பரஞ்சோதி நீபரமாய்
நின்இகழ்ந்து பின்மற்றுஓர்
பரஞ்சோதி இன்மையின்
படிஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே
படர்உலகம் படைத்தஎம்
பரஞ்சோதி! கோவிந்தா!
பண்புஉரைக்க மாட்டேனே.
பொ – ரை : நீ எல்லாவற்றிலும் மேம்பட்டு மேலான ஒளியுருவனாயிருக்கின்றாய்; நின்னைத் தவிரப் பின்னர் வேறோரு மேலான ஒளி உருவமுடைய பொருளில்லாததனாலே உவமை நீங்கி நடக்கின்ற பரஞ்சோதியும் நீயே; பரந்த உலகங்களை எல்லாம் நின்னுள்ளே உண்டாக்கின பரஞ்சோதியே! கோவிந்தனே! உன் பண்புகளை உரைப்பதற்கு ஆற்றலுடையேன் அல்லேன்.
வி – கு : ‘பரஞ்சோதி’ என்ற சொல் நான்கடிகளிலும் வந்தது, சொற்பொருட்பின் வருநிலையணி. ‘நீ பரமாய்ப் பரஞ்சோதி’ என மாறுக. ‘இகழ்ந்தது இன்மையின் ஓவி நிகழ்கின்ற பரஞ்சோதி’ என முடிக்க.
ஈடு : மூன்றாம் பாட்டு. 1’நம் பக்கல் முதல் அடியிடாத உலகத்தாரை விடும்; உலகத்தாருக்கு வேறுபட்டவரான நீர் பேசினாலோ?’ என்ன, ‘என்னாலேதான் பேசப்போமோ?’ என்கிறார்.
பரமாய்ப் பரஞ்சோதி நீ – பரமாய்க்கொண்டு மேலான ஒளி உருவனாயிருக்கின்றாய் நீ. வடிவழகிலேயாதல் செல்வத்திலேயாதல் சிறிது ஏற்றமுடையான் ஒருவனைக் கண்டால், ‘உன் தனை ஒளியுடையான் ஒருவனில்லை; உன் தனைச் செல்வமுடையான் ஒருவனில்லை,’ என்பர்களன்றோ? அங்ஙனன்றி, ‘இனி ஒரு வடிவில் அவையில்லை’ என்னும்படி பூர்ணமாக உள்ளது இறைவன் பக்கலிலேயாதலின், ‘பரமாய்ப் பரஞ்சோதி’ என்கிறார். 2’அந்தப் பரப்பிரஹ்மத்தினுடைய பேரொளியால் இவையெல்லாம் பிரகாசிக்கின்றன,’ என்பது கடோபநிடதமாகும். நின் இகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற பரஞ்சோதி நீ – உன்னையொழிய வேறொரு மேலான ஒளிப்பொருள் இல்லாமையாலே உபமானம் அற்றவனாய்கொண்டு நடக்கின்ற மேலான பேரொளி உருவன் நீ. உலகத்தில் ஒருவனோடு ஒத்தாரும் ஒருவனோடு மேற்பட்டாரும் பலர் இருக்கவும், ஒருவரைப் பார்த்து ‘உனக்கு ஒத்தாராதல் மிக்காராதல் உளரோ?’ என்பர்களன்றோ? அங்ஙனல்லன் இறைவன்’ என்பார், ‘நின் இகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ் நின்ற பரஞ்சோதி நீ,’ என்கிறார்.நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம் பரஞ்சோதி – உன்னுடைய சங்கற்பத்தின் மிகச்சிறியதொரு கூற்றிலே காரியத்தின் உருவமாகி விரிந்து நின்றுள்ள உலகங்களை எல்லாம் உண்டாக்கின எம் பரஞ்சோதி. ‘தனக்குங்கூட உரியன் அல்லாதான் ஒருவனை, ‘நீயேயன்றோ நாட்டுக்கெல்லாம் உரியவன்?’ என்று கூறுவர்களன்றே? அங்ஙனல்லன் இறைவன்,’ என்பார், ‘நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி’ என்கிறார். இனி, இதற்கு, ‘உனக்கு மகன் பிறந்தான்’ என்னுமாறு போன்று, உலகங்களை யுண்டாக்கின பின்னர்த் திருமேனியிலே பிறந்த புகரையுடையவன் என்று பொருள் கூறலுமாம். ஆக, சுவாபாவிகமான மேன்மை அது; காரணனாயுள்ள தன்மையால் வந்த புகர் இது; இப்படியிருக்கிற மேன்மையை எல்லை காணிலும், நீர்மை தரை காண ஒண்ணாததாயிருக்கிறதே!’ என்கிறார் மேல்: கோவிந்தா பண்பு உரைக்க மாட்டேன் – உன்னுடைய தன்மையை என்னால் சொல்லப் போகாது; அனுபவித்துப்போமித்தனை. ‘கோவிந்தா’ என்றதனால் அவனுடைய சௌலப்பியம் தோற்றுகின்றது. ‘ஏன் சொல்லப்போகாது?’ எனின், 1’நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னுமீனச்சொல்,’ என்கிறபடியே, நெஞ்சால் நினைக்க ஒண்ணாதது கூறுதற்குதான் முடியுமோ?
தனது பகல் முதலடி வைக்காத லவ்கிகர் பேச வேண்டாம்
மயர்வற மதி நலம் அருள பட்ட நீர் சொல்ல லாமே -என்றானாம்
நானும் சோழப் புக்கள் அவத்யமே விளையும்
என்னாலும் சொல்ல முடியாது
மாட்டேனே -உன் உடைய பண்பு எந்நாளும் சொல்ல முடியாது என்கிறார் –
படி -திருமேனி தேஜஸாக திகழ மேன்மை கோவிந்தா எளிமை
வடிவு அழகிலே ஆதால் ஐஸ்வர்ய த்தால் ஆதல்
பச்சை பசும் பொய்கள் பேசுவார் -கண்டவா தொண்டரைப் பாடும் -பூரணமாக இவை உன்னிடத்தில் இருக்க
நீ தான் பரம்ஜோதி -பரமாய் கொண்டு பரம் தேஜஸாக இருக்க
உன்னுடைய தேஜஸில் ஏக தேசம்
சமராக அதிகராக உண்டோ -லோகத்தில் இல்லையே –
இல்லாமையாலே -உபமான ரஹீதமாக வர்த்தியா நின்று உள்ள பரம் ஜோதிஸ் உன்னுடைய சங்கல்ப லவ லேசத்திலே அனைத்தும் உண்டாக
படைத்த பின் தேஜஸ் உண்டாக்கின பின்பு திரு மேனியில் உண்டான புகர் –
பிள்ளை பிறந்த சந்தோஷம் போலே -ச்வாபாவிக தேஜஸ் -படைத்த தேஜஸ் காரணத்வத்தால் வந்த
நீர்மை கரை காண ஒண்ணாது
உயர்வற உயர் நலம் தரித்து சொல்ல
பத்துடை கடை வெண்ணெய் -மொஹித்த வ்ருத்தாந்தம்
பண்பு உன்னுடைய பிரகாரம் சொல்லப் போகாது அனுபவித்து போகலாமே
கோவிந்தா நெஞ்சால் நினைப்பு அரிது வெண்ணெய் உண்ட ஈனச் சொல்
கரை மேலே கூட போக முடியாது
நெஞ்சால் நினைக்க முடியாதது சொல்லப் போகுமா
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply