திருஉடம்பு வான்சுடர்; செந் தாமரைகண் கைகமலம்;
திருஇடமே மார்வம்; அயன்இடமே கொப்பூழ்;
ஒருவுஇடமும் எந்தை பெருமாற்கு அரனேஓ!
ஒருவுஇடம் ஒன்றுஇன்றி என்னுள்கலந் தானுக்கே.
பொ – ரை : வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தவனான எந்தை பெருமானுக்கு அழகிய திருமேனி சூரியனைப் போன்று இருக்கின்றது; திருக்கண்கள் செந்தாமரை போன்று இருக்கின்றன; திருமகளுக்கு இருப்பிடம் திருமார்பாகும்; பிரமனுடைய இடம் திரு உந்தித்தாமரையாகும்; ஒழிந்த மற்றை இடம் சிவன் இருக்கும் இடமாகும்.
வி-கு : வான் சுடர் -சூரியன்; மிக்க ஒளியுமாம். ஒருவுதல்-நீக்குதல். ‘ஒன்று’ என்பது, ‘சிறிது’ என்னும் பொருட்டாய் நின்றது. ஓகாரம், சிறப்புப் பொருளில் வந்தது. கலந்தான் – வினையாலணையும் பெயர்.
ஈடு : இரண்டாம் பாட்டு. 1தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி, ‘தன் உடம்பைப் பற்றிப் பிரமன் சிவன் முதலியோர்கள் சத்தையாம்படி இருக்கின்றவன்தான், என் உட்ம்பைப் பற்றித் தன் சத்தையாம்படி இராநின்றான்’ என்கிறார்.
திரு உடம்பு வான் சுடர் – அணைத்த போதை ஸ்பரிச சுகங் கொண்டு அருளிச்செய்கிறார். 2’ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே, ஆப்த தமரான இவர், ‘திரு உடம்பு வான் சுடர்’ என்னப்பெறுவதே! ‘ஈஸ்வரனுக்குவிக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.‘ஆயின், இவ்வாழ்வார் அருளிச் செய்யின், அது பிரமாணமோ?’ எனின், மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றோ? 1அவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்? 2‘தனது இச்சையால் மேற்கொள்ளப்பட்ட பல சரீரங்களையுடையவன்’ என்கிறபடியே, தனக்கும் விரும்பத் தக்கதாய் இருப்பது ஆதலானும், 3‘மஹாத்துமாவான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்டது இவ்வாலிங்கனமே; இவ்வாலிங்கனமானது எல்லா வகைச் சொத்தாகவும் உள்ளது’ என்கிறபடியே, தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார். வான்சுடர் – முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே. புறம்பு ஒளியாய் உள்ளும் மண்பற்றி இருக்கை அன்றி, நெய் திணுங்கினாற்போன்று ஒளிப்பொருளாகவே இருத்தலின்,‘வான் சுடர்’ என்கிறார். 4‘பேரொளியின் கூட்டத்தைப் போன்றவன்’ என்பது விஷ்ணு புராணம். 5இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தும், ‘ஆறு குணங்களையுடைய திருமேனி’ என்கிறது குணங்களுக்குப் பிரகாசகம் ஆகையைச் சுட்டியேயாம்.
கண் செம் தாமரை – கடாக்ஷத்தாலே 1வவ்வல் இடப்பெற்றுச் சொல்லுகிற வார்த்தை. கை கமலம் – 2‘மென்மையான திருக்கை’ எனிகிறபடியே, தம்மை அணைத்த கை. ‘இவர், ஒரு கால் சொன்னதைப் பலகால் சொல்லுவான் என்?’ என்னில், முத்துக்கோக்க வல்லவன் முகம்பாறிக் கோத்தவாறே விலை பெறுமாறு போன்று, இவரும் ஒரோமுக பேதத்தாலே மாறிமாறி அனுபவிக்கிறார். திரு இடமே மார்வம் – அக்கையாலே அணைப்பிக்கும் பெரிய பிராட்டி யாருக்கு இருப்பிடம் திருமார்வு. அயன் இடமே கொப்பூழ் பதினான்கு உலகங்களையு படைத்த பிரமன் திருநாபிக்கமலத்தை இருப்பிடமாகக் கொண்டிருப்பான். ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே – என் நாயனான சர்வேஸ்வரனுக்கு நீங்கின இடமும் உருத்திரனுக்கு இருப்பிடமாய் இருக்கும். ‘ஓரிடம்’ என்னாதே, ‘ஒருவிடம்’என்கிறது, ஒருவுதல் – நீங்குதலாய், நீங்கின இடம் என்றபடி. தாமச தேவதை இருப்பிடம் ஆகையாலே ‘நீங்கின இடம்’ என்று விருப்பு அற்ற வார்த்தை இருக்கிறபடி.
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு – என்னோடே வந்து கலக்கிற இடத்தில், நீங்குமிடம் ஒன்றும் இன்றியே வந்து கலந்தான். ‘தனக்கே உரியவரான பெரிய பிராட்டியாரைப் போன்று, பிறர்க்கு உரியவர்களான பிரமனுக்கும் சிவனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து வைப்பதே!’ என்று இந்தச் சீல்குணத்தை அனுசந்தித்து,3வித்தராய் இருந்தார் முன்பு; இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே ‘அது பரத்துவம்’ என்று தோற்றி, ‘இது என்ன சீலத்தின் மிகுதி! ஓ’ என்பார் ‘ஓ’ என்கிறார்.
5. ‘இப்படித் திருமேனி பேரொளிப் பிழம்பாய் இருப்பத்தற்குக் காரணம் பஞ்ச சக்தி மயமாக
இருத்தல்’ என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம். ‘அப்படியாயின், ‘ஆறு
குணங்களையுடைய திருமேனி’ என்பது சேரும்படி என்?’ என்னும் வினாவிற்கு
விடையாக, ‘இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய்’ என்று தொடங்கும் வாக்கியத்தை
அருளிச்செய்கிறார்.
பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.
இவ்வுலகம் ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டது போன்று, அவ்வுலகம் பஞ்ச
சக்திகளாலாயது என்பர்.
ஆழ்வார் உடன் கலந்த பின்பு தனக்கு வந்த புகர் -தன உடம்பை பற்றி பிரமாதிகள் சத்தை பெற
Leave a Reply