ஸ்ரீ திருவிருத்தம்-95-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –தோழிக்கு தலைவி சொல்வது)

அவதாரிகை –
பக்தி பாரவச்யத்தாலே யாதல் –
அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் –
ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –
தன் பக்கலிலே பிராவண்ய அதிசயத்தை உடையேனாய் –
இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –
பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து –
அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –

இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –
திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே –
அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –
அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன –

பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –
ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன –

ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –

வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி-ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர்
அனுசந்தித்து கொடு போந்தராய் –
அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே -கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க –
இத்தைக் கண்டு —
பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –

நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே-
எம்பெருமான்-திரு முன்பே இப் பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார் –
அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –
அவர் இதிலே ஏதேனும் அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன –
அது எனக்கு போகாது –
இப் பாசுர மாத்ரத்தை   நினைத்து இருப்பேன் -என்றாராம் –
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே
கொண்டாடி அருளிச் செய்தார் –

தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –

பாசுரம் –95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு —
துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –
திருமாலிருஞ்சோலை   -10-8-

பதவுரை

உயிர்–உயிரானது
முன்னமே–நெடுநாளாகவே
மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்-ஸூஷ்ம சரீரம்
யாது ஆனும் ஓர் ஆக்கையில்–யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு–பிரவேசித்து
அங்கு அவ்வுடம்பில்–ஆப்புண்டும்-பிராரப்த கர்மத்தால் அதிலே உழன்று -பந்தத்தில் –
கட்டுப்பட்டு நின்றும்–ஆப்பு அவிழ்ந்தும்
(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும்–நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால்–ஆதலால்-வாசனையால் -பதிவினால் –
யாது ஆனும் பற்றி–எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்–(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான

கைவல்யமும் வீடே -நல் வீடு இல்லையே -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே
மாதாவினை–தாய் போன்றவனும்-ப்ரியபரனுமாய் –
பிதுவை–தந்தை போன்றவனுமான-ஹித பரனுமாய் –
திருமாலை–ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன்–கரணமடைந்திருப்பேன்.

வியாக்யானம் –

யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு –
ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து –
அது தண்ணிய ஸூ கர-ஜன்மாவில் (ஸூ கர -பன்றியாய் )ஜனித்தாலும் –
மம அயம் தேக -என்று அதிலேயே அபிமானித்து –
அங்கே-உண்டானவத்றோடு சில சம்பந்த விசேஷங்களும் –
அவை தன்னை விட மாட்டாமையாலேயாய்-போரா நிற்கும் ஆயிற்று –

ஆக்கை -என்கையாலே
உபசயாத்மகம் என்று தோற்றுகிறது-(தேகம் வளர்ந்து -சரீரம் தேய்ந்து )

புக்கு –
சேதனனுக்கு அசித் சம்சர்க்கம்  ஸ்வதா உள்ளது ஓன்று அன்று –
கர்ம நிபந்தனம் என்கை –

அங்கு ஆப்புண்டும் –
கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –

இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –
சாஸ்திர வாசனையாலும் –
பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –
இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –

ஆப்புண்டும் –
சிநேகத்தைப் பண்ணியும் –

ஆப்பு அவிழ்ந்தும் –
கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –
அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –

கர்ம ஷயம்   வந்தவாறே
அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே –

மூதாவியில் –
இத்தால் பழைமையை நினைக்கிறது-

ஆவி -என்று பிராணனாய் –
அசித் விசேஷமாய் பிராணனாய் இருக்கையாலே
இப்போது ஸூஷ்ம சரீரத்தை ஆவி என்கிறது –

இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு –
பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு –

இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது —
சேதனனுடைய கமந ஆகமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –

தடுமாறும் –
பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு –
வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து –
அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து –
சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து –
இப்படி தடுமாற்றமாய் இருப்பது –

இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது –
அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –

உயிர் –
ஜ்ஞான ஆனந்த லஷணமாய்-
நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது –

இப்படி தடுமாறி சம்ஸரிக்கிறது என்று தொடங்கி என்றால் –

முன்னமே –
அநாதியாய் போருகிறது ஆயிற்று –

அதனால் –
அந்த வாசனையே உபாத்யாயராக –முன்னமே யாகையாலே –

யாதானும் பற்றி –
பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –
பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –
அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –

நீங்கும்-
பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுகைக்கு விரதத்தை –
நீ பற்றுகிற விஷயங்கள் அடைய ஸ தோஷமாய் இருக்கும் –
பகவத் விஷயமே கிடாய் நல்லது -என்று சிலர் உபதேசித்தாலும் –
அது நன்றே ஆகிலும் –
நான் அத்தை விடுகையிலே-சங்கல்பித்தேன் என்னும் –

சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று
ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-
இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –

த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே
இரண்டாகப் பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது –

நல் வீடு செய்யும் –
இப்போது அந்நிலை தவிர்ந்து —
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று கால் கட்டி
இத்தை விடுவித்து தர வேணும் -என்னப் பண்ணின —
மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே  -என்கிறபடியே –
நீ பிணைத்த பிணையை நீயே அவிழ்க்க வேணும் என்று அபேஷிக்க பண்ணின –
தன் பக்கல் ருசி-முன்னாக இத்தை விடுவிக்க வேணும் என்னப் பண்ணின

மாதாவினைப்  பிதுவை –
சரீரத்துக்கு உத் பாதகராய் –
சம்சார வர்த்தகராய் இறே யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது –
இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று –

இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான் என் என்னில் –
திருமாலை –
ஸ்ரீ ய பதி யாகையாலே –
பிதா மாதா ச மாதவ -என்னுமா போலே –

வணங்குவனே –
இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து –
தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு
சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு  உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே –
அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –

அதுவும் அவனது இன்னருள்
இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்

(அவனதான வஸ்துவை -அவனது தான் என்று இசைவதே ஆத்ம சமர்ப்பணம்)

தாத்பர்யம்

அயோக்யா அனுசந்தானத்தால் அகலப்பார்த்த இடத்திலும்
கைவிடாமல் உலக விஷய வைராக்யம் விளைவித்து
தனது பக்கம் பிராவண்யம் விளைவித்த பகவானுக்கு -ஸ்ரீயப்பதிக்கு
என்னால் செய்வது ஒன்றுமே இல்லை
ஆகையால் அவன் திருவடிகளில் வணங்குகிறேன்
ஜீவர்கள் தேவ மனுஷ்ய ஸூ கர-போன்ற ஏதாவது ஒரு ஜென்மம் எடுத்து
அந்த ஜாதியில் அத்யந்த ப்ரீதி செய்து அழுந்திக் கிடந்தது
பிராரப்த கர்மம் அழிந்த பின்பு
ஸூஷ்ம சரீரம் எடுத்து மீண்டும் கர்மாதீனமாக ஒரு பிறவி எடுத்து
தடுமாறி பிறவிச் சூழலில் உழன்று
பகவத் விஷயம் நன்றியாக இருப்பது அறிந்தும் நான் பற்றின விஷயம் ச தோஷமாகிலும் அத்தை விடாமல் இருக்கும்
விரதத்தை மாற்றி
உனது திருவடிகளில் பிராவண்யம் உண்டாக்கி
ஜென்ம பிரவ்ருத்த -திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளம் உண்டாய் இருப்பது போல்
சஹஜ பக்தி உண்டாக்கி
அருளின ஆப்த பந்துவான ஸ்ரீ யபதியை ஆஸ்ரயியா நின்றேன் என்று அருளிச் செய்கிறார் இதில்

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply