ஸ்ரீ பாஷ்யம்— 1-3-5–தஹராதிகரணம் (10-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3-ஸூத்ரங்கள்–

——————–

ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் -1-3-13/22

தஹர வித்யை சாந்தோக்யம் எட்டாவது அத்யாயம் –முதல் மந்த்ரம் -விஷய வாக்கியம் –

1-3-13-தஹர உத்தரேப்ய-

சாந்தோக்யம் -அதயதிதமஸ்மின் ப்ரஹ்மபுரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரே ஆகாசாஸ்
தஸ்மின் யதந்தஸ் ததன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம்–
அதே உபநிஷத்தில் மேலே -ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகோ விஜிகத்சோ அபிபாபசஸ்
சத்யகாம சத்ய சங்கல்ப -என்பதால் பரம் பொருளே
மேலும் அதே உபநிஷத்தில் மேலே -யாவான் வா அயமாகா சாஸ்தா வா நேஷோ அந்தர் ஹ்ருதய ஆகாச -என்று
ஆகாயம் போலே என்பதால் தஹரா எனபது ஆகாசம் இல்லை-
ஹிருதய புண்டரீகத்தில் உள்ளவனை சாஷாத்கரிக்கவே-திவ்ய தேச யாத்திரை இத்யாதிகள் -ஈஸ்வர சர்வ பூதானாம் –
ப்ரஹ்ம புரம்-அவனுக்கு ஆஸ்ரயமான தஹர புண்டரீகம்
திவ்யம் ப்ரஹ்ம புரம் –வேஸ்ம -அகம் க்ருஹம் / அதற்குள் ஆகாசம் -தஹராகாசம் -வி லக்ஷணம் ஸூஷ்மம் -அவகாசம் -space-
அதற்குள் உள்ள பர ப்ரஹ்மம் தேடி -அறிய முயல வேண்டும் -ஞானத்து இச்சா -விசேஷமாக அறிவது விஞ்ஞான -அபாரம் அநந்தம் ஆகாசம்
–9-million -கி மி -சூர்யன் தூரம் -அகிலாண்ட கோடி ப்ருஹ்மாண்ட லோகம் -இதே விஸ்தீரணம் அந்தர ஹிருதய ஆகாசம் -என்று கோஷிக்கும் உபநிஷத் –
யாவான் தவான் -அனைத்தும் அடங்கி -சூர்யா சந்த்ர வித்யுத் நக்ஷத்ராணி -கண்ணுக்கு தெரிந்த அனைத்தும் தெரியாமல் உள்ள
சர்வமும் உண்டே -தஹாராகாச பெருமை சொல்லும் சர்வம் ஸமாஹிதம் –
ஹ்ருதய கமல தஹாராசாகத்தில் அனைவர் இடத்திலும் அவன் உள்ளான் -பிரதி வஸ்து ச பூர்ணம் – வெளியிலும் உண்டே –
மூப்பு வர வர தஹராகாசாரம் விகாரம் ஆகுமா -இந்திரியங்களுக்கு போலே -என்னில் கிடையாது –
நிருபாதிக சத்யம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தையிலும் அபாவத்வம் இல்லை –
உளன் கண்டாய் -உள்ளத்தின் உள்ளான் -பொய்கையார் / கல்லும் –புல் என்று ஒழிந்தன -அடியேன் உள்ளத்தகம் /
மனக்கடலில் வாழ வல்ல –என்னை உனக்கு உரித்து ஆக்கினாயே

ப்ரஹ்ம வித்யைகள் பல உண்டானாலும் பலன் ஒன்றே –குணம் ஒவ் ஒன்றையும் உபாஸ்யம் காரணத்வம் பரத்வம் இத்யாதிகள் /
நிர்குண வித்யை பிரதான்யம் அத்வைதிகள் –
குண அஷ்ட யோகம் -ஸ்வரூப ஆவிர்பாவம் –சாந்தோக்யம் –ப்ரஹ்ம லோகம் அடைந்து — அநாவ்ருத்தி சப்தாத் -கடைசியில் –
தர்க்க பாதம் -2–2-அவிரோத அத்யாயம் -இரண்டாம் பாதம் -தர்க்கம் -யுக்தி / சங்காவாரகம் /
அணுவே காரணம் என்பர் புத்தர் வைசேஷியர் / பிரகிருதி சாங்க்யர் காரணம் என்பர்
யுக்தி மூலம் இந்த விரோதங்களை போக்கி /வேத சாஸ்திரத்துக்கு விருத்தமில்லாத உக்தியாலே –
விஷய வாக்கியம் இல்லாத அதிகரணம் உண்டா –யுக்தி கொண்டே சர்ச்சை என்பதால் தர்க்க பாதம் அதிகாரணங்களுக்கு விஷய வாக்கியம் இல்லை
பூர்வ மீமாம்ஸையிலும் முதல் பாதமும் தர்க்க பாதம் -இதுக்கும் விஷய வாக்கியம் இல்லை –
கடைசி ஸூத்ரம்-கடைசி அதிகரணம் – -இதுக்கும் இந்த சாந்தோக்யம் -ப்ரஹ்மா -பிராஜா பதிக்கு -மனுக்கு -சொல்லி -8 –15 -கடைசி மந்த்ரம் –
அத்யயனம் -18-வருஷங்கள் -/ அஹிம்சை -த்மாவில் எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி
ப்ரஹ்ம லோகம் ஆவர்த்ததே -நச புன அவவ்ருத்ததே -நச புன அவவ்ருத்ததே -இதில் வரும் -சாத்து முறை போலே இரட்டித்து –
தார்க்கிகள் -வேதம் பர ப்ரஹ்மம் -ஸ்ருஷ்ட்டித்தான் என்பார் -நாம் அபவ்ருஷேயம் -என்போம் –
ஈஸ்வர நிர்மிதம் மஹரிஷிகளால் பார்க்கப்பட்டது -என்பர் /ஈஸ்வர உபதிஷ்ட்டம் -நம் சம்ப்ரதாயம் –
வேதம் நித்யம் -அக்ஷரங்கள் நித்யம் மீமாம்சிகர் -சப்தம் அநித்தியம் -வர்ணக்ரமம்
ஹ்ருத் புண்டரீகம் ஹ்ருத் கமலம் -பத்ம கோச ப்ரதீகாசம் -ஹிருதயம் -சர்வம் ப்ரதிஷ்டிதம் -பரமாத்மா வியவஸ்சித-
ஹிருத் பத்ம மத்யே -எல்லா உபநிஷத்துக்களும் கோஷிக்கும் -ஏக கண்டமாக –

மஹா பூத விசேஷமா– பிரத்யாகாத்மாவா -பரமாத்மாவா–சங்கை -/
ஆகாச அதிகரணம் முன்பே வந்ததே / sky-prasiththi-prakarshyaath -பூதாகாசம் -சங்கை /
உத்தரேப்யா -மேலே உள்ள அஷ்ட குணங்கள் -பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் –
சூசனாத் ஸூ த்ரம்–விஸ்தாரமாக சொல்லாமல் -ஸூ சிப்பிக்கும் / நிருபாதிக அபஹத பாப்மாத்வாதி குணங்கள் அவனையே குறிக்கும் –
விஜர விசோக–சத்யகாம சத்ய சங்கல்ப -இத்யாதிகள் / முக்தனுக்கு சோபாதிகமாக இவை உண்டு –
ஏஷ ஆத்மா –சப்தம் பரமாத்மா ஏவ முக்கிய வ்ருத்தம் -கீழே த்யுதிவாதி கரணத்தில் பார்த்தோம் -/
தஹராகாசம் ஆத்மா அறிந்த முக்தனுக்கு எந்த லோகமும் இஷ்டப்படி போகலாம் -சர்வான் காமான் லோகான் –ஸ்வராட் பவதி -/
யாவான் வா –தவான் வா -வெளியில் உள்ள அநந்த ஆகாசம் போலே உள்ளேயும் -உண்டே -பூதாகாச சத்ருசம் என்பதால் –
ராம ராவண யுத்தம் -கடல் ஆகாசம் -சாம்யத்துக்கு வேறே ஒன்றை சொல்ல முடியாதே -ககனம் ககனாகாரம் -அளவில்லா ஒன்றுக்கு அதுவே உதாரணம் –
இந்த பூர்வபக்ஷ சங்கைக்கு -எல்லா வற்றையும் பெரியது பூமி அந்தரிக்ஷம் என்று பலவும் உண்டே -மஹதோ மஹீயான் -பரமாத்மா தத்துவத்தை சொல்லுமே –

1-3-14-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –
அனைவரும் சென்று அடையும் இடம் என்பதாலும் ப்ரஹ்ம லோகம் என்பதாலும் தஹரா பர ப்ரஹ்மமே -பரம் பொருளே
சாந்தோக்யம் -தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தே யுரேவ மேவமாஸ் சர்வா பிரஜா
அஹரகர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா -என்றும்
இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில்–ஏஷ ப்ரஹ்ம லோகஸ் சம்ராடிதி ஹோவாச -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-
ஆழ்ந்த தூக்கத்தில் பர ப்ரஹ்மத்தை அடைகிறோம் / ஜாக்ரத்-அவஸ்தை -அடுத்து – ஸ்வப்னா அவஸ்தை –3-அத்யாயம் -2-பாதம் -விவரிக்கும்
ஸூ ஷூப்தி அடுத்து / துர்யா நான்காவது அவஸ்தை -அதே பெயர் இதுக்கு –கீழ் உள்ள மூன்றும் இல்லை -விசித்திரம் –
சமாதி யோக சாஸ்திரம் சொல்வது போலே -ஹிரண்ய நிதி புதையல் -அகத்தில் -உபரி உபரி சஞ்சாரம் -த்ருஷ்டாந்தம் –
பரமாத்மா சம்யோகம் நித்தியமாக இருந்தாலும் -ந விந்தந்தி -அறியாமலே இருந்து –சம்ச்லேஷம் விஸ்லேஷம் அறியாமலே அனைத்து ஜீவர்களும் –
ப்ரஹ்ம வித்யை மநுஷ்யர்களுக்கு மட்டுமே -ஸ்தாவர ஜங்கமங்கள் சூரர்களுக்கு இல்லை -மேலே வரும் /
அம்ருதம் -அசத்தியம் -பரமாத்மா பின்னம் அவித்யை மாயை -அதனால் உணரமுடியாது –/
தம் சத்யம் பர்யாயம் -ருதம் சத்யம் பர ப்ரஹ்மம் -/ சத்யஞ்ச அம்ருதம் –பர ப்ரஹ்மம் -என்றும் சுருதி சொல்லும் /
பண்டிதர் இருப்பவர்களையும் இறந்தவர்களையும் பற்றி கவலை -சரீரம் ஆத்மா -என்று கீதா பாஷ்யார்த்தம் -இந்த வார்த்தைகளுக்கு /
மாயா -பகவத் திரோதான -பகவத் ஸ்வரூபத்தை -மறைக்கும் -குண மயத்தால் –மம மாயா ப்ரக்ருதி -மாயா ஜெகன் மோஹினி –
கோயில் திரை விலக்கி கற்பூர ஹார்த்தி-இதை விளக்கிக் காட்ட –சாஷாத்காரம் காட்ட சிஹ்னம்-ஜோதி ரூபம் -பரஞ்சுடர் தானே அவன் –
த்ரிகுணம் துணியால் திரை செய்வது சம்ப்ரதாயம் -சத்வம் வெண்மை ரஜஸ் தமஸ்-சிகப்பும் கருப்பும் –
ஏதத் -சப்தம் -இங்கே நம் ஹிருதயத்திலே உள்ள ப்ரஹ்ம புரம் லோகம் -என்றவாறு -/ ப்ரஹ்மத்துடனே சேர்வதையே இங்கே ப்ரஹ்ம லோகம் என்கிறது –
ப்ரஹ்ம லோக சம்ராட் -பர ப்ரஹ்மம் ஆகிற சர்வேஸ்வரன் என்றும் சுருதி சொல்லுமே –
156-அதிகரணம் உத்தர மீமாம்சை –1000-அதிகரணங்கள் பூர்வ மீமாம்சைகளில் உண்டே –
ப்ராஹ்மணர் யஜ்ஜம் தானம் அத்யயனம் -ஷாட் கர்மா அதிகாரம் -த்ரிவர்ணம் -நிஷாதன் -அதிகாரம் இல்லை
நிஷாத ஸ்தபதி மூலம் யாகம் பண்ணு -சொல்லும் -தத் புருஷ சமாகம்
வேடனுடைய புரோகிதம் -நிஷாதஸ்ய என்றபடி –நிஷாத ஜாதியிலே புரோகிதம் -வேத அதிகாரம் இல்லையே -லக்ஷணா மூலம் கர்மதாரா சமாகம் -சம்ப்ரதாயம்
அந்த யாகத்துக்கு வேண்டிய வேத அத்யயனம் அவனுக்கு கொடுக்கலாம் என்று -வியாகரண சாஸ்திரம்
அப சூத்ராதி கரணம் ப்ரஹ்ம வித்யைக்கு தான் -இது போன்ற யாகங்களை இல்லையே
அதே போலே ப்ரஹ்ம லோகம் இங்கு -ப்ராஹ்மைவ லோகம் -விஷயத்தை ஸ்தபதி நியாயம் படி என்பர் ஸ்ரீ பாஷ்யத்தில் –
பிரதம த்வதீய வர்ணகம்–
ஹரி -விஷ்ணு -ஸிம்ஹம்–குரங்கு -14-அர்த்தங்ககள் உண்டே / ஜென்மாதி அஸ்ய யதக -ஜகத்தின் ஸ்ருதியாதிகள் யாராலோ அவனே பர ப்ரஹ்மம்
ஜன்மத்துக்கு முதலில் ஹிரண்யகர்ப்பன் ஆதியில் உண்டானவன் -என்றும் கொள்ளலாம் -ஆத்யன் -அவனே -ஜென்ம ஆத்யஸ்ய யதக -இவனையும் ஸ்ருஷ்டித்த பர ப்ரஹ்மம்
யதவா யமானி- சுருதி வாக்கியம் கொண்டே முந்திய அர்த்தம் -யுக்தி யுக்தம் -சரியாக இருந்தால் பாலர்கள் கிளியோ சொன்னாலும் ஒத்து கொள்ளலாம்
தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தே யுரேவ மேவமாஸ் சர்வா பிரஜா
அஹரகர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா-இதுக்கும் ஸூ ஷூப்தி தசையில் –
மனஸ்-அணு தத்வம் -புரித நாடி -சேர்ந்து ஆழ்ந்த தூக்கம் -க்ஷணம் விடாமல் பரமாத்மா சம்யோகம் இருந்தாலும் உணராமல் இருப்பது போலே –
அந்தரா யமயதி ஆத்ம ந வேத -அறியாமல் இருக்கும் பொழுதே உள்ளே இருந்து நியமிக்கிறார் -என்றும் கொள்ளலாம்

1-3-15-தருதே ச மஹிம் ந -அஸ்ய அஸ்மின் உபலப்தே
சாந்தோக்யம் -ய ஆத்மா ச ஹேதுர் வித்ருதி ரேஷாம் லோகா நாம சம்பேதாய-என்று உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம் என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில் -ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேதுர் விதரண
ஏஷாம் லோகா நாம சம்பேதாய -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-
த்ருதி -தாரணம் -தரித்து உள்ளவன் பர ப்ரஹ்மமே / ஏஷ சேது -விதரண –அம்ருதஸ்ய -மோக்ஷம் கொடுப்பவன் -/
விதர– விசிஷ்டதயா விசேஷமாக தரித்து —அசம்பின்னமாக இருக்க -அநந்த லோகங்களும் -விரோதம் இல்லாமல் இருக்க –
ஏஷ சேது விதாரண -அவனே தஹராகாச சப்த வாச்யன் -பர்ஸமை ப்ரஹ்மத்தின் மஹிமை -சொல்லும்

1-3-16-பிரசித்தே ச –
ஆகாயம் என்று பரம் பொருளை ஒட்டியே பல இடங்களிலும் சொல்லப் பட்டதால் தஹரா பர ப்ரஹ்மமே –
தைத்ரீய ஆனந்த வல்லியில் –கோ ஹ்யேவான்யாத் கே ப்ராணயாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-
மேலும்- சர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாதேவ சமுத்பத்யந்தே -என்று
ஆகாயம் பரம் பொருள் என்ற காரணத்தால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே –
வாஸ்தமான பிரசித்தி ஆகாச சப்தத்துக்கு பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும் என்றவாறு

1-3-17-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –பூர்வபக்ஷம் சொல்லி அது பொருந்தாது என்கிறார் –
ஆகாசம் விட்டு ஜீவனை சொல்லலாமோ என்னில்–இங்கு சொன்ன குணங்கள் வைத்து பார்த்தால் ப்ரத்யகாத்மா நிரசனம் –
தினவடங்க வியாக்யானம் செய்து புத்தியை ஸ்திரப்படுத்தி கிறார் இவற்றால் /

1-3-18-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து -ஸ்வரூப ஆவிர்பூதம் அடைந்து அஷ்ட குண சாம்யம் -அடைகிறான் என்பதால் -ஸம்ப்ரசாத் என்னும் ஜீவன்
சரீரம் விட்டு இவற்றை அடைகிறான் என்பதால் -ஏதத் அம்ருதம் -இத்யாதி -பரஞ்சோதி வஸ்துவை அடைந்த பின்பு என்பதால்
உபாசனம் செய்து கர்மங்களை தொலைத்த பின்பே அடைந்து பகவத் கிருபையால் இவற்றை அடைகிறான் – ஸ்வதக நிருபாதிகமாக பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும்

1-3-19-அன்யார்த்த ச பராமர்ச -தகராதிகரணத்தில் ஏழாவது ஸூத்ரம் –
ஜீவனுக்கு பரம் பொருளின் கடாஷத்தால் உயர்ந்த தன்மை அடைவதை சொல்லி பரம் பொருளின் உயர்ந்த தன்மை காண்பிக்கப் பட்டது-
தத்வ ஞானம் வந்து -போக அபவர்க தத் உபாய -யதாவஸ்திதமாக அறிந்து -உதார -ஆச்சார்யர் -ஞானி ஆத்மை மே மதம் –
உதார -சரளா -எளிமை -பாவித்து -சந்தர்சன் -புராணரத்னம் -பராசரர் -ஜீவ பர யாதாம்யா ஞான பூர்வகமாய் –
பரஞ்சோதி உபசம்பாத்ய -சாஷாத் கரித்து–குண சாம்யம் பெறுகிறான் -ஜீவாத்மா பிரசங்கம் பரமாத்மாவின் பெருமையை காட்டவே இங்கு

1-3-20-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –
தஹரா ஆகாயம் சிறியது என்பதால் பர ப்ரஹ்மம் அல்ல எனபது சரியல்ல –
இதயத்தில் உள்ளான் -1-2-7 சூத்ரம் சொல்லவே சிறிய உருவம் உள்ளவனாக சொல்லப் பட்டது-
நவத்வாரா அயோத்யா -ப்ரஹ்ம புரம் தஹரம் புண்டரீகம் -ஞானிகள் உடைய திவ்ய மங்கள விக்ரஹம்-
சுலபமாக த்யான விசேஷமாவதற்காக தானே என்று முன்பே பார்த்தோம் –

1-3-21-அநு க்ருதே தஸ்ய ச –

முண்டகம் -யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோ நிம் ததா வித்வான்
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -என்பதால்
இயற்கையாக அந்த தன்மைகளைக் கொண்ட தஹரா ஜீவன் இல்லை பர ப்ரஹ்மமே-

ஸ்வரூப ஆவிர்பாவம் -ஆகவே தஹாராகாச பரப்ரஹ்மமே
நிரஞ்சனபரமம் சாம்யம் -அநுகாரம் இதனால் -அனுசரணம் -பின்னே செல்வது /
அநு கரணம் இங்கு -சஹஜமாகவே அவனாகவே -அவன் கிருபையால்
பஸ்யாக-ஆத்மா பிரத்தியாகாரம் உள்ளே உள்ள பர ப்ரஹ்மத்தை பார்க்கிறானோ –
நெஞ்சு என்னும் உள் கண்ணால் காணும் உணர்வு -யோகி ஹ்ருத் அந்தக்கரணம்
யதா ருக்ம வர்ணம் ஈச்ம ஜகத் கர்த்தாவை -புருஷோத்தமாவை -பார்க்கிறானோ -ததா வித்வான் –
புண்ய பாப விதூய நிரஞ்சனா -தோஷம் இல்லாமல் பரமம் சாம்யம் உபைதி -ஸாரூப்யம் இத்யாதி -சாதரம்யம் அடைகிறான் –

1-3-22- அபி ஸ்மர்யதே-

ஸ்ரீ கீதை -இதம் ஜ்ஞானம் உபாஸத்யா மம சாதர்ம்ய மாகதா–சர்க்கே அபி நோபே ஜாயந்தே
பிரளயே ந வ்யதந்தி ச -என்று இதே கருத்து சொல்லப் பட்டதே-

உபாஸ்யம் -திருவாராதானமும் ஒரு வகை -அதற்காக எளியவனாக்கி கொண்டு —
பகவத் புண்டரீகாஷா -ஹ்ருதயாகம் -யாகம் பூஜ்யாயாம் -செய்த பின்பே -திரு வாராதனம்– த்யான அர்ச்சனா ப்ராணாமமாதிகள்
ஞாபகப்படுத்தப்படுகிறது -ஸ்ம்ருதி /-156-அதிகரணம் நம் / சங்கரர் –அநு க்ருதி அதிகரணமாக பிரித்து
இந்த கடைசி இரண்டையும் கொள்வார்
இது தனியாக கொள்ள வேண்டாம் -கொண்டால் புனருக்த்தி தோஷம் உண்டாகும் -1-3-1-முன்பே பார்த்ததால்
ஜ்யோதி ரூபமாக பரமாத்மா -அத்யத்புத பரஞ்சோதி -முன்பே சொல்லி –
இதற்காக தனி அதிகரணமாக கொள்வது உசிதம் இல்லை -மூல கார திரு உள்ளபடியே வியாக்யானம் செய்ய வேண்டும்

————————-———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading