(இப்பாசுரத்தில் மட்டும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவாய் மொழி விவரணம் காட்டி அருளுகிறார்
ஏக தேச உருவககம்
மேற்கு திசைப் பெண் புலம்பல்
பகலாகிற சூரியனை -ஆகுபெயர் -நிர்வாஹகன் -இழந்து
பிள்ளை -சந்திரன்
அழுகிற பெண் மேற்குத் திக்கு
பிள்ளையை ஓக்கலையில் கொண்டு புலம்புகிறாள்
பறவை ஒலியும் கடல் கோஷமும் புலம்பல்
மாலைக்காலம் உயிரை-சத்தியை – மட்டும் நலியாமல் போக
வாடை அத்தையும் -ஸஜாதீயம் அன்றோ -துழாவி கவர முயலுகின்றதே
நானும் புலம்புகிறேன்
நீட்டும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –
வாயும் திரையுகளும் -2-1-
வாயும் – எம்மை போல் கோட்பட்டாயே -அங்கு தலைமகள்
இது தாய் பாசுரம்
காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட காதல் பத்திமைக்கு வரம்பு இல்லையே )
அவதாரிகை-
கீழ் வந்த வியசன தசைகள் எல்லாம் பிரகிருதி என்னும் படிக்கு ஈடாக
மேல் வருகின்ற தசை இருக்கிற படியை கண்டு –
இது என்னவாய் தலைக் கட்டக் கடவது–என்று
திருத் தாயார் பயப் படுகிறாள்-
இவளுக்கு முன்பு சம்ஸ்லேஷ தசையில் ,அனுபவித்ததை எல்லாம் பாதகமாய்
தான் ஈடு பட்ட பின்பு-
தன் இழவைப் பாராதே –
இத் தலைக்கு நலிவாயிரா நின்றது -என்று
அவற்றையும் கொண்டு நோவு படுகிறாள்
வாயும் திரை யுகளில் பிராட்டியைப் போலே வழிப் பகையாய் இருக்கிறது
தன் மகள் துன்பத்தில் ஈடு பட்டு மேற்கு திசை பெண் தன் கணவன் பகல் போனதைக் கண்டு
வருந்துவதைக் கண்டு வருந்துகிறாள் –
இத் தலை-மேற்கு திசைப் பெண் –வழிப் பகை -காணும் இடம் எங்கும் பகையாக இருகிறதே –
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35-
பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை –
மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –
வாயும் திரையுகளும் -2-1-
பதவுரை
பால் வாய் பிறை பிள்ளை–அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம்
பிறைச் சந்திரனாகிய பால் மாறத வாயையுடைய (தனது) இளங் குழந் தையை
ஒக்கலைகொண்டு-தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு
பகல் இழந்த மேல் பால் திசை பெண்–ஸூர்யனாகிய கணவனை யிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்
புலம்பு உறும்–வருந்தி அழப் பெற்ற மாலைப் பொழுதானது
உலகு அளந்த மால் பால்–உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள
துழாய்க்கு–திருத்துழாய்க்கு
மனம் உடையார்க்கு–ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு
நல்கிற்றை எல்லாம்–அருள் செய்த உதவியை முழுவதும்
சோல்வான்–கவர்ந்து கொள்ளும் பொருட்டு
புகுந்து–வந்து
இது ஓர் பனி வாடை–இந்தக் குளிர்ந்ததொரு காற்று.
துழாகின்றது–(என்மேல்) தடவுகின்றது; அந்தோ!
பால் வாய் பிறை பிள்ளை இத்யாதி–
பால சந்த்ரனை ஓர் அருகே கொண்டு ,
பகலை இழந்த மேலை திக்காகிற பெண்ணானவள்
சந்த்யா சமயத்திலே ,பிரபலியா நின்றாள் –
புதிசாக பர்தாவை இழந்தாள் ஒரு ஸ்திரி தன்னுடைய ஸ்ததந்தய பிரஜையும் எடுத்து கொண்டு
கூப்பிடுமா போல கூப்பிடா நின்றாள்-
பால் வாய்-
வாயில் முலையை வாங்கில் வாடும்
பகல் இழந்த —
இழந்த பர்தாவின் கனத்தைச் (லோக உபகாரத்வத்தைத் ) சொல்கிறது
ஒரு மனு மாந்தாத்ரு ப்ரப்ருதிகளை இழந்தால் போலே தான் இழவுக்கும் போலியாகி
தானும் உத்தேச்யம் பெற்றேன் என்னும் போது ,
பகல் கண்டேன் -என்று இறே சொல்வது-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -ஸூரியனாக நாராயணனைக் கண்டேன் இரண்டாம் திரு அந்தாதி -81–
மேல் பால் திசை பெண் —
நாயகி உடைய கனம் சொல்கிறது –
(மேலைத் திக்கு என்றாலே உத்க்ருஷ்டம் தானே )
திக்குகளை விவேகிக்கும் பொழுது-மேல் திக்கை உத்க்ருஷ்டம் என்று சொல்லும்படியாலே —
மேலை கடல் கோஷிகிறவற்றை-புலம்புகிறது என்கிறது-
(திசா பெண்பால்
சந்திரா ஆண் பால் -பிள்ளை )
உலகு அளந்த இத்யாதி –
சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான
மனசை உடைய இவளுக்கு-
மாலை நல்கிற்று எல்லாம்-
மாலை நல்குகை-
சத்த்தையை வைக்கை —
சந்தான சாபம் வைத்த படி
மாலை சோல்வான் இத்யாதி–
சிலரை ஹிம்சிக்கப் புக்கவர்களை ஹிம்சிக்கப் புகுவாரைப் போலே-
சத்தையைத் துளாவிக் கொண்டு வரா நின்றது
பனி வாடை-
நஞ்சூட்டின வாடை –
பிராண அவஸ்தமாய் இருக்கையாலே –
பிராணன் நின்ற நிலை எல்லாம் அறிந்து துழாவா நின்றது —
நாங்கள் பிரக்ருதியை அழித்தோமோ ?
எங்கள் உடன் சஜாதீயமானத்தை கொண்டு போகிறோம் இத்தனை அன்றோ ?-என்று
அழியா நின்றது-
ஸ்வா பதேசம்
பகவத் விஸ்லேஷத்திலும் ,
அனுகூல பதார்த்தங்களும் , பாதகம் ஆகிற படியை கண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள்-
இவருடைய சத்தை எங்கனே தரிக்கக் கடவதோ -என்று
அஞ்சுகிற படி-
தாத்பர்யம்
நாயகி மோகித்து
ஸந்த்யையும் வாடையும் நலிய ‘
தாயார் இவளையும்
சமானமான மேற்குத் திக்கும் கணவனான பகல் ஆகிற ‘ஆதித்யன் மறைந்து போக
சந்த்ரனாகிற முக்த சிசுவை ஓக்கலையிலே கொண்டு
சமுத்திர கோஷம் ஆகிய பெரும் குரலுடன் அழுது புலம்ப
வைத்தது
துளி ஞானம் பாக்கி போல் அங்கும் பிள்ளை கையிலே உண்டே
உயிர் மட்டும் பாக்கி வைத்து சத்தை மட்டும் இருக்க
வாடை அத்தையும் சஜாதீயமான ப்ராணனைப் பறிக்கத் துழாவ
திருவிக்ரமன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்பட்டு சவுந்தர்யாதிகளை இழந்து
அதுக்கும் மேலே வாடை மர்மத்தில் புக்கு மிகவும் பாதிக்கிறதே என்று
இருவருக்குமாகத் திருத்தியார் துக்கப்பட்டாள் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply