வழக்குஎன நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர்பெருங் கோயில்
மழக்களிற்று இனம்சேர் மாலிருஞ் சோலை
தொழக்கரு துவதே துணிவது சூதே.
பொ – ரை : ‘கொடிய பாவங்களில் மூழ்காமல், பேயான பெண்ணை அழித்தவன் எழுந்தருளியிருக்கிற கோயில், இளமையான யானைக் கூட்டங்கள் சேர்ந்திருக்கின்ற திருமாலிருஞ்சோலையைத் தொழவேண்டுமென்று கருதுதலைத் துணிதலே வெற்றிக்குக் காரணம்; இதனை முறை என்று நினைமின்.’
வி-கு : ‘மூழ்காது தொழக் கருதுவது’ என முடிக்க. கருதுவது துணிவது என்பன, தொழிற்பெயர்கள். அழன் + கொடி – அழக்கொடி; அழன் – பிணம். கொடி – பெண்ணுக்கு ஆகுபெயர்.
ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘திருமலையைத் தொழுவோம்’ என்று அறுதியிட்டு நினைக்கை அமையும் வெற்றிக்குக் காரணம்,’ என்கிறார்.
வழக்கு என நினைமின் – நான் சொல்லுகிற இதுவே முறை என்று புத்தி பண்ணுங்கோள். வல்வினை மூழ்காது – உங்களால்
போக்கிக் கொள்ள ஒண்ணாத மஹா பாவங்களைப் போக்க வேண்டி இருந்தீர்களாகில். அழக்கொடி அட்டான் அமர் பெருங்கோயில் – பூதனையை முடித்தவன் ‘இங்ஙனம் ஒத்த விரோதிகள் வந்த போதாக நம்மை 1நெடுங்கை நீட்டாக்கி வைக்க ஒண்ணாது’ என்று நித்திய வாசம் பண்ணுகையாலே கொண்டாடத் தக்க கோயில். அழன் என்று பிணமாய், அத்தால் பேய் என்றபடி.
மழக்களிறு இனம் சேர் மால் இருஞ்சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே – இள ஆனைக் கன்றுகள் இனம் இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையைத் தொழவேண்டும் என்னும் எண்ணத்திலே துணிவதே இவ்வாத்துமாவுக்கு வெற்றிக்குக் காரணம். எல்லா இலக்கணங்களும் நிறைந்து இருப்பதொரு யானை நின்ற இடத்தே ஆயிரம் யானைகள் வந்து சேருமாதலின், ‘மழக்களிற்று இனம் சேர்’ என்கிறார். ‘ஆயின், அங்குக் களிறு நிற்கிறதோ?’ எனின், அங்கு நிற்கிறதும் சோலை மழகளிறே அன்றோ?’ ‘தென்னானை’ என்பர் திருமங்கை மன்னன். இதனால், அங்குண்டான விலங்குகளும் ஓர் இனமாய் ஆயிற்று இருப்பது என்பதனைத் தெரிவித்தபடி.
விஜய ஹேது திரு மலை நினைப்பதே
வல் வினை மூழ்காது –
பூதனை நிரசனம் செய்தவன்
யானைகள் சேரும் தேசம்
இதுவே முறை என்று புத்தி கொண்டு
மகா பாபங்களில் மூழ்காமல்
அழல் -பேய் கொடி பெண் பேய் பெண்
பிளவாய் –
விரோதி போக் க நெடும் கை நீட்டாது -அவனே வந்துஎளுந்து அருளி
சேதனர் உஜ்ஜீவிக்க நிரந்தர வாசம் செய்து அருளிகிறான்
திர்யக் கூட
யான குட்டிகள் இனம் இனமாக சேர்ந்து வர்த்திக்கும் தேசம்
லஷண ரூபமாக இருக்கும் யானை பக்கல் குட்டிகள் வருமே
அழகர் சோலை மலை களிறே நந்தா விளக்கே
தென்னானை
தென்னனாய் வடவானாய் -குடபாலானாய் -குண பால
காட்டு மன்னார் கோயில் திருக் கண்ண புரம்
அவனை சுற்றி குட்டிகள் இனமினமாக
இதுவே மன ரதம் வேண்டும்
சூது வெற்றிக்கு காரணம்
கார்யம் செய்து வெற்றி விஜய ஹேது
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply