மாட்டாதே ஆகிலும்இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டுஆய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய்; மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தாய்; மாஞாலம் வருந்தாதே?
பொ-ரை : ‘பரந்த இடத்தையுடைய பெரிய இந்த உலகமானது உன்னுடைய மலர் போன்று மெல்லிய திருவுருவத்தை மனத்தின்கண் வைத்துத் தியானிக்கமாட்டாது; அதற்குமேல், திருவுருவத்தைத் தியானிக்கவொண்ணாதபடி பல சமய மதி வேறுபாடுகளையும் உண்டாக்கினாய்; உண்டாக்கி, நீ மலர்களையுடைய திருத்துழாயினிடத்தில் விருப்பத்தைச் செலுத்தினாய்; இங்ஙனமிருப்பின், இப்பெரிய பூவுலகமானது வருந்தாதோ? வருந்தும்,’ என்றபடி.
வி-கு : ஞாலம் – ஆகுபெயர். ‘மா ஞாலம் மனம் வைக்க மாட்டாது,’ எனக் கூட்டுக. ‘திருவுருவம் மனம் வைக்க’ என்பதனை இடைநிலைத் தீவகமாக முன்னும் பின்னுங்கூட்டுக.
ஈடு : நான்காம் பாட்டு. 1மேற்பாசுரத்தில், தாம் ‘உரைக்க மாட்டேன்’ என்றார்; இவனுடைய போக்யதாதிசயம் இருந்தபடியால் சிலராலே கிட்டலாயிருந்ததில்லை; இனி சமுசாரிகள் இழந்து நோவுபட்டுப் போமித்தனையன்றோ என்று அழகருடைய அழகின் மிகுதி பேசுவிக்கப் பேசுகிறார்.
இம்மலர்தலை மாஞாலம் நின்மாட்டாய மலர்புரையும் திரு உருவம் மனம் வைக்க மாட்டாதேயாகிலும் – 2திருநாபிக்கமலத்தை அடியாகவுடைத்தான இப்பெரிய உலகமானது உன்னுடைய நிதி போலச் சிலாக்கியமாய் மலர்ந்த புஷ்பத்தினுடைய சுகுமாரமாயிருந்துள்ள திருமேனியிலே நெஞ்சை வைக்க மாட்டாதேயாகிலும். ‘உலகம் மாட்டாமைக்குக் காரணம், படைக்கப்படுதல், கர்மங்கட்குக் கட்டுப்பட்டிருத்தல்’ என்பார், ‘இம்மலர்தலை மாஞாலம்’ என்கிறார். மாடு – செல்வம். மாடு என்பது மாட்டு எனத் தன்னொற்று மிக்கது. இனி, ‘நின் மாட்டாய’ என்பதற்கு ‘உன்னிடத்திலேயான’ என்று பொருள் கூறலுமாம். முதற்பொருளில் மாடு என்பது பெயர்ச்சொல்; இரண்டாவது பொருளில் உருபிடைச்சொல். இனி, ‘மாட்டாய’ என்பதனை ‘மட்டு ஆய’ என்ற சொல்லின் நீட்டல் விகாரமாகக் கொண்டு, ‘திருவடிகளில் தேனினுடைய வெள்ளம் பெருகுகிறது,’ என்கிறபடியே,
தேனின் பெருக்குப் பெருகுகிறது ஆகையாலே, 1நிரதிசய போக்கியமான திருமேனி என்று பொருள் கூறலும் ஒன்று. மட்டு-தேன். ‘ஆகிலும்’ என்பதற்கு, ‘மாட்டாதிருந்தும்’ என்பது பொருள். அதாவது, ‘கர்மங்காரணமாகப் படைக்கப்பட்ட சேதநர்கட்குக் கர்ம சம்பந்தமற்றால் அனுபவிக்கும் உன் திருமேனியிலே நெஞ்சை வைக்க முடியாதன்றோ? ஆதலால், இதுதானே போரும் கேடு; இக்கேட்டிற்கு மேலே,’ என்றபடி.
நின் திருவுருவம் மனம் வைக்க மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் – 2உன் திருமேனியிலே மனத்தை வைக்க மாட்டாதவையாய், அவைதாம் பலவாய் இருக்கின்ற சமயமுண்டு – வேறு மதங்கள்; அவற்றின் பக்கலிலே மனத்தை வைக்கப் பண்ணினாய். இதற்கு, ‘உன் திருமேனியிலே மனத்தை வைக்கவொண்ணாதபடி புறமான பல சமய மதி பேதங்களையும் செய்துவைத்தாய்,’ என்று பொருள் கூறலுமாம்; அதாவது, ‘பண்டே உன்னையறியாத சமுசாரிகளுக்கு மதிபேதங்களை உண்டாக்கினாய்,’ என்றபடி. இவையித்தனையும் பயனற்றுப் போமன்றோ, நீதான் இவற்றுக்கு வந்து கிட்டலாம்படி இருந்தாயாகில்? மலர்த்துழாய் மட்டேநீ மனம் வைத்தாய் – ‘உன் திருவுள்ளத்தையும் கால் தாழப்பண்ணவல்ல திருத்துழாய் தொடக்கமான போக்கிய 3ஜாதத்திலே திருவுள்ளத்தை வைத்தாய். இதனால், உன்னுடைய போக்கியதை சிலரால் கிட்டலாய் இருந்ததோ?’ என்கிறார். மாடு – இடம்; ‘அதன் பக்கல்’ என்றபடி. மா ஞாலம் வருந்தாதே – ‘இப்பெரிய பூவுலகமானது இங்ஙனம் நோவுபட்டுப் போமித்தனையேயோ!’ என்கிறார்.
கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களாகையாலே, அவர்களாகவே உன் பக்கல் மனத்தினை வைக்க மாட்டிற்றிலர்; அதற்கு மேலே நீ பல விலக்கடிகளையும் உண்டாக்கி வைத்தாய்; நீயோ,நிரதிசய போக்கிய ஜாதத்திலே 1பிரவணன் ஆனாய்; உன்னை விட்டால், பின்னை 2’நினைவு தவறுவதால் புத்தி நாசமடைகிறது; புத்தி நாசத்தினால் நாசமடைகின்றான்,’ என்கிறபடியே ‘புத்தி நாசமடைவதற்குரிய பொருள்களில் இவர்கள் பிரவணர்களாய் இங்ஙனம் நோவுபட்டே போமித்தனையாகாதே!’ என்கிறார் என்றபடி.
2. ‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனை’
என்பது சிலப்பதிகாரம்.
வணங்கும் துறைகள் பலபல வாக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல வாக்கி அவைஅவைதோறு
அணங்கும் பலபல வாக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரைஇல் லாய்! நின்கண் வேட்கை எழுவிப்பனே.’
என்னும் திருவிருத்தப்பாசுரம் இங்கு நோக்கத்தகும்.
தான் உரைக்க மாட்டேன்
போக்யதா விஷயம்
இனி சம்சாரிகள் இழந்து போக கூடாதே
அழகர் அழகில் அவனே மயங்கி இருக்க
பிரசான்கிகமாக இதை -அருளி
வருந்தாதோ ஞாலம்
மாட்டாதே ஆகிலும் –
உனது மலர் புரையும் திரு உருவம் மனம் வைக்க -ஞாலம் மாட்டாதே ஆகிலும்
பார்த்தாலும் பல மதங்கள் உண்டாக்கி -சமயம் கொடுத்தாய் கெடுத்தாய்
தன்னை தானே வேறே அனுபவித்து கொண்டு –
நின் மாட்டாய மலர் புரையும் -உன்னாலே கூட
அவன் இடத்து -உன் பக்கலிலே யான
மட்டு மாட்டு நீட்டி கிடக்க தேன் -மட்டுவிச்சி -பெருகும் மலர் போன்ற திருமேனி
மலர்ந்து இருக்க
கர்மவச்யம் இல்லை
மாட்டை மாடு -செல்வம் நிதி போலே ச்லாக்யமாய் புஷ்பகாச திருமேனி
இவ்வுலகம் மாட்டாது
திரு நாபி கமலத்தை அடியாக கொண்ட இந்த உலகம்
ஆகில் -மாட்டது இருக்க செய்தே
மேலே வேற பல் சமயம் மதி கொடுத்து
உனது திரு மேனியில் நெஞ்சை வைக்கப் போகாதே –
பல பல மத ஞானங்கள் சாக்கியம் -கற்றோம் பேய் ஆழ்வார்
மனம் வைக்க -கீழ் மேலும் அன்வயிக்க
திரு உருவம் மாட்டாத பல சமயம் –
பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள்
பண்டே உன்னை அறிய மாட்டாத சம்சாரிகளுக்கு மதி பேதம் மத பேதம் உண்டாக்கி நீ மனம் வைத்தால்
மலர் துழாய் மாட்டி நீ கால் வைத்தாய் நீயே அனுபவிக்க இனிமை யாக உள்ளதே
நீயும்கிட்டே வராமல்
மாடு -இளம் அதன் பக்கத்திலே
தேன் -மா ஞாலம் நோவு பட்டே போகும் இத்தனை இ றே
கர்மவச்யர் தானே நெஞ்சை வைக்க வில்லை
நீயும் கிட்டே வர விடாமல் பல சமயம்
நீயும் பிரவனனாய் உன்னுடிய போக்யத்தில் இழிந்து
துக்கமே படு போகிறார்கள்
குரங்கு -மது குடித்து தேள் கொட்டி அது போலே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply