த்வய பதார்த்த படி ஆறாகவும்-அர்த்தப்படி -பிரபத்யே நீங்கலாக அஷ்ட ஸ்லோஹப் படியே ஒன்பதாகவும் கொள்வோம்
உபாய வைபவம் -மற்ற உபாயாந்தர தோஷம்-என்று இரண்டாக பிரியும்
அதிகாரி கிருத்யம் -தினசரி அனுஷ்டானம்-என்று -இரண்டாக பிரியும்
குரு உப சேவகம் -ஆச்சார்ய லக்ஷணம் சிஷ்ய லக்ஷணம் என்று இரண்டாக பிரியும்
முதல் பிரகரணம் –புருஷகார உபாய வைபவம் பார்த்தோம்-காகாசுரன் சம்ஸ்லேஷத்தில் –கிருபையைத் தூண்டி ரஷித்தது –ராக்ஷஸிகளை விஸ்லேஷத்தில் ரஷித்தது
ராவணனுக்கும் உபதேசித்தாள் -அவன் கர்மம் தடுக்க -கார்யகரமாக வில்லை -ஈஸ்வரன் திரு உள்ளபடியே நடக்க வேண்டுமே -திருத்துகிறாள் என்பதற்கு -சரணம் என்றும் மனம் இசைந்து வர சூழ்நிலை -இன்று போய் நாளை வா -வரும்படி வைத்தாள் -ஜீவ ஸ்வா தந்த்ரம் -உண்டே -இசைந்தால் தானே கார்ய கரமாகும்-
ஆச்சார்ய கிருத்யத்தையும் -ஏறிட்டுக்கொண்டு -புருஷகார கிருத்யத்தையும் -உபாய கிருத்யத்தையும் ஏறிட்டுக்கொண்டான்-சாதனஸ்ய கௌரவம் -கீழே உபாய வைபவம் பார்த்தோம் -இங்கு உபாய ஸ்வீகாரம் -சரண வரணம் ஏற்றுக் கொள்வதை பார்க்கப் போகிறோம்-உபாய ஸ்வீ கார வைபவம் -பிரகரணம்-சூர்ணிகை -23-114/115-244-
சாதனஸ்ய கௌரவம் -ஆறு-உபாய பிரகரணம் -திருமால் திருவடி சேர் வழி நன்மை – அவ் வழி ஒழிந்தன அனைத்தின் புன்மை –
—————————-
கீழ் உக்தமான உபாயத்தின் உடைய ஸ்வீகார ரூபையாய்-பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் -என்று ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதையான பிரபத்தியினுடைய படியை -விஸ்தரேண அருளிச் செய்கிறது மேல் -அதில் பிரதமத்தில் அர்ஜுனனுக்கு பிரபத்தி உபதேசம் பண்ணுகிற அளவில் -யுத்த பூமியில் -ஒரு கால விசேஷம் பாராமல் -ஸ்நாநாதிகளும் இன்றிகே இருக்க -உபதேசிப்பான் என் -இதுக்கு தேசாதி நியமங்கள் இல்லையோ -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார்
சூரணை -23-
பிரபத்திக்கு
தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும்
அதிகாரி நியமமும்
பல நியமும் -இல்லை-
சித்த உபாயம் ஸ்வீகாரம் -சரண வரணம் -கீழே உபாய வைபவம் பார்த்தோம் —
மேல் சரணாகதி -உபாயமாக வரிப்பது பற்றி -அதிகாரி விசேஷம் -சரணாகதி –
ஆய் ஸ்வாமிகள் -கீழே ஸ்ரீ மன் நாராயண -சொல்லி மேல்- சரணம் பிரபத்யே – 114 வரை -அர்ஜுனனுக்கு இவளுக்காக பிரபத்தி உபதேசம் -ப்ராசங்கிக்கமாக கீழே சொல்லி -தேசாதி நியதி கண்டிலோம் – விஷய நியதி ஒன்றே உண்டு -எதை நோக்கி என்பதே உண்டு –
கர்ம ஞான பக்திகளுக்கு உண்டு -சித்த உபாய ஸ்வீகாரம் பிரபத்திக்கு இல்லை -உபாயாந்தர நிரபேஷன்-நிவ்ருத்தி ரூபம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -நிவ்ருத்தி பூர்வகம் அன்றோ-முமுஷுர் வை சரணம் ப்ரபத்யே —உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் இத்யாதி பிரசித்தம் –நிஷ்க்ருஷ்ட ஸ்வரூபம் சரீரம் இல்லா ஆத்ம ஸ்வரூபம் —உபாயாந்தரங்கள் விசிஷ்ட ஸ்வரூபம் வர்ணாஸ்ரமம் தர்மம் உண்டே -அநந்யார்ஹ சேஷன் ஜீவாத்மா ஸ்வரூப அனுரூபம் -சரணாகதி –மஹா விசுவாச ரூப சித்த உபாயம் –தர்ம க்ஷேத்ரே தேச விசேஷம் நியமம் இல்லை -பிரமாணம் உபாசகனுக்கு -சரம ஸ்லோகமும் அங்க பிரபத்தி –ப்ரஹ்ம முஹூர்த்தம் கால நியமும் இல்லை -ஸ்நானம் -ஆசமனம் செய்வது போன்ற -பிரகார நியமும் இல்லை- த்ரைவர்ணிக அதிகாரி நியமும் இல்லை-பல நியமும் இல்லை -ஜ்யோதிஷ்ட ஹோமாதிகள் போலே -ஸ்வர்க்கம் மட்டும் இதுக்கு -போலே இல்லையே –
பிரபத்தி யாவது -பகவச் சரண வரணம்-(விசதவாக் -சுருக்கமாக தெளிவாக காட்டி அருளுகிறார் -பகவத் ஏக உபாயமாக பிரார்த்தனை –மஹா விஸ்வாச பூர்வகம் -வரணம் -பிரார்த்தனம் –கிருபையால் தான் இதுவும் -கூரத்தாழ்வான் அருளிச் செய்கிறார் — பிரார்த்தனைக்கு உபாயத்வம் கூடாதே -தத் ஏக உபாயம் தானே பிரார்த்தனை -பக்தியாதிகளுக்கு உபாயத்வம் இருப்பதால் அவற்றுக்கு இந்த நியமங்கள் உண்டு -பிரபத்தியாகிய பிரார்த்தனை உபாயமே இல்லையே -ஆகவே இந்த நியமங்கள் இல்லை –)
தேச நியமம் ஆவது -புண்ய தேசங்களில் செய்ய வேணும்-அந்ய தேசங்களில் ஆகாது என்னும் அது –
கால நியமம் ஆவது -வசந்தாதி காலங்களிலே செய்ய வேணும் -அந்ய காலங்களில் ஆகாது என்னும் அது –(வசந்தே வசந்தே ஜ்யோதிஷ்டோமம் யஜதே போலே இல்லை)
பிரகார நியமம் ஆவது -ஸ்நான பாத ப்ரஷாளந ஆதி பூர்வகமாக செய்ய வேணும் -ஆதி -ஆசமனம் போல்வன வேண்டாம் -பிரகாராந்தரத்தாலே செய்ய ஒண்ணாது என்னும் அது –
அதிகாரி நியமம் ஆவது -த்ரை வர்ணிகராக வேணும் -அத்ரை வர்ணிகராக ஒண்ணாது என்னும் அது –
பல நியமம் ஆவது -த்ருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் இன்ன பலத்துக்கு இது சாதனம் –(த்ருஷ்ட பலம் மழை -அதிருஷ்டம் சுவர்க்கம் -போலே இங்கு இல்லை –)அந்ய பலத்துக்கு சாதனம் அன்று என்னும் அது –
1-தேச கால சாத்குண்யா வைகுண்யங்கள் அடியாக வரும் அதிசய அநதிசயங்களை(உத்கர்ஷ அப கர்ஷங்களை )உடைத்தாவது ஓன்று அல்லாமையாலும் –
2-உத்கர்ஷம் அபகர்ஷம் -தேச காலம் பொறுத்து கர்மாதிகள் போலே இதுக்கு இல்லை –
3-தீர்த்தத்திலே அவஹாகிக்கும் அளவில் -சுத்த அசுத்த விபாகம் அற அவஹாக்கிக்கலாய் இருக்குமா போலே ஸ்வயமேவ பவித்ரமாய் -சுத்த அசுத்த விபாகம் அற -தன்னோடு அந்வயிகலாம் படி இருக்கையாலும் –
4-வர்ணாத் அநு ரூபமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே -ஸ்வரூப அநு ரூபமாய் இருப்பது ஓன்று ஆகையாலும் –
5-சேதனருடைய ருசி அநு குணமான பல விசேஷங்களுக்கு சாதனம் ஆவது ஒன்று ஆகையாலும் –
இந் நியமங்கள் ஒன்றும் இதுக்கு இல்லை என்கிறது –
ந ஜாதி பேதம் ந குலம் ந லிங்கம் ந குண க்ரியா
ந தேச காலவ் ந வஸ்தாம் யோகோ ஹயய மபேஷதே
பிரம்மா ஷத்ரே விசஸ் சூத்ரா ஸ்த்ரியச் சாந்தர ஜாதய
சர்வ ஏவ ப்ரபத்யேரன் சர்வ தாதர மச்யுதம் -என்று -பிரபத்திக்கு-தேச கால பிரகார அதிகாரி நியம அபாவம் பாரத்வாஜ சம்ஹிதையிலும் –
பிரபத்தே க்வசிதப் யேவம் பராபேஷா ந வித்யதே
சாஹி சர்வத்ர சர்வேஷாம் சர்வ காம பல ப்ரதா –என்று பல நியம அபாவம் சனத் குமார சம்ஹிதையிலும் சொல்லப் பட்டது இறே
—————————————-
இவை இல்லையாகில் -மற்றும் சில நியமங்கள் இதுக்கு உண்டோ என்ன
அருளி செய்கிறார் –
சூரணை -24-
விஷய நியமமே உள்ளது –
ஆய் ஸ்வாமிகள் -சுலபமான வஸ்துவே விஷயமாக வேணும் என்பது ஒன்றே உள்ளது-
அதாவது-இன்ன விஷயத்தில் செய்ய வேணும் என்கிற நியமமே இதுக்கு உள்ளது என்ற படி -இவை எல்லாம் தாமே மேலே உபபாதித்து அருளுகிறார் இறே-
———————————————
இதுக்கு இவை ஒன்றும் இல்லையாகில் பின்னை எதுக்கு தான் இவை எல்லாம் உள்ளது என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை-25-
கர்மத்துக்கு புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள்
த்ரை வர்ணிகர்-என்று இவை எல்லாம்
வ்யவஸ்திதங்களாய் இருக்கும் –
(ஆய் ஸ்வாமிகள் -இது போல் அன்றியே ப்ரவ்ருத்தி ரூபமான சாதனத்துக்கு இந்த நியதிகள் ஒன்றுமே குலைய ஒண்ணாது -இறுக்கும் இறை இத்யாதி-விசிஷ்ட வேஷ அனுரூபமாய் –
வைதிக கர்மத்துக்கு -வேதம் கற்றவர்களுக்கே -காசி காஞ்சி போன்ற புண்ய க்ஷேத்ரமும் வசந்தாதி காலமும்-ஸ்நாத்வா புஞ்சீத குளித்தே சாப்பிடு -தர்ம சாஸ்த்ர யுக்தமான -அக்னி வித்யா அங்கதா கர்ம த்ரை வர்ணிகர்-ஷேத்ராதியான -சாபல்ய யோக்யதா ஆபாதன-பலம் தர யோக்யதையான – -யோக்யதா தத் அனுகுண-இவை எல்லாமே தப்ப ஒண்ணாத- வியவசதித்தங்களாய் இருக்கும்
ஸ்வரூபத்தை பற்றி வரும் இதுக்கு நியம விவஸ்தை இல்லை –
தோல் புரையே போமதுக்கு தத் தது நியமம் தப்பில் விபரீதமாய் தலைக் கட்டும் – சரீரத்தை பார்த்து -மர்ம ஸ்பர்சி இது மனமுடையீர் ஒன்றுமே போதும் -)
கர்மம் ஆவது ஜியோதிஷ்டோமாதிகள் –
புண்ய ஷேத்ரங்கள் ஆவன சாஸ்த்ரங்களில் பாவனதயா அபிஹிதங்களான தேசங்கள் –
வசந்தாதி -என்கிற இடத்தில் ஆதி சப்தாதாலே -க்ரீஷ்ம சரச் சுக்ல கிருஷ்ண பஷ
பூர்வாஹ்ன அபராஹ்னாதி காலங்களை சொல்லுகிறது —வசந்தே வசந்தே ஜியோதிஷா யஜதே -இத்யாதிகளாலே கால நியமம் சொல்லப் படா நின்றது இறே-
சாஸ்த்ரோத்தங்கள் ஆன தத்தத் பிரகாரங்களான ஸௌச ஆசமான -ஸ்நான -வ்ரத-ஜபாதி
ரூபேண அவ்வவ கர்மங்களுக்கு அநு குணமாக சாஸ்திர விஹிதங்களான அவ்வவ பிரகாரங்கள் -(தர்ம தர்மான்-பன்மை – சர்வ தர்மான் -அங்கங்கள் உடன் -கூடி என்றபடி -)
த்ரை வர்ணிகர் -என்றது உபநயன சம்ஸ்கார பூர்வகமாக வேதாதி அதிகாரி களானவர்களுக்கே வைதிக கர்ம அதிகாரம் உள்ளது ஆகையாலே –(சம்பூகன் -தண்டனை -ஸ்ரீ ராமாயணம் -உண்டே)
இது தான் -க்ருக மேதித்வ கிருஷ்ண கேசித்வ வேத வேதாங்க உக்தத்வாதிகளுக்கும் உப லஷணம்—(க்ருஹஸ்தன் -ஆன தன்மை க்ருகமேதி -கறுப்புத் தலை மயிர் -உள்ளோர் -வயோ விவஸ்திதமும் உண்டே )
வ்யவஸ்திதங்களாய் இருக்கும் -என்றது -நியதங்களாய் இருக்கும் என்ற படி-
————————————————
பிரபத்திக்கு இவை ஒன்றும் இல்லை என்று கீழ் பண்ணின பிரதிக்ஜையை உபபாதிகையிலே பிரவ்ருத்தராய் -பிரதமம்- தேச கால -நியம ராஹித்யத்தை உபபாதிக்கிறார் –
சூரணை -26-
ச ஏஷ தேச கால -என்கையாலே
இதுக்கு தேச கால நியமம் இல்லை –
(ஆய் ஸ்வாமிகள் -அவன் வந்ததே தேசமும் காலமும் -என்றவாறு -திருவடி வாக்கியம் -இத்தைக் கேட்ட பின்பு தான் பெருமாள் திரு உள்ளம் மலர்ந்தது – தோஷ துஷ்டனான ராவணன் த்யாஜ்யம்- ராவணனை விட்டு பெருமாளை பற்றும் எண்ணம் வந்தாலே போதும் -வந்ததே புண்ய தேசம் புண்ய காலம் – குறை பார்க்க வேண்டாம் ஸூமத உபன்யாசம் திருவடி சொல்ல -இன்ன தேச கால நியதி இல்லை -என்றவாறு -)
பத்த வைராச் ச பாபச் ச ராஷசேந்தராத் விபீஷண
அதேச கால சம்ப்ராப்தஸ் சர்வதா சங்க்யதா மயம்-என்று முன்பு ஸ்ரீ ஜாம்பவான் மகா ராஜர்-பயந்து பெருமாளுக்கு விண்ணப்பம் செய்த பஷத்தை தூஷிக்கிற திருவடி -(யுத்த-17-53)
அதேச காலே சம்ப்ராப்த இத்யயம் ச விபீஷண
விவஷா சாத்ர மேஸ்தீயம் தாந்நிபோத யதாமதி
ச ஏஷ கால தேச காலச்ச பவதீஹ யதா ததா
புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி
தவ்ராத் மயம் ராவேணா த்ருஷ்ட்வா விக்ரமஞ்ச ததா த்வயி யுக்தம் ஆகமனம் தஸ்ய சத்ருசம் தஸ்ய புத்தித –என்று
ராவணனாலே அவமாநிதனாய் ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு-
(ராவணன் அனுஜத்வம் தோஷம் –விபீஷண விசேஷேண பீஷயதி எல்லாரையும் பயப்படுத்தும் பெயரை சொல்வதே தன் தாழ்ச்சியைச் சொன்ன படி -)
சரணம் என்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-அதேசத்திலே அகாலத்திலே வந்தான் என்று-சுக்ரீவனைப் பார்த்து தேவரீருடைய மந்த்ரிகளாலே யாதொன்று சொல்லப் பட்டது -இந்த பஷத்திலே விசேஷித்து எனக்கு இந்த விவஷை உண்டாகா நின்றது -அவன் வருகிற அளவில் யாதொரு தேசத்திலே யாதொரு காலத்திலேயே வந்தான் -அவன் வரவுக்கு அந்த இதுவே தேசமும் அந்த இதுவே காலமும் யாதொரு படி -அப்படி பட்ட விவஷையை நான் அறிந்த அளவு விண்ணப்பம் செய்யக் கேட்டு அருள வேணும் –
எங்கனே என்னில்
தம பிரகிருதி ஆகையாலே -பர ஹிம்சையே யாத்ரையான ராவணனில் காட்டில்–(பிறப்பால் தமஸ் இருந்தாலும் மனசில் சத்யம் வளர்க்கலாம் -ஆழ்வார் அதனால் தான் மனசைக் கூட்டி அருளிச் செய்கிறார்கள் பல இடங்களில் -)சத்வோத்தர் ஆகையாலே -பர ரஷணம் யாத்ரையாய் இருக்கிற தேவரீரை பிராப்யராக புத்தி பண்ணி அப்படியே அவனை விட்டு போராது ஒழிந்தால் அவனுடைய அக்ருத்யத்துக்கு சஹகாரியாய்-அந்த ப்ராதிகூல்யத்தோடே முடிந்து போகிற தோஷத்தையும் -தார்மிகரான தேவரீர் உடன் கூடப் பெற்றால் தத் பலமாக தேவரீர் உடைய திருவடிகளில் கைங்கர்யத்தை லபித்து வாழுகையாகிற நன்மையையும்-புத்தி பண்ணி-அப்படியே தேவரீர் திரு உள்ளத்தில் புண் படும் படி குற்றத்தை தீரக் கழிய செய்து நிற்கிற ராவணன் தவ்ராத்மத்தையும் -துராத்மாக்களை அநாயேசன அழிக்க வல்ல தேவரீர் ஆண் பிள்ளை தனத்தையும் கண்டால் விசேஷஜ்ஞனான அவனுக்கு இவ் வரவு பிராப்தம் – நியாயத்திலே சஞ்சரிக்கும் அவனுடைய புத்திக்கும் இது சத்ருசம் என்றான் இறே-
ஆக இப்படி பாவ சுத்தியை உடையனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் என்று வந்த
தேச காலங்களில் குறை பார்க்கக் கடவது அல்ல -அவன் வந்த அதுவே தேசமும் காலமும்
என்று சரணாகதி தர்மஜ்ஞனான திருவடி -(ஆச்சார்யர் ஸ்தானம் அன்றோ) -நிர்ணயிக்கையாலே பிரபத்திக்கு தேச கால நியமம் இல்லை என்கை-
———————————————
இது தான் பிரபத்திய அனுஷ்டான ரூபமான த்வ்யத்தில் பிரதம பதத்தில் காணலாம் என்கிறார் –
சூரணை-27-
இவ் அர்த்தம் மந்திர ரத்னத்தில்
பிரதம பதத்தில்-ஸூ ஸ்பஷ்டம்
ஆய் ஸ்வாமிகள் மந்த்ர ரத்னத்திலே உண்டே-சர்வ அதிகாரமாய் -அவிளம்பிய பல ப்ரதம்–பிரபத்திக்கு விஷயத்தை பிரகாசப்படுத்தும் –முதல் பதம் -ஸ்ரீ மன் -புருஷகார உபாயங்கள் இரண்டும் தேச காலம் உபாதி இல்லாமல் எப்போதும் எங்கும் நித்யம் ருசி பிறந்த போது எல்லோரும் ஆஸ்ரயிக்கும் படி இருக்குமே -ஸ்பஷ்டமாக இருக்கிறது –ஆரப்த வாக்ய அனுஷ்டான சித்தம் –மது பிரத்யயத்தாலே -கூடியே இருப்பதால் -பிராட்டியாலே பெருமை பெற்ற த்வயம்-பிராட்டியாலே பேறு த்வயம் -ஆத்மாவால் பேறு திருமந்திரம் -பெருமாளாலே பேறு சரம ஸ்லோகம்-மந்த்ர ரத்னம் த்வயம் நியாஸ பிரபத்தி சரணாகதி -பர்யாய நாமங்கள் –ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் –விருந்தை மருந்தாக்கி கொள்கிறோம் -தபசுக்களில் மிக ஸ்ரேஷ்டமான சரணாகதி -பிராட்டியை சொன்னபடியால் ஸ்ரேஷ்டம் ரத்னம் என்கிறோம் -)
அதாவது
சகல உபநிஷத் சாரமாய்–சர்வாதிகாரமாய் – -அவிளம்ப்ய பல பிரதமாய் -சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமாய் -சர்வ மந்த்ர உத்க்ருஷ்டதயா- என்கிறபடியே மந்திர ரத்னமாய் இறே த்வயம் இருப்பது – அந்த வைபவம் தோற்றுகைகாக-மந்திர ரத்னம் என்கிறார் -த்வயம் – என்னாதே
அதில் பிரதம பதத்தில் மதுப் அர்த்தமான –புருஷகார உபாய நித்ய யோகத்துக்கு பிரயோஜனம் (பிராட்டி அவன் என்னாமல் அவர்கள் கிருத்யத்தையே அருளிச் செய்கிறார் )- ஏதேனும் ஒரு தேசத்தில் -ஏதேனும் ஒரு காலத்தில் -ஒரு சம்சாரி சேதனனுக்கு சமாஸ்ரயண ருசி விளைந்தால் –
சஞ்சலம் ஹி மன –
நின்றவா நில்லா நெஞ்சு –பெரிய திருமொழி -1-1-4-என்கிறபடியே சூறாவளி காற்று போலே சுழன்று வருகிற நெஞ்சு தளமாக அங்குரித்து-க்ஷண பங்குரையான ருசி தீருவதற்கு முன்னே–(நிவேதியதே –க்ஷிப்ரம் என்றானே )-தத் உத்பத்தி ஷணத்திலே ஆஸ்ரயிக்கலாய் இருக்கை இறே-ஆகையாலே பிரபத்தியினுடைய தேச கால நியம ராஹித்யம்-அந்த பதத்தில் நன்றாக தோற்றும் என்கிறார்
——————————
பிரகார நியம ராஹித்யத்தை தர்சிப்பிக்கிறார் மேல்
சூரணை-28-
பிரகார நியதி இல்லை என்னும் இடமெங்கும் காணலாம் –
(ஆய் ஸ்வாமிகள்-க்ருஸ்த்தனமாய் முழுவதுமாய் எங்கும் காணலாமே –
அனுஷ்டித்தது திரௌபதி -ஸ்ரவணம் பண்ணிய அர்ஜுனன் –
அனுஷ்டித்தும் ஸ்ரவணம்- பண்ணியும் -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கலிலும் காணலாம்)
எங்கும் காணலாம் -என்றது -இத்தை அனுஷ்டிப்பார்-ஸ்ரவிப்பார் -எல்லார் பக்கலிலும் (க்ருஸ்த்தனமாய்) காணலாம் என்ற படி –
———————————————
அது எங்கே கண்டது என்ன -பூர்வ பிரக்ருத விஷயங்களிலே தர்சிப்பிக்கிறார் –திரௌபதி இத்யாதி வாக்ய த்வ்யத்தாலே
சூரணை-29-
திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –
(ஆய் ஸ்வாமிகள்-நடுவில் இடத்தை பற்றி இல்லை — பிரகாரம் பற்றிய சொல்ல வந்தது -அசத்தி போக்க வில்லையே -கர்ம சண்டாளத்வம் வந்ததே துரியோதனாதிகள் பக்கல் இருந்ததால் –உத்க்ருஷ்ட ஜென்ம திரௌபதி -உத்க்ருஷ்ட பார்யை -ஆபன்னையாய் சுத்தியை அபேக்ஷிக்காமல் –தன் நிரபேஷ பிரபத்தி – சுத்தியை எதிர்பார்க்காத பிரபத்தியை- பண்ணினாள் –
ஆசார பிரதானரான அர்ஜுனன் -சுத்தியை அறிந்தவர்கள் என்று இந்த அடை மொழி –சோகார்த்தனாய் -வேதாந்த அர்த்த ஸ்ரவணம் -வேதாந்தம் விழுப்பொருளான பிரபத்தி கீதா சாஸ்திரம் அர்த்த ஸ்ரவணம்–செய்கிற இடத்தில்-நெடும் தகையை நினையாதார் நீசர் -என்னும் பகவத் ஸ்மரணம் அற்ற நீச ஹீனர் நடுவில் ஏகாந்தத்தில் கேட்க வேண்டிய சரம அர்த்தத்தை கூசாமல் கேட்டான் -நியமஸ்த அனுஷ்டான சித்தம் என்கிறார் –பிரகார நியமம் இல்லை -)
ஸ்நாததையா ரஜஸ் வலைக வஸ்த்ராஹம் நது மாம் நேது மர்ஹசி குரூணாஞ்ச புரஸ் ஸ்தாதும் சபாயாம் நாஹா முத்சஹே–சபா பர்வம் மஹா பாரதம் –என்னும் படி
அசுத்தையாய் இருக்கிறவள் ஸ்நானம் பண்ணி அன்றே பிரபத்தி பண்ணிற்று என்றபடி –
இத்தால் பிரபத்தி பண்ணுவார் பிரயதராய் ( செய்ய ஏந்தியமுறைப்படி )பண்ண வேணும் என்னும்–செய்ய வேண்டிய முறைப்படி -செய்ய வேண்டும் என்கிற நியதி இல்லாமை காட்டப் பட்டது -(நித்ய ஸ்நானத்தை சொல்ல வில்லை –கர்ம அங்க ஸ்நானம் இல்லை -நைமித்திக ஸ்நானம் நிமித்த பூத ரஜஸ் -விடாய் காலம் -சதஸ்யமாக பேச வேண்டுமே –
இந்த திரௌபதி அனுஷ்டானம் ஆபத் விஷயம் ஆகையால் -பண்ணின சரணாகதியை ஆசமனம் போன்றவை வேண்டாம் என்பதற்கு திருஷ்டாந்தமாக சொல்லலாமோ என்னில்
பெரும் ஆபத்து காலத்தில் கஜேந்திரன் நினைத்து -பிரமாணங்கள் உண்டே — மஹத்யாபத்தி ஸம்ப்ராப்தயே ஹரி ஸ்மரணம் -ஆபத்து வரும் காலத்தில் சடக்கென சரண் அடை ரிஷி வாக்கியங்கள் உண்டே –பிரகார நியமம் இல்லை என்கிற பிரமாணங்களை உண்டே – வசிஷ்டர் வாக்கியம் —அசத்தி தசா சாதாரண துக்க சங்கடம் ஏற்படும் காலம் -தன் நிவர்த்தன -பிரபதன -சரணாகதிக்கு காலம் –என்றாரே – இந்த வாக்கியத்துக்கே திரௌபதி அனுஷ்ட்டித்து காட்டினாள் என்றபடி -)
நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது -என்ற இடத்தில்
நீசர் என்கிறது –நெடும் தகையை நினையாதார் நீசர் -பெரியதிரு மொழி -11 -6 -8 –
ஆழ்வார் அருளிச் செய்த ஸௌரி சிந்தா விமுகரான ஹேயரை-
விஷ்ணு பக்தி விஹிநஸ்து யதிஸ் ச ஸ்வபச அதம விப்ராத் த்விஷட் குணயுதாத் அரவிந்த நாப பாதாரவிந்த விமுகாஸ் ஸ்வபசம் வரிஷ்டம் -என்று பகவத் விமுகரை ஸ்வபச தமராக சொல்லிற்று இறே — (யதியாக இருந்தாலும் விஷ்ணு பக்தி இல்லாதவரை நாய் மாமிசம் உண்பவரை விட தாழ்ந்தவன் –12-குணம் உள்ளவராக இருந்தாலும் பாகவத பக்தி இல்லாதவனும் அப்படியே-சமம் தமம் தபஸ் சுத்தம் சாந்தி ஆர்ஜவம் விரக்தன் ஞானம் விஞ்ஞானம் ஸந்தோஷம் கிடைத்ததை கொண்டு சத்யம் ஆஸ்திக்யம் போன்றவை
-12-குணங்கள் -த்வி ஷட் குண ப்ராஹ்மணர் -என்பர்-அடியேன் ராமானுஜ தாஸன் யுகம் தோறும் பொருந்தும் அன்றோ -இளைய பெருமாள் -நம்பி மூத்த பிராணன் -எம்பெருமானார் -மூவரையும் மூன்று யுகங்களுக்கும் பொருந்தும் அன்றோ -)
அதுக்கு மேல் சரணாகதையை பரிபவித்தும் சரணாகதரான பாண்டவர்கள் திறத்திலே
தீங்குகளை செய்தும் போருகையாலே – அநாசாரம் துராசாரம் மத் பக்தாந் ஸ்தோத்ரியான் நிந்தான் —சத்யஸ் சண்டாலதாம் வ்ரஜேத் -என்கிற கர்ம சண்டாளர் இறே கை கலந்து நிற்கிறது –(அநாசாரம் துராசாரம் இருந்தவர்களாக இருந்தாலும் என் பக்தர்களாக இருந்தால் –சரணாகதர்களான பாண்டவர்கள் –அவர்களை நிந்தித்தால் -கர்ம சண்டாளர்கள் ஆவார் -என்கிறது –முன்பு இருந்த இவை பகவத் சம்பந்தத்தால் அழிந்து போகும் -வராஹ புராணம் ஸ்லோகம் -இது-ஆஸ்ரிதர் இடம் கிருபையைக் காட்டவும் அநாஸ்ரிதர் இடம் ஸாஸ்த்ரப்படி தண்டிக்கவும் பிராட்டி உபதேசித்தாள் அன்றோ )
நீசர் நடுவே என்கையாலே நீசஸ் ப்ருஷ்டியால் இவனுக்கு உண்டான அசுத்தியும்
நீச சகாசத்திலே என்னும் இடமும் தோற்றுகிறது-( நீசர்கள் தொடர்பால் இவனுக்கு வந்த நீசத் தன்மையும் இவர்கள் மத்யத்தில் என்றும் )
இத்தால் பிரபத்தி ஸ்ரவணம் பண்ணும் போது-நீசர் மத்யத்தில் ஆகாது என்னும் நியதி
இல்லாமை காட்டப் பட்டது- (பிரகார நியதி வேண்டாம் என்பதற்கு இந்த த்ருஷ்டாந்தம் -தேச நியதிக்கு இல்லை )
—————————————–
இத்தால் பலித்ததை சொல்லா நின்று கொண்டு இவ் அர்த்தத்தை நிகமிக்கிறார் –
சூரணை -30-
ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –
(ஆய் ஸ்வாமிகள் -சர்வ தர்மான் பரித்யஜ்ய என்பதில் அதர்மம் புகாதே அதே போலே இங்கும் -சுத்தி அசத்தி இரண்டும் நின்ற நின்ற நிலையிலே அமையும் —
பிரகார நியம அபேக்ஷை இல்லாமை பிரபத்திக்கு ஸ்வபாவம் -யோக்யதா ஆபாதக சுத்தியும் அயோக்யதா ஆபாதக அசுத்தியுமாகிய பிரவ்ருத்தி ரூபமான இரண்டும்-பாவனுமுமாய் –பிரவ்ருத்தி அஸஹ்யமுமான -நிவ்ருத்தி ரூப நிரபேஷ பிரபத்திக்கு -நின்ற நிலைக்கு மேற்பட்ட தேட வேண்டா -பிரவ்ருத்தி ரூப உபாயம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான கிரியை –ஈஸ்வர ப்ரவ்ருத்தி விரோதி ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி -ஏக கிரியை சஹிப்பார் –
சுத்தனாகவும் வேண்டா அசுத்தனாகவும் வேண்டா –ஆகவும் வேண்டா -வார்த்தை முக்கியம் -இருந்தபடியே அதிகாரியாம் -ஆனால் என்று சொன்னால் சாத்தியமாகும் -சித்த உபாயம் –
பாலை கறந்து அடுப்பு ஏற்றவும் பிடிக்காதே அவனுக்கு -இறைப் பொழுது -பேச சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகி போவான் –
கண்ணன் சாப்பிட்டு போவதை பார்த்த பெண் மனசும் காணோம் –
அபவித்ர பவித்ரனாகவோ சர்வ அவஸ்தாம் கதித்வா த்வயம் சொன்ன மாத்திரம் ச பாஹ்ய அப்யந்தரம் ஸூசி -மோஷம் கொடுக்க –
திரௌபதி அர்ஜுனன் சாஸ்திரம் வழி நடப்பவர்கள் அசுத்தியை தேட வேண்டுமோ என்ற சங்கைக்கு நிவ்ருத்தி இது -அசத்தி வேணும் போலும் என்ற தப்பார்த்தம் கொள்ள வாய்ப்பு கொடுக்காமல் சுத்தியும் தேட வேண்டாம் அசுத்தியும் தேட வேண்டா – இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை -என்கிறார் )
ஆகையால் -என்றது -அனுஷ்டான தசையிலும் ஸ்ரவண தசையிலும் இவர்கள் இருவரும் இப்படி-செய்கையால் என்றபடி –
சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா -என்றது -பிரபத்தியில் அன்வயிக்கும் அளவில்
அசுத்தனாய் இருக்கும் அவனுக்கு சுத்தி சம்பாதிக்க வேண்டா –சுத்தனாய் இருக்கும் அவனுக்கு அசுத்தி சம்பாதிக்க வேண்டா என்றபடி –
அசுத்தி தேட வேண்டாம் என்றது -கீழ் சொன்னவர்கள் இருவரும் அசுத்தமான தசையில்
பிரபத்தியில் அன்வயித்தமை சொல்லுகையாலே -அசுத்தி தான் இதுக்கு வேணும் என்று-சங்கியாமைக்கு-
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை -என்றது -பிரபதன காலத்தில் அசுத்தனாய் ஆதல் –
சுத்தனாய் ஆதல் -யாதொரு படி இருந்தான் -இருந்ததொரு பிரகாரத்திலே -இதுக்கு அதிகாரியாம் இத்தனை என்றபடி
திரௌபதியும் அர்ஜுனனும் -பிரபத்தி அனுஷ்டான -தத் ஸ்ரவண தசைகளில் – தத் அங்கமாக சுத்தி சம்பாதியாதவோபாதி அசுத்தியும் சம்பாதித்து கொண்டமை இல்லை இறே -இருந்தபடியே அதிகாரிகளான இத்தனை இறே –
———————————————
இவ் அர்த்த விஷயமாக ஆப்த வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார் மேல் –
சூரணை -31-
இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-
(ஆய் ஸ்வாமிகள் -அபய பிரதானம் கேட்க்கும் இவருக்கு –வேல் வெட்டி சோமயாஜி பிள்ளைக்கு நம்பிள்ளை –அஞ்சலி கிழக்கு முகமாக பெருமாள் -தேச பிரகார நியமங்கள் –
பெருமாள் சாமான தர்மம் ஸம்ஸ்தாபகர் -அப்படி செய்தார் அத்தனை காண்-விபீஷணன் கணைக் காலைக் கூட நனைக்காமல் சரணம் புகுந்தான் கண்டீரே -அநாசார சீலன் -நின்ற நிலையிலே இதுக்கு அதிகாரம் அத்தனை காண் -)
அதாவது -வேல் வெட்டி நாராயண பிள்ளை -பெருமாள் கடலை சரணம் புகுகிற இடத்தில் பிரான் முகத்வாதி நியமோபேதராய் சரணம் புகுருகையாலே -இதர உபாயங்களோபாதி பிரபத்திக்கும் சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ -என்று நம்பிள்ளையை கேட்க பெருமாள் பக்கல் கண்ட நியமம் -இவ் உபாயத்துக்கு உடன் வந்தியாய் இருப்பது ஓன்று அன்று -பெருமாள் தமக்கு சமுத்ரம்-ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி –என்று உபதேசித்தான் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இறே -அவன் தான் பெருமாளை சரணம் புகுகிற இடத்தில்-கடலிலே ஒரு முழுக்கு இட்டு வந்தான் என்று இல்லையே –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து -பெருமாள் இஷ்வாகு வம்சராய் -ஆசார பிரதானராய் இருக்கையாலே – தம்முடைய நியமங்களோடே சரணம் புக்கார் –
இவன் ராஜச சஜாதீயன் ஆகையாலே நின்ற நிலையிலே சரணம் புக்கான் –
(சரணாகதி ஆனபின்பு -ராக்ஷஸாம் பலம் என்ன கேட்டதால் ராக்ஷஸ கோஷ்ட்டியில் இல்லை -விபீஷணன் தர்மாத்மா என்றாள் சூர்ப்பணகை –ராக்ஷஸ சஜாதீயன் என்றது -நின்ற நிலையில் -சரணம் புக்கான் -சரணாகதிக்கு பின்பு அன்றோ பெருமாள் ஸ்பர்சத்தால் அசுத்தி போனது என்பதே -ராக்ஷஸ சேஷ்டிதங்கள் இல்லை என்றது அதற்கு உரிய செயல்கள் இல்லாதவன் என்றவாறு- ஆசார பிரதானனன் என்றும் சூர்ப்பணகை சொல்லவில்லையே )
ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா-அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா-நின்ற நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை என்னும் அது -என்று அருளி செய்த வார்த்தை —
————————————
அநந்தரம்-
அதிகாரி நியம அபாவத்தையும் உபபாதிப்பதாக -தத் ஞிஜ்ஜாஸூ பிரஸ்னத்தை அனுவதிக்கிறார் -அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் -என்று –
அதுக்கு உத்தரம் அருளி செய்கிறார் -தர்ம புத்ராதிகளும் -என்று தொடங்கி-
சூரணை -32-
அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –
(ஆய் ஸ்வாமிகள் -வர்ணங்களுக்குள் ப்ராஹ்மணர் -ஒரு படி தாழ நின்ற தர்ம புத்ராதிகள் க்ஷத்ரியர் —விஸ்வஸித்து சரணம் புகுகையாலும் –
மந்த்ரம் அதிகாரம் அற்ற திரௌபதியும்-சங்க சக்ர கதாபாணே துவாரகா நிலையார்ச்சுத: கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம் . –கூச்சம் அற்று சரணம் புகுகையாலும் -இரு கையை விட்டேனோ திரௌபதியை போலே
பிரதிகூலனான காகாசுரன் -சாஸ்த்ர வஸ்ய ஜென்மம் இல்லை –போக்கற்று– சரணம் புகுகையாலும்
தமோ குணம் காளியனும் –கிருபா மாத்திரம் -தேவரீர் உள்ளம் –மிடுக்கு அற்று சரணம் புகுந்தபடியும்
திர்யக் ஜென்மம் அனுகூலனான கஜேந்திரன் -பரம ஆபத்து தசையில் -நாராயணா பராயணா மூச்சற்று சரணம் புகுந்தபடியாலும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பிரதிகூல சம்பந்தமுடையவன் – நீசர் நடுவிலே போல் -ராக்ஷஸ ஜன்மாவாய் -அனைத்தையும் விட்டு –அந்நிய சம்பந்தம் அற்று சரணம் புகுகையாலும்
அற்று சப்தம் –நிவ்ருத்தி ரூபம் தானே சரணாகதி -ஸர்வ தர்மான் பரித்யஜ்ய
ஸ்வரூப நிரூபக பரதந்தர்ய வஸ்துவை தேடிப் பின் செல்லும் ஸ்வ தந்தர்ய சரண்யர் –
குழந்தை காலை முகத்தில் அடிக்க வைத்து மகிழும் அப்பா போலே பெருமாள் -சமுத்திர ராஜன் இடம் –ஸ்வாபாவத்தை மறைத்து -சரண்யன் என்பதை மறைத்து -கீழே அற்று என்றவர் இங்கு மறைத்து –அறுக்க முடியாதே இவருக்கு -குண கடல் -இவர் –
நிரூபித்த ஸ்வ தந்த்ரனை பின் செல்லும் பரதந்த்ரனான இளைய பெருமாளும் தரிப்பு அற்று சரணம் புகுகையாலும்
இன்னமும்
முசுகுந்த பிரகலாத ஸுபரி சுமுகன் கோப ஜனங்கள் பிரவருத்திகள் –விரும்பியதை நடக்க சரணம் புகுகையாலும்
மந்த்ர தந்த்ர அதிகாரிகள்- சாஸ்த்ர வஸ்யர் -அசாஸ்த்ர வஸ்யர் -அனுகூலர் -பிரதிகூலர்- ஸ்வ தந்த்ரன்- பரதந்த்ரர் -ஆண்- பெண் அனைவரும்-சர்வரும் பிரபத்திக்கு – அதிகாரிகள் -)
அதாவது
1–திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தனம் என்று ஷத்ரியரான தர்ம புத்ராதிகளும் –
2–சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்சுதா -கோவிந்த புண்டரீகாஷம்
ரஷமாம் சரணா கதாம் -சபா பர்வம் -66-என்று ஸ்திரீயான திரௌபதியும் -(ஷத்ரிய பெண் -கீழ் இருந்து வேறு படுத்த பெண் -என்கிறார்)
3–ச பித்ராச பரித்யக்தஸ் ஸூரைச்ச ச மஹர்ஷிபி த்ரீன் லோகன் சம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத-என்று தேவ ரூபத்தை மறைத்து வந்து மகா அபராதத்தை பண்ணின காகமும் –(கீழே மனுஷ்யர்-இங்கு தேவன் -மறைத்து வந்தவன் -)
4–சோஹந்தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ஸ்துதவ் ந ச சாமர்த்யவான் க்ருபா மாத்ர மனோ வ்ருத்தி ப்ரசீத மே-என்று-திர்யக் யோநி ஜனாய் பிரதிகூலனுமான காளியனும் -(விதி நிஷேத வத்ஸயத்வம் இல்லாத திர்யக் -பிரதிகூல்ய ஜாதி -க்ருபா மாத்திரம் விஸ்வாசம் பிரார்த்தனை ஆகிஞ்சன்யம்-உண்டே இந்த ஸ்லோகத்தில்)
5–பரம பதமா பந்தோ மனசா சிந்த யத் ஹரிம் சது நாகவரஸ் ஸ்ரீ மான் நாராயண பராயண -(விஷ்ணு தர்மம் – சாஸ்த்ர விதி நிஷேத வத்ஸ்யம் இல்லாத அனுகூல திர்யக் -என்று )திர்யக் ஜன்மாவாய் அனுகூலனுமாயும் இருக்கிற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும் -(ஸூ ரக்ஷண ஸ்வான்வயம் ஒழிந்த ஸ்ரீ மத்வம்)
6 –சோஹம் பருஷிதஸ் தேன தாசவச் ச அவமாநித த்யக்த்வா புத்ராம் ச தாராம் ச ராகவம் சரணம் கத -என்று-ராக்ஷஸ சஜாதீயனான ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் –(ராக்ஷஸ ஜாதியால் இவனுக்கு வேறுபாடு -)
7–பாஹும் புஜக போகாப முபதா யரி ஸூதன அஞ்சலிம் பிரான்முக க்ருத்வா பிரதிசிச்யே மகோததே -என்று-சர்வ சரண்யரான பெருமாளும் —(கீழே பகவத் ரஷ்யர்கள் இங்கு பகவானே -அரி ஸூதனான பெருமாள் -)
8–ச ப்ராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன சீதாம் உவாசா தியசா ராகவஞ்ச மகா வரதம் -என்று அக்கரையராய் தொடர்ந்து அடிமை செய்ய வந்த இளைய பெருமாளும் –(உவாச வாசிக பிரபத்தி -நிபீடிய காயிக பிரபத்தி – இரண்டுக்கும் மாநசம் இருக்க வேண்டுமே -அதி ரோஹித -சஹஜ தாஸ்யத்வம் இவருக்கு மட்டுமே -அதுவே இளைய பெருமாளுக்கு வியாவ்ருத்தி -)
தொடக்கமானவர்கள் -என்கையாலே-
9–சோஹம் த்வாம் சரண மபார மப்ரமேயம் சம் ப்ராப்த பரம பதம் யதோந கிஞ்சித் சம்சார ஸ்ரம பரிதாப தப்த சேத நிர்வாணே அபரிணத தாம்நி சாபிலாஷா–பாகவத -10–59- -என்ற முசுகுந்தனும் –(சம்சாரம் விடுபட அபிலாஷை கொண்டு -சரண் அடைந்தான்)
10–மூடோய மல்பமதி ரல்ப விசேஷ்டி தோயம் க்லிஷ்டம் மனோ அச்ய விஷயர்ந மயி ப்ரசங்கி இத்தம் க்ருபான் குரு மயி பிரணதே அகிலேச த்வாம் ஸ்தோதும் அம்புஜ பவோபிஹி தேவ நேச -என்று ஷத்ர பந்துவும் (பராங்கதி கண்டு கொண்டானே ஷத்ர பந்துவும் விஷயாந்தரங்களில் உழன்று இருந்தேன் -அம்புஜ பவன் நான்முகனும் ஸ்தோத்ரம் பண்ண முடியாத உன் கிருபையே வேண்டி -)
11–பகவந்தம் பிரபன்நாஸா பகவன்தம் அவாபஹ என்று மாதவியும் – (சரணாகதி பண்ணி திருவடி அடைந்தாள்)
12–தம் பிரபன்ன சிரோக்ரீவம் ஆஸ்யேப்ய ஸ்ருத சோணிதம் விலோக்ய சரணம் ஜக்முஸ்
தத் பத்ன்யோ மது ஸூதனம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-அம்சம் -7- அத்யாயம் -என்று காளிய பத்நிகளும் —
13–பிரணாம ப்ரவண நாத தைத்ய சைன்ய பராஜித சரணம் த்வா மனு பிராப்தாஸ் சமஸ்தா தேவதா தேவதா கணா-என்று இந்திராதி தேவர்களும் –
14–ராஷசைர் வத்திய மாநானாம் வாநாரானாம் மகாசமூ சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத் மஜம் -என்று ஸ்ரீ வானர சேனையும் முதலாய் உள்ளவர்கள் எல்லாரும் சரணம் புகுருகையாலே –
பிரபதிக்கு இன்னார் அதிகாரிகள் என்ற ஒரு நியதி இல்லை -ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் என்கை–
(பித்ரு மகா ரிஷியும் – ருத்ரன் உபதேசிக்க துர்வாசரும் -சுனசேபனும் -விஸ்வாமித்ரர் சரித்திரத்தில் -போன்றாரும் உண்டே -ஆதி சப்தம் -அதிகாரம் இல்லை என்று சொன்னதற்கு ருசி யுடையார் அதிகாரிகள் என்று இவர்கள் அனைவருக்கும் பொதுவான காரணம் –பெருமாளுக்கு ருசி -சரணாகதி தர்மம் புரிய வைக்க உதாரணமாக இருக்க ருசி உண்டே பெருமாளுக்கும்-அவாப்த சமஸ்த காமனுக்கும் –)
———————————————
அநந்தரம் பல நியம அபாவ பிரசனத்தை அனுவதிக்கிறார் –
சூரணை-33-
பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–
( ஆய் ஸ்வாமிகள்-தர்ம புத்ராதிகளுக்கு -ஐஹிக பல காங்க்ஷிகள் ஸூக போகி ராஜ்ஜியம் -பலம் –
அத்யல்பமான வஸ்திரம்–அகடித வஸ்திரம்-இடுப்பை விட்டு நழுவாமல் இருப்பதே பலம் –
பிராண அபேக்ஷை -காகம் காளியன்-உபகரணம் பிராணம்-ஐஹிக ஆமுஷ்மிக போகம் அனுபவிக்க -உபகரணம் பலம் –
ஸ்வரூபம் அறிந்த கஜேந்திரன் -ஸ்வரூப ஸ்திதிக்கு ஹேதுவான கைங்கர்யம் -பலம் –
கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான ராம பிராப்தி விபீஷணனுக்கு பலம் -பெருமாளுக்கு சமுத்திர தரணம் பலம்
கைங்கர்ய அனுரூப அனுவ்ருத்தி இளைய பெருமாளுக்கு எல்லா அடிமைகளும் பின் தொடர்ந்து –
ஆக -அல்ப அஸ்திரம் ஸ்வரூப விருத்தம்–ஸ்வரூப அனுரூபமான -அநந்த ஸ்திர நிரவதிக ஆனந்த ரூப கைங்கர்யம் – – ஸாத்ய ரூப பலம் சித்த ரூப பலம் -பிராப்தி சித்தம் -கைங்கர்யம் ஸாத்ய பலம் என்றவாறு –சார்வே தவ நெறிக்கு -பக்தி பரமாக-ஸாத்ய ரூபமா சாதனா ரூபமா -விசாரம் உண்டே -ஆக – சர்வ பலத்துக்கும் ஏக சாதனம் பிரபத்தி -)
(உத்தேசித்து செய்தார்கள் -என்றவாறு-சித்தித்த பலத்துக்கு என்று சொல்ல முடியாதே -பெருமாளுக்கு சமுத்திரம் தாண்டியது பிரபத்தியால் சித்திக்க வில்லையே –மநோ ரதித்ததே -திரௌபதிக்கு வஸ்திரம் கிடைத்ததும் -பிரபத்தியால் பெற்ற பலம் இல்லை -ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமத்தால் -பிரபத்தி- சணல் கயிறு போலே நழுவுமே -வேறே உபாயம் பற்றினால்-திரு நாம சங்கீர்த்தனம் உபாயம் வந்ததும் அது நழுவுமே -நாமத்தால் மகிழ்ந்த பெருமாளாலே என்றும் கொள்ளலாம் – அதனால் தான் சித்தித்த என்று சொல்லாமல் தத் தத் உத்தேசித்த மநோ ரதித்த பலம் என்கிறார் -)
இத்தால் கீழ் அதிகாரி நியம அபாவத்துக்கு உடலாக காட்டப் பட்ட தர்ம புத்ராதிகள் தொடக்கமான பிரபத்தாக்கள் ஆனவர்கள்
ராஜ்ய அர்த்தமாகவும் –
வஸ்த்ர அர்த்தமாகவும் –
பிராண அர்த்தமாகவும்
கைங்கர்ய அர்த்தமாகவும்-(காலை மாலை கமல மலரிட்டு கைங்கர்யம் செய்ய தானே)
ராம பிராப்தி அர்த்தமாகவும்–(ராஜ்ய பிராப்தம் இல்லை)
சமுத்திர தரண அர்த்தமாகவும்
ராம அனுவ்ருத்தி அர்த்தமாகவும்-(எல்லா இடமும் கூடவே சென்று கைங்கர்யம் என்பதால் ராம அனுவ்ருத்தி)
பிரபத்தி பண்ணுகையாலே பிரபத்திக்கு பல நியமம் இல்லை என்றது ஆய்த்து–
(பெருமாளுக்கு சமுத்திர தரணம் பலம் என்றால் -விகட -வைகட்யம் -சேராமை வரும் -சித்திக்கும் என்று சொன்னால் பெருமாள் விஷயத்தில் – கடித கடக விகடனா பாந்தவம் அவ்வூரில் த்வி குணம் -ஆசை இல்லாமல் அகற்றினீர் தொலை வில்லி மங்கலம் -பார்த்தோம்-பெருமாளுக்கு –பல உபாதான அபாயம் -விஷய பூர்த்தி ரூப காரணாந்தர-விரஹம்- சரணாகதன் ஆகிஞ்சன்யம் -அநந்ய கதித்வம் -வேண்டும் -கடல் அரசன் இடமும் சரண்யனுடைய லக்ஷணங்கள் இல்லையே-பெருமாளுக்கு இதனால் சித்திக்காதே –
திரௌபதிக்கு பலம் வஸ்திரம் சித்தித்தது என்றாலும் ஒவ்வாதே-புடவை சுரந்தது திரு நாமம் தானே –(முமுஷுப்படி -16)-நாம சங்கீர்த்தனத்தை சாதனமாக பண்ணக் கூடாதே பிரபன்னன் -ஆகையால் உத்தேசியத்தை மட்டுமே கொள்ள வேண்டும் -விபீஷணனுக்கு பலம் ராம பிராப்தி -ராஜ்ஜியம் காங்க்ஷீ என்பார் –விபீஷணன் வார்த்தை -உன் திருவடிகளில் அனைத்தையும் விட்டேன் என்றானே –திருவடி அபிப்ராயத்தால் ராஜ்ஜியம் கொடுத்து செய் நன்றி காட்ட – பெருமாள் ராஜ்ஜியம் எதிர்பார்த்து வந்தாலும் அண்ணனை விட்டான் என்றாலும் சுக்ரீவன் பக்ஷம் -அதே காரணங்கள் அவன் இடமும் உண்டே -என்றார்)
—————————————————-
ஆக பிரபத்திக்கு தேச காலாதி நியம அபேஷை இல்லை என்ற பிரதிஞ்ஜையை உபபாதித்தார் கீழ் -விஷய நியமமே உள்ளது -என்ற பிரதிஞ்ஜையை உபபாதிக்கிறார் மேல் –
சூரணை -34-
விஷய நியமம் ஆவது-
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-
பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –
( ஆய் ஸ்வாமிகள்–40 சூரணை வரை இதே விஷயம் –ஸுலப்ய குண பூர்த்தி உள்ள இடமே விஷயமாகும் -உச்சாணிக் கொம்பில் உள்ள பரத்வம் உள்ள முடியாதே -பிரபத்தி அங்கங்கள் எதிர்பார்க்காது -அங்க அஸஹம் ஸ்வரூப அனுரூப இதர சாதன வியாவர்த்தமாய் —பகவத் ஏக விஷய பிரபத்திக்கு விஷய நியதமாவது –ஸுலப்யாதி குண பூர்த்தி நியமம் ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதக குணங்கள் வேண்டுமே–பரத்வம் போகம் அனுபவிப்பிக்க -வ்யூஹம் -ரக்ஷகத்வம்-ஸுந்தர்யம் விபவம்-யோகி ஹிருதய யோக அர்ஹத்தை அந்தர்யாமி – அர்ச்சை தானே ஆஸ்ரயண உபயோகி —இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணமேவ அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் ஸஹோம்-உண்டே –உம்மைத் தொகை -இங்கும் மேலே ஆழ்வார் பிரபத்தி பண்ணியதும் அர்ச்சையில் –பூர்த்தி உள்ளதும் -அர்ச்சை பரத்வாதியில் சர்வம் பூர்ணம் ஸஹோம் –ஓம் -இசைதல்-அங்கு இருப்பதால் -அதே தான் பூர்த்தி என்றவாறு)
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை -என்றது-பரத்வாதிகள் ஐந்திலும் வைத்து கொண்டு ஸௌலப்யாதி குண பூர்த்தி உள்ள இடமே–ஆதி வாத்சல்யம் ஸுசீல்யம் ஸ்வாமித்வம் இத்யாதி –விஷயமாகை என்ற படி –அந்த குண பூர்த்தி தான் உள்ளது எங்கே என்ன –பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே என்கிறார் –
அர்ச்சாவதார விஷயே மயாப் உத்தேச தஸ் ததா உக்தா குண ந சக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி–பாத்ம சம்ஹிதையில் பகவான் ரிஷிகள் இடம் – -என்று ஸ்வதஸ் சர்வஞ்ஞனான தானே சொல்லப் புக்காலும் சொல்லித் தலைக் கட்ட அரிதாம் படி இறே அர்ச்சாவதார குண பூர்த்தி இருப்பது –
———————————————-
இக் குண பூர்த்தி உள்ள அர்ச்சாவதாரமே ப்ரபத்திக்கு அடைத்த விஷயம் என்னும் அத்தை -பிரபன்ன ஜன கூடஸ்தருடைய அனுஷ்டானத்தாலும் பிரகாசிப்பிக்கிறார் மேல் –
சூரணை -35-
ஆழ்வார்கள் பல இடங்களிலும்
பிரபத்தி பண்ணிற்றும்
அர்ச்சாவதாரத்திலே –
( ஆய் ஸ்வாமிகள்-இந்த ஸூலப விஷயத்திலேயே பிரபத்தி பண்ண வேணும் என்னும் நியதி எதனால் என்னில்சிஷ்டாசாரத்தை பற்ற -உபய விபூதியை -சாஷாத்காரித்து –பொன்னுலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ-பரத்வாதிகள் எல்லாம் கையில் உள்ள மாணிக்கம் போலே -உள்ளங்கை நெல்லிக்கனி பகவத் விஷயம் சொல்லக் கூடாதே
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -ஆழி வண்ண நின் நின் அடி இணை அடைந்தேன் –
நின் அருளே புரிந்து இருந்தேனே இனி என் திருக் குறிப்பே –சரணாகதிக்கு வேறே வேறே சப்தங்கள் –உன் அருளே பார்ப்பன் அடியேன் -உன பாதம் அன்ன-119 -உன் கடைத்தலை நின்று வாழும்-38- –திருக் கமல பாதம் வந்து பரகத ஸ்வீகாரம்–எந்நாள் கெடும் மா இடர் கருக் கோட்டியுள் உட் புகுந்து கை தொழுதேன் -தாள் முதலே நங்கட்கு சார்வு-99-பல இடங்களிலே ஸ்வரூப அனுரூபமாக பிரபத்தி -உபாய அத்யாவசியம் -பண்ணிற்றும் சர்வ சுலபமான அர்ச்சையிலே -சிஷ்ட அனுஷ்டான சித்தம் –அனுஷ்டானத்தாலும் -உம்மை தொகை -கீழே வேத வாக்கியம் பூர்ணம் காட்டி அருளினார் -இங்கு சிஷ்டாசாரத்தாலும் காட்டி அருளுகிறார்)
மயர்வற மதிநலம் அருளிப் பெறுகையாலே-பரத்வாதிகளை எல்லாம் கரதலாமலகமாக
கண்டு இருக்கிறவர்கள் இறே ஆழ்வார்கள் -இப்படி இருக்கிறவர்கள் பிராப்யத் த்வரா அதிசயத்தாலே பலகாலும் -(விசுவாசம் இல்லாமல் பல காலும் பண்ணினால் குற்றமாகும் –)பிரபத்தி பண்ணுகிற அளவில்- பல இடங்களிலும் அர்ச்சாவதாரத்திலே இறே
பிரபத்தி பண்ணிற்று -ஸ்தலாந்தரத்தில் க்வாசித்கமித்தனை இறே -(மாம் ஏகம் விபவத்திலே தானே —அர்ச்சையில் எல்லாமே எம்பெருமான்களுக்கும் ஹஸ்தத்திலே இது உண்டே-அங்கு ஓன்று இங்கு ஓன்று -நம்மாழ்வார் பிறந்தவாறும் கிருஷ்ண அவதாரத்தில் மோக்ஷ உபாயத்துக்கு இல்லை தரித்து நின்று அனுபவிக்க -)எங்கனே என்னில் -ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான நம் ஆழ்வார் –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்–5–7-
கழல்கள் அவையே சரணாக கொண்ட –5–8-
நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -5–9-(ஷேம கரம் திருவடிகளே)
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று இப்படி பல இடங்களிலும்-6-10-பிரபத்தி பண்ணிற்று அர்ச்சாவதாரத்தில் இறே –
பிறந்தவாறும் -5–10–ஒன்றிலும் இறே அவதாரத்தில் சரணம் புக்கது –
(திரு மங்கை ஆழ்வாரும் –
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரண்யத்துள் எந்தாய் –1–6-
விரையார் திருவேம்கடவா நாயேன் வந்து அடைந்தேன் –1 -9–
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6
ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –5–8- இவ்வாறு பத்து இடங்களில் திருமங்கை ஆழ்வார் – என்று இப்படி அர்ச்சாவதாரத்திலே இறே பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்று -)
மற்றை ஆழ்வார்களுக்கும் இப்படி தத்தத் பிரபந்தங்களில் கண்டு கொள்வது –
பிரபந்தம் பண்ணிற்றும் என்கிற இந்த ச சப்தத்தாலே -பூர்த்தி உள்ளதும் -என்று கீழ் சொன்னதை சமுச்சயிக்கிறது –
(பெரியாழ்வார் -அருளிச் செயல்களில் -சரணாகதி —
1–துப்புடையாரை –திருவரங்கம் –4–10-பதிகம்
2–வாக்குத் தூய்மை -5–1-பதிகம்
3–துக்கச் சூழலை –திருமாலிரும் சோலை –5–3-பதிகம்
4–சென்னியோங்கு –5–4-பதிகம் –
திருப்பாவை -அங்கண் -மாலே -கூடாரை -கறைவைகள்-சிற்றம் சிறு காலை -வங்கக் கடல் –
–திருமங்கை ஆழ்வார் -அருளிச் செயல்களில் -சரணாகதி –
1–நைமிசாரண்யம் – -பெரிய திருமொழி –1–6-பதிகம்
2–திருவேங்கடம் –பெரிய திருமொழி-1–9-பதிகம்
3–திருக் காவளம் பாடி -பெரிய திருமொழி–4–6-பதிகம்
4–திரு வெள்ளக் குளம் -பெரிய திருமொழி-4–7-பதிகம்
5–திருவரங்கம் -பெரிய திருமொழி–5-8-பதிகம்
6–திரு விண்ணகர் -பெரிய திருமொழி–6–2-பதிகம்
7–திருவழுந்தூர் -பெரிய திருமொழி–7–7-பதிகம்
8–திருச் சிறு புலியூர்–பெரிய திருமொழி- -7–9-பதிகம்
9–திருப் புல்லாணி –பெரிய திருமொழி–9–4-பதிகம்
10–திருக் குறுங்குடி –பெரிய திருமொழி—9–5-பதிகம்
11–திரு நெடும் தாண்டகம் –29–அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை –அடி நாயேன் நினைந்திட்டேனே –
———————————————–
இப்படி இவ் ஆழ்வார்கள் பிரபத்தி பண்ணும் இடங்களில் -பரத்வாதிகள் எல்லாம் இருக்க –
அர்ச்சாவதாரத்திலே பண்ணுகைக்கு அடி -இதின் குண பூர்த்தி இறே –
அந்த குண பூர்த்தி தன்னை ச பிரமாணமாக அருளிச் செய்கிறார் -மேல் –
சூரணை -36-
பூர்ணம் -என்கையாலே எல்லா குணங்களும் புஷ்கலங்கள் –
(ஆய் ஸ்வாமிகள் —இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணமேவ அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் ஸஹோம்–சர்வம் பூர்ணம் கடவல்லி சொல்லுமே –சேஷிக்கு உபயோகியான ஸ்ரீ யபதித்தவம் -ஆஸ்ரயண உபயோகி ஸுலப்யாதிகள்-கார்ய உபயோகிகளான ஞான சக்தியாதிகளும் -அனுபவ உபயோகிகளான ஸுந்தர்யாதிகளும்
என் திரு மககள் சேர் மார்பன்–ஸ்ரீய பதித்தவம் – அலர்மேல் மங்கை உறை மார்பா –சேஷித்வ உபயோகி
கோநிரை காத்தவன்-7-2-8– நிகரில் புகழாய்–முன் செய்து இவ்வுலகம் யுண்டு-7-2-2- -உலகம் உண்ட பெரு வாயா-6-10-1- ஞான சக்திகள் -கார்ய உபயோகி
கடல் வண்ணா சுடர் சூழ் ஒளி மூர்த்தி-ஸுந்தர் -யுக்த குணங்கள் எல்லாம் அர்ச்சாவதாரத்தில் காணலாம் –
பரத்வத்தில் பிரபத்தி பண்ணாது ஒழிவான் என் என்னில் -விசேஷித்து அவை இங்கே உண்டு என்கிறார் –பர வாசுதேவன் இடம் பரத்வம் புஷ்கலம் -ஸுலப்யம் தேடிப்பிடிக்க முடியாது என்றால் அர்ச்சையில் பரத்வம் இல்லையோ என்னில் -எல்லா குணங்களும்-நான்கு வகைகளும் – புஷ்கலம் இங்கே என்கிறார் –
பூர்ணமிதம் பூர்ணமத பூரணாத் பூர்ணம் உத்தேச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே சர்வம் பூர்வம் ஸஹோம் –த்வய உபநிஷத்
சத்தியமான த்வயத்தை கொண்டு உபாஸிக்க வேண்டும் -பூர்வ வாக்கியம் சொல்லி –யாரும் எப்பொழுதும் எங்கும்- குண பூர்த்தி உள்ள இடத்தில் செய்ய வேண்டும் -என்கிறது ஸ்ருதி –பூர்வ வாக்கியம் சொல்லி – -ஸஹோம் -வரை த்வயம் மத்யகதம் –
பலமாக கைங்கர்யம் -நடுவில் உள்ளவை விளக்கம் அதனால் மந்த்ர ரத்னத்தின் இல்லை
பூர்வ வாக்கியம் உபாயத்வம் -உத்தர வாக்கியம் -ஆஸ்ரயண உபயோகி இதுக்கு -பூர்வ வாக்ய நாராயண சப்தம் –
உபேயத்வம் -சேஷி கார்ய அனுபவம் உபயோகி மூன்றும் இதுக்கு -உத்தர வாக்ய நாராயண அர்த்தம் இது -பூர்ண சப்தம் –
இதம் என்று அந்தர்யாமியாய் சொல்லி -அத பரத்வம் சொல்லி -பூர்ணம் திரும்பி திரும்பி ஸ்ருதி சொல்ல
பூரணாத் பூர்ணம் – பூர்ணஸ்ய பூர்ணம்
சர்வம் பூர்ணம் -எட்டு தடவை சொல்லி -அங்கு இருந்து அது -இரண்டு தடவை சொல்லி–இவற்றை விட்டாலும் இன்னும் ஆறு –
அர்ச்சைக்கு இதுவே பூர்ணம் என்று முடிக்கிறது – அனைத்து குணங்கள் அனைத்து பிரகாரங்களை குறிக்க ஸ்ருதி வாக்கியம் –
பூர்வம் சொன்னதை விட உத்தர உத்தர இன்னும் இன்னும் உயர்ந்தது என்றும் சொல்கிறது
ஆதிக்யம் பிரதிபாதனம் -லிங்க சந்நிதியால் அர்ச்சையில் தான் ஒய்வு எடுக்கும்
லிங்க சந்நிதி -என்றது -சப்த சாமர்த்தியம் சப்தத்துக்கு பொருள் கூறும் வல்லமை – அர்த்த சாமர்த்தியமும் உண்டே
புண்டரீகாக்ஷன் –தடாகம் தண்டுகள் உடன் ஆதித்யனால் மலர்ந்து அர்த்த சாமர்த்யங்கள் உண்டே -பூர்ணம் -பஞ்ச பிரகரணம்
அதிக அதிக பூர்வம் உத்தர உத்தர ஆதிக்யம் என்பதால் -சந்நிதி -அருகில் அருகில் இவ் ஐந்து இதை விட அது என்கிறதே –
இத சப்தம் அந்தர்யாமி-அருகில் – அத -பரத்வம்-லோகாந்தரம் -பூரணாத் பூர்ணம் தீபாத் உத்பன்னம் போலே உத்ருஜ்யதே –ஆறு குணங்களால் பூர்ணம் வ்யூஹம் – அவதார கந்தம் -வாகன மண்டபம் போலே-ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதி -வ்யூஹாத்மக பூர்ண சம்பந்தி விபவம் ஆதாய –பூர்ணமேவ -அர்ச்சையே நித்ய ஆஸ்ரயணம் நித்ய சந்நிதி -சரமம் -சர்வம் பூர்வம் சக ஓம் –பூர்ண ஏவ அவசிஷ்யதே -இதுக்கு மட்டும் -சொல்லி –தீர்த்தம் பிரசாதியாமல் -விஸ்ராந்தி பூமி -மான மேய சரமம் நாயனார் –வேதத்துக்கு ஐந்து -பிரமேயம்-ஐந்து -ரக்ஷகத்வ ப்ராபகத்வ -கூட்டி -மிளிதமாக இங்கு மட்டும் -முழு பூர்ணம்-இத்தால் – பர வ்யூஹம் கால சந்நிஹர்ஷமும் -அர்ச்சையிலும் உண்டு-விபவத்தில் தேச சந்நிஹர்ஷமும் -கரண சந்நிஹர்ஷமும் -இவையும் அர்ச்சையிலும் உண்டே-அந்தர்யாமி தேச கால சந்நிஹர்ஷமும் இதில் உண்டே -அங்கே அப்பொழுதே -காணலாமே —பூர்வ படித பூர்வ வாக்ய நாராயண அர்த்தங்கள் புஷ்கலம் இதில்
கடவல்லி ஆச்சார்யர் சிஷ்யர் த்வய உத்பத்தி இரண்டு வாக்கியம் ஆறு பதங்கள் -அர்த்தங்கள் பத்து -அஷ்ட ஸ்லோகி பட்டர்
26- எழுத்துக்கள் முன் வாக்கியம் -15-எழுத்துக்கள் பின் வாக்கியம் -10-எழுத்துக்கள் பிரதம பதம் 9-அக்ஷரம்
இரண்டாவது -மூன்றாவது நான்காவது -சரணம் ப்ரபத்யே ஸ்ரீ மன் மூன்று எழுத்துக்கள் ஒவ் ஒன்றிலும் –
நடுவில் யாரும் புகுத்த கூடாது என்று பிரித்து சாஸ்திரம் இப்படி காட்டுகிறது -ஐந்தாவது ஐந்து எழுத்து -ஆறாவதில் இரண்டு –
ஸ்ரீ மத்- ஒரு எழுத்து -நாராயண -4-அக்ஷரம் -மேலே நான்கும் மூன்று எழுத்துக்கள் சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மன்
ஸ்ரீ மதே நாராயண -எட்டாவது நான்கு -ஆய -இரண்டு எழுத்துக்கள் பத்தாவது நம இரண்டு எழுத்துக்கள் –
மந்த்ர ரத்னம் அநாதி சித்தம் -ஆச்சார்ய பரிஹீதம்–வேத சம்பன்ன விஷ்ணு பக்த -பொறாமை இல்லாமல் -அர்த்தங்கள் அறிந்து
அன்பு கொண்டு மந்த்ரத்தை சதா ஆஸ்ரயித்து சுத்தி உடையவன் ஆச்சார்யர் தனது குரு பக்தி உடன் -ஒரு தடவை சொன்னாலே முக்தி –
சர்வ பலன்களும் கிட்டும் -ஸ்ரீ மன் நாராயணனுக்கு ப்ரீதிக்கு ஆளாவாய் என்று உபநிஷத் சொல்லிற்று -)
பூர்ணம் என்கையாலே -என்றது –
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஷ்யதே சர்வம் பூர்ணம் சஹோம் –ப்ருஹதாரண்யம் -என்று ஸ்ருதி சொல்லுகையாலே என்ற படி – எல்லா குணங்களும் புஷ்கலங்கள் -என்றது – ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதகங்களான குணங்களோடு -ஆஸ்ரய கார்ய ஆபாதகங்களான குணங்களோடு வாசியற சகல கல்யாண குணங்களும் -இவ் விஷயத்திலே சம்பூர்ணம் -என்றபடி-
(மாம் அஹம் இரண்டு அர்த்தங்களிலும் உள்ள குணங்கள் –
கடவல்லி உபநிஷத் -பூர்ணம் விவஷிதம் -த்வயம் அந்தர்கதம் இதில்
குண பூர்த்தி உள்ள ஸ்ருதிக்குள் -நம்மாழ்வாரும் ஒன்பது பாசுரங்களில் குணங்களை சொல்லி அகலகில்லேன் -சரணம் புகுகிறார்
இதம் பூர்ணம் த்வயம் இரண்டு வாக்யங்களுக்கு நடுவில் -உபாயத்வம், உபேயத்வம் அபேக்ஷித கல்யாண குணங்களை சொல்லும் பூர்ணம் –
சர்வம் பூர்ணம் -முதலில் சொன்னதை கொள்ளக் கூடாதோ என்றால் –
உத்தர உத்தர ஆதிக்யத்தால் சுருதி அர்ச்சாவதாரம் சொல்லி ஒய்வு எடுத்துக் கொண்டது –
சப்தம் அர்த்தம் லிங்கம் சந்நிதி சாமர்த்தியம் -கொண்டு –
இதம் அந்தர்யாமி- பர-அத -பூர்ணாத் பூர்ணம் வியூஹம்- பூர்ணஸ்ய பூர்ணம் வியூகம் –
பூர்ணமேவ அவசிஷ்யதே நித்ய -பரத்வாதிகளில் சரமம் -ரக்ஷகத்வ ப்ராபகத்வ -பூர்ணம் -)
———————————————
ஆனால்-வாசு தேவோசி பூர்ண -என்ற பரத்வத்தில் காட்டில் -இங்குத்தைக்கு ஏற்றம்
என் என்ன -அருளிச் செய்கிறார்-
சூரணை-37-
பிரபத்திக்கு அபேஷிதங்களான ஸுலப்யாதிகள்
இருட்டறையிலே விளக்குப் போலே
பிரகாசிப்பது இங்கே –
(ஆய் ஸ்வாமிகள் -இருள் தரும் மா ஞாலத்தில் தானே பிரகாசிக்கும்
மற்ற குணங்களை விட -பிரபத்திக்கு அபேக்ஷித்த குணம் ஸுலப்யாதிகள்-பிரகாசிப்பது அர்ச்சையிலே-அது தெளி விசும்பு திருநாடு -பகவத் விஷயத்தை பிரத்யஷித்து –மாம்ச த்ருஷ்டிக்கு விஷயமாவது இங்கே தானே ஸுலப்யம் —
பெருமை அற்று கலந்து பழகும் ஸுசீல்யம் -சம்யக் சீலம் -புரை அறக் கலந்து கலந்தோம் என்ற நினைவும் இல்லாமல் –கலந்து சம்பந்தம் அற்று இல்லாமல் ஸ்வாமித்வம் ‘
குற்றம் குணமாக கொள்ளும் வாத்சல்யமும் -நான்கும் பிரகாசிக்கும் இங்கே -அங்கே பகல் விளக்கு பட்டு இருக்கும் —நாம் பற்ற ஸுலப்யம் முதல்-திருவடியை எளிதாக பற்றலாமே – –
அவன் நம்மை பற்ற வாத்சல்யம் -இதனாலே வாத்சல்யம் நிகரில் புகழாய் முதலில் சொல்லி அவனை கூப்பிட்டு அருளிச் செய்வதால் -தன் விஷயம் பின்னால் வைத்தார் -வத்சலனே தேவரீர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே நிகரில் புகழாய் என்று தொடங்கி-திரு வேங்கடத்தானே உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று சுலபனான உன்னை அடியேன் பற்றினேன் என்கிறார் –ஆகவே வாத்சல்யாதிகள் முதலாக -சொல்லாமல் -அவன் கர்த்தவ்யம் அது -நாம் பற்ற-திரு வேங்கடத்தானே- இதுவே முக்கியம் –தயா -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் மட்டும் இல்லை -ஸ்வார்த்த நிரபேஷமாகவும் இருக்க வேண்டும் – அர்ஜுனன் அஸ்தான சினேகா காருண்யம் -அது தயை இல்லையே -)
பிரபத்திக்கு அபேஷிதங்களான -என்றது -உபாயமாக பற்றும் இடத்தில் வேண்டும் அவையான -என்றபடி –(உபாசகருக்கு இல்லை- சித்த உபாயமாக ஸ்வீகரிப்பவனுக்கே இது)
சௌலப்யாதிகளாவன-கண்டு பற்றுகைக்கு உறுப்பான சௌலப்யமும் -(மாம்ச சஷூசுக்கு விஷயமாக வேணுமே)-மேன்மை கண்டு அகலாமைக்கு உறுப்பான சௌசீல்யமும்-
கார்யம் செய்யும் என்று விச்வசிக்கை உறுப்பான ஸ்வாமித்வமும்-
குற்றம் கண்டு வெருவாமைக்கு உறுப்பான -வாத்சல்யமும் —
நிகரில் புகழாய் -இத்யாதியாலே -இந் நாலு குணத்தையும் இறே ஆழ்வார் அருளி செய்தது –
இருட்டறையில் விளக்கு போலே பிரகாசிப்பது இங்கே -என்றது -பரத்வத்தில் இக் குணங்கள் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தே – பரம சாம்யாபன்னருக்கு முகம் கொடுக்கிற இடம் ஆகையாலே பகல் விளக்கு போலே பிரகாசம் அற்று இருக்கும் –(அதிதி இல்லாவிட்டால் தர்மம் கொடுக்க முடியாதே -)
அர்ச்சாவதாரமான இடத்தில் தண்மைக்கு எல்லை நிலமான சம்சாரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கையாலே -அந்தகாரத்திலே தீபம் போலே அத்யுஜ்வலமாய் தோற்றும் என்றபடி –
விஷயம் உள்ள இடத்தே-தேட்டம் உள்ள இடத்தே – இறே குணங்கள் பிரகாசிப்பது –
அங்கு உள்ளாரும் சீலாதி குணம் அனுபவம் பண்ணுகைக்கு வருவது இங்கே இறே –
(நிகரில் புகழாய் பாசுரத்தில் வாத்சல்யம் முன்னாக இருக்க-ஸூத்ரத்தில்) –சௌலப்யம் முன்னாக அருளிச் செய்தது -கண்டு பற்றுகைக்கு உறுப்பான
சௌலப்யமே பிரபத்திக்கு பிரதான அபேஷிதம் என்று தோற்றுகைக்காக —
———————————————
இக் குணங்கள் பிரகாசிப்பது இங்கே -என்றதை உபபாதிக்கிறார் –
சூரணை -38-
பூர்த்தியையும் ஸ்வா தந்தர்யத்தையும்
குலைத்து கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களை
தான் ஆதரித்து நிற்கிற இடம் –
(ஆய் ஸ்வாமிகள் -ஸ்வாதந்தர்யம் குலைத்துக் கொண்டு -அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்தும் -பூர்த்தியை குலைத்துக் கொண்டு –இவன் இட்டது கொண்டு திருப்தனாய் –
ஸூ இச்சா சாரித்தவம் இவன் இச்சா தீந வ்ருத்தியாய் குலைத்துக் கொண்டு -தானாகே குறைத்துக் கொண்டான் -நடிப்பு -அபராதமாகவே பச்சையாகக் கொண்டு -மந்த்ர லோபம் கிரியா லோபம் இத்யாதிகளில் உண்டே –
காணாக் கண் இட்டு மட்டும் இல்லாமல் பச்சையாக ஸுலப்யத்தை பார்த்தே தாழ நினைப்பவர்கள் -அநாதரித்தாலும் விட மாட்டாமல் -ஹீன சம்சாரிகளை -விட மாட்டாத ஸ்நேஹம் அநாதரவு கந்தமும் இல்லா அர்ச்சாவதார பிரபத்திக்கு விஷயம் –
பூர்த்தி யாவது -அவாப்த சமஸ்த காமத்வம் –அத்தைக் குலைத்து கொள்கையாவது –
இவன் இட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டும் படி சாபேஷனாய் இருக்கை-
ஸ்வாதந்த்ர்யம் ஆவது -ஸ்வாதீன ஸ்வரூபதிமத்த்வம்-அத்தைக் குலைத்து கொள்கையாவது –ஆஸ்ரித ஆதீன ஸ்வரூப ஸ்திதி யாதிகளை உடையவன் ஆகை –
ததிச்சயா மகா தேஜோ புங்க்தேவை பக்த வத்சல
ஸ்நானம் பானம் ததா யாத்ரம் குரு தேவை ஜகத் பதி
ஸ்வதந்த்ரஸ் ச ஜகன்னா தப்ய ஸ்வதந்த்ரோ யதா ததா சர்வ சக்திர்
ஜகத் தாதாப்ய சக்த இவ சேஷ்டதே–-விஷ்வக்சேன சம்ஹிதை -என்னக் கடவது இறே –
அர்ச்சக பராதீன அகிலாத்மா ஸ்திதி –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -என்று அருளிச் செய்தார் இறே பட்டர்-
தன் இச்சை ஒழிய இவற்றை குலைக்கைக்கு ஹேது இல்லாமையாலே –குலைத்து கொண்டு –என்கிறார் –
தன்னை அநாதரிக்கிறவர்களை தான் ஆதரித்து நிற்கிற இடம்-என்றது –
தான் இப்படி சுலபனாய் வந்து நின்றால் -அரியவன் எளியவனாய் -நிற்கப் பெற்றோமே என்று விரும்பி மேல் விழுகை அன்றிக்கே -அவ் வெளிமை தானே ஹேதுவாக உபேஷிக்கிற
சம்சாரிகளை -தான் விட மாட்டாத அளவு அன்றிக்கே -அவர்களை ஒழியச்
செல்லாமை தோற்றும் படி நிற்கிற ஸ்தலம் அர்ச்சாவதாரம் என்கை -(சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று இருக்கிறானே)
பூர்த்தியையும் ஸ்வாதந்த்ர்யத்தையும் குலைத்து கொண்டு நிற்க்கையாலே
ஸுலப்ய ஸுசீல்யங்களும்-தன்னை அநாதரிக்கிறவர்களை தான்
ஆதரித்து நிற்க்கையாலே-ஸ்வாமித்வ வாத்சல்யங்களும் இங்கே தோற்ற நின்றது இறே —
அன்றிக்கே –பூர்த்தியையும் -என்று தொடங்கி இவ் வாக்கியம் எல்லா வற்றாலும் –
குண சதுஷ்டைத்திலும் பிரதானமான ஸுலப்யத்தையே யோட வைத்தார் ஆகவுமாம்-
அப்போது இவ் விஷயத்தினுடைய சௌலப்ய அதிசயத்தை தர்சிப்பிகிறார் என்று வாக்ய சங்கதியாக கடவது –
கண்ணுக்கு விஷயமாம் படி நித்ய சந்நிதி பண்ணுகிற அளவு அன்றிக்கே -சர்வ பிரகார பரி பூர்ணனாய் -நிரந்குச ஸ்வதந்த்ரனாய் இருக்கிற தன்னை சாபேஷனும் பரதந்த்ரனும் ஆக்கிக் கொண்டு -தன்னை அநாதரிக்கிற சம்சாரிகளை தான் ஆதரித்து நிற்க்கைக்கு மேல்பட்ட சௌலப்யம் இல்லை இறே –
ஏவம் பஞ்ச பிரகாரோஹா மாத்மானாம் பததாமத
பூர்வஸ் மாதபி பூர்வ ஸ்மாஜ் ஜ்யாயாம்சை வோத்தரோத்த்ர
சௌலப்யதோ ஜகத் ஸ்வாமீ ஸூலபோஹ் யுத்தரோதர– விஷ்வக்ஸேன ஸம்ஹிதை -என்று பரத்வாதிகள் ஐந்திலும் சௌலப்யம் உண்டாய் இருக்கச் செய்தே -பூர்வ பூர்வத்தில் காட்டில் உத்தர உத்தரத்துக்கு சௌலப்யம் அதிசயித்து இருக்கும் என்று தானே அருளிச் செய்கையாலே -சௌலப்யதுக்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம் இறே –
——————————————-
பரத்வாதிகளுடைய துர் லப்யத்தையும் -அர்ச்சாவதார சௌலப்யத்தையும் திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் மேல் –
சூரணை-39-
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் –
அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —
(ஆய் ஸ்வாமிகள் -ஸந்நிஹிதம் -பிரயத்தன சாத்தியம் -துர்லபம் பூகத ஜலம் -அந்தர்யாமி -அஷ்டாங்க யோக சாதனம்
அதி விப்க்ரகர்ஷம் -(ஸ்ருஷ்டியின் முதலில் படைத்த நீர் )ஆவரண ஜலம் -சம்சாரிகளுக்கு எட்டாத பரத்வம்
அது போலே அதி விப்ருக்ருஷ்டமாய் இல்லா விட்டாலும் மனுஷ்யாதிகளுக்கு அலாப்யமான வ்யூஹம் -அண்டத்துக்கு உள்ளே – தெய்வங்களே போகலாம் -மூல முடங்களான மநுஷ்யர்கள் போக முடியாதே –
ஸந்நிஹிதம் ஆனாலும் -தத் கால வர்த்திகளுக்கு மட்டும் உபஜீவனம் -பெருக்காறு-விபவம் -பூமியிலே அவதரித்ததும் தத் காலம்-பிற்பட்ட பாவிகளுக்கு எட்டாமல் –பிரபத்திக்கு நித்ய விஷயம் ஆகாதே இவை அனைத்தும்
அயத்ன ஸித்தமாய் –அதி ஸந்நிஹிதனுமாய்-அஷ்டாங்க தூர கமன நிரபேஷமாய்- கோயில் முதலான திவ்ய தேசங்களிலும் -க்ருஹங்களிலும் ஸ்தாவர ப்ரதிஷ்டையாய் இருந்து நிலைத்து தத் தத் அவதாரங்களில் நித்ய விக்ரஹமாய் கண்ணுக்கு இலக்காய் கொண்டு- சர்வ ஸமாஸ்ரயணீயமாய் – துர்லப பராங்முகையான பிரபத்திக்கு பிரிய விஷயம்
பெரிய விடாயான் -குளிர்ந்து தெளிந்து நிறைந்த –கிணறு கல்லியும் அண்டத்துக்கு பாய்ந்து பாற் கடலை கடைந்து -வற்றின ஆற்றிலே ஓடிச் சென்று தண்ணீர் தேடுவது போலே இத்தை விட்டு அங்கே தேடுகை -)
த்ருஷ்ணார்த்தனுக்கு-(தாகம் எடுத்தவனுக்கு )- தேசாந்தரத்தில் போக வேண்டாதபடி நிற்கிற இடம் தன்னிலே – உண்டாய் இருக்கச் செய்தேயும் -கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது குடிக்க கிடையாத பூகத ஜலம் போலே ஆய்த்து-
கண்டு பற்ற வேணும் என்று ஆசைப் பட்டவனுக்கு ஹிருதயத்திலே இருக்கச் செய்தேயும் –கட்கிலீ – -7-2-3-என்கிறபடியே -கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே – அஷ்டாங்க யோக ரூப யத்னத்தாலே காண வேண்டும்படியான அந்தர்யாமித்வம் –
அவனுக்கு- (தாகம் எடுத்தவனுக்கு )- -அண்டத்துக்கு புறம்பே பெருகி கிடக்கிற ஆவரண ஜலம் போலே ஆய்த்து –இவனுக்கும் அப்பால் -முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது -(திருநெடும் தாண்டகம் )என்கிறபடியே லீலா விபூதிக்கு அப்பால் பட்டு இருக்கிற பரத்வம் –
அப்படி அதிவிப்ரக்ருஷ்டம் அன்றியே – அண்டாந்தர்பூதமாய் இருக்கச் செய்தேயும் அவனுக்கு துஷ் ப்ராபமான பால் கடல் போலே ஆய்த்து -இவனுக்கும் பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் -( பெரிய திருவந்தாதி )என்கிறபடியே கேட்டு இருக்கும் அத்தனை அல்லது சென்று காண அரிதாம்படி இருக்கிற வ்யூஹம் –
ப்ரத்யா சன்னமாயும் -தாத்காலிகர்க்கு உப ஜீவ்யமாய் பச்சாத் யனானவனுக்கு துர்லபமான பெருக்காறு போலே ஆய்த்து -மண் மீது உழல்வாய் -6-9-என்கிறபடியே பூமியிலே அவதரித்து சஞ்சரித்தும் -தத் கால வர்த்திகளுக்கு ஆஸ்ரயநீயமாய் பிற் காலத்தில் உளனான இவனுக்கு கிட்டாத படியான விபவம் –
முன்பு சொன்னவை போல் அன்றிக்கே -அவனுக்கு விடாய் கெட பருகலாம் படி –பெருக்காற்றிலே தேங்கின மடுக்கள் போலே ஆய்த்து –இவனுக்கும் தேச கால கரண விப்ரக்ருஷ்டமின்றிக்கே – கோயில்களிலும் கிருஹங்களிலும் -என்றும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம்படி நிற்கிற – பின்னானார் வணங்கும் ஜோதி யான அர்ச்சாவதாரம் –(திருநெடும் தாண்டகம் )
பௌம நிகேதநேஷ் வபி குடி குஞ்சேஜ்ஷூ-என்கிறபடியே -பல இடங்களிலும்
சன்னதி பண்ணி நிற்கும் படியை நினைத்து இறே –
(சீலம் குணம் கேட்டு உள்ளம் உறைந்து -பெரிய பெருமாளே -குணங்கள் ஓடி ஓடி வராஹ நரசிம்ம அவதாரங்கள் –குண பிரவாஹமே அவதாரம் – சங்க்யா எண்ணி பரிச்சேதிக்க ஒண்ணாதே -இருக்கும் –பஹு சப்தத்துக்கே விஷயம் –தேவரீர் கோயில்களிலும் க்ருஹங்களிலும் யதி ஸ்தானங்களில்-வான பிரஸ்த ஸ்தானங்களில் –பூமியிலே திவ்ய தேசங்கள் திருக்குறுங்குடி -ப்ருந்தாரண்யம் போன்ற செடித் தூறுகளிலும்-சாஷாத் அபசாரம் உபசாரம் என்ற பேராலே அபசாரம் -அலாப்ய லாபம் போலே நின்றீர் -ஆழ்வாராதிகள் உருகி பாடும்படி -)
மடுக்கள் போலே – என்ற பஹு வசனத்தாலே அருளிச் செய்தது –
அவதார குணங்கள் எல்லாம் அர்ச்சா ஸ்தலங்களில் பரி பூரணமாய் இருக்கையாலும் –
அவதார விக்ரஹங்களை அர்ச்சா ரூபேண பல இடங்களிலும் பரிக்ரஹித்து கொண்டு இருக்கையாலும்-அதிலே தேங்கின மடுக்கள் போலே -என்கிறது –மடுக்கள் பன்மை ஓர் அவதாரத்துக்கு பல பல சேஷ்டிதங்களுக்கும் பல திவ்ய தேசங்கள் உண்டே –
—————————————————-
இப்படி ஆச்ரயண ருசி பிறந்தார்க்கு ஆஸ்ரயணீயத்வே சுலபமாய் இருக்கும் அளவே அன்றிக்கே – ருசி ஜநகத்வாதிகளும்-(உபாயத்வ ப்ராப்யத்வங்களும் -போக்யத்வம் -ஆதி சப்தம் – )இவ் அர்ச்சாவதாரத்துக்கு உண்டு என்று இதன் வைபவத்தை அருளி செய்கிறார் மேல் –
சூரணை -40-
இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால் உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —
(இதுக்கு மூலம் -நம்பிள்ளை ஈடு -10-2-அவதாரிகை-உகந்து அருளின நிலங்களில் நிலை தான் முதலிலே பகவத் விஷயத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலாய்
ருசி பிறந்தால் -யே எதா மாம் பிரபத்யந்தே என்கிறபடியே ஸுலப்யத்துக்கு நிலமுமாகையாலே உபாய பாவமும் பூர்ணமாய்
ப்ராப்ய பூமியில் கொடுபோம் இடத்தில் ஆதி வாஹிக கணத்தில் பிரதானனான தானே ஹார்த்த அநு க்ருஹீத -என்கிறபடியே வழியில் பிரதிபந்தகங்களைப் போக்கிக் கொடு போகக்கைக்கும் முற்பாடனாகைக்கும் உடலையும்
சம்சார சம்பந்தம் அற்று அவ்வருகே போனால் செய்யும் அடிமையை விரோதி கிடக்கச் செய்தே காதா சித்கமாகச் செய்கைக்கும் உடலாயும் இருக்கும் இறே-ஸுலப்யம் -பூர்த்தி ஸ்வாதந்தர்யம் குலைத்து -நாம் அநாதரித்தாலும் தான் விடாமல் ஆதரித்து நிற்கிறான் -மூன்றையும் அருளிச் செய்து மேலும் இதில்-ஸூசேஷனா-கன கங்காதி அழகிய திரு மேனி கொண்ட நல்ல சைன்யம் கொண்டவர் -தனது திரு மேனியே பெரிய சைன்யம் அவனுக்கு
செற்றத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் -ருசி தானே சிறியது -கைங்கர்ய பர்யந்தமாக்கும் -இது முதல் – வைமுக்யத்தை அர்ச்சை மாற்றும் -ருசி ஏற்படுத்தி -ஆறு எனக்கு நின் பாதமே -உலகம் அளந்த பொன்னடி அடைந்து -உபாயமாய் –
விஷயாந்தர வெறுப்பை மாற்றி -ருசி விளைவித்து -உபாயமாகியும் -பின்பு போக்யமாயும் -இந்த நான்கும் உண்டே -கண்ணுக்கு விஷயமாக்கி-)
(ஆய் ஸ்வாமிகள் –நேரே விஷயமான அர்ச்சை -விஷய நியமம் -முன்பு குண பூர்த்தி இருக்கும் இடம் -அதில் இருந்து தொடர்ச்சி -ஹிதம் சொல்லும் சாஸ்திரங்கள் சாஸிக்க முடியாமல் -விதி நிஷேதம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி -சொல்லியும் -திருத்த ஒண்ணாமல்–அப்ராப்தங்கள் –அபோக்யங்களுமாய்-அல்ப காலத்தில் போக்யம் போலே இருக்குமே –
விஷயாந்தரங்கள் -வெறுக்கத் தக்கவைகளுமாய் -ஹேய விஷயங்களில் மீட்க ஒண்ணாத படி –விண்ணுளாரையும் விடாத விஷயாந்தரங்கள்-பகவத் விஷயம் கண்டால்-முகம் திருப்பி அநாதி காலம் விமுகராய் அநர்த்தப்பட்டு அசத் கல்பமாய் -போகும் சேதனருக்கு பகவத் விஷயம் என்றால் வேப்பங்குடி நீராய்- யாதானும் பற்றி நீங்கும் விரதம் -மறுவதலிடாத படி ருசி வாசனைகள் உடன் மாற்றி – தன் பால் ஆதரம் பெறுக வைத்த அழகனூர் அரங்கன் -(16-) -மெய்யான தன் ருசியை -பற்று அற்று விடாத படி தன் பக்கல் உள்ள -ஸுந்தர்ய ஆவிஷ்கர்யத்தாலே-பலபர்யந்தமாக்கி —திவத்தைத் தரும் மெய்-(7-10-11) -திரு மேனியே மோஷம் தரும் -அநிஷ்டம் போக்கி இஷ்டம் தரும் சித்த உபாயம் – அயத்ன சித்தம் -இது அன்றோ உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று -அர்ச்சாவதார திருமேனி இங்கும் – -உபாய அத்வயசாயிகளானால் எனக்கு தேனே பாலே கன்னலே நிரதிசய போக்யமான உபேயமாகவும் இருக்கும் -என்கிறார் -)
(ஆக -பிரபத்திக்கு விஷயம் அர்ச்சை -எதனால் என்னில்-1–உபாய உபேயமாய் –2-தத் உபய ருசி ஜனகமாய் -3–இதர விஷய ருசி மோசகமாய் -4–தேசாதி உபாதி அயத்ன சர்வ சுலபமாய் –5-அநாதரிப்பாரையும் ஆதரிக்குமதாய்-6- -பிரபத்தி அனுகுணமாய் (சர்வ சுலப உபாயம் நிவ்ருத்தி ரூபமாய் -பகவத் சரண வரணம் இரண்டும் சரம பர்வம் என்பதால்) 7- சர்வ குண சம்பூர்ணமாய் –8-பிரபன்ன ஜன கூடஸ்தர்க்கு சரண வரண விஷயமுமாய் – (ஆக எட்டு பெருமைகளும் உண்டே )அர்ச்சாவதாரமே நியதி விஷயம் இந்நியதியே பிரபத்திக்கு என்று கீழோடே சம்பூர்ணம் -)
பிரக்ருதமான சௌலப்யாதி குண யோகத்தை உள் கொண்டு –இது தான் -ஸுலப்யம் உடைய அர்ச்சை தான் –என்று பராமர்சிக்கிறார் –
சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாமை யாவது –ஹித அனுசானம் பண்ணுகிற ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி சாஸ்திரங்கள் ஆனவை-(ஆதி இதிஹாச புராணங்கள்) -(இதர விஷயங்களில் தோஷங்களையும் இவ்விஷயத்தில் குண ஆதிக்யத்தையும் சொன்னாலும்) அருசி பிறக்கும் படி இதர விஷயங்களை விட்டு இவ் விஷயத்தை பற்றும் படி பண்ணப் போகாமை துர் வாசன பலம் உபதேசத்தை நிரர்தகம் ஆக்கி விடும் இறே-
(சாஸ்திரத்துக்கு பலம் போதாதா -எம்பெருமான் திரு உள்ளம் தானே சாஸ்திரம் –
வெளிச்சம் இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டது போலே அன்றோ துர்வாசனாதிகள் )
ஜன்மாந்திர சகஸ்ரேஷூ யா புத்திர் பாவிதா நிருணாம் தமேவ பஜதே ஜந்து ருபதேசோ நிரர்தக-என்னக் கடவது இறே- (ஐந்து -மனுஷன் என்னவும் யோக்யதை இல்லையே –
-அர்ஜுனனுக்கு விபவமே -அர்ச்சை போலே கண்ணுக்கு முன்னே இருக்க -அத்தாலே திருந்தினான்–சாஸனாத் சாஸ்திரம் –விதி நிஷேதம் பண்ணும் ஹித அனுசாசனம்-பஹு வசனம் ஸ்ருதி ஸ்ம்ருதி இத்யாதிகள் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி -ரூபேண சொல்லும் -தோஷம் ஞாபகப்படுத்தி விஷயாந்தரங்களில் நிவ்ருத்தி குணங்களை சொல்லி பகவத் விஷயத்தில் பிரவ்ருத்தனாகை — ப்ரத்யக்ஷம் அனுமானம் பாதிக்காத வலிமை சாஸ்திரம் –சப்த பிரமாணம் -தெரிவிக்க முடியாத சக்தி குறைவும் இல்லை சாஸ்த்ரங்களுக்கு–அநாதி கால வாசனா பலத்தால் -தான் விருப்பப்பட்ட படி இது தான் சாஸ்திரம் சொல்லிற்று என்று தப்பாகவும் சொல்லுகிறார்களே -சாஸ்த்ர ஜன்ய ஞான-விபரீத விஷய ஞான ஜனக -சம்ஸ்காரம் -துர்வாசனை -இது முதல் நிலை-அதன் பலம் -அனுஷ்டானத்துக்கு விரோதமான துர் அனுஷ்டானம் பண்ண வைக்கும்-சாஸ்திரம் நிரார்த்தகம் -என்றது அனுஷ்டான ரூப பிரயோஜன சூன்யம் ஆக்கி விடுகை -உபதேசத்துக்கு யோக்யதை இல்லாமல் ஆக்கும் துர்வாசனை – -)
விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய் போருகை யாவது – சிலம்படி உருவில் கரு நெடும் கண்ணார் திறத்தினால் யறத்தையே மறந்து- புலம் படிந்து உண்ணும் போகமே பெருக்கி –நைமிசாரண்ய பதிகம் -என்றும் –
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலே மிகுத்து கண்டவா திரிந்து –நைமிசாரண்ய பதிகம்- என்றும் –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -என்றும் சொல்லுகிறபடி -திருமாலை –
இதர விஷயங்களிலே அத்யபி நிவிஷ்டராய் –யாதேனும் பற்றி நீங்கும் விரதத்தை-திரு விருத்தம் 95– ஏறிட்டு கொண்டு – பகவத் விஷயத்தில் முகம் வைக்க இசையாதே வர்திக்கை-
இப்படி போரும் சேதனருக்கு -வைமுக்யத்தை மாற்றி ருசியை விளைக்கை -யாவது –
போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதரம் பெருக வைத்த அழகன்–திருமாலை -16- -என்கிறபடியே ஸ்வ சௌந்தர்யாதிகளாலே -சித்த அபஹாரம் பண்ணி -தன்னை காண வேண்டோம் என்று (ஸ்வரூபத்தால் சித்தம் அபஹரிக்க முடியாதே -பற்றவே முடியாதே -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபிரான் -)இருக்கும் இருப்பைக் குலைத்து கண்ட கண் மாற வைக்க மாட்டாதபடி பண்ணுகை-
ருசி பிறந்தால் உபாயம் ஆகையாவது –இப்படி தன் வைலக்ஷண்ய தர்சனத்தாலே
தன்னை நித்ய அனுபவம் பண்ண பெற வேணும் என்னும் ருசி பிறந்த அநந்தரம்-
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5 -7–என்கிறபடி சம்சார நிவ்ருத்தி பூர்விகையான ஸ்வ ப்ராப்திக்கு தானே சாதனம் ஆகை-
உபாய பரிகிரகம் பண்ணினால் போக்யமுமாய் இருக்கை ஆவது – தன்னை உபாயமாக பரிகிரகித்தால் உபேய சித்திக்கு ஒரு தேச விசேஷத்திலே போம் அளவும் பார்த்து இருக்க வேண்டாதே — அதுக்கும் மேலே பரமபதமும் உபேக்ஷிக்கும் படி -என்று கைங்கர்யத்தையும் அர்ச்சையிலே கொடுத்து அருளி-அணி அரங்கன் என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாதே –என்றும்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திரு மால் இரும் சோலை கோனே-10-7- -என்றும்
சொல்லுகிறபடியே நிரதிசய போக்யமாய் இருக்கையாலே தானே உபேயமுமாய் இருக்கை–
(ஸுலப்ய விசிஷ்ட அர்ச்சா திருமேனியே இந்த நான்கு அவஸ்தைகளிலும் கூட்டிச் செல்லுமே )
ஆக-
(பிரபத்திக்கு நியம் ஒன்றும் வேண்டாம் என்று உபக்ரமித்து –23-)
பிரபதிக்கு குண பூர்த்தி உள்ள இடமே விஷயமாக வேணும்-34 என்றும் –
அது தான் உள்ளது அர்ச்சாவதாரத்திலே என்றும் –
அத்தை பற்ற ஆழ்வார்கள் எல்லோரும் பிரபத்தி பண்ணிற்றும் இவ் விஷயத்தில் என்றும் –
இவ் விஷயத்தில் எல்லா குணங்களும் புஷ்கலங்கள் என்றும் –
விசேஷித்து ப்ரபத்திக்கு அபேஷித குணங்கள் விசதமாக பிரகாசிப்பது இங்கே–37- என்றும் இது தான் தன்னுடைய நைர பேஷ்யாதிகளை அழிய மாறி –
தன்னை அநாதரிப்பாரை ஆதரித்தது கொண்டு நிற்கிற ஸ்தலம்–38- என்றும் –
பரத்வாதிகள் ஒரொரு பிரகாரத்திலே துர்லபம் -இது சர்வ பிரகார சுலபம்-39- என்றும் –
இவ்வளவே அன்றி இவ் விஷயம்
ருசி ஜநகமுமாய்
உபாய
உபேயமுமாய்
இருக்கும் என்றும் சொல்லப் பட்டது -40-சூர்ணிகை –
இத்தால் உபாய உபேயங்கள் இரண்டும் தானேயாய்-
ஸூவ-இதர விஷயங்களில் அருசிகளையும் பிறப்பித்து –
தன் விஷயத்தில் -ருசியும் ஏற்படுத்துமதாய் – சர்வ சுலபமுமாய்
தன் படிகளை அழிய மாறிக் கொண்டு -அநாதரிப்பவர்களையும் தான் ஆதரித்து —
பிரபத்திக்கு அபேக்ஷித குண உஜ்ஜவலமாய் — ஸமஸ்த குண சம்பூர்ணமாய்–
பிரபன்ன ஜன கூடஸ்தர்க்கு உபாய வர்ண விஷயமாய் இருந்துள்ள அர்ச்சா திருமேனி என்றதாயிற்று –
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply