ஸ்ரீ திருப்பாவை சாரம் – தூ மணி மாடத்து — —

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

கிருஷ்ணன் வந்த போது வருகிறான் -என்று–தன் போக்கையே அநாதரித்துக் கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள்-
அதாவது-ஸ்வரூபத்தை உணர்ந்து வந்து அனுபவிக்கையும் அவன் கார்யம் இறே–
தத் சத்ருசம் பவேத்-என்று இருப்பாள் ஒருத்தி -என்கை
உபாய அத்யாவச்ய நிஷ்டரான -அதிகாரியை எழுப்புகிறார்கள்
அவனுடைய பற்றுதலே உத்தாரகம் -அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் அவத்யகரம்-

மாமான் மகளே-என்கையாலே ஓளி புதுவை நகர் வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான
ஸ்ரீ மத் ராமாநுஜாயா –என்னும் அர்த்தம் சொல்லுகிறது -இதுவும் ஆழ்வான் அளவும் அனுசந்தேயம் –

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

வியாக்யானம் –
தூ மணி மாடத்து –
துவளில் மா மணி மாடம் -என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத–நன்மையை உடைய மணியாலே செய்த மாடம் –
சம்சார கந்தம் உண்டாய் கழிந்த முக்தருக்கும்–அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும் உண்டான வாசி–போந்து இருக்கை –
அப்ராக்ருதமாய் பஞ்ச உபநிஷத் மயமான திவ்ய மங்கள விக்ரஹத்திலே-
கடலில் கிடந்த கறு மணி தானே தூ மணி-

சுற்றும் விளக்கெரியத் –
மாணிக்கத்தின் ஒளியாலே பகல் விளக்கு பட்டிருக்கச் செய்தே–மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது –
சுற்றும் விளக்கெரியத் —
கிருஷ்ணன் வந்தால் தன் கையைப் பிடித்து உலாவும் இடம் அடைய–படுக்கையும் விளக்கும் ஆக்கி வைத்தபடி –
புறம்பு நிற்கிறவர்களுக்கு உள்ளே விளக்கு எரிந்தது–தெரிகிறபடி எங்கனே என்னில்
மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க–உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நிற்கும்-
சர்வதோ முகமாக ஜ்ஞான தீபம் பிரகாசிக்க-விளக்கு -ஞானம் ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு -இவள் உடைய ஞானம் உலகு அனைத்தைக்கும் விளக்கு போலே என்றவாறு –
சுற்றும் -வேத அங்கங்கள்

தூ மணி –திருக்கடிகை அனுபவம் -ஸூ சகம் –மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு –
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய

தூபம் கமழத் –
புகை காண ஒண்ணாதே பரிமளம் வெள்ளமிட—சீருற்ற அகிற்புகை -இத்யாதியில் சொல்லுகிறபடியே
எங்களுக்கு அசஹ்யமான பரிமளம் உனக்கு சஹ்யமான படி எங்கனே -என்கை-
ஞானம் பரிமளிக்க–ஞானம் பரிமளிக்கையாவது–அனுஷ்டான சேஷமாய் இருக்கை-
தூபம் புகை மணம் -கேட்டு -அறிந்து அனுஷ்டானம் -மூன்றையும் சொல்லுமே /
சேஷத்வமும் விருத்தியும் -வேண்டுமே

மாடம் -வேதாந்தம் –
சுற்றும் விளக்கு –
ஸ்ம்ருதி இதிகாசம் புராணங்கள் மூலம் -தாத்பர்யம் அறிந்து –
தூபம் கமழ -அனுஷ்டான பர்யந்தம்

மனாச அனுபவம் -அஹங்காரம் மமகாரம் இரட்டை கதவுகள் -திறந்தால் தானே கிட்டும் /
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் –
ஆத்மாவே என் தேகம் என்று அவன் புக நாமோ இந்த தேகமே ஆத்மா என்று பிரமிக்கிறோமே
சம்பந்தமானது ஒத்துக் கொண்டு –த்வம் மே அஹம் மே–
அவனை சொத்தாகவாவது நினைத்து போஷிக்க வேண்டுமே –
அதுவும் இல்லாமல் அன்றோ நான் எனக்கே என்று அன்றோ வீழ்ந்து போகிறோம்
மணிக்கதவம் -ஆத்மா கௌஸ்துப ஸ்தானீயம் தானே -தேசிகர் தானே உபதேசித்து திறக்க வேண்டும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து –
சுற்றும் விளக்கு எரிய–விளக்கும் வெளிச்சமும் -உபயோகப்படவும் வேண்டும்
தூபம் கமழ –வஸ்து புகை வாசனை மூன்றும் –
ஆத்மா -நித்யம் -அணு-ஞானமே ஆத்மா ஞான மயம் -ஞானம் உடைமை -இரண்டுமே உண்டு –
விளக்கு ஒரு இடத்தில் இருந்தாலும் வெளிச்சம் எங்கும் பரவுதல் போலே –
தர்ம பூத ஞானம் சரீரம் எங்கும் வியாபித்து இருக்குமே ப்ரஹ்ம ஸூ த்ரம்-2–26-குணாத்வா ஆலோகவத் –
சூர்யன் கிரணம் போலே -விளக்கு வெளிச்சம் போலே -தர்ம பூத ஞானத்தால் வியாபித்து சுக துக்கம் அனுபவம்
அவரே ஒளியா அவருக்கு ஒளியா -ஓளி மயம் ஒளியை யுடையது இரண்டு ஆகாரம் –
தன்னைத்தானே பிரகாசிக்கவும் மற்றவையை காட்டவும் –
விஞ்ஞானம் யஜ்ஜம் பண்ணும் -ஜீவாத்மா அறிவு –
வ்யதிரேகம் கந்தவதி பிருத்வி மண் வாசனை -கந்தம் உடையவள் -இரண்டாகப் பார்க்கிறோம்
ஜீவாத்மா அறிகிறான்
ஞான ஸ்வரூபன் -ஞான குணகன் –
இரண்டு சூத்திரங்களையும் இந்த இரண்டு வார்த்தைகள்
புஷ்பத்துக்கு வாசனை -புஷ்ப்பமே வாசனை இல்லையே
விஞ்ஞானம் விஞ்ஞாதா -ந விபரிலோபோ பவதி -அறிவாளனது அறிவுக்கு நாசம் இல்லையே –
நான் நான் ப்ரத்யக் -என்றும் இது இது –பாஹ்ய -என்றும் அறிய –
எரிய கமழ இரண்டும் குணம் காட்டும்

தத் குண சாரத்வாத் து தத் விபதே சாத் -குணத்தை வைத்தே வஸ்து நிர்ணயம் –
ஆனந்தமே ப்ரஹ்மம் போலே மயமாகவே இருப்பதால்
ஆனந்தோ ப்ரஹ்ம திவ்ய ஞானாத் –
ச குணேந ஞானேந சகலம் தேகம் –
வஸ்து -ஓளி -கிரஹணம் -மூன்றும் -ஞானம் -மனஸ் -மூலம் -இந்திரியங்களுக்கு
சென்று விஷயங்கள் க்ரஹிக்கும்
விளக்கு எரிந்ததை கிரஹித்து -வாசனையை உணர்ந்து -பாடுகிறார்கள்-
அவ்யக்தம் -ஆத்மா புலப்படமாட்டான் -வஸ்து துச்சம் என்பது இல்லை என்றும் சொல்லும் இதுக்கு மேலே –
கட படாதிகள் புலன்கள் மூலம் வ்யக்தமாவது போலே அன்றே ஆத்மா –
புலன்கள் ஞான மயம் இல்லையே -ஆகவே one way trafic போலே இதுவும் –
ஆத்மாவுக்கு ஞானம் தர்மமாக இருக்கும்
மனசாலே க்ரஹிக்க முடியுமோ என்றால் விசுத்த பற்றற்ற மனசால்
மனம் சிந்திக்கும் கருவி
ஆகமம் சாஸ்திரம் கொண்டு மனசால் சிந்தித்து அறியலாம்
அதீந்த்ரம் -ஸாஸ்த்ர கம்யம் –
அனைத்து ஜீவாத்மாவும் அவனுக்கு சரீரம் -இத்தை அறிய
தூ மானியாவோம் –புருடன் மணி வரமாக –ஸ்ரீ கௌஸ்துபம் ஸ்தானம் ஆவோம்

துயில் அணை மேல் கண் வளரும் –
கிருஷ்ண விரஹத்தையும் ஆற்றவற்றான படுக்கையிலே உறங்குகிற–
எங்களுக்கு மென் மலர்ப் பள்ளி-வெம் பள்ளியாய் இருக்க-உனக்கு படுக்கை பொருந்தி கண் உறங்குவதே !-
நித்ராப்ரதமான சயனத்திலே கண் வளருகிற–
அதாவது ஸ்வ பிரயத்ன சாமான்ய நிவ்ருத்தி பூர்வகமான-பகவத் ஏக உபாய அத்யவச்யத்தாலே நிஷ்டனாய் இருக்கை —
இளைய பெருமாள் போலே நாங்கள்-
ஊர்மிளை தூங்கி கொண்டே காலம் போக்கினாளாம் புராணம் -அவன் தூக்கமிவளுக்கு கொடுத்து போனான்
பேறு தப்பாது துணிந்து இருக்கிறாள் அபிமத லாபம் அவனால்
தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் –
ஞானம் அனுஷ்டானம் வைராக்கியம் நிறைந்தவள்
சேஷத்வம் -அடியேன் உள்ளான்–ஞான ஆனந்தங்கள் நிரூபகம் இல்லை
அடிமை தன்மையே–கண் வளரும் உறங்கும் சொல்லாமல் கௌரவ வார்த்தை
பரிபாஷை–பட்டர் தொண்டனூர் நம்பி -பகவன் திருவடி அடைந்தார் சொல்லாமல்–திருநாட்டுக்கு நடந்தார் -எழுந்து அருளினார்
எச்சான்- அனந்தாழ்வான்- தொண்டனூர் நம்பி மூவரும்–தமிழ் வழங்கும் பிரதேசம்-

தூ மணி மாடம் –
ஆச்சார்யர் திரு மேனி –
சுற்றும் விளக்கு -ஞான பிரகாசம் –
தூபம் –
திருமந்திரம் -பகவத் விஷய வாசனை கமழும்

மாமன் மகளே –
ஸ்வாமி நியாயும்–தோழி யாயும்–அனுபவித்தது ஒழிய–பிரகிருதி சம்பந்தத்தாலும் ஆண்டாள் அனுபவிக்கிறாள் –
மாமன் மகளே –
என்று–இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத உறவு சொல்லுகிறாள்–
திருவாய்ப் பாடியிலே ஒரு பிரகிருதி சம்பந்தம் தனக்கு உஜ்ஜீவனம் என்று இருக்கிறாள் ––
பகவத் சம்பந்தங்களுக்கு எல்லாம் அடிக் கழஞ்சு பெற்று இருக்கிறபடி-
தேக சம்பந்தம் -மாமான் மகள் —தேக சம்பந்தம் உத்தேச்யமா த்யாஜ்யமா–அத்வைதிகள் சந்நியாசி -ஒன்றாலே மோஷம்
ஆபத் சன்யாசம் காஷாயம் மேலே தூக்கி போடுவார்களாம்–
அனந்தராம தீஷிதர் கடைசியில் வாங்கிக் கொண்டார்–விட்டே மோஷம்-
பிதரம் பந்தும் குரு தாரான் –சர்வ தர்மாந்த பரித்யஜ்ய —ஆமுஷ்மாக பிரதானர் ஆசார்யர் விட சொல்ல வில்லை
பந்துக்களைக் கண்டால் சர்ப்பத்தைக் கண்டால் போலேவும்–
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களைக் கண்டால் போலேயும் -உத்தேச்ய பூதர்
ஸ்ரீ வைஷ்ணவர் அல்லாத பந்துக்கள் த்யாஜ்யர்–கைங்கர்யம் சகாயம் பண்ணுபவரை விடக் கூடாதே
மதுரைப் பதி நாடி நம் தெருவே வந்திட்டு -மாமான் மகளே -மாமீர் -மாலா காரார் –
மாமன் மகளே -ஆத்ம பந்து -அநு கூல சம்பந்தம் -கொண்ட பெண்டிர் -நம்மாழ்வார் –
மாமன் -சதாசார்யர் -மகள் -அந்தரங்க சிஷ்யர் -மணி மாடம் -நவ வித சம்பந்தம் அறிந்து

மா மாயன் மகளே -மா மூல பிரகிருதி -மான் -மஹத் –மான் தண்டாக –
மணிக்கதவம் -கௌஸ்துபம் ஜீவன் பிரகிருதி சம்பந்தத்தால் அடை பட்டு இருக்க –
தாள் திறவாய் -கர்மங்களை அகற்றி -சரணாகதி க்ருத்யம்
மாமீர் -குரு பரம்பரை -அவளை எழுப்பீரோ ப்ரஹ்ம ஞானம் அருளி
புருஷகாரமாகவுமாம் -பிராட்டி மூலம்

நஞ்சீயர் -முதலிலே -சந்நியாசி -வாங்கிக் கொண்டார் –
நான்கு இழை-பூணல் —பட்டர் திருவடி -ப்ரஹ்ம ரதம் தோளில் எழப் பண்ணி போக
வயசில் பெரியவர் -ஞானி -சந்நியாசி -நிச்சயம் பாரித்து–கைங்கர்யம் தடையாக இருந்தால் த்ரி தண்டம் உடைத்து
சன்யாசத்துக்கு சன்யாசம் வாங்கி கொள்வேன் –
பிரமச்சாரியாகவே ஒண்ணான வானமா மலை ஜீயர் சன்யாசம் வாங்கி கொண்டார் –
ஆழ்வான் -எம்பெருமானார் தேக பந்துத்வமில்லாமல் போனதே அழுவாராம் –
ஆழ்வார் திருநகர் -வண்ணான் காரி மாறா சடகோபா கூப்பிட சன்யாசம் வாங்கி பாழாக போனேன்-
ஆழ்வார் திருநாமம் இட்டு பிள்ளைகளை பெற வில்லையே -என்றார்
எம்பெருமானார் பேரை இட்டு அழைக்க பிள்ளை இல்லை என்று அழுதாராம்
அதனால் தான் மாறன் ஸ்ரீ பாதத்தை ஸ்ரீ ராமானுஜன் பெயரை இட்டு அழைக்கிறோம் -அங்கு மட்டும்-
மாமன் என்றும் அம்மான் என்றும் இரண்டும் பர்யாயம் ஆகையாலே-
ஸ்வாமியான எம்பெருமானாலே புத்ரத்வேன அபிமதராய் அனந்யார்ஹரான பாகவதரே–

கோதாக்ரஜர் -கோயில் அண்ணன் – 1-கோதற்ற பாடல் திருப்பாவை பாடின கோதை
தங்கை –2- வாதுக்கு நல்ல ஆண்டான் மருமகன் -3–தம்பி எம்பார் -4–தீதற்ற ஞானச் செல்லப் பிள்ளையோ மைந்தன் –
ஏதுக்கு இராமானுஜனை யதி என்று இயம்புவது –காஞ்சி ஸ்வாமிகள் அருளிச் செய்த பாசுரம்
யதுகிரி நாச்சியார் கல்யாணி தாயார் -மருமகள் -/
இவர் எதிராஜ சம்பத் குமார் -செல்லப் பிள்ளை செல்வப் பிள்ளை – எதிராஜரை பெற்ற செல்வம் அன்றோ –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –அபிமான புத்திரர் -ஆறாயிரப்படி -/
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்ததால் -திருவேங்கடமுடையானும் பிள்ளை-ஆத்ம பந்துக்கள் -உத்தேச்யம் அன்றோ

மணிக்கதவம் தாள் திறவாய் –
நீங்களே திறந்து கொண்டு புகுரும் கோள் என்ன ––
மாணிக்கங்களின் ஒளியினாலே–தாள் தெரிகிறது இல்லை–நீயே திறவாய் -என்கிறார்கள் –
த்வத் அனுபவ விரோதியான -தேக ஆத்மாக்கள் இரண்டிலும் உண்டாய்
உனது அனுபவத்துக்கு விரோதியான மமகாரத்தை நீக்க வேணும் என்றபடி-
இரண்டிலும் உண்டான மமகாரத்தைப் தவிர்ப்பாய் -என்றபடி –
அன்றிக்கே
த்வத் அனுபவ விரோதியான பகவத் சௌந்தர்யத்திலும் பகவத் பக்தியிலும் மமகாரத்தைத் தவிர்ப்பியாய் என்கிறார்கள் —
தேசிகரே திறக்க வேண்டும் புருஷகாரம் இல்லாமல் போக மாட்டார்-
நீர் ஸ்படிக மண்டபம் வாசி இல்லாமல் துரி யோதனன் நடந்த கதை த்ரௌபதி சிரித்தால் போலே கிண்டல் பண்ண கூடாதே
மணி கதவு –
ஞானம் –
தாள் திறவாய் –
கர்ம பந்த தேகம் விட்டு கௌஸ்துபம் போன்ற ஆத்மாவை பற்றுகை –

அவர்கள் அழையா நிற்க நீ பேசாதே கிடக்கிறது என்-என்று தாயார் கேட்க–
புறம்பு நின்றவர்கள் அது கேட்டவாறே-
மாமீர் அவளை எழுப்பீரோ -என்கிறார்கள் ––
மாமீர் ––
அவளுடைய திருத்தாயார் என்று–அவள் உறவாலே சொல்லுகிறார்கள் –
இவ்வதிகாரிக்கு ஜனகையாய் இருக்கிற–அநந்ய உபாயத்வ ஞானம் ஆகிற -திருத் தாயார் ––
அவர்கள் இப்படி அழைக்க நீ பேசாதே கிடப்பதே -என்ன —
மாமீர் –
சம்பந்திகளும் உத்தேச்யம்–
பின்னையும் உணரக் காணாமையாலே -சிவிட்கென்று ––

உன் மகள் தான் ஊமையோ என்கிறார்கள்
வ்யவஹார யோக்யை அன்றோ -என்கிறார்கள்
மறுமாற்றம் சொல்ல வல்லள் அல்லளோ-என்றபடி –
இவளைப் பேச ஒட்டாதே வாயை மூடினார் உண்டோ -என்று பாவார்த்தம் –
ஊமைக்கும் கேட்டு வந்து திறக்கலாம்–அதுக்கு மேலே செவியில் துளை இல்லையோ –
எங்கள் வார்த்தையை கேளாதபடி அந்ய பரையோ –
நம் பேச்சு கேளாதபடி அங்கே ஆரவாரம் உண்டோ என்று பாவார்த்தம்–

உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ —
ஆச்சார்யருடைய அப்ரமேய ப்ரபாவங்களை சொன்னவாறு –
பரீவா தேஷுயே மூகா பதிராச்சா பர உக்திஷு பரர் அந்த்ரேஷு ஜாத்யந்தாஸ் தைர் ஜிதம் புவன த்ரயம்
பர தூஷணை செய்யாமையும் -பிறர் செய்யும் நிந்தைகளைக் கேளாமையும் -பிறர் தோஷங்களை பாராமையையுமே
ஊமை செவிடு குருடு -உப லக்ஷணை மூலம் -இருப்பவரே ஆச்சார்ய பீடம் அலங்கரிக்கத் தக்கவர் -என்றவாறு

வனந்தலோ-–
நெடும் காலம் கிருஷ்ண அனுபவம் பண்ணி–படுக்கையில் சாய்ந்தது இப்போதோ –
தனித் தனியே வாக்யாதி இந்திரியங்கள் பகவத் விஷயத்தில் ப்ரவணங்கள் ஆகையாலே
ஒரு கார்யத்திலும் சக்தி அல்லள் -என்றுமாம் –
ஆசார்ய உபதேசம் பெற்ற சிஷ்யர் தன்னை பழிச் சொற்களுக்கு ஊமையாகவும்
மற்றவர்கள் தோஷம் பார்க்காத குருடாகவும் –
அனந்தல்
பேர் உறக்கம் –
இறுமாந்து ஆசார்யாராய் விடாமல் மகா விசுவாசத்துடன் -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் முன்னிட்டு

ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ –
ஏமம் -எனபது காவல் –-திருமந்தரம் உபதேசம் பெற்று-
எழுந்திராமைக்கு காவலிட்டார் உண்டோ ––நெடும் காலம் உறங்கும்படி மந்த்ரவாதம் பண்ணினார் உண்டோ –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ ––என்று–
அம்மான் பொடி தூவினார் உண்டோ -என்கை-
காவல் இடப் பட்டாளோ – மகா நித்தரை உண்டாம்படி மந்திர வாதம் பண்ணப் பட்டாளோ –
ஸ்வ பிரவ்ருத்தி சாமான்யமும் உபாய விரோதி யாகையாலே இதில் அந்வயியாதபடி தடுத்து வைத்தார்கள் உண்டோ –
அதாவது -மனஸ் தடுத்தோ -என்றபடி –
உபாய வைலஷண்யம் பிரவ்ருத்யந்தரத்தில் அந்வயியாதபடி மோஹிப்பித்ததோ -என்றபடி –
எங்களை உறங்காமல் செய்த அவன் திருமுகம் உணராமல் மந்த்ரம் போட்டார் யார்-
அம்மான் பொடி பிரசித்தம்–மயங்கி மாமா மாமா பின்னே போகுமே

ஏமப் பெரும் துயில் மந்திர பட்டாளோ –
உத்தர க்ருத்யம் -சரணாகதிக்கு பின்பு இருக்கும் நிஷ்டை

அவள் உணரும்படி திருநாமங்களைச் சொல்லுங்கோள் -என்று -திருத் தாயார் சொல்ல
நாங்கள் சொன்ன திரு நாமங்கள் அநேகம் அன்றோ -என்கிறார்கள் –
அவை தான் எவை என்ன -சொல்லுகிறார்கள் –
மா மாயன் ––
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே–அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டவன் –
அத்யந்த சுலபன்-பெரிய இடையன் -ஆயன் அல்ல பெரும் தெய்வம் .-
மாதவன் ––
அதுக்கடியான ஸ்ரீ ய பதி–அந்த சௌலப்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின இடம்–
மா தவன் –
மஹா தபஸ்வீ -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரின் என்று தபஸ் -பெரிய பிராட்டியாருடன் -இங்கே –
வைகுந்தன் ––
இந்த சௌலப்யம் குணமாகைக்கு ஈடான பரத்வம் உடையவன் –
ஸ்ரீயபதித்வத்தால் வந்த மேன்மைக்கு தகுதியான–தேச விசேஷத்தை உடையவன்–
அப் பெரிய மேன்மையை உடைய ஸ்ரீயபதியானவன் கிடீர்-
ஆண்களையும் அடிமை கொண்ட நாட்டுக்காகாக கையாள் நமக்கு கையாளா பெண்களுக்கு எளியனானவன் -என்கை-
மேன்மைக்கு அடியான திரு நாமங்களும்–நீர்மைக்கு அடியான திரு நாமங்களும்
இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீயபதித்வத்துக்கு வாசகமான–திரு நாமங்களுமாக—-பேர் ஆயிரம் உடையீர் பேர் கண்டீர் .
ஒரு ஸ்ரீ சஹச்ர நாமத்துக்கு போரும் திருநாமங்களை சொல்லிற்று -என்கிறார்கள்–

மாமாயன் மாதவன் வைகுந்தன் –
தீ வினைக்கு அரு நஞ்சே -தேவி மணாளனை -ஆயனை -திரு விருத்தம்-89-
சௌலப்யம் பரத்வம் இரண்டுக்கும் மூல காரணம் ஸ்ரீ மத் வத்வம் -மத்ய மணி ந்யாயம் –

நாமம் பல நவின்று –
மாமீர் அவளை எழுப்பீரோ–என்று அந்வயம் ஆகவுமாம்
மா மாயன் –
ஆசார்யர் என்றுமாம் –
இரும்பைப் பொன் ஆக்குமா போலே நம்மை சேஷத்வ ஞானம் பெறச் செய்து அவனிடம் சேர்ப்பார்கள் .
மாதவன் –
மகா தபசிகள் பிரபத்தி என்னும் மகா தபஸை உபதேசித்து பரம புருஷார்த்தமான ப்ரீதி காரித கைங்கர்யம்
நித்ய விபூதியிலே பெறச் செய்பவர்கள் –
ஸ்வார்த்த பிரவ்ருத்தி சாமான்யமும் உபாய விரோதி ––
பரார்த்த பிரவ்ருத்தி சாமான்யமும் உபாய பலமாயும்–உபாய அனுகூலமாயும் இருக்கும் என்று அறிவித்து–
அவளை –உபாய அத்யாவசாய நிஷ்டரை -எழுப்பீரோ -என்று அந்வயம்-

மணிக் கதவம் தாள் திறவாய்
நவ ரத்னங்கள் போலே கிரந்தங்கள் அருளியும்
அவற்றின் அர்த்த விசேஷங்கள் நமக்கும் கூட நிலமாம்படி அருளிச் செய்கையும்-

நம சப்த அர்த்தம் -ஆத்ம த்ராண உன்முக -நம பதம் சொல்லி நீ உன்னை ரஷிக்க முடியாதே-
அகண்ட நமஸ் பிரியாத நம -உபாயம் -அஞ்சலி பக்தாஞ்சலி – சகண்ட நமஸ் – ந மம -எனக்கு நான் அல்லேன் –
ததார்தம் சதுர்த்தி பாரார்த்த்யம் சம் – மமகாரம் – இருப்பதற்கு பிரயோஜனம் -அவனுக்கே என்று
நாராயணாயா பிரார்த்தனையா சதுர்த்தி -ஏவிப் பணி– கொள்ள வழுவிலா அடிமை
அடியேனை அவன் அனுபவிக்கிறார் போக்தா -போக்கியம் -நாராயணாய நம –
மத்திய மேன நமஸ்-ஸ்வரூபம் கதி கம்யம் – சிஷிக்கப்பட்டது –
விலைப்பால் -தனக்கு தான் தேடும் நன்மை தாய் பால் -ஏற்றது பிராப்யம் -காசு கொடுக்க வேண்டாமே -ஈச்வரனே ரஷகன்
பெரிய நம்பி சம்பந்தம் கூரத் ஆழ்வான் திருக் குமாரர்கள் திருக் கல்யாணம் – ஸ்வரூபத்தில் உணர்த்தி -பிரணவம்
உபாயத்தில் உறுதி -நமஸ் கண் வளரும் பேறு தப்பாது துணிந்து-
நாராயணாய பலத்தில் துடிப்பு -என்று என்று நாமம் பரவும் -பேற்றுக்கு த்வரிக்கை

மாமான் மகளே –
தாயார் பாசுரம் – தோழி தலைவி மூன்று நிலை –
பிரணவம் சம்பந்த ஞானம் தோழி பாசுரம்-நமஸ் உபாயம் உறுதி தாயார் –
பேற்றுக்கு த்வரிக்கை தலை மகள் பலன்களில் பதட்டம்

திரு மழிசை ஆழ்வாரை -மாமன் மகளே -என்கிறது -அது எங்கனே என்னில் –
உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே வைத்து எடுத்த பக்கம் வலிது-என்னும்படி
மஹீ சார க்ஷேத்ரமான திரு மழிசையில் –
ஸ்ரீ ஜெகந்நாதனை உத்தேசித்து யஜித்துக் கொண்டு இருக்கிற காலத்தில் -பார்க்கவனுடைய பத்னி கர்ப்பிணியாய்
திரு மழிசைப் பிரானை திரு வயிறு வாய்த்ததாலே -பார்க்க விலோக ஜநநீ-என்னும்படியான
பிராட்டியோடே உடன் பிறந்த பார்க்க புத்திரர் ஆகையாலும்
காட்டில் வேங்கடம் இத்யாதி கூடுமாகில் நீ கூடிடு கூடிலே-என்கிறபடியே –
அழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண இழைப்பன் திருக் கூடல் கூட -என்று
ஸ்த்ரீத்வ பாவனையாகப் பேசுகையாலும் –

பெரும் புலியூர் -திருக் கதம்பானூர் அருகில் -கல்யாணபுரம் -அக்ரஹாரம் அருகில் –
கிடந்த வண்ணமே காட்டிய இடம் -மணிக்கதவம் தாள் திறவாய் -பொருந்தும் –
வேதம் -மறந்தார் -ப்ரஹ்ம வித்து மேல் பட்ட அபசாரம் -நெல்லை பிளந்து காட்டி –
கிருஷ்ணானாம் வ்ருஹீ நாம் -சொல்ல -மாமீர் அவளை எழுப்பீரோ -மறந்த வேதம்
ஊமையோ 3000 வருஷம் த்யானத்தில் இருந்தாரே –
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய-என்கிற ஞான தீப பிரகாசத்தை –
என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை-என்றும்
ஞானமாகி நாயிறாகி-என்று பேசுகையாலும் –ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் -என்றும்
அடிச்சகடம் சாடி இத்யாதி வடிப்ப வளவாய்ப் பின்னை தோளிக்காய் வல் ஏற்று எருத்து இறுத்து -என்றும் –
ஆயனாகி ஆயர் மங்கை வேயர் தோள் விரும்பினாய் -என்றும்
பின்னை கேள்வ நின்னோடும் பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கேல் என்றும்
ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களையும் நப்பின்னை பிராட்டி புருஷகார வைபவத்தையும் சொல்லி
இதில் மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றதை –
மாதவனை -என்றும் –வைகுந்தச் செல்வனார் என்றும் -பேசுகையாலே –
மாமன் மகளே என்கிறது திரு மழிசை பிரானை -என்றபடி –
பார்க்கவனும் பார்க்கவியும் பிருகுவுக்கு கியாதீயின் இடத்திலே ஸஹோதரராக சம்பவிக்கையாலும் –
லோக மாதாவுடன் பிறந்தவன் லோகத்துக்கு மாமனாக தட்டில்லை இறே-
அந்த பார்க்கவ புத்ரன் ஆகையால் இவரை மாமன் மகள் என்னைக் குறை இல்லை –
அன்றிக்கே யசோதைப் பிராட்டிக்கு பின் பிறந்த ஸ்ரீ கும்பர் குமாரத்தியான நப்பின்னை பிராட்டி
தரத்தை யுடையார் ஒருவர் ஆகையால் மாமன் மகள் என்று சொல்லுகிறது ஆகவுமாம்

மாமான் -பேய் ஆழ்வார்-
மகா மகான்-மகான் பேய்-பூதம் சரசா -மகான் சப்தம் பட்டர்- மகதாஹ்வய தமிழ் தலைவன்
மாமான் மகள் பேய் ஆழ்வார் சிஷ்யர்- மந்திர உபதேசம் -இவர் ஒருவருக்கு ஸ்பஷ்டம்
மா மாயன் ஆயனாகி -மாயம் முற்றம் மாயமே
கணி கண்டன் -பெரியவரை இளையவராக்கி
மாதவன் -திரு இல்லா தேவரை தேறேல்மின்
வைகுந்தன் -வைகுண்ட செல்வனார் சேவடி மேல் பாடினேன்
தூய்மை ஞானம் நாராயணனை அன்றி களை பிடுங்கி- உபய விபூதி உக்தன்- நாரணர்க்கு
ஸ்ரீயபதி -திரு மகள் கேள்வன்- ஞானம் கொண்டு எல்லா சமயமும் அறிந்து-
நெற்றி கண் காலால் கண் தூபம் கமழ்ந்த சரித்ரம்
துயில் அணை கிடந்த திருக் கோலம் ஈடுபட்டார்
திரு வெக்கா
திருக் குடந்தை
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு
நாகத்தணை –பாற் கடல் கிடக்கும் ஆதி நெடு மால் 8 திவ்ய தேசம்

மா மாயன் -மாயம் என்ன மாயமே -ஆயன் –மாயம் முற்றும் மாயமே –
மாதவன் திருவில்லா தேவரை -தேறேல்மின் தேவு –
கல்லாத இலங்கை கட்டழித்த காகுத்தன் -பாசுரம் –
வைகுந்த செல்வனார் சேவடி மேல் பாடினேன் -என்று என்று –
நாமம் பலவும் நவின்று –மா மாயன் -மாதவன் -வைகுந்தன் என்று யன்றே-
லோகநாத மாதவ பக்தவத்சல -மா மாயன் மாதவன் வைகுந்தன் –
மாயன்-சங்கல்பம் -மம மாயா துரத்யயா-அது இது உது என்னலாவன அல்ல உன் செய்கை என்னை நைவிக்குமே –
எம்பெருமான் பரமாகவும் ஆச்சார்யர்கள் பரமாகவும்
இராமானுசன் செய்யும் அற்புதமே -மகா தபஸ்ஸி-மாதவன் -ஆச்சார்யன் அனுமதி இன்றி
திருநாடு தாரான் -வைகுந்தன்

———————————————

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய – தூமணி மாடம் என்பது, அழிவில்லாத, ஞானத்தை உள்ளடக்கிய நான்மறையை (வேதம்)
குறிப்பில் சொல்கிறது. “சுற்றும்” என்பது வேதத்தின் ஆறு அங்கங்களை
(சிக்க்ஷை, கண்டம், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம்) குறிக்கிறது.
விளக்கு என்பது வேதசாரத்தை புரிந்து கொள்ள உதவும் ஸ்மிருதி, புராண, உபநிடதங்கள் சார்ந்த ஞானத்தை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது.

ஞான தீபமாகிய “விளக்கு” என்ற பதத்தை ஆழ்வார் பாசுரங்களில் பல இடங்களில் காணலாம்.
“ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்”, “உய்த்துணர்வென்னும் ஒளி கொள் விளக்கேற்றி”, “மிக்கானை மறையை விரிந்த விளக்கை”
என்று பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும் – “தூபம் கமழ” என்பது ஞானம், அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம்
என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாக கூறுவார்.

“துயிலணை மேல் கண் வளரும்” என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் (அப்பெண்ணின்) பகவத் ஞானத் தன்மையைக் குறிக்கிறது!

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்! – “எளிதில் உணர இயலா பகவத் விஷயங்களை உபதேசிக்குமாறு
சீடன் ஆச்சாரியனை உள்ளத் தூய்மையோடு வேண்டுகிறார்” என்பது உட்பொருள்.
அதாவது, ஆச்சார்யன் ஒருவரே, நமது புலன் சார் தமோ குணங்கள் மற்றும் வினைப்பயன்கள் என்ற கதவின் தாளை விலக்கி,
மோட்ச சித்திக்கு வேண்டிய ஞானத்தை அருள வல்லவர் என்று கொள்ளலாம்.

மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? – பகவத் சேவைக்கு வேண்டி
அவ்வடியவளை எழுப்ப வைணவ ஆச்சார்யர்களிடம் (மாமீர்) வேண்டுகோள் வைக்கப்படுகிறது!
பகவத் ஞானத்தால் உண்டான தண்ணொளி மிகு நிலையானது “ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?” என்பதன் உள்ளர்த்தமாம்!

“உன் மகள்” என விளிக்கப்படுவதால், அவ்வடியவள் வைணவ ஆச்சார்ய சம்பந்தம் உடையவள் என்பது புலப்படுகிறது…

ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? – அஷ்டாட்சர மந்திரத்தின் ஆதிக்கமே இந்த ஏமப் பெருந்துயிலுக்கு காரணம்!

சூடிக்கொடுத்த நாச்சியாரின் தந்தை பெரியாழ்வார் பாசுர வரிகளில் வரும் மயக்க நிலையை ஒத்தது இது:
பெய்யுமா முகில் போல் வண்ணா.* உன் தன் பேச்சும் செய்கையும்*
எங்களை மையலேற்றி மயக்க* உன்முகம் மாயமந்திரந்தான் கொலோ*

மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய் – ஆச்சார்யனை அடைந்து, உபதேசம் பெற்று
பேரின்பம் தரும் பகவத் அனுபவத்தில் திளைப்போம் என்பது எளிமையான உட்பொருளாம்.
இது தவிர இவ்வாக்கியத்திற்கு பல உள்ளுரைகள் உள்ளன!

மாமாயன் என்பது நீர்மையையும், மாதவன் என்பது திருமகளின் நாயகன் என்பதையும், வைகுந்தன் என்பது பரத்துவத்தையும் குறிப்பன.
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சங்கதி ஒன்றுண்டு.
பெரிய பிராட்டியின் சம்பந்தத்தினாலேயே, நீர்மையும், பரத்துவமும் பகவானுக்கே சித்திக்கும் என்பதை கோதை நாச்சியார்,
‘மாதவன்’ என்பதை நடுவண் (மாமாயன், வைகுந்தன் என்ற பதங்களுக்கு இடையில்) வைத்து மிக அழகாக நிலைநாட்டி விடுகிறார் !

மாமாயன் என்ற பதத்தை பலவகையாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்:

மாமாயன் = மா + ஆயன் = ஆயர் குலத்தில் பெரியவன் – சிறந்தவன்

மாமாயன் = மா + ஆயன் = திருமகள் தொடர்பு உடைய ஆயர் குலத்தவன் (இங்கு மா என்பது திருமகளைக் குறிக்கும், மாலோலன், மாதவன் போல)

மாமாயன் = மா + ஆயன் = இவன் மகாவிஷ்ணு, தர்மத்தை நிலை நாட்டவே ஆயர் குலத்தினில் கோபாலனாக “அவதரித்தவன்” என்று கொள்ளலாம்

————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading