ஸ்ரீ பாஷ்யம் —பிரயோஜநவத் வாதிகரணம்: (2-1-10)-ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

பிரயோஜநவத் வாதிகரணம்: (2-1-10)

பிரஹ்ம காரண வாதத்தை மறுக்கும் முகமாக, பிரஹ்மம் ஜகத் காரணம் இல்லை என்பதற்கான காரணங்கள்
ஒவ்வொரு குணத்தையும் இட்டு அவனுடைய – ஸர்வக்ஞத்வம் ஸர்வ சக்திமத்வம் இவைகளை மறுத்த போது ,
அத்தை எல்லாம் சரிக்கட்ட, இப்போது
அவன் செய்கிற ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் இல்லையாய் அவனுடைய காருண்யத்வாதிகளை இல்லை செய்கிறார்கள்
பூர்வபக்ஷதாலே–

————-

சூத். 2-1-32 :: ந பிரயோஜந வத்வாத் —

ஸது ஏவ சௌம்ய – என்று இருக்கிற பிரஹ்மம் ஸகலேதர விலக்ஷணனாய், ஸர்வ சக்திமானாக
ஜகத் ஸ்ருஷ்டியை செய்வதற்கு சக்தி இருந்தாலும் –
அவாப்தஸமஸ்த காமனய் – எல்லா ஆசையும் நிறைவேறினவனான படியாலே – பாலாபிஸந்தி இல்லையாய்
பிரஹ்மம் ஸ்ருஷ்டிக்கு காரணமாகாக மாட்டாது. –
ந பிரயோஜன வது என்பதாக பூர்வ பக்ஷம்-

அவாப்த ஸமஸ்த காமேப்ய ஸ்ருஷ்டியா சிந்தனம் பிரயோஜனம்
சேதனே ஜீவா இவ ஹந்ததே கருணா ஹரே! – நாநவாப்த அவாப்த்தவ்யம் வர்ததே கர்மணா இவ – கீதை.
ஒரு காரியத்தை செய்ய இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1. ஸ்வார்த்த பிரயோஜனம்.
2. பரார்த்த பிரயோஜனம்.
இரண்டு காரணமும் இல்லாதபோது ஜகத் ஸர்கம் ந கிஞ்சித்து பிரயோஜனம்.
அவாப்த ஸமஸ்த காமன் என்பதால் தனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
பிறர்க்காகவாக ஆகின், அது அநுக்ருஹ பலனாக இருக்க வேண்டும்.
அதற்கு கர்ப்பவாசம், ஜன்மம், வார்தக்யம், மரணம், நரகம் என்று துக்காவகமான ஜகத்தை சிருஷ்டிக்க மாட்டான்.
இப்படி உபய பிரகாரத்தாலும் நிஷ்பிரயோஜன காரியம் ஜகத்து என்பதால், பிரஹ்ம காரணம் நோபாபத்தியதே.
பிரஹ்மமானது ஜகத்துக்கு காரணமாகாது என்பது ஆஷேபம். இதற்கு பதில் அடுத்த சூத்திரத்தில் சொல்லப் படுகிறது.

————

சூத். 2-1-33 :: லோகவத்து லீலா கைவல்யம் —

பொருளென்னு இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் அருளுள்ளவன் தாள் அடைவிக்கும் முடித்தே — நம்மாழ்வார்.
வித்தும் இடவேண்டும்கொலோ ? விடையடர்த்த பத்தி உழவன் பழம் புனத்து — நான்.தி.வ.- 23.
இந்த பாசுரங்களில் ஆழ்வார்கள் காட்டியதை இல்லை செய்யப் போமோ?

ஜகத்தை ஸ்ருஷ்டிப்பதன் பயன் தன்னுடைய லீலைக்காக மட்டுமே என்பது பூர்வ பக்ஷ ஆக்ஷேபத்துக்கு பதில்.
கைவல்யம் என்றது ஐஸ்வர்ய, கைவல்யமாகிற தர்மார்த்த காம புருஷார்த்தங்களைப் பற்றி அல்ல.
கேவலம் லீலா ரசத்துக்காவே என்ற பொருளில் சொல்லப்பட்டது.
லோகவத்து என்றால் லோகத்தில் பிரபுக்கள் லீலைக்காக சில விளையாட்டு கேளிக்கைகளில் ஈடுபடுவது போல என்று கொள்ளவேண்டும்.

என் பந்தும் கழலும் தந்து போகு நம்பி – என்று பிராட்டிக்கு லீலோபகரணமான – கந்துகம் எது என்றால்
அண்டமும், அண்டத்திலுள்ள சேதனாம்சமும் ஆம்.
மட்டை அடி உற்சவத்தில் , புஷ்பத்தைக் கொண்டு செய்த பந்தை எறிந்து விளையாடுவதைப் போலேயாய் கொள்வது.
புஷ்ப பந்து விளையாட்டு வேணுமானால் ரஸமாக நடக்கலாம், இந்த துக்காவக சிருஷ்டியில் ஆயாசம் தானே மிஞ்சும் என்றால்
அத்தை அவன் சங்கல்ப மாத்திரத்திலே பண்ணுவதால் , இதிலுள்ள ஆயாசமும் அதற்கு இல்லை என்பதாக விளக்கம்.
நிலை பெருத்தலும் நீக்கலும் அலகிலா விளையாட்டுடையான் என்று இவ்வுலகில் லீலா ரசம் என்றால் ,
நித்திய விபூதியில் அனுபவம் போக ரசம் என்றும் கொள்க.

—————–

சூத். 2-1-34 :: வைஷம்ய நைர்க்ருண்யே ந ஸாபேக்ஷத்வாத் ததாஹி தர்சயதி —

தாரதம்ய விஷம ஸ்ருஷ்டியாலே, நீங்கள் சொல்லுகிற பிரஹ்மத்துக்கு பாரபக்ஷ , ஒருதலையாக நடத்துகிற தோஷமும்,
நைர்க்ருண்யமாகிற கருணை இன்மையாகிற தோஷமும் சம்பவிக்கும் என்று சாங்கியன் சொல்ல,
ந – இல்லை
சாபேக்ஷத்வாத் – கர்மம் காரணமாகவே ஸ்ருஷ்டி நடக்கிறபடியால்
ததாஹி தர்சயதி – என்பதாக ஸ்ருதிகளில் காட்டப்பட்டு இருக்கிற படியாலே.

கொடுவுலகம் காட்டேல்
இது என்ன உலகியற்கை
என்று ஆழ்வார் வெறுக்கும்படியான உலகம் ஸ்ருஷ்டிப்பவனை கருணை உடையவன் என்று எப்படிச் சொல்வது?
கருணையே வடிவான பிராட்டி புருவ நெறிப்பில் பிரம்மா முதல் பிபீலிகா வரை ஜந்து ஜாதங்கள் படைக்கிறான் என்றதால்,
அவனுக்கு அகில ஹேய பிரத்யநீக கல்யாணைகதானத்வம் எப்படி சித்திக்கும்? – என்பது கேள்வி.

ஸாபேக்ஷத்வாத் – இந்த வைஷம்ய நைர்க்ருண்யத்துக்கு வேறு ஒரு அபேக்ஷை – காரணம் உண்டு.
அவாப்த ஸமஸ்த காமனுக்கு ஸ்வயம் அபேக்ஷை எதுவும் இல்லை.
விஷம ஸ்ருஷ்டிக்கு சேதநாசேதன அநாதி சித்த பாப வாசனைதான் காரணம்.
அவரவர் பாப-புண்ய தோலனத்துக்குச் சேர பாப சரீரமோ, புண்ய சரீரமோ கொடுத்து, அந்தந்த ஆத்மாவை அதிலே புகுர விட்டு,
தானும் அனுபிரவேசம் பாண்ணுகிறான் என்கிற சமஷ்டி ஸ்ருஷ்டி அளவாக பகவத் சங்கல்பம் அத்தனை

ஆக, அதற்கு பின் அவரவர் போக்கு ஸ்வயமார்ஜிதமாய், படைத்தவன் சாட்சி பூதனாக
”அநஸ்னன் அன்ய சாகி ” என்றொழிந்தானாக சேதனனுடைய பிரவிருத்தி நிவிருத்திகளை முன்னடத்துகிறான் என்பதே
வேதாந்தங்களில் சொல்லப்பட்ட விஷயமாக இருக்க, பகவத் பக்ஷத்தில் காருணயம் அன்றி நைர்க்ருண்யம் சொல்லப் போகாது
கர்ம ஸாபேக்ஷத்வாத் .விஷம ஸ்ருஷ்டிஹி என்பதாக தர்சயந்தி ஸ்ருதி ஸ்மிருதியாதவ :
பிராரப்தம் புக்தைவ ஜீர்ணோ பவேத். என்கிற வசனம் நோக்கத்தக்கது.
மாமேவ ஏ பிரத்யந்தே மாயா ஏதாம் தரிந்தி தே — கீதை. என்று பிரபத்தியாலே பகவத் சரணாரந்த விந்தங்களை
கால் காட்டினார்களுக்கு அல்லது இந்த சம்சாரமாகிற கால் கட்டு கழற்றப்போகாது.
விஷம ஸ்ருஷ்டிக்கு காரணம் பிராரப்தம் தான். ஸ்ருஷ்டி கர்த்தா அன்று. அவன் தயாவான்தான்.
ஸ்ருஷ்டிக்கு பிரதான காரணம். அப்பிரதான காரணம் என்று உண்டு–
அத்துவாரக காரணம் , ஸத்துவாரக காரணம் என்றும் சொல்லுவர்.
அதாவது நேர ஸாஷாத்தாக காரணம் ஒன்று உண்டு. பரம்பரையாக வருகிற காரணம் ஒன்று உண்டு.

நிமித்த மாத்திரம் மே வாசௌ ஸ்ருஜாணாம் ஸர்க கர்மணி –
எப்படி உழுதிட்ட நிலம், நீர், எரு எல்லாம் ஒன்றேயாக இருக்க, விளைகின்ற தானியும் நெல், கோதுமை, சோளம், கேழ்விரகு என்று
முளைப்பதற்கு அதனதன் சக்தி காரணமோ அதுபோல ,
ஸ்ருஜ்யமான அசேதன சம்சாரகமுடைய ஆத்மாவினுடைய சக்தி தான் இந்த விஷம ஸ்ருஷ்டிக்கு பிரதான காரணமமே ஒழிய
கிருஷீவலன் அன்று காண் . இங்கு ஆத்மாவினுடைய சக்தி என்றது அவனுடைய பிராசீன கர்மம் என்று கொள்க.
பகவானும், பிராட்டியும் அந்த ஹிருஷீவலன் போல அப்பிரதான, அமுக்கிய காரணமாவர்.
கரண களேபரம் கடயிதும் தயமான மன : என்று அவர்களுடய தயைக்கு ஒரு குறைவும் இல்லை .

முகுந்த கருணாம் வந்தே முக்தேர் ஸ்வதிக வத்ஸலாம் |
ஸ்வரூப ஸம்ஸ்தௌ யஸ்யா : நிர்ஹேதுக ஸஹேதுகௌ ||– வேதாந்தச்சார்யர்.
பகவானுடைய க்ருபை , எப்படி பிராட்டி சம்பந்தம் இயற்கையானதோ , அதுபோல இயற்கையாக நிர்ஹேதுகம் தான்.
ஆனால் அது சேதனன் விஷயத்தில் பலிக்க – தானியத்துக்கு உழுத நிலமும், தண்ணீரும், எருவும் போல
ஏதோ சில காரண காரியம் அபேக்ஷித்தமானாலும், பகவத் கிருபை ஸஹே துகம் ஆகிவிடாது.
ஸ்வரூபதயா நிர்ஹேதுகம் தான் என்கிற ஸ்வாமி தேசிகனுடைய கருத்தோடு இது ஒத்துப் போகிறதும் காணலாம்.

ஆக, நிமித்த மாத்ரம் முக்தத்வாத் , ந அந்யத் கிஞ்சித் அபேக்ஷதே . ஸ்வ சக்தியா வஸ்துதா வஸ்துதாம்.
Hence Karma are IMMEDIATE CAUSE and God is REMOTE CAUSE for the Creation of this World of Disparities.

நிமித்த மாத்ரம் என்பது உபாதான, நிமித்த, ஸககாரி காரணத்தைப் பற்றியது அல்ல.
விஷம சிருஷ்டிக்கு அமுக்கிய காரணம் என்றபடி.

நின்னோதம் ச கருணம் (துக்கம்) ச ஜகத் விசித்ரம் |
கர்மா வ்யபேக்ஷ்ய ஸ்ருஜதஸ் தவ ரங்க சேஷிநே|| —பராசர பட்டர் ரங்கராஜ ஸ்தவம் உத்தர சதகம் –42-
இந்த கருத்தையே சொல்வதாக அமைந்திருப்பதைக் காணலாம்.

——————

சூத். 2-1-35 :: ந கர்மா அவிபாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்தயே ச அபி உபலப்பியதேச

பிரளயகாலத்தில்
தமஸ் பரே தேவ ஏகீ பவதி அக்ஷரம் தமஸி லீயதி — ஸுபாலோபநிஷத்து காட்டியபடி
ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர ஆஸீத்
என்பதாக, பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு ”ஸது” என்று ஒன்றாக இருந்தது.
அந்த ஸது என்கிற பிரஹ்மத்திலே அதி ஸூக்ஷ்மமாக இந்த சேதனாசேதங்கள் எல்லாம் ஒரு ஏகதேசமாய் அடங்கிக் கிடக்க,
ஸ்வேச்சையாலே , சங்கல்ப மாத்ரேண , அந்த சேதனங்களின் உஜ்ஜீவனார்த்தமாக செய்கிற ஸ்ருஷ்டி
அவனுடைய கிருபை அன்றி வேறு எதுவாகும்? அதுவே அதற்கு பிரயோஜனமும் ஆகும்.
அதிலே லீலா ரஸம் பாகியாய் கருணையே பிரதானமுமாய் காரியம் செய்கிறான் என்பது கீழே சொல்லப்பட்டது.
இத்தால் நிர்கிருணன் என்பது மறுக்கப்பட்டது.
வைஷம்ய ஸ்ருஷ்டிக்கு அவரவர் கர்ம பரம்பரையே காரணம் அன்றி காடோப கூடா நிதே என்று பிராட்டி நித்ய ஸம்யோகத்தாலே
அவ்விருவருடைய க்ருணத்துக்கு குறைவே இல்லை.
அவாப்த ஸமஸ்த காமேப்ய ஸ்ருஷ்டியா சிந்தனம் பிரயோஜனம்
சேதனே ஜீவா இவ ஹந்ததே கருணா ஹரே! – என்பதை நோக்கவும்.

இப்போது சாங்கியனும், வைசேஷிகனும் சேர்ந்து
ந கர்மா – ஸ்ருஷ்டி காலத்தில் பிரஹ்மம் தவிர்ந்து ஏதும் இல்லை என்றதால் கர்மா எங்கு வந்தது?
ஸது ஏவ என்றதால் ஜீவ அவிபாக மற்ற பிரஹ்மம் என்றுதானே பொருள் படும்–
ஜீவனே தனித்து இல்லாத போது, கர்மம் எங்கிருந்து வந்தது?
ஸதி குட்யேத் ஸது சித்திரம் ? சுவர் இருந்தால் தானே சித்திரம்?
கர்மம் இல்லாத போது விஷம ஸ்ருஷ்டி கர்மத்தை எதிர்பார்த்து எப்படி நடக்கிறது ?
இதிசேத் ந – என்று சொவீர்களாகில் தவறு.
அநாதித்வாத் உபபத்யதே – க்ஷேத்ரஜ்ஞனும் அநாதி. கர்மமும் அநாதி–
எப்போது இவைகளின் தொடக்கம் என்று அறிய முடியாத படிக்கு அநாதி என்று

ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் – கடோபநிஷத்து (ஜீவாத்ம அநாதி என்கிறது )
ஸூர்யா சந்த்ரமசௌ யதா பூர்வம் அகல்பயந் – மஹா நாராயண ஸூக்தம்.
(பிரகிருதி அநாதி என்கிறது)
பிரக்ருதிம் புருஷம் ச ஏவம் வித்தி அநாதி உபாவபி — கீதை 13-19.
ஸ்ருதிகளில் சொல்லப் பட்டு இருக்கையால்

சூழ்தகன்றாழ்ந்த்துயர்ந்த என்று மூன்று தத்வங்களையுமே அநாதி, நித்யம் பிரஹது என்று ஆழ்வாரும் காட்டியுள்ள படியால் .
அவிபாகமாக இருந்தபோதும் ஜீவன் என்கிற தத்வம் – ஏகமேவ அதுவிதீயம் என்ற போதும் – உண்டு.
அவை இல்லாமல் போகவில்லை. பரமாத்மா எப்படி அநாதியோ,
அதுபோல ப்ரக்ருதி, ஜீவன் என்கிற மூன்று தத்துவங்களும் அநாதிதான் என்றே தேறும்.
அவரவர்க்கான கர்மாவும் வாசனா ரூபமாக ஜீவ ஏக தேசம்.

சதுர்முக பிரம்மா தொடங்கி ஆஸ்தம்ப பர்யந்தம் கர்ம பாசம் ஒருபோதும் விடுவதில்லை.
அவித்யா நிவர்த்தி ஏவ மோக்ஷம் என்றார் சங்கரர்,
ஏக விம்சதி துக்க துவம்ச மேவ மோக்ஷம் என்றார்கள் நையாயிகர்.
அப்படியன்று.
கர்ம பிரவாகரூப, அவித்யா நிவர்திப் பிரத பகவத் பிரசாதத்தாலே மோக்ஷம் – என்று கீழ்ப்படியிலிருந்து
மேல்படிக்கு வந்து சேரவேண்டும் என்பது தாத்பர்யம்.

தமஸ் பரே தேவ ஏகீ பவதி – என்றாலும்
சேதநாசேதன தத்வங்கள் அதிசூக்ஷ்ம பரிணாமத்தில் , நாம ரூப விபாகமற ஸது என்கிற தத்வத்தில் ஒடுங்கி கிடக்கின்றன-
அமானவனும் தீண்டல் கடன் என்று அவை மோக்ஷ பர்யந்தம், நித்ய பிரளயம், அவாந்தர பிரளயம், ஆத்யந்த்திக்க பிரளயம் என்று
எக்காலத்து எப் பிறப்பிடை தோறும் கர்ம வித்யத ஏவ.

அத்யாயம் 1-3-2 ல் , முண்டகோபநிஷத் மந்திரங்கள்
ததா வித்வாந் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி என்றும்
யதா நந்ய : சயந்தமாநா : சமுத்ரே அஸ்தம் கச்சதி நாமரூபே விஹாய
ததா வித்வாந் நாம ரூபாத் விமுக்த : பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் என்றும் –சொல்லியபடி
2வது மந்திரம் பிரளய காலத்துக்கும் பொருந்தும்.
ஆனால் 1, 2 மாக நாம ரூபம் போவது மட்டுமல்லாமல், புண்ய பாபமும் தொலைவதே மோக்ஷ தசை.
இதன் படி, பிரளயத்தில் நாம ரூப விபாகம் இல்லா விட்டாலும், புண்ய பாபங்கள் விடுவதில்லை என்பது காட்டப்பட்டது.

பரமாத்ம ஸம்பத்தி – சேர்க்கை –
நித்ய பிரளயம் – காட நித்ரையிலும் உண்டு.
ஆத்யந்த்திக்க பிரளயம் – பிரம்மாவுக்கு ஆயுசு முடிந்த காலத்தில் -தமஸ் பரே தேவ ஏகீ பவதி-என்ற காலத்திலும் உண்டு.
மோக்ஷ திசையிலும் உண்டு.
வித்யாசம் என்ன வென்றால்
நித்திரை தமஸ் காரியமாதலால் அந்த சேர்த்தியை நாம் உணருவதில்லை.
பிரளயத்தில் வென்னில், கரண-களேபரம் அற்ற நிலையில் அறிவதற்கில்லை.
அந்தர்யாமி அவஸ்தையிலும் உண்டு–ஆகிலும் அது யோகிகளுக்கு மட்டுமே பிராப்தம்.
மோக்ஷ தசையில் மட்டுமே அது ஸர்வோபஜீவிதம்.

சிந்தயந்திக்கு கிருஷ்ண சாஷாத்காரத்தாலே புண்யங்கள் தொலைய, அவனை அடைய ஒட்டாது மாமிமார்கள் தடுத்த
விரஹ தாபத்தால் பாபங்களும் தொலைந்த படியாலே மோக்ஷம் உடனே பெற்றாள்.
தீர்க்க சிந்தயந்தியான ஆழ்வாருக்கும் அடியிலே மயர்வற மதிநலம் அருளி, ஸம்ஸ்லேஷ விஸ்லேஷதிகளாலே
பகவத் சாக்ஷஅத்காரம் கிட்டினபோதும் மோக்ஷம் போகாமல் விட்டு வைத்தது
நாடு திருந்த;
நச்சுப் பொய்கை ஆகாமைக்கு;
பிரபந்தம் தலைக்கு கட்ட
என்றார் இறே ஆசார்ய ஹ்ருதயக் காரர்.

பிரதான காரண வாதியான சாங்கியர் என்ன,
பரமாணு காரண வாதியான வைசேஷிகன் என்ன,
நீங்கள் வைதீகர்களாக இருந்தும் , பிரவாகதாயா கர்ம சித்தாந்தத்தை ஒத்துக் கொள்ளாது போவீர்களாகில்,
நீங்களுக்கும் ஸ்வபாவ வாதியான சாருவாகர்கள் போலே யாவீர்கோள்? என்பதான நிந்தனைக்கு ஆஸ்பதம்.

சாருவாக மதம் ரிணம் கிருத்வா க்ருணம் பிபேத் என்கிற கண்டதே காட்சி. கொண்டதே கோலம் என்றிருக்கிற நாஸ்திக வாதிகள்.
மயில் தோகைக்கு வண்ணத்தை தீட்டியது, காக்கைக்கு கடூர ஸ்வரமும், , குயிலுக்கு மதுர ஸ்வரமும் போல
பிரகிருதி பேதம் ஸ்வபாவம் அல்லாது கடவுள் என்ன தூரிகை கொண்டு தீட்டினானா?
அல்லது தொண்டைக் குழியை வளைத்து நிமிர்த்தினானா? என்கிறான்.
அதற்கு புண்ய பாபங்களை கற்பித்து, தர்மாதர்மங்களை சிருஷ்டிக்க வேண்டாம் என்பதான அவைதிக மதம்.
அவர்களோடு ஓக்க கர்மாவை கடைக் கணிச்சிக்க வேண்டாம் என்பதான புரிதலோடு
பூர்வ பக்ஷம் அனைத்தும் தள்ளுண்ணப் பட்டது.

—————-

சூத். 2-1-36 ::ஸர்வ தர்ம உபபத்தே : ச —

சாங்கியர்களுடை பிரதானத்துக்கு இல்லாத குணங்கள்,
வைசேஷிகர்களின் பரமாணுவுக்கு இல்லாத தர்மங்கள் ,
லோக விசஜாதீயமான பர பிரஹ்மத்திடம் இருக்கின்றபடியால், நீங்கள் சொல்லுகிற பிரதான காரண வாதமோ,
பரமாணு காரண வாதமோ பொருத்தமில்லை.
பிரஹ்ம காரண வாதம் தான் அவிசாரணீயம். உங்களுடைய மதத்தில் என்ன என்ன தர்ம வைகைல்யம், நியூனதை ,
குறைபாடு உண்டோ ,அது எதுவும் பிரஹ்ம காரண வாதத்தில் கிடையாது.
ஜகத் காரணத்து தேவை என்று எவை எவை உள்ளனவோ அவை அனைத்தும் பிரஹ்மத்திடத்தில் உள்ளதால்-
பிரஹ்மமே ஜகத் காரணம் என்பது ஸ்திதம்.

இதம் சூத்ரம் ஸர்வ அதிகரண சேஷம்–
இந்த கடைசீ சூத்ரம் அவிரோத அத்யாயம் 10 அதிகரணத்துக்கும் மட்டும் அல்லாது ,
கீழ் உள்ள ஸமன்வய அத்யாயத்திலுள்ள அனைத்து அதிகரணத்துக்குமாக சேர பிடித்து சொன்னதாகக் கொள்ள வமையும்.

ஸ்ரீபாஷ்யம் 2ம் அத்யாயம் முதல் பாதம் ஸம்பூர்ணம்.

—————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading