திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-10-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

சூதுஎன்று களவும் சூதும்செய் யாதே
வேதம்முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில்சேர் மாலிருஞ் சோலை
போதுஅவிழ் மலையே புகுவது பொருளே.

    பொ-ரை : வெற்றி என்று நினைத்துச் சூதையும் களவையும் செய்யாமல், முற்காலத்தில் வேதங்களை விரித்துக் கூறிய இறைவன் விரும்பி வசிக்கிற கோயில். பெண் மயில்களோடு கூடிய ஆண் மயில்கள் வசிக்கிற மாலிருஞ்சோலையில் இருக்கிற அரும்புகள் மலர்கின்ற திருமலையில் சென்று சேர்தலே பேறு ஆம்.

    வி-கு : ‘செய்யாது புகுவது பொருள்,’ எனக் கூட்டுக. புதுவது – தொழிற்பெயர். போது – மலரும் பருவத்தையுடைய பேரரும்பு; ‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி’ (குறள்) என்ற இடத்துப் போது’ என்பது இப்பொருளையுடையதாதல் காண்க.

ஈடு : பத்தாம் பாட்டு. 1‘பல படியாலும் திருமலையே மிக உயர்ந்த பேறு’ என்று தொடங்கினபடியே முடிக்கிறார்.

    சூது என்று களவும் சூதும் செய்யாதே-நமக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது என்று சூதும் களவும் செய்யாமல். 2நூல்கள் ‘செய்தல் ஆகாது’ என்று இவ்விரண்டனையும் விலக்குகின்றமையால், ‘சூதும் களவும் செய்யாதே’ என்கிறார். இனி, களவாவது, 3‘ஆத்துமாவைத் திருடின திருடன்’ என்கிறபடியே, ஆத்துமாவைத் திருடுதல் என்றும்; சூதாவது, ஸாத்விகனாய்ப் பிராமாணிகனாய் இருப்பான் ஒருவன், ‘சர்வேஸ்வரன் இரட்சகன்’ என்று நம்பி இருந்தால், ‘காண்கிற சரீரத்துக்கு அப்பால் ஓர் ஈஸ்வரனாவது என்? ஆத்துமா வாவது என்?’ என்று காணக் காணக் கொள்ளை கொள்ளுதல் என்றும் 4கூறலுமாம். வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில் – இவை ஒருவர்க்கு வாராதபடி வேதார்த்தத்தை விளக்கி விவரித்த கீதோபநிஷத்து ஆசாரியன் வாழ்கிற கோயில்.

    மாது  உறுமயில் சேர் மாலிருஞ்சோலை – பேடையை உற்ற மயில் சேர்ந்திருக்கின்ற மாலிருஞ்சோலை. இனி, ‘மாதுறு மயில்’ என்பதற்கு, மாது என்று மென்மையைக் கூறுகிறதாய், ‘சுகுமாரமாய்க் கண்ணுக்கு இனியதான மயில்’ என்று பொருள் கூறலுமாம். இதனால், அங்குள்ள பொருள்களெல்லாம் 5மிதுனமேயாய் வசிக்கும் என்பதனைத் தெரிவித்தபடி. போது அவிழ்மலையே புகுவது பொருளே – கொடியும் தண்டும் சருகும் இடை இடையே பூவுமாக இருத்தல் அன்றித் திருமலைதன்னை முட்டாக்கிடப் பூத்துக் கிடந்த

லின், ‘போதவீழ்மலை’ என்கிறார். 1‘திருமலையைக் கிட்டும் அதுவே இவ்வாத்துமாவுக்குப் பிரயோஜனமாக முடிவது; அல்லாதவை எல்லாம் பயன் அற்ற காரியங்கள்,’ என்கிறார்.

1. முதலில் ‘சார்வது சதிரே’ என்று தொடங்கி, முடிவில் ‘புகுவது பொருளே’ என்று
முடிப்பதனால், ‘சதிர்’, ‘பொருள்’ என்று இரண்டனையும் பேற்றினைக் குறிக்கும்
சொற்களாகக் கருதி அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘பல படியாலும்’ என்று தொடங்கி.

அழகர் தென்னானாய் -தனிச்சிறப்பு முதலில் அருளி –
முதலில் மங்களா சாசானம் விண்ணோர் வெற்பனே -கண்ணாவான்
முதல் பதிகம் அருளிய திவ்ய தேசம்திருமால் இரும் சோலை –
பரி பூர்ண அனுபவம் அவன் கிருபையால் அவன் திரு முன்பே அனுபவம்
திரு மலையே பரம ப்ராப்யம் பல படியாலும் உபக்ரமித படியே -என்று அருளி செய்கிறார் –
சூதும் களவும் இன்றி வேதம்முன் விரித்தான் வெளிப்படுத்தி விரும்பி உறையும் தேசம்
மயிலும் பேடை உடன் இருக்கும் திரு மலையே உத்தேச்யம்
நமக்கு நல்ல வாய்ப்பு
சூது வெற்றி போது  போக்கு
களவு திருமலை சூதனாய் கள்வனாய்
பார்த்து கொண்டு இருக்கும் பொழுது ஏமாற்ற
தெரியாமல் செய்வது களவு
சூதாட்டம் என்றே இதற்க்கு –
ஐஸ்வர்ய விஷயம் இல்லை
அவன் சொத்து ஆத்மாவை நம்மை என்று நினைப்பது -ஆத்ம அபஹாரம் பெரிய திருட்டு
சூது -வெற்றி அடைய வாய்ப்பு என்று சாஸ்திரங்கள் நிஷேதிபதால்
சர்வேஸ்வரனே ரஷகன் பிரமாணிகன் -விச்வசிக்க ஒட்டாமல் செய்வது சூது –
நம்பிக்கை கொண்டவனை ஏமாற்றுவது
நம்பிக்கை கொண்டவன் ஆனால் ஆத்மா தன்னது என்று நினைத்து இருப்பவனை ஏமாற்றவது களவு
அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த -கீதோ உபநிஷத் அருளியவன்
வர்த்திக்கும் தேசம் இது
ஆர்ஜவம் செம்மையான மயில் பேடை யுடன் கூடி
மயில் -பாகவதர்கள் -பாம்புக்குவிரோதி -விஷம் மறிக்கும் சாத்விகர்
சேரும் தேசம் -கூரத் ஆழ்வான் இங்கே வந்து சேர்ந்தார்
மொழியை கடக்கும் பெரும் புகழான்
தோகை அடக்கி பவ்யமான –
கிரந்தம் கேட்டு யாருக்கும் தெரியாமல் -திரு முடி ச்பார்சம் யாரும் இல்லாமல்
யாரோ வர –
-தான கேட்பது போலே செய்து
போதான வருத்தி கிரந்தம் இங்கே விண்ணப்பக்ககவோ இரண்டு ஆற்றுக்கு நடுவில் விண்ணப்பக்ககவோ –
பத்னி ஆண்டாளும் -ஞான மயில் சேர் -அழகர் முன் வந்ததும் செழு மா மயில்கள் சேரும் திரு மழிசை ஆழ்வார் -காட்டி –
நினைத்து வந்து சொல்லிய விஷயம் இல்லை –
மிதுனமாகவே வர்த்திக்கும்
பிரியாமல் இருக்க நாம் பத்னி அவன் புருஷோத்தமன்
பூத்து கிடக்கும் திரு மலை -புஷ்பத்தால் முட்டாக்கு இட்டு
போதரு மலை கிட்டுவதே பிரயோஜனம்
அல்லாதவை வியர்த்தம்

உபக்ரமித்த படியே அவனே பிராப்ய பிராபகம் என்கிறார் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading