ஸ்ரீ பாஷ்யம்— 1-3-8–மத்வதிகரணம் (3-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்

————

1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-

மது வித்யை போன்ற வித்யைகளுக்கு தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -என்பர் ஜைமிநி
சூரியன் தேனை சேகரிக்கின்றான்-வேத ஓசைகளே தேன் -நான்கு திசைகள் நான்கு வேதங்கள்-கிழக்கில் இருந்து ருக் வேதம்
இந்த அமிர்தம் போன்ற தேவை உபாசிப்பவன் வஸூக்களில் ஒருவன் ஆகிறான் -தேவர்கள் முன்பே வஸூக்களாய்
உள்ளதால் எப்படி தங்களையே உபாசிக்க முடியும் -எனவே பொருந்தாது –

மது வித்யை-சாந்தோக்யத்தில் உள்ளது -இதில் உபாஸ்யம் வஸூ /
ரஸ்மி த்வாரேன-மது உண்டு வஸூத்வ பிராப்தி அடையும் வித்யை
வஸூத்வ ப்ராப்திக்கு -எப்படி வஸூ அதிகாரி ஆவார் -ஜைமினி இல்லை என்பார் –
ஸூர்ய உபாசனம் அனைவருக்கும் உண்டே / மது-ஸூர்யனுக்கும் -போதனாத் -சர்வ யஞ்ஞ பலம் சூர்யன் –
அடுத்ததும் பூர்வ பஷ சூத்ரம்

——————————————————-

1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –

உயர்ந்த ஜ்யோதி ரூபமான பரம்பொருளை தேவர்கள் உபாசிப்பதால் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜயோதிராயுர் ஹோபாசதே அம்ருதம் -என்று சொல்லப்பட்டதே
அதனால் ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் சொல்லப் பட்டாலும்
தேவர்களுக்கு அது சிறப்பு மது வித்யை பொருந்தாது-

ஜ்யோதிஷி பாவாத் ச –ஏற்கனவே அடைந்து இருக்கிற படியால் என்றவாறு –
பர ப்ரஹ்மம் உபாசனம் மட்டுமே தேவர்களுக்கும் மநுஷ்யர்களுக்கும் சாதாரணம்
வேறே எந்த உபாசனத்தையும் தேவர்கள் தொடங்க முடியாது என்றவாறு

———————————————————

1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —

தேவர்களுக்கு மது வித்யையில் அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கருதுகின்றார் –
30/31 சூத்ரங்கள் பூர்வ பஷமாக்கி இது சித்தாந்தம்
மது வித்யை மூலம் வஸூக்கள் தங்கள் அந்தர்யாமியாக உள்ள பரம் பொருளை உபாசிக்கிறார்கள் -தங்களையே அல்ல-
இந்த கல்பத்தில் வஸூவாக உள்ளவர்கள் அடுத்த கல்பத்திலும் வஸூவாக இருக்க உபாசிக்கின்றனர்-
எனவே அவர்களுக்கும் அதிகாரம் உண்டு-

பாவம் து பாதராயண அஸ்தி ஹி –அடுத்த கல்பத்திலும் அதே பதவி அடைய உபாசிக்கலாமே –
இங்கு பர ப்ரஹ்ம உபாசனத்தை இந்த மது வித்யையாலே சொன்னவாறு
பாதராயணர் -பகவான் -இவருக்கு விசேஷணம் இங்கு ஸ்ரீ பாஷ்யத்தில் –
ஸ்ருஷ்ட்டி பிரளயம் இவற்றை நன்றாக அறிந்தவர்களே பகவான் –
நமக்குள்ளே -தஹாராகாச ப்ரஹ்மத்தை உபாசித்து போலே –
ஜீவாத்மாவுக்கு அந்தராத்மாவாகவும் கண்ணுக்கு அந்தராத்மாவும் நேராக பர ப்ரஹ்மம் உபாசனம் மூன்றும் உண்டே
ப்ரஹ்ம ப்ராப்திக்கும் உபாசனம் பண்ணலாமே -ஆகவே உபாசனம் சம்பவமே –

————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading