ஸ்ரீ திரு விருத்தம் -25-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

(ஸர்வ ரக்ஷகன்-மண்ணையும் விண்ணையும் ரக்ஷிப்பவன் -இருந்தாலும் அவன் திருத்துழாயின்
ஸர்வ போக்யத்வம் -இதன் ஈடுபாட்டால் -ஆழ்வாரை மட்டும் விட்டும் -ரக்ஷிக்காமல் இருக்க –
செங்கோல் வளைந்து -நடுநிலை இல்லாமல் செய்யுமானால்
இந்தப் பெண்ணை என்ன பாடு படுத்தாது
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை -மாயக்கூத்தா திருவாய் மொழியிலும் இதே போல் உண்டே

மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1-)

(இப்பாட்டு நாயகி வார்த்தை யாதல் தோழி வார்த்தையாதால்
அரும்பதம்
என்னுடைய வளை நிமித்தமாக என்கையால் நாயகி
சம்சாரத்தில் அபலையான இவளை பெற்றால் என்ற வியாக்யானம் இருப்பதால்
தோழி வார்த்தையாகவும் தாயார் வார்த்தையாகவும் கொள்ளலாம்
கடவுளை நம்பினார் கைவிடப்படார் அல்லவோ என்னில்
உனக்கும் ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ -ஆழ்வார் )

அவதாரிகை
பகவத் சமாஸ்ரண்யம் பண்ணினாரில் இப் பாடு பட்டார் உண்டோ என்கிறாள்-

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27-மூன்றாம் திரு அந்தாதி  -27

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-

பாசுரம் -25-எம் கோல் வளை முதலா -தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –
மாயக் கூத்தா வாமனா -8-5-

பதவுரை

திறல் சேர்–வலிமை பொருந்திய
அமரர் தம்–தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய–தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள்–தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லா யவர்க்கும் தம்கோன்–பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்
நம் கோள்–(இவ்வுலகத்திலுள்ள) நமக்கும் தலைவனுமாகிய நம் பெருமான்
உகக்கும்–விரும்பித் தரித்துள்ள
துழாய்–திருத்தழாயானது
எம் கோல்வளை முதல் ஆ–எமது (கையிலுள்ள) அழகியவளை நிமித்தமாக
கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும்–அப்பெருமானது உபய விபூதியையும்
பாதுகாக்கிற தட்டில்லாத கட்டளையின் நேர்மைக்கும் ஒருகோடுதலை உண்டாக்கா நின்றது;
இனி–இங்ஙனமான பின்பு,
நானிலத்து–இவ்வுலகத்தில்
என் செய்யாது–(அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.

எம்கோல் வளை முதலா –
என்னுடைய வளை நிமித்தமாக-

கண்ணன் இத்யாதி–
சர்வேஸ்வரன் உடைய மண்ணையும் விண்ணையும்
ரஷியா நின்ற வாஞ்ஜையை பக்னம் ஆக்கா நின்றது

நம் கோன் உகக்கும் துழாய் —
சம்சாரத்தின் அபலையான இவளைப் பெற்றால்

என் செய்யாது–
சர்வேஸ்வரன் தானே உபய விபூதியையும் ரஷிக்க கடவ ஆஜ்ஜையை பக்னம் ஆக்கா நின்றான்-
என் உடைய வளை நிமித்தமாக இவனை அழிக்க தொடங்கினால்
வேறு ரஷிப்பார் யார் என்றுமாம்

திறல் சேர் இத்யாதி–
மிடுக்கை உடைய இந்த்ராதி தேவதைகளுக்கு நாதனான பிரம்மாவுக்கும் நாதன் ஆனவன்

உம்பர் இத்யாதி–
மேலா தேவர்களான அயர்வறும் அமரர்கள் அதிபதி
இத்தால் உபய விபூதி நாதன் என்ற படி

நம் கோன் –
உபய விபூதிக்கு நாதன் ஆனால் போல அன்று கிடீர்
எனக்கு நாதன் ஆயிற்று-

(அரங்கம் ஆளி என் ஆளி
ஸ்ரீ ரெங்க நாத மம நாத
அங்கு எல்லாம் விசேஷ கடாக்ஷம்
இங்கு பேர் அளவிலே நாதன் )

உகக்கும் துழாய்–
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்–திருவாய்மொழி -1-9-7- இத்யாதி —

ஸ்வாபதேசம்-

ஆழ்வார் உடைய தசையை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சர்வேஸ்வரன் உடைய ரஷகத்வையும் அதி சங்கை பண்ண வேண்டி இருக்கிற படி சொல்லிற்று-

(அரும்பதம்
இத்தால் ஈஸ்வரனுடைய ரக்ஷகத்வமும் அசத் சமமாம் படி ஈஸ்வரனையே பாதியா நின்றது
அடைந்தாரும் ரஷிக்கப் படாததுக்கு மூன்றாம் திருவந்தாதி பாசுரம்
ஆணையையே பக்னம் ஆக்கா நின்றால் என் செய்யாது )

தாத்பர்யம்
சர்வேஸ்வரனுடைய திருத்துழாய் போக்யதையில் ஈடுபட்ட ஆழ்வார் நலிந்தமையை பாகவதர் உரைத்த பாசுரத்தை
நாயகி நிலைமையைத் திருத்தாயார் வார்த்தை யாக அருளிச் செய்கிறார்
உபாயவிபூதி நாதன் சாத்தி அருளிய திருத்துழாய் என் பெண்ணை ரக்ஷிக்க இருந்தாலும்
அவனது பிரயத்தனமும் கார்யகரமாகா இருக்க -தலைகாட்டாமல் இருக்க
அவனுடைய ஆணையையும் அழித்து
இவளை பாதிக்கத் தொடங்கிற்றே
இனி அசாத்தியமான வியாபாரம் இதுக்கு ஒன்றுமே இல்லையே

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading