தென் குருகூர் புனிதன் கவியோர் பாதத்தின் முன் செல்லுமோ தொல்லை மூலப் பரஞ்சுடரே–கம்பன்
மார்க்கண்டேய புராணத்தில் -ஏதா ஸ்வேதகாதா -ச நித்யா -திராவிட சம்ஹிதா கலவ் கலவ் பிரகாசியந்தே க்ருபயா ஞான யோகிபி
த்வாபராந்த யதா வியாஸோ வியாசிஷ்யதி மஹா ஸ்ருதி தத்வன் நித்யாத்மபூகதா சடகோப ப்ரனேஷ்யதி-
-சாகா சகஸ்ர வேதானாம் காதா ரூபம் விதாஸ்யதி த்ராமிடீ ப்ரஹ்ம வித்யா சா தஸ்மாஜ் ஜாதா மஹா முநே
சம்ஸ்க்ருத ஸ்ருதியோ யத் த்ராவிடச் ஸ்ருத யஸ்ததா நித்யா –
திராவிட வேதங்களும் நித்யங்கள் -வியாச பகவான் வேதங்களை வெளியிட்டு அருளியது போலே
நம்மாழ்வாரும் -இந்த திராவிட ப்ரஹ்ம வித்யை வெளியிட்டு அருளினார் என்றவாறு –
ஸ்கந்த புராணத்திலும் -ஏவ மேவ விஜா நீ ஹி த்ராமிடஞ்சாபி பாஷிதம் —-அகஸ்திய பிரார்த்தனாதுஷ்ட ப்ரஹ்ம தத்வாரா இமா நாபப்ரம் சத்வ தோஷா
–த்ராமிடீ நாம் க்ராம்ததா யதைவ ஸம்ஸ்க்ருதீ பாஷா ப்ரயுக்தா ஸ்வர்க்க தாயி நீ பிரக்ருதீ த்ராமிடீ சாபி ததைவ ஸ்வர்க்க தாயிகே
அதோன்யா கலூயா பாஷா ஆந்திர கர்ணாட தேசஜா அநார்ஷத்வாத பப்ரம்சா இதை சாஸ்த்ர விதாம் மதம் தஸ்மாத் பாஷாந்த்ரீ யானாம்
காவ்யானாம் தோஷ கீர்த்தனம் பிராக்ருதாத் தராமிடச்சாபீ லிபன்ன விஷயம் பவேத் ச்ருதவ் து நம்லேச்சிதவா இத்யேத நபி யத் வச ததநார்ஷவ
சாம்ஸ்யேவ நிஷதேத் நார்ஷமப் யாஹூ என்று அகஸ்ய முனி சம்பந்தத்தால் -தமிழும் அநாதி -குற்றம் அற்ற பாஷை என்றவாறு –
பாத்ம புராணத்தில் பிரமனைக் குறித்து மஹா விஷ்ணு -உத்கர்ஷ க்யாப்யதே யைஸ்து விச்வா ஸாத் த்ரவிட ஸ்ருதே சங்கீர்த்தி தாஸ்தே மத் பக்தா —
இதை மத் பக்த லக்ஷணம் இதை திராவிட வேதஸ்ய உத்கர்ஷ க்யாபி தோமயா அத ஸ்ருதிம பேஷ்யாஸ்யாம் ப்ரக்ருஷ்ட திராவிட ச்ருதவ்
பரமாதரமாததஸ்வ நிஸ் சந்தேகம் ப்ரஜாபதே–என்று தமிழ் வேத வைபவம் சாதித்து அருளினார்
ப்ரஹ்மாண்ட புராணத்தில் -ஸ்ரூயதா முச்யதே கிஞ்சித் ரகஸ்யம் முனி சத்தம காலாந்தரேது மச்சய்யா பூதோ புஜக நாயக-நிர் நித்ர திந்த்ரிநீ சத்வ மேஷ்யத் யஹம பீஷ்டத
நேதும் த்ராவிடதாம் வேதான் அத்ரை வர்ணிகதாம் கத மத் பக்த சடகோபாக்யோ பவிஷ்யாமி மமேச்சயா தாம்ர பரணி யுத்தர தடே
யத்ர தாத்ரா அர்ச்சிதோஸ்ம் யஹம் தத்ரமே சட கோபஸ்ய தேச ஜென்ம பவிஷ்யதி ததா பிரகாசயிஷ்யாமி பரமர் திராவிட ஸ்ருதி-என்று
அனந்தாழ்வான் உறங்கா புளியாகவும்-நானே நான்காம் வருணத்தில் சடகோபராக அவதரித்து திராவிட வேதங்களை வெளியிடப் போகிறேன் என்றான் இறே
அதே புராணத்திலே -தஸ்மாத் ச புருஷ சிரேஷ்ட பக்தா நாம் அம்ருதோ பமாம் ப்ரகாசயிஷ்யதி பராம் த்ராமிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் -என்று
அந்த புருஷ சிரேஷ்டர் சடகோபர் தொண்டர்க்கு அமுது உன்னை திராவிட வேதத்தை வெளியிட்டு அருளுவார் என்கிறார்
பவிஷ்யத் புராணத்தால் -திராவிடம் நயா நிரதம் யோ நிந்ததி ஸூ துர்மதி -ப்ரஹ்ம பிரளய பர்யந்தம் கும்பீ பாகே ச பஸ்யதே
ஸ்வ மாதுர் வ்யபிசாரோக்தவ்யோ தோஷ பரி கீர்த்தித ச தோ ஷோ திராவிடம் நாய தூஷனே பி பவேத் த்ருவம்-என்று
தமிழ் வேத நிஷ்டரை பழிப்பவர் நரகம் போவார் –
ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் –யஸ்து சாமான்ய பாவேந த்ராமிடாம்நாயமுத்தமம் மன்யதே கல்ப கோடீஸ் ச ரௌரவம் நரகம் வ்ரஜேத்-என்று
உயர்ந்த தமிழ் வேதத்தை சாதாரண பாட்டாக நினைத்தவன் நரகம் புகுவான் என்கிறது –
பரமேஸ்வர சம்ஹிதையில் -த்ரமிடச் ஸ்ருதி சந்தோஹே யாவதீ ப்ரீதி ரஸ்தி மே நதாவதீ மஹா லஷ்ம்யாமப் யஸ்தீதி நிபோதத–என்று
பெருமாள் பிராட்டியை விட திராவிட ஸ்ருதிகளில் ப்ரீதி கொண்டுள்ளதை தெரிவிக்கிறான் –
தோற்றங்கள் ஆயிரத்துள் –திருவாய் -6–8–11-என்று பகவத் அவதாரம் போலே திருவாயமொழியும் ஆவிர்பவித்தமை –
மந்த்ரங்களை ரிஷிகள் காணுமா போலே அவன் அருளாலே ஆழ்வாருடைய அகக் கண்ணுக்கு இலக்காகி அவரது திருவாக்கின்றும் தோற்றின -என்றவாறு –
பகவத் ஆவிர்பாவம் போலே வேத ரூப ஆவிர்பாவமான ஆயிரம் என்றபடி
இதே போல் சொல் சந்தங்கள் ஆயிரம் / சோர்வில் அந்தாதி / கெடல் ஆயிரம் / அழிவில்லா ஆயிரம் / தெளிவுற்ற ஆயிரம் / தீர்த்தங்கள் ஆயிரம்
/ தீதில் அந்தாதி / பாலோடு அமுதன்ன வாயிரம் / ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம் /வழு விலா ஒண் தமிழ் / தூய வாயிரம் / முந்தை வாயிரம் /
செய் கோலத்து ஆயிரம் /பொய்யில் பாடல் ஆயிரம் /
என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வன் –திருவாய் -7–9–2-சந்தை சொல்லி அருளிய முதல்வன் –
நப்ரீதி ரஸ்தி மம வக்ஷஸிலா விதாயாம் லஷ்ம்யாம் ததா சகல பூதன் தான சீம்னி மஜ் ஜென்ம கர்ம குண பந்தயுதான் பிரபந்தான் சஙகீந்த்ய
த்யநக பக்த ஜநே யதைவ -என்று -தமிழ் பிரபந்தங்கள் மேல் பிராட்டியை விட அதிக ப்ரீதி கொண்டமை அறிவிக்கப் பட்டதே –
வித்யந்தே ஹி பராசராதி முநிபி ப்ரோக்தா பிரபந்தா பரா பக்தா ஏவ ஹி தே தாதாபி சகலம் த்யக்த்வா அத்ர ரெங்கேஸ்வர-
பக்தா நேவ பரங்குசாதி புருஷான் தத் தத் பிரபந்தான் ச தான் அத்யாத்ருத்ய சதோ பலாலயதி யத் தத் ஞாபனம் தத் ப்ரியே -என்று
ஸ்ரீ ரெங்கநாதன் மிகவும் ஆதரிப்பதாக பட்டர் அருளிச் செய்தார் –
விஸ்வகர்மா சாபத்தால் அகஸ்தியர் வருந்த விஷ்ணுவே தோன்றி விஷ்வக்சேனர் முதலானோரை ஆழ்வார்களாக
பிறப்பித்து தமிழ் அடிமை செய்யும் படி செய்து நாலாயிரம் வெளியிட்டமை அருளிச் செய்தார் –
இவற்றைப் பின்பற்றியே -சகஸ்ர சாக உபநிஷத் சமாகமம் நமாம் யஹம் திராவிட வேத சாகரம் -என்றும்
சடாரேர் உபநிஷதாம் உப கான மாத்ர போக -என்றும்
ஏய்ந்த பெரும் கீர்த்தி –சடகோபன் செந்தமிழ் வேதம் -என்றும்
த்ரமிட வேதம் என்றும் -தமிழ் மறைகள் ஆயிரம் என்றும் -சடாரி த்ருஷ்ட சாம வேத மௌலி -என்றும் –
ஸ்வம் சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூ க்தை பாந்தம் -என்றும் -சகஸ்ர சாகாம் த்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் -என்றும்
-வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இ றே என்றும் மாறன் மறை என்றும் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் –
வேத நூல் ஸ்ருதி -ஸ்ம்ருதி -மம ஆஞ்ஞா -வசையில் நான்மறை -சுடர் மிகு ஸ்ருதி -வேத நூல் ஒதுகின்றது உண்மை
-பண்டை நான் மறை -நிற்கும் நான் மறை -போலே –
இரும் தமிழ் நூல் -ஆணை ஆயிரத்து -ஏதமில் ஆயிரத்து இப்பத்து -செவிக்கு இனிய செஞ்சொல் -பொய்யில் பாடல் –முந்தை ஆயிரத்துள் இவை
அழிவில்லா ஆயிரத்து இப்பத்து –என்கிற எழு லக்ஷணங்கள் -இவை இரண்டுக்கும் சாமான்கள் -ஆகும்
சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம் என்றது -அநாதி தாநா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா -மனு ஸ்ம்ருதி –கர்த்ருத்வம் வெளிப்படுத்தும் தன்மையே
கண்டு வெளிப்படுத்தும் ரிஷி -நினைத்து ஆராயும் முனி –காலம் கடந்தவற்றை சாஷாத்கரிக்கும் கவி -போலே இவரையும்
ருஷிம் ஜூஷாமஹே -சடகோபன் முனி வந்தே -ஒன்றி ஒன்றி இவ்வுலகம் படைத்தான் கவி யாயினேற்கு–திருவாய் -3–9–10-
ஸூ ர்ய சந்த்ர உலகம் படைத்தால் போலே -திவ்ய பிரபந்தங்களும் யதா பூர்வ கல்பனமே –
வகுளா பரணாதி ஸூ ரி ஸ்ரீ ஸூ க்த்யா கார்த்தஸ்யேந பிராமண தாரா -என்று யதீந்த்ர மத தீபிகா ஸ்ரீ ஸூ க்திகள்-
தேவாஸூர ஹேலயோ ஹேலய இதை குர்வந்த பரா பபூவு தஸ்மாத் ப்ராஹ்மணேந நம்லேச்சித்தவை நாபபாஷிதவை ம்லேச்சா ஹவா ஏஷ யத் அப சப்த
அப பாஷை இலக்கவிதிக்கு முரணான சொல் -அசுரர்கள் பாஷை -கவ் என்பதற்கு பதில் காவி கோணி என்பது அபபதம் –
ருஷி சம்பந்தம் இல்லாத பாஷைகளையே தடுக்கும் ஸ்ருதி வாக்கியம் –
நாஹம் வஸாமி வைகுண்ட யோகி நாம் ஹ்ருத யேஷூ சமத் பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத –என்று
தன்னை பாடுகிற இடத்திலே தான் இருப்பதாக சோதி வாய் திறந்து அருளிச் செய்தானே -ஏதத் சாம காயன் ஆஸ்தே –
யத்ருசோ உத்ய கீஷத தா பய ஆஹூதயோ தேவா நாம பவன் யத் யஜும் க்ருதா ஹதயோ யத் சாமானி சோமா ஹுதயோ
யத் அதர்வாங்கி ரஸோ மத்வா ஹுதயோ யத் ப்ராஹ்மணாநி இதிஹாசன் புராணா நீ கல்பான் கதா நாராசம் சீர் மேதா
ஹுதாயோ தேவா நாம பவன் தாபி ஷூதம் பாப்மா நம பாசனந் அபஹத பாப்மா நோ தேவா ஸ்வர்க்கம் லோக மயன்
ப்ரஹ்மணஸ் சாயுஜ்யம் ருஷயோ கச்சன் –என்று
ருக்வேதாதி அத்யயனத்தால் தேவர்கள் பாலால் செய்த ஆஹூதிகள் போலவும் – யஜு ர் வேதாதிகள் நெய் ஆஹுதி போலவும்
-சாம வேதாதிகள் சோம தாரா சால ஆஹூதிகள் போலவும் -அதர்வண வேதாதிகள் தேன் ஆஹூதிகள் போலவும்
-இதிஹாச புராண கல்ப அருளிச் செயல்கள் மாம்ச ஆஹூதிகள் போலவும் -மகிழ்ந்து
பசி ஒழிந்து ஸ்வர்க்கம் போக -ருஷிகளோ ப்ரஹ்ம சாயுஜ்யம் பெற்றார்கள்
ப்ரஹ்ம யஜ்ஜம் போலே திவ்ய பிரபந்த சேவையும் -ஆயூஸூ ஒளி பலம் செல்வம் புகழ் ப்ரஹ்ம தேஜஸ் அன்னம்
-போன்றவற்றை அருளும் -பூஜ்யத்வம் உண்டு என்றவாறே –
சகஸ்ர பரமாதே வீ சதமூலா சதாங்குரா சர்வம் ஹரது மே பாபம் தூர்வா துஸ் ஸ்வப்ன நாசின் -தைத்ரியம்
சகஸ்ர பரமாதே வீ -திருவாய்மொழி -ஆயிரம் பாட்டாக அமைந்த -திவ்ய பிரபந்த அபிமானியான தேவதை
சதமூலா -திரு விருத்தம் ஆகிய நூறு பாசுரம்
சதாங்குரா -ராமானுஜ நூற்று அந்தாதி ஆகிய முளை
தூர்வா -த்ரவி தாரனே -சம்சார பந்தத்தை தாண்டுவிப்பதாயும்
துஸ் ஸ்வப்ன நாசின் -ஸ்வப்னத்தை விட பிரபல சம்சாரத்தை நசிக்கச் செய்து
மான துஸ் மே சர்வம் ஹரது மே பாபம்-எல்லா பாபங்களையும் போக்கடிக்கட்டும் –
மாறன் மறையும் இராமானுசன் பாஷ்யமும் தேறும் படி யுரைக்கும் சீர் –மா நகரில் மாறன் மறை வாழ்கவே –
அதர பரத்ர சாபி –
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி –
—————————
-வேத அங்கங்கள் -சீஷா – வியாகரணம்- நிருக்தம்- சந்தஸ் -கல்பம்- ஜோதிஷம் -ஆகிய ஆறும் –
உப அங்கங்கள் -மீமாம்சை –நியாயம் -புராணம் -தர்ம சாஸ்திரம் -ஆயுர் வேதம் -பாரதம் -சிற்பம் -கீதம் -ஆகிய எட்டும்
இன்ப மாரி–நான்கு நம்மாழ்வார் திரு பிரபந்தங்கள் -உத்கீதம் உள்ளுறை பொருள் -ஆயிரம் இன் தமிழ் அந்தாதி
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே -என்பர் திருமாலால் அருள பெற்ற நம்மாழ்வார்
அருள் மாரி -ஆறு அங்கங்கள்
மற்றைய எண்மர் -உப அங்கங்கள்
நல்லவரை காத்து அல்லவரை அழித்து அறம் காக்கவே அவதாரங்கள்
அறியவேண்டிய செம்பொருள் ஐந்து
-மிக்க இறை நிலை -பெண்மை கலந்த ஆண்மை நிறைந்த திருமால் /மெய்யாம் உயிர் நிலை -திருமால் அடியான்
/தக்க நெறி -உடல் பிணைப்பில் இருந்து விடுபட்டு இறைவின் பிடிப்பில் ஆட் படுதல்-
தடையாகி தொக்கியலும் ஊழ் வினைகளை அறிந்து -ஆக்கை வழி உழலாமல் ஆன்மிக அறநெறி நடத்துதல்
உயரிய நல் வாழ்வு என்பதே இறை உணர்வுடன் தெரித்து எழுதி வாசித்து கேட்டு வணங்கி வழி பட்டு பூசித்து பொழுது போக்குவதே –
அனைத்துலகும் தன்னுள்ளே நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரானே நாராயணன் -விசிஷ்டா அத்வைதம் -சரீராத்மா பாவம் –
நினைத்த எப்பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமல் -அவற்றுள் ஊடுருவியும் அவை அனைத்தையும் தன்னுள் ஒதுக்கியும்
நிற்பவன் நாராயணன் -அந்தர் பஹிச்ச தத் சர்வம் -வியாப்ய நாராயண ஸ்தித –
அசாரம்-பாஹ்யர்கள் / அல்ப சாரம் -குத்ருஷ்டிகள் / விசிஷ்டாத்வைதம் -சாரம் / அருளிச் செயல்வழி ஸ்ரீ வைஷ்ணவம் சார தர்மம்
/ பூர்வாச்சார்யர் வியாக்கினங்கள் கொண்டு உணரும் சத் சம்ப்ரதாயம் சார தர்மம் –
காண்கின்ற உடலில் –காணாமல் உறைகின்ற உயிரில்பரம்பொருளின் பான்மையை விளக்குவதே விசிஷ்டாத்வைதம்
அப் பரம் பொருள் எல்லா வற்றையும் கடந்தும் -எல்லாவற்றின் உள்ளும் கலந்தும் இருப்பதால் -கடவுள் –
தன்னுள் அனைத்து உலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் –
ருக்வேதம் –10-மண்டலங்கள் -10152-மந்த்ரங்கள் /யஜுர் -40-அத்யாயம் -1975-மந்த்ரங்கள் /
சாமம் –1975-மந்த்ரங்கள் / அதர்வணம் -20-காண்டங்கள் –5987-மந்த்ரங்கள்
பிரஸ்தான த்ரயம் –உபநிஷத் / ப்ரஹ்ம ஸூ த்ரம் / ஸ்ரீ பகவத் கீதை –
———————–
It has been proved through scientific-studies,
Tulasi soaked water kept in a copper container is an antidote
for dreaded diseases like cholera and other water borne diseases
———————————
தாவிய சேவடி சேப்பத் தம்பியோடும் கான் போந்து -சோ வரணும் போர் மடியத் தொல்லிலங்கை
கட்டு அழித்த சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே -இளங்கோ
மேல் ஒரு பொருள் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தங்கி கால் தரை தோய நின்று கட் புலக்கு உற்றதம்மா -கம்பர் வாலி வார்த்தையாக
நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின் இடை நிகழ்ந்த
இராமாவதாரப் பேர்த் தொடை நிரம்பியதொரு தாக்கத்தை -கம்பர் அவையடக்கப் பாடல் –
வள்ளல் ராமன் உன் மைந்தன் ஆணை -என்றான் -கைகேயியைச் சுட்டி உன் மைந்தன்
தாய் கையில் வளர்ந்திலன் -வளர்த்தது தவத்தால் கேகேயன் மடந்தை -நகர மக்கள் வார்த்தையாக கம்பர் –
இராமனைப் பயந்த ஏற்கு இடர் உண்டோ -என்று கைகேயி கூனி இடம்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை -என்றும்
இரும் கடகக் கர தலத்தில் எழுத அரிய திரு மேனி கரும் கடலை செங்கனி வாய் கோசலை என்பாள் பயந்தாள் -என்றும் –
இராமனும் வசிஷ்டர் இடம் -ஏன்றனன் எந்தை இவ்வரங்கள் ஏவினாள்
ஈன்றவள் யான் அது சென்னி ஏந்தினேன் -என்று கைகேயியை ஈன்றவளாகவே கூறினார்
உனைப் பயந்த கைகேயி -பெருமாள் திருமொழி –9-1–பாசுரம் அடி ஒட்டி
கேகேயன் மா மகள் கேழ் கிளர் பாதம் தாயினும் அன்போடு தாழ்ந்து வணங்கி ஆயதன் அன்னை அடித் துணை சூடி -என்றும்
கைகயன் தனயை முந்தக் காலுறப் பணிந்து முற்றை மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங்கண் ஐயனை -என்றும்
முந்துற கைகேயியை வணங்குவதாகக் காட்டினார் கம்பர்
கோ மகனும் அத்திசை குறித்தனன் விழித்தான் -விரூபாக்ஷி என்று வால்மீகி சொன்ன சூர்ப்பணகை-கலை வணக்கு நோக்கு அரக்கி -என்று
மானும் வெட்க்கி தலை குனியும் படி குலசேகர ஆழ்வார் பாசுரமும்-பெரியாழ்வார் -நுடங்கிடை சூர்ப்பணகா -3- 9–8- அடி ஒட்டி -கம்பர்
திரை கெழு பயோதி துயிலும் தெய்வ வான் மரகத மலையினை வழுத்தி
நெஞ்சினால் கர கமலம் குவித்து இருந்த காலையில் -தேவர்கள் வ்யூஹத்தில் இரக்க என்றபடி
பரமன் கருடன் மேல் ஊர்ந்து திருவோடும் மருவித் தோன்றினான் -என்பர் புருஷகார பூதை உண்டு என்று காட்ட
கருடன் தோள் நின்றும் இறங்கி -சென்னி வான் மண்டபத்து சேர்ந்து அரி துன்னு போன் பீடம் மேல் பொலிந்து தோன்றினான்
-அரியாசனத்தில் தனிக் கொள் செல்ல வீற்று இருந்து அருளினான்
கோப்புடைய சீரிய சிங்காசனத்து யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -பாசுரம் ஒட்டி
தர்மாதி பீடத்தில் இருந்து -வஞ்சகர் தன் தலை அறுத்து இடர் தணிப்பன் -என்று அருளிச் செய்தான் என்பர்
அக்கணத்தில் அயன் படை ஆண்ட கை சக்கர படையொடும் தழிஇச் சென்று புக்க தக்கொடியோன் உரம் பூமியும் திக்கு அனைத்தும் விசும்பும் திருந்தவே –
ப்ரஹ்மாஸ்திரம் வானும் மண்ணும் சுழல சக்கர படையொடும் தழுவிச் சென்று இராவணன் மார்பிடைப் புக்கது-
கை நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது -பாசுரத்தில் அடியாக
பிராட்டி –உனது பாழுடல்–பத்துள தலையும் தோளும் பல பல பகழி தூவி வித்தக வில்லினாற்கு திருவிளையாடற்க்கு ஒத்த சித்திர இலக்கமாகும்-என்றாள்-
அதற்கு ஏற்ப -மாயன் இராவணன் மேல் சரமாரி தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்து -ஐயன் முதலில் விளையாடினான் –
கம்பர் செவ்வழி உணர்வு தோன்றச் செப்பினம் –உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து -திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி படி உணர்வு -பரம் பொருள் -அன்றோ
ராம பக்தனாகவே கம்பர் அருளிச் செய்கிறார் -பத்தர் பித்தர் பாடினோம் என்பர் –
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply