பொருள்என்றுஇவ் உலகம் படைத்தவன் புகழ்மேல்
மருள்இல்வண் குருகூர் வண்சட கோபன்
தெருள்கொள்ளச் சொன்னஓர் ஆயிரத்துள் இப்பத்து
அருளுடை யவன்தாள் அணைவிக்கும் முடித்தே.
பொ-ரை : பயன்படும் என்று இவ்வுலகத்தைப் படைத்தவனுடைய நற்குணங்கள் விஷயமாக மயக்கம் இல்லாத, வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த கொடையையுடைய ஸ்ரீசடகோபரால் ஆத்துமாக்கள் ஞானத்தைக் கொள்ளும்படியாக அருளிச்செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களும் பாவங்களை அழித்து, அருட்கடலான இறைவனுடைய திருவடிகளில் சேர்ப்பிக்கும்.
வி-கு : புகழ்மேல்–‘மேல்’ ஏழனுருபு. ‘இப்பத்து முடித்து அணைவிக்கும்,’ எனக் கூட்டுக.
ஈடு : முடிவில், 2‘இத்திருவாய்மொழிகற்றாரை, இத்திருவாய் மொழிதானே பிறப்பினைப் போக்கி அழகர் திருவடிகளிலே சேர்த்து விடும்,’ என்கிறார்.
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருள் இல்வண் குருகூர் வண்சடகோபன் சொன்ன ஆயிரம் பயன்படும் என்று இல்வுலகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குணங்கள் விஷயமாக அறிவின்மையின் வாசனையும் இல்லாத ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரம். 3இவற்றை உண்டாக்கி உடல் உறுப்புகளைக் கொடுத்து விட்டால், கொடுத்த உறுப்புகளைக் கொண்டு ஐம்புல இன்பங்களில் ஆசையுடையராய்க் கை கழியப்புக்கால், ‘நம் நினைவு தப்பியது அன்றோ?’ என்று நெகிழ்ந்து கை வாங்குகையன்றி, ‘ஒருநாள் அல்லா ஒருநாளாகிலும் பயன்படாதோ?’
என்று பலகாலும் படைப்பவனாதலின், ‘பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன்’ என்கிறார். மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆகையாலே, அவனுடைய குணவிஷயமாக மருள் இல்லாதவர் ஆதலின், ‘மருளில் சடகோபன்’ என்கிறார்.
‘பிரபந்தமோ?’ எனில், தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரம் – மருள் உண்டாய்க் கழிய வேண்டிற்று இவர்க்கு. இவருடைய பிரபந்தத்தைக் கற்றார்க்கு முதலிலே அறிவின்மைதான் இல்லை. கேட்டார்க்குத் தெளிவைப் பிறக்கும்படி அன்றோ அருளிச் செய்தது? தம்முடைய ஞானத்துக்கு அடி, சர்வேஸ்வரன்; இவர்களுடைய ஞானத்திற்கு அடி, தாம் என்றபடி. ‘பிரபந்தந்தான் செய்வது என்?’ என்னில், அருளுடையவன் தாள் அணைவிக்கும். அருளையுடையவன் திருவடிகளிலே சேர்த்துவிடும். அருளைக் கொண்டே பரம்பொருளை நிரூபிக்கவேண்டி இருத்தலின், 1‘அருளையுடையவன்’ என்கிறார். முடித்து – அது செய்யுமிடத்துச் சம்சார சம்பந்தத்தை வாசனையோடே போக்கித் திருவடிகளிலே சேர்த்து விடும். ஒரு ஞானலாபத்தைப் பண்ணித் தந்துவிடுதலே அன்றி, 2அர்த்தகிரியாகாரியாய் இருக்குமாதலின், ‘முடித்தே’ என ஏகாரங் கொடுத்து ஓதுகின்றார்.
(11)
முதற்பாட்டில், ‘திருமலையாழ்வாரைக் கடுக அடைமின்,’ என்றார்; இரண்டாம் பாட்டில், ‘திருமலையோடு சேர்ந்திருக்கின்ற திருப்பதியை அடைமின்,’ என்கிறார்; மூன்றாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த அயன்மலை அமையும்,’ என்றார்; நான்காம் பாட்டில், 3‘திரிதந்தாகிலும்’ என்கிறபடியே ‘மீண்டும் திருமலையை அடைமின் என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த புறமலையை அடைமின்’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘திருமலைக்குப் போகும் வழியை நினைத்தலே அமையும்,’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘அவ்வழியோடு சேர்ந்த திருமலையை அடைமின்,’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘நித்தியசூரிகளுக்குக்கூட அடையத் தக்கது, ஆகையால், திருமலையே அடையத் தக்கனவற்றுள் உயர்ந்தது’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘திருமலையைத் தொழக்கடவோம்’ என்கிற துணிவே வேண்டுவது என்றார்; பத்தாம் பாட்டில், ‘எல்லாப்படியாலும் திருமலையாழ்வாரை அடைதலே பேறு,’ என்று தலைக்காட்டினார்; முடிவில் இது கற்றார்க்குப் பலம் அருளிச்செய்தார்.
முதல் திருவாய்மொழியாலே, ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்கிறபடியே, ‘விலக்ஷண விஷயமாகையாலே பிரிந்தாரைக் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும்,’ என்றார்; இரண்டாந்திருவாய்மொழியாலே, ‘கூடினாலும் அதனைப் போன்று மறப்பிக்கும்,’ என்றார்; மூன்றாந்திருவாய்மொழியால், ‘கூடிய பொருள் தான் நிரதிசய சுகரூபம்,’ என்றார்; நான்காந்திருவாய் மொழியில், அவ்விஷயத்துக்குத் தேசிகரோடு அனுபவிக்கப் பெறாமையாலே மோகத்தை அடைந்தார்; ஐந்தாந்திருவாய்மொழியால், தாம் ஆசைப்பட்டபடியே வந்து கலந்தமை சொன்னார்; ஆறாந்திருவாய் மொழியால், தம் இழவுக்கும் அவன் ஐயங்கொள்ளும் என்றார்; ஏழாந்திருவாய்மொழியால், தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் ஏற்றுக் கொண்டபடியைச் சொன்னார்; எட்டாந்திருவாய்மொழியால் அவனுடைய மோக்ஷ பரதத்துவத்தை அருளிச்செய்தார்; ஒன்பதாந்திருவாய்மொழியால், பிராப்பிய நிஷ்கர்ஷம் பண்ணினார்; பத்தாந்திருவாய்மொழியால், அறுதியிட்ட பிராப்பியத்தைப் பெறுகைக்குத் திருமலையாழ்வாரை அடையச் சொன்னார்.
பொருள் பிரயோஜனம் வரும் என்று நினைத்து
மருள் அஞ்ஞானம் கந்தம் இல்லாத ஆழ்வார்
லோகத்தை சிருஷ்டித்து -இந்திரியங்களைக் கொடுத்து –
அவனை அடைய கொடுக்க -கரண களேபரங்கள் கொடுத்து
நாமோ வீணாக்கி -கை கழுவ புக்கால்
கை வாங்காமல் என்றாவது பலன் கிட்டும் என்று -சோம்பாது –
அவனுடைய குணங்கள் விஷயமாக மருள் இல் ஆழ்வார் –
மயர்வற மதி நலம்
திவ்ய பிரபந்தம் தெருள்
ஆழ்வாருக்கு மருள் இருந்து மாற -இதற்க்கோ அது இல்லை
ஞானத்துக்கு அடி ஈஸ்வரன்
நமக்கு இவர் அடியாக -வந்தது
பிரபந்தம் அருளை இட்டு
அருள் உடையவன் அடையாளம் கொண்டே வஸ்துவை நிர்தேசிப்பது
வாசனை யோடு போக்கி அடி சேர்க்கும்
சுந்தர தோள் உடையான் -அழகர் ஒருவரே
சம்சாரத்தை முடித்து
ராஜா குமாரன் சிறை விடுவித்து பட்டாபிஷேகம்
மோஷ சாம்ராஜ்யம்
ஆழ்வாரும் வேண்டா எம்பெருமானும் வேண்டா பிரபந்தமே முடித்து கொடுக்கும்
திருவாய் மொழி பாசுரம் தோறும் அருளியவற்றை தொகுத்து அருளி –
மணியை வானவர் மணியை முதல் பத்தில் பிரிந்தால் கண்ணாம் சுழலை ஏற்படுத்தும் கட்டி அழுதார்
கூடினாலும் அனுபவிக்கும்
கூடின விஷயம் நெருங்கிய சுக ரூபம்
அதுக்கு தேசிகர் உடன் கூடாமல்
ஆடி ஆடி கலங்கி தாயார் பாசுரம்
வந்து கலந்தான் தாம் ஆசைப் பட
இழவுக்கு உன்னை நான் பிடித்தேன் -இல்லை தைர்யம் சொல்லி
சம்பந்தி அளவும் க்ர்சவன் தமர் -பேறு கிட்டும்
எட்டாம் மோஷ பரத்வம்
பிராப்ய நிஷ்கர்ஷம் அவன் ஆனந்துக்கு மட்டுமே செய்யும் கைங்கர்யம் ஒன்பதாவது திருவாய்மொழி –
பத்தாம் -அத்தை -லபிகைக்கு திருமலையை ஆஸ்ரயித்து -அதுவே பரம ப்ராப்யம் –
திருவாய்மொழி நூற்றந்தாதி
கிளர்ஒளிசேர் கீழ்உரைத்த பேறு கிடைக்க
வளர்ஒளிமால் சோலை மலைக்கே – தளர்வறவே
நெஞ்சைவைத்துச் சேரும்எனும் நீடுபுகழ் மாறன்தாள்
முன்செலுத்து வோம்எம் முடி.
சாரம் -பேறு கிடைக்க
எம்மா வீட்டில் பார்த்து சொல்லி -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –
முன்னிலையாக சொல்லி தலை குனிந்து
அழகாய் சேவித்து தனது உறுதி குலையுமோ
அப்படி ஆழ்வாரை மயக்க அழகர் சௌந்தர்யம் அந்தர்யாயம்
பயப்பட்டார் –
சௌந்தர்யா ராஜன் வாய் அழகர் -சுந்தர தோள் உடையான்
கீழ் நினைத்த பேறு கிடைக்க சோலை மலைக்கே நெஞ்சை வைத்து
மானச வியாபாரம் கிளர் ஒளி -அர்த்தம் அருளி –
சேரும் என்று உபதேசித்தார் ஆழ்வார் திருமுடி -தொடக்கி திருவடி அழகை அனுபவிக்க
திவ்ய மங்கள சௌந்தர்யம் அனுபவித்து
எம்மா வீடும் இதுவும் அழகர் விஷயமாக
உபதேச பத்து -ஒவொரு பத்திலும்
கிளர் ஒளி -மதித்து தூதும் -செய்து ஷேத்திர வாச சங்கீர்த்தன -அஞ்சலி கதி சிந்தனம் பெருக்கி மூழ்கி
விட்டு விட்டு -செய்ய
வேண்டியவை இரண்டாம் பத்தின் சாரமும் இந்த பத்து
பரம பாக்கியம்
நல்ல அசுருரர் -பண்ணார் பாடிஇன் கவிகள் யானாய் தன்னை தான் பாடி
தென்னா -தென்னா -திரு மால் இரும் சோலையானே
அவன் பாடி -என்று மேலே ஆழ்வார் அருளி –
தான் தன்னை சொன்ன என் வாய் முதல் அப்பன் –
நம் ஆழ்வாரை பாடுவித்த முக்கோட்டை திரு மால் இரும் சோலை
ஊமையை பேச வைத்த இடம் –
அப்படி பட்ட பெருமை
முதல் பதிகம் அருளி –
முடியும் பொழுதும் -இறுதியில் -செம் சொல் கவிகாள் வ்யாமொஹம் அழகன் தானே 10-7
10-8-திருப் பேர் நகர் அப்பக் கூடத்தான்
அதிலும் -திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன நெஞ்சு நிறைய புகுந்தான்
சேர்த்து அனுபவம் –
ஆதி அந்தம் திரு மால் இரும் சோலை
ஆறு ஆழ்வார்கள் மங்களா சாசனம்
பெரியாழ்வார் இறுதியில் மங்களா சாசனம்
திரு நெடும் தாண்டகதிலும் அனுபவம்
பூமிப் பிராட்டிக்கு ஸ்தனம் போலே
ஆண்டாள் -நூறு தடா அக்கார வடிசில் பிரார்த்தித்து -எம்பெருமானார் -நிறைவேற்றி
கோயில் அண்ணன் -இன்றும் சேவை-
தங்கை ஆசை தமையன் நிறைவேற்றுவான் சாஸ்திரம் சொல்லுமே
அர்ச்சை சமாதி கடந்து ஆலிங்கனம் –
செம் சொல் கவிகள் பதிகம் பொழுதும் வந்து அனுபவிக்க வேண்டுமே –
பரம ப்ராப்யம் -கிடைத்தது
எல்லாம் அவன் சங்கல்பம் -அடியாக -நடை பெற்றது –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply