–-இனி தேவர்க்கு உதவி பாற் கடல் கடைந்த விருத்தாந்தம் அருளுகிறார்
தலை பக்கம் பிடிக்க தேவர் இடம் சொல்லி கொடுக்க அசுரர் அதை கேட்டு பெற்றார்கள்-ஆயாச பட வைத்தான்-
குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகி சுடர் விளங்க கலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உரு முர வொலி மலி நளிர் கடல் பட வர
வர கடல் தடவரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனிதாமாள் ஆகவே
இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –3–
-இப் பாட்டில் பக்தி பண்ணும் விஷய எல்லை –யார் வரைக்கும்- அவனில் தொடக்கி ததீய சேஷத்வம் வரை செல்வதை-அடியார் அடியார்–அடியோங்களே –சப்த பர்வ ஏழு தடவை அருளினாரே–மதுர கவி ஆழ்வார் நிலைமை பெற பெறுவோம்
அதை லோகம் கண் காணும் படி வந்து தோன்றியவன் பண்ணலார் பரவும் பரனே பவித்ரனே
தெய்வம் மூவரில் முதல்வன் அடுத்த அர்த்தம்-
ஆபரணம் விகசிக்கும் திரு மார்பு உடையவனாய் —பாற் கடல் கடையும் பொழுது இவை அசைய
-நானும் கடைவன் இங்கு அங்கு நானே கடைவன்-மெய் அறிவன் குலசேகரர் -புலவர் நெருக்கு உகந்த பெருமான் போல் —
கண்ணன் ஸ்பர்சத்தால் வாசுகி படம் விரித்து கொண்டு–
–நாக்கு நனைக்க அமையும் ஒரு நாள் வீதி வழியே கருட வாகனம் வர சொல்லு-
-ஒப்பூண் உண்ணாமல் –ஆளாகவே இசையும் கொல்-சேஷமாய் அடிமைகளாய் -ஆளாகவே -ஏ வ காரம்—
இதில் அவன் அடியார்கள் அளவும் சென்று
ததீய நிஷ்டையில்
தமக்கு உள்ள ஆசையை வெளியீட்டு அருளுகிறார் –குறிப்பில் கொண்டு -என்று தொடங்கி
தனி மா தெய்வம் -என்னும் அளவும்
எம்பெருமான் உடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அருளுகிறார் –
உலகம் மூன்று
நெறிபட குறிப்பில் கொண்டு உடன் வணங்கு தோன்று புகழ் –
தன்னால் படைக்கப் பட்ட மூன்று உலகங்களும்
கீழ் வழி செல்லாமல்
நல வழி படிந்து
தன்னை லபிக்க
அதனால் எங்கும் பரந்த புகழை உடையவன் -என்கிறது -ஆணை மெய் பெற நடாய
ஆணை ஆஞ்ஞை சாஸ்திரம்
ஸ்ருதி ச்ம்ருதிர் மமைவாஞ்ஞா யஸ்தா முல்லங்கய வர்த்ததே
ஆஞஞாஸ் சேதி மமத்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்ணவ -என்று
தானே அருளிச் செய்தபடி
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும்
மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து -என்றபடி
சாஸ்த்ரங்களை நன்று பிரசாரம் செய்து அருளி –
ஆணை மேற் பெற நடாய தெய்வம் மூவரில் -ப்ரஹ்ம இந்த்ரன் ருத்ரன் மூவர்க்கும் நியாமகன் -என்றபடி
தெய்வம் மூவரில் முதல்வனாகி -அரி அயன் அரன் -மூவரில் தான் முதல்வன்
சுடர் விளங்கு அகலத்து
தேஜஸ் மிக்கு திரு ஆபரணங்கள் பூண்ட திரு மார்பை யுடையனாய்
அமுதம் கடைகிற அக்காலத்தில் கடலானது
ஒவ்வொரு அலையும் மலை பெயர்ந்தால் போலே
வரை புரை திரை பொரு-மலை போன்ற பெருத்த அலைகள் மோதப் பெற்ற
இது கடலுக்கு விசேஷணம்
உருமுரலொலிமலி-என்பதும் கடலுக்கு விசேஷணம்
உரும் என்றது உருமும் இடிக்கு பெயர் -உரும் முரல் -இடி போலே கோஷிக்கின்ற
அது மலிந்து நிறைந்து -என்றபடி
த்வனி இடி இடித்தால் போலே-
குல பர்வந்தங்களும் நடுங்கும்படி பெரு வரை வெரு வர –
நளிர்கடல்
ஸ்வா பாவிக்க குளிர்ச்சியை சொன்னது அன்று
எம்பெருமான் உடைய கடாஷத்தால் குளிர்ந்து
அடியவர்க்கு ஆளாகவே
பிரயோஜனாந்த பரகளுக்காக உடம்பு வோவ
தங்கள் அமிர்தம் இப்படி
உப்புச் சாற்றை கடைந்து அருளுவதே
என்று ஈடு பட்டு இருக்குமடியவர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
ஆளப்பட்டு இருக்க
ஓவாது -ஒரு ஷணமும் விடாமல்
ஊழி தோறு ஊழி -சகல காலமும்
என்றபடி –
————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply