வலஞ்செய்து வைகல் வலம்கழி யாதே
வலஞ்செயும் ஆய மாயவன் கோயில்
வலஞ்செயும் வானோர் மாலிருஞ் சோலை
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே.
பொ-ரை : வலிமையை வளர்த்து, நாடோறும் அவ்வலிமையை மற்றைய விஷயங்களுக்கு உறுப்பாக்கிக் கெடுக்காமல், கிருஷ்ணனாகிற மாயவன் வலம் செய்கிற கோயில், நித்தியசூரிகள் வலம் செய்கிற திருமாலிருஞ்சோலையை நாளும் வலஞ்செய்து சென்று சேர்தல் நியாயமாம்.
வி-கு : ‘வலம் கழியாது வலஞ்செய்து மருவுதல் வழக்கு’ எனக் கூட்டுக. ‘கோயிலாகிய மாலிருஞ்சோலை’ என்க. வலஞ்செய்து – ஒரு சொல் நீர்மைத்து. ‘ஆய மாயவன் வலம் செய்யும்’ என மாற்றுக. ஆய – பசுக்களையுடைய. ஆ – பசு. இனி, ‘ஆயர் வமிசத்தில் வளர்ந்தவனான’ எனலுமாம். மாயவன் – திருமகளையுடையவன். மா – திருமகள்.ஈடு : எட்டாம் பாட்டு. ‘திருமலையை எப்பொழுதும் வலம் செய்கையே வழக்கு’ என்கிறார்.
வலஞ்செய்து நாளும் வலம் கழியாதே – சர்வேஸ்வரன் தன்னை அடைகைக்கு உறுப்பாகத் தந்த மனித சரீரத்தைக் கொண்டு வலிமையை உண்டாக்கிப் பின்னை அவனை அடையாமல் இதர விஷயத்தில் ஈடுபடுகைக்கு உடலாக்கிக் கெடாமல். ஆய மாயவன் வலம் செயும் கோயில் – திருச்சித்திரகூடமலையின் பக்கத்தில் பிராட்டியையுங் கூடக் கையைப் பிடித்துக்கொண்டு 1உலாவினாற்போன்று, பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதரத்தோடே சஞ்சரிக்கிற தேசம். இனி, ‘வலஞ்செயும் மாயவன்’ என்பதற்கு, 2‘எவன் தன்னையும் கொடுத்துத் தன்னை அனுபவித்தற்குத் தக்க பலத்தையும் கொடுப்பவனோ’ என்கிறபடியே, 3‘தன்னையும் கொடுத்து, தன்னை நுகர்வதற்குத் தகுதியான சத்தியையும் கொடுக்கும் ஆச்சரியத்தையுடைய கிருஷ்ணன்’ என்று பொருள் கூறலுமாம்.
வானோர் வலம் செயும் மாலிருஞ்சோலை – பெருமாள் காட்டுக்கு எழுந்தருளுகிற போது இலக்குமணபரதர்கள் பின் தொடர்ந்தது போன்று, சர்வேஸ்வரன் இங்கே போருகையாலே நித்தியசூரிகளும் போந்து வலஞ்செய்கிற மாலிருஞ்சோலை. உகந்தருளின மற்றைத் திவ்விய தேசங்கள் எல்லாம் கிடக்க, திருவேங்கடத்தை 4‘விண்ணோர் வெற்பன்’ என்றார் மேல்; இங்கே இதனை ‘வானோர் மாலிருஞ்சோலை’ என்கிறார்; ‘இதற்கு நினைவு என்?’ எனின், ‘குழந்தைக்குத் தாயினுடைய உறுப்புகள் எல்லாம் கிடக்க முலைக்கண்ணிலே அன்றோ வாய் வைக்கலாகாவது? அப்படியே இங்குத் 5‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னும் இவையே முலையாவடிவு அமைந்த, அன்ன நடைய அணங்கு’ என்கிறபடியே, அவை இரண்டும் முலைகள் ஆகையாலே, அவர்களுக்கேயாகி இருத்தலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார், வலஞ்செய்து – நாமும் இவர்களோடே கூட அங்கே அநுகூலமான தொழில்களைச் செய்து.ஆயின், பிரபந்நர்கள் வலஞ்செய்யலாமோ? வலம் செய்தல் உபாய கோடியில் சேராதோ?’ எனின், ‘பிள்ளை திருநறையூர் அரையரும் பட்டரும் பிரதக்ஷணம் பண்ணாநிற்கப் பின்னே சேவித்துக்கொண்டு போனேன்; 1அல்லாதார் கடுங்குதிரை போலே வாராநிற்க, இவர்கள் திருக்கோபுரங்களையும் திருமாளிகைகளையும் 2கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்துக்கொண்டு வந்தார்கள்,’ என்று நஞ்சீயா அருளிச்செய்வர். நாளும் மருவுதல் வழக்கே –3நித்திய சூரிகளுடைய யாத்திரையே தனக்கு யாத்திரையானால் பின்னே மறுவல் இடாது; இதுவே வழக்கு.
திரு மலையை நிரந்தரமாக வலம் செய்வதே வழக்கு
ஆய மாயவன் கோயில் வானோரும் வளம் செய்யும்
மனுஷ்ய சரீரம் கொண்டு பலம் கொடுத்து
வைகல் வலம் கழியாதே
அவனுக்கு கைங்கர்யம் செய்யவே இந்திரியங்கள்
கால்கள் அவன் இடம் பொய் நாவால் துதித்து
வளம் செய்யும் வானோர்
உலாவினது போல் திரு சித்ரகூடத்தில் பிராட்டி ஆய மாயவனும் வலம் செய்து கொண்டு இருக்கிறானாம்
அழகனும் பிராட்டி உடன் சேர்ந்து சஞ்சரிக்கும் திருமலை
அனந்தாழ்வான் தோட்டம் -புஷ்பம் சிந்திக் கிடக்க –
ராஜ குமாரி கிடைக்க செண்பக மரத்தில் கட்டி –
விஸ்வ ரூபத்தில் திரு மார்பு நாச்சியார் இல்லாமல் -மாமனார் தாரை வரது கொடுக்க திருவுக்கு அப்பம்னார் வாலியே
லஷ்மி தாத்தாச்சார்யர் -தகப்பனார்
அம்மாள் -எம்பெருமானுக்கு
அது போலே திரு பிராட்டிக்கு
ஸ்ரீ ரெங்கத்தில் ஆராமம் சூழ்ந்த அரங்கம் திருப் புன்னை மரம் அடி யில்
லஷ்மி ஹஸ்தம் பிடித்து கொண்டு –
புன்னை மரம் -விசேஷம் கையால் புஷ்பம் பறிக்க முடியவில்லை பிராட்டிக்கு
தானே பறிக் க ஆசை
பெருமாள் கிளையை தாழ்த்தி பிடிக்க சுய ஹச்ததால்
அஜராசகசர தீர்த்தங்கள் ஆயிரத்துள் -திருவாய் மொழியால் வளர்ந்த புன்னை
ஆய மாயவன் வலம் செய்யும் கோயில்
யாகா ஆத்மா -தன்னையும் கொடுத்து தன்னை ஆஸ்ரியக்க பலம் கொடுத்து
அஹம் ஆத்மாநாம் ததா -பல தாகா பலம் ததாதி அனுபவிக்க பலமும் கொடுத்து
வசுதேவருக்கு தன்னை கொடுத்து
அனுபவிக்க நந்த கோபருக்கு கொடுத்து
ஆச்சர்ய பூதன்
கீழ் -விண்ணோர் வெற்பன் திருமலை –
வானோர் மால் இரும் சோலை
தனது இடம் அடியவர்களுக்கு
உகந்து அருளின தேசங்களை விட்டு தாய் முலைக் கண் பிரஜை வாய் வைப்பது போல்
ஸ்தனம் போலே இவை இரண்டும்
முளையாக வடிவு
தென்னன் உயர் போர்ப்பும் தெய்வ வட மழையும் அவர்களுக்கு வானோர் விண்ணோர்
குழந்தைகள் லஷ்மண பரதர் பின் வந்தது போல் நித்ய சூரிகள்
அழகர் பின் நித்ய சூரிகள் போந்து வலம் செய்யா
இருப்பார்கள் நாமும் அனுகூல வ்ருத்திகள் செய்து
பிள்ளை திரு நறையூர் ஆரியரும் பட்டரும் -அல்லாதார் ஓட -கடும் குதிரை போலே இவர்கள்
திரு கோபுரங்களை கண்ணாலே பருகி -திரு மாளிகைகளையும் பருகி –
நாளும் மருவி வலம் செய்து
நித்ய சூரிகள் யாத்ரையே தனக்கு என்றால் நிரந்தரம் ஆகுமே
சம்சாரம் மருவதால் இன்றி நடக்குமே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply