ஸ்ரீ பாஷ்யம்— 1-1-11– இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —-ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 )

———————

ஸ்ரீபாஷ்யம் – அதிக.11 சூத்.29-32 ::

இந்திரப்ரணதிகரணம் ::

ப்ராண: ததா அநுகமாத் – சூத் .1-1-29 (அதிக.11-சூத் . 29-32)

ஆகாசாதிகரணம், பிராணாதிகரணம், ஜ்யோதிர் அதிகரணம் போல இதுவும்,
பரமாத்ம பின்னமான வஸ்து ஜகத் காரணம் என்கிற விபர்யயத்தை போக்க வந்தது. எனவே இந்த 4 அதிகரணங்களும் ஒரு பேடிகா என்று பார்த்தோம்.

ஆகாச,ப்ராண , ஜ்யோதிர் சப்தங்கள் பிரஹ்ம வாச்சியமே ஒழிய, நம் கண்ணுக்குப் புலப்படுகிற பிரசித்தமான நீலவானமோ,
பிராண வாயு சஞ்சாரமோ, சூரியனோ இல்லை என்பதுபோல , இந்த அதிகாரணத்திலும் அதே-
”பிரசித்தவந் நிர்திஷ்ட”- நியாயத்தின் அடிப்படையில், இந்திர சப்தம், தேவர்கள் தலைவனான தேவேந்திரனைச் சொல்லாது,
பரமாத்மாவையே சொல்லும் என்பதாக இங்கு

விஷய வாக்கியம் :
கௌஷீதகி பிராஹ்மணத்தில் உள்ள பிரதர்தன வித்யாவைப் பற்றியது. இது தசோபநிஷத் கணக்கில் இல்லாவிட்டாலும்,
சங்கராச்சாரியார் அநுவாகம் பண்ணியிருக்கிறபடியால் , பரபக்ஷ பிரசங்காது , அனுசந்தேயம்.
தவிர, ஸுபாலோபநிஷத், ஸ்வேதஸ்வேதர உபநிஷத், அந்தர்யாமி பிராஹ்மணம் இத்யாதி ஸ்வகோஷ்ட்டி விசாரணீயம்.

கௌஷீதகி உபநிஷத், ருக்வேத சாகையைச் சேர்ந்தது. சாங்காயன ஆரண்யகத்தின் ஒருபகுதி.
கோஷீதகி ஆரண்யகத்திலுள்ள 15 அத்தியாயத்தில், 4 அத்தியாயங்கள் கௌஷீதகி உபநிஷத் பாகமாகும். பத்ய, கத்ய ரூபத்தில் அமைந்தது.
கத்ய, பத்ய மயம் காவியம்
சம்பு இத் அபிதீயதே.
இந்த, 4 அத்தியாயங்கள் முறையே 6, 15,9,20 கத்யங்களைக் கொண்டவை.
பிரதர்தன வித்யா என்பது, 3வது அத்தியாயத்தில் வருமது .
பிரதர்தனன் என்கிற ராஜாவுக்கு தியான விஷயமாக, இந்திரன் செய்த உபதேச பாகம்தான் இங்கு பேசப்படுகிறது.

பிரியம், ஹிதம் :
கிம் கர்ம ? கிம் அகர்மா? கவையோர் தத்ர மோஹிதா:
லௌகிக கர்மாக்கள்
பிராம்மண்ய பிரயுக்த கர்மாக்கள்
ஸ்ரீவைஷ்ணவ பிரயுக்த கர்மாக்கள்
எது எவ்வளவு தூரம் செய்ய வேண்டும் என்பது, பண்டிதர்களுக்கு கூட புரியாத புதிர்.
நம்முடைய மந்த புத்திக்கு, எது ஆத்மாவுக்கு பிரியம் எது ஹிதம் என்று அறிய முடியாதாகையால்,
அதை பகவானே செய்யக் கடவன். இதே விஷயத்தை, பிரதர்தன மஹா ராஜா, இந்திரனை வேண்டுகிறான்.

”யம் தம் மனுஷ்யாய ஹித தமம் மன்யது தமேவ பிரஸீத” என்று வேண்ட,
இந்திரன் ”த்வமேவ மாம் வரம் விருணீஷ்வ ” , ”த்வாம் மாம் விஜாநீத ” என்று சொல்வதாக அமைந்த இடம்
”ஸஹோவாச பிரானோஸ்மி பிரக்ஞாத்மா தம் மாம் ஆயுர் அமிருதம் இத் உபாஸ்வ”
நானே பிராணன். நானே க்ஞான ஸ்வரூபமான ஆத்மா. இந்திரனாக இருக்கக் கூடிய என்னையே அமிருதத்வ பிராப்திக்கு –
மோக்ஷ உபாயமாய் பற்றக்கடவாய். இதுவே உனக்கு ஹித தமமானது என்று சொன்னான்.

சித்ரயா யஜேத பசு காம:-ஜ்யோதிஷ்ட ஹோமேன ஸ்வர்க்க காமோ யஜேத
என்பதுபோல அல்லாமல்
மீமாம்ஸா ஸாஸ்திரத்தில் பலனைச் சொல்லாமல் கர்மாவை விதித்தால்,
தத் ஸ்வர்க : ஸர்வான் பிரதி அவிசிஷ்டத்வாத் – அதற்கு ஸ்வர்க்கம் தான் பலம் என்பது பொதுவான விதி.
எனவே எல்லோருமே ஆசைப்படக் கூடிய அமிருதத்வ பிராப்தி உபாய: ஹித தமம்

எது காரணமோ அது அமிருத்வ பிராப்திக்கு உபாயம். எது அமிருத்வ பிராப்திக்கு உபாயமோ, அதுவே உபாஸ்யம்.
இங்கு பிரசித்த ஜீவா பாவ இந்திரனே மோக்ஷித்துக்கு உபாயம் என்று சொல்லப்பட்டதால்
இந்திர பிராண : பரமாத்மா இல்லை. ஜீவாத்மாவே என்பது

ஸம்சயம்:
பிரதர்த்தன சம்வாதம் இந்திரன் ”மாம் உபாஸ்வ ” என்று தன்னைக்காட்டி சொன்னபடியால்,
இந்திர பிராண ஸ்ப்தங்கள் , தேவர்கள் தலைவனான இந்திரனையே குறிக்கும், பரமாத்மாவைக் குறிக்காது என்பது பூர்வ பக்ஷம் .

சித்தாந்தம் :
ப்ராண: – இந்திர பிராண சப்த நிர்திஷ்ட : ந ஜீவா மாத்ரம் . இந்திரா: பிராண: என்ற இரண்டு சொற்களாலும்
குறிக்கப் பட்டவன் ஜீவன் இல்லை. ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டவனான பரமாத்மா தான் – எப்படி ?என்றால்
ததா அநுகமாத் — முன்னும், பின்னுமாக வரும் வார்த்தைகள்,
ஸ ஏஷ : பிராண ஏவ பிரக்ஞாத்மா ஆனந்த: அஜர : அமிருத : என்பதான சப்தங்கள் சாமான்யாதிகரணத்தாலே பரமாத்மாவுக்கே ஏற்கும்.
ஆக, இந்திரன், பிராணன் என்கிறது இந்திரனுக்கு அந்தர்யாமியாக உள்ள, பரமாத்மாவையே குறிக்கும்.

————

இதற்கு எதிர் கேள்வி கேட்பதாக அமைந்த பூர்வ பக்ஷம் சூத்.

1-1-30. ந வக்து: ஆத்மோபதேசாத் இதி சேத் , அத்யாத்ம சம்பந்த பூமா யஸ்மின்

ந –
இந்திர பிராண சப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று சித்தாந்திகள் சொல்வது தவறு.

வக்து: ஆத்ம உபதேசாத் –
வக்தாவான இந்திரன் ”த்ரீ சீர்ஷாணம் த்வஷ்டா வாதார்பிஹி” ”மாம் உபாஸ்வ” , ”மாம் ஏவ விஜானீத ” என்று
தன்னுடைய வார்த்தைகளாக சொல்லியள்ள படியால்

முக்கிய பிரயோகம் – literal meaning
கௌண /லாக்ஷணிக பிரயோகம் -;implied meaning
உ.ம். கங்காயாம் கோஷ: என்றால் கங்கா தீரே கோஷ :
ந விதெள பர சப்தார்த்த: என்பது மீமாம்ஸா நியாயம்.
விதி வாக்கியங்களில் derived meaning / கௌண பிரயோகம் கூடாது. முக்கிய பிரயோகமாவே கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
”மாம் உபாஸ்வ ” என்பது விதி வாக்கியம் . எனவே அந்தர்யாமியான பரமாத்மாவை சொல்வதாக கருத்தாக் கூடாது என்பது பூர்வ பக்ஷம்

இதி சேத் –
இந்த பூர்வ பக்ஷம் சரிப்படாது.

அத்யாத்ம சம்பந்த பூமா ஹி யஸ்மின் —
ஆத்மன்யேவ முக்கிய விருத்த: பரமாத்மா. ஆத்மாநம் ஆகிருத்ய அத்யாத்மம். பரமாத்மாவுக்கே அசாதாரணமான
ஆனந்த: அஜர : அமிருத : என்பதான சின்னங்களை யிட்டு சொல்லித் தன்னை இந்திரன் காட்டி இருப்பதாலும் ,
எப்படி வண்டி சக்கரத்தின் ஆரங்கள் அதன் மத்தில் இணைக்கப் பட்டுள்ளனவோ,
அதுபோல பூதங்கள் எல்லாம் ஆத்மாவிலும், ஆத்மா பரமாத்மாவிலும் பர்யவாசிக்குமாகையாலும் ,
இந்திர, பிராண சப்தம் அவனுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவையே சேரும்.
அவன்தான் ஶ்ரீமன் நாராயணன். அவனே இந்திர ப்ராணன்.

ஸ்வாயத்தே சப்த பிரயோகே , கிமிதித் அவாசகம் பிரயுஞ்ஜீதா ? — பேசக்கூடிய வார்த்தை நம் ஆதீனமாக இருக்க,
ஏன் சுற்றி வளைத்து பேச வேண்டும்?
இந்திரன் ”மாம் உபாஸ்வ ” என்று சொல்லாமல், ”மத் சரீரகம், பரமாத்மாநம் உபாஸ்வ ” என்று சொல்லி இருக்கலாமே என்றால்
அயம் உபதேச: சாஸ்திர திருஷ்டியா கிராஹ்யவது – சாஸ்திர திருஷ்டி படி என்றால்,
சரீர-சரீரி பாவ பிரயுக்தமாகவே ”அஹம் பிரஹ்மாஸ்மி ” அனுபவம் ஏற்படுகிறது.
”ஸோ-ஹம் ” என்கிற இந்த அனுபவம், வேத காலத்தில் வாம தேவர்க்கும், புராண காலத்தில் பிரஹ்லாதனுக்கும்,
சரித்திர காலத்தில் நம்மாழ்வாருக்கும் ஏற்பட்டது என்று கீழே பார்த்தோம்.

”த்ரீ சீர்ஷாணம் த்வாஷ்ட்ட ஹனனம் ” என்று இந்திரன் தன்னை காட்டி
”மாம் உபாஸ்வ ”, ”அஹமேவ விஜானீதா ” என்பன ”அஹம் பிரஹ்மாஸி ” என்கிற அநுபவ தசையில் நின்று
பேசினான் என்பதாகக் கொள்ள வேண்டும்.

”ஸோ ஹம்” என்கிற ”அஹம் பிரஹ்மாஸ்மி ” நிலையும் ,
”தாஸோகம் ” என்கிற சரீராத்மா நிலையம் ஒரு வியக்தியுள் பார்ப்பது, சரீரக சம்பிரதாயமான, விசிஷ்டாத்வைதத்தில் மட்டுமே சாத்தியம்.
அத்வைதத்தில் ”தாச” பாவமும் , துவைத்ததில், ”அஹம் பிரஹ்ம” பாவமும் கூடா வழக்கு.

அத்வைதி -ஸோஹம்/ விசிஷ்டாத்வைதி-தாஸோஹம்
அத்வைதி -ஸதாஸோஹம் / விசிஷ்டாத்வைதி- தாஸதாஸோஹம்.

பிரத்யகர்தஸ்ய பரமாத்மநி பர்யவாஸாநா – என்று இரண்டுமே சமன்வயம் ஆவது பகவத் இராமானுஜ சித்தாந்தத்தில் மட்டுமே எனலாம்.
இதுவே சமாதி ஸ்திதி -; ஸோஹம் ஸ்திதி – Raising above bodily state and bestowed in நிஷ்கிருஷ்ட ஆத்ம ஸ்திதி.
வியுத்தான ஸ்திதி – தாஸோஹம் ஸ்திதி – Cognizant of bodily state and endowed in விசிஷ்ட ஆத்ம ஸ்திதி. வியுதானம் = down grade.

எனவே, இந்திரன் , பிரதர்தனனுக்கு ”மாம் உபாஸ்வ” என்றது,
சாஸ்திர திருஷ்டியில் செய்த உபதேசம் ஆகும். வேத காலத்தில் வாம தேவருக்கு ஏற்பட்ட
” பிரதிபதே அஹம் மநுரபவம் சூரியஸ்சாஹம்” என்பதான அனுபவம் போலே நிஷ்கிருஷ்ட ஆத்ம ஸ்திதியில் நின்று பேசின வார்த்தை.

எல்லா சப்தங்களும் பிரஹ்மத்திடத்தில் பர்யவசிக்கும் என்று சொன்னால் ,
பிறரைப் பார்த்து த்வேஷத்தில் சொல்லும் ‘ஹம்’ ‘த்வம்’ இத்யாதி நீச சப்தங்களும் பரமாத்மாவைச் சேருமா ? என்றால்
பிரஹ்ம தாஷா: பிரஹ்ம தாசா: பிரஹ்மைமே கிதவா: என்று ஏழை, ஏதலன், கீழ்மகன் இவர்களிடத்திலும்,
ஞானியானவன் பிரஹ்மத்தையே பார்க்கிறான்.
வித்யா வினய சம்பந்நா: கவி ஹஸ்திநி–ஸுநீசி ஸ்வபாகேச பண்டிதா: சமதர்ஸின:
யார் பண்டிதன் என்றால்
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காம சங்கல்ப வர்ஜிதா:-ஞானாக்நி தத்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா:
கியாதி லாப பூஜைகளுக்கு ஆசைப்படாமல், பல அபேக்ஷை இல்லாமல், பரமாத்ம ஞானத்தால் கர்மங்கள் தகிக்கப்பட்டவனை
பண்டிதன் என்று சொல்லலாம். அப்படிப்பட்டவர்கள் சொல்லும் அபசப்தங்களும் பிரஹ்மத்திடமே போய்ச் சேரும்.
எனவே அவர்கள் அதிலிருந்து விலகி இருப்பர்.
ஸர்வம் கல்விதம் பிரஹ்ம, ஸர்வம் பரமாத்ம அந்தரயாமிதம் என்பதாய்
“ஸோஹம்” என்கிற ஆந்தர-ஞானம் சரீர-ஆத்ம பாவத்தை ஒத்துக் கொண்டால் மட்டுமே சரிபடும்.
பாஹ்ய-பிரஜ் ஞை இருக்கும்போது அவர்களுக்கே “தாசோகம்” என்கிற நினைவுமாகிற, இரண்டு நிலையும் ஒரு வியக்தியிலே உண்டு.

———–

1-1-31 சாஸ்திர திருஷ்டியா து உபதேச: வாமதேவ வத்

யஸ்ததக்ரே விஷமிவ பரிணாமே அமிர்தோபம – ஹித தமம் என்பதாக கீதை.
யத் ஹிதம் மம தேவேச, தத் ஆக்ஞாபய மாதவா -> ஜிதந்தே ஸ்தோத்திரம்.
மனுஷ்யாய ஹிததமம் மன்யதே தமேவ ப்ரூயம்- என்று கேட்ட பிரதர்தன மஹா ராஜாவுக்கு,
இந்திரன் “மாம் உபாஸ்வ” என உபதேசித்தான். மாம் என்றது தன்னையா? தனக்குளிருக்கிற பரமாத்மாவையா? என்பது கேள்வி.
காரணம்-இந்திரன் ஒரு ஆதிகாரிக புருஷன். இந்திர பதவியில் இருக்கிற கர்ம சம்பந்தமுடைய ஜீவாத்மா.
ஒரு ஜீவாத்மா இன்னொரு ஜீவாத்மாவை உபாசிப்பது சரிபடாது அல்லவா? நாமக்கு எது ஹிதம் என்றால்,
“நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி” என்று விஜர: விமிருத்யு: விசோக: என பரமாத்ம சாம்யத்தை வேண்டி,
பரமாத்மாவையே உபாசிக்க வேண்டும். எனவே “மாம் உபாஸ்வ” என்பதற்கு பரமாத்மாவை உபாசிக்க வேண்டும்
என்பதாக புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் எப்படி? என்பதாக பூர்வ பக்ஷம் –

பரமாத்மாவுக்கு அசாதாரணமான விஷயங்களை கூடவே சொல்லி இருப்பதால்,
இந்திர பிராண சப்தத்துக்கு பரமாத்மா என்றுதான் அர்த்தம் , என்ன
துவஷ்டாவின் பிள்ளை, துவாஷ்டாசுரனைக் கொன்றவன் எனவும் கூறி இருப்பதால் ,
வக்து: ஆத்மோபதேசாத் – உண்மையில் இந்திரன் தன்னைச் சொல்லிக் கொள்வதாவன்னோ தேறும்? என மீண்டும் ஆஷேபம்

ஆத்யாத்ம விஷய பூமா – எப்படி ஒரு வண்டி சக்கரத்தின் ஆரம் (spokes) அதன் அச்சோடு இணைக்கப்பட்டு சுழல்கிறதோ அதுபோல,
ஆத்மாவின் அம்சங்கள் வெகுவாக பரமாத்மாவையே சேரும் என்பதால், இந்திரன் தன்னைச் சொல்லிக்கொண்டாலும்
அது பரமாத்மாவரை பர்யவசிக்கும் என்பது சமாதானம். பூமா = பஹுத்வம்.

விஸ்வ ஜிதா யஜேத – என்கிற பூர்வ மீமாம்ஸா சூத்ரத்தில் காட்டப்பட்ட
“விஸ்வ ஜிதா ” நியாயம் = எந்த இடத்தில் யார் அதிகாரி, என்ன பலன் என்று சொல்லப்பட வில்லையோ,
அங்கு ஸவர்கப் பிராப்தி தான் பலம். ” தத் ஸ்வர்க: ஸர்வாந் அவிசிஷ்ட:” என அனைவருக்கும்
ஸ்வர்கப் பிராப்தி இஷ்டமாய் இருக்கக் காண்கையாலே, அதற்கு இச்சிப்பவர்கள்தான் அதிகாரி என்கிற விஸ்வஜிந் நியாயப்படி
ஹித தமமான மோக்ஷ பிராப்த்திக்கு பரமாத்மாவே கடவன். பலத்தை வைத்து, உபாஸ்யம் இந்திரன் என்றாலும்,
இந்திர சரீரியான பரமாத்மாவையே குறிக்கும்.

எந்த ஜீவாத்ம விஷயத்தில் பகவதநுகிரகம் (உந்மீஷதி= ஊர்துவம் நேதும் இச்சதி – நயாமி பரமாம் கதிம் என்பதாக) பிரசவிக்குமோ,
அவர்களைக் கொண்டு ஸாதுகாரியங்களையும்,
யார் விஷயத்தில் நிக்ரகாவேசமோ, அவர்களைக் கொண்டு துஷ்ட காரியங்களையும் செய்விக்கிறான் என்கிற
ஸர்வ நிர்வாஹக சாமர்த்தியம், பகவானுக்கன்றி இந்திரன் போன்ற ஜீவாத்மாவுக்கு இல்லை என்பதாலும்,
“மாம் உபாஸ்வ” என்றால் பரமாத்மா ஏவ உபாஸயம் என்று கொள்ள வேண்டும்.

அப்படியானால், ஜீவாத்மாவுடைய அனைத்து காரியங்களும் தெய்வ இச்சை – பூரவ நியோஜிதம் (predetermined) மட்டுமா?
ஸ்வயிச்சை (free will) என்பது கிடையாதா? என்றால் புருஷ பிரயத்ன சார்தக்கியம் பகவதநுகிரகத்தாலே என்றே சொல்லவேண்டும்.
Human efforts are needed but that will fructify, if only God destines என்பதே சாரம்.
ஜீவாத்மாவுடைய புண்ய பாப பலிதமான கர்த்ருத்வம், பகவத் அதீனம். இதன் வியாபகம் அதிகாரி பேதத்துக்கேற்ப மாறும்.
சைதன்யா உசித பிரதம ப்ரவிருத்தி ஸ்வாதந்திரியம் எல்லா ஜீவாத்ம்மாவுக்கு உண்டு.
ஆனாலுல் அதை உத்தரோத்ரம் நடத்துவது பகவததீனம் அத்தனையே.
கடவுளை நம்பாத நாத்திகனும், விதி என்ற பெயரால் இத்தை ஒப்புக் கொள்வதைப் பார்க்கலாம்.

துவமேவ ஸாது கர்ம காரயிதும் இமே லோகேப்பிய : உந்மீஷதி
துவமேவ அஸாது கர்ம காரயிதும் இமே லோகேப்பிய: அதோன்மீஷதி
இதி ஸர்வஸ்ச கர்மண: காரயித்தும்ச்ச பரமாத்மா

நாம் கெட்ட விஷயங்களைச் செய்யும்போது, பகவான் அதற்கு துணையோ ?
ஸர்வ பூத ஸுஹ்ருதனான அவன் தீச்செயலில் ஒருவனைச் செலுத்தி, பாபத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்கிற கேள்வியும் எழலாம் .
அது அவன் விஷயத்தில் வைஷம்யத்தைக் காட்டாதா என்றால்,
அவன் நம்முடைய கர்ம பலவியாப்திக்கு அநுசரணையாக செய்கிறானே ஒழிய, நைர்கிருண்யத்தால் அன்று.

மஹாபாரதத்தில் ஏகலைவனுடைய விருத்தாந்தத்தில், துரோணர் அவன் கடைவிரலை வாங்கியது மேல் ஜாதி ஆதிக்கியத்தால்
என்பன போன்ற தூஷணங்களுக்கு இடமாக, அவனுக்கு ஒரு அநியாயத்தை பண்ணினது,
பின்நாளில் வரப்போகும் பாரதப்போரில் தர்மம் நிலைபெற, இவன் கர்ணனைப்போல் துரியோதனன் பக்கல் விலைபோகாமல்
இருக்க செய்யப்பட்ட துரோகம்
அதுவும், பகவத் சங்கல்பத்தை அநுசரித்தே, ஒரு நாட்டைக் காக்க சிலரைப் பணயம் வைக்கலாம் என்பதுபோல.
When greater melody is fixed, lesser is scarcely less felt.

ஆனந்த: அஜர : அமிருத : என்பதான பரமாத்மாவுக்கே அசாதாரணமான சின்னங்களை யிட்டு சொன்னதோடல்லாமல்
ஏஷ லோகாதிபதி: ஏஷ ஸர்வேஷ: ” என்றும் காட்டி ”மாம் உபாஸ்வ ” என்று ஏன் சொல்லவேண்டும்?
ஸ்வாயத்வே ஸப்த பிரயோகம் கிமித் அவாசகம் பிரயுஞ்ச ? என்கிற பூர்வ பக்ஷம்- ஆக்ஷேபம் முடிந்த பாடில்லை.

இங்கு ”மாம் ” என்பது ”அஸ்மத் ” (Me) சப்தத்தினுடைய 2ஆம் வேற்றுமை உருபு.
”மம ” (My) என்பது 6ஆம் வேற்றுமை உருபு . ”அஹம் ” என்றால் யாரு?
அஹமர்த்த : ஆத்மத்வ வாதம்
அஹமர்த்த : அநாத்மத்வ வாதம் –என்பதாக இரண்டு பக்ஷம்.
ஜிக்ஞாசா அதிகரணத்தில் அஹமர்த்தம் ஆத்மா என்று பார்த்தோம். அத்வைதிகள் அஹமர்த்தம் ஆத்மா இல்லை என்பர்.
அஹமர்த்த விநாசம் மோக்ஷம் என்பது அவர்கள் வாதம்.
ஆத்ம-பரமாத்மாவுக்கான சம்பந்தம் சரீர-சரீரி பாவமாகையால், அஹமர்த்தம் ஆத்மாவோடு நில்லாமல்
சரீரியான பரமாத்மாவளவும் காட்டும் என்பதான விசிஷ்டாத்வைத சித்தாந்ததுக்கு உயிரான சூத்ரம் இது.

வாமதேவர் பகவத் ஸாட்சாத்காரமான ஒரு மஹரிஷி. அவர் “எல்லாம் நான்தான்” என்றால் வாஸ்தவமான வார்தையாக இருக்கும்.
அடியேனைப் போன்ற அல்பஜ்ஞர்கள் அதே வார்த்தையைக் சொன்னால், அது புரட்டு அல்லால் வேறு இல்லை.
எல்லாம் நான்தான் என்கிற வார்த்தை “அஹம் பிரஹ்மாஸ்மி” என்பதான அநுபவம்.
“அஹம் அநுரபவம் சூர்யஸ்ச” (பிரஹதாரண்யம்),
” கட்சீவாந் சிரஸ்ய விப்ர:” (ருக்) என்பது அவர் வார்த்தை.
இதில் பிரஹ்ம சப்தம் குறிப்பிடப்படவில்லை யானாலும் , அவனுக்குறிய சின்னங்களைக் கூறினபடியால்,
இது “அஹம் பிரஹ்மாஸ்மி” அநுபவம்.

“நான்” என்கிற வியக்தித்வத்தில், மநுவாக, சூரியனாக இருக்கிற தன்மையும் (தர்மம்) சேருமானால்,
அதற்கு அஹம் பிரஹ்மாஸ்மி போன்ற அநுபவம் என்று சொல்லலாம். அப்போது இரண்டு தர்மமும் சத்யமானதாகவே
சாமான்யாதிகரணத்திலே இருக்க வேண்டும்.
அஹம் என்பது பொய்யானால், பிரஹ்மா “அஸ்மி” என்று சொல்லப்போகாது.

சத்ரி, குண்டலி, வாஸஸ்வி, தேஜஸ்வி தேவதத்த: என்ற வார்த்தை ஏற்புடைத்து.
சத்ரி, குண்டலி, வாஸஸ்வி, ஸ்த்ரீ: தேவதத்த என்பதான வார்த்தை சரிபடாது,
காரணம் பும்ஸ்துவமும், ஸ்த்ரீத்வமும் ஒரே வியக்தியில் இருக்க முடியாது.
சொல்லப்பட்ட 5 தர்மங்களில், தேவதத்தனாக இருக்கிற தர்மத்தோடு, ஸ்த்ரீத்வமாகிற-மித்யாபூதமான ஒரு தர்மம் சேர்ந்தாலும்,
அந்த ஞானம் அயதார்த்த ஞானமாகும்.
அதுபோல, அத்வைத சித்தாந்ததின்படி, அஹமர்த்தம் ஆத்மா இல்லை, அது மித்யா என்றால்-
சத்யமான பிரஹ்ம தத்வத்தோடு/தர்மத்தோடு அசத்யமான ஆத்ம தத்வம்/தர்மம் சேர்வதால் ஏற்படும் ஞானமும் அசத்யமாகும்.
அஹமர்த்தம் ஆத்ம தத்வத்தை சொன்னால் அல்லது “அஹம் பிரஹ்மாஸ்மி” என்கிற அநுபவம் சாத்யமாகாது.

ஆத்ம ஞானம் கை வராதவர்களுக்கு, ஆத்மா = தேகம் (நான்); அஹம் = தேகம்.
ஞானிக்கு , நிஷ்கிருஷ்ட ஆத்மா – தேகம் (இது) ; அஹம் = ஆத்மா.
சமாதி ஸ்திதியில்
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி, பரமாத்மா (சரீரி) – ஆத்மா (சரீரம்) ; அஹம் = பரமாத்மா.
மூன்றாவது நிலையே “அஹம் பிரஹ்மாஸ்மி” என்கிற அநுபவத்தில் பிரத்யகரத்தம் பரமாத்மநி பர்யவஸாநாத்.
பிரத்யக் = ஸ்வயம் பிரகாஸ்யம். தான் ஒளி விடுவது. தனக்கு ஒளி விடுவது.
பராக் = ஸ்வஸ்மை பிரகாஸ்யம். தான் ஒளி விடுவதோடு, தனக்கும் பிறர்க்குமாய் ஒளி விடுவது.

இந்திரனைத் தவிற இப்படிப்பட்ட அநுபவத்தை, வேத, புராண, சரித்ர காலத்தில், கண்டவர்கள் குறிப்பாக சொல்லப் போனால் :-
வாம தேவர் – “அஹம் அநுரபவம் சூர்யஸ்ச” (பிரஹதாரண்யம்), ” கட்சீவாந் சிரஸ்ய விப்ர:” (ருக்)
பிரஹ்லாதன் – “ஸ ஏவ அஹம், மத்த ஸர்வம், அஹம் ஸர்வம், மயி ஸர்வம்”
நம்மாழ்வார் – கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
அபின்ன நிமித்த, உபாதான, சககாரி காரணம் பிரஹ்மம் என்பதாகச் சொன்னவர்.

இந்த திருஷ்டியில் “மாம் உபாஸ்வ” என்பதான இந்திரனுடைய உபதேசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

——–

இந்த திருஷ்டியில் நம்முடைய சித்தாந்ததுக்கே உயிரான சூத்ரம் இது எனலாம்.

1-1-32 ஜீவ முக்கிய பிராண லிங்காத் ந , இதி சேத் , ந உபாசாத்ரைவித்யாத் ஆஸ்ருதாத் அஸீதத்வாத் இஹதத் யோகாத் ::

ஜீவ பிராண லிங்காத், ந –
இவ்வளவு சொன்னாலும் சமாதானம் ஆகாத பூர்வ பக்ஷம் .
“மாம் உபாஸ்வ” என்று சொன்னதற்கான விளக்கங்கள் சரி,
ஜீவாத்ம லிங்கமான ‘த்ரீசீர்ஷாணம் த்வாஷ்ட ஹநனம்’ என்பதை ஏன் சொல்ல வேண்டும்? என மீண்டும் ஆஷேபம் எழுப்ப,

சிலசமயம் பெருமையான விஷயங்களை தன் பேரிலும், தானே செய்திருந்தாலும் அடாது செய்தன ‘பகவதிச்சை’ என
அவன் பேரில். பழியிடுபவர்கள் உண்டு. அதுபோல இந்திரன் இங்கு பேசியிருப்பனோ? என்பது கேள்வி.
இதிசேத் ந –
அங்கனில்லை.
உபாசநாத் திரைவித்யாது-
பகவத் உபாசனம் மூன்று வகையாக பண்ணலாம்.

1. ஸ்வரூப உபாசனம் –
நேராக பகவானை உபாசிப்பது. ”சத்யம், க்ஞானம், ஆனந்தம் பிரஹ்ம – ஆனந்தம் பிரஹ்மே திவ்ய க்ஞானத் ” இத்யாதி
குணாஸ்ரய ஸ்வரூப அநுசந்தானம் .
ஒவ்வொரு பிரஹ்ம வித்யையிலும் ஒவ்வொரு பகவத் குணத்தை தியான விஷயமாக சொல்லியுள்ளாதால்,
இப்படி எல்லா வித்யைகளையும் ஒருவன் அத்யேனம் பண்ணவேண்டுமா? என்றால் இல்லை.
எல்லா பிரஹ்ம வித்யைக்கும் பகவத் பிராப்தியாகிற பலம் ஒன்றுதானாகையால்,
அவரவர் இச்சை, சக்திக்கு உசிதமான ஒரு பிரஹ்ம வித்யையே போதுமானது, விகல்ப : அவிசிஷ்ட பலத்வாத் .

2. சித் சரீரக உபாசனம் — தன்னதேயான ஜீவாத்மாவுக்கு அந்தர்யாமியாக உபாசனம்.
போக்த்ரு வர்க துவாரா – குறிப்பாக இங்கு சொல்லப்பட்ட இந்திரனுக்கு அந்தர்யாமியாக அநுஸந்தானம்.

3. அசித் சரீரக உபாசனம் — கல்லு, கட்டை போன்ற (பிரகிருதிக்கு) அசித்துக்கு அந்தர்யாமியாக உபாசனம்.
ஆரண்ய ரூபமாக, ஜல ரூபமாக, பிரசாத ரூபமாக,கோவர்தன ரூபமான உபாசா – போக்கிய போபோகோபகரண வர்க துவாரா –
சொல்லப்பட்ட பிராண வாயுவுக்கு அந்தர்யாமியாக அநுஸந்தானம் .

போக்த போக்கியம் பிரேரிதாரம் ச மத்வா |
ஸர்வம் புரோக்தம் த்ரிவிதம் பிரஹ்ம ஏதது ||
என்பதாக நம்முடைய சம்பிரதாயம் போக்தா (சித்து), போக்கியம் (அசித்து), பிரேரிதா (ஈஸ்வரன்) என்கிற தத்வ த்ரய வாதம்.
அவை மூன்று தத்துவங்களாக இருந்தாலும், மற்ற இரண்டும் ”த்ரிவிதம் புரோக்தம்
பிரஹ்ம ” என்று பிரஹ்மத்தினிடத்திலேயே பிரகாரமாக இருப்பன.
சித்தசித் விசிஷ்டம் பிரஹ்ம ஏகமேவ தத்வம் என்கிற ஸ விசேஷ அத்வைதம் நம்முடையது.

ஏக தத்வ வாதிகள் 4 பேர் .
பிரஹ்ம விவர்த்த வாதம் – சங்கரர்.
விஜ்ஞான விவர்த்த வாதம் – யோகாசார பௌத்தன்.
சூன்ய விவிர்த்த வாதம் – மாத்யமிக பௌத்தன்.
சப்த விவர்த்த வாதம் – பர்த்ரு ஹரி

த்வி தத்வ வாதிகள் – சாங்கியர்கள்
பிரகிருதி (Matter) + புருஷன் (Mind)

”ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ரே ஆஸீத் ” என்ற வாக்கியத்தில்,
அக்ரே – சிருஷ்டிக்கு முன்னால் , ஸ்திதிக்கு வெகு பின்னால் , மூன்று தத்துவமும் – ஒரு தத்வமேயோ என்று சொல்லாம்பட்டி –
”ஸது” என்ற பெயரோடு இருந்தது.
ஏக மேவ அ-திவிதீயம் – ஸ்வேநாபி ஸ்வ சரீரதயா பிரதத் பிரதிபத் அநர்ஹ ஸூக்ஷ்மதஸா சமம் –
தனக்கும் தன் தன்மை அறியக்கில்லா – நாம ரூப விபாக மற இருக்கிற பிரளய கால ஸ்திதி — விசிஷ்டேன ஏகம் .

ஸ்வரூப உபாஸனம் மட்டுமே போதாதா? மற்ற இரண்டும் எதற்கு? என்றால்
ஸ்வரூப உபாஸனம் கடினமானது. உபாசனம், தியானம் இவை செய்ய முதலில் தரிசன சமானாகார அனுபவம்
( நெஞ்சென்னும் உட்கண்ணால் காணும் உணர்வு ) ஏற்பட வேண்டும். பிறகு தான் அதைக் கொண்டு அவனை ஸ்மரிக்க முடியும்.

பிள்ளை உறங்காவில்லி – தனுர் தாசர் – சரித்திரத்தை இங்கு ஸ்மரிப்பது .
மனைவியின் கண்ணழகுக்கு வாட்டம் வராமல் குடைப்பிடிப்பவரை , பெரிய பெருமாள் கண்ணழகை சேவிக்கப் பண்ணி ,
அவரை நம்பெருமாள் மெய்க்காப்பாளராக , பகவத் ராமானுஜர், மாற்றிய விருத்தாந்தம் போல் ஈடுபாடு ஏற்பட
அர்சா அவதாரம் உகந்ததும், ஸுலபமானதும் ஆகும். இது அசித் சரீரக உபாசனா கோடியிலே சேரும்.

சித் சரீரக துவரா உபாசனமாவது, தம்முடைய ஆத்மாவுக்கு அந்தர்யாமியாக இருக்கிற பிரஹ்மத்தை தியான, யோக முறையில் ஆராதிப்பது.
அல்லது யாக, யக்ஞங்கள் மூலம் செய்யப்படும் அந்தர்யாமி ஆராதனம்.
ஆகாஸாத் பதித்தம் தோயம் யதா கச்சதி ஸாகரம் |
ஸர்வதேவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி ||

அதிகாரி பேதேந உபாஸாத் த்ரை வித்யேந. இதற்கு உபநிஷத அங்கீகாரமும் உண்டு என்பதாக பூர்வ பக்ஷத்துக்கு சமாதானம்.

பகுஸ்யாம் பிரஜாயே ஏதி
இதகும் ஸர்வம் அஸ்ருஜ
தத் ஸ்ருஷ்ட்வா ததேவா அநுபிராவிஸது
தது அநுபிரவிஸ்ய தத் ஸச்சா பவது
நிருக்தஞ்ச அநிருக்தஞ்ச
நிலயநஞ்ச அநிலயநஞ்ச
விஜ்ஞானஞ்ச அவிஜ்ஞானஞ்ச
சத்யம்ச அநிருதம்ச சத்யமவபவது
சத்யமும் (நிஜமும்) அநிருத்மும் (பொய்யும்) சேர்ந்து சத்யமாயித்து என்றால் அசத்கல்பமாய் இருந்த சித்து, அசித்து
இரண்டினுள்ளும் அவைகளின் ஸத்தாபிரயுக்தமாக புகுந்து நாம ரூபே வியாகரவாணி என்பதாக ஸிருஷ்டியும்,
அவனுடைய அந்தர்யாமித்வமும் கொண்டு சித்ரூபமான உபாசனமும், அசித் ரூபமான உபாசனமும் ஸ்ருதியை அநுசரித்தே எனலாம்.

இந்திரன் “மாம் உபாஸ்வ” என்றாலும், இந்திர சரீர அந்தர் வர்தியான பரமாத்ம உபாசனமே செய்யத் தக்கது.
ஏதத் உக்தம் பவதி.
இதி பிரதமஸ்ய அத்யாயஸ்ய பிரதம பாத:

இந்திர பிராணா அதிகரணம் -முதல் பாதம் இறுதி அதிகரணம் -தேவதைகளுக்கு அரசன் -இதுவும் பர ப்ரஹ்மத்தை காட்டும் -கௌஷீகித்த உபநிஷத் சாரம் –
தச உபநிஷத்துக்களில் சேராது -இது -ரிக் வேத உபநிஷத் -கௌஷீதக ப்ராஹ்மணோ உபநிஷத் -சம்ஹிதா / ஆரண்யம் /ப்ராஹ்மணோ உபநிஷத் பாகங்கள் –
ப்ரதர்தன அரசன் இந்திரன் வாலப்யம் பெற்று உபாசனத்துக்கு கேட்க சொல்லுவது
ஜிதந்தே ஸ்தோத்ரம் -நித்யபடி திரு நாராயண புரத்தில்-ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஆரம்பித்து –ஹிதம் சுரேஷிடம் நமக்கு தெரியாதே
ராவணன் ஹிரண்யகசிபு போலே வரம் ஆல்பமாக பெற்று முடியும் படி ஆகுமே
அஹம் அறியாதவன் -யத் ஹிதம் நீயே அறிவாய் அருளுவாய் என்று முடிக்கும்
மாம் உபாஸ்யம் என்பான் -இந்திரன் -ஹித தமம்-மாம் ஏவ விஜாநீயே-
பரம புருஷ ஏவ இந்திர பிராண இதுக்கும் காரணத்வமே உபாஸ்யத்துக்கு யோக்யம் என்பதால் –
அம்ருதத்வ பிராப்தம் -காரணத்வ வியாப்தம் என்பதால் -இதுவே சங்கதி நான்கு அதிகரணங்களுக்கும்
வித்யை அனுகுணமாக 4 ஸூ த்ரங்கள் இதிலும் -ஆதிகாரிக புருஷர்கள் இந்த்ராதிகள் -100 அஸ்வமேத யாகம் செய்து இந்திர பதவி பெறுவான்
பரிணாம வாதம் -நிரஸனம் த்வதிகள் சொல்லுவர் -தோஷம் -உபாதானம் -நாம் ஸ்வரூப ஸ்வ பாவ பரிணாமம் சொல்லுவோம்
உபாதானம் புரிவது சிரமம் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -நிமித்த காரணம் மட்டும் போதும் என்பர் த்வைதிகள் –
வேதாந்த சாஸ்திரம் விரோதிக்கும் –
வாதிராஜர் -ஹயக்ரீவர் ப்ரத்யக்ஷமாக வந்து பிரசாதம் கொடுத்து -மத்வர் அடுத்த இந்திர பதவி
வாதி ராஜர் வாயு பகவான் ஆவார் -ஆதிகாரிக புருஷர்கள் –
சங்கரர் -32 வருஷம் -782-820 சிலர் சொல்வார் –சிலர் தப்பாக -வித்யாராணர் -எழுதிய சங்கர விஜயம் விவரிக்கும் –
இந்திர சப்தம் ஜீவ விசேஷம் -பூர்வ பக்ஷம் -நானே பிராணன் -சாமா நாதி காரண்யத்தில் இந்திர பிராண —
பிராண இந்திர -பர ப்ரஹ்மம் -இரண்டு சப்தங்களாலும் -ஜீவா அர்த்தாந்தர பூதம் -ஆனந்த -ஸ்வரூபம் -ஞான ஸ்வரூபம் -அம்ருதம் ஜரா மரணம் இல்லாமல்
implied meaning -கங்கா தீரே தேசம் -மாஞ்சா க்ரோசம் போலே விதி வாக்கியங்களில் இவை கூடாதே –
ஆத்ம உபதேசம் சொல்லுவதால் அந்தர்யாமி சொல்லக் கூடாதே பூர்வ பக்ஷம்
ஸ்வரூபேண–சித்த சரியாக -அசித் சரீரி பகவத் உபாசனம் மூன்று வகை உண்டே -சித்தாந்தம் –
மாட்டை கை அடித்தது கைக்கு அதிதேவதை இந்திரனுக்கு பாபம் சேரும் -பூ வைத்த பலன் எனக்கே சொல்ல இந்திரன் வேஷத்தில் வந்து காட்டிய கதை
அத்யாத்ம சம்பந்தம் பூமா -பஹூத்த்வம் என்று -ஆத்மனி ஆதேயத்தயா சம்பந்தம் பரமாத்மா ஏவ –
பரமாத்மா அசாதாரண சம்பந்தம் அத்யந்தமா சம்பந்தம் என்றுமாம் -இத்தையே மாம் உபாஸ்ய -என்கிறார்
இரண்டாவது வர்ணக்கம் இது -ஸ்வர்க்க காமன் ஜோதிஷ்ட யாகம் -பூர்வ மீமாம்சை -விஸ்வஜின் நியாயம் –
பலன் சொல்லாமல் இருந்தால் சுவர்க்கம் பலன் என்பர்
ஹித தர்மம் மனுஷ்யருக்கு மோக்ஷம் தான் பரம புருஷார்த்த லக்ஷணம் தானாகவே இருக்கும் -உத்க்ருஷ்ட ஸ்ரேயஸ்
-இந்திரன் உபாசனையால் இது பெற முடியாதே ஜனார்த்தனன் ஒருவனே மோக்ஷ ப்ரதன்
கர்த்ருத்வம் ஜீவாத்மாவுக்கு இல்லை என்றால் விதி நிஷேத சாஸ்திரங்கள் வியர்த்தமாக போகுமே –
தெய்வ பிரயத்தனம் -புருஷ ஜீவ பிரயத்தனம் -இரண்டும் உண்டே -எல்லாம் பூர்வ நியோயிதம் இல்லையே –
ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் -அவனே
ஏஷ ஸர்வேஷா -அவனுக்கே உள்ள அசாதாரண லக்ஷணங்கள் -இந்திரா பிராண சப்தம் அவனையே குறிக்கும்
சாஸ்த்ரா த்ரஷ்டாயா -வாமதேவர்
அஸ்மத் அஹம் சப்தம் -மாம் -உபாஸ்யம் சொல்லி -அஹம் அர்த்தம் ஜீவாத்மா -அஹம் அர்த்த வி நாசம் புரிந்தால் மோக்ஷம் அத்வைதி
மோக்ஷ கதா பிரஸ்னம் -கந்தம் -சரீர சரீரி பாவத்தால் -அஹம் பரமாத்மாவையும் குறிக்கும் அஹம் ப்ரஹ்மாஸ்மி -ஸம்ப்ரதாயார்த்தம் –

சாஸ்த்ரா த்ருஷ்டாயா -வாமதேவயா –சம்பிரதாய ஸூத்ரம்-வாம தேவர் போலே -மாம் என்று பரமாத்மாவையே இந்திரன்
உபாஸ்யமாக கொள்ள சொல்கிறான் -அஹம் ப்ரஹ்மாஸ்மி
அஹம் ஏவ இதம் சர்வம் –
அவிபாத்தேனா திருஷ்டத்வாத் மேலே -வரும் -அஹம் ப்ரஹ்மாஸ்மி அனுபவம் -அஹத்வமும் இன்றைய நிலையும்-வாஸ்த்வம்
இரண்டும் பொய்யானால் சேராதே -அதனால் அஹம் ப்ரஹ்மாஸ்மி அத்வதாம் பாரமான சுருதி இருக்க முடியாதே
சாத்ரி குண்டலி தேஜஸ்வி தேவ தத்வா –தர்மங்கள் சேர்ந்து -உள்ள வியக்தி-என்றவாறு -ஸ்த்ரீத்வம் சொல்லி -அது மட்டும் பொருந்தாதே
யதார்த்த ஞானம் ஆகாதே ஒரே தப்பு இருந்தாலும் -அஹம் ப்ரஹ்மச்சாரி -கல்யாணம் ஆன பின்பு மாறும் -அஹம் அர்த்தம் ஆத்மா
சாமானாதி கரண்யம் வராதே -மித்யா பூதமான வார்த்தை இல்லை –
ஸ்த்தூலஹம் -தேஹாத்ம அபிமானத்தால் அஹம் உடம்பு என்று பிரமிக்கிறோம்
பரமை யோகி -சமாதி நிலை -இல்லை -ஆத்ம யாதாம்யா ஞானம் வந்த பின்பு -அறிகிறோம்
இது -உடம்பு -இதுக்கு சிரமமாக இருக்கு -சரீரம் ஸூ கம் துக்கம் அனுபவிக்காதே -ஆத்மாவுக்கு ஜுரம் வராதே
இது எனக்கு எப்படி சொன்னாலும் ஞானம் மாறாதே -சரீரம் /ஆத்மா /பரமாத்மா பர்யந்தம் அஹம் அர்த்தம் வருமே
மூன்று நிலைகள் -அந்தர்யாமியாக இருப்பதை அறிந்த பின்பு
அஹம் -பரமாத்மா -ப்ரத்யக் -ஆத்மா ஸ்வயம் பிரகாசம் -அவன் வரை -பர்யவசிக்கும்-
மம சரீரம் என்னுடைய சரீரம் -ஜீவாத்மா சரீரம் வேறாக உணர்ந்து -பரமாத்மா வரை ஞானிகள் உணர்வார்கள் –
வேத காலத்தில் -வாம தேவர் -புராண காலத்தில் -பிரகலாதன் — நம்மாழ்வார் -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -போல்வார் –
திருமங்கை ஆழ்வாரும் அர்ச்சையில் அனுகரித்து ஒரு பாசுரம் அருளிச் செய்து உள்ளாரே -சரீர சரிரீ பாவம் -அசாதாரண விசிஷ்டாத்வைத கொள்கை –

அஹம் ப்ரஹ்மாஸ்மி -நம் சித்தாந்தத்துக்கே பொருந்தும் –அஹம் மோடி -அஹம் பிரதான மந்த்ரீத்வம் ஆனார்
இரண்டும் வெவ்வேறே முன்பு -இப்பொழுது ஒன்றாக -அஹத்வமும் பிரதான மந்த்ரீத்வமும் சேர —
அஹம் இல்லை என்பது இல்லையே -அகமும் ப்ரஹ்மமும் ஒன்றும் இல்லை என்பது இல்லையே –
சைத்ரீ குண்டலி வாசவீ தேஜஸ்வீ தேவதத்தா —
அஹம் -மித்யா -ப்ரஹ்மம் சத்யம் -இரண்டும் சேருமோ -அத்வைதி வாதம் தேவ தத்வம் ஸ்த்ரீத்வம் மித்யா போலே அன்றோ
அஸ்மி -வர்த்தமானம் -இதுவும் பெரிய விஷயம் —
அஹம் -தேகமா ஆத்மாவா -ஜீவஸ்ய சரீராதி வியாவ்ருத்தம் அன்றோ -ஞான அவஸ்தையில் அஹம் ஆத்மா –
சரீரம் நோய் -இது படுத்தும் பாடு -என்பார் –ஆத்மாவுக்கு நோய் இல்லையே -இது எனக்கு சொன்னாலும் -ஒன்றே தானே –
மேல் நிலை அந்தர்யாமி அந்தராத்மா ப்ரஹ்மம் உணர்வது -இப்படி மூன்று நிலைகள் -அஹம் -தேகம் /ஆத்மா /ப்ரஹ்மா என்றவாறு –
ப்ரத்யக் பரமாத்மா பர்யவசிக்கும் என்றவாறே –
வாம தேவர் / ப்ரஹ்லாதன் -அனந்தன் -மத்தஸ் சர்வம் -அஹம் சர்வம் மயி சர்வம் / நம்மாழ்வார் -திருமங்கை ஆழ்வார்
உபாசனம் சஹா அஹம் -சோகம் -அத்வைதி சொல்ல –
சோகம் /தாஸோஹம் –/-மீண்டும் -சதா சோகம் –எப்போதும் நானே அவன் //தாஸ தாஸோஹம் —
சாஸ்திர ஸித்தமான உபதேசம் -என்றபடி -/ சரீராத்மா பாவம் -நம் சம்பிரதாயத்தில் அசாதாரண யுக்தி -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம —

அடித்த சூர்ணிகை –ஜீவ முக்கிய பிராண லிங்காத்–இந்த்ர-ஜீவாத்மா -தன் புகழுக்காக சொன்னானோ -இல்லை
உபாசனம் -உபாஸா-த்ரை வித்யா -மூன்று விதம் -பரமாத்மா உபாசனம் மூன்று விதம் என்றபடி —
ஸ்வரூபேண உபாசனம் / சித் சரீரத்தால் / அசித் அந்தர்யாமி -நீராய் நிலனாய் போலே
கிராமத்தில் வெளியப்ப ஸ்வாமி கோயில்கள் -கல்லையும் மரத்தையும் வணங்குவார்களே –
கோவர்த்தன மலைக்கே-சொன்னதும் அசித் அந்தர்யாமி —
புஷ்கரம் / நைமிசாரண்யம் /பூரி — நீர் ஆரண்யம் பிரசாத ரூபி -மூன்றிலும் உண்டே –
இந்த இரண்டு சூரணைகளும் நம் சம்பிரதாய முக்கிய சூரணைகள் என்பர் –

சர்வகாரணத்வ / போக்த்ரு வர்க்க /-போக உபகரண /-தத்வ த்ரய வாதம் ஒட்டி மூன்று வித உபாசனம்
விஞ்ஞான விவர்த்த வாதம் /சூன்ய வாதம் /–போன்ற ஏக தத்வ
சாங்கியர் பிரகிருதி புருஷன் –mind -mattar -போக்தா போக்யம் ப்ரேரிதா –சர்வம் ப்ரோக்தம் -த்ரிவிதம் ப்ரஹ்மம் –
ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டா அத்வைதம் –
அக்ரே -பிரளய காலத்தில் –சத் -ஒன்றே -ஸூ ஷ்ம தசையில் –நாம ரூப விபாகம் அநர்ஹம் -/
ஏக மேவ அத்விதீயம் -நிகில காரண பூதஸ்ய
கோடி ஜென்ம –பாபம் கிருஷ்ண ஸ்மாரித்து போகும் -அனுபவம் இருந்தால் தானே ஸ்மரணம்
அனுபவம் தர்சனம் சமானாதிகாரம் -சாஷாத்காரம் மானஸ அனுபவம் –
அர்ச்சா மூர்த்தி -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -தனுர் தாசர் விருத்தாந்தம் –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்வு -வேண்டுமே -ஜீவ பர யாதாம்யதா ஞானம் பூர்வகமாக சாஷாத் கரித்து –
த்ரிவித அனுசந்தானம் பிரமாணம் உண்டே -சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -ஸ்வரூப உபாசனம் /
ஆனந்தோ -திவ்ய உபாசனம் -தத் ஸ்த்ருஷ்ட்வா –தத் அனுபிரவேச -போக்த்ரு சரீர தயா –பஹுஸ்யாம் -பிரஜாயேயா —
ப்ரஹ்ம வித்யை பல குணங்களில் ஒவ் ஒன்றைக் கொண்டே அடையலாம் அது போலே -இம் மூன்றும் -பலம் கொடுக்கும்
பரமாத்மா பிராப்தி அனைத்துக்கும் சமம் –விகல்ப அவிசிஷ்டா பலத்வாத் -மேலே வருமே -பலம் து அவிசிஷ்டம் –
ஜீவ விசேஷண –அசாதாரண –சாமா நாதி கரண்யம் –அந்தராத்மா அனுசந்தானம் இது -நிகமிக்கிறார்–

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading