இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள்–
நான்காவது-சிஷ்ட அபரிக்ருஹ அதிகரணம்-1 சூத்திரம்–
2-1-4 : சிஷ்ட அபரிக்ருஹ அதிகரணம் :
சூத்திரம் – 2-1-13 : ஏதேந சிஷ்ட அபரிக்ருஹா அபி வ்யாக்யாதா :
வேத புறம்பான -ப்ரஹ்மமே உபாதான காரணம் -என்று கொள்ளாத
காணாபர் -கௌதமர் -வைசேஷிகம்
அஷ பாதகர் நியாயம்
புத்தர் –
இந்த வாதங்களை நிரசனம் பண்ணி
நிமித்தம் ஒத்துக் கொள்கிறார்கள் –
பரம அணு உபாதானம் என்கிறார்கள் இவர்கள் –
கீழே வேத விருத்த தர்க்க பாகத்துக்கு நிரசனத்துக்கு அருளிச் செய்தவையே இதற்கும் பொருந்தும்
ஏதேந -கீழே சாங்க்ய நிரசனம் பண்ணி ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று காட்டியது போலே
வேதத்தில் சொன்னதை ஒத்துக் கொள்ளாதவை-vetha sanction-இல்லையே –
கண பஷ
அஷ பாதக -கௌதமர் -காலில் கண் உள்ளவர் –
ஷபனகர்-ஜைனர்கள்
பிஷு -புத்தர்
இவர்கள் பக்ஷங்களும் நிராகரணம் -பரம அணு வாதிகள் என்பதால் இவர்களைச் சேர்த்து –தர்க்கம் அப்ரதிஷிஷ்டிதம் -அ பிரமாணம் –
இவர்களை நிரசிக்கவே இங்கு தனியாக அதிகரணம் -தர்ம மூலத்தவம் இருந்தாலும்
ஞாநாத்மகம் நித்யத்வம் க்ஷணிகம் ஏகாந்தத்தவ அநேகாந்தத்தவ இவ்வாறு பல வேறு பாடுகள் உண்டே இவர்கள் வாதங்களில் —
பரஸ்பர விரோதம் -நித்யத்வம் அநித்யத்வம் –
ஜைனர் இரண்டும் இருக்கலாம் -அநேகாந்த வாதம் அவர்களது –
அநேகாந்தம் ஜகத் சர்வம் -மனுஷ்யத்வம் கஜத்வம் ஒரே இடத்தில் கணபதி –
நரஸிம்ஹர்-ஸிமஹத்வமும் மனுஷ்யத்வமும் சேர்ந்து -என்று த்ருஷ்டாந்தங்கள் காட்டி
நித்யத்வமும் அநித்யத்வமும் சேர்ந்து இருக்கலாம் என்பர் ஜைனர்கள்
சிஷ்ட அபரிக்ருஹா அபி வ்யாக்யாதா :-அதே போலே இவர்களது வாதங்களும் நிரசனம்
வைபாஷிகர் -ஸுத்ராத்ம்யகர் -யோகாச்சார்யார்-ஞானம் மட்டும் -மாத்யாத்மீகர் -சர்வம் சூன்யம் –
இப்படி நான்கு வித புத்தர் வாதங்களும் நிரசனம்-
ஏதேந சிஷ்ட அபரிக்ருஹா –
வேத சாஸ்திரத்துக்கு விருத்தமான கணாத , கௌதம , பௌத்த மத கோட்பாடுகள்
அபி வ்யாக்யாதா –
கீழில் பிரகாரங்களால் நிராகரிக்கப் பட்டதாகவே கொள்ள வேண்டும்.
காரணம். வைதிக மதத்துக்கு உயிரான நிலைப்பாடு, பிரஹ்மம் ஜகத்துக்கு உபாதான காரணம் என்று.
வைசேஷிக மத பிரவர்த்தகரான கணாதர், நியாய மத பிரவர்த்தகரான கௌதமர் இவர்கள் எல்லாம்
ஈஸ்வரன் நிமித்த காரணம் என்பதை ஒத்துக்க கொண்டாலும், பரமாணுதான் உபாதான காரணம் என்பதாக கொள்கின்றனர்.
சாங்கியர்கள் பிரஹ்மா அதிஷ்டியாத மூலப் பிரக்ருதித்தான் உபாதான காரணம் என்கின்றனர்.
வேத பிராமாண்யத்தை ஒத்துக்க கொள்கிற கணாத, கௌதம ரிஷிகளையும்
ஜைன, பௌத்தர்களோடு சேர நிராகரித்தமைக்கு காரணம் , இவர்களுடைய வாதங்கள் தர்க்கத்துக்கு அனுகுணமாக இருந்ததாயினும்
வேத சாஸ்திரத்துக்கு விருத்தமானவை அதாவது இவர்கள் நால்வரும் தர்க்கத்தைக் கொண்டு,
பரமாணுதான் ஜகத் காரணம் என்பாதாலேயாம்.
எனவே இங்கு தர்க்கம் அப்பிரமாணம் என்று சொல்லாமல், அப்பிரதிஷ்டிதம் என்பதாக ஸ்ரீபாஷ்யம்,
தர்கா பிரதிஷ்டாநாம் அபி என்று சொல்லிய பிறகு,
இந்த அதிகாரணத்துக்கு அவசியம் என்னவோ என்றால் நால்வருடைய வாதங்களிலும் தர்க்கம் பிரதானமாக இருந்தாலும் ,
பரமாணு என்றால் யாது என்கிற விஷயத்தில் அவர்களுக்குள் விசம்வாதம் உண்டு.
பௌத்தன் அதை க்ஷணிகம் என்கிறான்.
கணாதர் அத்தை நித்யம் என்கிறார்.
ஒருத்தர் அது க்ஞாநாத்மகம் என்ன, ஒருத்தர் அர்த்தாத்மகம் என்கிறார்.
ஹேரம்ப, நரசிம்மவது அநேகாந்தம் என்று ஜைனர்கள் சொல்ல
நித்யத்வ அநித்யத்வாதி , ஏகத்துவ, அநேகாந்த விசம்வாதம் அவர்களுக்குள் உண்டு.
மாத்யமிகனும் , யோகாசாரனும் இருவருமாக சேர்ந்து மஹாயான பிரிவு.
சௌத்திராந்திக, வைபாஷிகர்கள் ஹீனயான பிரிவு. நாலு பிரிவுக்கும் பொதுவான கொள்கை ஸர்வம் க்ஷணிகம் என்பது.
வேற்றுமையாவது,
வைபாஷிகன் – பாஹ்யார்த்தம், ஆந்தரார்த்தம் இரண்டும் சத்யம் .
சௌத்திராந்தன் – பாஹ்யார்த்தம் சூன்யம் (அ ) மித்யா.
யோகாசாரன் – விஜ்ஞானம் சத்தியம். மற்றவை மித்யா.
மாத்யமிகன் – ஸர்வம் சூன்யம்.
ஸது
அஸது
ஸதஸது
ஸதஸத் விலக்ஷணம்
என்கிற 4 ஸ்திதியை தாண்டினது சூன்யம்.
சதுஸ் கோடி விநிர்முக்தம் சூன்யம் மாத்யமிகா விதும்.
நம்முடைய சம்பிரதாயத்தில், வேத மூலம் தான் பிரதானம். எல்லா வஸ்துவும் ஸது என்பதாக.
அஸது என்பதே கிடையாது, முயல் கொம்புபோல.
ஸதஸது என்றால் ஸ்வ – ரூபேண ஸது, பர – ஸ்வரூபேணா அஸது
புத்தகம் என்பது புத்தகம் என்ற கணக்கில் சத்யம்.
மாடு பேனா இன்னும் தன்னைத் தவிர்ந்த எல்லா கணக்கிலும் அசத்தியம்.
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply