(வளை -என்று இவள் பாரதந்தர்யம்
வஞ்ச நோய் -பக்தியாகிய நோய் -விரஹம் -வஞ்சித்து கொடுத்த நோய்
கண்ணில் உள்ள நோய் என்றும் ஆழ்வாருக்கு உள்ள நோய் என்றும் கொள்ளலாம்
உலாவும் -கண்களுக்கு விசேஷணம்
இயல்வாயின -ஸ்வா பாவிகம் -ஸஹஜ பக்தி
குடங்கை -பக்தி தத்வ த்ரயங்களிலும் அதிகமாக இருந்தாலும் நாம் அனுபவிக்கும் படி இருக்குமே
கண் -வெளி பாஹ்ய கரணம் ஈடுபாடு
மனம் -அந்தக்கரணம் ஈடுபாடு
கோவர்த்தன தாரிக்கு இயல்வான புள்ளூர்தி உண்டே
கருமாணிக்க மாலையிலும் திருத்துழாயில் ஈடுபட்டாள்
இங்கும் அப்படியே
செவிலித்தாய் இரங்கி பேசியதாகவும்
தோழி சொல்வதாகவும் சொல்லலாம் -இது ரசம் இல்லை என்பர் வ்யாக்யாதா
கரு மாணிக்க மலை யும் தோழி பாசுரம்
கருமாணிக்க மலை மேல்
மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை
உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல்
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-)
அவதாரிகை-
இவள் உடைய அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட திருத் தாயார்
இது என்னைவாய் முடிகிறதோ என்கிறாள்
(கரு மாணிக்க மாலையிலும் அப்படியே தாய் இருந்தாள் அன்றோ )
இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல் வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னான்கொல் எம் கோல வளைக்கே –24–
பாசுரம் -24-இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் –
பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –
கரு மாணிக்க மலை -8-9-
பதவுரை
இயல்பு ஆயின–இயற்கையானதும்
வஞ்சம்–பிறரறியாதபடியுள்ளதுமான
நோய்–காதல் நோயை
கொண்டு–உடையவையாய்
உலாவும்-(ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற
ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும்–ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கை யளவாக வுள்ளவையும்
கயல் மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப் பெருக்கை யுடைய கண்களுடனும்
புயல் வாய்–(முன்பு) பெருமழை பெய்த காலத்து
குன்றம் ஒன்றால்–கோவர்ததன மலையினால்
இனம் நிரை காத்த–பசுக் கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும்
புள் ஊர்தி–கருட வாகஹனனுமான கண்ணபிரானது
கள் ஊரும் துழாய்–தேன் பெருகும் திருத்துழாயினுடைய
கொயல் வாய் மலர் மேல்–பறிக்கப் படுதல் பொருந்தின பூவின் மேல் (ஆசைப்பட்டுச் சென்ற)
மனத்தொடு–மனத்தோடும்
எம் கோல் வளைக்கு–அழகிய வளையல்களை யுடைய எமது மகளுக்கு
என் ஆம் கொல் – (இன்னும்) என்ன நிலைமை நேருமோ?
வியாக்யானம்
இயல்வாயின —
ஸ்வபாவமாய் உள்ளன
(கண் ஞானம் -அதில் தேங்கி உள்ள அநுராகம் பக்தி -ஸஹஜ பக்தி )
அறியாக் காலத்து உள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து–திருவாய்மொழி -2-6-6-
பால்யாத் பிரப்ருதி ஸூஸ்நிக்த -பால காண்டம்-18-2-7-
(ஸ்ரீ ராமன் உடன் ஸ்ரீ லஷ்மணன் சிறிய வயது முதல் அன்புடன் இருந்தார் -என்னுமா போலே)
வஞ்ச நோய்–
சர்வேஸ்வரனாலே வஞ்சிதமான நோய்
(அழகைக் காட்டி -அறியாமல் விஷயாந்தர ப்ராவண்யம் விலக்கியதே வஞ்சனை )
ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலே -திருவாய்மொழி-6-7-2-
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணா ஓ –திருவாய்மொழி-8-5-6-
என்று சொல்லுகிற படி ,தன்னைக் கண்டார் தன்னைப் போலே யாம் படி
வஞ்சித்து கொண்டு என்றும்
(வியாசர் -புத்திரரான ஸூகரைக் கூப்பிட மரங்களும் பதில் சொல்லிற்றனவே )
நோய் கொண்டுலாவும்–
நோய் நடத்த
நடந்த படி–
ஸோபி வேலாமிமாஂ நூநமபிஷேகார்தமுத்யதஃ.
வரிதஃ ப்ரகரிதிபிர்நித்யஂ ப்ரயாதி ஸரயூஂ நதீம்৷৷3.16.29৷৷
வ்ருதா பிரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் –ஆரண்ய காண்டம் -16-29–
ப்ரக்ருதி வர்கத்தாலே-சூழப் பட்டு போன படி….
பெருமாளைப் பிரிந்து ,மித்ர வர்க்கம் சேவிக்கப் ,போகிறானோ என்னில்-
கால் நடை கொடாமையாலே தாங்கிக் கொண்டு போன படி-
அத்யந்தஸுகஸஂவரித்தஸ்ஸுகுமாரஸ்ஸுகோசிதஃ.
கதஂ ந்வபரராத்ரேஷு ஸரயூமவகாஹதே৷৷3.16.30৷৷
அத்யந்த ஸூக சம்விருத்த ஸூகுமார ஸூ கோஜித –ஆரண்ய காண்டம் -16-30-
சக்கரவர்த்தி அறுபத்தினாராயிரம் சம்வச்தரம் மலடு-நின்று பெற்றவன் ஆகையாலே ,
அவன் கொண்டாடின ஸூகம் இறே இவனுடைய ஸூகம்
உம்முடைய கண்ணாலே பார்க்கவும் பொறாத சொவ்குமார்யம்
உம்மோடு கலவிக்கு உசிதன் அத்தனை அல்லது பிரிவுக்கு சிதன் அன்று இறே
கதந்னு-
தன் படியே என்று நினைக்கிறார் பிரிவு இல்லாமையாலே தமக்கு நீர் குளிருகிற படியாலே-
சுடும் என்று அறியாதே குளிரும் என்று அஞ்சுகிறார்
(ராஜ்ஜியம் போகங்களைத் துறந்து தபஸ் கோலத்தில் உயிர் வாழ மட்டும் உண்டு தரையிலே தூங்கினான்
குளிர்ந்த நீரில் எவ்வாறு குளிப்பான் என்று இளைய பெருமாள் சொல்ல
கூடி இருப்பதால் இவ்வாறு
இவன் தாபத்தால் சரயுவே சுடுமே
தசரதன் கொண்டாடும் ஸுகுமாரம் பெருமாளுக்கு
பெருமாளே கொண்டாடும் ஸூகுமாரன் பரதனுக்கு )
அபர ராத்ரேஷு —
அகாலத்திலே போவான் என் என்னில் ,
புதிசாக வைதவ்யம் (விதவை )வந்தவர்கள் ,ஆள் கிளம்புவதற்கு முன்னே
மனிதர் முகத்தில் விழியாமல் போமா போலே
கைகேயி மகன் என்றும்,
இவனாலே இப்படி புகுந்தது என்றும்
சொல்லும் அதற்க்கு அஞ்சி
சரயூம் அவகானே –
நீரிலே முழுகினால் தடவி எடுக்க வேண்டும் படி-
(நீர் எல்லாமே உறிஞ்சி போக -கீழே போவான் )
தர்மஜ்ஞ ஸ்ஸத்யவாதீ ச ஹ்ரீநிஷேதோ ஜிதேந்த்ரியஃ৷৷3.16.31৷৷
ப்ரியாபிபாஷீ மதுரோ தீர்கபாஹுரரிந்தமஃ.
ஸந்த்யஜ்ய விவிதாந்போகாநார்யஂ ஸர்வாத்மநா ஷ்ரிதஃ৷৷3.16.32৷৷
நோய் வந்தவன் நடந்ததுக்கு பிரமாணம் இந்த ஸ்லோகங்கள்
ஒரோ குடங்கை –
சிறுமை சொல்லிற்று அன்று —
போக்தாக்களுக்கு அளவு பட்டு இருக்கை
(திவாகர முனி கண்களுக்கு அகப்படும் படி சுருங்கி அநந்த பத்ம நாப ஸ்வாமி போல் )
கயல் பாய்வான –
பிள்ளும்
மௌக்த்யவமும்
பாய்வான பெருநீர்-
ஏகார்ணவம் பிரவஹித்தால் போலே இருக்கை
கயல் பாய்வான பெருநீர்–
ஒரு கடலிலே ஒரு கயல் இடம் வலம் கொண்டால் போல் இருக்கை
கண்கள் தம்மொடும் –
பாஹ்ய கரணங்கள் இங்கே பிரவணமான படி சொல்லிற்று-
குன்றம் ஒன்றால்-
ரஷிக்கும் இடத்தில் எடுத்தது பரிகரமாய் இருந்த படி-
புயல்வாய் –
புயல் இடத்து –
திரு ஆய்ப்பாடியில் வர்ஷம்-தீ மழை-என்று தோற்றி இருக்கிற படி
இன நிரை காத்த–
1-ரஷிக்கும் இடத்தில் ரஷகாந்தர்பாவமே வேண்டுவது-
(ரக்ஷகனது அபிமானத்தில் அந்தர்பவித்து இருக்க வேண்டுமே )
ஞான அஞ்ஞானங்கள் பாராதே ரஷிக்கும் ..
2-க்ருத அநுகார நிவ கோபிரார்ஜிவ–
பசுக்களை இட்டுக் காட்டும் படி இறே இடையர் உடைய ஸ்வாபம்-அவர்களையும் கடாஷித்த படி
(ஆயர் காத்த என்னாமல் நிரை காத்த என்பதுக்கு இந்த வியாக்யானம்
பசுக்கள் விசுவாமித்திரர் வஸிஷ்டர் போல்
ஆயர்கள் அவற்றில் குறைந்த ஞானம் உள்ளவர் என்றபடி
ஞானம் குறைவானவர்களையே ரக்ஷிப்பதில் ஆசை கொண்டவன் அன்றோ )
(இரண்டாவது அவ்வளவு சரசம் இலை முதல் நிர்வாகமே கொள்ள வேண்டும் என்று அரும்பதம் )
புள்ளூர்தி –
சர்வாதிகன்
கள்ளூரும் துழாய் –
மதுஸ்யந்தியான திரு துழாய் –
திருவடி தோளிலே அலைய விட்ட திரு துழாய் மாலை யோட கூட அணைக்க ஆசை படுகிறாள்
இவனும் விரும்பும் தார் ஆகையாலே –
(கருட வாகனத்தில் பொதுவாக அவன் மட்டுமே
வைரமுடியில் உபய நாச்சியார் உண்டே
சத்யபாமையைக் கூட்டிக்கொண்டே நரகாசுர வாதத்துக்கு கருட வாஹனாகச் சென்றான் )
பதி சம்மாநிதா சீதா -அயோத்யா காண்டம் -16-21–
பெருமாள் சக்கரவர்த்தி பாடு சுமந்த்ரன் அழைக்க
எழுந்து அருளுகிற பொழுது ,
தொடர்ந்து-பின்னே புறப்பட்ட பிராட்டிக்கு
திரு தோளிலே மாலையை வாங்கி இட்டு ,
நாம் வரும் அளவும் விருத்த கீர்த்தனம் பண்ணி இரு என்று பழையவர்கள் நிர்வாகம் —
மாலையை இட்டு திரு அடிகளைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளினார்-என்று பட்டர்..
(சூடிக்களைந்த மாலையையா தருவது என்று அபராத ஷாமணம் பண்ணிப்போந்தான் என்றபடி )
அஸி தேஷணா –
இவர் தோளில் மாலை இட்டதுக்கு
இவள் கண்ணாலே மாலை இட்ட படி-
(அரும்பூதம்
பதி பார்யைக்கு ஸம்மானம் பண்ண வேண்டுமோ
வஸ்திர பூஷணம் இவளுக்கு வேண்டாமே ஜனகராஜன் திருமகள்
தம்மைக்குறித்து பாரதந்தர்யம் காட்டவோ எண்ணில்
ஐயர் பார்த்து பண்ணிய கல்யாணம்
இனி உசிதம் என் என்னில்
தனக்கு அபிமதமான மாலை இவளுக்கு தாரகம் என்று
அபராத ஷாமணமும் பண்ணிப் போந்தான் என்று பட்டர் )
கொயல்வாய் மலர் மேல்-
வட்டமாய் செவ்வியை உடைத்தான மாலையிலே மனம் ஆயிற்று-
எம் கோல் வளைக்கே –
என்னாய் முடிய புகுகிறது என்று அறிகிலேன்
மலர் மேல் மனத்தொடு –
அந்தக் கரணம் பிரவணம் ஆன படி-
ஸ்வாபதேசம்-
இப் பாட்டில் சம்சாரத்துக்கு இவர் உளர் என்று இருக்க ,
இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான-அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
இவர் படியும்
இப்படி ஆவது இது என்னாய் முடியக் கடவதோ -என்று இருக்கிறபடி-
தாத்பர்யம்
கீழ் பாகவதர் பரமபதத்தை பிரஸ்தாபிக்க –
(சூட்டு நன் மாலைகள் பாசுரம் தொடங்கியே -முன் பாசுரத்திலும் கண்ணன் விண்ணாடு )
அத்தைக்கேட்டு ஆழ்வார் திரு உள்ளம் அங்கு சென்று மக்நமான -ஈடுபட்ட படி
உள்ளமும் கண்ணும் ஈடுபட்டு இருக்க –
சம்சாரம் திருத்த அன்றோ இவரை வைத்து உபதேசிக்கப் பண்ணினான்
அது செய்யாமல் இவ்வாறு ஈடுபடுவதே
திருத்தாயார் பாசுரம்
பக்தி ஸ்வ பாவம் இவளுக்கு -ஸஹஜம் –
சர்வேஸ்வரன் தனது வடிவு அழகைக் காட்டி அத்தை விருத்தி அடையச் செய்து
நின்ற இடத்தில் நிற்காமல் உலாவி
பெரிய குளத்தில் இரண்டு மீன்கள் போல் இரண்டு கண்களும் விழிகளும் உலாவி
இந்திரன் கல்மழை பொழிய கல் எடுத்து கல் மாரி காத்த கருட வாஹனான ஸ்ரீ யபதி
சாத்தி அருளும் திருத்துழாய் ஆசைப்படா நின்றாள்
இது என்னவாய் முடியுமோ என்கிறாள்
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply