திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-5-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்;
மின்னும் சுடர்மலைக்குக் கண்,பாதம், கைகமலம்;
மன்னும் முழுஏழ் உலகும் வயிற்றின்உள;
தன்னுள் கலவாதது எப்பொருளும் தான்இலையே.

 

    பொ – ரை : ‘என்னுள் வந்து கலந்தவனாகி மின்னுகின்ற ஒளி மயமான மலை போன்ற இறைவனுக்கு, சிவந்து கனிந்த திருவதரம் செந் தாமரையைப் போன்றதாகும்; திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைகளும் தாமரை மலர்களேயாம்; நிலைபெற்ற பதினான்கு உலகங்களும் திருவயிற்றிலே உள்ளன; ஆதலால், இறைவனாகிய தனக்குள் கலவா தனவாகிய எப்பொருள்களும் இல்லை என்றவாறு.

    வி – கு : உலகு -இடவாகுபெயர். மலை என்றது, உருவகம். மூன்றாம் அடியில் ‘வயிற்றின் உள’ என உடன்பாட்டாற்கூறிய அதனை நான்காமடியில் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என எதிர் மறை முகத்தால் அருளிச்செய்கிறார். ‘கலவாத அது எப்பொருளும்’ என்பது ஒருமையோடு பன்மை மயங்கி வந்தது.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1’தன்னின் வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தன்னைப் பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன், தான் என்னைப்பற்றி உளனாய் என்னோடே வந்து கலந்தான்’ என்கிறார்.

என்னுள் கலந்தவன் –‘அகஸ்தியர்க்கு உடன்பிறந்தவன்’ என்னுமாறு போன்று, நிரூபகம் இருக்கிறபடி. ‘நாராயணன், வாசுதேவன்’ என்பன போன்று, ‘என்னுள் கலந்தவன்’ என்று  காணும் அவனுக்குத் திருநாமம். செம் கனி வாய் செம் கமலம் – சிவந்து கனிந்த வாய் செங்கமலம் போலே இராநின்றது, மின்னும் சுடர் மலைக்கு –2‘வாட்டம்இல் புகழ் வாமனன்’ இவரோடு கலந்த பின்பு வளர்ந்தபடியும், புகர் பெற்றபடியும், தரையிலே கால் பாவித்தரித்தபடியும், திண்மையை உடையனானபடியும் நோக்கி, ‘மின்னும் சுடர்மலை’ என்கிறார். கண் பாதம் கை கமலம் – முகமறிந்து கோத்தவாறே முத்து விலை பெறுமாறு போன்று, இவரும் திவ்விய அவயவங்களைச் சேர்த்து அனுபவிக்கிறார்.

மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள – 3பிரவாஹ ரூபத்தாலே நித்தியமான எல்லா உலகங்களும் தன் சங்கற்பத்தைப் பற்றிக் கிடக்கின்றன. தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே –

தன் திருவுள்ளத்தைப் பற்றுக்கோடாக உடைத்து அன்றிக்கே இருக்கிற பொருள் யாது ஒன்று, அது இல்லை என்ற சொல்லுக்குப் பொருளாகிறது. 1இனி, ‘தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு, ‘இறைவன் உருவமாக இல்லாத பொருள் தான் இல்லை என்று பொருள் கூறலுமாம். 2‘இயங்கியற்பொருளும் நிலையிற்பொருளுமாகக் காணப்படுகின்றவை எவையோ, அவை எல்லாம் என்னை அன்றி இல்லை’ என்பது ஸ்ரீ கீதை. உலகத்துப் பொருள்கள், இறைவனைப் பற்றாத போது சத்தை இன்றியே இருக்கிறது, சொரூபத்தாலே; இறைவன், ஆழ்வாரைக் கலவாத போது சத்தை இன்றியே இருப்பது, காதலாகிய பண்பாலே.

பிரமாதிகள் மட்டும் இன்றி சகல லோகங்களும் அவனை விட்டு சத்தை பெறாதது போல்
என்னை விட்டு அவன் சத்தை பெறாமல் இருந்தான் என்கிறார்
என்னுள் கலந்தவன் -புதிய திரு நாமம் சாத்துக்கிறார்

தன்னை இட்டு அவனை நிரூபிக்கும் படி
திரு வேம்கடமுடையான் -திவ்ய தேசம் நிரூபகம் ஆனது போல்
திரு வல்லி கேணி யான் -நாராயணன் வாசு தேவன் போல் என்னுள் கலந்தவன் —
அகஸ்தச்ய ப்ராதா போல் –
மின்னும் சுடர் மலை -முற்று உவமை –
வாட்டமில் -வாமணன் -பேர்கி –
பாற் கடலில் பையை துயின்ற பரமன்
பனி பட்ட மூங்கில் போல சுருங்கி இருந்தான்
இந்த்ரன் குறை தீர்த்து ஒன்கிஉலகு அளந்தான்
அடியவர் துக்கம் கூனி குறுகி வாமணன்
கலந்த பின்பு -வளர்ந்து படை மலை தேஜஸ் மின்னும் சுடர்
கால் பாவி தரித்து மலை போல் இப்பொழுது –
பிரவாக ரூப ரூபத்தால்மன்னு முழு ஏழு உலகு -மாண்டும் படைக்கிறான் பிரவாகம் போல் நித்யம் -மன்னு
அலை நித்யம் போல் -பிரவாகத்தோ நித்யம்
வயிற்றில் உள -சங்கல்பத்த
அவனை அபாஸ்ரயமாக -நாஸ்தி சப்தம் -அனைத்தும் பற்று கோடு அவனை  -முயல் கொம்பு ஆகாச தாமரை போல் இல்லாத வஸ்து –
அவன் இவனை பற்றாத போது -ஸ்வரூப சத் பாவமில்லை
அவனுக்கு குணத்தாலே பிரணயித்வ குணத்தால் சத்தை இன்றி இருக்கிறான்
உதாரா -சர்வ -ஆத்மா  யேவ தூ -இதி ஞானி மே மதம் –கீதை -ஞானிகளோ என்னில் -ஏன் ஆத்மா -என்கிறான்
வேதாந்த சித்தாந்தம் -அவனுக்கு உள்ளே ஆத்மா தனியாக இல்லை -அவன் ஸ்வரூபம் சொல்கிறோம் –
அது பற்றி விசாரம் வேண்டாம் -இது என் மதம் -அவன் தரிக்க இவர்கள் -அவன் கொள்கிறான் இப்படி
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் பொழுது -நோக்க வேண்டும் என்று அழியாது ஒழிகை -முமுஷுப்படி –

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading