ஸ்ரீ திருப்பாவை சாரம் – நோற்றுச் சுவர்க்கம்— —

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

சித்த சாதன ச்வீகாரம் பண்ணி உபாய அத்யாவசாயத்திலே நிறைந்த ஊற்றமுடைய
மகானுபாவரை உணர்த்துதல்-
இனிமேல் நோற்க வேண்டாம்–உள்ளபடி அறிந்த பின்பு எல்லாம் அனுஷ்டித்ததாக கொள்ளலாம்
பெண்களை படும் பாட்டை அவன் படும் இவள் திறத்தில் பண்ணும் படி –
தண்ணீர் தண்ணீர் -என்ன பண்ணும் பெண்மணி-
ஜீவன் பரமாத்மாவை ஆனந்திப்பிக்க -என்று மட்டுமே இருக்குமா போலே
கிருஷ்ணனை பிரிந்த உடனே குளிப்பது நோற்பது–இவள் படி 19 பாஷையாக இருந்தததே–
ஒக்க குளிக்க நோற்க அனுபவிக்க கடவோம் என்று சொல்லி —
இவளுக்கு நோன்பின் பலன் கை வந்து விசாரம் இல்லாமல் —சித்த சாதனையை சாதனமாக கொண்டவள் –

அருங்கலமே –
நாயக பெண் போலே என்றாதல்—
நல்ல பெண் -என்றாதல் –
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் -அரும் கலமே
தேவப்பெருமாள் பெருந்தேவி கிருபைக்கு இலக்காகி உத்தம சத்பாத்ரம் -மகா பூஷணம்
வேதனம் சாதனம் என்று இராதே–ஈஸ்வரனே சாதனம் என்று
கிருஷ்ணன் அசல் திரு மாளிகையாய்–நடுவிட்ட வாசல் ஆகையாலே–ஒரு போகியாக அனுபவிக்கிறாள் -என்றுமாம்
புகுகின்ற -வர்த்தமானம் -கிருஷ்ண அனுபவம் கை புகுந்தவள் என்ற கருத்து-

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
என்கையாலே சித்த உபாயத்தாலே ப்ராப்ய வைலஷ்ண்ய ஞானத்தை யுடையராய் –
அத்தாலே உடையவருக்கு கௌரவராய் இருக்கும் ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-

வியாக்யானம்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்-
சித்த சாதனத்தை–பரிக்ரஹம் பண்ணி -சுக ரூபமான பிராப்யத்தை-
அனுபவிக்கிற -ஸ்வாமிநி யானவளே
வைகின பின்பும் எழுந்திராமையாலே–அம்மே அழகியதாக நோற்று சுகம் பெறக் கோலினாய்-என்று
ஸ்தோபிக்கிறார்கள் -என்றுமாம்-
நோற்க வேண்டாதபடி நோன்பின் பலம் கை புகுந்தவள் இறே இவள் என்றுமாம் –
பாகவதர்கள் வந்ததாலும் மா மாயன் மாதவன் வைகுந்தன் -போன்ற சகஸ்ர நாமங்கள்
வர்க்கம் கேட்டு ஆனந்த சாகரத்தில் அழுந்தி இருந்ததே –
இவள் ஸ்வர்க்கம் புகுகின்றது போலே என்றுமாம்
நோற்று –
சித்த சாதனை யாகையாலே–உபாய அம்சத்தில் நிர்பரையாய் இருந்தாள் —
அவனுடைய ரஷகத்வத்தை யுணர்ந்தால் தனக்கு யத்னம் பண்ண பிராப்தி இல்லை-
தன் சேஷத்வத்தை உணர்ந்தாலும் பிராப்தி இல்லை இறே–
எழுப்புகிறவர்களுக்கும் இது வன்றோ ஸ்வரூபம் என்னில்
சித்த உபாய நிஷ்டருக்கு விளம்ப ஹேது இல்லாமையாலே–பிராப்யத்தில் த்வரையாலே பதறுகிறார்கள்-
சித்த உபாய நிஷ்டருக்கும் கர்ம ஞான பக்திகள் உண்டு–
இவர்களுடைய க்ரியா கலாபம் கைங்கர்யத்திலே அந்விதமாய் இருக்கும்-
ஞானம் ஸ்வரூபத்தில் அந்விதம்–பக்தி பிராப்ய ருசியிலே அந்விதம்
செய்த வேள்வியர் -வையத்து தேவர் – -நோன்ற நோன்பு –
எம்பெருமானை பற்றியவர் வாழும் ஸ்ரீ வான மா மலை –
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி யூர் -வானம் முந்தி மழை பொழிய —யாகம் சங்கல்பித்தாலே மழை பெய்ததே –
உபாய அம்சத்தில் நிர்பரையாய் இருக்கிறவள் —
அவன் உடைய ரஷணத்தை உணர்ந்தால் நமக்கு யத்னம் இல்லையே -த்வயி அப்ரவர்த்தி மம கிம் -தேசிகன்
சொத்தை காப்பது ஸ்வாமி பொறுப்பு தானே–விரோதி பிராபல்யம் உணர்ந்தாலும் ஒன்றும் செய்ய பிராப்தி இல்லை –
இதர உபாயங்களுக்கு எல்லாம் அவன் பிரசாதத்தாலே பலன் கிட்ட இருக்க–எப்படி பார்த்தாலும் –
சாதனம் செய்து அடைய முடியாதே
நாராயணனே நமக்கே பறை தருவான் உணர்ந்து உள்ளே கிடக்கிறாள்–
க்ருதக்ருத்யா பிரதீஷந்தே
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணஸ் தத்வதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்தா-
என்று புகழப்பட்ட உத்தம அதிகாரிகள்
சர்வ யஞ்ஞா சமாப்த -கிருஷ்ணனை அறிகிறதே -செய்த வேள்வியர் –
ருத்ரன் -இரண்டு பழம் கதை -அறிவோமே —கை மேலே பலம் -பெற்றானே –

ஸ்வர்க்கம் புகுகின்ற –
சுகத்தை இடைவிடாதே அனுபவிக்கிற–இவர்களுக்கு கிருஷ்ண அனுபவம் இறே சுகம் —ஸ்வர்க்க சப்தம் சுக வாசி-
சீதை ராமன் -ஸ்வர்க்கம் நரகம் —எது – பிரிந்து-இது ஜானம்- கேள்வி பட்டது இல்லை நான் சொல்கிறேன்
தெரிந்து கொள் கேளாய் girl school சொல்லி தரும் சாஸ்திரம் –
கச்ச ராம -மயா சகா நீ பின்னால் வா உறுதியாக பிராட்டி சொல்லி

அம்மனாய் –
ரஷகை ஆனவளே–நீ ரஷகையாக–நாங்கள் உனக்கு குழைச் சரக்கு ஆனபடி அழகியதாய் இருந்ததே-
அவள் பேசாதே கிடப்பான் என் என்னில்–
திருவடி வாரத்தில் பிராட்டி இருந்தாப் போலே–இவர்கள் பேச்சே அமையும் என்று கிடக்கிறாள் –
பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்ண–
கிருஷ்ணனை அனுபவிபித்த பின்பு அது முலையுடன் அணைய வேண்டாமா-
பேச்சின் இனிமையாலும் -கண்ணாலே கண்ட மகிழ்ச்சியாலும் -ஹர்ஷத்தால் விக்கி
சீதை மதுரம் வாக்கியம் -கேட்டதும் -அசோகா வனம் -மோஹமா -எதிரில் வந்ததும்–பிரகர்ஷ்னே மௌனமாக நின்று-
தங்கள் அடியேனாய் இருக்கிற என்னை அம்மனாய் என்பதே -என்று கிடக்கிறாள் ஆகவுமாம் –

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் –
வெளியில் இருப்பார் இத்தை அறிந்தும் உபாயம் என்கிற சப்தத்தை விச்வசித்து இருக்கவோ –
த்வரை இல்லையாகில் சேதனன் இல்லாமல் இருப்பதற்கு ஒக்கும்
இனி இனி 20 கால் துடித்தார் ஆழ்வார் —ஈடுபாடு வேண்டுமே வழி இல்லாமல் வழி சென்றாலும்
முறை தப்பியாவது பெற
விலஷணமான வஸ்து என்று அறிந்து – பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும்
பேற்றுக்கு த்வரிக்கையும் வேண்டுமே
இவள் வாய் பேசாதே கிடக்கிற இது பொறுக்க மாட்டாமையாலே –
போதயந்த பரஸ்பரம் பண்ண வேண்டாமோ —-

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் –
என்கிறார்கள் –வாசல் செம்மினால் வாயும் செம்ம வேணுமோ–
ஐஸ்வர்யம் மிக்காள் பந்துக்களை ஏன் என்னலாகாதோ –
உடம்பை கிருஷ்ணனுக்கு கொடுத்தால் பேச்சாகிலும் எங்களுக்கு தரலாகாதோ–
கண்ணும் செவியும் ஒக்க பட்டினி கொள்ள வேணுமோ –
மதுரா மதுரா வாக்யா -என்று இறே இவள் பேச்சு இருப்பது –
ஐஸ்வர்யம் விஞ்சினால் பந்துக்கள் ஆர்த்தி யானால் ஏன் கேட்காமல்
படு கொலை அடித்தால் தண்ணீர் வார்க்க கூடாதோ–
போகத்தை தடுத்தால் எங்கள் சத்தையை அழிக்க வேண்டுமா -வார்த்தை சொல்ல கூடாதோ
கிருஷ்ணனை மறைத்தால் உன்னையும் மறைக்க வேண்டுமோ-
உன்னுடைய கிருஷ்ணனை தராமல் எங்களுடைய உன்னை தாராமல்–
உன் சரக்கு தர வில்லை எங்கள் சரக்கு கொடுக்க கூடாதோ-

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்—
வாசல் திறவாதார் -மாற்றமும் தாராரோ-
த்வத் அனுபவ விரோதியான வாசலை -அஹங்காரத்தை நீக்கி–எங்களை உன்னை அனுபவிப்பியா விடிலும்-
நாங்கள் கேட்டு வாழும் படி ஒரு வார்த்தையும் அரிதோ —
அவனை எழுந்து இருக்க ஒட்டா விடிலும்
இருந்த இடத்தே இருந்து வார்த்தை சொன்னால் ஆகாதோ -என்று பாவார்த்தம் –
நீங்கள் பழி இடுகிறது ஏன் -அவன் இங்கே உண்டோ -என்ன —

நாற்றத் துழாய் முடி –
கோயில் சாந்தை உன்னால் ஒழிக்கப் போகுமோ–இப்போது உண்டாக வேண்டா
அவனை ஒரு கால் அணைத்து விட்டால் அது அஞ்சு ஆறு குளிக்கு பரிமளம் நிற்குமே —
கட்டும் காவலுமாய் இருக்கிற வாசலிலே புகுரப் போமோ அவனுக்கு -என்ன–

நோற்றுச் சுவர்க்கம் -திருக் காட்கரை -அனுபவம் -ஸூ சகம் –
யமவைஷவ்ருணுதே தேன லப்ய -பரகத ச்வீகாரம் -செய்த வேள்வியர் வையத் தேவர்
தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை அப்பன் –
தெரு வெல்லாம் காவி கமழ் காட்கரை -இங்கும் நாற்றத் துழாய் முடி நறு மணம் கமழா நிற்கும்

நாராயணன் –
அவனுக்கு எங்களைப் போலே கதவு திறக்கப் பார்த்து இருக்க வேணுமோ –
வ்யாப்திக்கு பிரயோஜனம் -வேண்டின இடத்தே -ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ —
உகவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ –
வேண்டும் இடத்து ஆவிர்பகிக்கைக்கு அன்றோ–அவனுடைய வ்யாப்தி -என்ன

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன் –
வெறுமையே பச்சையாக–இடைச்சிகளும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –
இவர்களுடைய ஆஸ்ரயணம் உபாயம் அன்று–ருசியாலே
நம்மாலே போற்றப் பட்டவனாய் கொண்டு–புருஷார்த்த பிரதனான நாராயணனாலே
நாலு பேர் -ராஷஸ ஜாதி எல்லாரையும் அங்கீகரிக்கலாமே
புண்ணியன்–
விரோதிகள் இடம் வாத்சல்யம் காட்டி–கிருஷ்ணன் தர்மம் சனாதனம்- ராமோ தர்ம விக்ரஹவான்

புண்ணியன் –
இவர்கள் உபாயம் அவன் தானே இறே —
சிநேக உக்தியாகவுமாம் –

இவனால் –பண்டு -ஒரு நாள் –
முன்பு உன்னைப் போலே உணராதே படுத்தினார் உண்டு காண் என்கை–-
பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
தண்ணீர் குடிக்க கல்லின ஏரியிலே அமிழ்ந்து சாவாரைப் போலே–
ரிபூணாம் அபிவத்சலரான பெருமாள் பக்கலிலே தப்புச் செய்த –

கும்ப கர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ –
உறக்கத்தில் தலையானவனும்–உனக்குத் தோற்று தன் உறக்கையும் தானே தந்து போனானோ –
அவனது –
துயில்–
உன்னதோ –
பெரும் துயில்–
அவன் ஒருத்தியை இறே பிரித்தது–நீ ஊராக பிரித்து உறங்கா நின்றாயே-
வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற -மரகத மணி தடாகம் –
ஸ்ரீ பரசுராம ஆழ்வானை வென்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கினால் போலே
நீயும் கும்பகர்ணனை வென்று- நித்ரையை வாங்கிக் கொண்டாயோ
அவனுக்கு ஆறுமாசம் உறங்குகை ஆறு மாசம் உணர்ந்து இருக்கை அவஸ்தை உண்டே-
அங்கனம் ஓன்று இல்லையோ உனக்கு -கால தத்வம் உள்ளதனையும் உறங்குகிறாய் அன்றோ-
அரை ஷணம் புறப்படாது ஒழிய நெடும் காலமாக தோற்றுகிறது இவர்களுக்கு
இவ்விடத்தில் கும்பகர்ணன் -என்றது–
தமோ குணத்தை–தமோ குணம் தன்னை அன்றியில்-இவளுக்கு உண்டான நித்ரையைக் கண்டு
இவளுடைய–நித்ரா ஜனகத்வ சக்திக்கு தான் தோற்று
தன்னுடைய-நித்ரா ஜனகத்வ சக்தியையும் தந்தானோ-என்று ரகசியம்–
சாத்விகனான இவ் வதிகாரிக்கு நித்தரை யாவது-
ஸ்வ அனுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாது இருக்கை –
உண்டாக்கி வைக்கிறவன் -மேலே மேலே வளர்க்க–அத்வேஷம் ஸ்வரூபம் சாதனம் இல்லை-
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பொன்னாச்சி பெருமாளை சேவிக்க ஆசை–குடை பிடித்து வந்தார் அத்வேஷம் இல்லாமல்-
போதரே என்று புந்தியில் வைத்து என் பால் ஆதரம் பெருக வைத்த அழகன்-

அரும் கலமே –
அரும் கலனே பாட பதம் –-
கிருஷ்ண த்ருஷ்ண தத்வம் அனுபவித்த புன்னை மரம் விசேஷம் –
இது பரகத நிஷ்டை —
ஆய -கைங்கர்யம் புருஷார்த்தம் அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -நம் ஆழ்வார்–
திருக் கமல பாதம் -வந்து -என் கண்ணின் உள்ளது ஒக்கின்றதே –
வந்து உன் அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததின் பின் சிந்தைனைக்கு இனியாய் –
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -திருவேங்கடத்து எந்தாய் –
தேக யாத்ரை கர்மாதீனம்–
ஆத்மா யாத்ரை ஈஸ்வர ஆதீனம்–
கலங்க ஒன்றுமே இல்லை
உபாயம் அவனே -சேஷ பூதன் நான் அறிந்து -ஸூய யத்னம்–பாபங்கள் மூட்டை –
விஸ்வரூபம் போலே வியாபித்து
நானே நானாவித நரகம் புகும் பாபம் செய்தேன் –
யத்னம் பண்ணி பிரயோஜனம் இல்லை —பிராப்தி -உண்டே
சர்வ தரமான் பரித்யஜ்ய -அர்ஜுனன் வ்யாஜ்யமாக -கன்று குட்டி -பால் –
குறைய குடிக்க நாம் தானே அனுபவிக்கிறோம்
மத் பிராப்தி உபாயதயா –சர்வ தர்மம் பரித்யாகம் —விட்டே பற்ற வேண்டும்–உபாயதயா புத்தியை –
பல த்யாகம் முன்பே சொல்லி சம துக்கம் பார்கிறான்–
இங்கே பரித்யஜ்ய–கர்த்ருத்வ மம பல த்யாகம் மூன்றையும் கீழே சொல்லி –
தர்மம் ஸ்தாபிக்க வந்தவர் தர்மம் விட சொல்வாரா —என்னை அடைய சாதனம் -எந்த தர்மங்கள் – –
மோஷ சாதனமான தர்மங்களை விட்டு விட வேண்டும் இங்கே —தர்மங்களை விட சொல்ல வில்லை
மோஷ சாதனம் என்ற புத்தியை விட வேண்டும்–அவசியம் பண்ண வேண்டும் தர்மம் —
கைங்கர்ய புத்தியால் -செய்ய வேண்டும் –
கர்மம் கைங்கர்யத்தில் புகும் -ஞானம் ஸ்வரூப ஞானத்தில் புகும் –பக்தி பிராப்ய ருசியில் புகும்

தத்வ ஹிதம் புருஷார்த்தம் -அர்த்த பஞ்சகம் குறைத்து–நாராயணனே நமக்கே
தத்வம் உண்மை பொருள் புருஷார்த்தம் அடைந்து அனுபவிப்பது ஹிதம் உபாயம்–மூன்றுமே நாராயணனே
நாராயணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் –
தத்வம் நாராயண பர —
ஒண் பொருள் ஈறில –
நாராயணன் மூர்த்தி கேசவனை தத்வம் நாராயணன்
நார அயனம் -அடையும் வழி -அவனே —
குலம் தரும் செல்வம் -நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
கண்ணன் கழலினை –திண்ணம் நாராயணன் உபாயம் நாராயணனே நமக்கே பறை தருவான்
இந்த இரண்டையும் அறிந்தவள் -10 பாசுரம் -தத்வம் உபாயம் அறிந்தேன்–
நாற்றத் துழாய் முடி நாராயணன் புருஷார்த்தம் அறிவாயா –
தூங்காமல் எழுந்து வருவாயே —திருக் கமல பாதம் வந்து சொன்னாய்–சென்றதாம் என் சிந்தனையே –
வந்து –
முதல் அடி–அப்புறம் நாம் பற்ற வேண்டாமோ–
புகுந்த பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய் –
கிருஷி பலம்–மோஷம் உபாயம் இல்லை–கைங்கர்யம் நாராயணன் புருஷார்த்தம் எது
எனக்கு தேனும் பாலும் கன்னலும் அமுதும் திருமால்–
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணா –
நாராயணன் புருஷார்த்தம் -தேன் பால் அமுது போலே என்கிறார் –

ஆற்ற அனந்தல் உடையாய் –
சோம்பலாவது வ்யாபாராந்தராஷமதை –
இப்படி சொல்லக் கேட்டு பெரிய அனந்தலோடே -கிருஷ்ணா கிருஷ்ணா -என்ன
எங்களுக்கு அங்கே போய்-துயில் எழப் பாட வேண்டுமோ —நீ உணரும்படி காண அமையாதா –

அருங்கலமே –
எங்களுக்கு எல்லாம் சிரோ பூஷணம் அல்லையோ–ஹாரத்தைப் பண்ணி அதுக்கு கல் அழுத்தினாப் போலே
நீ புகுந்து இக் கோஷ்டியை ச நாதமாக்காய்-என்கிறார்கள்–
எங்களுக்கு பெறுவதற்கு அரியவள் அல்லையோ நீ என்னவுமாம் –
சோம்பல் முறிக்கையும் துர்லபமான ஆபரணம் போலே அத்யாகர்ஷகமாய் இருக்கிறது -என்றுமாம்
இவர்கள் ஆர்த்தியைக் கண்டு துணுக் என்று வரப் புக்காள்–

தேற்றமாய் வந்து திற –
இரண்டாம் நிலத்தில் -மேல் மெத்தையில் -கிடக்கிறவள் ஆகையாலே–
தடுமாறாதே தெரிந்து வந்து திற -என்கிறார்கள் –
தேற்றமாய் வந்து திற–ஊராகத் திரண்டு கிடக்கிறது–படுக்கையில் கிடந்தபடி வாராதே சதஸ்தையாய் வந்து திற-
ஊராக திரண்டு கிடக்கிறது-அவர்களில் உன்னையும் நியமிக்க வல்லார் உண்டு
அவர்கள் முன்னே படுக்கையில் சாய்ந்த படி வாராதே-உன்னைப் பேணிக் கொண்டு சதஸ்தையாய் வந்து திற
தேற்றமாய் வந்து திற-
என்கையாலே இவ் வதிகாரிக்கும் லோக கர்ஹை வாராமல் லௌகிக அனுவர்த்தனம் கார்யம் என்றது ஆய்த்து –
தடுமாறி -கண் சிவந்து -ஆடை தங்க ஆபரணம் பின்னே தொங்கி –
ச லஷணா சம்போக சின்னங்கள் உடன் -லஷ்மணம் சந்நிதானம் ஜகாம
அவன் முகம் திருப்ப -வந்தாள்
தேற்றமாய் வந்து திற —
தேற்றம் -தெளிவு –
இருவராய் வந்தார் –தேவர் என்று அஞ்சினோம்-இருவராம்படி வந்தார் -போலே தேற்றமாம் படி –
க்ருதக்ருத்யர் -செய்த வெளிவியர் -தெளிந்த நிலை –
இரு கரையர் இன்றிக்கே சாஸ்த்ரிககள் தெப்பக் கரையரைப் போலே
இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த சாரஞ்ஞர் விய்யத்தில் இருப்பாரைப் போலே
இரு கையையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள் –
ஸ்வ பிரவ்ருத்தி -நிவ்ருத்தி தானே பகவத் பிரவ்ருதிக்கு வேண்டுவது –
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலையில் இருந்து வாழும் சோம்பர்
அரும்கலம் –
சத்பாவர்-

பெரும் துயில் -அத்யவசாயம்/
உபாயம் அவன் என்று இருக்கில் பரபரப்பு என் /
பிராப்யம் அவன் என்று இருக்கில் தூக்கம் எவ்வாறு /
நானும் -என் ரக்ஷண பொறுப்பும் -இந்த ரக்ஷண பலனும் என்னுடையவை அல்லவே
ந மம ஸ்ரீ பதே ரேவ/ ஷேம க்ருஷிகன் -பக்தி உழவன் -அவனே / சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் -கிருஷி பலித்ததே –
சர்வ வித் -கண்ணனே புருஷோத்தமன் என்று அறிந்தால் -ஏக விஞ்ஞானம் சர்வமும் அறிந்தவன் அன்றோ
சர்வ பாவேந பஜதி-
செய்த வேள்வியர் -வையத்தேவர் –
வேதார்த்தம் -கண்ணன் ஆயர்கள் – உள்ளத்துள் இருக்க –
ஞாத்ருத்வம் -ஆத்மாவுக்கு நேற்று பார்த்தோம் -ஞானம் சேஷத்வம் பற்றியே இருக்க வேண்டுமே -/
ப்ராப்ய ஞானம் புருஷார்த்த ஞானம் முதலில் வேண்டுமே -அப்புறம் தானே உபாயம் –
ஞானம் -சேஷத்வம் -கைங்கர்யம் -அறிந்து உபாயம்-ஸித்த சாதன ஸ்வீகாரம் – நிர்ப்பரம் நிர்ப்பயம் பெரும் துயில்
எதுக்கு பற்றினாய் -கைங்கர்யத்துக்கு அன்றோ -என்று வெளியில் உள்ளவர் உணர்த்த –
பற்றினதுவும் அவனது இன்னருளால் அன்றோ –
தேற்றமாய் வந்து -லோக அனுவர்த்தனமும் பண்ணனும் -வைதிகர் லௌகீகர் -இருவருக்கும் -ஒத்து போகும்படி –
கைங்கர்யத்துக்கு பரபரக்கா விட்டால் அசேதனத்துக்கு சமம் -பேற்றுக்கு த்வரிக்க வேண்டுமே
கை ஓய்தல் -அவனே உபாயம் -நான் சேஷன் -விரோதி பாஹுல்யம் மூன்றாலும் -ஆனால் கைங்கரியம் செய்ய –
மதுவார் தண் அம் துழாயான் –எதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யுமீதே –
பொருள் இசை அந்தாதி பூவே-கீழே முடிந்து மதுவில் ஆரம்பம் –
கோயில்கள்– ஞானம் பெறவும் – கைங்கர்யங்கள் கிஉள்ளவும் -இரண்டுக்கும் அமைத்து –
அகிஞ்சித் குர்வத என்றால் சேஷத்வம் பலிக்காதே-அசேதனம் போலே ஆகுமே –
நாற்றத்த துழாய் நாராயணன் -இதனாலே தூங்குகிறாள் உள்ளே
இதனாலே எழுப்புகிறார்கள் வெளியிலும்
வியாபகம் -நாரங்களை-உள்ளும் புறமும் -குணங்களுடன் –
எத்தை எப்படி எத்துடன் -எதுக்கு -நான்கு-
சொத்தை தன்னிடம் சேர்த்து அனுபவிக்க – -ஆழ்வார் மட்டும் பலித்தது
அயனம் -ஆஸ்ரயம் -இருப்பிடம் -பரத்வம் -ஸுலப்யம் இரண்டும் பலிக்கும் -உபாயமாகவும் புருஷார்த்தமாகவும் -இருப்பார்
நாரங்களுக்கு இதன் மூலம் முக்தி -உபாயம் அய கதவ் -இவரை -இரண்டாம் வேற்றுமை -கர்மணி -அடைகிறோம்
இத்தால் -மூன்றாம் வேற்றுமை உருபு -கரேணே –
இந்த நான்கும் இருவரும் அறிவார்கள் –

பேய் ஆழ்வார்
விளக்கு ஏற்ற வில்லை இவர்–வையம்- அன்பே–திருக் கண்டேன் அனுபவம் இவருக்கு–
வாசலும் திறக்க வில்லை
மிருகண்ட முனிவர் திறக்க பொய்கை–இவர் கதவை திறக்க வில்லை மாற்றமும் தாரார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் வந்த படியால்–திருத் துழாய் நாராயணன்
பூம் துழாய் – சார்வு தண் துழாய் மார்வன்–நாராயணா என்று ஈடு பட்டவர்
போற்றப் பறை தரும்
அது நன்று இது -பொது நின்ற பொன் அம் கழல் –
எது நிலை என்னாதே ஒது- கதி மாயனையே ஒது
கும்பத்தை காரணமாக அகஸ்தியர் தோற்று–யமன் திக்கு தெற்கு -வந்த அகஸ்த்யர் தோற்று
தமிழ் தலைவன் இவர்–பெரும் தமிழ் தந்தான்
லஷ்யம் லஷனை–ஆற்ற அனந்தல்–திரு மழிசை அனந்தல் —எம்பெருமானை த்யானமே வேலை மகாதா-பேய்
தேற்றமாய் -அழுதும் தொழுதும் பேய் ஆழ்வார்–தேற்றி கொண்டே வரணும்–பேய் -பெரிய -முன்பு பார்த்தோம்

அரும் கலமே
உயர்ந்த வியக்தி–திருவில் ஆரம்பித்து திருவிலே
சார்வு நமக்கு தேன் அமரும் பூ மேல் திரு–புருஷகார பூதை ஸ்பஷ்டமாக காட்டி அருளி
மற்றவர் எம்பெருமானுக்கு விசேஷணமாக சொல்லி அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா –அங்கே
பர பக்தி பர ஞானம் பரம பக்தி மூவருக்கும் காட்டி -அரும் கலமே இவர்

சித்த உபாய–பராங்குச தாசர் பெரிய நம்பி–உடையவருக்கும் கௌரவர் –

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் –
முதலிலே பெருமை சொல்லி ஆரம்பம்–இறுதியிலும் இரண்டு விசேஷணம்
ஆற்ற அனந்தல் உடையாய்–அரும் கலமே –
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியம் காலையே -8-5-11–
ஆற்ற அனந்தல் -தூக்கம் சோம்பல் அனந்தல் –
அரும் கலமே -பாத்ரம் -சத்பாத்ரம் -ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் -அனுத்தமம் பாத்ரம் -இதம் தயா –

சேதன லாபம் ஈஸ்வரனுக்கே தான் -விஜுர்க பிரமமோதாக ராமம் –
பகல் எல்லாம் கேட்டு இருந்து இரவில் ஏடு படுத்தி அருளிச் செய்த முன்னோர்கள் சத் பாத்ரம் அரும் கலமே
கலம் –
திரு ஆபரணம் -ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டிக்கு பூஷணம்–
ஓராண் வழியாய் 39 பாசுரம் நடு நாயகம் பேசி வரம்பு அறுத்தார்
அதிகாரிகள் துர்லபம் அர்த்தங்களின் சீர்மையும் பார்த்து -பரிச்சை பண்ணியே கொடுப்பார்கள் முன்னோர் –
எதிராசர் இன் அருளால் —
மாற்றமும் தாரார் முன்னோர் –
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே –கண்ணனால் யான் பெரிய திருவந்தாதி–
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வேன் —
வழி பறிப்பார் மலிந்த இடத்தில் கைப்பொருளை -கை கொள்ளுவார் போலே –
யானோர் அல்லல் இலலனே கேடுகள் இன்றி பரிவி இடர் தளர்வு பத்து சப்தம் –
சன்மம் பலபல செய்து -அடுத்த திருவாய் மொழி –
வாசல் திறவாதார் -இரு பக்கத்திலும் வாசல் கால ஷேப விரோதி –

———————————————

பேயாழ்வாருக்கு திருத் துளசி மேல் பெருங்காதலுண்டு! திருத் துழாயை தனது பல பாசுரங்களில் அவர் பெருமாளுக்கு சூட்டி மகிழ்ந்தவர்.

பொன் தோய் வரை மார்வில் பூந்துழாய்,*அன்று திருக் கண்டு கொண்ட* திருமாலே

மலராள் தனத்துள்ளான்* தண் துழாய் மார்பன்,

மண்ணுலகம் உண்டுமிழ்ந்த* வண்டறையும் தண்துழாய்,* கண்ணனையே காண்க

அரும்பும் புனந்துழாய் மாலையான்* பொன்னங் கழற்கே,* மனம் துழாய் மாலாய்

தண் துழாய்த் தார்வாழ்* வரை மார்பன் தான் முயங்கும்,* – காரார்ந்த வானமரு மின்னிமைக்கும்

“சுவர்க்கம்” என்பது பகவானுடன் ஐக்கியமாவதைக் (மோட்சம் சார் பகவத் அனுபவத்தை) குறிக்கிறது.
இவ்வடியவள் பூரண சரணாகதிக்குரிய சடங்குகளை செய்து முடித்த திருப்தியுடன் பரமனின் நெருக்கம் தந்த ஆனந்த நிலையில் இருக்கிறாள்.

மற்றொரு விதத்தில் சுவர்க்கம் = சு + வர்க்கம் = நல்ல + சுற்றம்
அதாவது, உறங்கும் அடியவள் சிறப்பு மிக்க வைணவ அடியார்களின் நற்சுற்றத்தைச் சேர்ந்த பெருமை பெற்றவள்

——————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading