திருவாய்மொழி-10-10-முனியே ! நான் முகனே ! முக் கண் அப்பா -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

முனியே ! நான் முகனே ! முக் கண் அப்பா !என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கருமாணிக்கமே என் கள்வா !
தனியேன் ஆர் உயிரே ! என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –10-10-1
சதா ஞானியாய் இருக்கும் முனியே
விதுரர் நம் பெருமாளை கண்டு கண்ணன் போல் இருகிறாய்
அது போல் ஸ்ரீ வைகுண்ட நாதனும் கரு மாணிக்கமே
என்னையே ஆள கொண்டு வந்தாயே
தனியேன்-உபாதி நீங்க பெற்று உன் திரு அடி பெற்ற எனக்கு
பரம பதம் சாஷாத் காரம் பெற்ற பின்
ஒன்றும் மாயம் செய்யேல்-நச புன ஆவர்த்தையே
அங்கும் சூழ்ச்சியா -திரு கரம் காட்டி மடியில்
சோஹம்-கைவல்யம்/தாசோஹம் மடியில்- வைத்து கொள்வான்
இரண்டு வித மோஷம் உண்டே
நான் ஒழிந்து நீ இட்ட படி தானே
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூம் குழலாள் திரு வாணை நின்  ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தோ !–10-10-2
நின் ஆணை திரு ஆணை
மாயம் செய்யேல் விட கூடாது
இருவரையும் ஒக்க சொல்லவுமாம்
ஒரே வார்த்தை-நத்ய சேத கதஞ்சன -விரதம்
அபராதி ஆனாலும் காரியம் கொள்ள பெரிய பிராட்டி சபதம்
பிறிக்காதீர்

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ !என் பொல்லாக் கரு மாணிக்கமே !
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே ! உம்பரந்ததுவே –10-10-3
இங்கும் கூவி கொள்ளாய் என்கிறார் காணும்
பிரியாமலே அகல கில்லேன் சொல்வது போல்
தாகித்தவன் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே
எத்தினையும் பிரி வாற்றார் ஆகில் –
ஆதி மூலமே -தத் துவம் அஸி -தத் பதார்த்தமாய் இருப்பவன்
அது அதுவாக இருப்பவன் —
இது வரையில் -சர்வ விசெஷணம் இன்றி ஒண்ணானா நாராயணன் ஆக இருப்பவன்
உம்பரம் தன் பாழேயோ! அதனுள் மிசை நீயேயோ !
அம்பர நல் சோதி ! அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்க லுற்று என்னைப் போர விட்டு இட்டாயே–10-10-4
உம பரம்-உனக்கு ஆதீனம்-சொத்து -பெரிய பிரகிருதி மண்டலம்
தமச்ய பரஸ்தாத் -ஒரே தமசாக இருந்தது –
தமஸ்=மூல பிரகிருதி
நாம ரூபம் இல்லாத பாழ்
பிரளய ஜாலம்-அக்னி-காற்று-ஆகாசம்-பிரகிருதி அடங்கி-
காரணம் தெரிந்து எதில் ஒடுங்கிது தெரியாத பாழ் அவித்யை மாயம்
தெரிய வில்லை தெரிந்த ஆத்மா -அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நல் சோதி-ஸ்ருஷ்ட்டி முறை
பரமம் அரன் தேவதா சொரூபம்
உம்பரும் யாதவரும் படையத சத்ய சங்கல்பன்
எம் பரம் சாதிக்க -நீயோ விபு நான் அணு
சம்சார பாரம் தலை வைத்து வா  என்று என்னை போர விட்டு இட்டாயே –
பரந்நியாசம் பண்ண வேண்டும் என்று
ஜகத் வியாபாரம் வர்ஜம்-தன் பாரம் தனக்கு இல்லை
பரமம் சாம்யம் கொடுக்கிறான் -லௌகிக வியாபாரம் இல்லை
பேர் ஆனந்தம் மட்டுமே அனுபவித்து இருக்க
பிரகிருதி -சமஸ்த வஸ்து-சொரூப சதி நீயே நிர்வாகன்-என்னை செய்ய சொன்னால்
என்னை கை விட்டாய் என்கிறார்
போர விட்டு இட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ ! எனபது எனபது என் ? யான் எனபது என் !
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா வமுதனாயே  –10-10-5
தூங்குபவனே தூங்குபவனை எழுப்ப முடியாதே
நீயே மோஷ பிரதன்
உனக்கு ஆதீனம்
பரம் ஜோதி என்னை உறிஞ்சி கொள்ள வேண்டும்
நீரை இரும்பு உறிஞ்சி -சுரீர் இல்லை அமுதன்

எனக்கு ஆரா அமுதாய் எனதாவியை இன் உயிரை
மனக்காராமை மன்னி யுன்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண் செம் கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா ! என் அன்பேயோ ! –10-10-6
ஆரா அமுதாய் இருக்கும்
மனசுக்கு அலுக்காமல்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
விட மாட்டாய்
உனக்கு ஏத்த பெரிய பிராட்டி
பிரேம சொரூபன்
என் அன்பு –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ !
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் !
நீலக் கடல் கடைந்தாய் ! உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ ?–10-10-7
திரு ஸ்ரீ -அவளால் தானே ஏற்றம்
பூமி பிராட்டி சொல்லி -ஸ்ரீ வராக ரூபன்-அர்த்த சந்தரன் போல் வெள்ளையை-நிலம் கொட்டு இடை கொண்ட அப்பா
அங்கும் ஸ்ரீ வராக நினைவு-அந்திம தசையும் மத பக்தம் நினைத்து நயாமி பரமாம் கதிம்
பலித்ததே
பெற்று இனிப் போக்குவனோ ? உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற விரு வினையாய் உயிராய் பயனாய் அவையாய்
முற்ற விம் மூ வுலகும் பெரும் தூறாத் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ !–10-10-8
உம்மை அடைந்த பின்பு பிறிய மாட்டேன்
ஐக்கியம் -நீரும் நீரும் கலந்தது போல்
துந்து போகாத சம்சாரம் நீக்கி –
பிர பஞ்சம் சர்வ உபாதி நீக்கி
தனி முதல்வித்து

முதல் தனி வித்தேயோ ! முழு மூ வுலகாதிக்கு எல்லாம்
முதல் தனி யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் ?
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உரு வாழ பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீயோ –10-10-9
முதல்-நிமித்த காரணம் -குயவன்
தனி-சக காரி காரணம்-சக்கரம் கோல் போல்வன
வித்தேயோ-உபாதான காரணம்-மண்
மூன்றும் அவனே தானே
சதைக ஏக அத்வதீயம்
உபாதான பிரகிருதி என்பர் சிலர்
அவயகதம் மூல பிரக்ருதிக்கும் அந்தர்யாமி-
அவன் சக்தி தானே -சக்தி இல்லாத சக்திமான் இல்லை
தனித்த பொருள் -உன்னை என்று வந்து கூடுவன்
மூ உலகும் ஆகி-சுத்தமான பரமாத்மா -அது அதுவாக
சத் சித் ஆனந்தம் அங்கு இருக்கிறான்
இங்கு வியாபித்து
பிரகிருதி வியாபித்து
அங்கும் -அகண்ட பரமாத்மா சொரூபம் ஆக இருக்கிறான்
சூழ்ந்து அகன்று அஆல்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர் சோதீ யோ !
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே –10-10-10
அகண்டமாக

பரி சேதம் இல்லாத படி –அஞாஞானம்
இருக்கு என்பதை அறிந்ததால் ஆத்மா அதை விட பெரியது
தமசச பரமோ தாதா சங்கு சக்கர கதா தர -மண்டோதரி ஸ்தோத்ரம்
ஆத்மா சைதன்யம் சுயம் பிரகாசம் – நல ஜோதி –
வாசு தேவ பாஹிமாம் வாசு தேவ பாஹிமாம் -அகண்ட நாம சங்கீர்த்தனம்
வெளிச்சம் ஜோதி -கண் இருந்தால் தான் கண் -உயிர் இருந்தவனுக்கு தானே –
இருட்டிலும் தான் இருக்கிறேன் அறியும் -தனித்த பெருமை-பர வஸ்து சத் ஆனந்தம்
ஒ ஒ ஓம் பிரணவ ஓசை
ஞான இன்பமேவோ –பர மாதமா -ஐவரும் ஞான சொரூபம் விபு இவன் ஆத்மா அணு
ஸ்ரீ வைகுண்டம்-பேர் ஆனந்த கடல் தான் பரமாத்மா சொரூபம்
அங்கு போய் சேஷம்  கைங்கர்யம் செய்ய -பரம பக்தி-அவா அற சூழ்ந்தாயே
என் விடாய் எல்லாம் தீர வந்து கலந்தாய் –பரம பக்தியே புருஷார்த்தம்
அவா அறச் சூழ் அரியை அயனை  அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –10-10-11
சம்சாரம் அவா அற்று -அற்றது பற்றில் உற்றது வீடு

மீண்டும் அரியை அரனை அயனை அலற்றி-
காரிய பிரமம்-ஞானத்தால் மோஷம் -கைவல்யம்
உபாசனையால் மோஷம் காரிய மோஷம்
சிவா விஷ்ணு பக்தி உபாசனை தானே
பக்தி பலன்
சாஷாத் மோஷம் –
மகா பிரளயம் பின்பு அங்கு போக
பர வாசு தேவனே பர பிரமம்
முனியே  நான் முகனே முக் கண் அப்பா -கார்ய பிரமம் இல்லை அந்தர்யாமியாக இருக்கிறான்-கள்வன்
பிராமணீ ஸ்ரீனிவாச
சொரூபம் மாதரம் ஞானம் உடையவனுக்கு கைவல்யம்
ருசி -ஞான இன்பமேயோ-போதும் என்று இன்றி பர வாசுதேவன் அடைய
நாராயண பரம் பிரம-வேத வாக்கியம்
அந்தர் பக்ச்தச்த -உள்ளும் வெளியிலும் வியாபித்து
திவ்ய மங்கள விக்ரகம் உடன் சேவை
அலற்றி- திரு நாம சங்கீர்த்தனம்
வீடு பெற்ற -பெற்று விட்டார்
அவா இல் -ஆசை மேல் அருளிய -பரம பக்தி- உடன் அருளிய திரு வாய் மொழி சேவிப்பவர் உயர்ந்தே பிறந்தார்

தெய்வ பிறவி -நித்ய சூரிகள்
பூ லோகத்தில் நடமாடும் நித்ய சூரிகள்
கண்ண பிரான் பாகவதத்தில் இருப்பது போல் திரு வாய் மொழி தான் ஆழ்வாரின் திரு மேனி
ஞான ஆனந்த சொரூபனாய் உயர்வற உயர்நலம் உடையவன்
திவ்ய மங்கள விக்ரகன்
தாயார் உடன் சேர்த்தி
திவ்ய ஆபரணம்
ஆஸ்தான பய சங்கை திவ்ய ஆயுதம்
அந்தர் ஆதிமயாய்
விடாய் தீர சம்ச்லேஷிக்கும்
நிர் துக்கராய் பக்தி பலாத்கார பூரணமாக பெற்ற திரு வாய் மொழி
சம்சாரத்தில் பிறந்து வைத்தே அய்வரும் அமரர்கள் ஆவார் முனி மாறன் முன்பு உரை செய் முற்று இன்பம் நீங்கி

தனியாகி நின்று தளர்ந்து –நனியாம்
பரம பத்தியால் நைந்துபங்கயத்தால் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –100
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading