திருவாய்மொழி-6-1-வைகல் பூம் கழிவாய்- ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

நாயகி பாவம் ஸ்வாபமாக ஆழ்வாருக்கு
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினம் காள்
செய் கொள் செந்நெல் உயர் திரு வன் வண்டூர் உறையும்
கை கொள் சக்கரத்து என் கனி வாய் பெருமானை கண்டு
கைகள் கூப்பி சொல்லீர்  வினை யாட்டியேன் காதன்மையே –6-1-1
தோட்டத்தில் உள்ள நீர் மேயும் குருகு-
நான் அபேஷையாய் இருக்க -கிருகம் புக்கு உண்டு-
செய்=வயல்
கை கூப்பி-சொல்ல சொல்கிறார்-ரிஷி பத்னிகள் இடம்-சென்ற
ஆயர் பிள்ளைகளும் வணங்கி-அவன் வினயம்காட்டினது போல்-
காதல் மென் பெடை யோடு உடன் மேயும் கரு நாராய் !
வேத வேள்வி யொலி முழங்கும் தன திரு வன் வண்டூர்
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானை கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே –6-1-2
கரு நாராய்- பெரும் பாலும் வெள்ளையாய் இருக்கும் -இங்கு கரு நாராய்
பெடை- மிருதுவான -மிதுனம்-
வேத பாராயண ஒழி கேட்க்கும்
ஞாலம் உண்ட பேரு வாயன்-என்னை ஆள் கொள்ள பணிந்து ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்
திறன்களாகி எங்கும் செய்களூடு உழல புள்ளினம் காள் !
சிறந்த செல்வம் மல்கு திரு வன் வண்டூர் உறையும்
கறங்கு சக்கர கை கனி வாய் பெருமானை கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே –6-1-3
திரள்கள்-வயல்களில் புகுந்து கூட்டமாக -பட்சிகள்-
கறங்கு-சுழலும் –
கொவ்வை கனி போன்ற சிவந்த உதடு
பறந்து சென்று இறங்கி-தொழுது-
என் இடரை -அசக்தி சொல்லும்
இடரில் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள்
விடலில் வேத ஒலி முழங்கும் தன் திரு வன் வண்டூர்
கடலின் மேனி பிரான் கண்ணனை நெடுமாலை கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே –6-1-4
அன்னம்-மிதுனம்-வேத ஒலி ஓயாமல் -இருக்கும்

சியாமள வர்ணன் –உடல் நைந்து உருகி இருக்கிறாள் என்று மனசில் படும் படி சொல்லும்-
உணர்த்தலூடு உணர்ந்து உடன் மேயும் மட அன்னம் காள்
தினர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திரு வன் வண்டூர்
புணர்த்த பூம் தன் துழாய் முடி நம் பெருமானை கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே –6-1-5
கோபம் உணர்த்த பெண் அன்னம்-ஊடல் –கெஞ்சி-உணர்ந்து உடன் மேயும்-

ஆழ்வார் கூட இதைரசிக்க-பக்தி சிருங்காரம்
நீர் வளம் நிறைந்த -புஷ்பம் துளசி-கொண்டை மாலை சாத்தி கொண்டு-
அஞ்சலி பண்ணி- பரமா முத்ரா –
அடியேனுக்கும்- நமஸ்காரம்-
போற்றி யான் இரந்தேன் புன்னை மேல் உரை பூம் குயில் காள் !
சேற்றில் வாளை துள்ளும் திரு வன் வண்டூர் உறையும்
ஆற்றல் ஆழி அம கை அமரர் பெருமானை கண்டு
மாற்றம் கொண்டு அருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே -6-1-6
துதித்து கெஞ்சுகிறார் குயில்கள்-புன்னை மரத்தில்

சேறு மீன்கள் துள்ளும்-
ஆழி கை பிரானை கண்டு-
பதில் வார்த்தை-மாற்றம்- மாற்றமும் தாராதார்
நீங்கள் மயங்கி -அங்கெ நில்லாமல்-
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஓன்று உரை ஒண் கிளியே !
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலை திரு வன் வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்த கண்டே –6-1-7
அழகிய புஷ்பம் பூத்து குலுங்கி அதனால் சிவந்த

அவனும் செய்ய வாய் செய்ய கண் செய்ய கால் சங்கு சக்கரம் கொண்டு அடையாளம்
பிரத்யட்ஷமாக வியக்தமாக கண்டு-என்னை போல் மனசில் மட்டும் இன்றி
இவ் விஷயத்தில் காட்ஷி ஒன்றே பிரயோஜனம் -அது உமக்கு முன்னாடி
பிராட்டி கார்யத்தில் அவளுக்கு முன்பு பேரு இவளுக்கு -தூது போனவளை முதலில் பிடித்து கொண்டான் கண்ணன்
ஹனுமான் ஆலிங்கனம் பெற்றாரே -பிராட்டி விட்ட தூது -அவளை பார்த்தது போல்-தான் விட்ட தூதன் எனபது மறந்து
திருந்த கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் !
செருந்தி ஞாழல் புன்னை சூழ் தன் திரு வன் வண்டூர்
பெரும் தன் தாமரை கண் பெரு நீள் முடி நால் தடம் தோள்
கரும் திண் மா முகில் போல் திரு மேனி அடிகளையே –6-1-8
நன்றாக பார்த்து-பூவாய்-பட்ஷி

செவ்வந்தி ஜவந்தி சாமந்தி-செருந்திபூ சூழ்ந்த
வண்டுகள் நிறைந்த -திரு வான் வண்டூர்
ரத்னம் கிரீடம்-சூடி கொண்டு மேகம் போன்ற திரு மேனி கொண்ட ஸ்வாமி
அடிகள்  கை தொழுது அலர் மேல் அசையும் அன்னம் காள் !
விடிவை சங்கு ஒலிக்கும் திரு வன் வண்டூர் உறையும்
கடிய மாயன் தன்னை கண்ணனை நெடுமாலை கண்டு
கொடிய வல் வினையேன் திறம் கூறுமின் வேறு கொண்டே –6-1-9
அடிகள் கை தொழுது கூறுமின்

சங்கு ஒலி-விடியல்-அடையாளம்-
அனந்தலில் இருப்பார்-கேட்ப்பார்
கடிய மாயன்-சால்ஜாப்பு சொல்வான்
கண்ணன்-எலா பொய்கள் உரைப்பான் -ராதா தூக்கி -கொள்வான் என்று கண்ணை மூடி கோல மறைந்தான்
கண்ணன் -நம் கண்ணன் வேண்டும் நெடு மால்-
மூக்கு அரு பட்டும் சூர்பணகை புகழ
தனியாக இருக்கும் பொழுது அவன் இடம்பேசு
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன் வெறி வண்டு இனம் காள்
தேறு நீர்ப் பம்பை வட பாலை திரு வன் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீர் எழ செற்று உகந்த
ஏறு செவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே –6-1-10
வேறு கொண்டு- தனியாக இருக்கும் பொழுது

நிகர் அற்ற போர்-இலங்கை பொசுங்கும் படி
ஏறிக் கொண்டே போகும் பராக்கிரமம்
என்னையும் உளள்–16108 பெண்களையும் -பெண் பிறந்தார் கூட்டத்தில் ஒருத்தி உண்டே
ராமானுஜர் நிர்வாகம் –கார்யம் செய்தோம் என்று கிருத க்ருத்யமாய் இருப்பாருக்கு –
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன்கள்வன் அடி மேல் குருகூர் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வன் வன்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடை யவர்க்கே –6-1-11
மார்வில் பூணல் ஜொலிக்கும் வாமனன்

பலன்-அழகு கொடுக்கும்-
மின் இடைய பெண்கள் -நோக்கி கொண்டே இருப்பார்
மதனர்-திருப்தி படுத்துவது கஷ்டம்-
குசேல பத்னி பிரமாணம்-கிருஷ்ணா பக்தன்-பேசி வந்ததும் மகிழ்ந்தாள் போல்
அவல் உண்டானா – உண்ணும் பொழுதும் அவளை நினைத்தான் கண்ணன்-மதனீ !
பகவத் பக்தியால் வரும் பிரேமை –
வைகல் திரு வன் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனை புள்ளினங்காள் ! செப்புமின் –கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர் ! நீர் வணங்குமின் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –51
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading