மூன்றாம் பத்து
முதல் திருவாய்மொழி – ‘முடிச்சோதி’
முன்னுரை
ஈடு : 1முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்: இரண்டாம்பத்தால், அந்தக் கைங்கரியத்தில் களை அறுத்தார்: களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பரியந்தமான பகவத் கைங்கரியம் என்கிறார் இம்மூன்றாம் பத்தால்.
2பொருளென்றிவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருளில் வண்குருகூர் வண்சடகோபன்’ என்று ‘அவனுடைய கல்யாண குணவிஷயமாக அஞ்ஞானம் இல்லை’ என்றார் மேல் திருவாய்மொழியில்: அக்குணங்கள் நிறைந்திருக்கின்ற
நற்குணக்கடலான இறைவன் விஷயத்தில்1 ஓர் அஞ்ஞானம் தொடருகிறபடி சொல்லுகிறார் இத்திருவாய்மொழியில். ‘ஆயின், இது முன்னர்க் கூறியதற்கு முரணாகாதோ?’ எனின், 2மேலே கர்மங் காரணமாக வரக்கூடிய அஞ்ஞானம் இல்லை என்றார்; 3இங்குத்தை அஞ்ஞானத்துக்கு அடி, விஷய வைலக்ஷண்யமாயிருக்கும். 4நித்தியசூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயமாகும் இது. 5சொரூபத்திலே கட்டுப்பட்டதாயிருப்பதொரு சம்சயமாகையாலே சொரூபமுள்ளதனையும் நிற்பதொன்றேயன்றோ இது? ஆதலின், முரணாகாது.
மேல் திருவாய்மொழியில், 6திருமலையை அனுபவித்துக் கொண்டு வந்தவர், 7‘வடமாமலையுச்சியை’ என்னுமாறு போன்று, 8திருமலையில் ஒரு பகுதி என்னலாம்படியாய், கற்பகத்தரு பல கிளைகளாய்ப் பணைத்துப் பூத்தாற்போன்று நிற்கிற அழகருடைய அழகினை அனுபவிக்கிறார் இத்திருவாய்மொழியில். அனுபவிக்கிறவர், 1வேதங்களோடு வைதிக புருஷர்களோடு பிரமன் சிவன் முதலானவர்களோடு வேற்றுமையறத் தம் முயற்சியால் காணுமன்று காணவொண்ணாதபடி இருக்கிற இருப்பையும், அவன் தானே கொடுவந்து காட்டுமன்று பிறப்புத் தொழில் முதலியவைகளால் குறைய நின்றார்க்கும் காணலாயிருக்கிற இருப்பையும் கூறி ஆச்சரியப்படுகிறார்.
4. ‘ஹேது பேதம் ஆனாலும் அஞ்ஞானம் தியாஜ்யம் அன்றோ?’ என்ன,
அதற்கு விடையாக ‘நித்திய சூரிகளுக்கும்’ என்று தொடங்கி அருளிச்
செய்கிறார். இவ்விடத்தில்,
‘ஆங்கார வாரம் அதுகேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி – யாங்காண
வல்லமே யல்லமே மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து.’
முடிச்சோதி யாய்உனது
முகச்சோதி மலர்ந்ததுவோ !
அடிச்சோதி நீநின்ற
தாமரையாய் அலர்ந்ததுவோ !
படிச்சோதி ஆடையொடும்
பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ !
திருமாலே ! கட்டுரையே.
பொழிப்புரை : திருவொடு மருவிய இறைவனே! உனது திரு முகத்தின் ஒளியானது திருமுடியின் ஒளியாகி மலர்ந்ததுவோ! அல்லது, திருமுடியின் ஒளியானது திருமுகத்தின் ஒளியாகி மலர்ந்ததுவோ! திருவடியின் ஒளியானது நீ நிற்கின்ற தாமரையாகிப் பரந்ததுவோ! அல்லது, தாமரையின் ஒளியானது திருவடியின் ஒளியாகிப் பரந்ததுவோ! நினது பரந்த அழகிய திருவரையின் ஒளியானது இயற்கையான ஒளியையுடைய பீதாம்பரமும் மற்றும் பல வகை ஆபரணங்களுமாகிக் கலந்ததுவோ! அல்லது, பீதாம்பரம் பல வகையான ஆபரணங்கள் இவற்றின் ஒளியானது திருவரையின் ஒளியாகிக் கலந்ததுவோ! யான் அறியும்படி அருளிச்செய்தல் வேண்டும்.
விசேடக்குறிப்பு : ஓகாரங்கள் ஐயப்பொருளன, கட்டுரைத்தல் – தொடுத்துக்கூறல்.
இத்திருவாய்மொழி துள்ளலோசையிற்சிறிது வழுவி, நாற்சீர் நாலடியால் வந்த தரவுகொச்சகக் கலிப்பாவாகும்; கலிவிருத்தமுமாம்.
ஈடு : முதற்பாட்டில், அழகருடைய திவ்விய அவயவங்கட்கும் திரு அணிகலன்களுக்கும் உண்டான பொருத்தத்தின் மிகுதியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்.
முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ – 1உன்னுடைய திருமுகத்திலுண்டான ஒளியானது திருமுடியின் ஒளியாய்க்கொண்டு மலர்ந்ததுவோ! உன்னுடைய திருமுடியின் பேரொளியானது திருமுகத்தின் பேரொளியாய்க் கொண்டு மலர்ந்ததுவோ! 2சேஷபூதனுக்கு முற்படத்தோற்றுவது, தன்னுடைய சேஷத்துவத்திற்கு எதிர்த்தொடர்புடைய இறைவனுடைய சேஷித்துவமேயாதலின், அச்சேஷித்துவத்திற்கு அறிகுறியான திருமுடியை முன்னர் அனுபவிக்கிறார். அடிச்சோதி 3நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ – திருவடிகளின் பேரொளியானது தேவர் நின்ற ஆசனமான தாமரையாய்க்கொண்டு மலர்ந்ததுவோ! ஒரே தன்மையனான இறைவனும் நீரிலே நின்றாற்போன்று ஆதரித்து நிற்கின்றானாதலின், ‘நீ நின்ற’ என்கிறார். 4இறைவனுடைய சேஷித்துவத்திற்குப் பிரகாசமான திருமுடியின் அழகு திருவடிகளிலே போர வீசியது: ஆதலின், திருமுடியின் அழகினை அனுபவித்தவர் அதனையடுத்துத் திருவடியின் அழகினையனுபவிக்கிறார். 1இது பிராப்பியத்தினுடைய முடிவு நிலமாதலின், அவ்வருகு போக்கில்லையே? ஆதலின், திருவடிகளின் பேரொளியானது மேல் ஏறக் கொழித்தது. 2கடலுக்குள் பட்டதொரு துரும்பு ஒரு திரை ஒரு திரையிலே தள்ளக்கிடந்து அலையுமாறு போன்று, ஓரழகு ஓரழகிலே தள்ளக் கிடந்து அனுபவிக்கிறார் இதில். 3‘படிச்சோதி பல்கலனாய்க் கலந்ததுவோ – திருமேனியின் அழகு பல ஆபரணங்களாகிக் கலந்ததுவோ! பல ஆபரணங்களின் அழகு திருமேனியின் அழகாய்க் கலந்ததுவோ! படி – திருமேனி. சோதியாடை, நின் பைம்பொன் கடிச்சோதியாய்க் கலந்ததுவோ! கடிச்சோதி, சோதி ஆடையாய்க் கலந்ததுவோ! இனி, ‘நின் பைம்பொன் கடிச்சோதி, படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய்க் கலந்ததுவோ!’ என்று ஒரே தொடராகக் கொண்டு, ‘உன்னுடைய அழகியதாய் விரும்பத் தக்கதான திவ்வியத் திருவரையிலுண்டான பேரொளியானது, சுவாபாவிகமான பேரொளியை யுடைத்தான திருப்பீதாம்பரம் தொடக்கமான பல திருவாபரணங்களாய்க் கொண்டு சேர்ந்ததுவோ!’ என்று பொருள் கூறலுமாம். படி – இயற்கை. இனி, ‘படிச்சோதி கலந்ததுவோ!’ என்பதற்குப்படியாணியான ஒளி என்னவுமாம். ஆக, ‘நீரிலே நீர் கலந்தது போன்று வேற்றுமையறிதற்குப் பொருத்தமற்றதாயிருக்கிறது ; முடியவில்லை,’ என்றபடி.
திருமாலே கட்டுரையே – இதுவும் ஒரு சேர்த்தியழகு இருக்கிறபடி. 2‘அகலகில்லேன்’ என்று பிரியமாட்டாமலிருக்கிற பிராட்டியும், ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான நீயுங்கூட விசாரித்து இதற்கு ஒரு போக்கடி அருளிச்செய்ய வேண்டும். இன்று அனுபவிக்கப் புக்க இவர், 3என்றும் ஓரியல்வினர் என நினைவரியவர்’ என்பர்; என்றும் அனுபவிக்குமவர்கள் 4‘பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில் யாம்?’ என்றே பயிலாநிற்பர்கள்; ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான இறைவன் 5‘தனக்கும் தன் தன்மையறிய அரியனாய்’ இருப்பான்;’ ஆக, இப்படி இன்று, அனுபவிக்கப் புக்க இவரோடு, 6என்றும் அனுபவிக்குமவர்களோடு, இறைவன் தன்னோடு வேற்றுமையில்லை இந்த ஐயம் தொடர்வதற்கு; தமக்கு இந்த ஐயம் அறுதியிடவொண்ணாதது போலவே அவர்களுக்கும் என்றிருக்கிறார்; ஆதலின், ‘திருமாலே கட்டுரையே’ என்கிறார். கட்டுரையே – ‘சொல்ல வேணும்’ என்றபடி.
1. ‘ஆனால், திருவடிகளுக்குக் கீழே போகாமல் மேலே போவான் என்?’
என்னும் வினாவிற்கு விடையாக, ‘இது பிராப்பியத்தினுடைய முடிவு
நிலமாதலின்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
2. ‘ஒவ்வோர் அவயத்தின் அனுபவமே போதியதாக நிறைந்திருக்க, வேறு
அவயவங்களிற் செல்லுதல் எப்படி?’ என்னும் வினாவிற்கு விடையாகக்
‘கடலுக்குள் பட்டதொரு துரும்பு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
‘தோள்கண்டார் தோளே கண்டார் ; தொடுகழற் கமல மன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் ; தடக்கைகண் டாரும் அஃதே ;
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ?
ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை ஒத்தார்.’
என்றார் கம்பநாட்டடிகள். (பால. உலாவியற். 19.)
ஆக. ஓர் அழகு ஓர் அழகிலே தள்ளப்போகிறாரித்தனை ஒழிய, அருசி
பிறந்தாதல், முற்றும் அனுபவித்தாதல் போகிறார் அல்லர் என்றபடி.
3. பின் இரண்டு அடிகளை மூன்று வகையாகக் கொண்டு கூட்டிப் பொருள்
கொள்க. முதல் வகை, ‘படிச்சோதி பல்கலனாய்க் கலந்ததுவோ !’ என்பது.
இரண்டாவது வகை, ‘சோதியாடை கடிச்சோதியாய்க் கலந்ததுவோ !’ என்பது.
‘நின் பைம்பொன் கடிச்சோதி படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய்க்
கலந்ததுவோ !’ என்பது மூன்றாம் வகை. ஓகாரம் ஜயப்பொருளதாதலின்,
ஒவ்வொரு வகையிலும் அதற்கு மறுதலைப்பொருளும் வியாக்கியானத்தில்
எழுதப்பட்டுள்ளது.
பரத்வம், முதல் பத்தில் அனுபவித்து
அடுத்து காரணத்வம்
மூன்றாம் பத்தில் வ்யாபகத்வம் –
திருமுடி தொடக்கி திருவடி ஈறாக அனுபவிக்க –
கல்யாண குணங்கள் மேல் மருள் அஞ்ஞானம் இன்றி -என்றவர்
இதில் சங்கை தான்
கிரீட தேஜஸா திரு முக தேஜஸா
அஞ்ஞானம் உண்டே அனுவர்த்திக்கிறது ரசமான
வாக்கியம்
அவனுக்கும் அஞ்ஞானம் உண்டே ஆஸ்ரித தோஷம் அது போலே
அஞ்ஞானம் அடி கீழே சொல்லி
இங்குத்தை அஞ்ஞானம் அடி விஷய வை லஷண்யம்
சொல்லி முடிக்க முடியாத –
சூரிகளுக்கும் உள்ள சம்சயம் இது
ஸ்வரூப அனுபத்தி -ஸ்வரூபம் உள்ள அளவும் செல்லுமே
யவனம் லாவண்யங்கள் சௌந்தர்யங்கள் பிரியாதே -நிலைத்து நிற்பது இது
திருமலையை அனுபவித்து
திருமலை சப்தத்தால் திரு மால் இரும் சோலையை ஆழ்வார் அருளுகிறார் எங்கும் திரு வேங்கடம் மலையை திருமலை என்று அனுபவிக்க வில்லை –
திருமலையை அனுபவித்து கொண்டு வரா
நிற்க வட மா மலை உச்சியை -என்னுமா போலே
அதிலே ஏகதேசம் -என்னலாம் படி-கல்பக தரு -பகு சாகையாய் பூத்தால் போலே
அனுபவித்து
வேதங்களோடு வைதிகக புருஷர்களோடு பிரம ருத்ராதிகளோடு
ஸுய யத்னத்தால் காண
தானே கொண்டு வந்து ஜன்ம வருத்தங்களில் தாழ நின்றாலும் அனுபவிக்கலாமே
திவ்ய மங்கள விக்ரக சௌந்தர்யம் அனுபவித்து விஸ்மிதர் ஆகிறார்
அழகர் வடிவு அழகைப் பற்றி -மா முனிகள் அருளி –
சாரம்-அழகரை -பற்றி முடியும் –அனுபவித்தான் என்கிறார்
பொருத்தம் -ஸு கடித்வம் கண்டு விஸ்மிதர் ஆகிறார் –
முடி சோதி -தேஜஸ் -முக சோதி தான் மலர்ந்ததா –
பட்டர் முடி சோதி இப்படி மலர்ந்ததா இரண்டிலும் அன்வயித்து
அடி சோதி -நீ நின்ற தாமரை யாய் அலர்ந்ததா
திருமேனி தேஜஸா ஆபரணங்கள் சோதி
திருவா மாலா -நீயே கட்டுரையே
திரு முக தேஜஸ் திரு அபிஷேக தேஜஸ் -விகசிதமாக இருக்கும்
இருபது நாலாயிர படி -சமான தர்ம சம்சயம் உபய கோடியிலும் அன்வயிகலாம் பட்டர் –
கட்டியம் திருஅடி தொடங்கி ஆழ்வார் ஆசார்யர் -எம்பெருமான் கட்டியம் திருமுடி தொடங்கி
சேஷ பூதனுக்கு முற்பட தோற்றுவது சேஷி த்வம் கிரீடம் காட்டுவதால்
பிரதி சம்பந்தி –
திருவடி வரை போர வீச அடி சோதி தேவர் நின்ற ஆசன பத்மமாக விகசிதம் ஆனதோ
நீ நின்ற ஏக ரூபன் ஆயினும் நீரில் நிற்கும் தாமரை போலே விகசித்து இருக்கிறான்
மலர்ந்து நிற்கிறான் சதைக ரூபா ரூபாயா நமக்காக –
முடியும் அடியும் சொல்லி -பிராப்யத்தின் சரம அவதி திருவடி
அவ்வருகே போக்கடி இல்லையே
கடி சோதி -நடுவிலே சொல்லி கீழே போக்கிடம் இல்லையே –
திருவடி தேஜஸ் மேலேதள்ள -நடுவில் போனார்
கடலுக்கு உள் பட்டது திரை திரை தள்ளப்படுவது போலே அழகு வெள்ளம் சௌந்தர்யதரங்கம்
ஒரு அழகு வேறு அழகில் தள்ளப் பட்டு –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் உதறி சுற்றி அழகு வெள்ளம் தள்ள
பல்கலன் –திரு ஆபரண தேஜஸ் படி திருமேனி அழகு
ஆடை கடி இடுப்பு தேஜஸ் அழகியதாய்
நீரிலே நீரில் சேர்ந்தால் போலே இவை இருக்க -பொருந்தி இருந்து
பிரித்து அனுபவிக்க முடியாத
படி திருமேனி
ஆபரண ஒளி இரண்டு அர்த்தங்களும்
இதுவும் ஒரு சேர்த்தி அழகு இருந்தபடி -திருமாலே
அகலகில்லேன் இறையும் நீயும் கலந்து பேசி விசாரத்து இதுக்கு ஒரு போக்கடி அருள வேண்டும்
என்றும் ஓர் இயல்வினர் என்று நினைவு அரியவன்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
(நரன்மு. திருவந். 10.)
Leave a Reply