுடைய நற்குணங்களை முடிவு பெறும்படி எங்ஙனம் கூறுவேன்?
வி-கு : தவத்த – உரிச்சொல் ஈறு திரிந்தது; ‘தவ’ என்பது சொல். ‘உடம்பாய் முழுதியன்றாய்,’ என்க. ‘ஓதுவன் என்பதில் ‘அன்’ விகுதி தன்மைக்கண் வந்தது.
ஈடு : ஐந்தாம் பாட்டு. மூன்றாம் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் நேரே சங்கதி. நான்காம் பாட்டில் நாட்டாருடைய இழவு நடுவே 3பிரசங்காத் பிரஸ்துதமித்தனை. ‘கோவிந்தா’ பண்புரைக்க மாட்டேனே,’ என்று சொல்லுவான் என்? நாட்டாருடைய பேரிழவு நிற்க; மயர்வற மதிநலம் அருளப்பெறுகையாலே நீர் வேறுபட்டவரே; உலகத்தாரில் வேறுபட்ட அளவேயோ! விண்ணுளாரிலும் வேறுபட்டவரே; ஆதலால், நீர் நம்மைப் பேசமாட்டீரோ?’ என்ன, ‘என்னை எல்லாரிலும் வேறு
பட்டவனாக்கினாயித்தனை அல்லது உன்னை ஓர் எல்லைக்குட்பட்டவனாக்கினாய் இல்லையே!’ என்கிறார்.1
வருந்தாத வருந் தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய் – ‘இவ்வடிவழகினை என்னால்தான் பேசலாயிருந்ததோ?’ என்கிறார். சுவாபாவிகமாய் வருவதாய், மிகவும் மலர்ந்த கிரணங்களையுடைய தேஜோ ரூபமாய். தவ – மிகுதி. இனி, வருந்தாத அருந்தவத்த என்பதற்கு, ‘திருமேனியைக் கண்டவாறே அரிய தவத்தின் பலமோ?’ என்று தோன்றும்; சிறிது மூழ்கிக் கண்டவாறே, ‘ஒரு தவத்தின் பலமன்று; ஸஹஜமான பாக்கியத்தின் பலம்,’ என்று தோன்றும் என்று பொருள் கூறலுமாம். முன்னைய பொருளில், ‘வரும் தவத்த’ என்றும், இப்பொருளில், ‘அருந்தவத்த’ என்றும் பதங்களைப் பிரித்துக்கொள்க. மலர்ந்த கிரணங்களையுடைய ஒளியுருவமாய், அதுதன்னில் மண் பற்றைக் கழித்து, இராசத தாமதங்கள் கலத்தலின்றிச் சுத்த சத்துவமயமாய், நிரவதிகப் பேரொளி யுருவாய், ஆத்தும குணங்களுக்கும் பிரகாசகமான திவ்விய விக்கிரகத்தையுடையவனாதலின், ‘மலர் கதிரின் சுடர் உடம்பாய்’ என்கிறார். ‘ஆயின், குணங்கள் பிரகாசிப்பதற்குக் காரணம் என்னை?’ எனின், கர்மங்கள் காரணமாக வருகின்ற சரீரங்கள் போலன்றே, இச்சையினாலே மேற்கொள்ளப்படுகின்ற சரீரம் இருப்பது? என்றது, 2நம்மைப் போன்றவர்களுடைய சரீரங்கள் பாபத்தாலேயாயிருப்பன சிலவும், புண்ணியத்தாலேயாய் இருப்பன
சிலவும், புண்ணிய பாவங்களாலேயாயிருத்தல் சிலவுமாக இருப்பனவாமன்றோ? எங்கும் நிறைந்தவனாய் உலகமே உருவனாயிருக்கிற இறைவன் சரீரத்தை மேற்கொள்ளுவது, 1‘காண வாராய்’ என்று விடாய்த்திருப்பார் கண்டு அனுபவிக்கைக்குத் தண்ணீர்ப் பந்தல் வைத்தபடியேயாம் என்றபடி. 2தேவரீருடைய திவ்விய மங்கள விக்கிரகமும் தேவரீருக்கன்று; தேவர் அடியர்களுக்காகவே பிரகாசிக்கின்றீர்,’ என வருதல் காண்க.
வருந்தாத ஞானமாய் – ஒரு சாதனத்தைச் செய்தாதல் மயர்வற மதிநலம் அருளப்பெற்றாதல் வந்ததன்றி, ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனாய். வரம்பின்றி முழுது இயன்றாய் – எல்லையில்லாத எல்லாப் பொருள்களையும் நிர்வஹித்தாய். இயலுகை – நிர்வஹிக்கை. ‘உடையவனாதலின் உடைமையை நிர்வஹிக்கிறான்,’ என்றபடி. உடையவனாய்க் கடக்க நிற்கையன்றி நோக்கும்படி சொல்லுகிறார்
மேல் : வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவன் – ‘முக்காலத்திற்கும் நிர்வாஹகனாய் உலகங்களை ஒருபடிப்படக் காத்துக்கொண்டு செல்லுகிற உன்னுடைய கல்யாண குணங்களை என்னாலே முடியச் சொல்லித் தலைக்கட்டலாயிருந்ததோ? இல்லை,’ என்றபடி.
‘உன்னுடைய திவ்விய மங்கள விக்கிரகத்தின் வைலக்ஷண்யம் அது; எல்லாப்பொருள்களையும் ஒரே காலத்தில் காட்சிக்கு இலக்கு ஆக்கும் ஆற்றலுடையவனாயிருக்கிற இருப்பு அது; பாதுகாக்குந்தன்மை அது; ஏதென்று பேசித் தலைக்கட்டுவன்?’ என்கிறார்.
1. மூன்றாம் பாசுரத்தைக்காட்டிலும் இப்பாசுரத்தில் சொல்லப்பட்ட
விசேடப்பொருள், ‘விண்ணுளாரிலும் வேறுபட்டவரே’ என்பது, முதல் பத்து,
ஈட்டின் தமிழாக்கம், அவதாரிகை, ‘திருமகள் கேள்வன் ஒன்று’ பக். 16.
காண்க. ‘வரம்பின்றி முழுதியன்றாய்’ என்றதனைக் கடாக்ஷித்து ‘உன்னை ஓர்
எல்லைக்குட்பட்டவனாயில்லையே!’ என்கிறார்.
2. ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 1 : 50. இந்தச் சுலோகம் கீழே தரப்படுகின்றது:
‘நாகாரணாத் காரணாத்வா காரணா காரணாந்நச
ஸரீர க்ரஹணம் வ்யாபிந் தர்மத்ராணாய கேவலம்.’
இச்சுலோகத்தில் ‘அகாரணம்’ என்றது, காரியத்தை; ‘காரணம் என்றது,
மூலப்பிரகிருதியை; ‘காரணாகாரணம்’ என்றது, மகத்து முதலான
தத்துவங்களை. இதனால், ‘நீ சரீரத்தை மேற்கொள்ளுவது
இவைகளினாலேயன்று; தர்மத்திற்காகவே,’ என்பதனைக் குறித்தவாறு. ‘சுவை
ஒளி ஊறு ஓசை’ என்ற திருக்குறளின் விசேடவுரையில் பரிமேலழகர்
எழுதியுள்ளவை இச்சுலோகத்தின் பொருளை விரித்துரைப்பதாக
அமைந்திருத்தல் காண்க.
மூன்றாம் பாட்டுக்கும் இதற்கும் நேரே சங்கிதி
கோவிந்தா –
நாட்டார் இழவு கிடக்கட்டும்
வின்னுலரிலும் சீரியர் நீர் பேசுமே
வ்யாவர்தனாய் ஆக்கினாய் ஆனால் உன்னை தாழ்ந்தவனாய் மாற்றிக் கோல விலை
அவதி இல்லாமல் -சவதி -ஆக்கி கோல விலையே
எல்லை
இல்லாதவன் சாவதி ஆக்கிற்று இல்லையே
உன்னாலே அருளப் பெற்ற எந்நாளும் பேச முடியாதே
எங்கு உரக்க பேசுவனே
வருந்தாத அரும் தவத்த -கஷ்டப் படாமல் ச்வாபாவிக பயன்
சுடர் உடம்பு
வருந்தாதஞானம்
முகாலதிலும் ஒருன்காகா உலகம் காத்து
சீரை எங்கனம் சொலுவேன்
ஸ்வாபாவிக -இயற்க்கை மலர்ந்த தேஜோ ரூபன்
அரும் தவ பயன் -திரு மேனி கண்டதும் பேச தோன்றும் –
யாரை குறித்து தவம் செய்ய வேண்டும் சகஜ பலன்
சுடரே உடம்பாக
தேஜோ ரூபமாய் ஒளிக் கற்றை ரஜஸ் தமஸ் இன்றி
சுத்த சத்வமாய் -திவ்யமங்கள விக்ரகம் கர்ம நிபந்தன தேகம் போல் இன்றிகே
இச்சா அடியாக
பாபத்தால் சரீரம் புண்யத்தால் சரீரம் உபயத்தால் சரீரம்
பிரம்மா அருளிய ஸ்தோத்ரம் -பூபால நிரசனா அர்த்தம் –
நா காரணா த்வ -தர்மம் காப்பாற்ற -அக்காரணம் –
கார்யம் மூலப் பிரகிருதி
இரண்டையும் –
காரனாகாரணம் மகதாதிகள்
கம் சுகம் சுக துக்கம் காரணம் இன்றி
இரண்டு அர்த்தங்கள் -இவை காரணம் இல்லை
சரீர -சர்வகதனாய் ஜகத் சரீரனாய் -தர்மம் நிலைநாட்ட
ராமோ விக்ரவான்தர்ம
பார்க்க ஆசைப் பட்டவர்களுக்கு
காண வாராய் விடாய்த்து இருப்பாருக்கு தண்ணீர் பந்தல் வைபாரை போலே
தன்னைக் கொடுக்க சரீர -தொழும் காதல் களிறு அளிப்பான் –
விசேஷ அர்த்தம் காட்டுகிறார் தர்மம் நிலை நாட்டதிருமேனி -கொண்டு சேவை சாதிக்கிறான் –
பக்தர்களுக்கு ந தே ரூபம் -பக்தாநாம் –
அருள் அவன் கொடுக்க
அவனுக்கு ஸ்வாபாவிக –
வரம்பு இன்றி அனைத்தையும் நிர்வகிக்க
உடையவன் உடைமை இயல நிர்வகிக்க
உடையவனாய் இருந்து உடைமையை ரஷிக்க வேண்டுமே
கடக்க நிற்கை அன்றி நோக்குகையே சொல்லுகிறது
உன்னுடைய விக்ரக வை லஷண்யம் அது
ஞானம்
அளிக்கின்ற ரஷகத்வம்
மூன்றையும் சொல்லி எப்படி சொல்லி தலைக் -கட்டுவேன்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply