இரண்டாந்திருவாய்மொழி
‘திண்ணன் வீடு’
முன்னுரை
ஈடு : மேல் திருவாய்மொழியில், இவருக்குப் பிறந்த ஆற்றாமை, பேச்சுக்கு நிலம் இல்லாததாய் இருந்தமையின்,‘கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை’ என்னுமாறு போன்று, ஆற்றாமையோட முடிந்துபோமித்தனை என்று இருந்தார். பின்னர், அவன் வந்து முகங்காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர்; ‘இதற்கு அடி என்?’ என்று பார்த்து ஆராய்ந்தவாறே, மற்றைப் பொருள்களினுடைய வேறு இழவுகளில் அளவு அல்லாத இறைவனுடைய வேறுபட்ட சிறப்பாய் இருந்தது; அதாவது, பிரிந்த போது தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதப்படியாய், கலந்து போதும் தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியான இறைவனுடைய 2வைலக்ஷண்யமாய் இருந்தது என்றபடி. ‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, 3எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாகையாலேயாய் இருந்தது; ‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, சர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது. ‘ஆயின், சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருப்பின், சர்வேஸ்வரனாயும், இருத்தல் வேண்டுமோ?’ எனின், ‘உயர்வற உயர் நலம் உடையவன்’ என்றால், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றே தோன்றுமாதலின், எல்லா நலமும் உடையவனே அமரர்கள் அதிபதியாயும் இருத்தல் வேண்டும். ஆக, இவ்வகையில் ஒன்றைப்பற்றி ஒன்றாக இடத்திற்கு ஏற்பத் தோன்றிய இறைமைத் தன்மையினை அருளிச் செய்கிறார்.1இத்திருவாய்மொழியில்.
இனி, ‘மேல் திருவாய்மொழியின் ஈற்றில், ‘மூவா முதல்வா’ என்றார்; அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை – காரணத்வத்தை – இத்திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார்,’ என்று பனிப்பர்திருக்குருகைப்பிரான் பிள்ளான்.
‘ஆயின், முதல் திருவாய்மொழியிலும் சர்வேஸ்வரனாந் தன்மையினை அருளிச் செய்தனரே?’ எனின், 2‘ஒருகால் சொன்னோம்’ என்று கைவாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்; ஒருகால் சொல்லிற்று என்று கைவாங்கி இருக்கலாம் விஷயம் அல்லன் அவன், இனி, பகவத் விஷயத்தில் கூறியது கூறல் என்ற குற்றமும் ஆகாது. ‘யாங்ஙனம்?’ எனின், ஒரு குணத்தையே எல்லாக்காலமும் அநுபவிக்க வல்லார் ஒருவர் இவர்; ஒரு குணந்தன்னையே ‘இதற்கு முன்பு அநுபவிப்பித்தது இக்குணம்’ என்று தோன்றாதபடி கணந்தோறும் புதுமை பிறப்பித்து அநுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன். ‘ஆயின் ‘கணந்தோறும் புதுமை தோன்றுமோ?’ எனின், பயிலா நிற்கச் செய்தே 3‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் திருமங்கை மன்னன்; 4‘எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்’ என்றார் இவர் தாமும். ஆகையாலே அன்றோ, ஒரு பொருளே நித்தியப் பிராப்பியம் ஆகிறது? ஆயினும், முதல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய் மொழிக்கும் வேற்றுமையும் உண்டு; முதல் திருவாய்மொழியில் கூறிய பரத்துவம், சுவாநுபவமாய் இருக்கும்; இங்கு, அந்தப் பரத்துவந்தன்னை எல்லாரும் அநுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பரோபதேசமாய் இருக்கும். இங்கு விதிமுகத்தால் பரத்துவத்தை அருளிச்செய்தார்; இங்கு 1விதிமுகம் மறைமுகம் என்னும் இரண்டாலும் பரத்துவம் சொல்லுகிறார். அங்கு, 2சுருதிச் சாயையாலே பரத்துவஞ் சொன்னார்; இங்கு, இதிகாச புராணங்கள் மூலமாகப் பரத்துவஞ்சொல்லுகிறார். 3அங்கு, முதன்மையில் முதன்மை; இங்கு அவதாரங்களில் முதன்மை.
122
திண்ணன் வீடு முதல் முழுதும்ஆய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன்உண்டநம்
கண்ணன் கண்அல்லது இல்லைஓர் கண்ணே.
பொ – ரை : என்றும் அழியாத பரம்பதம் முதலான எல்லா உலகங்கட்கும் உரியவனாய், எல்லையற்ற நற்குணங்களையுடையவனாய், அக்குணங்களைக் காட்டி என்னை அடிமை கொண்டவனாய், இவ்வுலகம் தெய்வ உலகம் முதலான எல்லா உலகங்களையும் ஒருசேர உண்டவனாய் உள்ள நம் கண்ணபிரானே உலகத்திற்கு எல்லாம் களைகண்; அவனை அல்லது களைகண் ஆவார் ஒருவரும் இலர்.
வி-கு : திண்ணன் என்பது, திண்ணம் என்பதன் விகாரம். திண்ணம் என்பது, வீட்டிற்கு அடைமொழி. இனி, இதனை ‘இல்லை ஓர் கண்; இது திண்ணம்’ எனக்கூட்டிப் பூட்டுவிற்பொருள் கோளாக உரைத்தலும் அமையும். இனி, ‘திண் நல்’ எனப்பிரித்தலுமாம்.
ஈடு : முதற்பாட்டு, இத்திருவாய்மொழியில் சொல்லப்புகும் பரத்துவத்தைத் தொகுத்து அருளிச்செய்கிறார்.
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் – திண்ணியதான பரமபதம் தொடக்கமான எல்லா உலகங்களையுமுடையனாய். திண்ணம்
என்றது, உறுதி என்றபடி. இது பரமபதத்திற்கு அடைமொழி. உறுதியாவது, 1ஆவிர்ப்பாவ திரோபாவ ஜன்ம நாச விகல்பங்கள் என்னுமவை இல்லாமையாலே கர்மம் காரணமாக வரும் அழிவு இல்லாமை. ‘ஆயின், விமானம் கோபுரம் மண்டபம் முதலியனவாகநிலை மாறுதல் நித்திய விபூதியில் உளவே?’ எனின், அவை இச்சை காரணமாக வருகின்றவை ஆதலின், குற்றம் அன்று; அவை அழிவாயும் தோற்றா. எவ்வாறாயினும், இவ்வுலகங்களைப் போன்று கருமங்கள் காரணமாக வருகின்ற தோற்றக் கேடுகள் இலவாதலின் ‘திண்ணம்’ என்கிறார். எண்ணின் மீதியன் – எல்லை இல்லாத கல்யாண குணங்களையுடையவன். ஆக, இவ்விரண்டாலும் எல்லா உலகங்களையும், எல்லா நற்குணங்களையும் உடையவன் என்பதனைத் தெரிவித்தபடி.
இனி, 2‘திண்ணன் வீடு முதல் முழுதுமாய்’ என்பதற்கு மோக்ஷம் கைவல்யம் செல்வம் ஆகிற உறுதிப் பொருள்களைக் கொடுக்கிறவன் என்றும், ‘எண்ணின் மீதியன்’ என்பதற்கு, ‘எண்ணுக்கும் மேற்பட்ட மோக்ஷம் முதலான உலகங்களை உடையவன்’ என்றும் கூறலுமாம். அன்றி, ‘திண்ணன் வீடு முதல் முழுதுமாய்’ என்பது, மோக்ஷம் முதலான உறுதிப்பொருள்களைக் கொடுக்கிற கொடையாகிற குணம் ஒன்றனையே கூறுவதாகக் கொண்டு, எண்ணின் மீதியன் என்பது, எண் இல்லாத மற்றை நற்குணங்களைக் கூறுகிறது என்று கோடலுமாம். ஆக, குணங்களாலேயாதல், உலகங்களாலேயாதல் வந்த அளவிட முடியாத தன்மையைச் சொல்லுகிறது. எம்பெருமான் – குணங்களையும் உலகங்களையும் உடையனாய் இருக்கிற இருப்பைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவன்.
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் – பூமியையும் தெய்வ உலகங்களையும் வெள்ளம் கொள்ளப்புக, அவற்றுள் ஒன்றும் தப்பாதவாறு ஒரேகாலத்தில் அவற்றை எல்லாம் எடுத்துத் தன் திருவயிற்றிலே வைத்துக் காத்த நம் கண்ணன். காத்தல் அவனுக்குத் 1தாரகமாகையாலே ‘உண்ட’ என்கிறார்; இன்றேல், ‘காக்கும்’ என்ன அமையும். ‘ஆயின், உலகத்தை விழுங்கினவன் கிருஷ்ணனோ?’ என்னில், ஆம் கிருஷ்ணனே; 2அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் அன்றோ யசோதை? ஆக, இதனால், இப்படி உலகங்களையுமுடையனாய், உடைமை நோவுபட விட்டிருக்கையன்றி, பிரளய ஆபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கும் என்பதனைத் தெரிவித்தபடி கண் – சர்வ ரக்ஷகனான கிருஷ்ணனே உலகத்துக்குக் கண். 3‘உலகங்களுடைய தோற்றமும் கிருஷ்ணனே; காணப்படுகிற சராசரங்களாகிற எல்லாம் கிருஷ்ணன் பொருட்டாகவே இருக்கின்றன; இது பிரசித்தம்’ என்கிற பிரமாணப் பிரசித்தி இருக்கிறபடி.
4அல்லது இல்லை ஓர் கண்ணே – அவன் அல்லது களைகண் ஆவார் வேறு ஒருவரும் இலர். ‘கண்’ என்பதற்குக் காப்பவன் என்னும் இப்பொருளைத் தவிர, இதனை வெறுஞ்சொல் அளவிலே கொண்டு, 5‘பீலிககண்’ என்று கூறும் வழக்கு உண்டு அன்றோ? அவ்வாறு வழங்கக்கூடிய பொருளும் வேறு ஒன்று இல்லை என்பார்,.
‘அல்லது இல்லை ஓர் கண்’ என்கிறார். ‘ஆயின், மற்றைத் தேவர்களும் காப்பவர்களாகக் கூறப்படுகின்றனரே?’ எனின், மாலைக்கண் என்று இருப்பார்க்கு அல்லாதவை எல்லாம் மாலைக்கண்ணாகத் தோற்றும். திண்ணம் – இது திடம். 2‘சத்தியம் சத்தியம்; மீண்டும் சத்தியம்; கைகளை மேலே தூக்கிச் சொல்லுகிறேன்; வேதமாகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் மேலான பிரமாணம் இல்லை; அது போன்று கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறு இல்லை’ என்றார் ஸ்ரீ வியாச பகவான். ஆதலின், இவரும் ‘திண்ணம்’ என்கிறார்.
‘நம் கண்ணன் கண்’ என்கையாலே விதிமுகத்தால் பரத்துவமும், ‘அல்லது இல்லை’ என்கையாலே மறைமுகத்தாலே பரத்துவமும் அருளிச்செய்தார்.
1. ‘எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன்’ என்றது, விதிமுகத்தாற் கூறியது. ‘அல்லது
இல்லை ஓர் கண்’ என்றது மறைமுகத்தாற்கூறியது.
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் எண்ணின் ‘மீதியன்’ என்பதற்கு மூன்று வகையாகப்
பொருள் அருளிச் செய்கிறார். ‘இனி’ என்று தொடங்குவது இரண்டாவது பொருள்.
இரண்டாவது பொருளில், கொடுத்தலாகிய குணம் ஒன்றனையே கூறினாராயினும்,
உபலக்ஷணத்தால் மற்றைங் குணங்களையும் கொள்க. ‘ஈண்டு, உபலஷணத்தால் மற்றைக்
குணங்களையும் கொள்ள வேண்டுவது என்னை?’ எனின் – முன்றாவது பொருளில்,
‘மோக்ஷம் முதலான உறுதிப் பொருள்களைக் கொடுக்கிற கொடையாகிய குணம்
ஒன்றனையே கூறுவதாகக் கொண்டு’ என்று கூறுவதனால் என்க.
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!
கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே!’
என்ற சிலப்பதிகாரப் பகுதியில், ‘என்ன கண்?’ என்பதற்கு முன்னர்க் கூறியவாறே கூறுக;
‘பீலிக்கண்ணும் உண்டாகலின்’ என்னும் உரைப்பகுதி ஈண்டு நோக்கத் தகும்.
திண்ணன் வீடு
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply