இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –
——————————————–
அவதாரிகை
கிருஷ்ணனைப் பிரியாமல் –இளைய பெருமாளைப் போலே இருப்பான் ஒருவன் –
தங்கை யாகையாலே ஸ்லாக்யையாய்
இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-
இப்பாடலில்–பாகவத அபிமான நிஷ்டரை எழுப்புகிறார்கள்-
கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்
வியாக்யானம் –
கனைத்து-
கறப்பார் இல்லாமையாலே–முலை கடுத்து கதறுகை –
ஸ்வாசார்யன் தனக்கும் ஸ்வ சந்தானத்துக்கும் பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை
என்று வியசனப் பட்டு –
கனைத்து
கறக்க வில்லை–வேதனையால் கனைக்கிறது–உதாரார் கொடுக்கா விட்டால் கதறுவது போலே –
வள்ளல் பெரும் பசுக்கள் –
ஆஸ்ரிதர் -ரிணம் பிரவர்தம் -கோவிந்தா குரலுக்கு -செய்ய வில்லையே -எல்லாம் செய்த பின்பு –
வாசலிலே கன்று காலியாய் நான் பட்டதோ
குமுறி – இளைய பெருமாளுக்கு அக்னி கார்யம் அன்வயம் ஆகும் பொழுது இவன் கறப்பான்-
கிருஷ்ணனை பிரிய மாட்டாமையாலே சாஸ்திரம் -ஒத்து கொள்ளுமா பக்தி யோகம் -தைல தாராவது –
தபஸ் – நித்ய கர்மாநுஷ்டானம் உண்டா இப்படிப் பட்டவனுக்கு -பிரேமத்தால் பிரிய மாட்டாதவன் –
ஆலச்யத்தால் விடக் கூடாது – தொல்லை மால் நாமம் ஏத்தவே பொழுது –
இவன் தன்னை நேராக விட்டிலன் கர்மம் கைங்கர்யத்தில் புகும்
இளம் கற்று எருமை-
இளம் கன்றாகையாலே பாடாற்றாமை –பால சந்தானமுடைய சிஷ்யர்
கறவா மட நாகு -தன் கன்று உள்ளினால் போலே-
முலைக் கடுப்பு வேதனை விட கன்றை நினைந்து -இரங்கி ஏழை எதலன் கீழ் மகன் இரங்கினால் போலே
கோபிகள் கன்று ஸ்தானம் வாசலில் -கறவாத எருமை ஸ்தானம்
கன்றுக் கிரங்கி –
தன் முலைக் கடுப்பு கிடக்க – கன்று என் படுகிறதோ -என்று இரங்கி –
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்கும் படிக்கு நிதர்சனம் இறே
இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
அவன் எருமைகள் கறவா விட்டால் அவை படும் பாட்டை நாங்கள் உன்னாலே படா நின்றோம் -என்கை
ஸ்வ சந்தானத்திலே தயை பண்ணி –
நினைத்து முலை வழியே நின்று பால் சோர –
கன்றை நினைத்து பாவன பிரகர்ஷத்தாலே முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு பால் சொரியா நிற்கும்—
மீன் -பார்வையாலே -/ பறவை- ஸ்பர்சத்தால் /
ஆமை நினைத்த மாத்திரத்தாலே போஷணம் -என்பர் தேசிகர் சங்கல்ப ஸூர்யோயதத்தில் –
முலை வழியே – கை வழி தவிர – நின்று பால் சோர – நினைவு மாறாமையாலே
திருமலையிலே திரு அருவிகள் போலே பால் மாறாதே சொரிகை
இவன் எருமைகளை விட்டுக் கறப்பது அது என் என்னில்
கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அல்லாமையாலே பிராப்ய விரோதிகளில் நசை அற்ற படி யாகவுமாம்-
நினைத்து-
ஸ்வா சார்யன் தன்னை அதிஷ்டித்துக் கொண்டு ஸ்வ சந்தானத்துக்கு பகவத் குணாநுபவம்
பண்ணுவித்து அருளுகிறான் -என்று நினைத்து –
பாவன பிரகர்ஷத்தாலே ஸ்வாசாரய அபிமானம் ஈடாக பகவத் குணங்கள் சுரக்க –
நினைத்து -தானே பால் பொழிய –
கஜேந்த்திரன் நினைக்க- பாகவத த்வராயா நம-வேகத்துக்கு நமஸ்காரம்
அவன் வேகம் போலே பால் சொரிய மனசா சிந்தயந்தே ஹரிம் நினைத்த பாவனா பிரகர்ஷத்தால்
கன்று வழியே இன்றி பாத்ரம் வழியே அன்றி
முலை வழியே நின்று பால் சோர –
அர்ஜுனன் கேளாமல் பூயயோகோ மகா யோ ஸ்ருனு-18 அத்யாயம் 700 ஸ்லோகம் –
மறுபடியும் சொல்கிறேன் – எடுப்பும் சாய்ப்புமாக –
கரிஷ்யே வசனம் தவ -நீ சொன்னதை கேட்கிறேன் சொல்வதை நிறுத்து
பால் வெள்ளம் இல்லம் சேறாக்கும்
கண்ண நீர் –அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் பொன்னி நீர் போலே –
பால் சோறு அப்புறம் இங்கே பால் சேறு –
நற் செல்வன் தங்காய்-
பால் சேறாக கறவாமல் – அத்தாணிச் சேவகத்தில் பொதுவானவை நழுவும்
ஆஸ்தானம் சேவகம் நழுவும் -விடுவான் சொல்ல வில்லை
உறங்குவான் கைப் பண்டம் போலே தன்னடையே நழுவும் -மா முனிகள்
கைங்கர்ய பரருக்கு உபவாசமே வேண்டாம் –
கோவலர் பன்மை கீழே நற் செல்வன் –
ஒருமை விசேஷ வ்யக்தி இவன்
செல்வம்-கைங்கர்யம்–அந்தரிஷ கத ஸ்ரீ மான் லஷ்மண சம்பன்னன் கஜேந்த்திரன் போலே –
கிருஷ்ணன் பின்னே சென்று அவனை அல்லது அறியாதே -அவனுக்கே பரிந்து
ஜாதி ஆஸ்ரம தீஷைகளில் போதிக்கும் தர்மங்கள் போலே அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவுமே
பகவத் கைங்கர்ய நிஷ்டையாலே இந்த நற் செல்வன் –
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன் மார் கொண்டு போக
ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி -பெரியாழ்வார் -3-4-3-
உபேயம்-தானே உபாயம்- விடுவித்து பற்றுவிக்கும் –அவனே உபாயம்
நஞ்சீயர் ஸ்ரீ ஸூ க்தி விடுகையும் பற்றுகையும் உபாயம் இல்லை-
நற் செல்வன் தங்காய் -விபீஷணன் -த்ரிஜடை அனலா -சத்தையா தாரகம் -மாயா சிரஸ் –
இவர்கள் மூலம் விபீஷணனை விஷயீ கரித்து
மனத்துக்கு இனியான்-சேர்ந்தே வருமே
அனைவருக்கும்- வேதம் ரிஷிகள் பிராட்டி தாய்மார்கள் –
கோமானைச் செற்ற -அஹங்காரம் அழித்து -ஆத்மாவை அழிக்க முடியாதே
பேர் உறக்கம் -பெரும் துயில் -திருட மஹா விசுவாசம் -அச்யுதன் பிடியை நழுவ விட மாட்டாரே
அனைத்து இல்லாரும் அறிந்து -எம்பெருமானார் -வந்து தோன்றிய அப்பொழுதே
ஞானம் தலைக் கொண்டு நாரணர்க்கு ஆயினர் -போலே
செல்வ சிறுமீர்காள் -பொதுவான ஏற்றம்-செல்வப் பெண்டாட்டி கோவலர் தம் பொற் கொடி –
நற் செல்வன் தங்காய் -பிரபத்தி நிலை தாண்டி -பஞ்சமோ உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
காருண்யா ஸாஸ்த்ர பாணிநா -சஸ்திரம் விட்டு -பாரதந்தர்யம் ஏறிட்டுக் கொண்டு –
நினைத்தை பண்ணுவதே ஸ்வாதந்தர்யம் –
தூக்கம் பற்றி இல்லை செல்வம் பற்றியே இங்கு –
மாமன் மகள் -சுவர்க்கம் புகுகின்ற அம்மான் -பிரபத்தி நிஷ்டை -நிவாகரகர் இல்லாத ஸ்வதந்த்ரன்
இரண்டிலும் தூக்கம் -செல்வம் இல்லை –
தனம் மூடா -கைப்பணம் -பிரமாணம்
ஸூய வியாபாரம் இல்லை என்பதே மேல் ஓங்கி இருக்கும் இந்த இரண்டிலும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய -விடுகை பிரதானம்
ஸூ லபம்-ஸூ வ குரு -துர்லபம் பகவான் உபாசத –கை நீர் விட்டு ஜீமூதம் தேடி –
கைப்பட்ட தனம் விட்டு புதையல் தேடுபவரை போலே -அந்தர்யாமி அஷ்டாங்க யோகம் கை வந்தவர்களுக்கே –
தன் கைப்பொருள் விட்டாரை காசினியில் தாம் புதைத்த —ஞான சாரம் –
இரண்டு -பாசுரம் -ஒவ் ஒன்றுக்கும் -அவாந்தர பேதம் – –ஸூகத ஸ்வீகாரம் /பரகத ஸ்வீகாரம் இரண்டும் உண்டே –
மர்கடம் -குரங்கு குட்டி தானே பிடிப்பது –
மார்ஜாரம் -பூனை தாயே பிடிக்கும் குட்டியை –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -அறிந்து ஸூகத ஸ்வீகாரம்
ஏஷஹ்யேவாநந்த -ஆனந்தப்படுத்தும் ஊட்டும் -பரகத ஸ்வீகாரம்
நோற்காமலே பெற்ற அம்மனாய் அன்றோ -கண்ணனே நோன்பு நோற்று பெற்ற இவள் –
கோரா மா தவம் செய்தனன் கொல்-
கோவலர் தம் பொற் கொடி -இங்கு -கொண்டாட்டம் ஆச்சார்யர் பெருமைக்கு இதில்
பிரத்யஷே குருவை கொண்டாட வேண்டும்
கீழே மாமானுக்கு விசேஷணம் இல்லையே
அடுத்த பாட்டு -கனைத்து –நினைத்து முலை வழியே -ஆச்சார்யர் குமுறி உபதேசம் உண்டே
குருவால் அபிமானம் -குருவை அபிமானம் இருவரும் உயர்ந்த கதி -அடைவார் -பிரமாணம் –
கீழே அப்படி இல்லை -பரதன் இடம் பலிக்க வில்லையே –
சரண்ய ஹ்ருதய அனுசாரி அனுகுணமாக இருக்க வேண்டும் –
அப்பொழுதே செய்ய வில்லை அப்புறம் பண்ணினார்
பிரபத்தி சேஷமாக அங்கமாக ஆச்சார்ய அபிமானமா -நேராக மோக்ஷத்துக்கா அடுத்த படி
இவன் நம் பையல்-அளியல் நம் பையல் என்ன அம்மாவோ கொடியவாறே
ஆழ்வார் திரு நகரி மறியல் -ஊரே ஆழ்வாருக்காக காத்து இருக்குமே -அடுத்த நாள் –
சாஷாத் – ஸ்ரேஷ்டம் / அங்கம் -பாரத்வாஜ சம்ஹிதை –
பிரபத்தியை பூர்த்தி யாக்கும் ஆச்சார்ய அபிமானம் –
குளிக்கவோ தொட்டிலிடவோ -கூப்பிடுவார் -வந்து நிறுத்தினால் போற்றுவோம் –
பசுர் மனுஷ்ய பஷீர் வா யே வைஷ்ணவ சமஸ்ரிதா தேனை ஏவ –தத் விஷ்ணு பரம பதம் -அதனாலே மோக்ஷம் –
மனுஷ்யனை நடுவில் வைத்து பரகத ஸ்வீ காரம் -ஜடாயுவை பெருமாள் தானே பற்றினார்
பழுதாகா வகை அறிந்தேன் பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை கண்டு இறைஞ்சி
ஏத்தி இருப்பாரை வெல்லும் -அவரை சாத்தி இருப்பார் தவம் -பரகத ஆச்சார்ய அபிமானத்துக்கு பிரமாணம்
பிதாமஹம் -பார்த்து -என்னைப் பாராமல் -ஆளவந்தாரும் –
பால மூட ஜடம் அந்தன் பசவா செவிடு -சதாச்சார்ய ராலே கடாஷப்பட்டால் -சந்த்ருஷ்டா -ப்ராப்யம் பரம கதி
வேதார்த்தம் அறுதியிடுவது ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் –
நனைத் தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியாலே அகம் வெள்ளம் இடும் – அத்தாலே துகை உண்டு சேறாகும்
இத்தால் சேறாகையாலே புகுர ஒண்கிறது இல்லை -என்கை-
மேலே வர்ஷம் பனி வெள்ளம் கீழே பால் வெள்ளம்-தண்டியம் பிடித்து தொங்கி இருக்கிறோம்
ஸ்ரோத்தாக்கள் உடைய ஹிருதயத்தை சம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிரப் பண்ணி –
குணானுபத்தாலே களிக்கும்படி பண்ணுகிற –
தங்காய்-
குணத்துக்கு தமையனில் தன்னேற்றமுடையவள் -என்கை –
நற் செல்வன்
உன்னுடன் பிறந்தவன் ரஷ்ய வர்க்கங்களை நோக்கினால் அன்றோ
நீயும் ரஷ்ய வர்க்கங்களை நோக்கப் போகிறாய்
பனித்தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்-
மேல் வர்ஷம் வெள்ளம் இட – கீழ் பால் வெள்ளம் இட – நடுவு மால் வெள்ளம் இட நின்ற நிலை யாகையாலே
தெப்பம் பற்றுவாரைப் போலே நின் வாசல் கடையில் தண்டியத்தைப் பற்றிக் கிடக்கிற இந்த தர்மஹாநி அறிகிறிலை –
பனியானது தலை மேல் சொரிய–அதாவது–
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற–ஆழ்வார்கள் உடைய ஸ்ரீ ஸூக்திகளாலே வரும் பகவத் குணாநுபவம் –
கீழ் ஆசார்ய உபதேசம் அடியாக வரும் பகவத் குணானுபவ பிரவாஹம் என்ன –
மேலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய-அருளிச் செயலால் வரும்
குணானுபவ பிரவாஹம் என்ன –
நடுவே பாகவத குணானுபவ பிரவாஹம் என்ன –
இப்படி பிரவாஹ த்ரயத்தில் அகப்பட்டு அலைகிற நாம்
உனக்கு பிரதிபாதகமான நமஸிலே த்வாரவர்த்தியான நகாரமாகிற அவலம்பத்தைப் பற்றி-
கீழ் சொன்ன குண அனுபவங்களில் போக்ருத புத்தி வாராதபடி தடுக்கிற நகாரத்தைப் பற்றி என்றபடி –
இப்படி சொன்ன இடத்திலும் இவர்கள் படும் அலமாப்பு காண்போம்
சினத்தினால் –
பெண்களை தீரா மாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழிய பெண் பிறந்தாருக்கு
தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்
இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –
சினத்தினால் –
தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –
ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே
மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார் அவர் அழுத போது கூட அழுதார் இறே –
ஜித குரோத கக- திருவடி மேலே அம்புபட்ட பொழுது சீறினார்-
மனத்துக்கு இனிய சினம் –
பகவான் இடம் இருந்து -ஹிதம் அருளி நம்மை நியமித்து அருளுவான் -சீறி அருளாதே -என்பார்களே –
கோபத்தினாலே யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான அஹங்காரத்தை நசிப்பித்து
சினத்தினால் -திருப்பாவை -12
உகிரால் கீண்டான் சினம் -பேயாழ்வார் -42
சீற்றம் ஓன்று உண்டு -கலியன் -5-8-3-
ஆஸ்ரித சத்ருக்கள் சக்கரவர்த்தி திரு மகனுக்கும் விரோதி –
அருள் அன்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சீற்றம் உத்தேச்யம்
அச் சினத்தை தெரி -அனுசந்தி
தரித்ரனாவன் தணிகனை அடையுமா போலே -சீற்றமும் உண்டு -என்று இறே இவர் பற்றுகிறது
ஆஸ்ரியருக்கு உறுப்பான குணங்கள் இறே சௌசீல்யாதி கள்
விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்
கனைத்து இளம் கன்று -சித்ரகூட அனுபவம் ஸூ சகம்-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்றான் –
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான்
மனத்துக்கு இனியான் -திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்
செற்ற
ஓர் அம்பால் தலையை தள்ளி விடாதே படையைக் கொன்று தேரை அழித்து ஆயுதங்களை முறித்து
புத்திர பௌத்ர அரக்கர் தம் கோன் போலும் அஹங்காரம் அழித்து-
பட்டர் அனுபவம்
தாம் போலும் -என்று எழுந்தான் -கோன் போலும் – இயலை ஒரு தடவை கேளா –
சந்தை கூட சொல்லிக் கொள்ள வில்லை – ராவணன் வார்த்தை காண் என்று விட்டார் –
தான் போலும் -தாரணி யாளன்
மனிஷா பையல் -தான் என்று யுத்தம் வர அரக்கர் கோன் பூ பறித்தால் போலே இருப்பேனா -என்று எழுந்தவன்
அஹங்காரம் மனத்து இனியான் செற்ற காலத்தில் இன்று போய் நாளை வா சொன்ன இனிமை –
சசால சாபஞ்ச -முமோஷ வில்லையும் கீழே போட்டான் வெறும் கை வீரன் ஆனான் –
சிங்கம் கண்ட யானை கருடன் கண்ட பாம்பை போலே ஆனான்
இரவுக்கு அரசன் தூக்கம் வராது கையும் வில்லுமாகா கையும் அஞ்சலியுமாக வர வேண்டுமா
திருவினைப் பிரிந்த கடு விசை அரக்கன் – செற்ற காலத்தில் மனத்துக்கு இனியான்
பெண்களை ஹிம்சை கண்ண நீர் அடிக்கும் தீம்பன் இல்லை-
சத்ருக்களுக்கும் கண்ணநீர் பெருக்கும் கண்ணன் நாமமே குளறிக் கொன்றீர்
மிருத சஞ்சீவனம /நம் ஆழ்வார் உயிர்க்கு அது காலன் –
பாடவும் -நீ வாய் திறவாய்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்-
எங்கள் ஆற்றாமை காண வேண்டும் என்று இருந்தாயாகில் கண்ட பின்பும் உறங்கும் இத்தனையோ – எழுந்து இராய்
நீ வாய் திறவாய் –
நீ வாய் திறக்கிறது இல்லை – ப்ரீதிக்கு போக்கு விட வேண்டாவோ –
இனித் தான் எழுந்திராய் –
எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ – எழுந்திராய் –
உன்னுடைய மகிழ்ச்சிக்காக எழுந்து ஆர்த்திக்கு உணராவிடில் உனது பேற்றுக்கு இது என்ன பேர் உறக்கம் –
யீதென்ன பேருறக்கம் –
பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவனுடன் பழகி வைத்து இங்கனே உறங்குவதே -என்கிறார்கள் –
ஆபன்னர்க்காக உணருமவன் படியும் அன்றிக்கே–
காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் படியும் அன்றிக்கே– இருப்பதே உன்னுறக்கம் –
சம்சாரிகள் நித்தரை தமோபிபூதியால் உண்டானதாகையாலே சத்த்வதோரமான காலத்தில் தீரும்படியாய் இருக்கும் –
ஈஸ்வரன் உடைய நித்தரை ஜகத் ரஷண சிந்தா ரூபம் ஆகையாலே பரார்த்தி காண தீரும்
இவளுடைய நித்தரை சரம பர்வ நிஷ்டர் உடைய ஆற்றாமை காணத் தீரும்
ஆகையால் அதுக்கு அதிகாரி கிடையாமையாலே பேர் உறக்கமாய் இருக்கும் –
அனைத்தில்லத்தாரும் அறிந்து
பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும்
என்று இருந்தாய் ஆகில் எல்லாரும் அறிந்தது –
இனி எழுந்திராய்
பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை – புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று கிடக்கிறாய் ஆகில்
அது எங்கும் பிரசித்தம் என்றுமாம் –
எம்பெருமானார் திரு அவதரித்தாப் போலே காணும் இப் பெண் பிள்ளையும்
கனைத்து இளம் கற்று எருமை – ஸ்ரீ பெரும் பூதூரில் இரண்டு தடவை சேவிக்கும் பாசுரம்
நற் செல்வன் –
ஸ்வாமியை குறிக்கும் லஷ்மி சம்பன்ன -அஹம் சர்வம் கரிஷ்யாமி
விபவம் போலே இவர் அர்ச்சையில் -நித்ய கிங்கரோ பவதி
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் –
எம்பெருமானார் உகந்த பாசுரம் இதுவும் —பெரும்பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே-
பொய்கை ஆழ்வார்
நற் செல்வன் தங்காய் தாமரை பூவில் அவதரித்த சந்த மாமா –
பாற்கடலில் லோக மாதா –பொய்கை-பூவில் ஆவிர்பாவம் -தமிழ் மறை செய்ய –
நான்முகன் நாபி கமலத்தில் போலே –
வனசமரு கருவதனில் பிராட்டி போலே தாமரை மலரில் அவதாராம் –
இளம் கற்று எருமை முதல் ஆழ்வார்-முதலில் கனைத்து பேச ஆரம்பித்து –
கன்றுக்கு இரங்கி நம் போல்வாருக்கு-கனைத்து முதல் முதலில் பேச-
இளம் -நம் போல்வார் நினைத்து
முலை வழியே கிருபை மூலம்
நின்று முதல் திருவந்தாதி
பாலே போலே சீரில்
கல்யாண குணங்கள்
பழுதே -அஞ்சி அழுதேன்
கண்ண நீர்
பனித்தலை
சக்கரவர்த்தி திரு மகன் -பூ மேய -நீண் முடியை பாதத்தால் எண்ணினான் – சரித்ரம் ஆமே
அமரக்கு அறியா நாமே அறிவோம்
இனித் தான் –
மயர்வற மதி நலம் அருள பெற்ற பின் மறையின் குருத்தின் பொருளையும் அனைத்து இல்லத்தாரும்
அதி கிருதா அதிகார்யம் இல்லை தமிழ் –
வேதம் தமிழ் செய்து -பரத்வமாய் இருந்த அவனே அர்ச்சையாய் –
மான மேய சரமங்கள் -அருளிச் செயல்கள் முதலிலே வந்த பின்பும் என்றவாறு –
———–
சென்ற பாசுரத்தில் (பொற்கொடியே, புற்றரவல்குல், புனமயிலே, செல்வப் பெண்டாட்டி) பெண்மையைக் கொண்டாடிய
ஆண்டாள், இப்பாசுரத்தில் தாய்மையின் உன்னதத்தைச் சொல்கிறாள்!
நற்செல்வனை எம்பெருமான் உருவாகவும் பொருள் அருளியிருக்கிறார்கள்! ஆக, எம்பெருமான், மகாலஷ்மி என்று
இருவரும் இப்பாசுரத்தில் குறிப்பில் உணர்த்தப்பட்டதால், இப்பாசுரம் த்வய மந்திரத்தை
(ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே, ஸ்ரீமதே நாராயாணாய நமஹ!) போற்றுவதாகக் கொள்ள வேண்டும்.
திருமகள் “ஹிரண்மயி” என்பதால் தங்கை என்ற பதத்தை “தங்கம்” என்று கொள்ள வேண்டும்.
“சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானை” என்று 5 வார்த்தகளில்
ராம காவியத்தையே சுருக்கி விடுகிறார் சூடிக் கொடுத்த சுடர்கொடி!
ராமனை “புண்ணியன்” என்றும் ஆண்டாள் பத்தாம் பாசுரத்தில் (நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்)
போற்றியதை நினைவு கூர வேண்டும்.
கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி – இங்கு எருமை கருணை மிக்க (தன்னிடம் உள்ள ஞானத்தை வாரி வழங்கும்)
ஆச்சார்யனைக் குறிப்பில் உணர்த்துகிறது. கன்றுகள் ஞானப்பாலால் உய்வு பெறும் சீடர்களைக் குறிக்கிறது.
முலைவழியே நின்றுபால் சோர – எருமையின் நான்கு முலைக் காம்புகளிலிருந்து வெளிப்படும் பாலானது,
நான்கு வேதங்களின் சாரத்தைக் குறிப்பது என்பது இதன் உட்பொருளாம்.
இதையே, ஸ்ருதி, ஸ்மிருதி, பஞ்சராத்ரம், திவ்ய பிரபந்தம் என்ற நான்கை கற்றுணர்ந்து கிடைத்த ஞானமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
பனித்தலை வீழ – அஞ்ஞானமிக்க (நாங்கள்)
நின் வாசற்கடை பற்றி – “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தைப் பற்றிக் கொண்டு
தென்னிலங்கைக் கோமானைச் செற்ற – கட்டுப்பாடற்ற புலன் சார் உணர்வுகளை நெறிப்படுத்த வல்ல
மனத்துக்கினியானை – கோகுலத்து கோபியர் கண்ணனைக் காணும் பெரும் பேறு பெற்றவர்கள்.
அதனால், அவர்களுக்கு கண்ணபிரான் “கண்ணுக்கினியவன்” ஆவான் 🙂
ஆனால், ஸ்ரீராமபிரானை (ராம அவதாரம் முடிந்து விட்டபடியால்!) கோபியரால் நினைக்க மட்டுமே முடியும்,
அதனாலேயே அவர்களுக்கு சக்ரவர்த்தி திருமகன் “மனத்துக்கினியவன்” ஆகின்றான் –
ஈதென்ன பேருறக்கம் – நற்செல்வனின் தங்கையான உனக்கு அஞ்ஞானம் இருக்க முடியுமா ?
அனைத்தில்லத்தாரும் அறிந்து – பகவத் அனுபவத்தை அனைவரும் பெற வேண்டியதோடு,
அது குறித்து பேசப்படுவும் வேண்டும் அவசியத்தை உணர்த்துவதாம்!
அனைத்தில்லத்தாரும் அறிந்து – ஆண்டாள் பாடியது பொய்கையாரின் “அறியும் உலகெல்லாம் யானேயும் அல்லேன்” என்ற
பாசுர வரிகளை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ளது!
அறியும் உலகுஎல்லாம்* யானேயும் அல்லேன்,*
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய்,* – வெறி கமழும்-
காம்பு ஏய் மென் தோளி* கடை வெண்ணெய் உண்டாயைத்,*
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு.
———————————————-
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply