(நான்கு நிலம் ரசம் சூர்யன் உண்டு பருகி-நன்னீர் அற மென்று -உமிழ்ந்த கோதே பாலை ஆனதே
இதுவே ஐந்தாவது நிலம் -நாலில் இருந்து பிறந்ததே ஐந்தாவது -ஆனது
திருத்தண்கா
திருவெஃகா
இதுவே ஷேம கரம் -திவ்ய தேசம் இருக்க ஏன் கவலை என்றவாறு
நகர் காட்டல் துறை
தலை மகன் வார்த்தை
ஒன்றாக போகிறார்கள்
குறிஞ்சி நிலத்தில் கலந்து
பாலை தாண்டி
மருத நிலம் போகிறார்கள்
திருவெஃகா நகரம் அடைந்து
கால் தோய்ந்து விண்ணோர்கள்
சொன்ன வண்ணம் செய்த -கண்ணன் ஊர் வந்தோம்
தாண்டி பொழில் திருத்தண்கா
நகரமும் பொழிலையும் கான்டக்டி
மாலை நண்ணி -திருக்கண்ண புரம் -கண்ணன் வெக்கா -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம்
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்-நகரம் காட்டுகிறான் -ஏழு மதில்கள் சூழ்ந்த நகரம்
வந்து பாடும் பொழில்-கழனி -அதிலும் உண்டே -)
(கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே திருவிருத்தத்தில் உள்ள திவ்ய தேசங்கள்
திரு வெக்கா -பெருமாள் கோயில் )
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-
அவதாரிகை
புணர்ந்து உடன் போக்கு துறை-
புணர்ந்து உடன் போகிறான் ஒரு தலை மகன் தலை மகளை –
பாலை நிலத்தை கடந்து
குளிர்ந்த நிலத்தே புகுந்தோம் காண்-என்று ஆஸ்வசிப்பிகிறான்-
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26-
பாசுரம் -26-நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் -நகர் காட்டல் –
மாலை நண்ணி -9-10-
பதவுரை
நால்நிலம்–(முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும்
வாய்கொண்டு–(தன் கிரண முகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு
நன்னீர் அற மென்று–ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று
கோது கொண்ட–அஸாரமான பாகம் இது வென்று அறிந்த
வேனில் அம் செல்வன்–வெப்பத்தைத் தனக்குச் செல்வமாக வுடைய ஸூர்யன்
சுவைத்து உமிழ்–உருகி பார்த்து வெறுத்துக் கழித்த
பாலை–பாலை நிலத்தை
கடந்த-தாண்டி வந்த
பொன்னே–பொன் போன்றவளே!.
விண்ணோர்–மேலுலகத்தோர் யாவரும்
கால்நிலம் தோய்ந்து தொழும்–(நிலந்தோய்தவில்லாத தமது) கால்கள் நிலத்தில் படியும்படி
இங்கு வந்து நிலைத்து நின்று வணங்கும்படியான
கண்ணன் வெஃகா–கண்ணபிரானது திவ்யதேசமான திருவெஃகாவானது
உது–அடுத்துள்ளது.
அம் பூ தேன்–அழகிய பூவையும் தேனையுமுடைய
இள–இளமை மாறாத
சோலை–சோலையானது
அப்பாலது–அவ்விடத்துள்ளது.;
எப்பாலைக்கும் சேமத்தது–(எது நமது) எல்லாத் துன்பங்களுக்கும் (மாறாய்) துன்பந்தருவதோரிடமாம்.
வெக்காவுதம்–பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே–
திரு வெஃகா திவ்ய தேசம் அருகில் திருத் தண்கா -ஸ்ரீ தேசிகன் திருவவதாரம் ஸூசிதம்-இத்தால் என்பர்-
நால் நிலம் வாய் கொண்டு —
ஆதித்யனாவன் நாலு வகை பட்ட நிலத்தையும் வாயிலே கொண்டு-
தமிழர் ஐந்து என்பர்-
ஆழ்வாருக்கும் அதுவே மதம்
நல் நீர் இத்யாதி–
இதனுடைய சத்தையான நீர் அரும் படி மென்று கோதாக்கி
அக் கோதை வாயிலே கொண்ட- ஆதித்யன் ஆனவன் தன் உஷ்ண க்ரணத்தாலே சுவைத்து
ஆஸ்ரயம் பொறாமையால் உமிழ்ந்து பாலை ஆயிற்று
(பாலை -சம்சாரம்
ஆழ்வாரை ஆஸ்வாசப்படுத்தும் பாகவதர்கள்
108 திவ்ய தேசங்களில் ஒன்றே பரமபதம் )
கடந்த –
சம்சாரத்தை கடந்த என்ற படி
பொன்னே-
சம்போதனம் —
உன்னோடு போகிற எனக்கு பாலை நிலம் என்று அறிய வேண்டுமோ–என்கிறான்
அஞ்சாது இருக்கைக்கும்
அஸ்த்தானே பய சங்கை பண்ணுகைக்கும்
பொன்னே என்கிறது-
உண்டு என்ன உயிர் நிற்கும் படியும்
அபஹரணத்தைக் குறித்து அஞ்சி இருக்கையும்
கால் நிலம் இத்யாதி–
தேவர்கள் ஹவிஸ்ஸூக்காக கொள்ளும் இடத்தில் சம்சார வெக்காயம் தட்டாமே-
ஒரு யோஜனைக்கு அவ் அருகே நின்று பின்னையும்
இது பொறுக்க மாட்டாமை அவ் அருகே போய் சர்த்தி பண்ணுவார்கள்-
இப் படியே அங்குற்று அங்கு பரம பதம் அம்கண் இருக்கிற நித்ய ஸூரிகள் ஆனவர்கள்
பூமியில்-இழிந்து ,
திரு வெக்காவிலே தங்கள் உடைய அபிமத விஷயம் கிடைக்கை யாலே
பிரதஷிண -நமஸ்காராதிகளை பண்ணா நிற்ப்பார்கள்-
கண்ணன்-
சர்வேஸ்வரன் —
சிநேகம் உள்ள இடத்தில் குற்றம் தோற்றாது இறே
வெக்கா வுது –
இப் படிப் பட்ட திரு வெக்கா இது என்று காட்டா நின்றான்-
வுது-
அதூர விப்ரக்ருஷ்டம்-
ஏஷா சா த்ருச்யதே இத்யாதி-
(புஷ்பக விமானத்தில் இருந்து ராஜ தானி புதிர் மம அயோத்தியைக் காட்டி பெருமாள் வார்த்தை )
அவ் அருகு தோற்றுகிறது என்
என்பது என்ன
அப் பூம் தேன் அலம் சோலை அப்பாலது-
அழகிய பூவையும் தேனையும் உடைய அழகிய சோலை ..
அது
சந்நிவேசம்
எப் பாலைக்கும் சேமத்ததே —
எல்லா அவஸ்தைக்கும் சேமம் உடைத்து-(திவ்ய தேசங்கள் )
ஸ்வாபதேசம்-
இத்தால் சம்சாரம் த்யாஜம் என்னும் இடத்தையும்
பகவத் விஷயம் பிராப்யம் என்னும் இடத்தையும் அறிந்த ,இவர்க்கு
பிராப்தி தசை தாழ்ந்த படியாலே ,வந்த ஆற்றாமையை கண்ட-ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
சம்சாரம் சென்று அற்றதாகில்
உகந்து அருளின தேசங்கள் இங்கே ஆகில்-
பிராப்த்திக்கு உள்ளே அன்றோ நீர் நிற்கிறது -என்று ஆற்ற வேண்டும் படி இருக்கிறது-
சரணா கதி விளக்க வந்த பாசுரம்
சம்சார வெக்கை தாங்காமல் சோலைகள் சூழ்ந்த திரு வெக்கா சேர்ந்து சரண் அடைய அருளுகிறார்-
தாத்பர்யம்
கீழ் சம்சார ஸ்திதியாலும் பகவத் அலாபத்தாலும் தவித்த ஆழ்வாரைத் தேற்றி
நாயகன் உக்தியால் அருளிச் செய்கிறார்
லோக உத்தர மான ரூப லாவண்யம் கொண்ட -பொன்னே
சம்சாரமாகிய பாலை நிலத்தைத் தாண்டினோம்
இனி நாம் சிரமம் படவேண்டாம்
திருவெஃகா
யதோத்தாக்காரி
தோப்பு திருத்தண்கா விளக்கொளி பெருமாள் பாராய் என்கிறான்
ஸம்ஸாரத்திலேயே திவ்ய தேசங்களே ஸ்ரீ வைகுண்டம் போல் நிரதிசய போக்யமாகவே இருக்குமே என்றவாறு-
பொருள் -அகப் பொருள்
திணை –பாலைத் திணை
கிளவி –உடன் போக்கு -உட்பகுதி -தேற்றல்
துறை -தலைவிக்குத் தலைவன் தன் பதி அணுகினமை சாற்றல்
உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –
பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. –சடகோபர் அந்தாதி -67–
சரவாதம் -பாலை நிலம் -தடம் பணை -சோலை சூழ்ந்த வூர்
மருதம் தாண்டி விட்டோம்
ஓர் அம்பு போய் விழும் தூரத்தில் நாம் உள்ளோம் பைய நட
இது உருவக அணி
இடையில் எதிர்த்த சிம்மம் போன்றவற்றை அம்பால் எறிந்ததனை தலைவி அறிந்தவள் ஆகையால்
அம்பின் வீழ்ச்சியைக் குறித்து சரவாதம் என்கிறான்
தடம் பணை அருகில் இருப்பதாகக் கொண்டு இனி மருத நிலமே என்கிறான்
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply