ஸ்ரிய பதியாய் சம்சாரம் இழவு கண்டு -கரை மரம் சேரும் வழி ஏதோ என்று சிந்தித்து
தான் பல திரு அவதாரம் செய்து- அஜயமானோ பகுதா விசையா
திரு கண் நோக்கத்தை நால் திசையும் விட எட்டு திக்கிலும்- எங்கும் பக்க நோக்கு அறியான்
பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் ஒருங்க
அல்வார் பாக்கள் பட
நாயினேன் தொண்டர்க்கு அமுது உண்ண சொல்லி-
உலகம் உய்ய நான் உய்ய நீயும் உய்ய திவ்ய பிர பந்தம்வாய் ஓலை எழுதி கொடுக்க
நெறிஞ்சி காட்டை பிருந்தாவனம் -ஆக்கினது போல்
ஊரும் உலகமும்தன்னை போலே பேரும் பிதற்ற வைத்து
-பயன் நன்றாகிலும் பாங்கு அலற ஆகிலும் நன்றாக திருத்தி பணி கொள்ள வைத்தான்
பரத்வத்தை முதல் பத்திலும்
ஜகத் காரனத்வம் இரண்டாம் பத்திலும்
சர்வ வியாபகன் மூன்றாம் பத்திலும்
ஆகாசம் போல் இன்றி அந்தர் பிரவேசித்து நியாமகன் அவனுக்கு ஒன்றே என்பதை நான்காம் பத்திலும்
பரம காருண்யம் ஐந்தாம் பத்திலும்
சரண்யத்வம் ஆறாம் பத்திலும்
பரம சக்தன்–ஏழாம் பத்திலும்
சத்ய காமத்வன்-எட்டாம் பத்திலும்
சத்ய சங்கல்பன்-ஒன்பதாம் பத்திலும்
ஆர்த்தி கரன்-பத்தாம் பத்திலும் அருளி
அவா அற்று வீடு பெற்றார் நம் ஆழ்வார்
ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் ஆகிறார்
விபூதி அடைய இவருடைய குடிக்கு கீழே இருக்க
விஷயான்தரம் மண்டி இருந்த இவரை -அழகை காட்டி திருத்த
அதிலே ஈடு பட்டு வேம் புழு வேம்பு அன்றி ஒண்ணாது இவ் விஷயத்தில் அவகாகித்தார்
பூர்வகமாக இங்கு இருத்தி வைக்க வேண்டி திரு மந்த்ரம்/அர்த்தம்/திரு பதிகள் எல்லை நிலம் காட்டி
இவையே பிரப்யம் பிரபகம் போக்கியம் என்று கொள்ள வைத்தான்
திரு மந்த்ரம் விளைந்த -நான் கண்டு கொண்டேன் ஒன்பதின் கால் சொல்லி
வாடினேன்- ஒரு நல சுற்றம் வரை பல திவ்ய தேசங்கள் அனுபவித்தார்
நாரதர் தொண்டர் அடி பொடி திரு பாண்-
சௌன பகவானும் திரு மங்கை -அர்ச்சையே பொழுது போக்கு
வாயால் படி கையால் தழுவ ஆசை கொண்டு திரு குறும் தாண்டகம்
முகம் காட்ட வில்லை
பெருமாள் சமுத்திர சரணம்- பானம் இட்டு சாகரம் சோஷ இஷ்யாமி போல் மடல் எடுக்க புகுந்து
அவனையும் விபூதிகளையும் திவ்ய தேசங்களையும் அழிக்க
வீடு பெற்ற வழி தெரிவிக்கிறது திரு நெடும் தாண்டகம்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -இங்கு ஆத்மா ஒன்றையே சொல்லும் அடியேன்
அடியேன் செய்யும் வின்னபமே தொடங்கி பல இடங்களில் அடியேன் –
இங்கு எல்லாம் தேக விசிஷ்ட ஆத்மாவை குறிக்கும்
இங்கு ஒன்றிலே தான் இதை குறைக்கும்
தனி கடலே தனி சுடரே தனி உலகே -அனைத்தயும் விட்டு இங்கு வந்து உரைகின்றானாம்
நிதி -கிடைத்தது போல் எம்பெருமானார் -ஞானி கீதா பாஷ்யம்-அர்த்தம்- எதை அறிந்தவன்-
விஷ்ணு சொரூபம் அறிந்தவர் -சங்கரர்
பகவத் சேஷ சைக சொரூப ஆத்மா சொரூபம் அறிந்தவன் –
நான்கு இடத்தில் ஞானி வரும் கீதை
சோம்பாமல் எல்லா இடங்களிலும் இந்த அர்த்தம் அருளுகிறார் எம்பெருமானார்
அடியேன் சிறிய ஞானத்தன்-ஆழ்வார் -இராய்க்கும் பொழுதும் அடியேன்
எம்பெருமானார் கீதா பாஷ்யம் இதை கொண்டே அருளினார்
பிரம சூத்தரத்தில் சொல்ல வில்லை -சரணா கதி பற்றியும் அங்கு இல்லை
சரணா கதி பற்றி கத்யம்- அருளி- வன் புகழ் நாரணன் திண் கழல் சேரே
உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே
பிர பத்தி சாஸ்திரம் தான் திரு வாய் மொழி
நாராயண லஷ்மி சம்பந்தம் சொல்லி புருஷார்த்தம் -கைங்கர்யம்
எம்பெருமானார் சம்ப்ரதாயம்-இளைய பெருமாள் -அஹம் சர்வம் கரிஷ்யாமி
சக வைதேக்ய அஹம் சர்வம் கரிஷ்யாமி -சேர்த்தியிலே கைங்கர்யம்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -திரு வேம்கடத்து எந்தை தந்தைக்கு
-கிரி சானுரம் –சித்ரா கூடம் -அவர் கேட்க -திரு வேம்கடம் இரண்டும் வட நாடு
திரு பாவை ஜீயர்
தத்வ ஹித புருஷார்த்தம் அழகாக சொன்னால் ஆண்டாள்
மற்றை நம் காமங்கள் மாற்று உனக்கே நம் ஆள் செய்வோம்
கைங்கர்யமே -நித்ய கைங்கர்ய பிராப்தி அபெஷயை எம்பெருமானாரும் கேட்டார்
உற்றே உகந்து உனது பாதம் பணி செய்து உனது பாதம் பெற்றேன் –ஈதே இன்னும் வேண்டுவது எந்தாய்
கிம் கர்யா- என்ன செய்ய கேட்டு கொண்டே இருக்க செய்துமுடித்ததும் மீண்டும் கேட்க
கொள்வதற்கு கை கூலி கொடுத்து ஓன்று நூரயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்
விஸ்வாமித்ரர் -அஹம் வேதமி மகாத்மானம்
-கிம்கரவ் -ஆக்ஜை-வார்த்தை வெளி இட -இருவரும் சேர்ந்து கைங்கர்யம் செய்யவே வந்தோம்
சரீர ஆத்மா பாவம்-ராமானுஜ தர்சனம் பிரதான அம்சம்
அவன் ஒருவனே சரீரி –இதை அறிந்தவன் குஸ்துகர் கோலா கலம் -வதம் அனைத்தும் அடக்குவர்
சேஷத்வம் துக்க ரூபம் -நாட்டில் உகந்த விஷயத்தில் சேஷத்வம் சுகம்
காலி தாசன் கதை
உற்றேன் உகந்து பணி செய்து
தத்வம்- ஸ்ரீ பாஷ்யம்- உயர்வற உயர் நலம் -கல்யாண குணம்
உபய லிங்கம் -அகில ஹேய பிரத்நீயாக கல்யாண குணம் நிறைந்தவன்
முதன் திரும்ப வர மாட்டான் முடித்து -நச புன ஆவர்ததே –
சமஸ்த வஸ்து விலக்ஷண -அவதாரிகை-பகவத் சப்தம் இன்றி இவற்றாலே விவரிக்கிறார்
மாறனுரை செய்த மறை வளர்த்தான் வழியே என்பதால்
புதிய மதம் இல்லை
வளர்க்க பட்டது இது எம்பெருமானாரால்
நடு நாயகம்-குரு பரம்பரை ஹாரத்தில் –
எம்பெருமானார் வளர்த்த அந்த செயலை அறிவிக்க மா முனிகள்
மதம்- கொள்கை சம்ப்ரதாயம்
ஸ்ரீ பாஷ்யம்-பூர்வர் -போதாயனர்-விருத்தி -விளக்காமாக பேசி –
மாதவம்-ஆனந்த தீர்த்தர் -அத்வைதம் சங்கரர்
தத்வம் த்ரயம்
அசித் சித் ஈஸ்வரன் –
ஈசான சீலக நாராயண -சங்கரரும் பரம் பொருள் நாராயணன்
மோஷம் இச்சேது ஜனார்த்தனன் ஐஸ்வர்யம் சூர்யன்
குணம் உண்டு -உபய விபூதி நாதன்
எதா வாய்ந்து –பிரமம் படைத்து காத்து அழித்து -எகைக நாராயணன் அனைவரும்
இன்றும் மூவருக்கும் ஸ்ரீ வைஷ்ண திவ்ய தேச மரியாதை உண்டு -திரு அரங்கம் திரு மலை பெருமாள் கோவிலிலும்
பர பரமம் நாராயணன் என்று ஒத்து கொண்டதால்
மூன்று வித காரணம் நூல் வேஷ்டி -தறி நெசவாளி /மண் பானை குயவன் சக்கரம்
சூஷ்ம தசை -அனைவரும் ஒத்து கொண்ட நிலை
சங்கல்பத்தால் ஸ்ருஷ்ட்டி-
சிலந்தி வலை பின்னி கொண்டு -அதற்கும் இருப்பது போலவும் -அதை முழுங்கி கொள்வது போலவும்
சக்தி உண்டே-ச்வாபிக சக்தன் -ஆதரித்த அத்புத அகடிதகட -சக்தன்
புலன்கள் அறிவு கொண்டு அறிய முடியாதவன்
அசித் -24 வித அநேக வைதிக மதமும் ஒத்து கொண்டவை
போக்தாபோக்யம் பிரேரிதா–நியமிகிறவன் வேதம் சொல்லும் மூன்று தத்வமும்
பரம் /வியூகம் /விபவம்/ அந்தர்யாமி /அர்ச்சை -ஐந்து பிரகாரம்
ஆவரண நீர் போல் –திரு பாற் கடல்–காட்டு வெள்ளம்-ஊற்று நீர் -யோக வழி
யம -பொய் பேசாமல் சாஸ்திரம்- நியம ஆசனம்-பிராயாணா பிரத்யாகார –கிணற்று நீர் போல் அர்ச்சை சுலபன்
நாமும் திரு ஆராதனம் செய்து அர்ச்சகர் தானே-
தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே
தமர் உகந்த எப் பேர் அப் பேர் தானே
துயர் அடி -விக்ரக விசிஷ்டன்
அசக்தன் போல் அக்ஜன் போல் இருக்கிறான் –
திரு வேம்கடம் உடையான் அர்ச்சை அருளி சக்தி காட்டுகிறான்
மழை-விறகு ரஷிப்பது போல் -பெருமாளை ரசிக்காமல்
ஆத்மா 25 -அணு ஆக இருந்து தர்ம பூத ஞானம் -வியாபித்து
சூர்ய கிரணம் போல் வியாபித்து –
நித்யர் முக்தர் பக்தர்-மூன்று வகை ஆத்மா -சம்சாரிகள் முமுஷு இரு வகை இங்கு-
அசித்-விரோதி-
தத்வம்-ஹிதம்- புருஷார்த்தம்
ஹிதம்-வழி -உபாயம்
கர்ம ஞான பக்தி சரணா கதி
நோற்ற நோன்பு இலேன்-நான்கு ஏறி -ஸ்ரீ வர மங்கள நகர்-வான மா மலை
கர்ம யோகம்- நாம் செய்கிறோம் என்னது பலன் கருதி -மூன்று வித தியாகம் உடன் செய்வது
சரணா கதி-அநந்ய கதி- அகிஞ்சனம் -ஆத்மாவுக்கு தான் -உடலுக்கு இல்லை
சொத்தை ஸ்வாமி காப்பான் என்ற மகா விசுவாசம்
துவேம உபாயம்-ஹிதம்
பலன்-தொண்டு செய்வது-கைங்கர்யம்
ஞானம் ஆனந்தம் உடையவன் ஆத்மா -சேஷத்வம்-
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -அடிமை தன்மையே பிரதானம்
அவன் உகப்பே பிரயோஜனம்
ஐயா முகப்பில் சந்தோஷம் இருந்தால் போதும் இன்றும் பழைய கிராம வாசிகள் வார்த்தை
வாசிக மானச காயிக கைங்கர்யம்-
உனக்கே நாம் ஆள் செய்வோம் -மற்றை நம் காமங்கள் மாற்று
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
குழந்தை கொஞ்ச -பொக்கை வாய் காட்டி சிரிக்க -நாம் மகிழ்வது போல்
பெருமாளுக்கு அமுது செய்த பின் உப்பு கூட சேர்த்து கொள்ள கூடாது
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டும்-சாஸ்திரம் இவை சொல்ல வந்தவை-
மிக்க இறை நிலையும்மெய்யாம் உயிர் நிலையும்
-தக்க நெறியும் தடையாகித் –தொக்கியலும்
ஊழ் வினையும் -வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்து இயல்
———————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply