ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
முதல் அதிகரணம்-ஆநு மாநிகதிகரணம் -7-ஸூத்ரங்கள்—- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா
பாசாரர்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
——————————————————————————–
முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் 29–ஸூத்ரங்கள் –
ஆநு மாநிகதிகரணம் –7-ஸூத்ரங்கள்-1-4-1 /2/3/4/5/6/7–
1-4-1-ஆநு மா நிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ் தக்ரு ஹூதே தர்சயதி ச –
பிரக்ருதியும் காரணப் பொருளாக உபநிஷத் வாக்யங்கள் உள்ளன என்பர் -அது சரி அல்ல –
உடலை உருவகப் படுத்தவே அப்படி சொல்லப் பட்டது
கட உபநிஷத் -இந் த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா அர்த்தேப் யஸ்ஸ பரமமந
மநசஸ்து பரா புத்திர் புத்தேராத்மா மஹான்பர
மஹத பரம வ்யக்த மவ்யக்தாத் புருஷ பர
புருஷா ன்ன பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பராகதி –கட உபநிஷத்-10-11-என்று
புலன் -பொருள்கள் -மனம் -அறிவு -மஹான்-அவயகதம் உடல் -புருஷன் -இதை விட மேல் ஒன்றும் இல்லை –
இது சாங்க்ய மதம் ஈஸ்வர தத்தவத்தை ஒத்துக் கொள்ளவது இல்லை –
சித்தாந்தம் -முன்னால் அதே உபநிஷத்தில் யமன் நசிகேதனிடம்
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மன பிரக்ரஹமேவ ச
இந்த்ரியாணி ஹயா நா ஹூர் விஷயாம்ஸ் தேஷு கோசாரான்-என்றும்
விஜ்ஞாந சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹ வான் நர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
உடலைத் தேராகக் கொண்டு மன உறுதியை தேர் ஒட்டுபவனாகவும் -மனத்தை கடிவாளமாகவும்
புலன்களை குதிரைகளாகவும் உலக விஷயங்களை பாதையாகவும்
யார் ஒருவனுக்கு இந்த தேர் சரியாக ஓடுகின்றதோ அவன் பரமபதம் சென்று அடைகின்றான்
இத்தால் பூர்வ பஷ வாதங்கள் உடைக்கப் படுகின்றன-
மனஸ் வேறே புத்தி வேறே -மனஸ் இந்திரியம் -புத்தி ஆத்மாவின் தர்மம் –
brain-வேறே மனஸ் வேறே
இதே ரூபகம் ஸ்ரீ கீதையிலும் உண்டே
புத்தி சாரதி மனஸ் ஆகிய கயிற்றால் இந்திரியங்களை வசப்படுத்தி –
கடவல்லி து ஆம் நாயதே -அன்று அனைவரும் இத்தை அறிந்தவர்கள்
பராகதி-உத்க்ருஷ்டம் -பரம் இதுவே -stronger–supriyar –
இந் த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா -இந்திரியங்களை விட சப்த ஸ்பர்சம் ரூப ரஸ கந்தங்கள் வலிமை யானவை –
அர்த்தேப் யஸ்ஸ பரமமந-அர்த்தங்களை விட மனஸ் வலிமை -கட்டுப்படுத்தும் கயிறு இது ரூபகத்தில்-
மநசஸ்து பரா புத்திர் -கயிற்றை விட பிடிக்கும் சாரதி வலிமை
புத்தேராத்மா மஹான்பர-சாரதி விட -சொந்தக்காரர் -ரதி -ஆத்மா புத்தியை விட வலிமை
மஹத பரம் அவ்யக்தம் -பிரகிருதி –மூல பிரகிருதி -சாங்க்யர் இதுவே மூல காரணம் என்பர்
நாம் -24-தத்துவங்களாக கொண்டதாக சொல்லுகிறோம் –
மஹத் தவம் புத்தி என்பது வேறே இந்த புத்தி வேறே
மஹத் தத்வம் -அஹங்காரம் -சாத்விக ரஜஸ் தமஸ் அஹங்காரம்-
குண குணி-தர்ம தர்மி பாவம் -நிறமும் வஸ்துவும் –
அஹங்காரத்தில் இருந்து -16–பஞ்ச ஞான இந்திரியங்கள் – பஞ்ச கர்ம இந்திரியங்கள் பஞ்ச தன்மாத்திரைகள் -மனஸ்
பஞ்ச பூதங்கள் -பஞ்ச தன்மாத்திரைகளில் இருந்து -ஆக இப்படி -24-
ஏக தத்வ வாதம் -புத்தர் -ஞானம் மட்டும் -சூன்ய தத்வ வாதம்
mind matter த்வி தத்வ வாதம் சாங்க்யர்
த்ரி தத்வ வாதம் நம்மது –சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஏகமேவ அத்விதீயம் –
ஆநு மாநிகதிகரணம் —
சங்கதி -அங்கதமாக இருக்கக் கூடாதே -பாத சங்கதி ஸ்வாமியே காட்டி –
பக்த முக்த உபய அவஸ்தா விலக்ஷணம் -இதர ஸமஸ்த விலக்ஷணம் -ஜகத் காரணம் ஸ்தாபித்த பின்பு
பிரகிருதி ஜகத் காரணம் இல்லை என்று காட்ட -ப்ரஹ்ம ஏவ காரணம் ஸ்தாபிக்க -இந்த பாதம் –
தினவு அடங்க வியாக்யானம் -சங்காலேசமும் இருக்கக் கூடாதே -ஸ்ருதி வாக்கியங்கள் சில கொண்டு –
மேலும் வியாக்யானம் -ஸ்தூணா நிகனான நியாயம் –
அவ்யக்தம் -விஷய வாக்கியம் -பிரகிருதி -சரீரம் -நாசிகேத வித்யை -1-3-3/4–கட உபநிஷத்
அலங்கார சாஸ்திரம் -125-அலங்காரங்கள் -ரூபக அலங்காரம் இதில் -உவமானம் வேற –
முக கமலம் ரூபகம்-சந்த்ர இவை முகம் -உவமானம் உபமேயம் –
ஆத்மாந் ரதிநம் வித்தி ஷரீர் ரதமேவ து .
புத்திம் து ஸாரதிம் வித்தி மந ப்ரக்ரஹமேவ ச ৷৷ 1.3.3 ৷৷
தேரில் இருவர்-முதலாளி ஆத்மா – தேரோட்டி -புத்தி ஞானம் உறுதி தேரோட்டி -சரீரம் தேர் -இந்திரியங்கள் குதிரை -மனஸ் கடிவாளம் –
ஒழுங்காக ஓட்ட வேண்டுமே -மனஸ் இந்திரியங்கள் வேண்டும் இல்லாமல் ஆக்க முடியாது –
சரியான இடங்களில் செலுத்த வேண்டும் -பரமாத்மா இடம் சேர வேண்டும் -இவற்றை எல்லாம் விட்டு ஆத்மா அவனையே அனுபவிக்கும்
ஆத்மா புத்தி மனஸ் இந்திரியங்கள் -ஒன்றை அடுத்து நியமிக்கும்
இந்த்ரியாணி ஹயாநாஹுர் விஷயா் ஸ்தேஷு கோசராந் –
ஆத்மேந்த்ரிய மநோ யுக்தம் போக்தேத்யாஹுர்மநீஷிண ৷৷ 1.3.4 ৷৷
போக்த்ரு போக்தா சம்பந்தம் -இந்திரியங்கள் குதிரை -விஷயாந்தரங்கள் சப்தம் இத்யாதி
கண் ரூபம் -காது சப்தம் -தோள் ஸ்பர்சம் நாக்கு ரசம் மூக்கு கந்தம்
இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா அர்தேப்யஷ்ச பரம் மந–
மநஸஸ்து பரா புத்திர்புத்தேராத்மா மஹாந் பர ৷৷ 1.3.10 ৷৷
ஒன்றுக்கு ஓன்று யார் வலிமை -புலன்களை விட -அர்தேப்யஷ்ச-சப்தம் இத்யாதி வலிமை -இவற்றை இழுக்கும் —
நாக்கை விட ருசிக்கு -சக்தி அதிகம் –
விஷயங்களை விட மனஸ் சக்தி மிக்கது –மனசை விட புத்தி வலிமை கொண்டது –மனம் சிந்திக்க கருவி –
புத்தி ஞானம் முடிவு எடுக்கும் -புத்தியை விட ஆத்மா வல்லமை -புத்தியையும் அடக்கலாம்
மஹத பரமவ்யக்தமவ்யக்தாத் புருஷ பர–
புருஷாந்ந பரம் கிம் சித் ஸா காஷ்டா ஸா பரா கதி ৷৷ 1.3.11 ৷৷
பர ப்ரஹ்மம் வலிமை -பரம புருஷனுக்கு மேலே யாரும் இல்லை -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ
ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோத்மா ந ப்ரகாஷதே .
தரிஷ்யதே த்வக்ர்யயா புத்த்யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம தர்ஷிபி ৷৷ 1.3.12 ৷৷
சுலபமாக அறிய முடியாது -சரீரம் தடை -மறைக்கும் -திரோதானம் -பகவத் ஸ்வரூபம் திரோதான கரி -ஏகாக்ர புத்தி வேண்டும்
பார்க்க முடியும் -பஸ்யந்தி இல்லை -த்ருஷ்யந்தி -பார்க்கப்படக் கூடிய விஷயம் – கர்மணி பிரயோகம் –
ஆசை உண்டாக வேணும் -மார்க்கம் இருக்கு -காட்ட எழுப்புகிறது மக்களை உபநிஷத் –
உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வராந் நிபோதத .-விஷயங்களை அறிந்து அடையுங்கோள்-
இந்திரியங்கள் -சப்தாதிகள் -மனஸ் -புத்தி -அவ்யக்தம் -புருஷ -பர ப்ரஹ்மம் -ஒன்றுக்கு ஓன்று பரம்
சப்த ரசம் ரூபம் ஸ்பர்சம் கந்தம்-இவை அர்த்தங்கள் –
அவ்யக்தம் -பிரகிருதி -பூர்வ பக்ஷம் —
சாங்க்ய வாதம் -இதுவே ஜகத் காரணம் –
இங்கு சரீர வாசகம் சித்தாந்தம்
ஆநு மா நிகம் அபி ஏகேஷாம் -பூர்வ பக்ஷம் –
இதி சேத் ந -அப்படி இல்லை –
சரீர ரூபக விந்யஸ் தக்ரு ஹூதே தர்சயதி ச -என்றவாறு –
மனஸ் -mind -brain -வேறே வேறே -புத்தி ஆத்ம தர்மம் -புத்தி சாரதி என்பதால் –
இதே ரூபகம் கீதையிலும் உண்டே கட உபநிஷத்தில் உண்டு –
விஷய வாக்கியங்கள் -10-11-மந்த்ரங்கள் -இங்கு /கடவல்லி ஸூ ஆம் நாயதே -நேராக ஆரம்பித்து –
ஸ்ரீ பாஷ்யம் கற்க வருபவர் உபநிஷத் அனைத்தும் அறிந்தவர்கள் –
மனசை விட அவ்யக்தம் பரம் -பிரகிருதி -மூல பிரகிருதி சாங்க்யர் சொல்வர்-
நாம் பிரக்ருதி விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம்-
புத்தி -மஹத் தத்வம் -அஹங்காரம் தத்வம் ego இல்லை -சத்வம் ரஜஸ் தமஸ் மூன்றாக பிரிந்து –
வஸ்து வர்ணம் தர்ம தர்மி பாவம் –குண குணி பாவம் –
தஸ்மாத் ஷோடச -16-ஞான கர்ம இந்திரியங்கள் மனஸ் தன்மாத்திரைகள் -சப்த ரஸ ஸ்பர்ச ரூப கந்த மூல அவஸ்தைகள் –
பஞ்ச பூதங்கள் -பஞ்ச குணங்கள்–சூன்ய தத்வ வாதம் -/ ஏக தத்வ வாதம் -த்வி/ த்ரி /
சேதன அசேதன இரண்டையும் சாங்க்யம் –mattar- mind-சேதனம் ஒன்றே அத்வைதி /சப்த விவர்த்த வாதம் ஜைனர் –
ஒரே தத்துவமாக இருந்தாலும்–/போக்யம் போக்தா பிரேரிதா-தத்வ த்ரய வாதம் நம்மது -/
பூர்ணமாக பார்த்து அனுபவம் -நம்மது -menifestation of brahmam –
புருஷ -புஷ்கரத் பலாத்வத் -தாமரை இலைத்தண்ணீர் போலே ஒட்டாதே -பிரகிருதி கார்யங்களை தன்னிடம் ஆரோபித்து –
அதன் வசமாகிறான் -அஹங்கார விமூடாத்மா -பந்துக்கு உள்படுகிறான் -சாங்க்யர் -ஆத்மா அறிந்து கைவல்யம் அடைகிறான் –
பர ப்ரஹ்மம் தத்வம் ஒத்துக் கொள்ளாத மதம்
அவ்யக்தம் -தான் ஜகத்காரணம் என்பர் -ஏகேஷாம் -சிலர் -ஆனு மானிகம் பிரதானம் என்று சொல்பவர் -என்றவாறு –
சில சாகைகளில் சிலர் இப்படி சொல்கிறார்கள் –பல சாகைகள் -யஜுர் வேதம் -82-சாகைகள் —
அசித் த்வயம் -ஏழு காண்டம் -மூன்று அஷ்டகம் -80-ப்ரச்னம் -அடுத்து -2-ப்ரச்னம் -அக்னி மூன்று சேர்த்து ஒன்றாக்கி –
புருஷ -ஜீவாத்மா -25–பரமாத்மா தத்வம்-26- ஒத்துக் கொள்ளாத சாங்க்யர்
புருஷர்கள் பலர் என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள் – நிரீஸ்வர வாதம் –
முக்த தசையில்- பிரகிருதி புருஷ விவேகம் தான் மோக்ஷ சாதனம் –
புஷ்கரம் -இலை-தாமரை இலையில் ஒட்டாதது போலே-பந்த மோக்ஷங்கள் கிடையாது
பிரகிருதி செய்யும் காரியத்தை தன்னிடம் ஆரோபித்து பந்தத்துக்கு உள்படுகிறான் – —
அவித்யாதிகளுக்கு உட்பட்டு -ஏறிட்டுக் கொள்கிறான்-
சங்க்யா-theory-of-numbers-வேறே சாங்க்ய மதம் வேறே -மஹத் தத்வம் -அஹங்காரத்துக்கு காரண தசை –
அவ்யக்தம் -ப்ரத்யக்ஷத்துக்கு விஷயம் ஆகாது -அனுமானம் பண்ணி அறிய வேண்டும் -inferance-
ப்ரக்ருதியே தான் ஜகத் காரணம் என்று சொல்லும் சாங்க்ய மதம் –
ஸ்தூணா நிகர்ன நியாயம் -ப்ரஹ்மம் ஏவ காரணம் சொல்லவே முதல் இரண்டு அத்தியாயங்கள் –
சங்கைகளை போக்கி -வேறே வேறே ப்ரஹ்ம பிரகாரங்களை விளக்கும் இந்த அதிகரணங்கள்-redentant-இல்லை இவை –
தேராக உருவகம் செய்து இருப்பதால் பிரகிருதி -அவ்யக்தம் என்று சொல்ல முடியாது -சரீரத்தையே சொன்னபடி
சரீரம் வியக்தம் தானே -எப்படி அவ்யக்தம் என்று சொல்ல முடியும் –
விஷ்ணு பதம்-ஸ்ரீ வைகுண்டம் -பரமம் பதம் கச்சதி -உபாசகன் தானே இதுக்கு பிரயத்தனம் பண்ணுவான் –
அவனது சரீரத்தை சொன்னபடி -சரீரம் இந்த்ரியங்களை மனசையும் புத்தியையும் வசப்படுத்தி தானே அடைகிறான் –
கோசரம் -குதிரையை விட -வலிமை -விஷயங்கள் இந்த்ரியங்களை இழுக்கும் -இவற்றை விட மனசு வலிமை –
கயிறு ஸ்தானம் இது -வசீகாரத்வே பிரதானம் –
சாரதி புத்தி இதை விட வலிமை -திடமான அத்யாவசயா புத்தி -இதுக்கு முன் மனசு வால் ஆட்ட முடியாதே
தேர் முழுவதும் அத்யாவசாயத்தின் வசப்பட்டு இருக்கும் -திடமான அத்யவசாயம் –இதை விட ஆத்மா பிரதானம் –
ஜீவாத்மாவின் அதீனம்-ஆகவே இதுக்கு மஹான் -என்று சொல்லி இதை விட சரீரத்துக்கு பலம் -சாதன ப்ரவ்ருத்தி –
சகல புருஷார்த்தங்களுக்கும் -சரீரம் இருக்கும் வரை ஸூக துக்கங்கள் -உண்டே -சரீரம் பெரியது என்றது –
இதைக் கொண்டே -சாதிக்க வேண்டும் உபாசனனுக்கு –
பஞ்ச அக்நி வித்யை மேலே இத்தையே விவரிக்கும் –
மோக்ஷ தசையில் -சரீரம் இல்லையே எண்ணில் -அங்கு இச்சா க்ருஹீத சரீரம் கொள்ளும் சக்தி உண்டே –
கைங்கர்யத்துக்கு அனுகுணமாக -சரீர சம்யோகம் வியோகம் கஹன விஷயம் -சரீரத்தை விட பரமாத்மா -பரம் -நியமனம் –
அந்தர்யாமி -பரம புருஷன் -அனைத்தும் இவனே அதீனம் –பராயத்து அதிகரணம் மேலே வரும்-
காஷ்டா இதுவே -அந்தர்யாமி ப்ராஹ்மணம் ப்ருஹதாரண்யம் உபநிஷத் -விஸ்தாரமாக உண்டே –
சர்வம் சாஷாத்காரம் -சர்வம் நியமனம் -இவனே –
கடம் படம் ஓன்று என்று யாரும் சொல்லாமல் -விவாதம் இல்லாமல் -இருக்கும் -ஆனால் -ஜீவாத்மா பரமாத்மா இரண்டும்
அத்யந்த ஸூஷ்மம் -ஆகவே பல வாதங்கள் -ஆத்ம ஸ்வரூபம் சித்தாந்தங்கள் தோறும் மாறுபடும் -அஹம் அர்த்தம் ஆத்மா –
பூதாத்மா -இந்த்ரியாத்மா -மனசாதமா -புத்தியாத்மா -ப்ராணாத்மா-இவற்றுக்கு ஆத்மா சொல்வதற்கு பிரசக்தி உண்டே –
கல் மண் இவைகள் ஆத்மா சொல்வார் இல்லையே –
சாரம் வேதார்த்த ஸங்க்ரஹம் -ஸ்ரீ சைல நாதன் முன்னால் அருளி நிகமனத்தில்
சார அசார விவேகம் அறிந்த பெரியோர்கள் -பிரமாணம் கொண்டு சாதித்த -விஷயங்கள் -தர்மபூத ஞான வியாப்தி –
ஸூஷ்ப்தி நிலையில் தர்மபூத ஞானம் அசத்கல்பம் தானே-
தைத்ரியம் -பிருகு கேட்டதும் யதோ வாசோ -தபோ ப்ரஹமேதி-அன்னம் -தொடங்கி–விஞ்ஞானம் –
ஆனந்த ப்ரஹ்மோ திவ்யாஞானாதி-சொன்னதும் மீண்டும் போகவில்லையே -புரிந்து கொண்டான் –
ஜீவ பர யோக யாதாம்ய ஞானம் பூர்வகம் -யத் ஆத்மாம்யம்-in–full-depth-நாம் அறிந்தது –
பக்தி கோயிலுக்கு செல்வது திருவாராதனம் இவை எல்லாம் ஆரம்ப நிலை -சப்த ரூப உபதேசம் ஆரம்ப நிலை –
தர்க்காதிகளாலே உபதேசம் அடுத்த நிலை -அடுத்து சாஷாத்காரம் –
ஹ்ருதயம் மூலம் -நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கும் நாதமுனிகளுக்கும்
சப்தம் மூலம் -பலவாக அறிந்து கொள்ள வாய்ப்பு உண்டே –
தர்மபூத ஞானம் வியாப்தி -சரியாக புரிந்து கொள்ள வேண்டும் –
ஜீவாத்மா அணு என்பது பிருத்வி பாரமான -atomic-போலே அன்றே —
நினைக்கவே வெட்டவோ முடியாதே -it-is-not -physical entity –அணுவுக்குள்ளும் பரமாத்மா –
அந்தராத்மா -ஆத்ம ஸ்வரூபம் புரிவது மிகவும் கஷ்டம் தானே –
இதுக்கு பூர்வபக்ஷம்
சரீரம் கண்களால் காணப்படும் -அவ்யக்தம் காணப்படாதது -இப்படியானதால் எவ்வாறு
அவ்யக்தம் என்பது சரீரத்தைக் குறிக்கும் –
இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்
——————–
1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –
ஸூஷ்ம தசையில் உள்ள பிரகிருதி ஒருவகையாக மாறுதலை அடைந்து உடலாகி –
ஸ்தூல உடலாலே கார்யங்கள் செய்ய வேண்டுமே -கர்த்ருத்வ தகுதி அடைகிறது என்றவாறு
இந்த உடலே ஜீவன் என்னும் என்னும் தேரினை அதன் இலக்குக்கு எடுத்துச் செல்ல உதவும்-
பஞ்ச பூதங்கள் அவ்யாக்ருத -மாறுபடாத நிலையில் தகுந்த நேரத்தில் சரிரமாகும்
இத்தையே அவ்யக்தம் என்கிறோம்
தத் அர்ஹத்வாத் -கர்த்ருத்வ தகுதி அடைய என்றவாறு
எனவே சரீரம் -தேர் – தனக்கு சேஷியான ஆத்மாவுக்கு ஏற்றதான புருஷார்த்தம் பெற வைக்கும் சாதனம் –
வியக்தி-manifest-அடைந்தது -அபிநாபாவ சம்பந்தம்-சம்சார தசையில் – –
சரீரம் ஆத்மா -ஒன்றை விட்டு ஓன்று இருக்க முடியாதே –
வியாப்தி -there can be no smoke without fire -pole –
பூத ஸூஷ்மம் -un-manifest-பாஞ்ச பவ்திகம் சரீரம் -பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது –
பிருத்விக்கு அப்புறம் -நீர் ஆகாரம் அற்றது -சோம்பு தீர்த்தம் ஆற்று தீர்த்தம் -தேஜஸ் இன்னும் மாறும்
பவ்ம தேஜஸ்-ஹோம புகை -பூமி சம்பந்தம் ஸ்பஷ்டம் – திவ்ய தேஜஸ் -அபிநிதானம் ஜலமே அக்னிக்கு உபகரணம் –
ஆகாசம் இன்னும் மேலும் -subtle-
பூத காரணங்களே நாம் அறிவோம் -பூதங்களை அறியோம் -ஸூஷ்ம பூதங்களை கொஞ்சம் அறிவோம் –
சித்ர குப்தன் –குப்த சித்ரம்-phsaicci- என்பதையே சொல்கிறோம்
அவ்யக்தமே வியக்தமாக சரீரம் -காரண அவஸ்தையை சொன்னபடி
ரதவத் புருஷார்த்தம் அடைய ப்ரவ்ருத்திக்கு -கொடுத்ததே சரீரம் —
ஆத்மாவின் போகாதாயனம் சரீரம் -தர்க்க சாஸ்திரம் -சரீரம் கொண்டே போக அனுபவம் தர்ம சாதனம் மோக்ஷ சாதனம்
ரதம் கொண்டே போக வேண்டும் -மார்க்க சாதனம் –
இதற்கு பூர்வ பக்ஷம்
மாறுபாடு அடையாத பூத் ஸூஷ்மம்-இதுவே கபில தந்திரத்தின் படி அவ்யக்தம் என்று சொல்லலாமே
இதுக்கு சமாதானம் சுத்த ஸூத்ரம்
———–
1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –
பிரகிருதி எனபது பரம் பொரூடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
சாங்க்ய மதம் போலே பிரகிருதி மாறும் என்பதை ஒத்துக் கொண்டாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாது
பரம் பொருளின் ஆணைக்கு இடங்க நடந்தால் மட்டுமே பயனுள்ளதாகும்-
சுருதி ஸ்ம்ருதிகள் -பரமாத்மாவை அனைத்துக்கும் ஆத்மாவாக சொல்லுமே
ஸூபால உபநிஷத் -2-
பிருதிவி அப்ஸூ ப்ரலீ யதே என்று தொடங்கி -தன்மாத்ராணி பூதாதவ் லீயந்தே –பூதாதிம் அர்ஹதி லீயதே –
மஹான் அவ்யக்தே லீயதே -அவ்யக்தம் அக்ஷரே லீயதே -அக்ஷரம் தமஸி லீயதே -தம பரே தேவ ஏகிபவதி —
என்று இருப்பது போலேயும்
தஸ்ய பிருத்வி சரீரம் -யஸ்ய ஆப சரீரம் -யஸ்ய தேஜஸ் சரீரம் -யஸ்ய வாயு சரீரம் -யஸ்ய ஆகாசம் சரீரம் –
யஸ்ய அஹங்காரம் சரீரம் -யஸ்ய புத்தி சரீரம் -யஸ்ய அவ்யக்தம் சரீர -யஸ்ய அக்ஷரம் சரீரம் -யஸ்ய ம்ருத்யு சரீரம் –
ஏஷ ஸர்வபூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபால -3-என்றும் உள்ளதே
இதே போன்று ஸ்ரீ கீதையிலும்
பூமி ஆப அநலோ வாயு கம் மநோ புத்தி ஏவ ச அஹங்காரம் இதீயம் மே பிந்நா ப்ரக்ருதி அஷ்டதா -7-4-என்றும்
அபரா இயம் இத து அந்யாம் ப்ரக்ருதிம் வித்திமே பராம் -ஜீவ பூதாம் மஹா பாஹோ யயா இதம் தார்யாதி ஜகத்-7-5- என்றும்
ஏதத் யோநி இதி பூதாபணி ஸர்வாணி இதி உப தாரய அஹம் க்ருத்ஸ் நஸ்ய ஜகத பிரபவ ப்ரளயஸ் ததா -7-6-என்றும்
மத்த பரதரம் ந அந்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய -மயி சர்வம் இதம் ப்ரோதம் ஸூத்ர மணி கணாம் இவ -7-7-என்றும் உள்ளதே
இதே போலே ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
வ்யக்தம் விஷ்ணு தத் அவ்யக்தம் புருஷ கால ஏவ ச –1-2-18- என்றும்
ப்ரக்ருதிர் யா மயா க்யாதா வ்யக்த அவ்யக்த ஸ்வரூபாணீ–புருஷச்ச அப்யுபாவேதவ் லீயதே பரமாத்மநி –
பரமாத்மா ச ஸர்வேஷாம் ஆதார புருஷோத்தம -விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷு ச கீயதே -6-4-38-/39-
என்றும் கூறப்பட்டுள்ளதே
—————
1-4-4-ஜ்ஞேயத்வ அவசநாத் ச
சாங்க்ய மதத்தின் படி அவ்யக்த-பிரகிருதி – ஞானம் பற்றியே மோட்ஷம் என்று உபநிஷத் கூற வில்லை-
அவ்யக்தத்தை அறியப்பட ஒன்றாக கபில தந்திரத்தில் கூறப்பட வில்லையே
—————–
1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–
அவ்யக்தம் அறியப்பட வேண்டியது என்று கூறப்படுகிறதே என்றால் -அப்படி அல்ல –
பிரகரணத்தை ஆராய்ந்தால் அங்கு கூறப்படுபவன் பரமாத்மாவே ஆவான்
பூர்வ பக்ஷம்
கடவல்லி -3-15-
அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே –என்ற
சுருதி வரியானது அவ்யக்தம் அறியப்பட வேண்டியது என்று கூறுகிறது
அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே
பஞ்ச பூத குணங்கள் -போலே இல்லாமல் அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம்-
உபாசித்து முக்தன் ஆகிறான் -ம்ருத்யுமுகாத்-ம்ருத்யு கிடையாது –
பிரகிருதி க்கும் இந்த விசேஷங்கள் அந்வயிக்கும்
சித்தாந்தம்
அப்படி அல்ல -அனைத்தும் அறிந்த பரம புருஷனே அறியத் தக்கவனாக கூறப்படுகிறான் –
இந்த வரிகளுக்கு முன்னால்–கட -3-9-
விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹவான் நர-
ச அத்வன பாரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்—ஞானத்தை தேர் ஓட்டுபவனாகவும்
மனத்தைக் கடிவாளமாகவும் கொண்டு ஸ்ரீ பரமபதத்தை அடைகிறான் -என்றும்
அதற்கு கீழே -ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடஸ் ஆத்மாந பிரகாசதே
த்ருச்யதே த்வக்யயா புத்த்யா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று அனைத்தும் அறிபவனாகிய
பரம புருஷனே இந்த பகுதியில் கூறப்படுகிறான் –
ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–சர்வஞ்ஞனையே சொல்லும் -பிரகரணம் அன்றோ இது –
பிரகிருதி விவேக அறிந்தால் முக்தி என்று தானே சாங்க்யர் சொல்கிறார்கள்
ப்ரக்ருதியை உபாஸிக்க சொல்ல வில்லையே –
பரமாத்மா ஞானம் வந்தால் பிரகிருதி அவனுக்கு அந்தர்கதம் அறிவோம்
ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடஸ் ஆத்மாந –பிரகாசதே–உள்ளே இருந்தும் இருப்பதை காட்டிக் கொடுக்கிறான் இல்லையே
த்ருச்யதே த்வக்யயா புத்த்யா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி-கூர்மையான புத்தி உடையவர்களுக்கே காட்டிக் கொடுக்கிறான்
புருஷான் ந பரம் கிஞ்சித் –கட 3-12-புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது ஏதும் இல்லை என்பது மறுக்கப்பட வில்லை
புருஷன் இங்கே கூறப்பட வில்லை
அந்த பரம் புருஷனுக்கே சப்தம் போன்ற குணங்கள் இல்லை என்பதை
முண்டகம்–1-1-5-
யத் தத் அத்ரேச்யம் அக்ராஹ்யம் – -என்று எது காண இயலாதோ எடுக்க இயலாதோ -என்ற சுருதி வாக்கியங்கள் உணர்த்தும்
மேலும் கட -3-15-
மஹத பரம த்ருவம்-என்று மஹத்தை விட பெரியது என்று கூறப்பட்ட வஸ்துவான
பரம் பொருள் தானே –
கட –3-10-
புத்தரோத்மா மஹான் பர -என்று புத்தியைக் காட்டிலும் மஹான் என்ற ஆத்மா பெரியது என்று
ஜீவாத்மாவை விட மேலானவன் என்று உணர முடியலாம்-
—————————
1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –
உபாயமும் உபேயமும் உபேதாவையும் -மூன்றையும் பற்றியே உண்டு —
மூன்றைக் குறித்தே அறிய வேண்டும் என்ற பதில் இருப்பதால் கேள்வியும் மூன்றையும் பற்றியே இருக்க வேண்டும்
மூன்றைப் பற்றிய கேள்வியும் பதிலுமே உள்ளதால் பிரக்ருதியைப் பற்றிக் குறிப்பிட வில்லை என்று அறியலாம்
சித்தாந்தம்
இந்த பிரகரணத்தில் -உபாயம் உபாசனம் —உபேயம்–அடையப்படும் பரமாத்மா -உபேதா அடைபவனாகிய ஜீவாத்மா –
ஆகிய மூன்றையும் குறித்த விளக்கம் -இவற்றைக் குறித்தே அறிய வேண்டும் என்னும்
விதி கேள்விகள் உள்ளன -அவ்யக்தம் பற்றி ஒன்றுமே இல்லை
யமனிடம் இருந்து மூன்று வரங்களைப் பெற்ற நசிகேதன்
முதல் வரத்தின் முலம் தந்தையை அருகில் கேட்டான்–
புருஷார்த்தம் அடைய வல்ல -தனது தந்தை தன்னுடன் மகிழ்வுடன் இருக்கும் வரம் –
இரண்டாம் வரத்தின் முலம் அக்னியைக் குறித்து–மோக்ஷ சாதனமாக உள்ள -நாசி கேதஸ் -என்ற பெயர் கொண்ட
அக்னி வித்யையை குறித்து அறிய வேண்டும் என்று கேட்டான்
ஸ்வர்க்கம் என்று உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷமே கூறப்படுகிறது
கடவல்லி -1-1-13-
ச த்வம் அக்நிம் ஸ்வர்கயமவ்யேஷி ம்ருத்யோ ப்ரப்ரூஹி தம் ஸ்ரத்த தாநாய மஹ்யம் –
ஸ்வர்க்க லோகா அம்ருதத்வம் பஜந்தே ஏதத் த்விதீ யேந வ்ருண வரேண–என்று உபதேசிக்க பிரார்த்திக்கிறான்
கடவல்லி -1-1-13-
அம்ருதத்வம் பஜந்தே -பிறப்பு இறப்பு இல்லா அம்ருதத் தன்மை அடைகிறார்கள்
மேலும் -கடவல்லி -1-1-17-
த்ரிணாசிகேதஸ் த்ரி ப்ரேத்ய சந்திம் த்ரி கர்ம க்ருத தரதி ஜென்ம ம்ருத்யு -என்று நாசி கேதஸ்ஸின் மூன்று வித அநுவாகங்களை
-தாய் தந்தை குரு மூவரிடம் கற்று -அந்த அக்னியை மகிழ வைத்து -யஜ்ஜம் இயற்றுதல் -தானம் அளித்தல்-வேத அத்யயனம் செய்தல் –
ஆகிய மூன்று வித கர்மங்களை செய்து -சம்சாரம் கடந்து மோக்ஷம் அடைகிறான் –
அடுத்து 1-1-20-
யேயம் ப்ரேத விசிகித்சா மனுஷ்யே அஸ்தீத்யேக நாயமஸ்தீதி சைகே -ஏதத் வித்யாம் அநு சிஷ்டஸ் த்வயாஹம்
வரணாம் ஏஷ வரஸ் த்ருதீய –என்று மூன்றாவது கேள்வி
பின்பு அவனுக்கு மோக்ஷம் பற்றி அறிய தகுதி இருப்பதை பலவாறாக பரிசோதித்து யமன்
கட -2-12-
தம் துர் தர்ஸோ கூடம் அநு ப்ரவிஷ்டம் குஹா ஹிதம் கஹ்வ ரேஷ்டம் புராணம் -அத்யாத்ம யோகாதி கமேந தேவம்
மத்வா தீரோ ஹர்ஷ சோகவ் ஜஹாதி –என்று பரமாத்மாவை அறியும் ஞானி சம்சார கர்ம வினைகளை விட்டு
அவனையே அடைகிறான் -என்று உரைத்தான்
தேவம் மத்வா –என்று அடையப்படு அவனது ஸ்வரூபம்
அத்யாத்ம யோகாதி கமேந-இலக்கை அடையும் பிரத்யாகாத்மாவின் ஸ்வரூபம்
மத்வா தீரோ ஹர்ஷ சோகவ் ஜஹாதி- ப்ரஹ்ம உபாசனையில் ஸ்வரூபம்
இதன் காரணமாக நசிகேதஸ் மீண்டும் -2-14-
அந்யத்ர தர்மாத் அந்யத்ர அதர்மாத் அந்யத்ர அஸ்மாத் க்ருத அக்ருதாத் -அந்யத்ர பூதாச்ச பவ்யாச்ச
தத் பச்யதி தத் வத -என்று
அனைத்துக்கும் வேறுபட்ட அந்த பரமாத்மாவை -மோக்ஷத்தை காண்கிறாய் அல்லவா –
அதனை எனக்கு கூற வேண்டும் என்று கேட்டான்
இதற்கு பதிலாக யமன் பிரணவத்தை புகழ்ந்து ப்ராப்ய ஸ்வரூபம் ஜீவ ஸ்வரூபம் பற்றி விளக்கினான்
இதுவே கட -2-15-
சர்வே வேதா யத் பதம் அமநந்தி தபாம்சி ஸர்வாணி ச யத் வதந்தி -யத் இச்சந்தோ ப்ரஹ்மசர்ய சரந்தி தத்தே பதம்
ஸங்க்ரஹேன பிரவீம் ஓம் இதி ஏதத் –என்று உபக்ரமித்து உபதேசித்து மீண்டும் பிரணவத்தை புகழ்ந்தான்
கட -2-18-
ஜீவாத்மா ஸ்வரூபம் -ந ஜாயதே ந ம்ரியதே வா விபச்சித் என்றும்
கட -2-20-
பர ப்ரஹ்மமான ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஸ்வரூபம் –
அனோர் அணீயான்-என்று தொடங்கி
கட -2-24-
க இத்தா வேத யத்ர ச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி–என்று முடிய உபதேசிக்கப்பட்டது
இந்த வாக்யங்களுக்கு நடுவில் -2-24-
நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயோ ந பஹுநா ஸ்ருதேந –என்று தொடங்கி உபாஸனையின் ஸ்வரூபம் சொல்லப்பட்டது
கட -3-1-மூலம்
ருதம் பிபந்தவ் –என்று இருவர் கர்ம பலனை புஜிக்கிறார்கள்-என்பதால் அவன் அருகிலே இருப்பதால் உபாஸனை எளிது என்றும்
கட -3-3-
ஆத்மாநம் ரதிநம் வித்தி -என்று தொடங்கி
கட -3-14-
துர்கே பதஸ் தத் கவயோ வதந்தி –என்று பாதை கடினம் என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள் என்று நிகமிப்பதன் மூலம்
உபாஸனையின் வழி முறைகளும் உபாசகன் ஸ்ரீ விஷ்ணுவின் பரமபதம் அடைதல் பற்றியும் கூறப்பட்ட இந்த பிரகரணத்தில்
கட -3-15-
அ சப்தம் அ ஸ்பர்சம் என்று முடிக்கப்பட்டுள்ளது –
ப்ரவசநேந லப்யோ ந-உபன்யாசம் மாத்ரத்தால் அடைய முடியாதே -அது சஹகாரி -ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம்
அவனே காட்டக் காணலாம் –அவன் கிருபையே காரணம் -இசைவித்து என்னுள் இருத்தி -அதுவும் அவனது இன்னருளே
இங்கு அறியப்பட வேண்டியவர்களாக மூன்று விஷயங்களும் -அவற்றைக் குறித்த கேள்விகளும் மட்டுமே உள்ளன –
கபில தந்திரத்தில் கூறப்பட்ட அவ்யக்தம் பற்றி ஒன்றும் கூறப்பட வில்லை
அவன் கிருபையால் அவனைக் காணலாம் -புருஷார்த்த யோக்யதை பெறவே சரீரம் –
ப்ரஹ்ம வித்யை பெற ஸூ மனசர் இடம் அபசாரம் கூடாதே –
அம்ருத்யம் -ஸ்வர்க்க சப்தம் இங்கே மோக்ஷம் பரமபதம் -குறிக்கும் –
மோக்ஷ ஸ்வரூபம் ப்ரஸ்ன வ்யாஜ்யேன-த்வாரேந – உபாயம் உபாஸ்யம் உபேயம் மூன்றையுமே இங்கே கேட்க்கிறான்
பிரகிருதி அம்சம் ஒன்றுமே இல்லையே இதில் –
—————–
1-4-7-மஹத்வத் ச –
மஹத் தத்வம் போன்றது என்றவாறு-
மஹத் என்று கூறும் இடத்திலும் பிரக்ருதியைப் பற்றி கூறவில்லை
கட -3-10-
புத்தேர் ஆத்மா மஹான் பர – புத்தியைக் காட்டிலும் மஹான் என்று கூறப்படும் ஆத்மா உயர்ந்தது -என்றது
சாமாநாதி கரண்யத்தால் –
கபில தந்திரத்தில் கூறப்பட்ட மஹான் சொல் இல்லை
இதே வரியில் ஆத்மா என்பதைக் காட்டிலும் அவ்யக்தம் மேம்பட்டது என்ற பொருளில் படிக்கப்பட்டதால்
இந்த அவ்யக்தம் கபில தந்திரத்தில் கூறப்பட்ட அவ்யக்தம் என்ற சொல்லைக் கருத்தில் கொண்டு
எடுக்கப்பட விலை என்று அறியலாம்
ஹந்த-ஹர்ஷத்தால் -எம தர்ம ராஜன் -மரணத்தை அடைந்ததும் ஆத்மாவுக்கு -நிலை –
யோனி மாறி மாறி பல பிறப்பும் பிறக்கிறான் -முன் இலையில் காலை வைத்து பின் இலையில் காலை எடுப்பது போலே –
முன்னால் சேரும் இடம் தீர்மானமான பின்பு சரீரம் விடுகிறான் –
சில ஆத்மாக்கள் கர்ம அனுகுணமாக ஸ்தாணுத்வா அவஸ்தை அடைகிறார்கள்-பரம ரஹஸ்யம்
———————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply