ஸ்ரீ பாஷ்யம்— 1-1-10– ஜோதிஸ் அதிகரணம் —(ஸூத்ரங்கள் 25-28 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 )

—————-

ஜோதிஸ் அதிகரணம் -1-10-ஸூத்திரங்கள் 25-28-

ஜியோதிர் அதிகரணம் ::

விபர்யய வியூதாகத விஷயமான இந்த அதிகரணமும் பரமாத்மாவை தவிர்ந்த வேறு வஸ்து ஜகத் காரணம் என்கிற
தவறான புரிதலை போக்க வந்தது ஆகும்.
இந்த அதிகரணமும் , அடுத்து வரும் இந்திரபிராணா திகரணமும் சேர்ந்து ஒரு உப-பேடிகா.

ஜோதி என்றவுடன் நினைவுக்கு வருவது ”ஜோதிஷாணம் அகம் ஆதித்ய:” – பகவத்கீதை , என்று சொல்லப்பட்ட சூரியன்.
உண்மையில் இந்த சப்தம் ”பரம் சுடர் சோதி ” என்று பேசப்பட்ட, பரமாத்மாவையே குறிக்கும்.

இந்த பேடிகாவில் உள்ள 4 அதிகரணங்களும்
ஆகாச
பிராண
ஜோதி
இந்திர :
என்ற கிராமத்தில் அமைவானென் என்றால் , உபநிஷத்தானது
”தஸ்மாத் வா ஏதத் தஸ்மாது -ஆத்மன:ஆகாஸ ஸம்பூத :-ஆகாசாத் வாயுஹு வாயுர் அக்நிஹி . . .”
என்கிற வரிசையில் ஸ்ருஷ்டியைச் சொல்லி இருக்கிறபடியால்.

ஆத்ம சப்தம் பரமாத்மன் ஏவ முக்கிய விருத்த : என்கிறபடி,
ஜீவாத்மா, பரமாத்மா என்று விசேஷித்துச் சொல்லாமல் – ( ஜீவ அல்லது பரம என்பதன் உப-பதமாக அல்லாமல் )
நிருப-பதமாக – , ”ஆத்மா ” என்று மட்டும் சொன்னால், அது பரமாத்மாவையே குறிக்கும்.
எனவே ”ஆத்மன : ஆகாஸ ஸம்பூத:” என்றால், பரமாத்மாவிடம் இருந்து ஆகாசம், அதிலிருந்து வாயு, அதிலிருந்து அக்கிநி என்று கொள்ள வேண்டும்.

இந்த அதிகரணத்தில் சொல்லப் பட்ட விஷயம் சாந்தோக்கிய உபநிஷத்தில் 9 வது பிரச்னம் வருகிற
1. கௌக்ஷேய ஜோதிர் வித்யா
2. காயத்ரீ வித்யா
என்கிற இரண்டு வித்யைகளைப் பற்றியது.

காயத்ரீ வித்யா (அத்யா 3 – கண்ட 12)
காயத்ரீ வா இதம் ஸர்வம் பூதம் . . . .ஸ்ரீரயம் பவதி யயேவம் வேதா

சந்தஸு (Meter ) பலவிதம்:
1 அக்ஷரம் – உக்தா
2 அக்ஷரம் – அத்யுக்தா
3 அக்ஷரம் – மத்யா
4 அக்ஷரம் – பிரதிஷ்டா
5 அக்ஷரம் – ஸுபிரதிஷ்டா
6 அக்ஷரம் – காயத்ரீ
7 அக்ஷரம் – உஷ்ணிகு
8 அக்ஷரம் – அநுஷ்டுப்

வேத மந்திரங்கள் எல்லாம் பெரும்பாலும் காயத்ரீ சந்தஸில் அமைந்தவை.
பிரஹ்ம ஞான ஸித்திக்கு அடிகோலுகிற காயத்ரீ மந்திரத்துக்கு அதனுடை சந்தஸின் பெயரையே வைத்துள்ளது நோக்கத் தக்கது.
உபநிஷத வாக்கியங்கள் அதன் அர்த்ததைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் , காரணம் அவை மிகவும் பழமை வாய்தன.

ஜோதிர் வித்யா
இதிலுள்ள மந்திரங்கள், பரமாத்மாவை ஒரு ராஜாவாகச் சொல்லி , அவனுடைய 5 வாயில் ஸ்வர்க்க த்வார அரண்மணைக்குள் பிரவேசிக்க,
அரண்மணை கபாடங்களில் உள்ள ரந்தரம் (The word ”Sushi” referred here means ”hole”) –
சாவித் துளை வழியாக நுழைந்து உள்ளே செல்ல வேண்டும். அந்த 5 வாயில்கள் எவை என்றால்
பிராண – சக்ஷுர் ரந்தரம் – ஆதித்யோ தேஜஸ்வி அன்தோநா பவதி
வியான – ஸ்ரோத்ர ரந்தரம் – ஸ்ரீமான் யஷஸ்வீ பவதி
அபான – பிரஹ்ம வற்சசி அந்நாதோ பவதி
சமான – கீர்த்திமான் உஷ் பவதி
உதான – தேஜஸ்வீ மஹஸ்வான் பவதி என்பதாக
உஸ்வாச
நிஸ்வாஸ
கும்பக
ரேதக
தாரணம் என்று இப்படி உபாசிப்பவன் ”க்ஷீணே புண்யே மிருத்ய லோகம் விஸந்தி ” என்பதாக – அவன் மோக்ஷத்தை அடைகிறான்.

ஸம்சயம் :
இங்கு பிரயோகிக்கப் பட்டுள்ள ஜ்யோதிஸ் சப்தம் பரமாத்மாவைச் சொல்லுமா அல்லது
ஜ்யோதிஷ் பதார்த்தமான ஆதித்யனைச் சொல்லுமா என்று.

ஆகாசம் வாயு அக்னி ஸ்ருஷ்ட்டி -பிரகிரியையால் அடுத்து அடுத்து –
1-3-1- ஆத்ம சப்தம் பரமாத்வாய் முக்கியமாக காட்டும் -என்று காட்டுவார்
அவாந்தர பேடிகை -ஜோதிஸ் இந்திர-அதிகரணங்களுக்கு –ஜகத் காரண வியாப்தமான வேறு
கௌஷேகிய ஜோயாத்திஸ் வித்யை -காயத்ரி வித்யை -இரண்டும் ஜோதிஸ் -அதிகரணத்தில் -காட்டி அருளுகிறார் –
8 bit code அனுஷ்டுப் binary code லகு குரு தானே -அதனாலே அனுஷ்டுப் சந்தஸ் நினைக்க உதவுவதால் நிறைய ஸ்லோகங்கள் –
ஒரு சந்தஸிலே பல விருத்தங்கள் உண்டே
காயத்ரி-காயத்ரீம் – சந்தஸாம் மாதா -பீஷாஷாரம் சேர்த்து -sound value உண்டே –
கா இதம் சர்வம் பூதம் -வாக் -வார்த்தை காயத்ரி இடம் இருந்து தானே வரும் -அதனால் பர ப்ரஹ்மம் ஒருவனையே காட்டும்
-manifest -த்ராணம் ரக்ஷணம் -சர்வம் பூதம் ப்ரதிஷ்டிதம் –
பஞ்ச பிராணன் -துவாரம் -உபாசனத்துக்கு -பர ப்ரஹ்மம் சிம்ஹாசனத்தில் இருக்க
-ப்ரத்யக்ஷ பசு அஹிம்சா -விசாரங்கள் உண்டே -3-1-25-மேலே வரும் –
சேனா யாகம் -சத்ரு ஒழிக்க -கோபம் காமம் ஐயத்துக்கு தபஸ் -விதிப்பது போலே சாதனம் விதிக்கலாம் பலம் விதிக்க முடியாதே
சடன் வசீகர்த்தும் சேனா யாகம் -வேதம் ஒத்துக்க கொள்ளாதவர்களை -அவர்கள் வழியிலே சென்று
-மாதாவத் வாத்சல்யய் வேதம் என்பதால் இத்தை விதிக்கிறது -சாதனா விதி தான் இது -பல விதி இல்லை –
ந ஹிம்ஸா ஸர்வான் பூதான் -கூட விரோதிக்காது -இது பொது விதி -சேனா யாகம் விதி விலக்கு
பசு -சாகா -ஆடு -சொல்லும் –
தர்ம வியாதன்-மஹா பாரதம் -தர்ம சங்கை தீர்ப்பான் -ஹிம்சை பற்றி விஸ்தாரமாக -கௌஷிகன்-கதை –
யாக நிமித்த ஹிம்சை -இங்கு –

பிரத்யக்ஷ பசு Vs பிஷ்ட பசு (மாவினால் ஆடு பால செய்து, அதை யாக திரவ்யமாக சேர்த்தல்).
யஜ்ஞங்களில் பசுவதை கூடுமா? கூடாதா? என்பது கேள்வி.
மா ஹிம்சா ஸர்வா பூதாநி – என்பது , வைதிகர்கள் உள்பட, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதே.
இதில் பூதம் = சேதன வஸ்து (Being ) – ஜீவராசி.

சேனேன அபிசரண் யஜேத – சாதநேந விதிஹி , ந பலாது–மூர்க்கனை அவர்கள் வழியில் சென்று வசீகரிக வேண்டும்.

அக்னீஷ ஹோமீயம் பஸூன் ஆலபேத -ஆடு பலி கொடுப்பதான பிராணி ஹிம்சை அபவாதம்
பந்தி தர்மம் எல்லோருக்கும் சமமாக பரிமாறுவது என்றாலும் சில பதார்தம் சிலருக்கு ஆகாது என்றால் ,
அதை அவர்களுக்கு கொடாமை தவறாகாது. அது பந்தி மீறல் ஆகாது.
அது போல ஹோமீயமான பசு வதை பாபமாகாது என்பது மீமாம்ஸகர்கள் பக்ஷம்.

அக்னீஷ ஹோமீயம் பஸூன் ஆலபேத- என்பது விசேஷ விதி மீறலாகாது.
பிராயசித்த விதிகளை அநுஷ்டிப்பதன் மூலம் பாபம் பரிகாரமாகிவிடும் என்பது சாங்கிய பக்ஷம்.

ஸ்ரௌஷ்ட யாஜ்ஞிகர்கள் – யஜ்ஞ ரூபமான பசு ஹிம்சை, – ஸஸ்திர சிகிஸ்சாதி வது – அத்வரம் என்பதாக பகவத் ராமாநுஜருக்கும் சம்மதம்,
அந்த பிராணிக்கு மோக்ஷம் சித்திக்கிற படியால்.
“வாளால் அறுத்து சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல். . .” (பெருமாள் திருமொழி).
ஹிம்சையும் விரும்பத்தக்கது, அதனால் மிக்க பயன் உண்டாமால்.

மஹாபாரதத்தில் உபரிசர வசு ( வியாசர் தாயார் சத்யவதி, அவள் தந்தை) கதை:
பிராம்மணர்கள் இரண்டு பேருக்கள் பிஷ்ட பசு யாகம் செய்ய வேண்டுமா? அல்லது பிரத்யக்ஷ பசு யாகம் பண்ண வேண்டுமா? என்று சர்ச்சை வர,
அவர்கள் உபரசரவசுவை அணுகி வினவ, தானே ஒருசமயம் பிஷ்டபசு யாகம் பண்ணினவராக இருந்தாலும், இவர்களுக்கு இடையில் மத்யஸ்தம் பண்ணும்போது,
நீங்கள் இஷ்டபசு யாகம்தான் பண்ணவேண்டும், ஏனென்றால் உங்களுக்கு ஹிம்சையைப்பற்றி மனதில் எந்த சலனமும் இல்லாதபடியால்-என்று சமாதானம் செய்தாராம்.
இது விஷயாமாக பகவத் ராமாநுஜரை சிலர் கருத்து கேட்க,
அவர் அதற்கு பதில் இன்னொரு சமயம் சொல்கிறேன் என சந்தேகத்தை பரிகரிக்க மறுத்துவிட,
வேறொரு சமயத்தில், ததியாரதனா நிமித்தமாக, கூரத்தாழ்வினிடம் வாழயிலை அறுத்து வரச் சொல்ல,
அவரும் கொல்லையில் சென்று தாரிலிருந்து இலையை வெட்டவும், அதிலிருந்து நீர் வடிந்தது.
இதைக் கண்டு அவர் மரத்துக்கு ஹிம்சை ஆயிற்றே என வருந்தி இளகி மீளா நிற்க,
இலை கொய்துவர இவ்வளவு நேரமா என அறிய எல்லோரும் புழக்கடையில் சென்று நடந்ததை அறிந்தனர்.
அப்போது பகவத் ராமாநுஜர் , உபரிசரவசு உபாக்யானத்தைச் சொல்லி, ஆழ்வான் போன்ற வியக்த்திக்கு பிஷ்ட யாகமே தகும்.
மற்றையோர்க்கு பிரத்யக்ஷ பசு யாகம் தப்பாது என்றாராம்.
நெருப்பிடை நின்றும், வெற்பிடை சென்றும் தவம் செய்தல் கிருத யுக தர்மம் .
யாக யஜ்ஞங்கள் திரேதா யுக தர்மம் . அப்போது இருந்தவர்கள் அக்நியின்,
காலி
கராளி
மனோஜவா
புலோஹிதா
தூம்ர வர்ணா
புலிங்கினி
விஸ்வ ரூபி– 7 நாக்குகளில் , எந்த நாக்கில் எந்த ஆகுதியை சேர்க்க வேண்டும் என்கிற (யஜ்ஞ விஜ்ஞானம்) அறிந்து இருந்தனர்.
புத்தனுடைய காலத்திலிருந்து, யாக யஜ்ஞங்கள் தடைபட்டு, அதை சரிவர செய்ய ஆளில்லாமல் போக,
யஜந்தே நாம யக்ஞேன
டம்பேன அவிதி பூர்வகம்
அப்படி விதிப்படி செய்யாத யாகம் டம்ப காரியமாகும் என விலக்கத் தொடங்கினர்.
அதனால், துவாபர யுகத்தில் அர்சனமும், கலியகத்தில் கீர்தனமும் பக்திக்கு அங்கமாக யுகதர்மமாய் சொல்லப்படுகின்றன.
எனவே மாறிவிட்ட யுக தர்ம சூழலில், யாக யஜ்ஞங்களுக்கே நேர்த்தி இல்லாதபோது, பிரத்யக்ஷ பசு யாகம் என்பது ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு ஆகாதாப்போலே.
அப்படிச் செய்ய வேண்டிய அவஸ்யம் ஏற்பட்டால் , பிரத்யக்ஷ பசுவுக்குப் பதிலாக , பாஞ்சராத்ர ஆகமத்தில்-மநு ஸ்மிருதியிலிருந்து உதாகரிக்கப்பட்ட
குர்யேயாத் கிருத பசும் சங்கியே
குர்யாத் பிஷ்ட பசும் ததா
நத்வே வாஹம் விருத்தாந்தம்
பசுமிச்சேத் கதாசந
வாக்கியத்தின் படி, நெய்யில் பசுவை ஆவாகனம் செய்து, அதனை யஜ்ஞத்தில் சேர்க்லாம்
அல்லது அஜதானியம் என்கிற அரிசிமாவில் செய்த பசுவைக் கொண்டு அப்படிப்பட்ட யாகங்களைச் செய்கிற சிஷ்டாசாரமும் உண்டு.

வேத விதிகள் அதிகாரிகளுக்கு தக்கபடி தர்மாதர்மங்கள் மாறும் என்பதே நியதி.

இங்கு சொல்லப்பட்ட பிராணன் என்பது பரமாத்மாவையே குறிக்கும்.

பிராணயதி ஸர்வாணி பூதானி இதி பிராண: என்கிற (gross meaning) அர்தத்தின் படியும் பிராண சப்தம் பரமாத்மாவையே சொல்லும்,
காரணம் ” உயிரளப்பான் என்னின்ற யோநியுமாய்ப் பிறந்தாய், இமையோர் தலைவா!” என்று பேசினாப் போலே,
பிராண தாதா (source of sustenance) பரமாத்மா ஒருவனே யாகையாலே.

ஸ்ருஷ்டி விஷயமாக அதற்குக் காரணம் இது என்று எந்த சப்தத்தை இட்டுச் சொன்னாலும்,
அது பரமாத்மாவையா குறிக்கும் என்பது Thumb rule- ஸர்வதா அந்வயம்.

பிரகிருதத்திலுள்ள 4 அதிகரணங்களிலும் ஒரேமாதிரி போக்கு,
ஆகாசமே, பிராணனே, ஜியோதியே, இந்திரப் பிராணனே, ஸர்வாணி இமானி அபிஸம் விஸந்தி,
ஸர்வான் பரலீயந்தே என்பதாக ஸ்ருஷ்டி காரணம் இதுவே, இதுவே என்பதிலே நோக்கு.
அதிலும், முதல் இரண்டு , ஆகாச ப்ராண அதிகரணங்கள் ஒரு உபபேடிகா.
அடுத்த, ஜியோதிர் இந்திர ப்ராணா திகரணங்கள் ஒரு உப பேடிகா.
இதில் சொல்லப்பட்ட ஆகாச, பிராண, ஜியோதிர், இந்திர சப்தங்கள் பிரத்யேக வஸதுவைச் சொல்லும் என்கிற தர்மி ஸம்சயத்தை –
விபர்யய ஞானத்தை (incorrect knowledge) போக்க வந்தவையாகும். அந்த எல்லா சப்தத்தாலும்
நிகில ஜகத் ஏக காரண
அபகத பாப்மத்வ
ஸார்வஜ்ஞ
ஸத்ய சங்கல்பத்வாதி
அனந்த கல்யாண குண
பரமாத்மாவே ஆகாச பிராண சப்தங்களால் சொல்லப்படுகிறான் என்பது சித்திக்கிறது.

திருவாய் மொழி அரையர் -சாளக்கிராமம் வாயில் வெத்திலை -வ்ருத்தாந்தம் –
ஸஸ்த்ர சிகிட்ஷா -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் எழுதி -சிக்ட்ஸைக்கு பண்ணுவது போ -ஜீவாத்மாவுக்கு சுவர்க்கம் -யோகத்தால்
-மந்த்ர உச்சாரணத்தால் -மயங்கி -anestheesiyaa போலே -ஹிம்சை இருக்காதே அந்த ஆட்டுக்கு –
மாவில் பசு ஆகாரம் செய்து -பிஷ்ட பசு யாகம் -ப்ரத்யக்ஷ பசு யாகம் உபரிச்ரவசு உபாக்யானம் –இதுவா அதுவா
-சர்ச்சை வியாசர் தாயார் –சத்யவதி தகப்பனார் உபரிச்ரவசு –தானே பிஷ்ட பசு யாகம் பண்ண இவர்களுக்கு ப்ரத்யக்ஷ பசு யாகம் பண்ண சொல்லி –
கூரத் ஆழ்வான் -வாழை இல்லை அறுத்து -ஹிம்சை என்று மயங்கின ஐதிக்யம் -இப்படி பட்டவர்களுக்கு பிஷ்ட பசு யாகம் -என்றாராம் பாஷ்யகாரர் –
குக்ஷி -வயிறு -ஜோதி -வைசுவாரண அக்னி -ஆகாரம் பக்குவம் பண்ணி -இத்தை குறிக்கும் -பூர்வ பக்ஷம் –
ஜ்யோதிஸ் பர ப்ரஹ்மம் -நிரதிசய தீப்தியுக்தம் -சித்தாந்தம் -பாதாஸ்ய விச்வா பூதாநி -சர்வா பூதாநி த்ரிபாதஸ்ய அம்ருதம் -சாந்தோக்யம் –
லீலா விபூதி கால் வாசி திருவடிக்கு சாம்யம் -குஷி யில் உள்ள ஜோதிஸ் கூட அவனது அம்சம் தானே –
கீதையில் அஹம் வைஸ்ராவணி-அக்னி என்கிறார் -15-14-சதுர்விதம் அன்னம் -பஷ்யம்-லேகியம் -சோஷ்யம் போல்வன –
சந்தோபிநாத ந -அடுத்த சூர்ணிகை -சந்தஸும் அவனையே குறிக்கும் –
தேவி காயத்ரி நாம் சொல்வது மூன்று பாதம் கொண்டது -த்ரிபதா காயத்ரி -யாதிகளுக்கு நாலாவது பாதம் அனுசந்தேயம் என்பர்

இதைச் காயத்ரீ சப்தேனே- அடுத்த -சூர்ணிகை
புருஷ ஸூ க்தம் -புருஷ -நாராயணன் மட்டுமே குறிக்கும்
-ஸ்வாமித்வம் ஆத்மீத்வம் சேஷித்வம் -வஸீத்வம் பும்ஸத்வம் -அவனுக்கு
தாஸத்வம் தேஹத்வம் -ஸ்த்ரீ பிராராய் நாம்
புருஷோத்தம உத்தமன் -என்பர் -ப்ரஹ்மன் ஏவ அந்வயம்-காயத்ரீ சப்தம்
பூதாதி ஸூ பாத வியபதேச உபபத்தே –
ததாகி லக்ஷணம் – அடுத்த -சூர்ணிகை -ஜோதிஸ் வித்யை சம்பந்தம் -பூர்வ வாக்ய -உபதேச பேதாத் –
இரண்டு வித்யைகளும் சேர்த்து ஒரே அதிகரணம்
புருஷ /புருஷோத்தமன் /புருஷோத்தம உத்தமன் என்றாலும் -அவனையே தான் குறிக்கும் –
சோயம் தேவதத்தன் -பிரத்யபிஞ்ஞா -நினைவு படுத்தி அவனே இவன் என்பதை போலே யஞ்ஞதத்தன் -tom dick hary -ஏகார்த்தம் -என்றவாறு –
வேதாஹமேதம் புருஷன் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தாமஸ் தாண்டி -அப்ராக்ருத பர தேஜஸ் உடைய -அவனையே தேஜஸ் சப்தம் குறிக்கும் என்றவாறு –
புடைவை சுரந்தது திரு நாமம் இ றே –நாம மஹிமை நாமி மஹிமை விட என்பது போலே -தேஜஸ் அவனிலும் விஞ்சி இருக்கும் என்றபடி –
அவனும் தேஜஸும் -பிரிக்க முடியாத தத்வங்கள் -என்றவாறு –
முதல் நான்காவது தேஜஸ் விஷயம் 2 /3 காயத்ரீ விஷயம் -இரண்டுமே பர ப்ரஹ்மத்தையே காட்டும்

ஜ்யோதி: சரணாபிதாநாத் – சூத் 1-1-25 (அதிக 10 சூத் 25-28)

விஷய வாக்கியம் :
அத இத பரோர் திவோ ஜ்யோதிர் தீப்த்யதே–இதிதம் அஸ்மின் அந்தப் புருஷே ஜோதிஹி . .. தத் ஸ்பர்ஷேண புருஷேண விஜானாதி .
(சாந்தோ அத்யா 1 மந் 7-8)

ஸம்சயம் :
இங்கு ஜோதி என்கிற சப்தம் வானத்தில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிற ஜ்யோதிஷ் பதார்த்தமான பிரசித்த சூரியனைச் சொல்லுகிறதா?
அல்லது ”ஜோதிஷாம் பதயே ” என்கிற பரமாத்மாவைக் குறிக்கிறதா ? என்பது கேள்வி.

பூர்வ பக்ஷம்
இதில் எது சரி? கிம் யுக்தம்? பிரசித்தமேவ ஜியோதிர் இதி, பிரசித்தவன் நிர்தேசாது.
பரமாத்மா ஜோதிர் ரூபமானாலும், பிரதமோ உபஸ்திதம் பிரசித்தமான சூரியனே முதலில் நினைவில் வருவது.
தவிரவும்,
ஆகாஸ :, பிராண: என்று சொல்கிற இடத்தில் எல்லாம் பரமாத்மாவுக்கே உரிய ஜகத் காரண லிங்கத்தை சுட்டிக்காட்டியதுபோல்,
இப்பாது இந்த ஜியோதிர் சப்தத்தோடும் சேர்த்து சொல்லவில்லை என்பதால் ,
பரமாத்மாதான் இங்கு விஷயம் என்கிற பிரத்யபிஜ்ஞா ஏற்பட்ட வழியில்லை. பிரசித்த சூரியனே கொல்லப்பட்டான் ஆவான் என்பது பூர்வ பக்ஷம்

சித்தாந்தம் :
பரமாத்மாவே சூரியன் என்று சொன்னால் தவறு இல்லை. ஆனால், சூரியனே பரமாத்மா என்று சொன்னால், அது பிரக்ரிருதத்துக்கு சேராது.
எனவே ஜியோதிர் சப்தம் சூரியனைச் சொல்லாது. குக்க்ஷியில் உள்ள காடராக்நி போன்றது இந்த ஜோதி என்றதும்,
”கௌக்ஷேயர் ஜியோதிர் ததாத்மகத்வம் ” என்று பகவத் கீதையில்
அஹம் வைஷ்வாநரோ பூத்வா பிராணினாம் தேகமாஸ்ருத : பிராணாபான ஸமாயுகத : பசாம் அன்னம் சதுர்விதம்
தானே சொல்லி இருப்பதோடு இது பொருந்தும்.

பக்ஷியம், போக்யம், சோஷ்யம், லேக்யம் – சதுர் விதான்னம்

நிரதிசய தீப்தியுக்தம் ஜியோதிஹி பரமபுருஷ ஏவ |

எப்படி என்றால்
பதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ்ய அமிருதம் திவி -> சாந்தோ (அத் -கண் -மந் – 3-6-12)
பாதோஸ்ய விஸ்வா பூதாநி த்ரிபாதஸ்யஅமிருதம் திவி -> புரு.ஸூக்

கீழ் உலகம் – லீலா விபூதி 1/4 (ஒரு திருவடி) – ஊர்த்வ பாகேன பரிமிதம் , அதோ பாகேன நிஸ்ஸீமிதம் – என்றால் limitless இல்லை.
மேல் உலகம் – நித்ய வீபூதி 3/4 (மற்றோர் திருவடி ) – அதோபாகேன ஸீமிதம் ஊர்த்வ பாகேன அபரிமிதம் .
மேல் – கீழ் என்பது உயர்ந்த – தாழ்ந்த என்ற பொருளில். Not above and below, Because the Universe is supposed to be circular.

இப்படி லீலா விபூதி, நித்ய வீபூதி இரண்டையும் சரணா விதானமாக சொல்லி இருப்பதால்,
இதுவே பரமாத்மாவுக்கான அசாதாரண லக்ஷணமாய் ஜியோதிர் சப்தம் சூர்யாதி ஜியோத்தியைக் (பிரசித்த சூரியனைக்) குறிக்காது.

————

சந்தோபிதாநாத் ந இதிசேத் ந ததா சேதோர்பண நிகமாத் ததாஹி தர்சனம் – சூத் 1-1-26

ஆக்ஷேபம் :
சந்தோபிதாநாத் — காயத்ரீ மந்திரம்,
சந்தஸ் (meter ) ரூபமாக இருக்க, திருவடிகளை உடைய பரமாத்மாவேதான் அந்த காயத்ரீ மந்த்ரம் என்று எப்படிச் சொல்வது? என்றால்
ந – இதிசேத் ந-ததா சேதோர்பண நிகமாத் –
நம்முடைய மனதை காயத்ரீ சப்த வாச்சியமானவனுக்கு அர்ப்பிக்கவேண்டும் ,
காயத்ரீ என்பது எல்லா வஸ்துவுக்கும் ஆத்மா என்று சொல்லப்பட்டிருப்பதால், காயத்ரீ சப்தம் ”சந்தஸ் ” என்ற பொருளில் சொல்லப்பட்டது அன்று.
அதுவும் பரமாத்மாவையே குறிக்கும்.
மந்திரத்துக்கும் , மந்திரத்துக்குள்ளீடான வஸ்துவுக்குமான ஸதிருச பாவத்தால் எழுந்த வார்த்தை.

1. காயத்ரீ மந்திரத்துக்கு 4 பாதம். பரமாத்மாவுக்கு 4 பாதம் (லீலா விபூதி1 பாதம், நித்ய விபூதி 3 பாதம்).
2.சிம்மோ மாணவக : போலே . ததாஹி தர்சனம் – என்பதிலே நோக்கு.

தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந பிரசோதயாத்
என்று -3-பாதமும்
ஓம் பூ புவர் ஸுவ:
என்று வியாஹர்த்தியுமாக இருப்பது தேவி காயத்ரீ (அ ) பிரஹ்ம காயத்ரீ .
இதற்கு பாத பூர்ணார்தமாக, 4வது பாதம் உண்டு. அது யதிகளுக்கு மட்டும் அனுசந்தேயம். மற்ற 3 ஆஸ்ரமத்தார்களுக்கு உபதேசிக்கலாகாது.

பூதாதி பாத வியபதேஸோபபத்தே : ச ஏவம் – சூத் 1-1-27 (அதிக 10 சூத் 25-28) ::

பூத பிருதிவி சரீர ஹ்ருதயாநி நிர்திஸ்ச சைஷா சதுஷ்பாதானி வியபதேஸாத்ச: பிரஹ்மண்யேவ காயத்ரீ சப்தா ஏவம் உபபத்யதே.

விஷய வாக்கியம் :
சைஷா சதுஷ் பதா ஷட் விதா காயத்ரீ – 4 பாதங்களைக் கொண்டது. 6 விதமாக இருப்பது .
காயத்ரீ வா இதம் ஸர்வம் பூதம் etc.

தாவானஸ்ய மஹிமா தாதோ தியாயாதிஸ்ச புருஷ: பாதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ்ய அமிருதம் திவி (மந்-6)
ஆனுபூர்வியாக புரு. ஸூக்தத்தில் இதேபோல்
ஏதாவாநஸ்ய மஹிமா தாதோதியாகுஸ்ச புருஷ: பாதோஸ்ய விஸ்வா பூதாநி த்ரிபாதஸ்ய அமிருதம் திவி -என்பதாக பார்க்கிறோம்.
புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட – புருஷ: நாராயண:
இதையே பகவானும் புருஷோத்தம: என்று கீதையில் தன் வாயால் சொல்லிக் கொள்கிறான்.
ஸுக மகரிஷியும் அவனை புருஷோத்தமோத்தம : என்பதாக பாகவதத்தில் விளிக்கிறார்,
ஸ்வாமித்வம் , ஆத்மத்வம் , வசிஸ்த்வம் , பும்ஸ்த்வம் இவை எல்லாம் பரமாத்மாவைச் சொல்லும். அதேபோல
சேஷத்வ, தேகத்வ , வசஸ்த்வம் , ஸ்த்ரீத்வம் இவை எல்லாம் ஜீவாத்மாக்களை சொல்லும் என்றிருப்பதால்

காயத்ரீவா இதம் ஸர்வம் பூதம்
யாவை இயம்வா பிருதிவி
யாவை இயம்வா அஸ்மின் சரீரே
யத்வா புருஷ சரீரே ஹ்ருதயம்
சைஷா சதுஷ்பதா ஷட்விதா காயத்ரீ என்பது கீழ் சொன்ன 4 மந்திரங்களில் இருந்து எடுக்கப்பட்ட
பூத பிருதிவி சரீர ஹ்ருதயாநி சதுஷ்பாதா பரமாத்மாவைக் குறித்து சொல்லப்பட்வை யாகும்.
இதஸ் ச காயத்ரீ சப்தேன பிரஹ்ம இவ அபிதீயதே, பூதாதி பாத சப்தஸ்ச ஏவம்.

————–

உபதேச பேதாத் ந, இதி சேத் ந, உபயஸ்மிந் அபி அவிரோதாத் – சூத்.1-1-28(அதிக.10)::

இந்த சூத்திரத்தாலும் ஜியோதிர் வித்யை பேசப்படுகிறது.
அதிகரணத்தின் 1 – 4 -சூத்- கௌட்சேய-ஜியோதிர் வித்யா விஷயமானவை. 2 – 3 காயத்ரீ வித்யா விஷயமானவை.

கேள்வி :
உபதேச பேதாத் –
ஒரு இடத்தில் “த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்று பிரஹ்மத்துக்கு விசேஷணமாக சொல்லி .
வேறு ஒரு இடத்தில் “திவப் பரோ ஜ்யோதஹி” என்று சொல்லும் போது,
”ஸோயம் தேவதத்த:” என்பதான ”பிரத்யபிஜ்ஞா” ஏற்படவில்லை, என்றால்

ந –
இப்படி ஒரே பிரகரணத்தில் பரமாத்மாவை இரண்டு விதமாக சொல்லி இருப்பதால் ,
”ஜியோதிர்” சப்தம் பரமாத்மாவைக் குறிக்காது என்கிற பூர்வ பக்ஷம் சரியில்லை.

இதி சேத் ந –
அப்படி சொல்லப் போகாது . கீழே புருஷக: , புருஷோத்தம: என்பது நாராயண : என்றாப்போலே கொள்க.
புருஷ: என்பது லௌகிக புருஷனைக் குறிக்குமோ என சந்தேகம் வராத படிக்கு புருஷோத்தம: என வலியுறுத்திற்று.

உபயஸ்மின் அஸ்ய அவிரோதாத், –
“திவப் பரோ ஜ்யோதஹி ” என்று சொன்னாலும்,
” த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்று சொன்னாலும் இரண்டுக்கும் விரோதம் எதுவும் இல்லை.

விருட்சாக்ரே (மரக்கிளையில்) பக்ஷி: என்பதற்கும்,
விருட்சாக்ரே பரத (அது பறந்து போகும்போது – மரக்கிளைக்கு மேல் பறந்து கொண்டிருக்கிற) பக்ஷி: என்பதற்கும்
எப்படி வித்யாசம் இல்லையோ அதுபோல, “திவப் பர: ” என்றாலும், “த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்றாலும் வித்யாசம் இல்லை.

திரௌபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே என்பதாக நாமிக்கான பெருமை, நாமத்துக்கும் உண்டு.
இரண்டாலும் ஓரே பரமாத்மாவைக் குறிப்பதுபோலே
“திவப் பரோ ஜ்யோதஹி ” என்று சொன்னாலும், ” த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்று சொன்னாலும்
இரண்டுக்கும் விரோதம் எதுவும் இல்லை.

இதித் த்யேவ ஜியோதிர் சப்தம் நிரவத்தியம்.

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading