இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –
——————————————–
அவதாரிகை –
எல்லா வற்றாலும் -குலம் ரூபம் குணங்களால் -ஆபிஜாதையாய் இருப்பாள்-ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
ஆபிஜாத்யத்தால் கிருஷ்ணனோடு ஒப்பாள் ஒருத்தி -இவள்-
இப் பாட்டில் ஈச்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு
மிகவும் ஆதரணீய விஷயமான அதிகாரியை எழுப்புகிறார்கள்-
இப் பாட்டில்-ஜாதி உசிதமான தர்மத்தை-சாதனா புத்தி அன்றிக்கே
கைங்கர்ய புத்யா அனுஷ்டித்தால் குற்றம் இல்லை என்கிறது-
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்றம் ஓன்று இல்லாத -என்கையாலே-
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்
வியாக்யானம் –
கற்றுக் கறவை –
ஸ சந்தானரான சிஷ்யர்-
எல்லாம் தலை நாகுகளாய் இருக்கை —இதுக்கு ஹேது
முக்தர் பஞ்ச விம்சதி பிராயர் கீழ் நோக்கி வயசு புகுமா போலே-இவையும் இளகிப் பதித்து இருக்கும்
அவர்கள் பரத்வ அனுசந்தானத்தாலே-
இவை மனுஷ்யத்வ பரனான கிருஷ்ணன் ஸ்பர்சத்தாலே-அனுபவம் ஆழ மோழையாக செல்ல –
முலை சரிந்த பெண்ணை பாராத ராஜ குமாரனை போலே–
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -நம் ஆழ்வார்–
திவத்திலும் -திவத்தை காட்டிலும் -பரம பதத்தை காட்டிலும்–திவதில் சேர்ந்தாலும் -அங்கும்
சிம்ஹாசனம் இருந்து டியோ டியோ -நித்ய சூரிகள் என்ன கேட்பார்களாம்-
பசு மேய்க்க மந்த்ரம் சொல்வான்–
சப்த மாதரம்–ஹாவு ஹாவு சொல்கிறீர்களே அதுக்கு என்ன அர்த்தம் ஆஹா ஆஹா சந்தோஷம் வெளிப்பாடு –
ரஷ்ய வர்க்கத்தில் தன் கை கால் நீட்டாதவரையே அவன் இனிது உகப்பான் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -லஜ்ஜை சுய வியாபாரம் சக்தி விட்டு
இரு கையை விட்டேனோ திரௌபதியை போலே-
கஜேந்த்திரன் -ஆதி மூலமே கதறின பின்பே ஓடி வந்தான்
பசுக்கள் புல் மேய அறியும்–இவை தீர்த்தம் குடிக்க தெரியாமல்-
நதிக் கரைக்கு -சென்று-தடம் பருகு கரு முகில்-வெறும் மேகம் இல்லை –
வரை மீ கானில் தடம் -மலையில் தாழ் வரையில் தீர்த்தம் பருகும் மேகம்-
மலை தாழ் வரை தடாகம் —தாகம் -கன்று குட்டி தீர்த்தம் பருக தெரியாதே-
உறிஞ்சி -ஸ்ரேஷ்டன் செய்வதை லோகத்தார் பண்ணி –
இதை அறிந்து கீதையிலும் அருளினான் –
இட்டமான பசுக்களை இனிது மறுத்தி நீரூட்டி-இஷ்டமான பசு கன்று
காளாய் -இளமை யௌவனம்-
அவற்றை இளகிப் பதிப்பித்து அத்தை கண்டு தானும் இளகி- –
தசரதன் -வா போ -ராமன் த்ர்ஷ்ட்வா புனர் யுவா பவ –
இவனுக்கு கண் ஜாடை காட்டலாம் படி-புக்க இடத்தே புக்கு -இவனுக்கு ஒதுங்க நிழல் கொடுத்து –
கறவைகள் பின் சென்று –
புல் தேடி அது போக –எங்களுக்கும் வழி காட்டி போகுமே -அவ்வளவே எங்கள் ஞானம்
கணங்கள் பல –
அவர்கள் உடைய பலவான சமூகங்களை
தனித் தனியே எண்ணி முடியாமை அன்றிக்கே–சமூஹங்களும் எண்ணி முடியாது என்னுமா போலே
பல -என்னும் அத்தனை–ஆத்மாக்களுக்கும் தொகை உண்டானால் இறே–பசுக்களுக்கு தொகை உள்ளது –
நர — அழியாத வஸ்து–
நர நாரா நாரா பல நரங்கள்–கல்யாண குணங்களை எண்ணினாலும் இவற்றை எண்ண முடியாதே
கறந்து –
அவர்களுடைய அபிநிவேச அனுகுணமாக ஜ்ஞானப் பிரதானம் பண்ணி
ஈஸ்வரன் ஒருவனே சர்வ ஆத்மாக்களுக்கும்–நியமநாதிகளைப் பண்ணுமா போலே
இடைச் சாதியிலே மெய்ப்பாட்டாலே அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம்–
பாலும் நெய்யும் கொண்டு விநியோகம் இல்லாதபடி-
சம்ருத்தம் ஆகையாலே–முலைக் கடுப்பு கெடக் கறந்து -என்றுமாம் –
கற்றுக் கறவை கணங்கள் பல கறக்கும் -கோவலர் தம் பொற் கொடியே –
வர்ணாஸ்ரம தர்மம் -அனுஷ்டிக்கும் கோவலர் -பன்மை
அவனே நோற்று என்னை பெறட்டும் என்று கிடக்குமவள் இந்த பொற் கொடி-
தேங்காதே புக்கு இருந்து வாங்க
கறந்து -ஒருவனே–வேதம் அடைய அதிகரிக்குமா போலே- ஜாதி உசித வ்ருத்தி
செற்றார் –
இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள்–கிருஷ்ணன் உடைய பெருமை பொறாதவர்கள் –
திறலழியச் –
தேவர்களும் எனக்கு எதிர் அன்று -என்று இருக்கும் கம்சாதிகளுக்கு–புகுர ஒண்ணாத மிடுக்கை உடையவர்கள் –
செற்றார் உண்டு-
உபாயாந்தர பரரும்-உபேயாந்தர பரரும்–
அவர்களுடைய திறல் உண்டு –ஸ்வார்த்த பரதை-அழிய-நசிக்கும்படி
சென்று செருச் செய்யும் –
தாங்களே விஜய யாத்ரையைப் பண்ணி அவர்களோடு வர்த்திக்கிற –
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே–இருந்த இடங்களிலே சென்று பொருகை —
சக்கரவர்த்தி திருமகனைப் போலே இவர்கள் வீரம் –
கம்சனே நுழைய முடியாத- அசுரர்களும் மாறு வேஷத்தில் கப்பம் ஒரு நாழி பாலில் வீணாக போவதை கொடுக்க-
கஞ்சன் கடியன் கரவு -கப்பம் வரி எட்டு நாள் கை வலத்து யாதும் இல்லை –
நீயே உண்டாய்-படை எடுத்து போக வில்லையே வீரம் அறிந்து –
குற்ற மொன்றில்லாத –
பூர்வ உத்தர ராகங்களில் ஒன்றும் இல்லாத –
எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
கையில் ஆயுதம் பொகட்டவர்களை எதிர்க்கும் குற்றம் இல்லை -என்றுமாம்
அழிய செய்யா நின்றார்கள் என்று கிருஷ்ணனுக்கு முறைப் பட்டால்–
செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்படி பிறந்தவர்கள் என்றுமாம்
அவன் படி அறிந்து நடப்பவர்கள் –
குற்றம் ஒன்றும் இலாத-செற்றார்
கிருஷ்ணன் மினுக்கம் பொறாதவர்கள் அங்கதன் – -நம் விரோதி கோஷ்டி வந்தான் என்றானே –
சம்ருத்தி பொறாதவர்-சத்ருக்கள் பாகவத விரோதிகள் இவனுக்கு
விதுரன் திருமாளிகை அமுது செய்து–பீஷ்ம த்ரனவ் அதிகிரமம் ஞானம் அந்தணர் குலம் இருவரும்-
மாம் ச ஏவ -என்னையும் ஓக்க ஐஸ்வர்ய வ்ருத்தர்
கிம் அர்த்தம் புண்டரீகாஷா-வைய வந்த வாயால் – விகசித்த திருக் கண்கள்
சென்று செருச் செய்யும் உத்தமன் –
சக்கரவர்த்தி திரு மகன் போலே எதிரிகள் ஆயுதம் பொகட்ட பின்பு யுத்தம் செய்யும் குற்றம் இல்லை
அடை மதிள் படுத்தின பின்பு எதிரிகளை -குற்றம் இல்லாத நாங்கள் வர உறங்குவதோ-
கோவலர் தம் பொற் கொடியே-
ஊருக்காக ஒரு பெண் பிள்ளை —பொற் கொடி தர்சநீயமாய் இருக்கையும்
பர்த்தாவாகிற கொழு கொம்பை ஒழிய ஜீவியாமையும் –
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னால் அல்லல் அறிகின்றிலேன் யான் -என்று இறே இருப்பது –
அவனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பவர்களுக்கு-ஸ்ப்ருஹணீயமான பொற் கொடி
போன்ற திரு மேனியை உடையவளே
ஜ்ஞான வைச்யத்தை உடையவளே -என்றுமாம் -பக்தியை மேலே சொல்ல-
புற்றரவல்குல்-
ஸ்வ விஷயத்தில் படிந்த பரம பக்தியை சொல்கிறது
தன்னிலத்தில் சர்ப்பம் போலே–ஒசிவையும் அகலத்தையும் உடைய அல்குலை உடையாய்
இவர்கள் இத்தனை சொல்லுவான் என் என்னில்–
பெண்களை ஆண்களாக்கும் அழகு இறே–அவன் ஆண்களை பெண் உடுக்கப் பண்ணுமா போலே –
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -கம்பர்
வராக வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக
ஆதரம் செய்வன் -திரு வரங்கத்து அந்தாதி
பெருமாள் ஆண்களையும் பெண்ணுரு உடுக்கப் பண்ணுமா போலே
பெண்களை ஆண்களாக்குகிறது இவளுடைய அல்குல் –
புன மயிலே –
தன்னிலத்திலே மயில் —கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல–அளகபாரத்தை உடையாளாகை-
பொற்கொடியே –
என்கையாலே சமுதாய சோபையை சொல்லிற்று
மேல் விசேஷண த்வயத்தாலும் அவயவ சோபையைச் சொல்லுகிறது –
அளகமென்று-ஸ்வா பதேசத்தில் வ்யாமோகத்தை சொல்லுகையாலே–
வியாமோகம் தான் இதர விஷய வைராக்ய பூர்வகமாக
ஸ்வ விஷய விரக அசஹிஷ்ணுவான–பிரேம ரூப ஞானம் ஆகையாலே
புன மயிலே
என்று பரம பக்தியை -உடையவளே என்கிறது –
போதராய் –
நாங்கள் நிறக்கும்படி புறப்படாய்-
தாரகமாக நாலடி நடந்து பின்னே சென்று நடை அழகு காண கிருஷ்ணனை கூட்டி செல்ல வேண்டாம்
தண்டகாரண்யம் சோபை ஆக்கினது போலே
புனத்தை மயில் சிறப்பிக்கும் ஸ்திரீ வனத்தை நீ சிறப்பிக்க வேண்டும்
புன மயிலே போதராய் –
இந்த ஸ்திரீ வனத்தை சிறப்பிக்க வாராய்
நான் புறப்பட எல்லாரும் வந்தாரோ -என்ன –
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து –
சுற்றத்து தோழிமார் -என்கிறது-
இவ் ஊர் அடங்க இவளுக்கு உறவு முறை ஆகையாலே-உனக்கு பகவத் அனந்யார்ஹ சேஷ பூதரான
பாகவதர் எல்லாரும் வந்து –
உறவினரும் தோழி அனைவரும் இவள் தன்னை போலே அநந்ய பிரயோஜனர் கைங்கர்யம் செய்யும் கோஷ்டி
நின் முற்றம் புகுந்து –
பரம பிராப்யமான நின் முற்றத்திலே புகுந்து –
எங்களுக்கு பிராப்யமான முற்றத்திலே புகுந்து –இவர்களுக்கு பிராப்யமானபடி என் என்னில் –
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் -என்றும் —
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டி -என்றும் –
சேஷியானவனுக்கும் பிராப்யமான முற்றம் ஆகையாலே–
சேஷ பூதைகளான எங்களுக்கு சொல்ல வேணுமோ –
விசாலமான பிராப்ய ஸ்தானம் -முற்றம் புகுந்து-
பரமபதம் முற்றத்தூடு புகுந்து முறுவல் செய்து சேஷிக்கு பிராப்யம்-ஏக ரூபமாய் உள்ளவனையும் முறுவல் –
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என்ன -என்ன –
முகில் வண்ணன் பேர் பாடச் –
நீ உகக்கும்–அவன் அழகிலும்–ஔதார்யத்திலும் ஈடுபட்டு–அவன் திரு நாமத்தை பாடச் செய்தேயும் –
பரம உதாரனும் ஸ்ரமஹரமான வடிவையும் உடைய அவனுடைய திரு நாமத்தை
நீ புறப்பட்டு வருவுதி என்று பாட –
முகில் வண்ணன் பேர் பாட –
மேக ஸ்யாமம் எனக்கே தன்னை தந்த ஔதார்யம் இரண்டையும் உன் பக்கல்
நீ உகக்கும் அவன் வடிவு ஔதார்யம் பாடியும்
சிற்றாதே பேசாதே-
பரக்க ஒரு வியாபாரத்தையும் பண்ணாதே வார்த்தையும் சொல்லாதே –
முகில் வண்ணன் என்றவாறே–அவ்வடிவை நினைத்து பேசாதே கிடந்தாள்
சிற்றாதே –
சிற்றுதல் -சிதறுதல் —உணர்ந்தமைக்கு அடையாளமான சேஷ்டியைப் பண்ணாதே–
இவள் சேஷ்டிதையும் வார்த்தையும்
தங்கள் கண்ணுக்கும் செவிக்கும் போக்கியம் ஆகையாலே-இன்னாதாகிறார்கள்
சிற்றாதே
அங்கங்கள் அசையாமல் -சேஷ்டிதம் வாக்கு – கண்ணுக்கும் காதுக்கும் விருந்து வேண்டுமே
செல்வப் பெண்டாட்டி நீ
உன்னோடு கூடுவது எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ–
கிருஷ்ண குண அனுசந்தத்தாலே புஷ்கலையான நீ -என்னவுமாம் –
இங்கே கூடு பூரித்துக் கிடந்ததோ என்ன –இல்லையாகில் –
செல்வப் பெண்டாட்டி–
உன்னை நீ பிரிந்து அறியாய் –
உன்னுடன் கூடினால் எல்லா ஐஸ்வர்யமும் உன்னுடைய உத்தேச்யம் உனக்கு கிடைக்க-
என்னுடைய உத்தேச்யம் எங்களுக்கு வேண்டாவோ
பின்னை எற்றுக்கு உறங்கும்–
கூடு பூரித்து பூர்ண அனுபவம் – அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ
எற்றுக் குறங்கும் பொருள்-
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ —
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
திரளோடு அனுபவிக்கும் அனுபவத்தை விட்டு–கைவல்யம் போலே கிடக்கிற கார்யம் என் -என்னவுமாம்
உறங்கும் பொருள் எற்றுக்கு -உறங்குவதற்கு பிரயோஜனம் ஏது – எங்களை அகற்றுகையே பிரயோஜனமா –
இன்னம் சம்சாரிகளை சேதனர் ஆக்குகையே பிரயோஜனமா சொல்லாய் -என்கிறார்கள் –
எற்றுக் குறங்கும் பொருள்-
பகவத் குணங்களை ஒரு மடை செய்து புஜிக்கை யாகிற சம்பத்தை உடைய
நிருபாதிக பார தந்த்ரியம் உடையவளே –
நீ –
உன்னுடைய உத்தேச்யத்தைப் பாராதே —
எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே–
கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
எதுக்காக கிடக்கிறாய்- என்று இருக்கும் படி அழகிதாக இருந்தது–
அவனை தனியாக அனுபவிப்பது கைவல்யம்–எங்கள் ஆற்றாமை பாராதே
உன்னுடைய உத்தேச்யம் பாராதே–கிருஷ்ணன் நிரதிசய போக்யதை–ஒன்றையும் பாராமல்
அவனை உகப்பிக்க பார்த்தாய் ஆகில்–அவன் உகந்தார் எங்களை உகப்பிக்க வேண்டாமோ-
ஸூய பிரயோஜன கைங்கர்யம் போலே கூடாதே
மற்றை நம் காமங்கள் மாற்று —
உன்னையும் அவனையும் பொருந்த விட நாங்கள் வேண்டும் -கடகர் ஸ்தானம் பாகவதர்
எடுத்து கை நீட்ட நாங்கள் வேணும்–
விஸ்லேஷ தசையில் -போதயந்த பரஸ்பரம் வருத்த கீர்த்தனம் பண்ணி தரிப்பிக்கை நாங்கள் வேணும்
எற்றுக்கு உறங்கும் பொருள்
தமோ குணத்தால் சம்சாரிகள் உறக்கம் யோக நித்தரை பாற் கடல் நாதன்-
நடந்த கால்கள் நொந்தவோ மடியாது –துயில் மேவி மகிழ்ந்தது அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ
அன்று இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ
தொல்லை மாலைக் கண்னாரா கண்டு காதல் உற்றார் கண்கள் துஞ்சாரே-
சதா பஸ்யந்தி சூரய-எற்றுக் குறங்கும் பொருள்-
செல்வப் பெண்டாட்டி –செல்வச் சிறுமீர்காள் -கீழே பொதுவாக –
உபாயமும் உபேயமும் அவனே என்று நன்கு உணர்ந்த செல்வம் –
அனுபவ ஜெனித -ப்ரீதி காரித கைங்கர்யம் -குண அனுபவம் -அன்பு -செயல் மூன்றும் வேண்டுமே
உபகார சிந்தனையால் ப்ரீதி இருக்க வேண்டுமே
உபாயம் செய்ய கூடாது உறுதி -ஆனால் உபேய பாவம் கைங்கர்யம் செய்வதை மறந்தாயே
உபாய பாவம் மறந்து -உபேய பாவத்தில் கண் வைக்க –
கைங்கர்யத்தில் கண் வைத்து –ராமானுஜர் இறுதி கட்டளை
மறந்து உறங்குகிறாள் –
நிழல் போல்வனர் வேண்டுமே -எடுத்து கை நீட்ட -உணர்த்துகிறார்கள் வெளியில் உள்ளார் /
ஆற்றாமை தீர்க்க வ்ருத்த கீர்த்தனம் -பாகவதர் ஏற்றம் உணராமல் /
திருவடி -வந்து ஆஸ்வாசம் பிராட்டிக்கு -வ்ருத்த கீர்த்தனம் பிராட்டிக்கு -செல்வ பெண்டாட்டி –
காகாசுரன் கதை கேட்டதை ஜாம்பவான் இடமும் பெருமாள் இடமும் சொல்லி சாந்தி சாந்தி சாந்தி மூன்று தடவை
நல்ல என் தோழி- நாகணை மிசை நம் பரர் – செல்வர் பெரியர் -இங்கு செல்வப் பெண்டாட்டி
மூன்றாலும் -கை விட மாட்டான் -என்றும் கண்டு கொள்ள மாட்டான் –
நாம் செய்வது என்
விட்டு தேவர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -குடல் துவக்கு உண்டே –
பகவத் சம்பந்தம் உணர்த்தவும் -உறுதிப்படுத்தவும் பாகவதர்கள் வேண்டும் /
ஏறி வந்த ஏணியை விடக் கூடாதே
விட்டு தேவர் தங்கள் தேவரை-தங்கள் என்பதால் -நேராக தொடர்பு இல்லை –
இவளுக்கு விஷ்ணு தேவர் தேவர் –
வட பெரும் கோயில் பெருமாள் அவருக்கு –
விபீஷணன் -ராமன் விரோதி இடம் கிளம்பி -ராமன் ரக்ஷகன்-என்று நினைப்பவர்கள் மட்டும் இல்லாமல்
அவனை ரஷிக்கும் முதலிகள் கண்டு பெரும் உகப்பு –
நேராக போகாமல் -இவர்கள் சோற்றை பறிக்கக் கூடாதே
ராவணன் வந்தால் நாடே வாழ்ந்து போகுமே அவன் நினைவு
தீர்ப்பாரை -பதிகம் -தோழி -அநந்யார்ஹத்வம் -சஹி வெறி விலக்கு/
கோவலன் தன் பொற் கொடியே -உனக்கும் இது நடக்கும் நாங்கள் வேண்டுமே
ஆசை அறுத்து -துவளில்-மா மணி -/
அறத்தொடு நிற்கும் -கறு மாணிக்க மலை நேர் பட்டதே குட்ட நாட்டு திருப் புலியூர் /சேஷத்வ ஸ்வரூபம் -அறம் –
திரு நெடும் தாண்டகம் -மூன்றாம் பத்தில் -தேவர் என்று அஞ்சினோம் தோழீ -பேசி தரிக்க போத யந்த பரஸ்பரம்
கற்றுக் கறவை -திரு மோகூர் அனுபவம் -ஸூ சகம்-முகில் வண்ணன் பேர் பாட –
தாள தாமரையில் -காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே
நாசௌ புருஷ காரேண ந சாப்யன்யேன ஹேது நா கேவலம் ச்வேச்ச்சையை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன
ஸ்ரீ கிருஷ்ண மேகம் மதுரையிலே மின்னி ஆய்ப்பாடியிலே பொழியுமே-
எம்பார் உகந்த பாசுரம் –
திருமலை நம்பி கால ஷேபம் – பரத்வம் -பூவில் நான் முகனைப் படைத்த தேவன்
எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே —
தகாது தகாது இனி அங்கீகரித்து அருள வேணும் -ஸ்ரீ சைல பூர்ணாயா -ஸ்ரீ ராமாயணம் -சம்மானம் எம்பாருக்கு –
ஆசார்யாய பிரியம் தனம் நான் தர எமபாரைத் தந்து அருள வேணும் –
கோவிந்தர் -எம்பார் -உடம்பு தேமல் – தேசாந்தாரம் இருக்க மனம் இருக்க மாட்டாதே –
விற்ற பசுவுக்கு புல் இடுவார் உண்டோ -கதவையும் திறக்காமல் இரண்டு நாள் காத்து
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் – சௌக்யமாக இருக்கிறாயா கூட கேட்க மாட்டாயா மாமா
ஆச்சார்யர் -புன மயில் –
1-மயில் உள்ள இடங்களில் விஷம் பூச்சிகள் நடமாடாவே –
யத்ர அஷ்டாக்ஷர சம் சித்தோ மஹா பாகோ மதீயதே ந தத்ர சம் சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
2-மயில் ஹர்ஷத்தால் தோகை விரித்தாடும் -ஆச்சார்யர் ப்ரஹ்மானந்தம் பொங்கி ஞான விகாசத்தை காட்டி அருளுவார்
3-சிரமப்படுத்தியே மயில் இறகு பெறுவது போலே அநுவார்த்த ப்ரசன்னாச்சார்யார்
மைத்ரேய பரிபப்ரச்ச பிரணிபாத் யாபிவாத்ய ச என்றும் -பிரணிபாதே ந பரிபப்ரச்நேந சேவயா
4-கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து -மகுடாலம்பி மயூர பிஞ்ச மாலா –
ஏக தேசம் எம்பெருமான் திரு முடி மேலே விளங்குவது போலே ஆழ்வார் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் கேட்டு அருளி
தெனா தெனா என்று தலை குலுக்கிக் கொண்டாடுவான்
5-மயில் முகிலைக் கண்டு களித்தாடுமே
கார் முகில் போல் கண்ணன் யெம்மானைச் சொல்லிப் பாடி ஏத்தியும் பறந்தும் துள்ளுவார்கள்
6-மயிலைக் கண்டு பாம்பு பயந்து ஓடும் குடில விருத்திகள் அஞ்சி நடுங்கி அகலுவார்களே –
நாராயணன் -திருப்பாவையில் மூன்று
நாராயணனே நமக்கே –
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன்-
நாற்றத் துழாய் முடி நாராயணன் இங்கும்-
ஆளவந்தார் -உணர்த்தப்படுகிறார்-
எமுனைத் துறைவன் வானமா மலை ஜீயர் கோவலர் தம் பொற் கொடி-
சுற்றத்தார் தோழிமார் ஐஞ்சு சிஷ்யர்கள் உண்டே–
பவிஷ்யதா ஆசார்யர் ஆ முதல்வன் கடாஷிக்க வேண்டாவோ
கா பிஷா தர்க்க பிஷா – குற்றம் ஒன்றும் இல்லாத நஞ்சீயர் ஆக்கி மைப்படி மேனியான் –
நஞ்சீயர் பட்டருக்கு எடுத்துக் காட்டி –
ஞான பக்தி விரக்தி – புற்று அரவு அல்குல் -ஆசார்ய பரமான- அசிந்த்ய அத்புத ஞான பக்தி விரக்த்தியா-
அகாத பகவத் பக்தி சிந்தையே-நாதமுனியை கொண்டாடுகிறார் ஆளவந்தார்-
கற்று கறவை கணங்கள் –
கற்று -சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் ஸ்ருதிகள் நான்கும் எல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் –
பஞ்சாச்சார்ய பதாச்சித- பெரிய நம்பி -சமாஸ்ரயணம் -மந்த்ரார்த்தம் –திருக் கோட்டியூர் நம்பி -ரகச்யார்த்தம்
திருமலை ஆண்டான் -திருவாய்மொழி திருவரங்க பெருமாள் அரையர் -ஆளவந்தார் ஆழ்வார் -அருளிச் செயல்கள்
கோ வல்லவர் -மகா வித்வான்கள் -அவர் தம் பொற் கோடி கோ அல்லர் -ஸ்வ தந்த்ரர் அல்லர்-
பூதத் ஆழ்வார்-
திருக் கோவலூர்–மூவரும் நடு நாயகம்–கோல் தேடி -கொடியாக சொல்லிக் கொண்டவர்
செற்றார் -ஓடித் திரியும் யோகிகள் மூவரும்–
கன்றாகிய கறவை சின்ன பாசுரம் வெண்பாவில் வேதாந்த அர்த்தங்களை கொடுத்து
குற்றம் ஓன்று இல்லாத கர்ப்ப வாசம் இல்லாத அயோநிஜர்-குருக்கத்தி தாமரை அல்லி பூ –
ஞானம் பக்தி வைராக்கியம்
இடை–புன மயில் கடல் கரை பிரதேசம் திரு கடல் மலை
சுற்றத்தார் பொய்கை பேய் ஆழ்வார்கள் –தோழி மற்ற ஆழ்வார்கள்
முகில் வண்ணன் முதலில் இவர் பாட–மேகம் கண்டால் மயில் சந்தோஷிக்கும்–
யோகி நிலை மாறி சிற்றாதே பேசாதே
தீர்தகரராம் திரிந்து
கோவலர் தம் பொற் கொடியே-வல்லி-கொடி போலே-
ஆழ்வார்களை காட்டில் ஆண்டாளுக்கு ஏற்றம் பெண் தன்மை ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே
பள்ள மடை காதல் சஹஜம் -மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று
பாரதந்த்ர்யம் அசாதாராண லஷணம் ஸ்திரீகளுக்கு கொண்டானை அல்லால் அறியா குலமகள் போலே –
புன மயிலே போதராய் பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரினாம் -இவர்களையும் இப்படி பண்ணும் அழகு
புற்றரவல்குல் நடுவான பாகம் பக்தி
இத்தால் தான் ஞானம் விரக்தி
புன மயிலே -ஆசார்யர் உள்ள இடம்
யாத்ர அஷ்டாஷார சம்சித்தா -மகா பாஹோ ந சஞ்சரித்து வியாதி திருபிஷா பஞ்சம் திருடன்
விசாதி பகை -தீயன வெல்லாம் நேமிப்பிரான் தமர் போந்தார் -நம் ஆழ்வார்
சுற்றத்தார் தோழிமார் தேக ஆத்ம பந்துக்கள் இருவரும் உத்தேச்யம்
குற்றம் ஓன்று இல்லாத -குருக்கத்தி தாமரை அல்லி பூ –
கோவலர்
கோ பிறப்பு அல்லர் தாச பூதர் பரதந்த்ரர்
கோபாலர் இடையர்
திருக் கோவலரில் தம் பொற் கொடி
மூவரில் -இவர் கொடி
கோல் தேடி ஓடும் கொழுந்தே போலே மால் தேடி ஓடும் மனம் இவர் அருளி –
ஸ்ரீ ரெங்க கல்ப வல்லி -ஸ்ரீ ய பதி கல்பக வ்ருஷம்
பக்தி மிக்கவர் -அன்பே தகளியே- எந்தன் அளவல்லால் யான் உடைய அன்பு -என்றார் இவர்
முற்றும் வணங்கும் முகில் வண்ணன் –இருந்தாரை ஏற்றும் என் நெஞ்சு பாண்டவ தூதர் -பூதத் ஆழ்வார்
———-
பொற்கொடி, புனமயில் போன்ற உருவகங்கள் அப்பெண்ணின் மெல்லிய இயல்பை உணர்த்துவதாம்.
அப்பொற்கொடி நாடும் கொழுகொம்பு கண்ணனன்றி வேறு யாராக இருக்க முடியும்!
மெல்லிய இயல்புடையவளாயினும், “புற்றரவல்குல்” (படமெடுக்கும் நாகத்தின் கழுத்தையொத்த இடை) என்ற வர்ணனை
அவ்வடியவளின் (கண்ணனை அடைய வேண்டும் என்ற) வைராக்கியத்தைக் குறிப்பிலுணர்த்துவதாக
வைணவப் பெரியோர் அருளியிருக்கிறார்கள். அதாவது,
“சிறுத்த இடை” என்பது சிற்றின்ப ஆசை சிறுத்து வைராக்கியம் மிகுந்த (பற்றற்ற) நிலையைக் குறிப்பதாம்!
இத்தனை விரிவாக (பொற்கொடி, புற்றரவல்குல், புனமயிலே) என்று அப்பாகவதையின் புறத்தோற்ற அழகை
ஆண்டாள் பாடுவதிலிருந்தே, அப்பெண் அக அழகும் (பரமபக்தி, ஞானம், அடக்கம்..) மிக்கவள் என்பதைக் குறிப்பில் கொள்ள வேண்டும்.
மயிலைப் பாடிய ஆண்டாளுக்கு, மழை மேகம் ஞாபகத்துக்கு வந்து விட்டது போலும்!
மழை மேகத்தைக் கண்டு தானே மயிலானது தோகை விரித்தாடும் இல்லையா!
மழை மேகம் கருமை நிறம், அதுவே கண்ணனின் நிறம். அதனால்,(முற்றம் புகுந்து) முகில்வண்ணன் பேர் பாடப்பட்டது
ஆண்டாள் “பொற்கொடியே, புனமயிலே, செல்வப் பெண்டாட்டி” என்றெல்லாம் போற்றுவதிலிருந்தே
இந்த பாகவதை ஆச்சார்யனிடம் கற்றுணர்ந்த உத்தம அதிகாரி என்பது புலப்படுகிறது.
பொற்கொடியே எனும்போது குலத்தாலும், புனமயிலே எனும்போது வடிவாலும், செல்வப்பெண்டாட்டி எனும்போது
குணத்தாலும் என்று எல்லாவற்றிலும் சிறந்த அடியவள் இவள் என்பதும் தெளிவு.
பொற்கொடி – பக்தி
அல்குல் – பரபக்தி
புனமயில் – பரம பக்தி
ஆக, பொற்கொடி, புற்றரவல்குல், புனமயில் ஆகியவை அவ்வடியவளின் (ஜீவாத்மா) கண்ணன் (பரமாத்மா) மீதான
உன்னதமான பக்திக்கான உருவகங்களே!
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து – புராண, இதிகாச, உபநிடதங்களை கற்று, அதன் ஞானத்தை உள்ளடக்கிய
(அதனால் சீடர்கள் புடை சூழ இருக்கும்!) ஆச்சார்யத் தன்மையை உட்பொருளாகக் கொண்டுள்ளது.
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் – வேதங்களை சரியாக கற்காதவரையும், இறை நம்பிக்கை யற்றவரையும்,
சாத்திரங்கள் குறித்த விவாதங்களில் வெற்றி கொண்டு, அதன் மூலம் பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி,
இறையன்பு ஒன்றையே முன் நிறுத்திய வைணவப் பாரம்பரியத்தை போற்றும் தன்மை இதன் உள்ளுரையாம்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே – வேதங்களில் பாண்டித்யம் பெற்றவரை ஆச்சார்யனாக அடையும்
பேறு பெற்ற சீடனை குறிப்பில் உணர்த்துகிறது ( கோவலர் – கோ என்றால் வாக்கு அல்லது வேதம்)
கோவலர் என்பது வேதத்தை பாதுகாக்கும் ஆச்சார்யர்கள். அத்தகைய ஆச்சார்யர்களாகிய கொழுகொம்பின் மேல் படர்ந்து
ஞானம் பெறும் கொடியாக (உத்தம அதிகாரியான) சீடன் விளங்குகிறான்.
புற்றரவு – ஆச்சார்ய பக்தியும், மிகுந்த அடக்கமும் உடைய சீடன் (புற்றில் இருக்கும் நாகம் தன்னைச் சுருட்டிக் கொண்டிருக்கும் அல்லவா?)
புனமயிலே – பெருமாளின் ஆயிரம் நாமங்களை ஓதும் சீடன்
போதராய் – ஆனந்த அனுபவத்தில் திளைப்பாயாக!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து – வைகுண்டத்திலிருந்து வந்திருக்கும் பெருமாளின் தூதர்கள் (பெரும் வைணவ அடியார்கள்) அனைவரும்
நின் முற்றம் புகுந்து – உனது சூட்சம சரீரத்தில் நிழைந்து (ஆன்மாவை அடைந்து)
முகில்வண்ணன் பேர் பாட – பரமனது திருநாமங்களை ஓதியபடி உன்னை பரமபதத்திற்கு கூட்டிச் செல்லக் காத்திருக்கின்றனர்.
சிற்றாதே – அறிந்தோ, அறியாமலோ செய்த வினைகள் குறித்த கவலையை உதறியதால்
பேசாதே – அகங்காரத்தையும் மமகாரத்தையும் தொலைத்து, பகவானின் திருநாமங்கள் தவிர வேறெதையும் பேசாமல்
செல்வப் பெண்டாட்டி நீ – கண்ணனுக்கு உகந்த அடியவள் நீ, கிருஷ்ணானுபவம் என்ற செல்வம் மிக்க அடியவள் நீ!
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய் – எங்களது அஞ்ஞானத்தையும், குறைகளையும் விலக்கி,
எங்களது உய்வுக்கு உதவாமல் இருப்பதன் அர்த்தம் என்னவோ?
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் – நாம் பல இடங்களுக்குச் சென்று பகவத் விரோதிகளை
விவாதங்களில் வென்று நல் வழிக்கு கொணர வேண்டும் என்று பூதத்தாரே அவரது பாசுரம் ஒன்றில் இயம்பியுள்ளார்
பண்டு இப்பெரும்பதியை ஆக்கி* பழிபாவம்-
கொண்டுஇங்கு* வாழ்வாரைக் கூறாதே,* – எண் திசையும்-
பேர்த்தகரம் நான்குடையான்* பேரோதிப் பேதைகாள்*
தீர்த்தகரர் ஆமின் திரிந்து.
புற்றரவல்குல் – மேலே சொன்னபடி அல்குல் = பரபக்தி.
பரபக்தி என்றால் பரமன் மேல் வைத்த பேரன்பு. இவ்வாழ்வார் தனது திருவந்தாதியை “அன்பில்” தொடங்கி, அன்பிலேயே முடித்துள்ளார்
பூதத்தாழ்வார் தான் முதன் முதலில் “முகில் வண்ணன்” என்று பெருமாளை வர்ணித்தவர் என்பது கவனிக்க வேண்டியது.
உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்,* – பற்றிப்-
பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.
ஆச்சார்ய மயிலானது (புனமயிலே!) கார்மேக வண்ண மேனி கொண்ட எம்பெருமானை போற்றிப் பாடுவது இயல்பானது தானே
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட — வைணவர்க்கு பிடித்த இடம் முற்றம், அதாவது திவ்ய தேசங்கள்,
அங்கு சென்று பெருமாளை வணங்கி வழிபட்டு மங்களாசாசனம் செய்தல்!
———————————————
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply