எப்பொருளும் தானாய், மரதகக் குன்றம்ஒக்கும்;
அப்பொழுதைத் தாமரைப்பூக் கண்பாதம்; கைகமலம்;
எப்பொழுதும் நாள்திங்கள் ஆண்டுஊழி ஊழிதொறும்
அப்பொழுதைக்கும் அப்பொழுதுஎன் ஆரா அமுதமே.
பொ-ரை : எத்துணைச் சிறிய நேரமும் நாளும் மாதமும் வருடமும் ஊழி ஊழிகள்தோறும் அவ்வக்காலங்களில் எனக்குத் தெவிட்டாத அமுதமாய் இருக்கின்ற இறைவன், எல்லாப் பொருள்களும் தனக்குள் அடங்கப் பெற்றவனாய் மரகதமலையினை ஒத்திருக்கிறான்; அவனுடைய திருக்கண்கள் அப்பொழுது மலர்ந்த தாமரைப்பூவினை ஒத்திருக்கின்றன; திருவடிகளும் அப்பொழுது மலர்ந்த தாமரைகள் ஆவனவாம்.
வி-கு : ‘ஆரா அமுதம் குன்றம் ஒக்கும்’ என்க. அமுதம் சொல்லால் அஃறிணையாதலின், ‘ஒக்கும்’ என்கிறார்.
ஈடு : நான்காம் பாட்டு. ‘நீர் ஒருகால் கூறியதை ஒன்பதில் கால் கூறி இங்ஙனே கிடந்து படுகிறது என்?’ என்ன, ‘நான் அது தவிர்கிறேன்; நீங்கள் அவ்விஷயத்தை ஒருகால் இருந்தபடியே எப்பொழுதும் இருக்கும்படி செய்ய வல்லீர்களோ?’ என்கிறார்.
எப்பொருளும் தனாய் – தன்னில் வேறாக நின்ற எல்லாப் பொருள்களும் ‘தான்’ என்ற சொல்லுக்குள்ளே1பிரகாரமாம்படி தான் பிரகாரியாய். இதனால், ‘ஸ்வாதீனம் அல்லாதது ஒரு பொருளைப் பெற்றுதான் இப்பாடு படுகிறானோ?’ என்கிறார். மரதகம் குன்றம் ஒக்கும் – 2மேல், உலகமே உருவமாய் நிற்கும் நிலை சொல்லிற்று; இங்கு, அசாதாரண விக்கிஹந்தன்னையே சொல்லுகிறது. 3மேல், ‘மின்னும் சுடர்’ என்று தம்முடைய கலவியால் வந்த புகரைச் சொல்லிற்று; அப்புகருக்கு இருப்பிடமான அசாதாரண விக்கிரஹத்தைச் சொல்லுகிறது இங்கு. கண் –4பந்தத்தை விளைக்கும் கண். பாதம் – பந்தம் அறிந்தால் அனுபவிக்க இழியும் துறை. ஆகிய இவை, அப்பொழுதை தாமரைப்பூ -‘மேல், தாமரையை ஒப்பாகச் சொன்ன இடம் தப்பச் சொன்னோம்’ என்று அழித்துச் சூளுறவு செய்கிறார். கேவலம் தாமரையை ஒப்பாகச் சொல்லில் செவ்வி அழிந்த சமயத்திலும் ஒப்பாகத் தொடங்குமே; ஆதலால்,5அப்போது அலர்ந்த செவ்வியையுடைத்தான தாமரையை ஒப்பனவாம். கை கமலம் – தம்முடைய ஸ்பரிசத்தால் செவ்வி பெற்றபடி. கை அப்போது அலர்ந்த கமலம் போலே இருக்கும். எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம் –1கலை காஷ்டை முதலியவைகளாலும் வேறுபடுத்த ஒண்ணாத மிகச்சிறிய காலம் அனுபவிப்பது, ஒரு நாள் அனுபவிப்பது, ஒரு மாதம் அனுபவிப்பது, ஓர் ஆண்டு அனுபவிப்பது, கல்பந்தோறும் கல்பந்தோறும் அனுபவிப்பது, இப்படிக் காலமெல்லாம் அனுபவியாநின்றாலும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமேயாம். அதாவது, 2‘முன் கணத்தில் அனுபவம் போல அல்ல ஆயிற்று அடுத்த கணத்தில் அனுபவம் இருப்பது’ என்றபடி. ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின் கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டுஞானத்திற்கு; இங்கு 3விஷயந்தானே வேறுபடுகின்றது என்பதாம்.
5. ‘இப்பொழுது எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? யாரும்
செப்பருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு; பின்புஅவ் வாசகம் உரைக்கக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தா மரையினை வென்றது அம்மா!’
என்ற செய்யுளை இங்கு ஒப்பு நோக்குக. (கம்பரா. கைகேசி சூழ். 168.)
‘கலை. காஷ்டை’ என்பன, மிகச்சிறிய கால அளவுகள்; பதினெட்டு முறை இமை
கொட்டுகிற கால அளவு ஒரு காஷ்டை எனப்படும்; காஷ்டை முப்பது கொண்டது ஒரு
கலை எனப்படும்.
கொட்டுகிற கால அளவு ஒரு காஷ்டை எனப்படும்; காஷ்டை முப்பது கொண்டது ஒரு
கலை எனப்படும்.
Leave a Reply