கட்டுரைக்கில் தாமரை நின்
கண்பாதம் கைஒவ்வா;
சுட்டுரைத்த நன்பொன்உன்
திருமேனி ஒளிஒவ்வாது;
ஒட்டுரைத்துஇவ் உலகுன்னைப்
புகழ்வுஎல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்குஎன்றே
காட்டுமால் பரஞ்சோதீ!
பொ – ரை : மேலான ஒளியுருவானவனே! அறுதியிட்டுச் சொல்லுமிடத்து, நினது திருக்கண்கள் திருவடிகள் திருக்கைகள் இவற்றிற்குத் தாமரை ஒப்பாக மாட்டாது; உருக்கி மெருகு வைத்த நல்ல பொன்னானது உனது திருமேனியின் ஒளிக்கு ஒப்பாகமாட்டாது; ஆதலால், இவ்வுலகமானது உவமை கூறி உன்னைப் புகழ்வன எல்லாம் பெரும்பாலும் தமது நெஞ்சிலே தோன்றியதை உரைத்தலாய்ப் புல்லியனவாகவே காட்டாநிற்கும்.
வி – கு : முதலடியில், ‘ஒவ்வா’ என்பது ஈறு கெட்டது. உரைத்தல் – மெருகிடல். ஒட்டு – உவமையுருபு. பட்டுரை – பட்டது உரைத்தல். புற்கு – புன்மை, உலகு – ஆகுபெயர்.
ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘அழகருடைய அழகிற்கு ஒப்பு இல்லாமையாலே உலகத்தார் செய்யும் துதிகள் அங்குத்தைக்குத் தாழ்வேயாமித்தனை,’ என்கிறார்.
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா – ‘சொல்லில், தாமரைச் சாதியாக உன்னுடைய திருக்கண்களுக்கும் திருவடிகளுக்கும் திருக்கைகளுக்கும் ஒப்பாக மாட்டாது. அனுபவித்துக் 2குமிழிநீர் உண்டுபோம் இத்துணையே அன்றிச் சொல்லப் போகாது,’ என்பார், ‘கட்டுரைக்கில்’ என்கிறார். கட்டுரைக்கில் – கட்டுரை என்பது ஒரு சொல். ‘தாமரைச் சாதியாக ஒப்பாக மாட்டாது,’ என்பார், அடைகொடுத்து விதந்து கூறாது, வாளா ‘தாமரை’ என்றும், ‘தனித்தனியே ஒவ்வோர் உறுப்புக்குங்கூட ஒப்பாகமாட்டாது’ என்பார், ‘கண் பாதம் கை’ எனத் தனித்தனியாக விதந்தும் அருளிச்செய்கிறார். ‘ஆயின், பாதாதி கேசமாகக் கூறாது, ‘கண் பாதம் கை’ எனக் கூறல் யாது கருதி?’ எனின், குளிர நோக்குவன கண்கள்; நோக்கிற்குத் தோற்று விழுமிடம் திருவடிகள்; விழுந்தவனை எடுத்து அணைப்பன திருக்கைகள். ஆதலின், இம்முறையே ஓதுகிறார். இனி, ‘மேம்பட்ட பத்தியையுடையவனுக்குச் சாஸ்திரமும் இல்லை, முறையும் இல்லை,’ என்பவாகலின், பிரபத்தி நிஷ்டரான இவர் திருவாயிலும் அம்முறை கெட வருகின்றன என்று கோடலுமாம். இனி, மேல் திருப்பாசுரத்தில், முடிச்சோதி அடிச்சோதி கடிச்சோதிகளை
அனுபவித்தார்; இவர் அனுபவத்துக்குப் பாசுரமிட்டுச் சொல்லுவார் ஒருவராகையாலே, அனுபவித்த அம்முறையே ‘கண் பாதம் கை’ என்று இத்திருப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார் என்று கோடலும் ஒன்று. ‘நின்கண்’ என்கையாலே, ‘உனது முகச்சோதி’ என்றதனை நினைக்கிறது; ‘பாதம்’ என்கையாலே ‘அடிச்சோதி’ என்றதனை நினைக்கின்றது; ‘கை’ என்றதனால், ‘கடிச்சோதியை’ நினைக்கின்றது. ஈண்டுக் 1’கை’ என்றது, நடு அனுபவித்த அழகுக்கு உபலக்ஷணம்.
சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது – காய்ச்சி ஓடவைத்து உரைத்த நன்றான பொன்னானது உன்னுடைய சுவபாவிகமான திவ்விய விக்கிரகத்தின் ஒளிக்கு ஒப்பாகாது. சாதாரணமான பொன் உவமை சொல்லத் தக்கதன்றாதலின், ‘சுட்டு உரைத்த நன்’ என்று மூன்று அடைகொடுத்து விதந்து ஓதுகிறார், இத்தனை அடை கொடுத்தாலாயிற்று ஒப்பாகச் சொல்லப் 2பாத்தம் போராதது; ‘பரம்பொருள் ஓடவைத்த பொன்னின் நிறமுடையவன்’ என்பது மநு ஸ்மிருதி. ஒட்டு உரைத்து – உனக்கு ஒப்பாகச்சொல்லி. ஒட்டாவது – கூடுகை; அதாவது – சேர்க்கை: 3ஒப்பாயிருத்தல். இவ்வுலகு – காண்கிற இவற்றிற்கு மேற்பட அறியாத இவ்வுலகத்தார். ‘இவ்வுலகத்திலுள்ள பொருள்களின் வைலக்ஷண்யமும் அறியாதவர்கள்’ எனலுமாம். ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று, 4’இவ்வுலகு புகழ்வு’ என்கிறார். உன்னை – சாஸ்திரங்களாலேயே அறியக் கூடியவனாய், அவை தாமும் புகழப்புக்கால், 5’அந்த ஆனந்த குணத்தினின்றும் வாக்குகள் திரும்புகின்றனவோ?’ என்னும்படி மீளும்படியான உன்னை. புகழ்வு எல்லாம் – உள்ளதுஞ்சொல்லி,
இல்லாதவற்றையெல்லாம் இட்டுக்கொண்டு சொல்லப்படுகின்றவையெல்லாம். பெரும்பாலும் – மிகவும். ‘அனேகமாய்’ என்றபடி. பட்டு உரையாய் – பட்டது உரைக்கை, ‘நெஞ்சில் பட்டதைச் சொல்லுதல்: விஷயத்தைப் பாராமல் தோன்றியதைச் சொல்லுதல்’ என்றபடி. புற்கென்றே காட்டும் – புன்மையையே காட்டாநின்றது.
‘ஆயின், இவன் தோன்றியதைச் சொன்னானாய் விஷயத்தில் தீண்டாமலே 1இருக்குமாகில், அங்குத்தைக்குப் புன்மையே காட்டும்படி என்?’ என்னில், இரத்தினத்தை அறியாதான் ஒருவன், ‘குருவிந்தக் கல்லோடு ஒக்கும் இது,’ என்றால், அவ்வளவே அன்றோ அவனுக்கு அதனிடத்தில் மதிப்பு? அவ்வழியாலே அதற்குத் தாழ்வேயாகும். அப்படியே, இவன் பண்ணும் துதிகள் இங்குத்தைக்குத் தாழ்வேயாக முடியும். இங்குத்தைக்குப் புன்மையாகக் காட்டுகைக்குக் காரணம் என்?’ என்னில், பரஞ்சோதீ – 2’நாராயணன் மேலான ஒளியுருவன்’ என்கிறபடியே, அவன் எல்லாப் பொருள்கட்கும் வேறுபட்ட சாதியான் ஆகையாலே.
இரண்டாம் பாட்டில் -அழகர் சௌந்தர்யம் சத்ர்சம் இல்லை லோகத்தார் செய்யும் புகழ்ச்சி
சொல்லப் புகுந்தால்
தாமரை ஒவ்வாதே
கட்டு உரைக்க -சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வா
இல்லாத ஒன்றை ஒட்டு வைத்து சொனாலும் புகழ் எல்லாம் தல்ந்ததாகவே காட்டும்
கடு உரைக்கில் -சொல்வது கஷ்டம்
அனுபவித்து குமிழ் நீர் -உன்னப் போகும் முழுகிப் போவான்
கட்டு உரை ஒரே வார்த்தை
தாமரை ஜாதியாக உனது திருக் கண்கள் திருவடி திரு கைகளுக்கும் ஒவ்வாது
குளிர்ந்த நோக்கும் கண்கள்
நை சாஸ்திரம் நைவ சக்ரமா –
அனுபத்துக்கு பாசுரம் இட்டு சொல்கிறார்
நின் கண் -முக சோதி நினைந்து
பாதம் அடி சோதி கை நடுவில் அனுபவித்த அழகு
பொன்னை சிஷிக்கிறார் சுட்டு உரைத்த
காய்ச்சி -ச்வாபாவிக திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு உபமானம் இல்லை –
மெருகு ஏற்றினாலும் –
எடுத்து கழிக்க யோக்யதை வர சிஷிக்க வேண்டும்
தெளியாத மறைகள் தெளிகின்றோமே
ஒட்டு கூடுகை செருகி சத்ர்சமாக சொனால் உலகு -உலகில் உள்ளோர்
தாங்கள் இதற்க்கு மேற்பட அறியாது இங்கன் அருளுவார்கள் –
உன்னை சாஸ்த்ரிக -வேதம் ஒன்றாலே எதோ வாச நிவர்ர்தந்தே
ஸ்தோத்ரம் என்பதே இருப்பதாய் முழுக்க சொல்லி இல்லாததை கூட்டி சொல்வது
இரண்டும் முடியாதே இவன் இடம் –
மிகவும் பட்டது உரைக்கை நெஞ்சில் பட்டதை சொல்வது –
நிஷித்த வஸ்துவின் பெருமை குறையுமேரத்னம் அறியாதவன் கூழாம் கல் என்பவன் போலே
குருவிந்த கல் என்றல் அதன் பெருமை குறையும் –
தங்கம் குந்து மணி உடன் தன்னை ஒப்பு நோக்கி குறை பட்டது போலே –
இவன் செய்யும் ஸ்தோத்ரம் அவனுக்கு அவத்யம் ஆக
காட்டுமால் பரம் ஜோதி நாராயண பரம் ஜோதி இவன் இ றே
கிணற்று தவளைபோலே
சமுத்திர தவளையும் கிணற்று தவளையும் பேசினது போலே
ருமாகம் தங்கம் போலே வேதம் சொல்வது போலே
சூர்யன் பள பள -மின் மினி பூச்சி போலே சொல்வது போலே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply