ஸ்ரீ பாஷ்யம்—சமந்வய அத்யாயம்— சங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணம்-1-4–3-ஸூத்ரங்கள்- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் —
இரண்டாம் அதிகரணம்-சமச அதிகரணம் –3-ஸூத்ரங்கள்—
மூன்றாம் அதிகரணம்—சங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணம் -3-ஸூத்ரங்கள்-
நான்காம் அதிகரணம்— காரணத்வாதிகரணம்–2-ஸூத்ரங்கள்- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

————————————————————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் 29–ஸூத்ரங்கள் –
இரண்டாம் அதிகரணம்–சமச அதிகரணம் –3-ஸூத்ரங்கள்–1-4-8/9/10-—-ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள்
மூன்றாம் அதிகரணம்—சங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணம்–3-ஸூத்ரங்கள்-

—————

விஷயம்
இந்திரியங்கள் ஆகாசம் போன்ற அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே என்று நிரூபணம் –

1-4-11-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –

எண்ணிக்கையைக் கூறுகிறது என்பதால் சாங்க்ய யோகம் என்றது ஆகாது –
வேறுபடுவதாலும்-அதிகம் உள்ளதாலும் -என்றவாறு –

ப்ருஹத் ஆரண்யாகாவில்-4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசாஸ்ஸ ப்ரதிஷ்டித தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –
என்று-எந்த ஆத்மாவிடம் ஐந்து ஐந்து பேர்கள் மற்றும் ஆகாசம் நிலை பெறுகின்றனவோ அவனே ஆத்மா –
அந்த ஆத்மாவை இப்படியாக அறிபவன் முக்தனாகிறான்
இந்த மந்திரத்தில் ஐந்து ஐந்து என்று -25-தத்வங்களோ-சாங்க்யர்கள் சொல்வது போலே என்ற சங்கை

பூர்வ பக்ஷம்
கபில தந்திரத்தில் கூறப்பட்டதே இங்கு பஞ்சநா ஐந்து கூட்டங்கள் -25-இவையே முக்தி பெற அறிய வேண்டியவை
கபில மதத்தில் –மூல ப்ரக்ருதி அவிக்ருதிர் மஹாதாத்யா பிரகிருதி விக்ருதய சப்த -ஷோட சகச்ச விகாரோ -விகாரஸ்து –
ந ப்ரக்ருதிர் ந விக்ருதி புருஷ –என்று அனைத்துக்கும் காரணம் மூல ப்ரக்ருதியே —
மஹத் அஹங்காரம் ஆகாசம் வாயு அக்னி நீர் பூமி ஆகிய எழும் ஓன்று மற்ற ஒன்றின் காரணம் –
பஞ்ச பூதங்கள் பதினோரு இந்திரியங்கள் கார்யம் –ஆத்மா காரியமும் அல்ல காரணமும் அல்ல –
இதுவே இந்த மந்திரத்தில் கூறப்படுகிறது என்பதே கபில தந்திரம்

சித்தாந்தம்
ந சங்க்ய உப சங்கரஹாத் அபி
இங்குள்ள பஞ்ச பஞ்ச ஜனா -என்று -25-பற்றி கூறினாலும் இது கபில தந்த்ரத்தை உணர்த்தப்பட வில்லை –
நாநா பாவாத் –
வேறாக உள்ளதால்
பிருஹு -6-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்சநா ஆகாசச்ச ப்ரதிஷ்டித -என்பதில் யஸ்மின் -யத் என்ற சொல்லால் –
அவை அனைத்தும் ப்ரஹ்மத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளன என்பதால் ப்ரஹ்மாத்மகமே
மேலும் பிருஹு -4-4-17-
தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் -என்று அந்த ஆத்மாவை இப்படியாக அறிபவன்
முக்தி அடைகிறான் என்பதில் உள்ள
தம் -அந்த -என்பது ப்ரஹ்மமே ஆகிறது
இதுவே கீழே யத் என்ற சொல்லால் காட்டப்பட்ட ப்ரஹ்மம் –
எனவே வேறுபட்டதாகும்
அதிரேகாத் ச –
இங்கு கூறப்பட்டவை கபில தந்திரத்தில் கூறப்பட்ட எண்ணக்கையை விட அதிகமாக உள்ளன –
அதாவது -யத் -என்பதால் கூறப்பட்ட ஆத்மா -ப்ரஹ்மம் -மற்றும் ஆகாசம் ஆகியவை இரண்டும் கூடுதலாகும்
ஆகவே -தம் ஷட்விம்சகம் இத்யாஹு சப்த விம்சதா பரே–தத்வங்கள் -26-என்றும் -உயர்ந்த ப்ரஹ்மம் -27-என்றும் சொல்லும்
சுருதி வாக்கியத்தின் படியே அனைத்துக்கும் ஆதாரமாக உள்ள சர்வேஸ்வரனும் பரமபுருஷனும் ஆகிய
ப்ரஹ்மமே இங்கு உபதேசிக்கப்படுகிறான்
ஸூத்ரத்தில் -ந சங்க்ய உப சங்கரஹாத் அபி-என்பதில் அபி சப்தம் -என்றால் கூட -என்பதன் மூலம்
பஞ்ச பஞ்ச நா என்று இருந்தால் கூட -25-தத்துவங்களே கூறப்பட்டன என்று கூற முடியாது
இங்கு ஒவ் ஒன்றும் ஐந்து எண்ணிக்கைகள் கொண்ட ஐந்து கூட்டங்களாக உள்ளன என்று கூறப்பட வில்லை
பொதுவான ஜாதி குணங்கள் வேறே எந்த அடிப்படையிலோ ஐந்து கூட்டங்களாக பிரிக்க முடியாதே
ஐந்து கர்ம இந்திரியங்கள் ஐந்து ஞான இந்திரியங்கள் ரோந்து பூதங்கள் ஐந்து தன்மாத்திரைகள் மீதம் உள்ள ஐந்து என்று
கொள்ளலாமே என்னில் இது சரி அல்ல -ஆகாசம் தனியாக –4-17-மந்திரத்தில் இருப்பதால் –
ஆக பஞ்ச அடைமொழிகள் உடன் கூடிய பஞ்ச ஜனா -என்றது
சப்த சப்த ரிஷிகள் ஏழு சப்த ரிஷிகள் என்றால் போலவே –

ஆக -5 தன்மாத்ரைகள் -5-ஞான இந்த்ரியங்கள் -5 கர்ம இந்த்ரியங்கள் -பிரகிருதி -மனம் -அஹங்காரம் -ஆத்மா
என்று 25 தத்வமாக ஜீவனைக் குறித்து-இவற்றை அறிந்தால் மோஷம் பெறலாம் என்கிறது உபநிஷத்
சாங்க்ய மதம் போலே சுதந்திரமான தத்வங்கள் அல்ல
யஸ்மின்-என்று பரம் பொருளைச் சார்ந்தே உள்ளவை-என்றவாறு

அத்யாத்ம விஞ்ஞானம் –பரமாத்மா உபாஸகம்-சஷூசா -கண்ணால் குடிக்கும் படி –
ஸ்ரீ ராமாயணத்தில் -உபாதேயமான வஸ்துக்களை நாம் கண்ணாலும் பருகுகிறோமே பிராக்ருதத்தில் -அர்ச்சை மூலம் ஆரம்பம் –
மேலே மேலே பரத்வம் பர்யந்தம் அனுபவம்
பௌமா பிபந்து அந்வஹம்—பூமியில் உள்ளார் அனைவரும் குடிக்கட்டும் -இந்த அம்ருதம் -மங்கள ஸ்லோகம் படி –
தேவதா -ஸ்வரூபம் -மட்டும் இல்லாமல் ஸ்வரூபதயா பர ப்ரஹ்மம் உபாஸகம் மிகவும் ஸ்ரேஷ்டம் -பூர்த்தி இதுவே -அத்யாத்ம உபாஸகம் –
முதல் நூறு -திருவாய் மொழி -ஸ்வரூபமே -அர்ச்சை கலசாமல் -கண்ணன் அருகிலானே–முடியில் உளானே –
யோக சாஸ்திரம் -படியே அனுபவம் -மானஸ அனுபவம் –
இதில் சர்ச்சைகளோ -சம்பிரதாய பேதங்களோ வராதே-
அனைத்தையும் தாண்டி நேராக பர ப்ரஹ்ம அனுபவம் –அஹம் ப்ரஹ்மாஸ்மி உபாசனமும் அனுபவமும் –
யாருக்கும் நினைக்கவும் கற்பனை பண்ணவும் எட்டாத விஷயம்

ஜ்யோதிஷம் ஜ்யோதி வித்யை இது -மூல ஸ்வரூபம் -அனைத்துக்கும் அந்தர்யாமி -25-தத்துவங்களும் இவன் இடம் பிரதிஷ்டை —
பரஞ்சோதி ஓ -ஆயிரம் இரவி கலந்தால் ஒத்த –
சமாசம் –பல உண்டே சமஸ்க்ருதத்தில் -பிதரவ் – மாதாவையும் பிதாவையும் -ஏக சேஷ சமாசம் –
த்வந்த சமாசம் இரண்டு சமாகாரம் group-பாணவ் பாதவ் –
தாராகா புல்லிங்கம் பஹு வசனம் -ஒருவளாக இருந்தாலும் – ப்ரத்யயம் பொறுத்து லிங்கம் /
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா-25-entities-

நாநா பாவாத் -இருப்பதாலும் -யஸ்மின் பஞ்ச பஞ்சநா ஆகாசச்ச ப்ரதிஷ்டித-இருப்பதாலும் –
நாஸ்திக தரிசனங்கள் ஆறு –
ஆஸ்திக தரிசனங்கள் ஆறு -நியாயம் வைசேஷிகம் -சாங்க்யம் யோகம் -பூர்வ மீமாம்ச உத்தர மீமாம்ச –
-சாங்க்யம் நிராகாரம் ஞான யோகம் -யோகம் சா ஆகாரம் பக்தி மார்க்கம் -குண மார்க்கம் –
பக்தி மார்க்கமே நமக்கு என்று வலியுறுத்தி அருளவே இவ்வளவு அதிகரணங்களால் சாங்க்ய நிரசனம்
அக்ஷரம் அவ்யக்தம் –பக்தர் நித்ய யுக்தர் -ஸ்ரீ கீதை -இருவரும் மாம் ஏவ-சேர்ந்தாலும் -ஸ்ரமம் படுவார்கள் அவர்கள் –
பக்தர் -அத்யந்த ப்ரீதி யுக்தர் –
ஞான மார்க்கம் பக்தி ரூபா பன்ன மார்க்கமே -பக்தி ரேவா முக்தி உபாயம் –

வித்வான் -பரமாத்மா சாஷாத்காரம் அடைந்தவன் -25-தத்துவங்களும் ஆகாசமும் யார் இடம் பிரதிஷ்டை செய்யப்பட்டனவோ –
யத் சப்தமும் உண்டே -இதில் -சாங்க்ய மத பிரக்ருதியை சொல்லவில்லை
சமாசம் அடிப்படையிலும் இது ஒவ்வாது -சமகாராம் -சமாகம்-

இதுக்கு பூர்வ பக்ஷம்
அப்படியானால் பஞ்ச பஞ்ச ஜனா என்று கூறப்படுபவை எவை

அடுத்த ஸூத்திரத்தில் சமாதானம்

—————–

1-4-12-ப்ராணாதய வாக்ய சேஷாத்-

முடிக்கும் பகுதி மூலமாக பிராணன் போன்றவையே கூறப்பட்டதாகிறது -என்றவாறு

பஞ்ச பஞ்ச ஜனா -ஐந்து பொருள்கள் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் 6-4-18-
பிராணஸ்ய பிராணமுத சஷூஷஸ் சஷூ ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்-
அந்நஸ் யாந்னம்- மநஸோ யே மநோ விது—என்று
ப்ராணனுக்கு பிராணன்-கண்ணுக்கு கண் -காதுக்கு காது -அன்னத்துக்கு அன்னம் அல்லது நாக்குக்கு நாக்கு –
மனஸூக்கு மனமாக எதை அறிகிறார்களோ என்று கூறப்படுகிறது
ஆகவே ப்ரஹ்மத்தை ஆதாரமாகக் கொண்ட பிராணன் போன்றவையே இங்கு பஞ்ச பஞ்ச ஜனா -என்று அறியப்படுகிறது

கண்ணாலே வஸ்துவை பார்க்க முடியாது –நம் கண் பார்ப்பதற்கு காரணம் பர ப்ரஹ்மமே –
இது போலே மனசு கிரஹிக்கவும் -காதால் கேட்பதற்கும் –
கண்ணுக்கும் கண் காதுக்கும் காது மனஸுக்கும் மனசு பிராணனுக்கும் பிராணன் பர ப்ரஹ்மமே –
கேனோ உபநிஷத்துக்கும் இத்தையே சொல்லும் –

பூர்வ பக்ஷம்
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா-6-4 17-என்ற மந்த்ரம் காண்வர்கள் மற்றும் மாத்யந்தினர்களுக்கும் பொதுவானதாகும் –
ஆனால் -பிராணஸ்ய ப்ராணம் -6-4-18-என்ற மந்த்ரத்தை காண்வர்கள் ஓதும் போது
அவர்கள்- அன்னஸ்ய-என்று படிப்பதில்லை
அப்படி என்றால் அவர்கள் சாகையில் பஞ்ச பஞ்ச ஜனா என்பதன் மூலம் பிராணன் போன்றவை
கூறப்படுகிறது என்று சொல்ல முடியாதே

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————

1-4-13-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –

முன்பு உள்ள ஜ்யோதி என்ற பதம் மூலம் அன்னம் என்பது இல்லாத போது
அவ்விதம் அறியப்படுகிறது -என்றவாறு

ஏகேஷாம் –என்றால் –
காண்வ சாகை பாடத்தில் -என்று பொருள்
அஸ்தி அந்நே –
அன்னம் கூறப்படவில்லை என்றாலும்
ஜ்யோதிஷாம்
ஜ்யோதி என்ற சொல்லால் -பஞ்ச ஜனா என்பது இந்த்ரியங்களைக் குறிக்கிறது என்று அறியப்படுகிறது
பிருஹு 4-4-17-யஸ்மின் பஞ்ச பஞ்சஜனா என்ற மந்திரத்தின் முன்பு
4-4-16-தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயுர் ஹோபாஸதே அம்ருதம் –என்று பரமாத்மாவை தேவர்கள் உபாசிக்கிறார்கள் –
அவன் பிரசாதம் மூலம் பெற்ற ஜ்யோதிஸ்ஸூக்கள் எவை என்று நிச்சயிக்காமல் இருக்க
இந்த மந்த்ரம் -4-4-17-யஸ்மின் பஞ்ச பஞ்சஜனா-என்று இவை வெளி விஷயங்களை பிரகாசித்து உணர்த்தப்படும்
இந்த்ரியங்களே என்று சொல்லி
அடுத்து -4-4-18-பிராணஸ்ய ப்ராணம் –என்பதில் இரண்டாவது பிராணன் மூலம் ஸ்பர்ச இந்திரியம் –
வாயு வுடன் தொடர்பு கொண்டது அன்றோ -என்பதாலும்
முக்கிய பிராணனை ஜ்யோதி என்ற பதம் காண்பிக்க இயலாது என்பதாலும் ஆகும் –

சஷுஸ் ச சஷு -என்பதில் உள்ள -சஷுஸ் ச என்பதன் மூலம் பார்க்கும் இந்த்ரியமான கண்ணும்
ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம் என்பதில் உள்ள ஸ்ரோத்ரஸ்ய என்பதன் மூலம் கேட்க்கும் இந்த்ரியமான காதும் கூறப்பட்டது
இது தந்திரமாக -ஒரு முறை செய்யும் ஒரு செயல் மூலம் பலவும் நிறைவேறுதலே தந்திரம் எனப்படும் –
பூமியானது மணம்-கந்தம் -என்பதுடன் சம்பந்தம் கொண்டுள்ளதால் –அந்த பூமியில் விளையும் அந்நம் மூலம்
அந்த சுவைக்கும் இந்த்ரியத்துடன் அன்னத்துக்கு தொடர்பு
மனஸ யே மன -என்பதில் மனச -என்றது மனத்தைக் குறிக்கும்
இங்கு மணம் மற்றும் சுவை ஆகிய இந்திரியங்கள் தந்திரமாக எடுக்கப்பட்டதால் ஐந்து என்று எண்ணிக்கை கூறும்
பஞ்ச பஞ்ச ஜனா வாக்யத்துடன் முரண்படாமல் உள்ளது –
ஆக ஞானத்தை ஏற்படுத்தும் மனம் முடிய உள்ளதான இந்த்ரியங்களே இங்கு பஞ்ச ஜனா என்று கூறப்படுகிறது –
மனத்துடன் சேர்த்து இந்திரியங்கள் ஆறு அன்றோ என்ற சங்கைக்கு விடை அளிக்கிறார்
இங்கு முரண்பட்டு வாராமல் இருக்க நுகருதல் சுவைத்தல் இரண்டையும் தந்த்ரத்தல் சொன்னதாயிற்று

ப்ருஹதாரண்யம் சுக்ல யஜுர் வேதம் -காண்வ சாகை -மாத்யந்தகம் சாகை -இரண்டு உண்டே
அந்தர்யாமி ப்ராஹ்மணம் -காண்வ சாகை -பாட பேதம் உண்டு –
ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயுர் ஹோபாஸதே அம்ருதம்-முதல் ஜ்யோதி இந்திரியங்களைச் சொல்லி -flame-
இவற்றுக்கும் ஜ்யோதி கொடுப்பவன் அவனே -கட உபநிஷத் சொல்லுவதை முன்பே பார்த்தோம் –
இத்தையே யஸ்மின் பஞ்ச பஞ்ச -என்பதால் இது பிரகிருதி இல்லை பரமாத்மாவையே சொல்லும் –
அவனை அந்தர்யாமியாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே சொல்லும் -உபாதானமும் ப்ரஹ்மமே ப்ரக்ருதி இல்லை என்றவாறு –

ஆகவே ப்ருஹு -4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசச்ச ப்ரதிஷ்டித -என்ற வாக்யத்தால்
பஞ்ச இந்திரியங்களும் ஆகாசம் என்பதன் மூலம் பஞ்ச பூதங்களும் ப்ரஹ்மத்தில் நிலை நிற்கின்றன என்பதும்
அனைத்து தத்துவங்களும் ப்ரஹ்மத்தையே அண்டியுள்ளவை என்பதையும் கூறப்பட்டதாயிற்று

இதன் காரணமாக கபில தந்திரத்தில் மூலம் வெளிப்படும் -25- தத்வங்கள் குறித்து
இங்கு ஏதும் இல்லை என்று நிரூபணம்

—————-——————–———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading